புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:28 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Today at 6:07 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Today at 6:07 pm

» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Today at 1:24 pm

» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Today at 1:08 pm

» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Today at 1:07 pm

» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Today at 1:01 pm

» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Today at 12:58 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:50 am

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Today at 9:47 am

» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Today at 7:04 am

» Prizes that will make you smile.
by cordiac Today at 6:46 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:17 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:05 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Yesterday at 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Yesterday at 10:25 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 9:25 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Yesterday at 9:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Yesterday at 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Yesterday at 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Yesterday at 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Sun Jun 09, 2024 8:20 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சட்டம் தன் வேலையை நன்றாகவே செய்கிறது...! Poll_c10சட்டம் தன் வேலையை நன்றாகவே செய்கிறது...! Poll_m10சட்டம் தன் வேலையை நன்றாகவே செய்கிறது...! Poll_c10 
33 Posts - 66%
heezulia
சட்டம் தன் வேலையை நன்றாகவே செய்கிறது...! Poll_c10சட்டம் தன் வேலையை நன்றாகவே செய்கிறது...! Poll_m10சட்டம் தன் வேலையை நன்றாகவே செய்கிறது...! Poll_c10 
15 Posts - 30%
cordiac
சட்டம் தன் வேலையை நன்றாகவே செய்கிறது...! Poll_c10சட்டம் தன் வேலையை நன்றாகவே செய்கிறது...! Poll_m10சட்டம் தன் வேலையை நன்றாகவே செய்கிறது...! Poll_c10 
1 Post - 2%
Geethmuru
சட்டம் தன் வேலையை நன்றாகவே செய்கிறது...! Poll_c10சட்டம் தன் வேலையை நன்றாகவே செய்கிறது...! Poll_m10சட்டம் தன் வேலையை நன்றாகவே செய்கிறது...! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சட்டம் தன் வேலையை நன்றாகவே செய்கிறது...! Poll_c10சட்டம் தன் வேலையை நன்றாகவே செய்கிறது...! Poll_m10சட்டம் தன் வேலையை நன்றாகவே செய்கிறது...! Poll_c10 
160 Posts - 56%
heezulia
சட்டம் தன் வேலையை நன்றாகவே செய்கிறது...! Poll_c10சட்டம் தன் வேலையை நன்றாகவே செய்கிறது...! Poll_m10சட்டம் தன் வேலையை நன்றாகவே செய்கிறது...! Poll_c10 
98 Posts - 34%
T.N.Balasubramanian
சட்டம் தன் வேலையை நன்றாகவே செய்கிறது...! Poll_c10சட்டம் தன் வேலையை நன்றாகவே செய்கிறது...! Poll_m10சட்டம் தன் வேலையை நன்றாகவே செய்கிறது...! Poll_c10 
11 Posts - 4%
mohamed nizamudeen
சட்டம் தன் வேலையை நன்றாகவே செய்கிறது...! Poll_c10சட்டம் தன் வேலையை நன்றாகவே செய்கிறது...! Poll_m10சட்டம் தன் வேலையை நன்றாகவே செய்கிறது...! Poll_c10 
9 Posts - 3%
prajai
சட்டம் தன் வேலையை நன்றாகவே செய்கிறது...! Poll_c10சட்டம் தன் வேலையை நன்றாகவே செய்கிறது...! Poll_m10சட்டம் தன் வேலையை நன்றாகவே செய்கிறது...! Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
சட்டம் தன் வேலையை நன்றாகவே செய்கிறது...! Poll_c10சட்டம் தன் வேலையை நன்றாகவே செய்கிறது...! Poll_m10சட்டம் தன் வேலையை நன்றாகவே செய்கிறது...! Poll_c10 
2 Posts - 1%
cordiac
சட்டம் தன் வேலையை நன்றாகவே செய்கிறது...! Poll_c10சட்டம் தன் வேலையை நன்றாகவே செய்கிறது...! Poll_m10சட்டம் தன் வேலையை நன்றாகவே செய்கிறது...! Poll_c10 
1 Post - 0%
Geethmuru
சட்டம் தன் வேலையை நன்றாகவே செய்கிறது...! Poll_c10சட்டம் தன் வேலையை நன்றாகவே செய்கிறது...! Poll_m10சட்டம் தன் வேலையை நன்றாகவே செய்கிறது...! Poll_c10 
1 Post - 0%
Ammu Swarnalatha
சட்டம் தன் வேலையை நன்றாகவே செய்கிறது...! Poll_c10சட்டம் தன் வேலையை நன்றாகவே செய்கிறது...! Poll_m10சட்டம் தன் வேலையை நன்றாகவே செய்கிறது...! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சட்டம் தன் வேலையை நன்றாகவே செய்கிறது...!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 14, 2014 11:36 pm

சட்டம் தன் வேலையை நன்றாகவே செய்கிறது...! 10561553_751456511594115_5601421001677088525_n

தனியாக கட்சி ஆரம்பித்தோ, தேசிய கட்சிகளில் அடிமட்டத்தில் இருந்து உழைத்தோ அல்லது திராவிட இயக்கம் நடத்திய சமூக போராட்டங்களில் ஈடுபட்டோ முதல்வர் பதவியை ஜெயலலிதா பிடிக்கவில்லை.

எம்.ஜி.ஆர் என்ற பெரும் நட்சத்திரத்தின் நட்பும் ஆதரவும் தந்த பதவி தான் அதிமுக தலைவர் பதவியும் அதைத் தொடர்ந்து கிடைத்த முதல்வர் பதவியும். எம்ஜிஆரின் ஒரே வாரிசாக இவரை மக்கள் ஏற்றுக் கொண்ட ஒரே காரணத்தால் தான் ஜானகியை புறக்கணித்துவிட்டு இவரை அதிமுகவின் தலைவியாக ஏற்றுக் கொண்டனர். ஜெயலலிதாவை முதல்வராக ஆக்கியதில் சில ஊடகங்களின் பங்கும் மிக மிக முக்கியமானது. பல சுயநல, சமூக காரணங்களால் இந்த ஊடகங்கள் ஜெயலலிதாவை ஆரம்பத்தில் இருந்தே தூக்கிப் பிடித்தன.

ஆனால், ஜெயலலிதா தவறு செய்யும்போது அதை சுட்டிக் காட்டியிருக்க வேண்டிய இந்த ஊடகங்கள் அதைச் செய்யத் தவறின. காரணம், நம்மவருக்கு நாமே பிரச்சனை தரக் கூடாது என்ற எண்ணம் தான். அது தான் இன்று ஜெயலலிதாவை சிறைக்குள் உட்கார வைத்திருக்கிறது.

டான்சி வழக்கில் ஜெயலலிதா தப்பியது 'ஜஸ்ட் மிஸ்' தான். வலுவான ஆதரங்களோடு குற்றம் நிரூபிக்கப்பட்டாலும் 'சந்தேகத்தின் அடிப்படையில்' ஜெயலலிதாவை தண்டிக்காமல் விட்டது உச்ச நீதிமன்றம். சட்ட விரோதமாக வாங்கிய அரசு நிலத்தைத் திருப்பித் தந்தால் போதும் என்று கூறி ஜெயலலிதாவை விடுவித்தது.

டான்சி வழக்கில் ஜெயலலிதா தப்பியது அப்போது பெரும் ஆச்சரியத்தைத் தந்தது. அதாவது அதிகாரம் இருந்தால் யாரும் தண்டனைக்கு உள்ளாக மாட்டார்கள் என்ற கருத்தைப் பரப்பியது அந்த உத்தரவு.

ஆனால், தொடர்ந்து அரசியல்வாதிகளால் இந்த தேசம் பாழ்பட்டு வருவதை பார்த்து சகிக்க முடியாத சில மிக மிக நேர்மையான நீதிபதிகள் Judicial activism என்ற நிலைக்கு வந்து அடுத்தடுத்து அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்து லாலு, எதியூரப்பா, ரெட்டி சகோதரர்கள் கும்பல் ஆகியோரின் பதவிகளைப் பறித்து உள்ளே தள்ளி சட்டத்தையும் நாட்டையும் காப்பாற்றினர்.

அந்த வரிசையில் தான் ஜெயலலிதாவின் தீர்ப்பையும் பார்க்க வேண்டும், கனிமொழியும் ஆ.ராசாவும் செய்யாத தவறையா ஜெயலலிதா செய்துவிட்டார் என்று முடிச்சுபோட்டு ஜெயலலிதா தப்பே செய்யவில்லை என்று பேசுவது விதண்டாவாதம். கனிமொழியும் ராசாவும் அவர்கள் செய்த தவறுக்கு தண்டனையை அனுபவிப்பார்கள். நிச்சயம் அனுபவித்தாக வேண்டும்.

ஜெயலலிதாவுக்கு எதிராக தீர்ப்பு வழங்கியதே ஏதோ சட்ட விரோதம் மாதிரியும், ஜெயலலிதா இந்தியாவின் சட்ட திட்டங்களுக்கு எல்லாம் அப்பாற்பட்டவர் என்பது மாதிரியும் படிக்காதவர்கள் நினைத்தால் தப்பில்லை. அதையே சில ஊடகங்களும் நினைப்பது தான் வேதனை. இல்லாவிட்டால் அவர் கைதான செய்தியை முதல் பக்கத்தில் வெளியிடாமல் மறைப்பார்களா?.

இந்த ஊடகங்களை வழி நடத்துவோர் தான் ஜெயலலிதாவையும் வழி நடத்தியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களது தவறான ஆலோசனைகளால் தான் ஜெயலலிதா இன்று இந்தப் பாடுபட்டு வருகிறார்.

ஜெயலலிதாவின் தவறுகளை சுட்டிக் காட்டாமல் இவர்கள் சாமரம் வீசியதும், ஜெயலலிதாவுக்கு ஆலோசகர்கள் என்ற பெயரில் கூட இருந்த அதிகாரிகள், மாஜி ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். அதிகாரிகள் ஆகியோரும் தான் ஜெயலலிதாவின் இந்த நிலைமைக்குக் காரணம்.

அம்மாவுக்கு பிடிச்ச மாதிரி பேசணும், நடந்துக்கனும்.. அப்ப தான் பதவியில் இருக்க முடியும் என்ற ஒரே ஒரு பார்முலாவை மட்டும் வைத்துக் கொண்டு இந்த 'ஆலோசகர்கள்' தந்த அட்வைஸ், முதல்வருக்கு ஆலோசனைகள் தர வேண்டிய நிலையில் இருக்க வேண்டிய அமைச்சர்கள் அதைவிட்டுவிட்டு கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் காலில் விழுந்து கிடந்து பதவியும் அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தையும் மட்டுமே கருத்தில் கொண்டு செயல்பட்டது... என ஜெயலலிதாவை சுற்றி இருந்த கும்பல்கள் அனைத்துமே சுயநலத்தில் திளைத்தவை.

தமிழகத்தின் அனைத்து அமைச்சர்களும் முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையில் அழுதுகொண்டும், அழுகை ஓவராகி மூக்கு ஒழுகிக் கொண்டும், வாயில் கர்சீப்பை திணித்துக் கொண்டும் பதவியேற்றதை பார்த்த மற்ற மாநிலத்தினர் தமிழர்களை என்ன மாதிரி நினைத்திருப்பார்கள்?. நம்மை எவ்வாறு எடை போட்டு இருப்பார்கள்? ஜெயலலிதா முதல்வராக இல்லாத அமைச்சரவையில் எனக்கு எதற்கு இடம் என்று எந்த ஒரு அமைச்சரும், பன்னீர்செல்வம் உள்பட, பதவியேற்பை தவிர்க்கவில்லை. அமைச்சர் பதவி வேண்டாம் என்று சொல்லவில்லை. கண்ணீரில் மூழ்கியபடியே பதவியில் உட்கார்ந்துவிட்டனர்.

அதே போல ஜெயலலிதா இல்லாத சட்டசபையில் நான் இருக்க மாட்டேன் என்று எந்த ஒரு அதிமுக எம்எல்ஏவும், அதிருப்தி தேமுதிக எம்எல்ஏவும் பதவியை ராஜினாமா செய்யவில்லை. அவ்வளவு ஏன் ஒரு கவுன்சிலர் கூட பதவி விலகவில்லையே.. ஏன்?. அதே நேரத்தில் ஜெயலலிதா கைதால் தமிழகமே ஸ்தம்பித்துப் போய்விட்டதாகவும், யாருக்கும் வேறு வேலையே இல்லை என்பது மாதிரியும், எல்லோருமே இதைப் பற்றி மட்டுமே கவலைப்பட்டுக் கொண்டு உட்கார்ந்து இருப்பது மாதிரியும், பொது மக்கள் எல்லா வேலையையும் அப்படி அப்படியே விட்டுவிட்டு ரோட்டில் இறங்கி போராட்டங்களில் ஈடுபட்டு வருவது மாதிரியும், பெரிய சுதந்திரப் போராட்டமே நடப்பது மாதிரியும் ஒரு பிரமையை உருவாக்கும் வேலையும் நடந்து வந்தது.

அதுவும் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு விசாரணைக்கு வருவதையொட்டி இந்த இமேஜ் உருவாக்கப்பட்டது. அதாவது ஜெயலலிதா கைதால் தமிழகத்தில் பெரும் அசாதாரணமான சூழல் நிலவுவதாகவும் அவரை இனியும் சிறையில் வைத்திருப்பது நாட்டுக்கே ஆபத்து என்பது மாதிரியும் ஒரு பிரமையை உருவாக்கி நீதிமன்றத்தையே திணற வைக்கும் திட்டத்தின் ஒரு பகுதி தான் அது.

இதற்காகவே ஆம்னி பஸ், தனியார் பள்ளிகள் என ஸ்டிரைக்கில் ஈடுபட வைக்கப்பட்டனர். பள்ளிகள் விஷயத்தில் நீதிமன்றம் தலையிட்ட உடன் பல்டி அடித்தனர். அடுத்ததாக காய்கறி கடைகள், பூ கடைகள் என போராட்டங்களை நடத்த வைத்தனர். நேற்று ஜாமீன் மனு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது நீதிமன்றத்தின் வெளியிலும் பெரும் அளவில் அதிமுகவினர் கூடி நெருக்கடியான ஒரு நிலையை உருவாக்கவும் முயன்றனர்.

அதைவிட மேலே ஒருபடி போய் நீதிபதி தனது முடிவை அறிவிக்கும் முன்பாகவே ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைத்துவிட்டது என்றும் செய்தி பரப்பினர். ஆனால், இதையெல்லாம் ஒதுக்கித் தள்ளிவிட்டு நீதிபதி சந்திரசேகரா ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ததோடு ஊழல் என்பது மனித உரிமை மீறல் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையும் சுட்டிக் காட்டி, இனி ஊழல் அரசியல்வாதிகளுக்கு கொஞ்சமும் நீதி வளையாது என்பதை சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

ஜாமீன் மனு மீது விசாரணை நடக்கும்வரை தமிழகம் ஸ்தம்பித்துப் போனது மாதிரி காட்டினார்கள். மனு நிராகரிக்கப்பட்டவுடன் தமிழகம் இன்று அமைதியாக இருக்கிறது. அது எப்படி?

உடனே ஜாமீனில் விட வேண்டும் என கர்நாடக உயர் நீதிமன்ற விடுமுறை கால நீதிபதியையும் அடுத்து உயர் நீதிமன்றத்தையும் வேகவேகமாக அணுகிய ஜெயலலிதா தரப்பு, இப்போது உடனே உச்ச நீதிமன்றத்திற்கு போனால் என்ன ஆகுமோ, நாலு பேருக்கும் சேர்த்து பெட்டிஷன் போடலாமா தனித்தனியாக போடலாமா என்று அடுத்தகட்ட நடவடிக்கையில் இறங்குவதில் அதிக அவசரம் காட்டாமல் மிரண்டு போய் மிக ஜாக்கிரதையாக அடி எடுத்து வைக்க ஆரம்பித்திருக்கிறது..

சட்டம் தன் வேலையை நன்றாகவே செய்கிறது...!

- ஏ.கே.கான்




சட்டம் தன் வேலையை நன்றாகவே செய்கிறது...! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Wed Oct 15, 2014 12:52 am

ஜெயலலிதா செய்ததெல்லாம் தன்னலத்திற்காகவும் தன்னைச்சார்ந்தவரின் நலன்களுக்காகவுமே தவிர மக்கள் நலனுக்காக அல்ல. எனவே அவரால் தமக்கு பயனில்லை என்று தெரிந்தால் இந்த கூட்டமெல்லாம் விட்டு விலகிவிடும்.
ஜெயலலிதா வெளியில் வரமுடியாது என்று நிச்சயமானால்
அ.தி.மு.க. வின் கதி அதோகதிதான்.



நேர்மையே பலம்
சட்டம் தன் வேலையை நன்றாகவே செய்கிறது...! 5no
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 15, 2014 1:01 am

அகிலன் wrote:ஜெயலலிதா செய்ததெல்லாம் தன்னலத்திற்காகவும் தன்னைச்சார்ந்தவரின் நலன்களுக்காகவுமே தவிர மக்கள் நலனுக்காக அல்ல. எனவே அவரால் தமக்கு பயனில்லை என்று தெரிந்தால் இந்த கூட்டமெல்லாம் விட்டு விலகிவிடும்.
ஜெயலலிதா வெளியில் வரமுடியாது என்று நிச்சயமானால்
அ.தி.மு.க. வின் கதி அதோகதிதான்.

ஜெலயலிதா அரசியலில் ஈடுபட இயலாத சூநிலை உருவானால், அதிமுக நிச்சயம் உடையும்! கலைஞரின் மறைவுக்குப் பிறகு திமுகவும் உடையும், இதன் மூலம் தமிழகத்தில் கட்சிகளின் எண்ணிக்கை அதிகமாகுமே தவிர மக்களுக்கு எந்தப் பயனும் ஏற்படாது!

அரசியல் கூட்டங்களுக்கு ஆள்சேர்ப்பதன் வழி 100, 200 கிடைக்க வாய்ப்புள்ளது!



சட்டம் தன் வேலையை நன்றாகவே செய்கிறது...! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Wed Oct 15, 2014 1:16 am

பெரிய கட்சிகள் உடைந்தால் புதிய நல்ல தலைமை ஒன்று உருவாகும் என்றே நம்புகிறேன்.
இப்பொழுது இருக்கும் கட்சிகள் எதுவும் பதவிக்கு வர தகுதியுடையவை அல்ல.



நேர்மையே பலம்
சட்டம் தன் வேலையை நன்றாகவே செய்கிறது...! 5no
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82469
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Oct 15, 2014 6:30 am

ஜெலயலிதா நிச்சயம் வெளியே வருவார்....!
-
ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலுக்கு ஆறுமாத அவகாசம் உள்ளது...
-
பதவியில் இருக்க முடியாவிட்டாலும் தன்னை நிலைப்படுத்திக் கொண்டு
மீண்டும் கட்சியை வலுப்படுத்தி ஒரு ரவுண்டு வருவார் என நம்பலாம்...!
-


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34996
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Oct 15, 2014 8:40 am

சிவா wrote:
அகிலன் wrote:ஜெயலலிதா செய்ததெல்லாம் தன்னலத்திற்காகவும் தன்னைச்சார்ந்தவரின் நலன்களுக்காகவுமே தவிர மக்கள் நலனுக்காக அல்ல. எனவே அவரால் தமக்கு பயனில்லை என்று தெரிந்தால் இந்த கூட்டமெல்லாம் விட்டு விலகிவிடும்.
ஜெயலலிதா வெளியில் வரமுடியாது என்று நிச்சயமானால்
அ.தி.மு.க. வின் கதி அதோகதிதான்.

ஜெலயலிதா அரசியலில் ஈடுபட இயலாத சூநிலை உருவானால், அதிமுக நிச்சயம் உடையும்! கலைஞரின் மறைவுக்குப் பிறகு திமுகவும் உடையும், இதன் மூலம் தமிழகத்தில் கட்சிகளின் எண்ணிக்கை அதிகமாகுமே தவிர மக்களுக்கு எந்தப் பயனும் ஏற்படாது!

அரசியல் கூட்டங்களுக்கு ஆள்சேர்ப்பதன் வழி 100, 200 கிடைக்க வாய்ப்புள்ளது!
மேற்கோள் செய்த பதிவு: 1096410

ஆமோதிக்கிறேன் ,
ஆனால் சிறிய திருத்தம் , 100,200 என்பதற்கு பதிலாக 1000, 2000 என்ற கணக்கில் சேர்க்கலாம் .

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Oct 15, 2014 9:39 am

இருக்கும் கட்சிகளில் எதுவும் உருப்படி இல்லை.

கட்சிக்குள் இருக்கும் நல்ல இளைஞர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி, எதிர்ப்புகளை சமாளித்து போராடினால் 10 வருடங்களில் நல்ல தலைவர்கள் வர வாய்ப்பிருக்கு. நடக்குமா???




avatar
பது
தளபதி

தளபதி
பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011
http://www.batbathu.blogsport.com

Postபது Wed Oct 15, 2014 10:10 am

யினியவன் wrote:இருக்கும் கட்சிகளில் எதுவும் உருப்படி இல்லை.

கட்ச்சிக்குள் இருக்கும் நல்ல இளைஞர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி, எதிர்ப்புகளை சமாளித்து போராடினால் 10 வருடங்களில் நல்ல தலைவர்கள் வர வாய்ப்பிருக்கு. நடக்குமா???
மேற்கோள் செய்த பதிவு: 1096430 ஆனால் பத்து வருடங்களுக்குள் தமிழகம்


M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Wed Oct 15, 2014 11:26 am

அதுதான் கவலை ..
இந்த இடைப்பட்ட காலத்தில் என்னென்ன நடக்குமோ..
இனியவன் நண்பர் கூறியபடி இளைஞர்கள் ஒன்று சேர வேண்டும்...
காலம் மாற வேண்டும்..



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

சட்டம் தன் வேலையை நன்றாகவே செய்கிறது...! W5td1pX3QFi1kBRhH0I3+Affection
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக