புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தினம் ஒரு சிறுதானியம் ! - Page 2 Poll_c10தினம் ஒரு சிறுதானியம் ! - Page 2 Poll_m10தினம் ஒரு சிறுதானியம் ! - Page 2 Poll_c10 
60 Posts - 48%
heezulia
தினம் ஒரு சிறுதானியம் ! - Page 2 Poll_c10தினம் ஒரு சிறுதானியம் ! - Page 2 Poll_m10தினம் ஒரு சிறுதானியம் ! - Page 2 Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
தினம் ஒரு சிறுதானியம் ! - Page 2 Poll_c10தினம் ஒரு சிறுதானியம் ! - Page 2 Poll_m10தினம் ஒரு சிறுதானியம் ! - Page 2 Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
தினம் ஒரு சிறுதானியம் ! - Page 2 Poll_c10தினம் ஒரு சிறுதானியம் ! - Page 2 Poll_m10தினம் ஒரு சிறுதானியம் ! - Page 2 Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
தினம் ஒரு சிறுதானியம் ! - Page 2 Poll_c10தினம் ஒரு சிறுதானியம் ! - Page 2 Poll_m10தினம் ஒரு சிறுதானியம் ! - Page 2 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
தினம் ஒரு சிறுதானியம் ! - Page 2 Poll_c10தினம் ஒரு சிறுதானியம் ! - Page 2 Poll_m10தினம் ஒரு சிறுதானியம் ! - Page 2 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
தினம் ஒரு சிறுதானியம் ! - Page 2 Poll_c10தினம் ஒரு சிறுதானியம் ! - Page 2 Poll_m10தினம் ஒரு சிறுதானியம் ! - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

தினம் ஒரு சிறுதானியம் !


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 15, 2015 12:53 am

First topic message reminder :

தினம் ஒரு சிறுதானியம் ! - Page 2 M50nlobYQZuJR0lSJFxe+Millets

இன்று, 25 வயதில் இதய நோய், 30 வயதில் மூட்டுவலி என அனைவருமே ஏதேனும் ஒரு நோயைச் சுமந்து, மருந்துகளையே உணவாக உட்கொள்கிறோம். உணவின் தேவை அதிகரித்து வரும் நிலையில், பாரம்பரிய விவசாய முறை என்பது படுபாதாளத்தை நோக்கிப்போய் கொண்டிருக்கிறது. விளை நிலங்களைப் பூச்சிக்கொல்லி மற்றும் ரசாயன உரங்கள் ஆக்கிரமித்து விட்டன.

உணவும் நஞ்சாகி நோய்களுக்கு ரத்னக் கம்பளம் விரித்து விட்டது. இனி, உணவு புரட்சி செய்து, அதிகம் ஆர்கானிக் உணவுகளை அன்றாடம் சேர்த்துக் கொள்வது ஒன்றே நம்மிடம் எஞ்சியிருக்கும் ஒரே வழி.

தினம் ஒரு சிறுதானியம் ! - Page 2 ZW9GYb9QOacqyd1eDYbj+hy19millets_GCB_HY_1555591g

சிறுதானிய உணவுப் பொருட்கள், நம் உடலுக்கு ஊட்டத்தையும், நோய் எதிர்ப்பு சக்தியையும் தருவதில் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன.

தினம் ஒரு சிறுதானியம் பற்றிய இந்த சிறப்புத் தகவல்கள், ஆரோக்கியமான வாழ்வுக்கு நம்மை அழைத்துச் செல்லும் என்பது உறுதி.


ஆனந்த விகடனில் பார்த்தேன், அதை இங்கு உங்களுடன் பகிறுகிறேன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 15, 2015 1:06 am

10. குதிரைவாலி கேப்பைக் கூழ்

வியர்வை சிந்தி உழைக்கும் விவசாயிகள், தினமும் காலையில் குடிக்கும் தேவாமிர்தம் என்ன தெரியுமா? பழைய சோறும் கேப்பைக்கூழும்தான். காலம் காலமாக நீராகாரமாக அருந்தும் இந்த உணவுகள், உடலைத் திடகாத்திரமாக வைத்திருப்பதுடன், எந்த நோயையும் நெருங்கவிடாது.

குதிரைவாலி கேப்பைக் கூழ்

தினம் ஒரு சிறுதானியம் ! - Page 2 6V7SgayQGOfrlA5xn9id+kuthiraivalicapai01

செய்முறை: முந்தைய நாள் இரவே 200 கிராம் கேழ்வரகு மாவில் தண்ணீர் ஊற்றி, தோசை மாவுப் பதத்துக்குக் கரைத்து மூடிவைக்கவும். நன்றாகப் புளித்துவிடும்.

50 கிராம் குதிரைவாலி அரிசியை நன்றாகக் களைந்து தண்ணீர்விட்டு வேக வைத்துக்கொள்ளவும். அரைப் பதத்தில் வெந்ததும், ஊறவைத்த கேழ்வரகு மாவைச் சேர்த்து கெட்டியாகும் வரை அடுப்பில் வைத்துக் கிளறவும்.

தண்ணீரில் கையை நனைத்துவிட்டு, கூழைத் தொட்டுப்பார்த்தால், அது கையில் ஒட்டாமல், அல்வா பதத்தில் இருக்கவேண்டும்.

பிறகு, கால் கப் தயிர், பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், வெந்த கூழ் மூன்றையும் சேர்த்து, தேவையான உப்பு போட்டு, தண்ணீர் விட்டுக் கரைத்துக் குடிக்கலாம்.

பலன்கள்

கால்சியம் இருப்பதால் எலும்புகளுக்கு வலு சேர்க்கும். இரும்புச்சத்து இருப்பதால் ரத்த உற்பத்திக்கு உதவும். கொழுப்பைக் குறைக்கும். குதிரைவாலியில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் மலச்சிக்கல் பிரச்னை வராமல் தடுக்கும். கேழ்வரகு உடலுக்கு நல்ல குளிர்ச்சியைத் தந்து வலுவைச் சேர்க்கும். எடை குறைக்க நினைப்பவர்கள் தினமும் சாப்பிடலாம். பெண்கள், இதய நோயாளிகளுக்கு மிகவும் நல்ல உணவு.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 15, 2015 1:07 am

கம்பு

உணவுச்சத்து தரத்தில் முதலிடம் வகிக்கும் தானியம் கம்பு. இதில் அதிக அளவு புரதம், கால்சியம், பாஸ்பரம், இரும்புச்சத்து, ரிபோஃப்ளேவின், பீட்டாகரோட்டின், நியாசின், வைட்டமின்கள், தாது உப்புகள், மாவுச்சத்து, பி 11 வைட்டமின், கரோட்டின், லைசின் போன்ற அமிலங்கள் இருக்கின்றன. தினமும் கம்பை சமைத்துச் சாப்பிடுவதன் மூலம், வைட்டமின் மற்றும் சத்துக்குறைப்பாட்டைப் போக்கலாம். ஆரோக்கியத்தைக் கூட்டலாம்.

பலன்கள்

ரத்தசோகை இருப்பவர்களுக்கு சரியான உணவு. கர்ப்பிணிகள் அவசியம் சாப்பிடவேண்டும். குழந்தைகளுக்கு அடிக்கடி தரலாம். டீன் ஏஜ் பெண்கள், வளரும் குழந்தைகள், அடிக்கடி கம்பு உணவை சேர்த்துக்கொண்டால், உடல் நன்கு வலுப்பெறும். தேவையற்ற கொழுப்பைக் கரைத்து, உடல் எடையைச் சீராக்கும். சர்க்கரை நோயாளிக்கும் ஏற்றது. பார்வைத்திறன் மேம்படும். உடல் சூட்டைத் தணிக்கும். ஜீரணக் கோளாறு, வயிற்றுப் புண்கள், குடல் புண்களை ஆற்றும். மலச்சிக்கலைத் தடுக்கும். மன அழுத்தத்தைக் குறைக்கும்.

கம்பு வெஜிடபிள் கஞ்சி

தினம் ஒரு சிறுதானியம் ! - Page 2 RiX1MIrDR8aDW5Loi3Fs+millet400(1)

அரை கப், கம்பை நன்றாகச் சுத்தம் செய்து ஊறவைக்கவும். இதனுடன், மூன்று கப் வெஜிடபிள் ஸ்டாக் (கேரட், பீன்ஸ், காலிஃபிளவர், பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து வேகவைத்து அரைத்த விழுது) அரை டீஸ்பூன் அளவுக்கு சீரகம், மிளகு, 1 பிரியாணி இலை, ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து, இரண்டு கப் தண்ணீர் விட்டு வேகவைக்கவும். வெந்ததும், பிரியாணி இலையை எடுத்துவிட்டு, கலவையை மிக்ஸியில் அரைத்துக்கொள்ள வேண்டும்.

கடாயில் சிறிது எண்ணெய் விட்டு, அரை டீஸ்பூன் கடுகு மற்றும் மூன்று பல் பூண்டு சேர்த்துத் தாளித்து, அரைத்த சூப் கலவையில் சேர்த்துக் கொதிக்கவிடவும். தேவைப்பட்டால், சிறிது தண்ணீர் அல்லது ஸ்டாக் சேர்த்துக்கொள்ளலாம். இதில், எலுமிச்சைப் பழச்சாறு, உப்பு, மிளகுத் தூள் சேர்த்துப் பருகலாம்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 15, 2015 1:08 am

12. ராகி

ராகி மசாலா ரிப்பன்

தினம் ஒரு சிறுதானியம் ! - Page 2 4vqBpbm9Svm1qKwuZMhE+ragi01

குழந்தைகளுக்கு டிபனைவிட, நொறுக்குத் தீனியின் மீதுதான் ஆசை அதிகம். வீட்டில் செய்யவில்லை என்றால், சுகாதாரமற்ற எண்ணெயில் செய்த கடைப் பலகாரங்களை வாங்கி, வயிற்றைக் கெடுத்துக்கொள்வார்கள். சிறுதானியங்களில் நொறுக்குத் தீனியை செய்து கொடுங்கள். சுவையும் அபாரமாக இருக்கும். உடலும் நலம் பெறும்.

செய்முறை

2 கப் கேழ்வரகு மாவு, அரை கப் பொட்டுக்கடலை மாவு, ஒரு டீஸ்பூன் மிளகாய்த் தூள் மற்றும் பூண்டு (அ) வெங்காய விழுது, பெருங்காயத் தூள், சோம்புத் தூள் தலா கால் டீஸ்பூன் சேர்த்து, உப்புப் போட்டு தேவையான தண்ணீர் ஊற்றி, முறுக்கு மாவுப் பதத்தில் பிசையவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் அடுப்பை 'சிம்'மில் வைத்து, முறுக்குக் குழாயில் ரிப்பன் அச்சைப் பொருத்தி, மாவைப் போட்டு, காயும் எண்ணெயில் ரிப்பன்களாகப் பிழியவும். சிவந்ததும் எடுக்கவும்.

பலன்கள்

கேழ்வரகில் இரும்புச்சத்து, கால்சியம், அமினோ அமிலங்கள் அடங்கி இருக்கின்றன. சர்க்கரை நோயிலிருந்து விடுபடவும், உடல் வலுப்பெறவும், குடல் புண்ணை ஆற்றவும், பித்தம் தொடர்பான நோய்களைப் போக்கவும் கேழ்வரகு உதவுகிறது. மேலும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கிறது. உடல் சூட்டைத் தணித்து, சருமத்தைப் பளபளப்பாக்கும். கேழ்வரகுடன், பொட்டுக் கடலை மாவையும் சேர்ப்பதால், குழந்தைகளின் வளர்ச்சி அதிகரித்து, உடல் நல்ல உறுதியைப் பெறும்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 15, 2015 1:10 am

13. சாமை


சத்தான சிறுதானியங்களில் தினமும் சமைத்து சாப்பிடக்கூடிய உணவு சாமை. இதில் இரும்புச்சத்து, புரதச்சத்து மற்றும் நார்ச்சத்து அதிகமாக இருக்கிறது. ட்ரைகிளசரைடு என்ற கெட்ட கொழுப்பு குறைவாக உள்ளது.

பலன்கள்

சாமையை உணவாக எடுத்துக்கொள்ளும்போது, உடலில் நோய் எதிர்ப்பு சக்தி கூடும். இதனால், செல் சிதைவடைவது கட்டுப்படுத்தப்படும். பொதுவாக வயோதிகர்கள், நோய்வாய்ப்பட்டவர்களுக்கு மலச்சிக்கல் பிரச்னைதான் பெரிய சிக்கலாகவே இருக்கிறது. உடலிலிருந்து கழிவுகள் சரிவர வெளியேறாமல் போனால் அதுவே பல்வேறு நோய்களுக்கு மூலக்காரணியாக அமைந்துவிடும்.

சாமை அரிசியில் செய்யப்படும் உணவுகள், மலச்சிக்கலைத் தடுப்பதுடன் வலுவைக் கூட்டும் உணவாகவும் இருக்கிறது. வயிறு தொடர்பான அனைத்துப் பிரச்னைக்கும் சாமை அரிசி சிறந்த மருந்தாக இருக்கிறது. ரத்தசோகையைத் தடுக்கிறது. உயிரணுக்களின் எண்ணிக்கையை உயர்த்துவதில், சாமை முக்கியப் பங்கு வகிக்கிறது.


சாமைக் காரப் புட்டு

தினம் ஒரு சிறுதானியம் ! - Page 2 OYUrlHOFT1CnYC1AhAY6+samai01

செய்முறை

500 கிராம் சாமை அரிசி மாவைச் சலித்து, ஒரு டீஸ்பூன் சீரகம், தேவையான உப்பு சேர்த்துக் கலக்கவும். இதில் தண்ணீர் சேர்த்து, புட்டு பதத்துக்குப் பிசைந்து ஐந்து நிமிடங்கள் ஊறவிடவும். பிறகு, ஆவியில் 10 நிமிடங்கள் வேகவைக்கவும்.

கடாயில் சிறிது எண்ணெய் விட்டு, காய்ந்ததும் சிறிது கடுகு, ஒரு டீஸ்பூன் உளுந்து, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை, 4 வெங்காயம் (பொடியாக நறுக்கியது), 4 காய்ந்த மிளகாய், 1 தக்காளி (பொடியாக நறுக்கியது), சிறிது உப்பு சேர்த்து நன்றாகச் சுருள வதக்கவும். பிறகு, வேகவைத்த சாமைப் புட்டைச் சேர்த்து, நன்றாகக் கலக்கவும். பொடியாக நறுக்கிய கொத்தமல்லியைத் தூவி, இரண்டு நிமிடங்கள் மிதமான தீயில் மூடி, வேகவிட்டு எடுக்கவும்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 15, 2015 1:12 am

14. சிறுதானியக் கஞ்சி

ஏழைகளின் உணவாகக் கருதப்பட்ட கஞ்சி, கூழ் இன்று அனைவரின் காலை உணவாக மாறிக்கொண்டிருக்கிறது. நோய் வரும் பாதையைத் தடுத்து, ஆரோக்கிய வாழ்வுக்கு வழிகாட்டும் சிறுதானிய உணவுகளுக்கு ஈடு இணையே இல்லை.

பலன்கள்

அரிசி, கோதுமை தராத சமச்சீர் ஊட்டச்சத்துக்கள் அடங்கிய, உணவாக அமைவதால் உடல் வலுபெறும். நோய் நெருங்காமல் ஆரோக்கியமாக இருக்க சிறுதானியக் கஞ்சியும், கூழும் உதவி செய்யும்.

அதிகமாக மது அருந்துபவர்களுக்கு, உடல் பருமன் ஏற்பட்டு, செரிமானமின்மையால், பித்தக்கற்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. அவர்களுக்கு வரகு உணவு நல்ல மருந்து. குடல்புண் மற்றும் உணவுக்குழாயில் ஏற்படும் புண்ணுக்கு சாமை நல்ல மருந்து. உடலில் உள்ள வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்றின் அளவையும் கட்டுக்குள் வைக்க உதவும். இளைத்த உடல் வலுவாகவும் உடல் எடை கூடவும் தினை உதவுகிறது.

வயதானவர்களுக்கு மூட்டுகளில் உள்ள தேவையற்ற நீரினை நீக்க, தினை அதிகம் சேர்த்துக்கொள்ளலாம். மேலும், நாள்பட்ட சிறுநீரகக் கோளாறுகள் (Chronic renal disease), கால் வீக்கம், முக வீக்கம் ஆகியவற்றைக் குறைக்க உதவும். குழந்தை பெற்ற பெண்களுக்கு கர்ப்பப்பையில் உள்ள கசடுகளை வெளியேற்றவும், தாய்ப்பால் சுரக்கவும் தினை கைகொடுக்கும்.

பட்டைத் தீட்டப்படாத சிவப்பு அரிசியில் நார்ச்சத்து, வைட்டமின்- டி1 நிறைந்துள்ளன. இதனால், வாய் ஓரங்களில் ஏற்படும் புண் (Angular cheilitis) குணமாகும். சர்க்கரை நோய் கட்டுப்படும். புரதம் அதிகம் இருப்பதால், எலும்புகளின் வளர்ச்சிக்குப் பயன்படுகிறது. கேழ்வரகு நார்ச்சத்து நிறைந்த உணவு. இதில் அமினோ அமிலங்கள், லிசித்தின் மற்றும் மெத்யோனைன் போன்றவை அடங்கியுள்ளன.

கல்லீரல் பாதிப்பு மற்றும் சிறுநீரகப் பாதிப்பு அடைவதால் ஏற்படும் பெருவயிறு நோய் இருப்பவர்களுக்கு, கேழ்வரகுக்கூழ் அற்புதமான உணவு. பித்தத்தால் ஏற்படும் உடல் வெப்பத்தைக் கேழ்வரகு கட்டுப்படுத்தும். இதில் வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து இருப்பதால், ரத்தச்சோகையைக் கட்டுப்படுத்துகிறது.

உடலில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தவும், குடல் புற்றுநோயினைத் தவிர்க்கவும் உதவுகிறது. கேழ்வரகு பாதாம் கஞ்சியைக் குடிப்பதால், சதைகளுக்கு ஊட்டம் கிடைக்கும். வைரல் காய்ச்சலில் குணமடைந்தவர்களுக்கு, மூட்டுகளில் வலி ஏற்பட வாய்ப்பு உண்டு. இதனைக் குறைக்க, கேழ்வரகு பாதாம் கஞ்சி பயன்படும். சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் பிரைமரி காம்ப்ளெக்ஸை (Primary complex) கட்டுப்படுத்த உதவும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

தினம் ஒரு சிறுதானியம் ! - Page 2 YBltbbvFQHm2p68bEip5+cool01

செய்முறை

தினையோ, சாமையோ எதுவானாலும் மிக்ஸியில் ஒரு முறை சுற்றி, இரண்டாக உடைத்துக்கொள்ளவும். அரை டம்ளர் தானியத்துக்கு மூன்று டம்ளர் தண்ணீர் சேர்த்து, நன்றாக வேகவைத்து, மலர்ந்ததும் இறக்கவும். இனிப்பு வேண்டுமானால், பனை வெல்லத்தைக் காய்ச்சி, வடிகட்டி, அந்தப் பாகைத் தேவைக்கேற்ப சேர்த்துக்கொள்ளலாம். ஏலக்காய், தேங்காய்ப்பூ, உப்பு சேர்த்துப் பரிமாறுங்கள். இல்லையெனில், மோர் சேர்த்து, சின்ன வெங்காயம், இஞ்சி, உப்பு சேர்த்துப் பருகலாம்.

இதற்கு, புதினா, கொத்தமல்லி, கறிவேப்பிலை, கொள்ளு எனச் சுவையான துவையல்களைத் தொட்டுக்கொள்ளலாம். தினம் ஒரு கீரைகூடச் சேர்த்துக்கொள்ளலாம்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 15, 2015 1:15 am

15. ராகி

உடலுக்கு முழுமையான சத்துக்களை அள்ளித்தருவதில் முளைக்கட்டிய தானியத்துக்குத்தான் முதலிடம்.
முளைகட்டிய தானியத்தில் செய்யும் பால், சாலட், கஞ்சி, பாயசம் என சகல உணவுகளும் சப்புக்கொட்டி சாப்பிடும் அளவுக்கு அபார ருசியுடன் இருக்கும். முளைகட்டிய கேழ்வரகு மாவில் செய்யும் இந்த தோசையை அனைவரும் விரும்பிச் சாப்பிடுவார்கள்.

பலன்கள்

கால்சியம் அதிகம் இருப்பதால் எலும்பு வளர்ச்சிக்கு நல்லது. எலும்புத் தேய்மானத்தைத் தடுக்கும். அதிகம் எண்ணெய் சேர்க்காமல் வேகவைத்துச் சாப்பிடுவதன் மூலம், உடல் எடையைக் குறைக்கலாம். நார்ச்சத்து இருப்பதால் எளிதில் செரிமனமாகும். உடலுக்குத் தேவையான ஆற்றல் கிடைக்கும்.

ராகி வெங்காய தோசை

தினம் ஒரு சிறுதானியம் ! - Page 2 R3vvVB08TDyVFafbVQwR+Ragioniondosa01

செய்முறை:

2 பெரிய வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். கடாயில் சிறிது எண்ணெய்விட்டுக் காய்ந்ததும், நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு, உப்பு, ஒரு டீஸ்பூன் மிளகுத் தூள் சேர்த்து, நன்றாக வதக்கிக்கொள்ளவும். ராகி மாவில் உப்பு சேர்த்துக் கரைத்து, அரை மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு, தோசை மாவுடன் கலந்து தோசைக்கல்லை காயவைத்து, மெல்லிய தோசைகளாக வார்க்கவும். சுற்றிலும் எண்ணெய் விட்டு, இருபுறமும் வேகவைத்து எடுக்கும்போது, தோசையின் நடுவில் வதக்கிய வெங்காயத்தை வைத்து, சுட்டு எடுக்கவும்.

குறிப்பு

முளைகட்டிய கேழ்வரகை மாவாக அரைத்துப் பயன்படுத்தினால், தோசை வாசனையாக இருக்கும். சத்தும் சுவையும் கூடும். முந்தைய நாள் இரவே, ஒரு கப் கேழ்வரகு மாவைக் கரைத்து வைத்து, மறுநாள் பயன்படுத்தலாம். ஆனால், காலையில்தான் தோசை மாவைச் சேர்க்க வேண்டும். தோசை மாவுக்குப் பதிலாக, கோதுமை மாவைப் பயன்படுத்தலாம். கோதுமை மாவில் தண்ணீர் சேர்த்து, கட்டி இல்லாமல்  கரைத்து, ராகி மாவுடன் சேர்த்து கலந்துகொள்ள வேண்டும்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 15, 2015 1:16 am

16. கேழ்வரகு

இன்றைய குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரையும் வசியப்படுத்திவிட்டது நொறுக்குத் தீனி. உணவைக் காட்டிலும் நொறுக்குத் தீனியை அதிகம் திண்பதில் ஆர்வம் காட்டுவது ஆரோக்கியத்துக்கே வேட்டு வைக்கக்கூடும். கண்ட எண்ணெயில் செய்து விற்பனைக்கு வரும் கடைகளில் வாங்கி சாப்பிடுவதைக் காட்டிலும், உடலுக்கு நன்மையை தரக்கூடிய நம் பாரம்பரிய உணவுகளான கேழ்வரகு, சோளம், தினை, கம்பு என சிறுதானியத்தில் செய்யும் நொறுக்குத் தீனியை வீட்டிலேயே செய்து சாப்பிட்டால்... சுவைக்கு சுவை... சத்துக்கும் சத்து!

பலன்கள்

கேழ்வரகில் புரதம், கொழுப்பு, இரும்புச்சத்து, நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், தயமின், கார்போஹைட்ரேட் என அனைத்து சத்துக்களும் இருப்பதால் உடலுக்கு வலுவைக் கூட்டுவதில் முதலிடத்தில் இருக்கிறது. இதுதவிர, பீட்டா கரோட்டின், நியாசின், ரிபோப்ளேவின் போன்ற சிறிய ஊட்டச்சத்துக்களும், அமினோ அமிலங்களும் நிறைந்துள்ளன. இரும்புச்சத்து அதிகம் இருப்பதால், ரத்த சோகையை தடுக்கிறது. தோல் அலர்ஜியை நீக்கும். சர்க்கரை நோயாளிகள் தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் சர்க்கரை நோய் க‌ட்டுக்குள் இருக்கும். உடலுக்கு வலிமை தரும்.  உடல் உஷ்ணத்தைக் குறைக்கும்.

கேழ்வரகு மிச்சர்

தினம் ஒரு சிறுதானியம் ! - Page 2 WESkl6yyS1O6qesxzv68+Ragimicsar01

200 கிராம் கேழ்வரகை அரைத்து மாவாக்கிக் கொள்ளவும். அதில், தேவையான உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து தண்ணீர் விட்டு முறுக்கு மாவு பதத்தில் கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும். அந்த மாவை மிக்சர் பிழியும் நாழியில் போட்டு, காய்ந்த எண்ணெயில் பொரித்து எடுக்கவும். இதனுடன், தலா 50 கிராம் வேர்க்கடலை, பொட்டுக்கடலை, பொரித்தஅவல் சேர்த்து கிளறவும். கேழ்வரகு மிக்சர் ரெடி!



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 15, 2015 1:17 am

17. தினை

உலகிலேயே அதிகம் பயிரிடப்படுகிற இரண்டாவது வகை தானியம் தினை. இதற்கு இறடி, ஏளல், கங்கு எனப் பல பெயர்கள் உள்ளன. நம் முன்னோர்கள், கேழ்வரகு, கம்பு, சோளம், தினை என நம் பாரம்பரிய உணவுகளைச் சாப்பிட்டு, உடலை திடகாத்திரமாக வைத்திருந்தனர்.

ஆனால், இன்றோ தவிடு நீக்கி, பாலீஷ் செய்த அரிசியை மட்டுமே சாப்பிட்டுவருவதால், உடலில் போதிய வலுவின்றி, நோய்களுக்கு ஆளாகித் தவிக்கிறோம். தெவிட்டாத தேனும் தினை மாவும் கலந்து செய்யும் இந்த லாடுவை தினமும் சாப்பிடுபவர்களுக்கு, உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்கும்; ஆரோக்கியம் கூடும்.

பலன்கள்

அதிக அளவு புரதச் சத்து கிடைக்கும். உடல் வளர்ச்சிக்குத் தேவையான அடிப்படை நுண் தாதுச்சத்துக்கள் நிறைந்தது. தினமும் குழந்தைகளுக்கு ஒரு தினை லாடு கொடுப்பது, அவர்களின் ஆரோக்கியத்துக்கு துணைபுரியும். இதயத்தைப் பலப்படுத்தும்.
உடல் வலு பெறும்.  பசியை உண்டாக்கும்.

தினை லாடு

தினம் ஒரு சிறுதானியம் ! - Page 2 8OgSLqweSKKKZXPTAp8w+thinailadu01

வெறும் கடாயில் சுத்தம் செய்த ஒரு ஆழாக்கு தினையை வறுத்துக்கொள்ளவும். ஆறியதும் மிக்ஸியில் பொடிக்கவும். ஒரு கட்டி அல்லது தேவையான அளவு வெல்லத்தைத் தூளாக்கிக்கொள்ளவும். தினை மாவு, வெல்லத்தூளுடன், தேன், தேங்காய்த் துருவல் தலா 4 டேபிள்ஸ்பூன் சேர்த்து, ஒரு டீஸ்பூன் நெய் விட்டு, சிறிது தண்ணீர் விட்டு உருண்டைகளாகப் பிடித்துவைக்கவும்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 15, 2015 1:18 am

18. கம்பு

அதிக அளவில் பயிரிடப்படும் சிறு தானியங்களில் கம்புதான் முதல் இடம். வறண்ட பகுதியில்கூட விளையும் தன்மை கொண்டது. கால்சியம், இரும்புச்சத்து மிக அதிகம்.

பலன்கள்

கம்பில் இரும்பு, மக்னீசியம், வைட்டமின் பி மற்றும் சி போன்ற சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன. இதனால், உடலுக்கு அதிகம் வலு சேர்க்கும்.

சருமம், பார்வைத்திறன் மேம்படத் தேவைப்படும் வைட்டமின் A உருவாக முக்கியக் காரணியான பீட்டாகரோட்டீன் இதில் அதிகம் இருக்கிறது. அரிசியைக் காட்டிலும் எட்டு மடங்கு இரும்புச்சத்து கம்பில் உள்ளது. ரத்தசோகை வராமல் தடுக்கும். அதிக வைட்டமின் சத்துக்கள் இருப்பதால், வைட்டமின் சத்துக் குறைபாட்டால் ஏற்படும் நோயைச் சரி செய்கிறது.

வேண்டாத கொழுப்புகளைக் கரைத்து, உடல் எடையைக் குறைக்கும். சர்க்கரை நோயாளிக்கு மிகவும் ஏற்றது. பற்கள், எலும்புகள் நல்ல உறுதியாக இருக்க உதவுகிறது. வயிற்றுப் புண், குடல் புண், அஜீரணக் கோளாறு நீங்கும். உடல் உஷ்ணம் குறையும்.

கம்பு ரொட்டிப் பிரட்டல்

தினம் ஒரு சிறுதானியம் ! - Page 2 FYnBV5zQgCaOFs4PBd8A+Ryerotti01

300 கிராம் கம்பு மாவை, சப்பாத்தி மாவுப் பதத்துக்குப் பிசைந்து, பதமாக இட்டு, தோசைக் கல்லில் இருபுறமும் ரொட்டி போல் சுட்டு எடுக்கவும். பிறகு, சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், 3 கீறிய பச்சை மிளகாய், 2 நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, நன்றாக வதக்கவும். பொன்னிறமாக வதங்கியதும், 2 நறுக்கிய தக்காளி, கரம் மசாலா தூள், உப்பு சேர்த்து வாசம் போக வதக்கவும். நறுக்கி வைத்துள்ள கம்பு ரொட்டி துண்டுகளை சேர்த்துக் கிளறவும். சுவையான கம்பு ரொட்டிப் பிரட்டல் தயார்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 15, 2015 1:19 am

19. ராகி

கேழ்வரகு வளரும் குழந்தைகளின் எலும்பு வளர்ச்சியை அதிகரிக்கச் செய்கிறது. கேழ்வரகுடன், பொட்டுக்கடலை, வேர்க்கடலை போன்றவற்றைச் சேர்த்து அரைத்து, கஞ்சி போல தயார் செய்து, குழந்தைகளுக்கு ஆறு மாதங்களிலிருந்து தாய்ப்பாலுடன் துணை உணவாகக் கொடுக்கலாம். சிறுநீரகப் பிரச்னை இருப்பவர்கள் ஓரளவுக்கு எடுத்துக்கொள்ளலாம். கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், வளரும் குழந்தைகள் வாரத்துக்கு மூன்று நாட்கள் சேர்த்துக்கொள்வது மிகவும் நல்லது.

பலன்கள்

சத்துமாவு மாலை நேரச் சிற்றுண்டி. கேழ்வரகில் கார்போஹைட்ரேட், கால்சியம் சத்து மிக அதிகமாக உள்ளன. பொட்டாசியம், தையமின், ரிபோஃப்ளோவின், ஃபோலிக் அமிலம், மங்கனீஸ், தாமிரம், மக்னீஷியம், துத்தநாகம் ஓரளவு இருக்கின்றன. உடலுக்கு சக்தியைக் கொடுக்கும். மலச்சிக்கலைப் போக்கும். எளிதில் ஜீரணமாகும். வேர்க்கடலையில் உள்ள புரதம், வெல்லத்தில் இரும்புச்சத்து குழந்தையின் வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்துக்கும் உறுதுணைபுரியும்.

ராகி உருண்டை

தினம் ஒரு சிறுதானியம் ! - Page 2 RGEVriZQRDamCfH0YUNL+ragiball

200 கிராம் கேழ்வரகு மாவுடன் உப்பு சேர்த்து, தண்ணீர்விட்டு அடைகளாகத் தட்டி, காயும் தோசைக் கல்லில் போட்டு சுட்டு எடுக்கவும். மிக்ஸியில் ஆறிய கேழ்வரகு அடைகளைப் போட்டு, இரண்டு சுற்று சுற்றவும். இதில், வேர்க்கடலை, வெல்லம் சேர்த்து, மேலும் 2 முறை சுற்றி எடுக்கவும்.

இந்த கலவையை உருண்டைகளாகப் பிடித்து, குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். இனிப்பு பிடிக்கவில்லை என்றால், வெல்லத்துக்குப் பதிலாக கேரட், கொத்தமல்லி, உப்பு சேர்த்து செய்யலாம்.
சிறுதானியங்களில் முக்கியமானது குதிரைவாலி. புழுங்கல் அரிசியில் தோசை வார்த்துச் சாப்பிடுவதைக் காட்டிலும், குதிரைவாலி அரிசியில் தோசை செய்து சாப்பிட்டுப்பாருங்கள்... சுவையும், சத்தும் அற்புதமாக இருக்கும்.

பலன்கள்

இரும்புச்சத்து நிறைந்திருப்பதால், ரத்தசோகை வராமல் தடுக்கும். நார்ச்சத்து மலச்சிக்கலைத் தடுக்கவும், செரிமானத்துக்கும் உதவுகிறது. குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் என அனைவரும் சாப்பிட உகந்தது.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக