புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜெயலலிதா விடுதலை - Page 4 Poll_c10ஜெயலலிதா விடுதலை - Page 4 Poll_m10ஜெயலலிதா விடுதலை - Page 4 Poll_c10 
83 Posts - 55%
heezulia
ஜெயலலிதா விடுதலை - Page 4 Poll_c10ஜெயலலிதா விடுதலை - Page 4 Poll_m10ஜெயலலிதா விடுதலை - Page 4 Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
ஜெயலலிதா விடுதலை - Page 4 Poll_c10ஜெயலலிதா விடுதலை - Page 4 Poll_m10ஜெயலலிதா விடுதலை - Page 4 Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
ஜெயலலிதா விடுதலை - Page 4 Poll_c10ஜெயலலிதா விடுதலை - Page 4 Poll_m10ஜெயலலிதா விடுதலை - Page 4 Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
ஜெயலலிதா விடுதலை - Page 4 Poll_c10ஜெயலலிதா விடுதலை - Page 4 Poll_m10ஜெயலலிதா விடுதலை - Page 4 Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
ஜெயலலிதா விடுதலை - Page 4 Poll_c10ஜெயலலிதா விடுதலை - Page 4 Poll_m10ஜெயலலிதா விடுதலை - Page 4 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
ஜெயலலிதா விடுதலை - Page 4 Poll_c10ஜெயலலிதா விடுதலை - Page 4 Poll_m10ஜெயலலிதா விடுதலை - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜெயலலிதா விடுதலை - Page 4 Poll_c10ஜெயலலிதா விடுதலை - Page 4 Poll_m10ஜெயலலிதா விடுதலை - Page 4 Poll_c10 
23 Posts - 88%
T.N.Balasubramanian
ஜெயலலிதா விடுதலை - Page 4 Poll_c10ஜெயலலிதா விடுதலை - Page 4 Poll_m10ஜெயலலிதா விடுதலை - Page 4 Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
ஜெயலலிதா விடுதலை - Page 4 Poll_c10ஜெயலலிதா விடுதலை - Page 4 Poll_m10ஜெயலலிதா விடுதலை - Page 4 Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜெயலலிதா விடுதலை


   
   

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon May 11, 2015 11:12 am

First topic message reminder :

ஜெயலலிதா விடுதலை. வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. மகிழ்ச்சி :மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஜெயலலிதா விடுதலை - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஜெயலலிதா விடுதலை - Page 4 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ஜெயலலிதா விடுதலை - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon May 11, 2015 2:49 pm

அபராதமும் ரத்து

ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் முன்வைத்த வாதங்களை ஏற்று, பெங்களூரு தனி நீதிமன்ற நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்பை ரத்து செய்வதாகவும் நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டார். இதனால், ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேருக்கு விதிக்கப்பட்ட அபராதமும் ரத்தாகி விடுகிறது.

3 நிமிடத்தில் தீர்ப்பின் முக்கிய அம்சத்தை மட்டும் வாசித்துவிட்டு நீதிபதி குமாரசாமி, தனது அறைக்கு திரும்பினார். தீர்ப்பு மொத்தம் 900 பக்கங்கள் கொண்டதாக உள்ளதாகவும், அது விரைவில் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



ஜெயலலிதா விடுதலை - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon May 11, 2015 2:50 pm

'புடம் போட்ட தங்கமாக மீண்டுள்ளேன்...தீர்ப்பு மனநிறைவை அளிக்கிறது!' - ஜெயலலிதா

சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து விடுவித்து கர்நாடக உயர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு தமக்கு மன நிறைவை அளிப்பதாக உள்ளது என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், "இன்று (11.5.2015) கர்நாடகா உயர்நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பு எனக்கு மிகுந்த மன நிறைவை அளிக்கிறது. என் மீது சுமத்தப்பட்ட அவதூறை நீக்கிய தீர்ப்பு இது. என் மீது எனது அரசியல் எதிரிகளால் சுமத்தப்பட்ட பழியினைத் துடைத்திட்ட தீர்ப்பு இது.

நான் எந்த தவறும் செய்யாதவர் என்பதை உறுதி செய்த தீர்ப்பு இது. புடம் போட்ட தங்கமாக நான் மீள இந்தத் தீர்ப்பு வழிவகை செய்துள்ளது. கீழமை நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பிற்குப் பிறகு என் மீது மாறாப் பற்றும், அன்பும் கொண்ட தமிழக மக்கள் இறைவனிடம் வேண்டியதற்கு, இறைவன் அளித்த வரம் இது.

இந்த தீர்ப்பு எனக்கு தனிப்பட்ட முறையில் கிடைத்த வெற்றி என்று நான் கருதவில்லை. நீதி நிலை நாட்டப்பட்டு, தர்மம் வென்றது என்பது தான் இந்த தீர்ப்பு. சூழ்ச்சிகள் என்றைக்குமே தற்காலிகமாக வெற்றி பெறலாம். ஆனால், இறுதி வெற்றி என்பது தர்மத்திற்கும், நேர்மைக்கும்தான் கிடைக்கும்.

திமுகவினாரால் சூழ்ச்சி வலைப் பின்னப்பட்டு, அதன் காரணமாக என் மீது போடப்பட்ட வழக்கில், சதியும் விதியும் சதிராடியதால் இடையிலே நீதி உறங்கி விட்டது. இன்றைய தீர்ப்பு நீதியே என்றும் வெல்லும் என்பதை பறைசாற்றுகிறது.

என்னையும், அஇஅதிமுகவையும் நேரடியாக வெல்ல முடியாது என்ற காரணத்தால் அரசியல் எதிரிகள் இறுதி வரை தங்கள் சூழ்ச்சிகளால் என்னையும், புரட்சித் தலைவர் பொன்மனச் செம்மல், இதயதெய்வம் எம்.ஜி.ஆர். அவர்களால் துவக்கப்பட்ட மாபெரும் இயக்கமாம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தையும் அழித்து விடலாம் என்ற காழ்ப்புணர்வை இன்றுடன் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

நான் குற்றமற்றவர் என்பதில் எள் முனையளவும் நம்பிக்கை குலையாமல் எனக்காக பிரார்த்தனைகள் மேற்கொண்ட என்னை வாழ வைக்கும் தெய்வங்களாகிய தாய்மார்களுக்கும், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் ரத்தத்தின் ரத்தமான கழக உடன்பிறப்புகளுக்கும், அனைத்து தமிழக மக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கீழமை நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பின் காரணமாக மன வேதனை அடைந்த
233 கழக உடன்பிறப்புகள் எனக்காக தங்களது இன்னுயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்கள் என்பது என்றென்றும் எனக்கு வேதனை அளிக்கக்கூடியதாகும்.

நேற்று (10.5.2015) கூட நான்கு கழக உடன்பிறப்புகள் தங்கள் இன்னுயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்கள். இன்னும் சற்று நிதானத்தைக் கடைபிடித்திருந்தால் அவர்களும் தமிழக மக்களின் இந்த மகிழ்ச்சியை இன்று கொண்டாடி இருக்கலாம்.

தமிழக மக்கள் எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் என்பதே எப்போதும் எனது அவா ஆகும். தமிழக மக்களின் நலனே என் நலன் என்று நான் என்றென்றும் தமிழக மக்களுக்காகவே உழைத்திடுவேன்" எனக் கூறியுள்ளார்.



ஜெயலலிதா விடுதலை - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon May 11, 2015 3:10 pm


தீர்ப்பு சரியா தவறா என்ற விமர்சனத்தில் ஈடுபட விரும்பவில்லை: தமிழருவி மணியன்

காந்திய மக்கள் இயக்கத்தின் நிறுவன தலைவர் தமிழருவி மணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

பெங்களூரு நீதிமன்றம் ஜெயலலிதா, சசிக்கலா, இளவரசி, சுதாகரன் ஆகிய நால்வரும் குற்றமற்றவர்கள் என்று தீர்ப்புரைத்திருக்கிறது. இந்தத் தீர்ப்பு சரியா தவறா என்ற விமர்சனத்தில் ஈடுபட காந்திய மக்கள் இயக்கம் விரும்பவில்லை. ஜெயலலிதாவின் அரசியல் வீழ்ச்சி எழமுடியாமல் வீழ்ந்து கிடக்கும் தி.மு.கழகத்தின் மறு எழுச்சிக்கு வித்திடலாகாது என்பதுதான் பெரும்பான்மை மக்களின் கவலையாக இருக்கிறது. ஜெயலலிதா நீதிமன்றத்தின் பிடியிலிருந்து இன்று மூன்றாவது முறையாக விடுபட்டிருக்கிறார்.

2001ல் சென்னை உயர்நீதிமன்றம் டான்சி நிலபேரம், கொடைக்கானல் பிளசண்ட் ஸ்டே விடுதி விவகாரம் ஆகியவற்றிலிருந்து அவரை விடுவித்தது. மேல்முறையீட்டில் உச்ச நீதிமன்றம் அவரது செயலைக் கண்டித்து குற்றத்தின் பிடியிலிருந்து இரண்டாவது முறை விடுவித்தது. இப்போது பெங்களூரு நீதிமன்றம் மூன்றாவது முறையாக அவருக்கு அரசியல் மறுவாழ்வை அளித்திருக்கிறது.

மீண்டும் முதல்வர் நாற்காலியில் அமரவிருக்கும் ஜெயலலிதா இனியாவது தன்மீது கோடிக்கணக்கான தமிழக மக்கள் கொண்டிருக்கும் நல்லன்பை நெஞ்சில் நிறுத்தி ஆத்ம சோதனையில் ஈடுபட்டு நல்லாட்சியை வழங்க முயல வேண்டும். வாக்கு வங்கியை விரிவாக்க இலவசத் திட்டங்களை அள்ளித் தெளித்து அரசுக்கு

ஒவ்வொரு ஆண்டும் 50,000 கோடி ரூபாயை விரயப்படுத்தும் தவறான அணுகு முறைக்கு அவர் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். மாநிலத்து மக்கள் அனைவருக்கும் கல்வி, மருத்துவம் ஆகிய இரண்டை மட்டும் இலவசமாக்கி மற்ற இலவசத் திட்டங்களை முற்றாகக் கைவிட வேண்டும்.

தமிழகத்தின் வளர்ச்சித் திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கி அவற்றுக்கு வேண்டிய நிதியை ஒதுக்கவும் இரண்டு லட்சம் கோடிக்கும் மேற்பட்ட அரசின் கடன் சுமையைக் கணிசமாகக் குறைக்கவும், நாற்றமெடுக்கும் இன்றைய ஊழல் நிறைந்த நிர்வாகத்தை மாற்றி அமைக்கவும், அடித்தட்டு மக்களை மிக மோசமாகச் சீரழித்துச் சிதைத்து விட்ட டாஸ்மாக் கடைகளை உடனே மூடவும் ஜெயலலிதா முன்வர வேண்டும்.

ஒரு துறவியின் வாழ்நெறியோடு, கூடாநட்பைத் தவிர்த்து, ஆரவார அரசியலை விடுத்து, சொந்த நலன்களுக்காக பொய்யாய்ப் புகழ்பாடும் நடிப்புச் சுதேசிகளை விலக்கி, அனைவரும் எளிதில் அணுகுமாறு எளிமையும் கனிவும் பணிவும் மிக்க முதல்வராகத் தன்னை அவர் சரியாகச் செதுக்கிக் கொண்டால் இறுதி நாள் வரை இந்திய அரசியலில் ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக ஜெயலலிதாவால் விளங்கக்கூடும். ஆனால் ஜெயலலிதா இந்த நல்ல மனமாற்றங்களுடன் மீண்டும் முதல்வர் நாற்காலியில் அமருவாரா என்பது தான் மில்லியன் டாலர் கேள்வி. இவ்வாறு கூறியுள்ளார்.




ஜெயலலிதா விடுதலை - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon May 11, 2015 3:10 pm

ஜி.கே.வாசன் கருத்து

சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுவிக்கப்பட்டது குறித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளதாவது,

ஜெயலலிதா விடுவிக்கப்பட்டதை நீதிமன்ற நடவடிக்கையாக பார்க்க வேண்டுமே தவிர, அரசியலாகப் பார்க்கக் கூடாது. அதன் அடிப்படையில் கர்நாடக உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.



ஜெயலலிதா விடுதலை - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon May 11, 2015 3:11 pm

ஜெ. வழக்கு தீர்ப்பு நீதிமன்றத்தின் மீதான நம்பிக்கையில் பெரும்சறுக்கலை ஏற்படுத்தியிருக்கிறது: கொ.ஜ.க.

ஜெயலலிதா மீதான தீர்ப்பு பொதுமக்களுக்கு நீதி மற்றும் நீதிமன்றத்தின் மீதான நம்பிக்கையில் பெரும்சறுக்கலை ஏற்படுத்தியிருக்கிறது என்று கொங்குநாடு ஜனநாயக கட்சி நிறுவனத் தலைவர் G.K.நாகராஜ் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

18 ஆண்டு காலம் நடைபெற்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிபதி குன்ஹா முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு பேரை குற்றவாளி என்று தீர்ப்பளித்து தண்டனையையும், அபராதமும் விதித்தார்.

நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்ஹாவின் தீர்ப்பைப் படித்த சட்டநிபுணர்களும், அரசியல் ஆய்வாளர்களும், குன்ஹாவின் தீர்ப்பு ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு, முறையாக பரிசீலிக்கப்பட்ட சரியான தீர்ப்பு என்றும், இதிலிருந்து முன்னாள் முதல்வர் ஜெயலலிலதா உள்ளிட்டோர் தப்பிக்க இயலாது என்றும் கூறப்பட்ட நிலையில், கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி அவர்கள், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் அவருடன் குற்றம் சாட்டப்பட்டவர்களும் சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து விடுதலை என்ற தீர்ப்பு நடுநிலையான, ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையுள்ள மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது,

நீதிபதி குமாரசாமி அவர்களின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் விடுதலைக்கான தீர்ப்பின் முழுவிவரம் எதையொட்டி அமைந்திருந்தாலும், இன்று வழங்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு முழுசாதகமாக அதாவது, தண்டனையை ஒட்டுமொத்தமாக ரத்து செய்து. தேர்தலில் நிற்கவோ, முதல்வராகவோ தடையில்லை என்ற வகையில் வழங்கப்பட்ட தீர்ப்பு, ஊழல் செய்தாலும் சட்டத்தின் ஓட்டையைப் பயன்படுத்தி அதிலிருந்து மீண்டுவிடலாம் என்ற தைரியத்தை ஊழல் அரசியல்வாதிகளுக்கு ஏற்படுத்தியிருக்கிறது என்பதே உண்மை.

நீதிபதி குமாரசாமி அவர்களின் தீர்ப்பு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையுள்ள பொதுமக்களுக்கு நீதி மற்றும் நீதிமன்றத்தின் மீதான நம்பிக்கையில் பெரும்சறுக்கலை ஏற்படுத்தியிருக்கிறது. இவ்வாறு கூறியுள்ளார்



ஜெயலலிதா விடுதலை - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon May 11, 2015 3:11 pm

ஜெ. வழக்கில் கர்நாடக ஐகோர்ட்டின் தீர்ப்பு இறுதியானது அல்ல: ஜி.ரா.

சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுவிக்கப்பட்டது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளதாவது,

பெங்களுரு சிறப்பு நீதிமன்றம் 4 ஆண்டு சிறை தண்டனை, 100 கோடி ரூபாய் அபராதம் விதித்தது. தற்போது கர்நாடக உயர்நீதிமன்றம் அவரை விடுதலை செய்துள்ளது. தீர்ப்பினுடைய முழுமையான நகல் கிடைத்தப் பிறகு அதில் இருக்கக் கூடிய அம்சங்கள் குறித்து கருத்து சொல்லலாம்.

ஆனால் பெங்களுருவில் கர்நாடக உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு என்பது இறுதி தீர்ப்பு அல்ல. ஜெயலலிதா விடுவிக்கப்பட்டதை எதிர்த்து கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்ல் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்றார்.



ஜெயலலிதா விடுதலை - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon May 11, 2015 3:12 pm

மத்திய அரசின் தலையீடு கிடையாது: எச்.ராஜா

ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்பில் மத்திய அரசின் தலையீடு கிடையாது என்று பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியுள்ளார்.

மேலும், பெங்களுரு சிறப்பு கோர்ட் அளித்த தீர்ப்பிலும் பாஜக அரசின் தலையீடு கிடையாது என்று கூறியுள்ளார்.



ஜெயலலிதா விடுதலை - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon May 11, 2015 3:16 pm

ஜெயலலிதாவின் தகுதி நீக்கம் முடிந்தது... ஆனால் மீண்டும் தேர்தலைச் சந்தித்தாக வேண்டும்!

கர்நாடக உயர்நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து ஜெயலலிதா தேர்தலில் போட்டியிட முடியாது என்ற தகுதி நீக்கம் தானாகவே முடிந்து விட்டது. இருப்பினும் அவர் மீண்டும் தேர்தலில் போட்டியிட்டுத்தான் சட்டசபை உறுப்பினராக முடியும் என்று தேர்தல் ஆணையத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு தனி நீதிமன்ற நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து ஜெயலலிதா தனது சட்டசபை உறுப்பினர் பதவி, முதல்வர் பதவி ஆகியவற்றை இழந்தார். இந்த நிலையில் தற்போது கர்நாடக உயர்நீதிமன்றத்தில் அவருக்கு சாதகமாக தீர்ப்பு வந்துள்ளதால், அவரது தகுதி நீக்கமும் தானாகவே விலகி விட்டதாக தேர்தல் ஆணையத் தகவல்கள் கூறுகின்றன.

இருப்பினும் அவர் மீண்டும் தேர்தலில் நின்றுதான் சட்டசபை உறுப்பினராக முடியும். இதுகுறித்து தேர்தல் ஆணைய அதிகாரிகள் சிலர் கூறுகையில், சட்டப்படி, அவரது தகுதி நீக்கம் முடிவுக்கு வந்து விட்டது. இனிமேல் அவர் வேட்பாளராக தேர்தலில் போட்டியிட முடியும். இருப்பினும் ஏற்கனவே ரத்தான அவரது சட்டசபை உறுப்பினர் பதவியை அவர் திரும்பப் பெற முடியாது. மீண்டும் போட்டியிட்டு வென்றுதான் அவர் சட்டசபை உறுப்பினராக முடியும் என்றனர்.

கடந்த ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி பெங்களூரு கோர்ட் தீர்ப்பு வெளியானது. அன்றே ஜெயலலிதா தனது சட்டசபை உறுப்பினர் பதவியை இழந்தார். தகுதிநீக்கத்தையும் சந்தித்தார். தற்போதைய கர்நாடக உயர்நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து ஜெயலலிதா மீண்டும் தேர்தல்களில் போட்டியிட தடை நீங்கியுள்ளது. அவர் முதல்வராகப் பதவியேற்றால், அன்றிலிருந்து அடுத்த 6 மாதத்திற்குள் அவர் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டு வெல்ல வேண்டும்.



ஜெயலலிதா விடுதலை - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 11, 2015 3:25 pm

//உயர்நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து ஜெயலலிதா மீண்டும் தேர்தல்களில் போட்டியிட தடை நீங்கியுள்ளது. அவர் முதல்வராகப் பதவியேற்றால், அன்றிலிருந்து அடுத்த 6 மாதத்திற்குள் அவர் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டு வெல்ல வேண்டும்.//

ஈசியா ஜெய்ச்சுடுவாங்க புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 11, 2015 3:36 pm

விவரங்களுக்கு நன்றி விமந்தனி மற்றும் சிவா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக