புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Yesterday at 8:17 pm

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:32 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm

» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm

» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 பேலியோ டயட் / நியாண்டர் செல்வன் - Page 3 Poll_c10 பேலியோ டயட் / நியாண்டர் செல்வன் - Page 3 Poll_m10 பேலியோ டயட் / நியாண்டர் செல்வன் - Page 3 Poll_c10 
60 Posts - 50%
ayyasamy ram
 பேலியோ டயட் / நியாண்டர் செல்வன் - Page 3 Poll_c10 பேலியோ டயட் / நியாண்டர் செல்வன் - Page 3 Poll_m10 பேலியோ டயட் / நியாண்டர் செல்வன் - Page 3 Poll_c10 
49 Posts - 40%
mohamed nizamudeen
 பேலியோ டயட் / நியாண்டர் செல்வன் - Page 3 Poll_c10 பேலியோ டயட் / நியாண்டர் செல்வன் - Page 3 Poll_m10 பேலியோ டயட் / நியாண்டர் செல்வன் - Page 3 Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
 பேலியோ டயட் / நியாண்டர் செல்வன் - Page 3 Poll_c10 பேலியோ டயட் / நியாண்டர் செல்வன் - Page 3 Poll_m10 பேலியோ டயட் / நியாண்டர் செல்வன் - Page 3 Poll_c10 
3 Posts - 2%
rajuselvam
 பேலியோ டயட் / நியாண்டர் செல்வன் - Page 3 Poll_c10 பேலியோ டயட் / நியாண்டர் செல்வன் - Page 3 Poll_m10 பேலியோ டயட் / நியாண்டர் செல்வன் - Page 3 Poll_c10 
1 Post - 1%
Kavithas
 பேலியோ டயட் / நியாண்டர் செல்வன் - Page 3 Poll_c10 பேலியோ டயட் / நியாண்டர் செல்வன் - Page 3 Poll_m10 பேலியோ டயட் / நியாண்டர் செல்வன் - Page 3 Poll_c10 
1 Post - 1%
bala_t
 பேலியோ டயட் / நியாண்டர் செல்வன் - Page 3 Poll_c10 பேலியோ டயட் / நியாண்டர் செல்வன் - Page 3 Poll_m10 பேலியோ டயட் / நியாண்டர் செல்வன் - Page 3 Poll_c10 
1 Post - 1%
prajai
 பேலியோ டயட் / நியாண்டர் செல்வன் - Page 3 Poll_c10 பேலியோ டயட் / நியாண்டர் செல்வன் - Page 3 Poll_m10 பேலியோ டயட் / நியாண்டர் செல்வன் - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 பேலியோ டயட் / நியாண்டர் செல்வன் - Page 3 Poll_c10 பேலியோ டயட் / நியாண்டர் செல்வன் - Page 3 Poll_m10 பேலியோ டயட் / நியாண்டர் செல்வன் - Page 3 Poll_c10 
280 Posts - 42%
heezulia
 பேலியோ டயட் / நியாண்டர் செல்வன் - Page 3 Poll_c10 பேலியோ டயட் / நியாண்டர் செல்வன் - Page 3 Poll_m10 பேலியோ டயட் / நியாண்டர் செல்வன் - Page 3 Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
 பேலியோ டயட் / நியாண்டர் செல்வன் - Page 3 Poll_c10 பேலியோ டயட் / நியாண்டர் செல்வன் - Page 3 Poll_m10 பேலியோ டயட் / நியாண்டர் செல்வன் - Page 3 Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
 பேலியோ டயட் / நியாண்டர் செல்வன் - Page 3 Poll_c10 பேலியோ டயட் / நியாண்டர் செல்வன் - Page 3 Poll_m10 பேலியோ டயட் / நியாண்டர் செல்வன் - Page 3 Poll_c10 
25 Posts - 4%
sugumaran
 பேலியோ டயட் / நியாண்டர் செல்வன் - Page 3 Poll_c10 பேலியோ டயட் / நியாண்டர் செல்வன் - Page 3 Poll_m10 பேலியோ டயட் / நியாண்டர் செல்வன் - Page 3 Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
 பேலியோ டயட் / நியாண்டர் செல்வன் - Page 3 Poll_c10 பேலியோ டயட் / நியாண்டர் செல்வன் - Page 3 Poll_m10 பேலியோ டயட் / நியாண்டர் செல்வன் - Page 3 Poll_c10 
6 Posts - 1%
prajai
 பேலியோ டயட் / நியாண்டர் செல்வன் - Page 3 Poll_c10 பேலியோ டயட் / நியாண்டர் செல்வன் - Page 3 Poll_m10 பேலியோ டயட் / நியாண்டர் செல்வன் - Page 3 Poll_c10 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
 பேலியோ டயட் / நியாண்டர் செல்வன் - Page 3 Poll_c10 பேலியோ டயட் / நியாண்டர் செல்வன் - Page 3 Poll_m10 பேலியோ டயட் / நியாண்டர் செல்வன் - Page 3 Poll_c10 
5 Posts - 1%
Kavithas
 பேலியோ டயட் / நியாண்டர் செல்வன் - Page 3 Poll_c10 பேலியோ டயட் / நியாண்டர் செல்வன் - Page 3 Poll_m10 பேலியோ டயட் / நியாண்டர் செல்வன் - Page 3 Poll_c10 
4 Posts - 1%
manikavi
 பேலியோ டயட் / நியாண்டர் செல்வன் - Page 3 Poll_c10 பேலியோ டயட் / நியாண்டர் செல்வன் - Page 3 Poll_m10 பேலியோ டயட் / நியாண்டர் செல்வன் - Page 3 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பேலியோ டயட் / நியாண்டர் செல்வன்


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 30, 2015 12:21 am

First topic message reminder :


ஃபேஸ்புக்கில் ‘ஆரோக்கியம் & நல்வாழ்வு’ எனும் உடல்நலன் சார்ந்த இணையக் குழுமத்தை நடத்தி வருபவர். இக்குழுவில், ஆதிமனிதன் உண்ட உணவை ஒட்டிய உணவுமுறை மூலம் சர்க்கரை நோய், ரத்தக்கொதிப்பு, உடல் பருமன் போன்ற பல நோய்கள் மற்றும் உடல் சார்ந்த பிரச்னைகளுக்குமான டயட் முறைகளும் தீர்வுகளும் விவாதிக்கப்பட்டு வருகின்றன.

இந்தக் குழுவில் சுமார் 20,000 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். பலரும் இந்த உணவு முறையால் நல்ல பலனைக் கண்டுள்ளார்கள். பேலியோ டயட் (முன்னோர் உணவு) என ஆங்கிலத்தில் அழைக்கப் படும் இந்த உணவுமுறை, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் பெருமளவில் பின்பற்றப்பட்டு வருகிறது.

நியாண்டர் செல்வன், பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷன் துறையில் முனைவர் பட்டம் பெற்று, அமெரிக்காவில் நிர்வாகவியல் துறையில் ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறார். வரலாறு, உணவு, உடல்நலன், அறிவியல் போன்ற துறைகளைப் பற்றி கடந்த பத்து ஆண்டுகளாக வலைப்பதிவிலும், ஃபேஸ்புக்கிலும் ஏராளமான கட்டுரைகளை எழுதியுள்ளார்.

அவருடைய ஃபேஸ்புக் முகவரி –
https://www.facebook.com/neander.selvan

ஆரோக்கியம் & நல்வாழ்வுக் குழுமத்தின் ஃபேஸ்புக் முகவரி –
https://www.facebook.com/groups/tamilhealth/




 பேலியோ டயட் / நியாண்டர் செல்வன் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 30, 2015 12:42 am

காளிஃபிளவர் அரிசியின் செய்முறை

சாதம் சாப்பிடுவதைத் தவிர்க்கச் சொல்வதால் அதற்கு மாற்றாக காளிஃபிளவர் அரிசியைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.


காளிஃபிளவர் ஒன்றை எடுத்துக் கொள்ளவும். சிறு, சிறு துண்டுகளாக நறுக்கவும். அதன்பின் ஒரு மிக்ஸி அல்லது ஃபுட் ப்ராசசரில் நாலைந்து நொடிகள் ஓடவிட்டு, நிறுத்தி, மறுபடியும் நாலைந்து நொடிகளுக்கு ஓடவிட்டு அரைக்கவேண்டும் (தொடர்ந்து அரைத்தால் கூழாக மாறிவிடும் என்பதை நினைவில் கொள்ளவும்). அரிசி போல சின்னஞ்சிறிய துண்டுகளாக ஆனதும் அதைப் புட்டுச்சட்டியில் ஆவியில் வேகவைத்தால் காளிஃபிளவர் அரிசி தயார். இதில் காய்கறிக் குழம்பை ஊற்றிச் சாப்பிட்டால் சுவை அபாரமாக இருக்கும். இதில் உள்ள மாவுச் சத்தின் அளவும் மிகக் குறைவு என்பதால் ரத்தத்தில் சர்க்கரை அளவுகளும் அதிகரிக்காது.





 பேலியோ டயட் / நியாண்டர் செல்வன் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 30, 2015 12:43 am

முக்கியமான கேள்விக்கு வருவோம்.

பேலியோ டயட் சர்க்கரை வியாதியை எப்படிக் குணப்படுத்துகிறது?

சர்க்கரை நோயை வரவழைப்பது மாவுச்சத்து நிரம்பிய அரிசி, கோதுமை, பருப்பு போன்ற தானிய உணவுகள். இந்நிலையில், அரிசி, கோதுமையைத் தொடர்ந்து உண்டுவந்தால் சர்க்கரை வியாதியைக் குணப்படுத்த முடியுமா?

நாம் சாப்பிடும் இட்லி, தோசை, சப்பாத்தி போன்றவற்றில் மாவுச்சத்து அதிகம். மாவுச்சத்து உள்ள உணவை உண்டால் நம் ரத்தத்தில் சர்க்கரை அளவுகள் அதிகரிக்கும்.

இதனால் ஃபாஸ்டிங் சுகர் அளவு 200 ஆக உள்ள ஒருவர் (இயல்பான அளவு: 100க்குக் கீழ்) காலையில் ஐந்து இட்லியைச் சாப்பிடுகிறார் என வைத்துக்கொண்டால் அதன்பின் அவரது உணவுக்குப் பிந்தைய சர்க்கரை அளவு 200-ல் இருந்து 280 ஆக அதிகரிக்கும்.

இந்த 280 எனும் அளவைக் குறைக்க அவர் இன்சுலின் ஊசி போட்டுக்கொள்ளவேண்டும். அதன்பின்பு, சர்க்கரை அளவு 280-ல் இருந்து 230, 220 எனக் குறையும். அடுத்தவேளை உணவாக சாதமும், பருப்பும் சாப்பிட்டால் மீண்டும் உணவுக்குப் பிந்தைய சர்க்கரை அளவுகள் 280, 300 என எகிறிவிடும். மறுபடியும் இன்சுலின் ஊசி போட்டுக்கொண்டால்தான் அதைக் கட்டுக்குள் கொண்டுவரமுடியும்.

இந்தச் சர்க்கரை நோயாளி பேலியோவுக்கு மாறுகிறார் என வைத்துக்கொள்வோம். என்ன ஆகும்?

ஃபாஸ்டிங் சுகர் அளவு 200 ஆக இருக்கிறது. காலை உணவாக நெய்யில் வறுத்த 4 ஆம்லெட்களைச் சாப்பிடுகிறார். பசி முழுமையாக அடங்கிவிடுகிறது. முட்டையிலும், இறைச்சியிலும் துளியும் மாவுச்சத்து இல்லை என்பதால் ரத்தத்தில் சர்க்கரை அளவுகள் ஏறாது. அவரது உடலைப் பொறுத்தவரை அவர் இன்னமும் உண்ணாநிலையில்தான் இருக்கிறார். எனவே இரண்டு, மூன்று மணிநேரம் கழித்து அவரது சர்க்கரை அளவு 200-ல் இருந்து 180, 170 ஆக குறையும்.

மதிய உணவு - காளிஃபிளவர் அரிசி அல்லது 100 பாதாம். இதிலும் மிகக் குறைந்த அளவே மாவுச்சத்து உள்ளது. இரவிலும் பேலியோ டயட்டைப் பின்பற்றுகிறார் என்று வைத்துக்கொள்வோம்.

பேலியோ உணவால் சர்க்கரை அளவுகள் அதிகரிக்காமல் தொடர்ந்து குறைந்துகொண்டே வரும். ஒருசில நாள்களில் இன்சுலின் ஊசி அளவுகள், சர்க்கரை வியாதி மாத்திரை அளவுகளைக் குறைக்க அல்லது முழுவதும் நிறுத்தவேண்டிய நிலைமை உருவாகும். ஒரு சில மாதங்களில் உடலில் சர்க்கரை அளவுகள் இயல்பானதாக மாறிவிடும்.

சர்க்கரை நோய்க்கு பேலியோ டயட்டைப் பயன்படுத்தமுடியும் என்பதைப் பல மருத்துவ ஆய்வு வெளியீடுகள் (Medical journals) ஒப்புக்கொள்கின்றன.

மருத்துவ ஆய்வு வெளியீடுகளில், மருத்துவர்கள், மருத்துவ கல்லூரிப் பேராசிரியர்கள் மற்றும் மருத்துவ ஆய்வாளர்களின் ஆய்வறிக்கைகள் இடம்பெற்றிருக்கும். மருத்துவத்துறையின் புதிய கண்டுபிடிப்புகள் அனைத்தும் மருத்துவ நிபுணர்களால் பரிசோதிக்கப்படும். இதன் சோதனை முடிவுகளே மருத்துவ ஜர்னல்களில் வெளியிடப்படும். இவை மருத்துவத்துறைசார் கருத்தரங்குகள் மற்றும் பல்கலைக் கழகங்களில் விவாதிக்கப்படும். பிறகு, முக்கியமான கண்டுபிடிப்புகள் மருத்துவப் பாடபுத்தகங்களில் இடம்பெறும். இதன் தொடர்ச்சியாக சிகிச்சைகளிலும் அந்த ஆய்வுகள் பின்பற்றப்படும்.

எனவே மருத்துவ ஜர்னல்கள் என்பவை அறிவியல் ரீதியாக நிரூபணமான ஆய்வுக்கட்டுரைகள் என்பதை மனத்தில் கொள்வோம்.

Diabetes Metabolism Research and Reviews எனும் அறிவியல் ஜர்னலில் 2011-ம் ஆண்டு ஆய்வுக்கட்டுரை எழுதிய மருத்துவப் பேராசிரியர் புசாட்டோ (Busetto) ‘சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்குக் குறைவான கொழுப்பு உள்ள டயட் அதிகாரபூர்வமாகப் பரிந்துரைக்கப்பட்டு வந்தாலும், உயர் புரதமும், குறைந்த அளவு மாவுச்சத்தும் நிரம்பிய பேலியோ டயட், சர்க்கரை நோயாளிகளின் உடல் எடையைக் குறைத்து, ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவுகளை குறைத்துயும், இதய நலனையும் மேம்படுத்துகிறது’ என்று கூறுகிறார். (இணைப்பு: http://www.ncbi.nlm.nih.gov/pubmed/21309052)

2008-ல், Nutritional Metabolism என்கிற லண்டன் மருத்துவ ஜர்னலில், பேராசிரியர் எரிக் வெஸ்ட்மெனின் (Eric Westman) ஆய்வுக்கட்டுரை வெளியிடப்பட்டது. அதில் குறைந்த அளவிலான மாவுச்சத்து உள்ள பேலியோ டயட்டும், சற்று அதிக அளவு மாவுச்சத்து உள்ள லோ-கிளைசெமிக் டயட்டும் (Low Glycemic diet) ஒப்பிட்டுப் பார்க்கப்பட்டன.

இந்த ஆய்வில் 49 பேர் பங்கேற்றார்கள். இந்த 49 பேரும் அதிக உடல் எடை கொண்ட சர்க்கரை நோயாளிகள். அதில் பாதி பேருக்கு பேலியோ டயட் பரிந்துரைக்கப்பட்டது. மற்றவர்களுக்கு லோ-கிளைசெமிக் டயட்.

ஆறுமாத ஆய்வுக்குப் பிறகு கிடைத்த முடிவுகள்: பேலியோ டயட்டைப் பின்பற்றிய நோயாளிகளுக்கு எச்பிஏ1சி (HBA1C) அளவுகள் சராசரியாக 1.5 புள்ளிகள் குறைந்திருந்தன. உடல் எடை சராசரியாக 11 கிலோ குறைந்திருந்தது. இதயத்தின் நலனை வெளிப்படுத்தும் நல்ல கொலஸ்டிராலான எச்டிஎல் கொலஸ்டிராலின் அளவுகள் 5.6 புள்ளிகள் அதிகமாகியிருந்தன. இதனால் சர்க்கரை நோய்க்கு பேலியோ டயட்டே உகந்தது என இந்த ஆய்வு முடிவு கூறியது. (இணைப்பு: http://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC2633336/)

Journal of American College Nutrition எனும் மற்றொரு மருத்துவ ஜர்னலில் ஓர் அறிக்கை வெளியிடப்பட்டது.

அதிக எடை உள்ள 14 டைப் 2 சர்க்கரை நோயாளிகளுக்கு பேலியோ டயட்டால் ஏற்படும் விளைவுகள் குறித்து ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. அவர்களின் உடலின் இன்சுலினைக் கையாளும் திறன், பிளட் சுகர் அளவைக் கையாளும் திறன் மற்றும் மாரடைப்பு அபாயம்/இதய நலன் போன்றவை ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. மருத்துவ ஆய்வாளர் கிரெப்ஸ் (Krebs) தலைமையில் 2013-ம் ஆண்டு இந்த ஆய்வு நிகழ்த்தப்பட்டது. 14 டைப் 2 சர்க்கரை நோயாளிகளும் ஆறு மாத காலத்துக்கு பேலியோ டயட்டைப் பின்பற்றினார்கள்.

முடிவில் அனைவருக்கும் சராசரியாக பத்து கிலோ எடை இறங்கியிருந்தது. உடலின் பிளட் சுகர் அளவைக் கையாளும் திறன் (HBA1C) சராசரியாக 1.1 புள்ளிகள் குறைந்திருந்தது. ஃபாஸ்டிங் சுகர் அளவுகள் கணிசமாக குறைந்து காணப்பட்டன. ரத்த அழுத்தம் பத்துப் புள்ளிகள் வரை குறைந்திருந்தது. நல்ல கொலஸ்டிராலான எச்டிஎல் கொலஸ்டிராலின் அளவுகள் 10 புள்ளிகள் வரை அதிகரித்திருந்தன. மொத்த கொலஸ்டிரால் அளவும், எல்டிஎல் கொலஸ்டிரால் அளவும் அதிகரித்திருந்தாலும், எச்டிஎல் கொலஸ்டிரால்/ டிரைகிளிசரைட்ஸ் விகிதம் கணிசமாகக் குறைந்து அவர்களின் இதயநலன் மேம்பட்டிருப்பதை வெளிப்படுத்தியது. (இணைப்பு: http://www.ncbi.nlm.nih.gov/pubmed/24015695)

*

பேலியோ டயட்டால் சர்க்கரை நோயாளிகளின் சர்க்கரை அளவுகள் கட்டுக்குள் வருவதையும், இதயநலன் மேம்படுவதையும், உடல்நலன் சார்ந்த இதர அளவுகள் முன்னேற்றம் காண்பதையும் ஆய்வுகளின் முடிவுகள் வெளிப்படுத்துகின்றன. மருத்துவ ஜர்னல்களில் பேலியோ டயட்டின் பலன்கள் குறித்து தொடர்ந்து எழுதப்பட்டும், விவாதிக்கப்பட்டும் வருகின்றன. மருத்துவத்துறை சார் கருத்தரங்குகளில் இவை விவாதிக்கப்படுகின்றன. ஆனால் பேலியோ டயட் தொடர்புடைய ஆய்வுகள் மருத்துவக் கல்லூரி நூல்களிலும், பாடத் திட்டங்களிலும் இடம்பெறுவதில் காலதாமதம் ஏற்படுகிறது. இதற்கான காரணமாக நான் கருதுபவை - பேலியோ டயட்தான் சர்க்கரை நோய்க்கு உகந்த டயட் எனத் தீர்மானம் ஆகி பாடநூல்களில் இடம்பெற்றுவிட்டால், இத்தனை நாள் சொல்லி வந்த ‘குறைந்த கொழுப்பு டயட்டே சிறந்தது’ என்கிற அறிவுரைகளுக்கு எதிரானதாக ஆகிவிடும். பல டயபடிஸ் அசோசியேஷன்கள் மீது வழக்குகள் தொடரப்படலாம். தவிரவும் குறைந்த கொழுப்பு உணவு மாடலை அடிப்படையாகக் கொண்டு பல உணவு நிறுவனங்கள் சீரியல், ஓட்ஸ் போன்ற காலை உணவுகளையும், தானிய அடிப்படையிலான நொறுக்குத் தீனிகளையும் தயாரித்து, விற்பனை செய்து வருகின்றன. பேலியோ டயட் ஏற்கப்பட்டுவிட்டால் அது அவர்களுக்கு மிகப்பெரிய அடியாக இருக்கும். அதனால் அவை அமெரிக்க அரசு மற்றும் அமெரிக்க அரசியல்வாதிகள் மூலமாகவும், தம் நிறுவனங்களில் பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும் தான் நடத்தி வரும் அறிவியல் ஆய்வுக்கழகங்கள் மூலமாகவும் பேலியோ டயட்டுக்கு எதிரான தடுப்பணைகளைக் கட்டியுள்ளன. இதனால்தான் மருத்துவ நூல்களில் பேலியோ டயட் குறித்து எதுவும் இடம்பெறுவதில்லை; ஊடகங்களிலும் இதற்கு ஆதரவான கட்டுரைகள் எழுதப்படுவதில்லை.

இத்தடைகளை எல்லாம் தாண்டி பேலியோ இயக்கம், மேற்கத்திய நாடுகளில் நூல்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் மூலமாக பெரும் மாற்றங்களை உண்டாக்கி வருகிறது. இதுபோன்ற ஒரு மாற்றம் இந்தியாவிலும் ஏற்படவேண்டும். பேலியோ டயட்டைப் பின்பற்றும் ஒவ்வொருவரும் அவரவருக்குரிய பங்களிப்பை அளிக்கவேண்டும். (உதாரணமாக, ஃபேஸ்புக், ட்விட்டர் வழியாக பேலியோ டயட் குறித்த தகவல்களை அளிப்பது)

டைப் 2 சர்க்கரை நோய் குணப்படுத்த முடியாதது என்கிற பிரமை உடைக்கப்படவேண்டும். ஆண்டுக்கணக்கில் சர்க்கரை வியாதியால் தவிக்கும் மக்களை, அந்தக் கொடுமையிலிருந்து விடுவிக்கும் பணியில் நாம் தொடர்ந்து ஈடுபடவேண்டும்.



 பேலியோ டயட் / நியாண்டர் செல்வன் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 30, 2015 1:18 am

பேலியோ காய்கறிகள் - Paleo vegetables

காலிபிளவர் cauliflower
பிராக்களி brocolli
முட்டைகோஸ் cabbage
முள்ளங்கி radish
பாகற்காய் bitter gourd
காரட் carrot
பீட்ரூட் beetroot
தக்காளி tomato
வெங்காயம் onion
வெண்டைக்காய் okra
கத்திரிக்காய் eggplant
சுண்டைக்காய் solanum torvum(Turkey Berry)
வாழைத்தண்டு plantain stems
அனைத்துவகைகீரைகள் All spinaches
முருங்கை drumstick
ஆஸ்பாரகஸ் aseparagus
ருபார்ப் rubarp
ஆலிவ் olive
செலரி celery
வெள்ளரி cucumber
ஸுக்கனி zukkini
காப்ஸிகம் (பெல்பெப்பெர்), குடைமிளகாய் bellpepper
பச்சை, சிகப்பு மிளகாய் green, red chillies
பூசணி pumpkin
காளான் mushroom
தேங்காய் coconut
எலுமிச்சை lemon
பூண்டு garlic
இஞ்சி ginger
கொத்தமல்லி cilantro
மஞ்சள்கிழங்கு turmeric
அவகாடோ avocado
பீர்க்கங்காய் ridge gourd
புடலங்காய் snake gourd
சுரைக்காய gourd


தவிர்க்கவேண்டிய காய்கறிகள் - To avoid

மரவள்ளி cassava
சர்க்கரைவள்ளி sweet potato
உருளைகிழங்கு potato
பீன்ஸ் (ராஜ்மா உள்ளிட்டவை) beans (rajma and so on)
சென்னா chickpeas
சுண்டல் peas
பருப்புவகைகள் அனைத்தும் all lentils
பயறுவகைகள் அனைத்தும் all grains
நிலக்கடலை peanut
சோயா, டோஃபு, எடமாமி, டெம்ஃபே, மீல்மேக்கர் *சோயா எந்தவடிவிலும் ஆகாது* Soy, edamame, meal maker *soy is not good in any form*
அவரைக்காய் broadbeans
பனங்கிழங்கு palmyra root
பலாக்காய் jackfruit
வாழைக்காய் plantain
பழங்கள் அனைத்தும் all fruits




 பேலியோ டயட் / நியாண்டர் செல்வன் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Aug 30, 2015 1:28 am

நேற்று நான் இந்த டயட் முறையை பார்த்தேன் சிவா ஒரு பத்திரிக்கை இல் அதில் காரட் கூட சாப்பிடக்கூடாது என்று போட்டிருந்தார்கள்.......நீங்கள் கொடுத்துள்ள லிஸ்ட் இல் காரட் சாப்பிடலாம் என்று இருக்கு......நான் அந்த பத்திரிகையை தேடிப்பிடித்து இங்கு போடுகிறேன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 30, 2015 1:32 am

krishnaamma wrote:நேற்று நான் இந்த டயட் முறையை பார்த்தேன் சிவா ஒரு பத்திரிக்கை இல் அதில் காரட் கூட சாப்பிடக்கூடாது என்று போட்டிருந்தார்கள்.......நீங்கள் கொடுத்துள்ள லிஸ்ட் இல் காரட் சாப்பிடலாம் என்று இருக்கு......நான் அந்த பத்திரிகையை தேடிப்பிடித்து இங்கு போடுகிறேன் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1159643

உங்களின் கேள்விகள் சந்தேகங்களை இந்தக் குழுவின் முகநூல் பக்கத்திற்குச் சென்று கேட்கலாம் அக்கா!



 பேலியோ டயட் / நியாண்டர் செல்வன் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Aug 30, 2015 1:34 am

இதோ சிவா அந்த கட்டுரை.....விகடனில் வந்துள்ளது............அந்த வரிகளை மார்க் செய்திருக்கேன் பாருங்கள்........புன்னகை

உடல் பருமனை குறைக்க உதவும் சமூக வலைதளம்!
முப்பது வயதை தொட்டு விட்டாலே நோய்களும், உடல் பருமனும் அழையா விருந்தாளியாக நம் உடலுக்குள் வந்துவிடுகிறது.

அப்படி அழையா விருந்தாளியாக, சில சமயம் நம் பழக்க வழக்கம் காரணமாக அழைக்கப்படும் விருந்தாளியாக‌ நம் உடலில் குடி கொள்வதுதான் உடல் பருமன்.

எப்பாடுபட்டாவது வெயிட்டை குறைச்சிடனும் என்று எண்ணுபவர்களுக்காகவே, ஃபேஸ்புக்கில் சத்தமில்லாமல்,  'ஆரோக்கியம் - நல்வாழ்வு' என்கிற பெயரில் குரூப் ஆரம்பித்து, 20,000க்கும் மேற்பட்ட மெம்பர்களோடு இயங்கி கொண்டிருக்கிறார்கள்.

'பேலியோ' என்கிற நம் முன்னோர்கள் பயன்படுத்திய உணவு முறையை சற்று மாற்றி,  'மாடிஃபை பேலியோ' என்கிற‌ டயட்டை இவர்கள் அறிமுகப்படுத்த, சத்தமில்லாமல் தீயாய் பரவி, பலரும் இந்த உணவு முறையை பின்பற்றி, தங்கள் உடல் எடையை குறைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

மற்ற குரூப்புகள் போல் இங்கு வெட்டிக்கதை, ஊர் வம்பு முதலியன அறவே கிடையாது. இந்த குரூப்பின் அட்மின்களுள் ஒருவரான சென்னையைச் சேர்ந்த திருநாவுக்கரசிடம் பேசினோம்.

''2012ல இந்த குரூப்பை ஆரம்பிச்சோம். முதல்ல வெறும் 100 மெம்பர்கள்தான் இருந்தாங்க. நம்ம முன்னோர்கள் பின்பற்றின இந்த டயட்டை நாங்க மாடிஃபை பண்ணி, 'மாடிஃபை பேலியோ' னு மத்தவங்களுக்கு பரிந்துரைக்கிறோம். இதுக்கெல்லாம் முன்னாடி நாங்களே எங்க டயட்டை செஃல்பா செக் பண்ணி பார்த்து, அதுல கிடைச்ச ரில்சட் வைச்சே மத்தவங்களுக்கு பரிந்துரைக்க ஆரம்பிச்சோம். இன்னைக்கு ஆண்கள், பெண்கள்னு யாரெல்லாம் உடல் பருமனால அவதிப்பட்டாங்களோ, அவங்க எல்லாம் எங்க குரூப்பை பார்த்து நம்பி எங்க டயட்டை எடுத்துகிட்டு சக்ஸஸ் ஆகி, மத்தவங்களுக்கு வாய்வழி பாராட்டா பரப்பிட்டு இருக்காங்க.

இந்த டயட்ல இருக்கிற முக்கியமான விஷயம், கொழுப்பு நிறைந்த உணவுகளை எடுத்துக்கிட்டா, அது உங்க உடம்பை பசி தாங்க வைக்கும். ஸோ நீங்க சாப்பிட்டுக்கிட்டே இருக்க மாட்டீங்க. உங்க உடல் உங்க பேச்சை கேட்க ஆரம்பிக்கும். உடம்புல உள்ள கார்போஹைடிரேட்டை கண்ட்ரோல் பண்ண ஆரம்பிச்சாலே உடம்புல உள்ள பி.பி, சுகர் ஆரம்பிச்சு தீர்க்க முடியாத எல்லா நோயையும் தீர்த்து/கட்டுக்குள் கொண்டு வரலாம். அதுக்காக நீங்க மாத்திரைகளே எடுத்துக்க வேண்டாம்னு நாங்க இதுவரை சொன்னதே இல்லை.

நாங்க சொல்ற டயட்டோட மருந்துகளையும் எடுத்துகிட்டா சர்க்கரை கண்ட்ரோல்க்குள்ள வந்திடும். பல நோய்கள் காணாம போயிருக்குனு எங்க குரூப் மெம்பர்கள் பெருமையோட சொல்வாங்க. நான் வெஜ் சாப்பிடுறவங்க அதை க்ரில் செய்து மட்டும் சாப்பிட சொல்றோம், இதுதவிர முட்டை, காய்கறிகள் அதிகமா எடுத்துக்க சொல்வோம். அரிசி, பருப்பு வகைகள், ஸ்வீட்ஸ், பேக்கரி ஐட்டம்ஸ் அறவே எடுத்துக்க தடை செய்றோம். வெஜிடேரியன்களுக்கு ஏற்ற டயட்டுகளையும் இங்கே சொல்றோம். எங்க குரூப்புல கருத்துக்களை பகிர்ந்துக்க கூட,  டயட்டை முறையா பாலோ பண்ணினவங்க மட்டுமே செய்ய சொல்றோம்.

கீழே சைவ, அசைவ மக்களுக்கான டயட்டை சொல்லியிருக்கிறேன். இதனை அப்படியே எந்தவித சீட்டிங்கும் இல்லாமல் பாலோ செய்து,  15 நாள் கழித்து குளித்துவிட்டு ஆடைகள் இல்லாமல் உங்கள் எடையை செக் செய்யுங்கள். நிச்சயம் பல கிலோ குறைந்திருப்பீர்கள். இந்த டயட்டை எடுக்கும் போது தலைவலி போன்ற சில பிரச்னைகள் ஏற்படலாம். அதெல்லாம் தற்காலிகமே. 'பேலியோ' என்பது டயட் மட்டுமல்ல. அது ஒரு வாழ்க்கை முறை. டி.வி.களில் நம்மை ஏமாற்ற பல தரப்பட்ட உடலுக்கு ஒவ்வாத உணவுகளை சாப்பிட சொல்லி அறிவுறுத்துகிறார்கள். அவை எல்லாம் நம் ஆரோக்கியதுக்கு உகந்தது அல்ல. நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ, பேலியோ காய்கறிகளை அதிகமாக எடுத்துக் கொண்டாலே உடல் பருமன் முதற்கொண்டு பல நோய்களில் இருந்து விடுபடலாம்" என்றார் பொறுமையாக.

ஆரோக்கியம் - நல்வாழ்வு பகுதிக்கு செல்ல இந்த லிங்கை க்ளிக் செய்யவும்
https://www.facebook.com/groups/tamilhealth/?fref=nf

சைவ மக்களுக்கான துவக்க நிலை டயட்:-

மீல் 1:

100 கிராம் பாதாம் அல்லது பிஸ்தா அல்லது வால்நட்ஸ் அல்லது முந்திரி

மீல் 2:

காளிபிளவர் அரிசி வித் காய்கறி. காளிபிளவரை மிக சின்ன அரிசி சைஸ் துண்டுகளாக நறுக்கி, இட்லி பாத்திரத்தில் ஸ்டீம் செய்து எடுத்து, அரிசி போல் பாவித்து குழம்பில் ஊற்றி உண்ணவும்

அல்லது காய்கறி சூப் ஏராளமாக பருகவும். உடன் சிறிது தேங்காய். வாரம் 1 நாள் 40 கிராம் கைகுத்தல்/குதிரைவாலி அரிசி எடுத்து சமைத்து உண்ணலாம். அதற்கு மேல் வேண்டாம்.

மீல் 3:

4 முட்டை ஆம்லெட் அல்லது பனிர் டிக்கா, 200 கிராம் பனிர்.

ஸ்னாக்:

1 கப் முழு கொழுப்பு உள்ள பால்/தயிர். தினம் 100 கிராம் கீரை சேர்த்துகொள்ளவும்

சமையல் எண்ணெய் நெய்/பட்டர்/செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய்/செக்கில் ஆட்டிய நல்லெண்ணெய் மட்டுமே

தவிர்க்கவேன்டியவை

பழங்கள் (அவகாடோ, தேங்காய் தவிர்த்து)

அரிசி, கோதுமை, சிறுதானியம், ராகி, கம்பு, குதிரைவாலி, பாஸ்மதி, கைகுத்தல் அரிசி, தினை அனைத்தும்

பருப்பு, க்ரீன் பீன்ஸ், மாவு, சோயா, பேபிகார்ன், க்ரீன் பீன்ஸ், பலாக்காய், வாழைக்காய், பச்சை மாங்காய், முளைகட்டின பயறுவகைகள், கொண்டை கடலை, இன்ன பிற கடலை வகைகள், கிழங்கு வகைகள் அனைத்தும், அவரைக்காய், நிலக்கடலை, எடமாமி, டோஃபு தவிர்க்கவும்

பேக்கரியில் கிடைக்கும் பொருட்கள் அனைத்தும் தவிர்க்கவும், இனிப்பு, காரம், பேகேஜ் உணவுகள், பிஸ்கட் இன்னபிற

கொழுப்பு அகற்றிய பால், 2% பால், 1% பால் அனைத்தும் தவிர்க்கவும், முழுகொழுப்பு பாலே உட்கொள்ளவேண்டும்.

அளவு கட்டுபாடு இன்றி உண்ணக் கூடியவை

மாமிசம், மீன், முட்டை, பனிர் அல்லது சீஸ், காய்கறிகள், கீரைகள் (உருளை, கேரட், கிழங்குவகைகள் தவிர்த்து)

அசைவ டயட்:

மீல் 1:

3 முட்டை ஆம்லெட், முழு முட்டை, வெள்ளைக்கரு அல்ல, மஞ்சள் கருவும் சேர்த்து. தேவைப்பட்டால் 4 முட்டை ஆம்லெட் கூட உண்ணலாம். பிரச்னை இல்லை. பசி அடங்குவது முக்கியம். சமையல் எண்ணெய் நெய். நாட்டுகோழி முட்டை மிக சிறப்பு. முட்டையை ஸ்க்ராம்பிள், ஆஃப்பாயில், புல்பாயில் என எப்படியும் உண்ணலாம்.

மீல் 2:

100 கிராம் பாதாம் அல்லது பிஸ்தா அல்லது வால்நட்ஸ், மாகடமியா நட்ஸ். நெய்யில் வதக்கி உண்ணலாம், ஊற வைத்தும் உண்ணலாம்.

நட்ஸ் விலை அதிகம் என கருதுபவர்கள் காளிபிளவர் ரைஸ், சிக்கன்/மட்டன் சூப் சேர்க்கலாம்

மீல் 3:

பாயில் / க்ரில் செய்த சிக்கன்/மட்டன்/ மீன். அளவு கட்டுப்பாடு இல்லை. வாணலியில் வறுத்தால் சமையல் எண்ணெய்யாக நெய் பயன்படுத்தவும்

ஸ்னாக்: தினம் 1 கப் முழு கொழுப்பு உள்ள பால் அல்லது 50 கிராம் முழு கொழுப்பு உள்ள சீஸ்.

                                                                                                                                                                                   -அதிதி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Aug 30, 2015 1:37 am

சிவா wrote:
krishnaamma wrote:நேற்று நான் இந்த டயட் முறையை பார்த்தேன் சிவா ஒரு பத்திரிக்கை இல் அதில் காரட் கூட சாப்பிடக்கூடாது என்று போட்டிருந்தார்கள்.......நீங்கள் கொடுத்துள்ள லிஸ்ட் இல் காரட் சாப்பிடலாம் என்று இருக்கு......நான் அந்த பத்திரிகையை தேடிப்பிடித்து இங்கு போடுகிறேன் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1159643

உங்களின் கேள்விகள் சந்தேகங்களை இந்தக் குழுவின் முகநூல் பக்கத்திற்குச் சென்று கேட்கலாம் அக்கா!
மேற்கோள் செய்த பதிவு: 1159646

முதலில் நினைத்தேன் சிவா, பிறகு இவர்கள் இதை 'வாழ்க்கை முறை' என்று சொல்கிறார்கள்.............அப்போ லைப் லாங் தானியங்கள், பருப்புவகைகள் , பழங்களை தவித்துவிடமுடியுமா என்று எனக்கு சந்தேகம்................எனவே, இதை நான் முயன்று பார்க்கலை புன்னகை .......இல்லாவிட்டால் சில கிலோக்களை குறைக்கலாம் என்று முதலில் நினைத்தேன் இதை படித்ததும் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக