புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உறவுகள் உதிர்வதில்லை! Poll_c10உறவுகள் உதிர்வதில்லை! Poll_m10உறவுகள் உதிர்வதில்லை! Poll_c10 
64 Posts - 50%
heezulia
உறவுகள் உதிர்வதில்லை! Poll_c10உறவுகள் உதிர்வதில்லை! Poll_m10உறவுகள் உதிர்வதில்லை! Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
உறவுகள் உதிர்வதில்லை! Poll_c10உறவுகள் உதிர்வதில்லை! Poll_m10உறவுகள் உதிர்வதில்லை! Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
உறவுகள் உதிர்வதில்லை! Poll_c10உறவுகள் உதிர்வதில்லை! Poll_m10உறவுகள் உதிர்வதில்லை! Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
உறவுகள் உதிர்வதில்லை! Poll_c10உறவுகள் உதிர்வதில்லை! Poll_m10உறவுகள் உதிர்வதில்லை! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
உறவுகள் உதிர்வதில்லை! Poll_c10உறவுகள் உதிர்வதில்லை! Poll_m10உறவுகள் உதிர்வதில்லை! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
உறவுகள் உதிர்வதில்லை! Poll_c10உறவுகள் உதிர்வதில்லை! Poll_m10உறவுகள் உதிர்வதில்லை! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உறவுகள் உதிர்வதில்லை! Poll_c10உறவுகள் உதிர்வதில்லை! Poll_m10உறவுகள் உதிர்வதில்லை! Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உறவுகள் உதிர்வதில்லை!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Oct 08, 2014 1:19 pm

நடராஜ பெருமானையும், கோவிந்தராஜ பெருமாளையும் ஒருசேர தரிசித்து வரலாம்...' என்று நினைத்து கோவிலுக்கு வந்த சதாசிவத்திற்கு, துாரத்தில் வந்த மகனை பார்த்ததும் கோபம் வந்தது; அடக்க நினைத்தும் அவரால் முடியவில்லை.

சதாசிவத்தின் இரண்டாவது மகன் மூர்த்தி; ஆயினும், இருவருக்குமிடையே சமீபகாலமாக பேச்சுவார்த்தையில்லை. தான் விரும்பும் பெண்ணை, அவன் திருமணம் செய்து கொள்ள கேட்ட போது, அவர் மறுத்தார். மூத்த பிள்ளைக்கு திருமணம் ஆகாத நிலையில், இரண்டாவது மகன் திருமணத்தை, அதுவும் காதல் திருமணத்தை எந்த தந்தையால் ஏற்றுக் கொள்ள முடியும்...

அவர் மறுப்பை ஏற்காது, அவனும் பிடிவாதம் காட்ட, 'அவ வேணுமா, இல்ல நான் வேணுமான்னு நீயே முடிவு செஞ்சுக்க...' என, வெட்டு ஒன்று துண்டு ரெண்டு என்ற ரீதியில் கேட்க, அதே தோரணையில் அவனும் பதிலுரைத்தான்.

'நீங்க இல்லாம நானில்ல; அதேசமயம், எனக்கு அவளும் தேவை. அவள காதலிச்சுட்டேன்; கல்யாணம் செய்துக்கிறதா வாக்கு கொடுத்துட்டேன். சதாசிவத்தோட பையன் பொய்யனா, பெத்தவங்களுக்கு அடங்காதவனா இருக்கலாம்; ஆனா, சொன்ன சொல்ல காப்பாத்தாத அயோக்கியனா இருக்கக் கூடாது. அது, என்ன விட உங்களுக்கு தான் அவமானம். இந்த கல்யாணத்துல உங்களுக்கு விருப்பமிருக்காதுன்னு எனக்கு தெரியும்; அதனால, தனியா வீடு பாத்துட்டேன்...'என்றான் மூர்த்தி.

'அவ்வளவு துாரம் போயாச்சா... படிக்க வெச்சு, வேலைக்கு அனுப்புற வரை என் தயவு தேவைப்பட்டது; இனிமே தேவையில்லங்கற முடிவுக்கு வந்துட்ட போலிருக்கு...'
'உங்க தயவு எப்போதும் தேவைதான்ப்பா. நீங்களும் என்னை புரிஞ்சுக்க மாட்டேங்கறீங்க; என்னாலயும் உங்களுக்கு புரிய வைக்க முடியல...'

இது நடந்து இரண்டரை ஆண்டுகள் ஓடி விட்டன. சொன்னது போலவே காதலித்த பெண்ணை திருமணம் செய்து, வீட்டை விட்டு வெளியேறியவன், அவ்வப்போது அம்மாவையும், சகோதரர்களையும் பார்க்க வீட்டிற்கு வருவான். அப்படி வந்தாலும், உடனடியாக புறப்பட்டு விடுவான். இரவு மனைவி துாங்க முடியாமல் அவஸ்தை படும்போது, மகன் வந்து போன விஷயத்தை ஊகித்துக் கொள்வார் சதாசிவம். தன் பிடிவாதத்தால் அவர்கள் சிரமப்படுவதை உணர்ந்தவர், மருமகள் உண்டாகியிருக்கிறாள் என, மனைவி கூறிய போது, தடை போடாமல் போகச் சொன்னார்.

பேரன் பிறந்த செய்தியை மனைவி கூறி அழைத்த போது, பீரோவை திறந்து, 2 சவரன் சங்கிலியை எடுத்துக் கொடுத்தவர், 'என்ன கூப்பிட்டு தொந்தரவு பண்ணாத... இஷ்டமிருந்தா எடுத்துட்டு போயி போடு; இல்லன்னா பீரோவிலேயே வெச்சு பூட்டு...' என்று கூறிவிட்டார்.

அவர் ஆடாவிட்டாலும், அவர் சதை ஆடுகிறது என்பதை புரிந்து கொண்ட மனைவி, அதன்பின் அவரை எதற்கும் அழைக்கவில்லை. பணி ஓய்வுக்கு பின், பிரபல ஜவுளி கடைக்கு, க்ளார்க் வேலைக்கு அவர் போக,'வீட்டிலயே இருக்கச் சொல்லு; கடைக்காரன் தர்ற பணத்தை நான் தர்றேன்...'என்று அம்மா மூலம் தடுத்தான் மூர்த்தி.

இப்படி தொட்டும் தொடாமலும், பட்டும் படாமலும் இருந்து வந்த உறவில், இன்று யார் கண் பட்டதோ மகன் அருகில் வந்ததும் கோபம், ஆவேசமாய் வெளிப்பட்டது.
''டேய்... நில்லுடா...''

அப்பா பேசுவார் என்று எதிர்பார்க்காததால் நின்றான். அதேசமயம் அவர் பேசிய தோரணையிலிருந்து கோபமாக இருக்கிறார் என்பதையும், எதனால் இந்த கோபம் என்பதையும் உணர்ந்தவன், எதையும் எதிர்கொள்வது என்ற முடிவுக்கு வந்தான்.''யாரைக் கேட்டுடா அவன் வீட்டுக்கு போன?''என்றார் உரத்த குரலில்.

சத்தம் கேட்டு, கோவிலுக்கு வந்திருந்த சிலர் திரும்பிப் பார்க்க, அவரை அமைதிப்படுத்தினான் மூர்த்தி.
''ஏன் போனேன், எதுக்கு போனேன்னு எல்லாத்தையும் சொல்றேன்... முதல்ல கொஞ்சம் மெதுவாகப் பேசுங்க; எல்லாரும் பாக்கறாங்க,'' என்றான்.

''ஊரும், உறவும் காறி துப்பிட்டு போயிடுச்சு; இனிமே யாரு பாத்தா என்ன, பாக்காட்டி என்ன... கூடப் பிறந்த நானே போகாத போது உனக்கென்னடா வேலை... உன்னை ஒதுக்கி வைச்சுதுக்கு பழி தீர்த்துக்கிறியா?'' என்று கேட்டார்.

''ஏம்பா... இப்படி பேசுறீங்க... செத்தது யாரு... உங்க கூட பிறந்தவரு; எனக்கு பெரியப்பா. அவரோட பிறந்து, கூடவே வளர்ந்த நீங்க, அவர் செத்துக்கு கூட போகலயே... இது உங்களுக்கு தப்பாத் தெரியலயா?''
''எது தப்பு, எது நியாயம்ன்னு நீ சொல்லி தெரிஞ்சுக்க வேண்டிய அவசியமில்ல; நீ ஏண்டா போனேன்னு கேட்டா, நீ ஏன் வரலன்னு என்னையவே எதிர் கேள்வி கேட்கிறியா?''

''நீங்க அவரு சொத்து மேல ஆசைப்பட்டிங்க. 'கல்யாணம் செய்துக்கல, புள்ளகுட்டி இல்ல எனக்கு கொடுத்திரு'ன்னு கேட்டீங்க; அவரு கொடுக்க மாட்டேன்னு சொன்னதும், அவரு உறவே வேண்டாம்ன்னுட்டீங்க; அது எந்த விதத்துல நியாயம்?''

திடீரென அவன் குற்றம் சாட்ட, நிலைகுலைந்து போனார் சதாசிவம்.

தொடரும்................



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Oct 08, 2014 1:20 pm

''தாத்தாவுக்கு நீங்க ரெண்டு புள்ள; இருந்த சொத்தை சரி சமமா பிரிச்சு எழுதி வைச்சாங்க. பெரியப்பா படிச்சுட்டு, ரயில்வேயில வேலையை வாங்கிட்டு, மும்பை, புனேன்னு போயிட்டாரு. தாத்தா சொல்லியும் கல்யாணம் செய்துக்கல.

அவரு வேலையை விட்டு ரிட்டயர் ஆகிற வரைக்கும், அவர் நிலத்தில நீங்க தான் நட்டீங்க, அறுத்தீங்க; என்ன செஞ்சேன்னு அவர் ஒரு வார்த்த கேட்கல. பணி ஒய்வு பெற்ற போதும், வீட்டுக்கு வராம, திருவண்ணாமலைல ஒரு மகரிஷியோட ஆசிரமத்துல போயி தங்கினாரு; அப்பக்கூட நீங்க, 'என்னோட வந்து தங்குண்ணே'ன்னு கூப்பிடல. அவ்வளவு ஏன்... ஒரு நாள் கிழமைக்கு கூட அவரை நீங்க வீட்டுக்கு கூப்பிடல; நீங்களும் போய் பார்க்கல. உங்க கூட பிறந்த அண்ணனுக்கு உங்கள விட்டா, உறவுன்னு சொல்ல யாரும் இல்லாத நிலையில, அவுங்கள மறந்திடீங்களப்பா... எப்பவாவது தன்னை பாக்க தன் தம்பி வரமாட்டானான்னு எத்தனை நாள் ஏங்கியிருப்பாரு அவரு?

''கல்யாணம் ஆகிற வரைக்கும் ஒண்ணுக்குள் ஒண்ணா இருக்கிறவங்க, கல்யாணம் ஆன பின், ஏன் இப்படி விட்டேத்தியா விலகிப் போகணும்... காதல் கல்யாணம் செய்துக்கிட்டேன்கிறதுக்காக, நான், என் கூட பிறந்தவங்களை விட்டு விலகியிருக்கேனா...

''ரிட்டயர் ஆனதும் போரடிக்குதுன்னு ஜவுளிக்கடை வேலைக்கு நீங்க போனப்போ, அம்மா மூலம் தடுத்தேனே ஏன் தெரியுமா? எங்க மூணு பேரையும் வளர்த்து, ஆளாக்கி நல்ல நிலைக்கு கொண்டு வந்த நீங்க, இனிமேலும் கஷ்டப்படக்கூடாதுன்னு தான் தடுத்தேன். நான் உங்களை தடுத்த மாதிரி, உங்க அண்ணனை ஆசிரமத்துக்கு போகாம நீங்க தடுத்து நிறுத்தினீங்களா?

''என்னை பெத்தவங்களான உங்களையும், அம்மாவையும் நான் என்னோட ரெண்டு கண்ணாக நினைக்கிற மாதிரி, என் கூட பொறந்தவங்களயும் நினைக்கிறேன். என்னோட நல்லது, கெட்டது எல்லாத்துலயும் காலத்துக்கும் பங்கெடுத்துக்கப் போற இந்த உறவுகள, நான் கேட்டு இவங்க எனக்கு உறவா கிடைக்கலப்பா.
''யாருக்கு மகனா பொறக்கணும், யார் கூட பொறக்கணும், யாரு வாழ்க்கை துணையாகணும், யார் யாரை பெத்தெடுக்கணுங்கறது நாம முடிவு செய்ற விஷயமில்ல; அது ஆண்டவன் சித்தம். இப்படி உருவான உறவுகள எக்காரணம் கொண்டும் விலக்கி வைக்கவோ, வேற்றுமைப்படுத்தி பாக்கவோ கூடாது. பெண் கொடுத்து, பெண் எடுப்பதன் மூலம், உறவு வட்டம் விரிவடைஞ்சு புதுசா உறவுகள் உருவாகலாம்; அதுக்காக, இருக்கற பழைய உறவுகளை மறந்திடக் கூடாது.

''பெரியப்பா சொத்து தரலங்கறதுக்காக கோபப்பட்டீங்களே... உங்க சொத்தை அவரு கேட்டா, நீங்க விட்டுக் கொடுப்பீங்களா... சொத்து தரலேங்கறதுக்காக அவரோட உறவையே அறுத்துட்டதுடன், அவரு செத்ததுக்கு கொள்ளி போடக் கூட வரல,''என்றான் கோபமாக மூர்த்தி.

அவனது ஒவ்வொரு வார்த்தையும் அவர் மனதை குண்டூசியால் குத்துவதைப் போல் இருந்தது.
''உங்களுக்கு ஒண்ணு தெரியுமாப்பா... ஜடாயுங்கற ஒரு பறவை இறந்தப்ப, ராமபிரான் அதை பாத்துட்டு சும்மா இல்ல; ஒரு மகன் ஸ்தானத்துல இருந்து அதுக்கான இறுதி சடங்கை செஞ்சாரு. அதே ராமனுக்கு வாலியை கொல்ல வேண்டிய நிலை வந்தப்ப, அவரு தம்பி அங்கதனை கூப்பிட்டு இறுதி சடங்கை செய்ய சொன்னாரு. எல்லாத்துக்கும் மேலாக தன் மனைவியை கடத்திச் சென்றவன் என நினைக்காம, இறந்த ராவணனோட உடலை காக்கா, கழுகுக்கு போடாம, விபிஷணனை கூப்பிட்டு, இறுதி சடங்குக்கு ஏற்பாடு செஞ்சாரு.

''கிருஷ்ணனோ, கவுரவர்கள் தனக்கு எதிரியாய் இருந்த போதிலும் அவர்களின் இறப்புக்கு பின், அவர்களின் தந்தையான திருதிராஷ்டிரனையும், பங்காளிகளான பாண்டவர்களையும் அழைத்து, தர்ப்பணம் செய்ய வைச்சாரு.

''எந்த உயிரா இருந்தாலும், இறப்புக்கு பின் அதுக்கு முறையான இறுதி சடங்கு செய்யணும். அப்ப தான் அதோட ஆத்மா சாந்தியடையும். அதனால தான், அனாதையா செத்துப் போறவங்களக் கூட, எந்த வித உறவும், அறிமுகமில்லாத சில நல்ல உள்ளங்கள் அவங்களுக்கான இறுதிச் சடங்கைச் செய்றாங்க. ஆனா, நீங்க என்னடான்னா... சொத்து தரலங்கறதுக்காக உங்க கூட பொறந்தவர் செத்ததுக்கு கூட வரல.

''நான் பெரியப்பாவை என் வீட்டுக்கு அழைச்சுகிட்டு வர்றதுன்னு முடிவு செய்து, அவரிடம் இதைப் பற்றி சொன்னப்ப, 'என் தம்பி ஒரு நாள் கூட இப்படிக் கேட்டதில்லையே... சீக்கிரம் வந்துடறேன்'ன்னு சொன்னாரு. அதுமட்டுமில்லாம, தான் நடத்திட்டு வந்த டிரஸ்ட்டை தன் காலத்துக்கு அப்புறம், என்னை எடுத்து நடத்த சொன்னாரு. ஆனா, இப்படி திடீர்ன்னு இறந்து போவார்ன்னு எதிர்பாக்கல. அவரு பிரேதத்தை கூட வீட்டுக்கு கொண்டு வர நீங்க சம்மதிக்கலன்னு தெரிஞ்சப்ப, எனக்கு கோபம் வந்துச்சு. நான் கொண்டு வர முடிவு செஞ்சப்ப, அவுங்க நண்பர் தன் வீட்டுக்கு கொண்டு போயிட்டாரு.

''உங்கள மாதிரி என்னால விட முடியாம, பெரியப்பாவோட இறப்புக்கு போனேன். நீங்க மனசு மாறி வந்து கொள்ளி போடுவீங்கன்னு எதிர்பாத்தேன்; ஆனா, கடைசி வரையிலும் நீங்க வரல. அதனால, உங்களுக்கு பதிலா நானே கொள்ளிப் போட்டேன். இது சரின்னா ஏத்துக்கங்க; தப்புன்னா விட்ருங்க,''என்றவன், அவர் பதிலை எதிர்பார்க்காமல் அவரைக் கடந்து சென்றான். அவனையே பார்த்துக் கொண்டிருந்தார் சதாசிவம்.
'நான் பெத்த புள்ளக்கு புரிந்தது எனக்கு ஏன் புரியாமல் போயிற்று... பிரணவ மந்திரத்தை தந்தை சிவனுக்கு உபதேசித்த சுவாமிநாதனைப் போல உறவின் உன்னதத்தை இவன் எனக்கு உணர்த்தி விட்டு போகிறானே...' என நினைத்த சதாசிவம், தன் அண்ணன் விஷயத்தில் தான் நடந்து கொண்ட முறையை நினைத்து வேதனைபட்டவர், தனியாக ஓர் இடத்தில் அமர்ந்து, முதன்முறையாய் இறந்துபோன அண்ணனை நினைத்து, விசும்பி விசும்பி, அழ ஆரம்பித்தார்.

நன்றி : தினமலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Oct 08, 2014 2:17 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க இந்த காலத்து பசங்க தெளிவா இருக்காங்க புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Oct 08, 2014 3:07 pm

என்னோட நல்லது, கெட்டது எல்லாத்துலயும் காலத்துக்கும் பங்கெடுத்துக்கப் போற இந்த உறவுகள, நான் கேட்டு இவங்க எனக்கு உறவா கிடைக்கலப்பா.
''யாருக்கு மகனா பொறக்கணும், யார் கூட பொறக்கணும், யாரு வாழ்க்கை துணையாகணும், யார் யாரை பெத்தெடுக்கணுங்கறது நாம முடிவு செய்ற விஷயமில்ல; அது ஆண்டவன் சித்தம். இப்படி உருவான உறவுகள எக்காரணம் கொண்டும் விலக்கி வைக்கவோ, வேற்றுமைப்படுத்தி பாக்கவோ கூடாது. பெண் கொடுத்து, பெண் எடுப்பதன் மூலம், உறவு வட்டம் விரிவடைஞ்சு புதுசா உறவுகள் உருவாகலாம்; அதுக்காக, இருக்கற பழைய உறவுகளை மறந்திடக் கூடாது.
உறவுகள் உதிர்வதில்லை! 3838410834 உறவுகள் உதிர்வதில்லை! 3838410834
விமந்தனி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் விமந்தனி



உறவுகள் உதிர்வதில்லை! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஉறவுகள் உதிர்வதில்லை! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312உறவுகள் உதிர்வதில்லை! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Oct 08, 2014 3:17 pm

அருமையான கதை பகிர்வுக்கு நன்றீமா



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Oct 08, 2014 5:54 pm

நன்றி விமந்தினி , நன்றி பானு புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Wed Oct 08, 2014 8:07 pm

நல்ல கதை...நல்ல உறவுகளை புரிஞ்சுக்கிறதில்லை...தவறான உறவுகளை நல்லவர்கள்னு நம்பி ஏமாறுறதும் நடக்குது...

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக