புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்..
by manikavi Today at 8:38 pm

» நகைச்சுவை தோரணங்கள்
by ayyasamy ram Today at 8:01 pm

» இன்பம் பொங்கும் பாடலை அமைதியாக ஆறுதலாக அள்ளி தந்த PB ஸ்ரீநிவாஸின் பிறந்தநாள்
by ayyasamy ram Today at 7:36 pm

» நட்டியின் ‘வெப்’ திரைப்படம் -விமர்சனம்
by ayyasamy ram Today at 7:12 pm

» மண்ணெண்ணெய் விளக்கில் படிக்கும் மாணவி.. "வெளிச்சமாய்" தோன்றிய கலெக்டர்
by T.N.Balasubramanian Today at 7:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 7:08 pm

» வாழ்க்கையில் பக்குவம் கிடைப்பது அவ்வளவு எளிதல்ல!
by T.N.Balasubramanian Today at 7:07 pm

» பாடலாசிரியர் வாலி அவர்களின் நினைவு தினம்
by heezulia Today at 2:33 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Today at 12:41 pm

» பெற்ற தாயையே திகைக்க வைத்த சிவாஜி
by ayyasamy ram Today at 12:39 pm

» கருத்துப்படம் 21/09/2023
by mohamed nizamudeen Today at 3:37 am

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 1:12 am

» ஆதித்யா எல்1: சூரியனை ஆராய இஸ்ரோ அனுப்பும் விண்கலம்
by T.N.Balasubramanian Yesterday at 4:53 pm

» வலையில் வசீகரித்தது
by ayyasamy ram Yesterday at 4:22 pm

» சமையல் குறிப்புகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 4:20 pm

» இளைஞர்களுக்கு சமந்தா அறிவுரை
by ayyasamy ram Yesterday at 4:02 pm

» படித்ததில் பிடித்த கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 3:56 pm

» துடிக்கும் கரங்கள் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 3:54 pm

» ஆன்மீக தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:48 pm

» புத்தகம் தேவை
by ரேவதி2023 Yesterday at 10:42 am

» ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரம் பாடல் – 22
by ayyasamy ram Yesterday at 7:27 am

» பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்கள் எழுதிய சுமார் 450 நூற்களின் பட்டியல்
by TI Buhari Yesterday at 12:22 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed Sep 20, 2023 11:21 pm

» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Wed Sep 20, 2023 8:29 pm

» இப்படித்தான் சமைக்க வேண்டும் கீரைகளை!
by ayyasamy ram Wed Sep 20, 2023 8:13 pm

» கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Sep 20, 2023 8:11 pm

» தலைமுறை தலை நிமிர்ந்து நடக்கும்!. - கவிதை
by T.N.Balasubramanian Wed Sep 20, 2023 6:39 pm

» இல்லாத ஒன்றுக்கு ஏக்கம் எதற்கு?
by ayyasamy ram Wed Sep 20, 2023 3:34 pm

» மகளிர் இடஒதுக்கீடு மசோதா -அமுல் படுத்த ஆறு ஆண்டுகள் ஆகும்!
by ayyasamy ram Wed Sep 20, 2023 2:06 pm

» வாழ்த்தலாம் திரு அய்யாசாமி அவர்களை.
by ayyasamy ram Wed Sep 20, 2023 2:03 pm

» இலவசங்கள் பெற்று ஏமாறும் மக்கள்.
by T.N.Balasubramanian Wed Sep 20, 2023 11:29 am

» ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
by nandhini14 Tue Sep 19, 2023 11:02 pm

» புத்தகம் வேண்டும்
by prajai Tue Sep 19, 2023 10:28 pm

» ‘என் உயிர் தோழன்’ பாபு உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார்.
by ayyasamy ram Tue Sep 19, 2023 6:35 pm

» Dr ரேணுகா ராமகிருஷ்ணன்,
by ayyasamy ram Tue Sep 19, 2023 5:56 pm

» பதினைந்தாம் ஆண்டு நிறைவு நாள் ஈகரைக்கு இன்னும் சிறிது நேரத்தில்
by ayyasamy ram Tue Sep 19, 2023 5:43 pm

» எது வந்தால் எது போகும்- விதுர நீதி
by Anthony raj Tue Sep 19, 2023 4:10 pm

» சரணிகா தேவி நாவல்
by Saravananj Mon Sep 18, 2023 9:57 pm

» வரலாற்றின் இன்று -செப்டம்பர் 18
by T.N.Balasubramanian Mon Sep 18, 2023 6:18 pm

» இன்று விநாயக சதுர்த்தி
by T.N.Balasubramanian Mon Sep 18, 2023 6:09 pm

» பட்டுக்கோட்டை பிரபாகர் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
by Rajana3480 Mon Sep 18, 2023 4:22 pm

» அநீதி -சினிமா விமர்சனம்:
by ayyasamy ram Mon Sep 18, 2023 3:36 pm

» மோட்சத்தை அடைய முடியும் ...!
by ayyasamy ram Mon Sep 18, 2023 2:09 pm

» வெற்றி நிச்சயம்
by ayyasamy ram Mon Sep 18, 2023 2:03 pm

» மூங்கில் போல் வளைந்துதான் பாருங்களேன்! —
by ayyasamy ram Mon Sep 18, 2023 1:50 pm

» வாழ்க்கை என்பது எவ்வளவு தூரம் ?
by rajuselvam Mon Sep 18, 2023 7:20 am

» உலகை ஆளும் இந்தியர்கள்: 15 நாடுகளில் 200 பேர் முக்கிய அமைச்சர்கள்.
by Anthony raj Sun Sep 17, 2023 10:03 pm

» சுவாசப் பிரச்சனைகளை தீர்க்கும் ஆதி முத்திரை
by T.N.Balasubramanian Sun Sep 17, 2023 9:20 pm

» புத்தகம் தேவை
by JGNANASEHAR Sun Sep 17, 2023 9:17 pm

» பிறந்த தினம் கொண்டாடும் பாரத பிரதமரை வாழ்த்துவோம்.
by T.N.Balasubramanian Sun Sep 17, 2023 9:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முருங்கத்தொழுவு குளம் Poll_c10முருங்கத்தொழுவு குளம் Poll_m10முருங்கத்தொழுவு குளம் Poll_c10 
63 Posts - 53%
T.N.Balasubramanian
முருங்கத்தொழுவு குளம் Poll_c10முருங்கத்தொழுவு குளம் Poll_m10முருங்கத்தொழுவு குளம் Poll_c10 
23 Posts - 19%
Anthony raj
முருங்கத்தொழுவு குளம் Poll_c10முருங்கத்தொழுவு குளம் Poll_m10முருங்கத்தொழுவு குளம் Poll_c10 
6 Posts - 5%
TI Buhari
முருங்கத்தொழுவு குளம் Poll_c10முருங்கத்தொழுவு குளம் Poll_m10முருங்கத்தொழுவு குளம் Poll_c10 
5 Posts - 4%
heezulia
முருங்கத்தொழுவு குளம் Poll_c10முருங்கத்தொழுவு குளம் Poll_m10முருங்கத்தொழுவு குளம் Poll_c10 
5 Posts - 4%
prajai
முருங்கத்தொழுவு குளம் Poll_c10முருங்கத்தொழுவு குளம் Poll_m10முருங்கத்தொழுவு குளம் Poll_c10 
4 Posts - 3%
coderthiyagarajan1980
முருங்கத்தொழுவு குளம் Poll_c10முருங்கத்தொழுவு குளம் Poll_m10முருங்கத்தொழுவு குளம் Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
முருங்கத்தொழுவு குளம் Poll_c10முருங்கத்தொழுவு குளம் Poll_m10முருங்கத்தொழுவு குளம் Poll_c10 
3 Posts - 3%
ரேவதி2023
முருங்கத்தொழுவு குளம் Poll_c10முருங்கத்தொழுவு குளம் Poll_m10முருங்கத்தொழுவு குளம் Poll_c10 
3 Posts - 3%
manikavi
முருங்கத்தொழுவு குளம் Poll_c10முருங்கத்தொழுவு குளம் Poll_m10முருங்கத்தொழுவு குளம் Poll_c10 
3 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
சிவா
முருங்கத்தொழுவு குளம் Poll_c10முருங்கத்தொழுவு குளம் Poll_m10முருங்கத்தொழுவு குளம் Poll_c10 
188 Posts - 34%
ayyasamy ram
முருங்கத்தொழுவு குளம் Poll_c10முருங்கத்தொழுவு குளம் Poll_m10முருங்கத்தொழுவு குளம் Poll_c10 
129 Posts - 23%
T.N.Balasubramanian
முருங்கத்தொழுவு குளம் Poll_c10முருங்கத்தொழுவு குளம் Poll_m10முருங்கத்தொழுவு குளம் Poll_c10 
93 Posts - 17%
Anthony raj
முருங்கத்தொழுவு குளம் Poll_c10முருங்கத்தொழுவு குளம் Poll_m10முருங்கத்தொழுவு குளம் Poll_c10 
56 Posts - 10%
heezulia
முருங்கத்தொழுவு குளம் Poll_c10முருங்கத்தொழுவு குளம் Poll_m10முருங்கத்தொழுவு குளம் Poll_c10 
36 Posts - 6%
mohamed nizamudeen
முருங்கத்தொழுவு குளம் Poll_c10முருங்கத்தொழுவு குளம் Poll_m10முருங்கத்தொழுவு குளம் Poll_c10 
20 Posts - 4%
prajai
முருங்கத்தொழுவு குளம் Poll_c10முருங்கத்தொழுவு குளம் Poll_m10முருங்கத்தொழுவு குளம் Poll_c10 
12 Posts - 2%
manikavi
முருங்கத்தொழுவு குளம் Poll_c10முருங்கத்தொழுவு குளம் Poll_m10முருங்கத்தொழுவு குளம் Poll_c10 
8 Posts - 1%
coderthiyagarajan1980
முருங்கத்தொழுவு குளம் Poll_c10முருங்கத்தொழுவு குளம் Poll_m10முருங்கத்தொழுவு குளம் Poll_c10 
7 Posts - 1%
TI Buhari
முருங்கத்தொழுவு குளம் Poll_c10முருங்கத்தொழுவு குளம் Poll_m10முருங்கத்தொழுவு குளம் Poll_c10 
5 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முருங்கத்தொழுவு குளம்


   
   

Page 1 of 2 1, 2  Next

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4624
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Mon Feb 20, 2017 9:21 pm

ஈரோடு மாவட்டம், சென்னிமலை ஒன்றியம் முருங்கத்தொழுவு கிராமத்தில் 16 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள குளத்தினை நபார்டு வங்கி துணையுடன் மக்கள் தூர் வாரி சாதனை புரிந்துள்ளனர்.

தண்ணீருக்காகத் தினமும் தெருச்சண்டையில் ஆரம்பித்து, மாநிலங்களுக்கு இடையேயான சண்டைகள் வரை அரங்கேறிக்கொண்டிருக்கும் நம் நாட்டில், குளங்களைப் பராமரித்துப் பாதுகாக்கவில்லையென்றால், நாம் பல்வேறு சிக்கல்களை எதிர்காலத்தில் சந்திக்க நேரிடும். இன்று இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் கிணறுகள், ஆழ்துளைக்கிணறுகள் மூலமாக விவசாயம் மற்றும் குடிநீர்த் தேவைகள் பூர்த்திசெய்யப்பட்டுவருகின்றன.

ஆனால், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் நீரைச் சேமிக்காமல் போனால், கிணறுகள் நீர்விருத்தி இல்லாமல் வறண்டுபோகும். நம் நாட்டில் மொத்தமுள்ள 5,824 வட்டங்களில், 1,494 வட்டங்களில் நிலத்தடி நீரின் அளவு தொடர்ந்து உறிஞ்சப்பட்டு, அனுமதிக்கப்பட்ட எல்லையைத் தாண்டிவிட்டதாக மத்திய நிலத்தடி நீர் வாரியத்தின் புள்ளிவிவரம் கூறுகிறது. மேலும், நிலத்தடி நீரை உபயோகப்படுத்துவதற்கு ஆகும் செலவு பன்மடங்கு அதிமாக உள்ளதால், கிராமத்தில் வாழும் ஏழைகளால் அவற்றை எளிதாகப் பெற முடியாது. எனவேதான், குளங்களையும் ஏரிகளையும் காப்பாற்றி உத்வேகம் கொடுப்பதற்குப் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியது அவசியமாகிறது.

தற்போது குளங்களையும் ஏரிகளையும் பராமரிப்பதற்காக அரசால் நிர்வகிக்கப்படும் தனிப்பட்ட துறை எந்த மாநிலத்திலும் இருப்பதாகத் தெரியவில்லை. குளங்களைப் பாதுகாக்க வேண்டிய பொதுப்பணித் துறையும் நீர்ப்பாசனத் துறையும் மாற்றாந்தாய் மனதோடு குளங்களைப் பார்க்கின்றன. எனவே, குளங்கள் மூலமாக ஏற்படும் நேரடி மற்றும் மறைமுக நன்மைகளைக் கருத்தில் கொண்டு, குளங்கள் மற்றும் சிறிய நீர்நிலைகளுக்காக ஒரு தனி அமைச்சகம் ஒன்றை மத்திய அரசு நிறுவி, அதற்குப் போதுமான நிதி ஒதுக்க வேண்டியது அவசியமாகிறது. மேலும் நீர்நிலைகள் அமைந்துள்ள இடங்களை ஆக்கிரமிப்பவர்களுக்குக் கடும் தண்டனை வழங்கக் கூடிய ஒரு சட்ட வரைவு ஏற்படுத்தப்பட வேண்டும்.

பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் குளங்களை மேலாண்மை செய்வதற்காக விவசாயிகளால் ஏற்படுத்தப்பட்ட ‘குடிமராமத்து’ என்ற அமைப்பு, இன்று பல்வேறு காரணங்களால் மிகவும் வலுவிழந்து காணப்படுகிறது. இவற்றை வலுப்பெறச் செய்து, குளங்களை நிர்வாகம் செய்யும் முழுப் பொறுப்பையும் அவர்களிடம் கொடுப்பதற்குச் சட்டம் இயற்ற வேண்டியது அவசியம்.

இப்படி ஏதும் அரசாங்கம் செய்யாது என தெரிந்து மக்களே தங்கள் தற்போது இந்த பணிகளை தொடங்கி உள்ளனர் இப்படி சிந்தித்ததன் விளைவு தான் ஈரோடு மாவட்டம்
சென்னிமலை ஒன்றியம் முருங்கத்தொழுவு கிராமத்தில் அமைந்துள்ள 16 ஏக்கர் பரப்பளவு கொண்ட குளம் பல நீண்ட வருடங்களாக தூர் வராப்படாமலும் தண்ணீர் வரும் வழிகள் அடைத்துள் பராமரிப்பு இல்லாமல் இருந்தது இதனால் இந்த பகுதி மக்கள் குடிநீருக்கு கூட மிகவும் கஷ்டப்பட்டு பஞ்சாயத்து நிர்வாகம் மூலம் 12 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள வெள்ளோடு பகுதியில் இருந்து குடிநீர் சப்பளை செய்யும் நிலை தான் இருந்தது.

தற்போது இந்த பகுதி மக்கள் ஒன்று திரண்டு இந்த குளம் தூர் வாரினால் தான் நம் பகுதியில் குடிநீர் பஞ்சம் தீரும் என முடிவு எடுத்திருந்தனர் அப்போது சென்னிமலையில் செயல்படும் அஸ்வத் தொண்டு நிறுவனம் மூலம் இங்கு விஷ்ணு உழவர் மன்றம் ஆரம்பித்தனர்.

இதை வாய்பாக பயன்படுத்தி நபார்டு வங்கியில் குளம் தூர் வார திட்டம் தயாரித்து ரூ. 26 லட்சம் மதிப்பீட்டில் நபார்டு வங்கிக்கு அனுப்பினர் இதில் நபார்டு வங்கி ரூ 10 லட்சம் தர ஒப்புக்கு கொண்டது அதன் பின்பு மக்கள் பங்களிப்புடன் குளம் தூர் வாரும் பணிகளை தொடங்கி ஒரு வருடம் பணி நடந்து மிக நேர்த்தியாக குளம் தூர் வராப்பட்டு விட்டது மக்கள் தூர் வாரும் பணி முடியட்டும் என காத்திருந்தது போல மழை பெய்ததை தொடர்ந்து தற்போது குளம் தண்ணீரால் நிரம்பி வருகிறது இன்னும் பருவ மழை இருப்பதால் குளம் இந்த ஆண்டு நிரம்பி விடும் என மக்கள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.

மக்களின் இந்த திட்டத்தினை கேள்விபட்டு பார்வையிட வந்த ஈரோடு தொகுதி எம்.பி., செல்வகுமார சின்னையன்இந்த குளத்திற்கு நான்கு கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து எல்.பி.பி., வாய்க்கால் கசிவு நீரை பைப் லைன் அமைத்து கொண்டு வரும் பணிக்கு ரூ. 35 லட்சம் நிதி ஒதுக்கி இந்த பணிகளும் விரைந்து நடந்து வருகிறது. மேலும் இந்த பகுதி மாவட்ட கவுன்சிலர் மணிமேகலை விஸ்வநாதன் அவர்கள் மாவட்ட பஞ்சாயத்து துணை தலைவராகவும் உள்ளார் இவர் ரூ 3 லட்சம் நிதி ஒதுக்க ஒப்புக்கு கொண்டுள்ளார் இதில் குளத்தின் ஒரு பகுதி கரையில் கருங்கற்கள் பரப்பிவிட மக்கள் பயன்படுத்த முடிவு செய்துள்ளனர்.

முருங்கத்தொழுவு குளம் 12196065_780460445433541_1752982567172171859_n

மக்கள் திவிரமாக பணிகளை தொடங்கிய பின்பு அரசு அதிகாரிகளும், மக்கள் பிரதிநிதிகளும் திரும்பி பார்க்கும் கிராம மாக முருங்கத்தொழுவு தலை நிமிர்ந்துள்ளது.

‘நீரின்றி அமையாது உலகு’ என்பதற்கேற்ப, நாம் யாரும் நீரின்றி வாழ முடியாது. இதற்கு எந்தவித மாற்றுப் பொருளும் இதுவரையில் கிடையாது. எனவே, குளங்களைப் பாதுகாத்து நீரைச் சேமித்து நம் சந்ததியினரும், அவர்களுக்குப் பிறகு வரப்போகும் சந்ததியினரும் வாழ வழிவகுப்போம்.

தற்போதைய நிலை :
முருங்கத்தொழுவு குளம் Bf1AfzcoRKG3BWr4unD3+IMG_6803

நன்றி - சித்ரமேழி தர்ம சபை நன்றி

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 8794
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun May 14, 2017 6:55 pm

சூப்பருங்க :நல்வரவு: :வணக்கம்:



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4624
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Mon Oct 22, 2018 11:12 am

முருங்கத்தொழுவு குளம் 201810210147580667_Wastewater-leaks-to-fill-the-pond-with-water-pipe_SECVPF

வீணாகும் கசிவு நீரை குழாய் மூலம் குளத்தில் நிரப்பும் திட்டம் தமிழகத்திலேயே முதன் முதலாக சென்னிமலை அருகே தொடங்கப்பட்டு உள்ளது. இதனை 4 அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்.


பதிவு: அக்டோபர் 21,  2018 04:30 AM

சென்னிமலை,

ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே உள்ளது ஓலக்காடு. இங்கு உப்பிலிபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கீழ்பவானி வாய்க்கால் திட்டத்தின் கீழ் பாசனம் பெறுகின்றன. வயல்களில் பாய்ந்த தண்ணீர் உபரி மற்றும் கசிவு நீராக அங்குள்ள ஓடையில் பாய்ந்து நொய்யல் ஆற்றில் கலக்கிறது. ஓலக்காடு வழியாக செல்லும் இந்த ஓடையில் பல ஆண்டுகளுக்கு முன்பு தடுப்பணை கட்டப்பட்டு இருந்தது. வறட்சி காலத்தில் இந்த தடுப்பணை வறண்டு கிடந்தாலும் கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் விடும்போது தடுப்பணை நிரம்பி வெள்ளம் வீணாக சென்று வந்தது. ஏற்கனவே நொய்யல் ஆற்றில் சாயக்கழிவுகளால் அந்த தண்ணீர் பயன்படுத்த முடியாத நிலையில், கீழ்பவானி கசிவுநீரும் பயன் அற்றதாக மாறியது.

இந்தநிலையில் ஓலக்காடு தடுப்பணையில் வரும் தண்ணீரை பயன் உள்ளதாக மாற்ற அந்த பகுதி பொதுமக்கள் முடிவு செய்தனர்.

அதாவது, ஓலக்காடு பகுதியில் இருந்து சுமார் 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள முருங்கத்தொழுவு கிராமத்தில் 17 ஏக்கர் பரப்பளவில் ஒரு குளம் உள்ளது. இந்த குளம் பல ஆண்டுகளாக தண்ணீர் வரத்து பாதை இல்லாமல் வறண்டு கிடந்தது. இந்த குளத்தை ஓலக்காடு தடுப்பணையில் இருந்து வெளியேறும் தண்ணீரைக்கொண்டு நிரப்ப முடிவு செய்தனர். இதற்காக முருகத்தொழுவு குளம் நீர் நிரப்பும் திட்டம் மற்றும் மேலாண்மைக்குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினருடன் விஷ்ணு உழவர் மன்றம் மற்றும் பொதுமக்கள் இணைந்து திட்டம் தீட்டினார்கள்.

ஓலக்காடு தடுப்பணையில் இருந்து தண்ணீரை வாய்க்கால் வெட்டி முருங்கத்தொழுவுக்கு கொண்டு செல்ல முடியாது. ஓலக்காட்டில் இருந்து முருங்கத்தொழுவு குளம் 225 அடி உயரம் கொண்ட பகுதியில் உள்ளது. எனவே மின்மோட்டார் பொருத்தி, குழாய் மூலம் தண்ணீர் கொண்டு செல்வது என்று திட்டமிட்டனர்.

இந்த திட்டத்துக்கு ஈரோடு மாவட்ட கலெக்டர் ஒப்புதல் அளித்தார். மேலும், ஈரோடு எஸ்.செல்வகுமார சின்னையன் எம்.பி. அவருடைய தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.35 லட்சம் வழங்கினார். முருங்கத்தொழுவு கிராம மக்களின் பங்களிப்பாக ரூ.35 லட்சத்து 80 ஆயிரம் வசூல் செய்யப்பட்டது. ரெப்கோ வங்கி ரூ.17½ லட்சம் கடன் உதவியாக வழங்கியது. இதில் முருங்கத்தொழுவு குளத்தை தூர்வாரி கரை பலப்படுத்தும் பணிக்கு ரூ.26 லட்சத்து 80 ஆயிரம் செலவானது. மீதமிருந்த ரூ.59 லட்சத்து 30 ஆயிரம் செலவில் குழாய்கள் பதிக்கும் பணி, சூரிய சக்தி மின் மோட்டார் அமைக்கும் பணிகள் நடந்தன. இந்த திட்டப்பணிகளை முருங்கத்தொழுவு குளம் நீர் நிரப்பும் திட்டம் மற்றும் மேலாண்மை குழுவினர் மற்றும் பொதுமக்கள் மேற்கொண்டனர். பணிகள் நிறைவடைந்து திட்டம் தொடக்க விழா நேற்று நடந்தது.

விழாவுக்கு ஈரோடு மாவட்ட கலெக்டர் கதிரவன் தலைமை தாங்கினார். எஸ்.செல்வகுமார சின்னையன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கே.வி.ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு, வி.பி.சிவசுப்பிரமணி, உ.தனியரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் பி.தங்கமணி, தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன், தமிழக கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு புதிய திட்டத்தின் செயல்பாட்டை தொடங்கி வைத்தனர்.

ஓலக்காடு தடுப்பணையில் அமைக்கப்பட்டு உள்ள சூரியஒளி மின்சார உற்பத்திக்கான தகடுகள், மற்றும் மின் மோட்டார்கள், கட்டுமான திட்டத்தை பார்வையிட்ட அமைச்சர்கள் அதுபற்றி கேட்டு தெரிந்து கொண்டனர். பின்னர் அங்கு மோட்டாரை இயக்கி வைத்தார்கள். பின்னர் அங்கிருந்து அமைச்சர்களும் அதிகாரிகளும் முருங்கத்தொழுவு கிராமத்துக்கு வந்தார்கள். அப்போது ஓலக்காடு தடுப்பணையில் இருந்து குழாய் மூலம் வந்த தண்ணீர் குளத்தில் பாய்ந்து கொண்டு இருந்தது. அப்போது அங்கு கூடி இருந்த பொதுமக்கள், அமைச்சர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.

பின்னர் நடந்த விழாவில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசியதாவது:–

காங்கேயம் சட்டமன்ற தொகுதியில் ஒரு பகுதி முழுமையாக வறட்சியான பகுதியாகும். மழை இல்லாததே இந்த வறட்சிக்கு காரணம். அதில் முருங்கத்தொழுவு பகுதியும் ஒன்றாக இருந்தது. தற்போது ரூ.86 லட்சத்து 30 ஆயிரம் செலவில் குளத்தில் நீர் நிரப்பும் திட்டம் செயலுக்கு வந்து இருக்கிறது. இதுபோன்ற ஒரு திட்டம் தமிழகத்திலேயே முதன் முதலாக சென்னிமலை வட்டாரத்தில்தான் தொடங்கப்பட்டு இருக்கிறது. இந்த குளத்தில் நீர் நிரப்பினால் சுமார் 4 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு நிலத்தடி நீர் பெருகும்.

தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவி ஏற்றபின்னர் குடிமராமத்து பணிகளில் தீவிரம் காட்டப்பட்டது. ஏரிகள், குளங்கள் தூர்வாரப்பட்டதால் மழை நீர் அனைத்து பகுதிகளிலும் சேமிக்கப்பட்டு இருக்கிறது. வரலாற்று காலத்தில் நடந்த குடிமராமத்து பணிகளை மீண்டும் வரலாறாக மாற்றியவர் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி.

இதுபோன்று அனைத்து துறைகளிலும் சிறப்பாக தமிழகம் செயல்பட்டு வருகிறது. வெளிநாடுகளில் இருந்து தமிழகத்தில் முதலீடு செய்ய பலரும் ஆர்வமாக வருகிறார்கள். இதற்கு காரணம் தமிழகம் அமைதிப்பூங்காவாக திகழ்வதுதான். தடையில்லாத மின்சாரமும், சட்டம்–ஒழுங்கு பிரச்சினை இல்லாத நிலையும் இருப்பதால் வெளிநாட்டு முதலீடுகள் மூலம் பல இடங்களில் தொழில்கள் தொடங்கப்பட்டு, அந்த பகுதி மக்களுக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கிறது.

இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

விழாவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன், முன்னாள் எம்.எல்.ஏ. என்.எஸ்.என்.நடராஜ், ஈரோடு ஆர்.டி.ஓ. முருகேசன், தாசில்தார் வீரலட்சுமி, முன்னாள் மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் கே.வி.மணிமேகலை, அ.தி.மு.க. நிர்வாகிகள் கருப்புசாமி, விஸ்வநாதன், ஜெகதீசன், ஜீவா ராமசாமி, மாநில கோ–ஆப்டெக்ஸ் இயக்குனர் ப.கோபாலகிருஷ்ணன், யூகோடெக்ஸ் தலைவர் எஸ்.கோவிந்தசாமி, சிரகிரி டெக்ஸ் தலைவர் என்.இளங்கோவன், துணை தலைவர் துரைசாமி, அ.தி.மு.க நகர செயலாளர் என்.சேமலையப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பாலகணேஷ் வரவேற்றார். முடிவில் ஊராட்சிகள் உதவி இயக்குனர் விஜய சங்கர் நன்றி கூறினார்.

முருங்கத்தொழுவு குளம் நீர் நிரப்பும் திட்டத்துக்காக தினசரி 125 யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யும் வகையில் சூரிய மின்தகடுகள் பொருத்தப்பட்டு உள்ளன. 25 குதிரைத்திறன் கொண்ட மின்மோட்டார் அமைக்கப்பட்டு இருக்கிறது. சுமார் 6 கிலோ மீட்டர் தூரம் 6 அங்குல குழாய் பொருத்தப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் ஒரு நிமிடத்துக்கு 1 லட்சம் லிட்டர் தண்ணீரை தடுப்பணையில் இருந்து நீரேற்றம் செய்து குளத்தில் நிரப்ப முடியும். இவ்வாறு தினசரி 20 மணி நேரம் வீதம் 150 நாட்கள் தொடர்ந்து நீரேற்றம் செய்தால் குளத்தில் 9 அடி உயரத்துக்கு தண்ணீர் தேங்கும்.

கீழ்பவானி பாசன கசிவுநீர் வரும் காலத்தில் இது செயல்பட்டால் அந்த ஆண்டு முழுவதும் குளத்தில் தண்ணீர் இருக்கும் என்று மேலாண்மை குழுவினர் தெரிவித்தனர். பல ஆண்டுகளுக்கு பின்னர் முருங்கத்தொழுவு குளத்தில் தண்ணீர் பாய்வதை பார்த்து விவசாயிகளும், அந்த பகுதி பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.

நன்றி - தினத்தந்தி




புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4624
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Mon Oct 22, 2018 11:22 am

22 -10 -2018 குளத்தின் காலை 10 மணி நிலவரம் ...

முருங்கத்தொழுவு குளம் AlqfWS33Sze9y8YEWQTV+WhatsAppImage2018-10-22at9.39.13AM

21 -10 -2018 மாலை :
முருங்கத்தொழுவு குளம் MQLGb0ZbTs6ucoQ39BTx+WhatsAppImage2018-10-21at4.27.34PM



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
https://www.eegarai.net

Postராஜா Mon Oct 22, 2018 11:47 am

அருமை தம்பி , தமிழகத்திற்கே முன்னுதாரணமாக ஆகியிருக்கிறது உங்க கிராமம்.

கிராமத்தில் இருந்து படித்து பெருநகரங்களில் செட்டில் ஆகிவிட்டால் போதும் என்று இருக்கும் இன்றைய தலைமுறையினருக்கு நீயும் உன் நண்பர்களும் நல்ல ஒரு அறிவுரை வழங்கியுள்ளீர்கள்

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4624
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Mon Oct 22, 2018 11:52 am

நன்றி அண்ணா ... இதன் அனைத்து பெருமைகளும் விஷ்ணு உழவர் மன்றம் மற்றும் முருங்கத்தொழுவு ஊர் பொதுமக்கள் அனைவரையும் சாரும் ... இதில் நானும் ஒருவனே என்பதில் மகிழ்ச்சியே அண்ணா ..



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Oct 23, 2018 12:50 pm

ரா.ரமேஷ்குமார் wrote:நன்றி அண்ணா ... இதன் அனைத்து பெருமைகளும் விஷ்ணு உழவர் மன்றம் மற்றும் முருங்கத்தொழுவு ஊர் பொதுமக்கள் அனைவரையும் சாரும் ... இதில் நானும் ஒருவனே என்பதில் மகிழ்ச்சியே அண்ணா ..
மேற்கோள் செய்த பதிவு: 1282399
நல்லதொரு திட்டத்திற்கு உறுதுணையாக இருந்துள்ளீர்கள்
வாழ்த்துக்கள் ரமேஷ் நன்றி.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91237
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 23, 2018 3:09 pm


அமைச்சர் செல்லூர் ராஜு வரவில்லையே முருங்கத்தொழுவு குளம் 2754



முருங்கத்தொழுவு குளம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4624
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Tue Oct 23, 2018 7:04 pm

இல்லை இல்லை அண்ணா ... அவர் வரவில்லை ... முருங்கத்தொழுவு குளம் 1f609



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
poovizhi
poovizhi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 21
இணைந்தது : 22/07/2011

Postpoovizhi Tue Nov 20, 2018 7:59 pm

தற்போது உள்ள நிலையை பதிவிடுங்கள்  !!!

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக