புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கார்த்திகை மாத ராசி பலன்கள் :) - Page 2 Poll_c10கார்த்திகை மாத ராசி பலன்கள் :) - Page 2 Poll_m10கார்த்திகை மாத ராசி பலன்கள் :) - Page 2 Poll_c10 
64 Posts - 50%
heezulia
கார்த்திகை மாத ராசி பலன்கள் :) - Page 2 Poll_c10கார்த்திகை மாத ராசி பலன்கள் :) - Page 2 Poll_m10கார்த்திகை மாத ராசி பலன்கள் :) - Page 2 Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
கார்த்திகை மாத ராசி பலன்கள் :) - Page 2 Poll_c10கார்த்திகை மாத ராசி பலன்கள் :) - Page 2 Poll_m10கார்த்திகை மாத ராசி பலன்கள் :) - Page 2 Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
கார்த்திகை மாத ராசி பலன்கள் :) - Page 2 Poll_c10கார்த்திகை மாத ராசி பலன்கள் :) - Page 2 Poll_m10கார்த்திகை மாத ராசி பலன்கள் :) - Page 2 Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
கார்த்திகை மாத ராசி பலன்கள் :) - Page 2 Poll_c10கார்த்திகை மாத ராசி பலன்கள் :) - Page 2 Poll_m10கார்த்திகை மாத ராசி பலன்கள் :) - Page 2 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கார்த்திகை மாத ராசி பலன்கள் :) - Page 2 Poll_c10கார்த்திகை மாத ராசி பலன்கள் :) - Page 2 Poll_m10கார்த்திகை மாத ராசி பலன்கள் :) - Page 2 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
கார்த்திகை மாத ராசி பலன்கள் :) - Page 2 Poll_c10கார்த்திகை மாத ராசி பலன்கள் :) - Page 2 Poll_m10கார்த்திகை மாத ராசி பலன்கள் :) - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கார்த்திகை மாத ராசி பலன்கள் :) - Page 2 Poll_c10கார்த்திகை மாத ராசி பலன்கள் :) - Page 2 Poll_m10கார்த்திகை மாத ராசி பலன்கள் :) - Page 2 Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கார்த்திகை மாத ராசி பலன்கள் :)


   
   

Page 2 of 2 Previous  1, 2

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 08, 2015 11:29 am

First topic message reminder :

17.11.2015 முதல் 16.12.2015 வரை 


கார்த்திகை மாத ராசி பலன்கள் :) - Page 2 Aries02கூட்டுக் குடும்பமாய் வாழ விரும்பும் நீங்கள், அசைக்க முடியாத தெய்வ பக்தி உள்ளவர்கள். தன் சொந்த உழைப்பால் உயர விரும்பும் நீங்கள், பாதை மாறிச் சென்று பணம் சம்பாதிக்க தயங்குவீர்கள். இந்த மாதம் முழுக்க உங்கள் ராசிநாதன் செவ்வாய் 6ம் வீட்டிலேயே தொடர்வதால் உங்களுடைய ஆளுமைத்திறன் அதிகரிக்கும். புதிய பதவிக்கு உங்களது பெயர் பரிந்துரை செய்யப்படும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். ராகுவும் 6ம் இடத்தில் நிற்பதால் அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். ஷேர் மூலமாக பணம் வரும். ராசிநாதன் செவ்வாய் ராகுவுடன் சேர்ந்து நிற்பதால் யூரினரி இன்ஃபெக்‌ஷன், ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைபாடு, தலைச்சுற்றல், சிறுசிறு விபத்துகள் வந்துபோகும். 29ந் தேதி வரை உங்களின் தனசப்தமாதிபதியான சுக்கிரன் 6ல் மறைந்து கிடப்பதால் கணவன்-மனைவிக்குள் ஈகோப் பிரச்னைகள் வரக்கூடும்.

 30ந் தேதி முதல் சுக்கிரன் 7ம் வீட்டில் நுழைந்து உங்கள் ராசியைப் பார்க்க இருப்பதால் அழகு, ஆரோக்யம் கூடும். மனைவியுடனான மோதல்கள் விலகும். அவருக்கு இருந்த நோய் குணமாகும். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். குரு 5ல் நீடிப்பதால் குழந்தை பாக்யம் கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு வேலை கிடைக்கும். ஆனால், 8ல் நிற்கும் சனியுடன் இந்த மாதம் முழுக்க உங்களின் பூர்வ புண்யாதிபதி சூரியனும் சேர்வதால் பிள்ளைகளால் கொஞ்சம் அலைச்சல், செலவுகள் இருக்கும். அரசாங்க விஷயங்கள் தாமதமாகி முடியும். புதன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் உறவினர், நண்பர்களின் ஆதரவு பெருகும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். 

மாணவ, மாணவிகளே! அவ்வப்போது மந்தம், மறதி வந்து நீங்கும். 

கன்னிப் பெண்களே! உங்களின் நீண்ட நாள் கனவுகள் நனவாகும். பெற்றோருக்கு தெரியாமல் எந்த நட்பும் வேண்டாம். 

அரசியல்வாதிகளே! சகாக்களின் ஒத்துழைப்பு குறையும். தலைமையைப் பகைத்துக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் சந்தை நிலவரத்தை அறிந்து புது முதலீடுகள் செய்வீர்கள். பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். யாருக்காகவும் கடன் தர வேண்டாம். அனுபவமிக்க வேலையாட்களை பணியில் சேர்ப்பீர்கள். நெல், கரும்பு, காய், கனி வகைகளால் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். அலுவலகத்தில் மரியாதை கூடும் என்றாலும் அஷ்டமத்துசனி தொடர்வதால் நேர்மூத்த அதிகாரிகளால் மறைமுக தொந்தரவுகள் வந்துபோகும். சம்பள பாக்கி கைக்கு வரும். 

விவசாயிகளே! தண்ணீர் வரத்து அதிகரிக்கும். நவீன ரக உரங்களைப் பயன்படுத்தி விளைச்சலை அதிகப்படுத்தப் பாருங்கள். 

கலைத்துறையினரே! 
உங்களுடைய படைப்புத்திறன் வளரும். சககலைஞர்களிடம் வீண் வாக்குவாதம் வேண்டாம். இடைவிடாத உழைப்பாலும், சமயோஜித புத்தியாலும் சவால்களை சமாளிக்க வேண்டிய மாதமிது.     

ராசியான தேதிகள்: நவம்பர் 17,18,19, 20, 26, 27, 29, டிசம்பர் 5, 6, 7, 8, 14,15,16.

சந்திராஷ்டமம்: 
டிசம்பர் 9ந் தேதி மாலை 5 மணி முதல் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும்.

பரிகாரம்: சென்னை-குன்றத்தூர் முருகனை தரிசித்து வாருங்கள். ஏழைப் பெண்ணின் திருமணத்திற்கு உதவுங்கள்.




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 08, 2015 11:39 am

17.11.2015 முதல் 16.12.2015 வரை
கார்த்திகை மாத ராசி பலன்கள் :) - Page 2 Aquarius02பெரிய பிரச்னைகளை பிரமாதமாக சமாளிக்கும் நீங்கள், சின்ன விஷயங்களில் சிக்குவீர்கள். உழைத்தும் போதிய உயர்வு இல்லையே என புலம்புவீர்கள். இந்த மாதம் முழுக்க உங்களின் சப்தமாதிபதி சூரியனின் ராசிக்கு 10ல் அமர்வதால் உங்களிடம் மறைந்து கிடந்த திறமைகள் வெளிப்படும். உங்கள் ராசிநாதன் சனிபகவானும் 10ம் வீட்டிலேயே அமர்ந்திருப்பதால் மறைமுகமாக செயல்பட்டவர்களை இனங் கண்டறிந்து ஒதுக்குவீர்கள். உங்களிடம் பணம் வாங்கிக் கொண்டு இதோ, அதோ என்று இழுத்தடித்தவர்கள் இப்பொழுது திருப்பித் தருவார்கள். என்றாலும் வேலைச்சுமை அதிகரிக்கும். வீண்பழியும் வரக்கூடும். செவ்வாயும், ராகுவும் 8ம் வீட்டிலேயே நிற்பதால் அலைச்சல், மன இறுக்கம், வீண் விரயம், ஒருவித படபடப்பு, நெஞ்சு வலி, காய்ச்சல், இரும்புச்சத்து குறைபாடு வந்து செல்லும். 

தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். வாகனத்தை வேகமாக இயக்க வேண்டாம். எந்தக் காரியத்தை செய்தாலும் கொஞ்சம் யோசித்து செய்யுங்கள். சிலர் உங்களை தூண்டிவிட்டு, சீண்டி விட்டு சினம் கொள்ள வைத்து வேடிக்கை பார்ப்பார்கள். சொத்து விஷயத்திலும் நீங்கள் கொஞ்சம் அனுசரித்துப் போங்கள். குருபகவான் வலுவாக இருப்பதால் பிரச்னைகளை கண்டு அஞ்சாமல் பதிலடி கொடுக்கும் அளவிற்கு மன தைரியம் பிறக்கும். 2ல் கேது நீடிப்பதால் வீண் செலவுகள், கண்வலி ஏற்படக்கூடும். காலில் அடிபட வாய்ப்பிருக்கிறது. இடம், பொருள், ஏவலறிந்து பேசப் பாருங்கள். 

கன்னிப் பெண்களே!
 பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். 

அரசியல்வாதிகளே! 
கட்சித் தலைமை உங்களை நம்பி சில ரகசியப் பொறுப்பை ஒப்படைக்கும். 

மாணவ, மாணவிகளே! 
பொது அறிவுத் திறமையை வளர்த்துக் கொள்ளும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். பெற்றோர் நீங்கள் நீண்ட நாட்களாக கேட்டுக் கொண்டிருந்ததை வாங்கித் தருவார்கள். 

வியாபாரத்தில் ஓரளவு லாபம் உண்டு என்றாலும் அவசரப்பட்டு பெரிய முதலீடுகள் செய்ய வேண்டாம். சின்னச் சின்ன நஷ்டங்கள் வரும். பழைய பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். வாடிக்கையாளர்களை மனங்கோணாமல் நடத்துங்கள். அரிசி, எண்ணெய், இரும்பு வகைகளால் ஆதாயமடைவீர்கள். பங்குதாரர்களுடன் மோதல்கள் வரும். உங்களின் உத்யோகஸ்தானாதிபதி செவ்வாய் 8ல் மறைந்து காணப்படுவதால் உத்யோகத்தில் எவ்வளவு உழைத்தாலும் ஒரு அங்கீகாரமோ, பாராட்டுதலோ இல்லாமல் போகும். மேலதிகாரியின் குறை, நிறைகளையெல்லாம் சுட்டிக் காட்ட வேண்டாம். பணிகளை கொஞ்சம் போராடி முடிக்க வேண்டி வரும். தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்கப்பாருங்கள். சட்டத்திற்கு புறம்பான வகையில் யாருக்கும் உதவ வேண்டாம். சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும். 

கலைத்துறையினரே! மூத்த கலைஞர்களின் வழிகாட்டல் மூலம் வெற்றியடைவீர்கள். 

விவசாயிகளே! உங்களின் கடுமையான உழைப்பிற்கு ஏற்ப மகசூல் கூடும். வங்கியில் இழுத்தடித்த கடன் தொகை இப்பொழுது கிடைக்கும். கடின உழைப்பாலும், அனுபவ அறிவாலும் கரையேறும் மாதமிது.            

ராசியான தேதிகள்: நவம்பர் 22, 23, 24, 29, 30, டிசம்பர் 1, 2, 10, 11, 12, 13.

சந்திராஷ்டமம்: 
டிசம்பர் 4ம் தேதி மாலை 6:15 மணி முதல் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் உணர்ச்சிவசப்படாமல் இருப்பது நல்லது.

பரிகாரம்: சென்னை-திருவல்லிக்கேணியில் அருள்பாலிக்கும் பார்த்தசாரதிப் பெருமாளை தரிசித்து வாருங்கள். முதியோர் இல்லங்களுக்குச் சென்று உங்களால் இயன்ற உதவிகளைச் செய்யுங்கள்.




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 08, 2015 11:39 am

17.11.2015 முதல் 16.12.2015 வரை
கார்த்திகை மாத ராசி பலன்கள் :) - Page 2 Pisces02தாய் மண்ணின் மீதும், மொழியின் மீதும் தீராத தாகம் கொண்ட நீங்கள், கடல் தாண்டிப் போனாலும் கலாசாரத்தை மீற மாட்டீர்கள். எதையும் உடனே முடிப்பதில் வல்லவர்கள். புதனும், சுக்கிரனும் சாதகமான வீடுகளில் செல்வதால் போட்டிப் பொறாமைகளையும் தாண்டி முன்னேறத் துடிப்பீர்கள். என்றாலும் 7ல் ராகுவும், செவ்வாயும் நிற்பதால் அவ்வப்போது விவாதங்களும் வந்து செல்லும். அவருக்கு முதுகுத் தண்டில் வலி, செரிமானக் கோளாறு, பித்தப் பையில் கல் வரக்கூடும். உடன்பிறந்தவர்களால் அன்புத் தொல்லைகள் அதிகரிக்கும். ஒரு சொத்தை விற்று சில பிரச்னைகளிலிருந்து விடுபடுவீர்கள். எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியாதபடி செலவுகள் இருந்து கொண்டேயிருக்கும். தாழ்வு மனப்பான்மை தலை தூக்கும். சனி சாதகமாக இருப்பதால் தொலைநோக்குச் சிந்தனை அதிகமாகும். 

சூரியன் 9ல் நிற்பதால் தந்தைக்கு மூட்டு, முழங்கால் வலி, நெஞ்சு எரிச்சல் வந்துபோகும். அநாவசியச் செலவுகளை தவிர்க்கப் பாருங்கள். தந்தைவழிச் சொத்தை பெறுவதில் தடைகள் வந்து போகும். 6ல் குரு மறைந்து கிடப்பதால் இனந்தெரியாத கவலைகள் வந்துபோகும். உள்மனதில் ஒருவித போராட்டம் எழும்பும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். சந்தேகப் புத்தியால் நல்லவர்களை இழக்க வேண்டியது வரும். குடும்ப அந்தரங்க விஷயங்களையெல்லாம் வெளியில் சொல்லி ஆறுதல் தேட வேண்டாம். ராசிக்குள் கேது இருப்பதால் வேலைச்சுமையால் சோர்வு, களைப்பு வந்து நீங்கும். வீண் டென்ஷன் அதிகமாகும். முக்கிய பணிகளை மற்றவர்களை நம்பி ஒப்படைக்காமல் நீங்களே நேரடியாக சென்று முடிப்பது நல்லது. 

கன்னிப் பெண்களே! 
போலியாக பழகியவர்களிடமிருந்து ஒதுங்குவீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு உண்டு. 

மாணவ, மாணவிகளே! உங்களுடன் சுற்றித் திரிந்த நண்பர்கள் கூட நல்ல மதிப்பெண் பெற்று வெற்றி பெறக்கூடும். எனவே விதண்டாவாதம் பேசிக் கொண்டிருக்காமல் படிப்பில் அக்கறை செலுத்துங்கள். 

அரசியல்வாதிகளே! வெறும் அறிக்கை மட்டும் போதாது, தொகுதி மக்களின் பிரச்னைகளை தீர்ப்பதில் அக்கறை காட்டுங்கள். 

வியாபாரத்தில் போட்டிகளால் லாபம் குறையும். வேலையாட்களை நினைத்து வருத்தப்படுவீர்கள். பொறுப்பான, அமைதியான வேலையாள் நமக்கு அமையவில்லையே என்றெல்லாம் ஆதங்கப்படுவீர்கள். வாடகை இடத்தில் கடையை வைத்திருப்பவர்களுக்கு கடை உரிமையாளரால் தொல்லை அதிகரிக்கும். வாடகை அதிகப்படுத்தப்படுவதற்கும் வாய்ப்பிருக்கிறது. கமிஷன், ஸ்டேஷனரி, வாகன உதிரி பாகங்களால் ஆதாயமடைவீர்கள். 

உத்யோகத்தில் கூடுதலாக வேலை பார்க்க வேண்டி வரும். அதிகாரிகளை பகைத்துக்கொள்ள வேண்டாம். சகஊழியர்கள் மத்தியில் மூத்த அதிகாரிகளைப்பற்றி விமர்சனம் செய்யாதீர்கள். செய்யாத தவறை உங்கள் மீது சுமத்த முயற்சிப்பார்கள். கவனமாக இருங்கள். 

கலைத்துறையினரே! யதார்த்தமான படைப்புகளை தரப் பாருங்கள். பழைய கலைஞர்கள் உதவுவார்கள். 

விவசாயிகளே! குறுகிய காலப் பயிர்களை தவிர்த்து விடுங்கள். கரும்பு, சவுக்கு, தேக்கு வகைகளால் லாபமடைவீர்கள். வளைந்து கொடுத்துப்போக வேண்டிய மாதமிது.    

ராசியான தேதிகள்: நவம்பர் 17,18, 24, 26,28,29,  டிசம்பர் 2, 3, 4, 13, 14, 15.

சந்திராஷ்டமம்: 
7, 8 மற்றும் 9ந் தேதி மாலை 5 மணி வரை வேலைச்சுமை அதிகமாகும்.

பரிகாரம்: பிள்ளையார்பட்டி கற்பக விநாயகரை தரிசித்து வாருங்கள். தந்தையிழந்த பிள்ளைக்கு உதவுங்கள். 




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக