புதிய பதிவுகள்
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீங்களும் உங்க வேலையும்.... Poll_c10நீங்களும் உங்க வேலையும்.... Poll_m10நீங்களும் உங்க வேலையும்.... Poll_c10 
87 Posts - 56%
heezulia
நீங்களும் உங்க வேலையும்.... Poll_c10நீங்களும் உங்க வேலையும்.... Poll_m10நீங்களும் உங்க வேலையும்.... Poll_c10 
55 Posts - 36%
mohamed nizamudeen
நீங்களும் உங்க வேலையும்.... Poll_c10நீங்களும் உங்க வேலையும்.... Poll_m10நீங்களும் உங்க வேலையும்.... Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
நீங்களும் உங்க வேலையும்.... Poll_c10நீங்களும் உங்க வேலையும்.... Poll_m10நீங்களும் உங்க வேலையும்.... Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
நீங்களும் உங்க வேலையும்.... Poll_c10நீங்களும் உங்க வேலையும்.... Poll_m10நீங்களும் உங்க வேலையும்.... Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
நீங்களும் உங்க வேலையும்.... Poll_c10நீங்களும் உங்க வேலையும்.... Poll_m10நீங்களும் உங்க வேலையும்.... Poll_c10 
1 Post - 1%
rajuselvam
நீங்களும் உங்க வேலையும்.... Poll_c10நீங்களும் உங்க வேலையும்.... Poll_m10நீங்களும் உங்க வேலையும்.... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீங்களும் உங்க வேலையும்.... Poll_c10நீங்களும் உங்க வேலையும்.... Poll_m10நீங்களும் உங்க வேலையும்.... Poll_c10 
27 Posts - 90%
T.N.Balasubramanian
நீங்களும் உங்க வேலையும்.... Poll_c10நீங்களும் உங்க வேலையும்.... Poll_m10நீங்களும் உங்க வேலையும்.... Poll_c10 
2 Posts - 7%
mohamed nizamudeen
நீங்களும் உங்க வேலையும்.... Poll_c10நீங்களும் உங்க வேலையும்.... Poll_m10நீங்களும் உங்க வேலையும்.... Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீங்களும் உங்க வேலையும்....


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Apr 05, 2017 2:17 pm

ஹாய் தருண்... என்ன இது...'' என, கண்கள் விரிய, கேட்டாள், மனிதவளத் துறை என அழைக்கப்படும் ஹெச்.ஆர்., மேனேஜர். பெரிய தொழிற்சாலைகள், அலுவலகங்களில் இத்துறை உண்டு.

எப்படித் தான் இவளுக்கு சாத்தியமாகிறதோ தெரியவில்லை, முந்தைய நொடி வரை, 'ஹாய் மச்சான்...' என புன்னகை வழிய பேசிக்கொண்டிருப்பவள், அடுத்த நொடி, 'இன்னையோட நீங்க வீட்டுக்கு கிளம்பலாம்...' என்று கடிதத்தை நீட்டி விடுவாள்.

இவள் மட்டுமல்ல, ஹெச்.ஆர்., துறையிலிருக்கும் அனைவருக்குமே, இது கை வந்த கலை. இந்த வேலைக்கு ஆண்களை வைத்தால், இது போன்ற கல்தா கடுதாசி நீட்டும் சமயங்களில், கைகலப்பாகி விடும் என்பதாலேயே, அழகான, மலங்க மலங்க விழித்தபடி, ஹஸ்கி குரலில் பேசும் பெண்களை, குறிப்பாக, கல்யாணமாகாத இளம் பெண்களை தேடிப்பிடித்து வேலைக்கு அமர்த்துவர். அதுவும், தமிழ் தெரியாத வெளி மாநிலத்து பெண்கள் என்றால் இன்னும் சவுகர்யம்!

நேற்றிரவு நண்பன் நரேஷ், 'மச்சான்... இவனுங்க என்னை, திடீரென வீட்டுக்கனுப்புனத விட, அந்த ஹெச்.ஆர்., மேனேஜர், டிஸ்மிஸ் லெட்டரை நீட்டும் போது, 'ஆல் தி பெஸ்ட் அண்ணா'ன்னு சொல்லிட்டா மச்சி...' என, புலம்பி, கண்ணீர் விட்டான்.

அவனை சமாதானப்படுத்திய போது, 'டேய் என்ன அழவிடுடா... ஒரு பொண்ணு கையால, 'டிஸ்மிஸ்' ஆர்டர் வாங்கி பார்த்தவனுக்குத்தான் அதோட வலியும், வேதனையும் தெரியும். போன ஆபீஸ்லயும் இப்படித்தான் செய்தானுங்க. இவனுங்க வேணும்ன்னே தான் இந்த வேலைக்கு பொண்ணுகள போடுறானுங்க... ரூம்போட்டு பல நாட்கள் யோசிச்சுதாண்டா இப்படி ஒரு வியூகம் வகுத்திருக்கானுங்க...' என்ற போது, ஒரு பக்கம் பாவமாகவும், கொஞ்சம் காமெடியாக இருந்தாலும், அவனது கண்டுபிடிப்பு, சரி என்றே தோன்றியது.

'அந்த, ஹெச்.ஆர்., மட்டும் ஆம்பளையா இருந்திருக்கணும்... அப்ப தெரிஞ்சிருக்கும் என்னைப் பத்தி...' என்று தமிழிலும், ஆங்கிலத்திலும் கெட்ட வார்த்தைகளால் திட்டி தீர்த்தான்.
ஒரு வழியாக ஓய்ந்து, ஒரு புல் பாட்டிலையும் குடித்து கவிழ்த்த பின், 'என்னடா, இப்படி செய்துட்டானுங்களேடா...' என, அதுவரை அடக்கி வைத்திருந்த சுய பச்சாதாபத்தையும், அடுத்து என்ன செய்ய போகிறோம் என்ற பயத்தையும் கட்டுப்படுத்த முடியாமல், வாய் விட்டு அழத் துவங்கியவனை ஆறுதல் சொல்லி, தேற்றி என் அறைக்கு அழைத்து வருவதற்குள், போதும் போதும் என்றாகி விட்டது.

'என்ன நடக்கிறது இந்த சனியன் பிடித்த மென்பொருள் துறை எனப்படும் ஐ.டி., கம்பெனிகளில்... கன்சல்டன்சி, பி.பி.ஒ., கால் சென்டர் என, வகைக்கொரு பெயராக வைத்து, லட்சோப லட்ச இளைஞர்களை கசக்கி பிழிந்து, வாழ்க்கையை துவக்கும் முன், 'நீ வாழவே லாயக்கில்ல'ன்னு முத்திரை குத்தி, துரத்தி விடுகின்றனரே... தூக்கத்திற்கு கெஞ்சும், ஒடுங்கிய கண்கள், முன் வழுக்கை, கூன் நடை என, 30 வயதிலேயே, 70 வயதுக்காரனைப் போல் அல்லவா இருக்கிறான் சாப்ட்வேர் துறையில் வேலை பார்ப்பவன்!

முதல் மாத சம்பளத்தில், பெருமையாக வாங்கிய ஸ்மார்ட் போனிலிருந்து மணியடித்தாலே, 'நீ இன்னையோட வீட்டுக்கு கிளம்பலாம்'ன்னு வந்திருக்கும் மெயிலோ என, நள்ளிரவிலும் பதறியடித்து போனை எடுத்து வெறிப்பவனுக்கு, எங்கிருந்து வரும் தூக்கமும், குழந்தையும்? 'கல்யாணமாகி ஆறு வருஷம் ஆச்சு... இன்னும் குழந்தை இல்ல...' என டாக்டர் வீட்டு வாசலிலும், 'ஸ்டிமுலேஷன்லயே ப்ராப்ளம் சார்...' என செக்ஸாலஜிஸ்ட்கள் க்ளினிக்கிலும் தவம் கிடக்கும் ஐ.டி., தம்பதிகளின் எண்ணிக்கை நீளுகிறதே...

அவனுக்கென்னப்பா... புருஷன், பொண்டாட்டி ரெண்டு பேருக்கும் ஐ.டி.,யில வேலை...' என பெருமூச்சு விடுவோருக்கு தெரியுமா... குழந்தை பெத்துட்டு வர்றதுக்குள்ள, 'உங்கள் சேவை இனி எங்களுக்கு தேவையில்லை' என்ற மெயில் டெலிவரியாகிடுமோ என்ற பயத்தில், குழந்தை பிறப்பை தள்ளிப்போடும் ஐ.டி., மனைவிகளின் பயமும், பதட்டமும்!

பிரிஜ்லிருந்து ஐஸ் வாட்டரை மடமடவென தொண்டைக்குள் கவிழ்த்து, கம்ப்யூட்டர் முன் அமர்ந்தேன். வார்த்தைகளைக் கோர்த்து, அந்த கடிதத்தை டிசைன் செய்து முடித்து பிரின்ட் எடுத்து, கவரில் வைத்து முடிப்பதற்கும் மணி, 7:00 அடிப்பதற்கும் சரியாயிருந்தது.
'இன்னைக்கு முழுவதும் நரேஷ் தூங்கிக் கொண்டு தான் இருப்பான்; பாவம் நிம்மதியா தூங்கட்டும்...' மனதிற்குள் நினைத்தபடி, வெளிக் கதவை பூட்டி, கிளம்பினேன்.
''என்னாச்சு மிஸ்டர் தருண்?'' கொஞ்சம் குரலை உயர்த்திக் கேட்டாள், ஹெச்.ஆர்., மானேஜர்.
''இது என் ரெசிக்னேஷன் லெட்டர்!''

தொடரும்........



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Apr 05, 2017 2:19 pm

அதிர்ச்சியும், ஆச்சரியமும் கலந்த முக பாவனையுடன், என் ராஜினாமா கடிதத்தை வாங்கினாள். வாழ்க்கையிலேயே முதன் முதலாக இப்போது தான் ஒருவன், வேலையை விட்டுத் துரத்தப்படாமல், தானாக, வேலையை தூக்கி எறிவதை பார்க்கிறாள்.

''ஹேய்... நீ இப்ப எலிஜிபிள், 'சி' லிஸ்ட்ல இருக்க! அடுத்த மாசம், 'பி' கேட்டகரிக்கு ப்ரமோட் ஆகப் போற...'' என்றாள்.

சாப்ட்வேர் துறை ஊழியர்களை, அவர்கள் வேலை செய்யும் திறனுக்கேற்ப, ஏ.பி.சி.டி.இ., என, தரம் பிரிப்பர். அச்சமயங்களில், அலுவலகமே அல்லோ கல்லோலப்படும். ஒவ்வொருவரும், அடுத்தவன் எந்த பிரிவிற்குள் வந்திருக்கிறான் என, தெரிந்து கொள்ள ஆவலாய் இருப்பர்.

''இப்ப எலிஜிபிள் கேட்டகரியில இருக்கற நான், எந்த நிமிடம், 'நான் எலிஜிபிள்' கேட்டகரிக்கு வருவேன்னு சொல்ல முடியாதே,'' என்றேன் கிண்டலாக!

அசட்டு புன்னகையுடன், தலையை தாழ்த்தினாள் ஹெச்.ஆர்., மானேஜர்.என் நினைவுகள் இரண்டு ஆண்டுகளுக்கு முன் நகர்ந்தது.

மே, 11, 2013 — என் நிறுவனம், நான் செய்து கொண்டிருக்கும் வேலை, அதன் சூழல், எத்தகைய அதல பாதாளத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்ற நிதர்சனத்தை, முதன் முதலாக மிக கொடூரமாக உணர வைத்த நாள் அது!

மூன்று மாதங்களுக்கு முன், வேலையை விட்டு துரத்தப்பட்ட இளங்கோவை, எதேச்சையாக பாண்டிச்சேரி கடற்கரையில் சந்தித்த போது, மிகவும் நம்பிக்கையுடன் தான், அக்கேள்வியை கேட்டேன்.

'ஹாய்டா மச்சான்... என்ன, புதுச்சேரியில் வேலை கிடைச்சிடுச்சா... இனிமே, எப்படா வீக் எண்ட் வரும், 'என்ஜாய்' செய்ய புதுச்சேரிக்கு போகலாம்ன்னு ஏங்க வேண்டியதில்ல. தினம் தினம் கொண்டாட்டம் தான்...' என்று, நான் உற்சாகமாய் கூற, இளங்கோவின் கண்களிலோ, தாரை, தாரையாய் கண்ணீர்!
உதடுகள் கோண, அழுதவனை தேற்ற முடியவில்லை.

'காசு இல்லேன்னா, தூரத்து உறவுகள் இன்னும் தூரமாகப் போகும்; நண்பர்கள் பறந்துருவாங்கன்னு தான் கேள்விப்பட்டிருக்கேன். ஆனா, கட்டின பொண்டாட்டி ஓடிப் போவாளாடா...' என்றான் ஆற்றாமையுடன்!
திடுக்கிட்டு நிமிர்ந்தேன். அவன் காதல் திருமணத்தை நடத்தி வைத்த சாட்சிகளில் நானும் ஒருவன்.
'என்னடா சொல்றே...' என்றேன் அதிர்ச்சியுடன்!

'வேலை போயிடுச்சுன்னு தெரிஞ்ச அடுத்த நிமிடத்திலிருந்து ஒரே சண்டை!
'நீ உண்மையான ஆம்பளையாயிருந்தா, ஆறு மாசத்துக்குள்ள இதே சம்பளத்துல ஒரு வேலையத் தேடு; அது வரைக்கும் என்னைத் தேடவோ, பேசணும்ன்னோ முயற்சிக்காத... என் போன நான், 'சுவிட்ச் ஆப்' செய்துடுவேன். சரியா ஆறு மாசம் ஆனதும், நானே போன் செய்றேன். அப்ப, உன் நிலைமையைப் பொறுத்து, நாம திரும்ப ஒண்ணா சேர்ந்து வாழலாமா, வேணாமான்னு யோசிப்போம்'ன்னு சொல்லிட்டு, நான் ஆசையா வாங்கித் தந்த நகை, துணிமணி எல்லாத்தையும் எடுத்துட்டுப் போயிட்டா...

'என் மேலயே எனக்கு வெறுப்பாயிருக்குடா. எனக்காக ஒருத்தி, என்னை விரும்பலங்கறத என்னால தாங்கிக்கவே முடியல.'ஆனா, மச்சான்... இன்னையோட எனக்கு எல்லாத்திலேர்ந்தும் விடுதல...' என்றவன், 'ஒரு பாட்டில் தூக்க மாத்திரைய விழுங்கிட்டுத் தான், இங்க வந்து உட்கார்ந்திருக்கேன்...' என்றான்.

அப்போது தான், அவன் கையிலிருந்த தண்ணீர் பாட்டிலையும், அவன் வார்த்தைகள் குழறுவதையும் கவனித்தேன். நெஞ்சம் பதற, 'ஐயோ... யாராவது இங்க வாங்களேன்... ஆட்டோ, டாக்சி...' பயத்திலும், பதட்டத்திலும் எனக்கு வார்த்தைகள் தடுமாறின.நான் சற்றும் எதிர்பாராத நேரத்தில், வெறி பிடித்தாற் போல, தடதடவென கடலை நோக்கி ஓடியவன், என் கண் முன்பே கடலுக்குள் போய் விட்டான்.

முதன் முதலில், எனக்கு மிக நெருக்கமான ஒருவரின் மரணத்தை, கண்கூடாகப் பார்த்ததுடன், அதற்கு காரணமான சாப்ட்வேர் நிறுவன அலுவலக சூழலின் இன்னுமொரு பக்கத்தை நினைத்து, உறைந்து போனேன்.

தொடரும்...........



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Apr 05, 2017 2:20 pm

தொடர்ந்து, ஜூன், 8, 2014ல் நடந்த சம்பவம், என்னை மேலும் உலுக்கி விட்டது.

மில்லி மீட்டருக்கு மேல் நீளாத அளவெடுத்த புன்னகைகளுக்கு மத்தியில், வாய் விட்டு சிரிக்கும் ஒரே ஆத்மா, கதிர்; திருப்பூர்காரர். அவரை நாங்கள், 'தொப்பை அங்கிள்' என்று தான் செல்லமாக கூப்பிடுவோம். சாப்ட்வேர் துறையில் தானும் ஒரு அங்கமென நினைத்து, புல்லரித்து ஆனந்தப்படும் ஜீவன்.

'எங்க பரம்பரையிலேயே இவ்வளவு காசை, மாச சம்பளமா மொத்தமா பார்க்கற ஒரே ஆள் நான்தாம்ப்பா...' என, 38 ஆயிரம் ரூபாய் சம்பளத்தைப் பற்றி, வாய் ஓயாமல் சொல்வார். சம்பளத்தில் பாதியை ஊருக்கு அனுப்பிவிட்டு, சென்னையில் மேன்ஷன் வாழ்க்கை. பெரும்பாலான நாட்கள் இவர் சம்பளத்தில் தான், 'ரூம் மேட்ஸ்' அத்தனை பேருக்கும் சாப்பாடு.

அன்று, பதவி நீக்க கடிதத்துடன் வந்தவரின் கண்களில், முதன் முறையாக கண்ணீரைப் பார்த்தேன்; என் அடி வயிறு கலங்கியது.

என் கைகளை இறுக பிடித்தவர், 'இந்த மாசம் அப்பாவுக்கு ஆப்ரேஷன் செய்யணும்; பொண்ணுக்கு இப்ப தான் வரன் வந்திருக்குன்னு மனைவி போன் செய்து சொன்னா... பையனுக்கு இன்னும், 10 நாளைக்குள்ள பீஸ் கட்டணும்...' என அவர் பேச பேச, அவரின் கைகள் வழியாக, அவரின் உணர்வுகள், என் கைகளுக்குள் படர்ந்து தகித்தன.

அவர் அலுவலகத்தை விட்டு வெளியே செல்லும்போது, மதியம், 12:10; மாலை, 6:18க்கு அவர் அறை நண்பனிடமிருந்து எங்களுக்கு குறுந்தகவல் வந்தது. அதில், 'தொப்பை அங்கிள் கமிடட் சூசைட்.!'
நான் என்னைப் பற்றியும், என் அலுவலக சூழலைப் பற்றியும், என் நிலையைக் குறித்தும் நினைத்து, உறைந்து போன மற்றுமொரு தருணம் இது!

வேலை என்ற பெயரில் நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன்... கீழை நாட்டு மனித உயிர்களையும், உணர்வுகளையும் துச்சமாக மதிக்கும், உலகின் எங்கோ ஒரு மூலையிலிருக்கும், பணம் கொழுத்த முதலைகளுக்கு சேவை செய்யவா நான் பிறப்பெடுத்தேன்... இதனால், எனக்கோ, நான் சார்ந்திருக்கும் சமூகத்திற்கோ ஒரு துளியேனும் பயனிருக்கிறதா... எம்.என்.சி.,யில் வேலை, சாப்ட்வேர் சம்பாத்தியம் என்று வெளியில் தம்பட்டம் அடித்து, இப்படி தினம் தினம் செத்துக் கொண்டிருப்பதை விட, ஒரு மானங்கெட்ட பிழைப்பு இருக்க முடியுமா?

அடுத்து வந்த மாதங்களில் மிகத் தீவிரமாக சிந்தித்து, இயற்கை விவசாயி நம்மாழ்வாரின் அமைப்பில் உள்ள ஒருவரை சந்தித்த போது, என் மனதிற்குள் விதைத்த விதை தான், 'எவர்க்ரீன் டெவலப்பர்ஸ்!' பொன் விளையும் பூமியான தஞ்சை விவசாயிகளை ஒருங்கிணைத்தேன்.

அத்துடன், சாப்ட்வேர் துறையில், எவனெவனுடைய நிறுவனங்களுக்காகவோ கொட்டக் கொட்ட விழித்து நான் உருவாக்கிய, 'புரோக்கிராமிங்' அறிவையும், 'கஸ்டமர் கேர் சர்வீஸ்' என்ற பெயரில், வீடு துடைக்கும் மிஷினையும், மூடைத் தூண்டும் மாத்திரையையும் விற்று, அவை சரியாக வேலை செய்யாத கடுப்பில், போனில் அவர்கள் கழுவிக் கழுவி ஊற்றும் மலிவான வார்த்தைகளை, ஏதோ ஆசீர்வாதம் போல் புன்னகையுடன் பெற்று கொள்வதையே தினசரி பிழைப்பாக கொண்டுள்ள இன்னும் சில நண்பர்களின் மார்க்கெட்டிங் திறமையையும், நம் நாட்டின் வளர்ச்சிக்காகப் பயன்படுத்த, திட்டமிட்டு விட்டேன்.

''ஆனா தருண்... நீங்க நோட்டீஸ் கொடுக்கணுமே...'' என்றாள், ஹெச்.ஆர்., மேனேஜர்.
''இதுக்கு முன் வேலை பாத்தவங்கள, வேலையை விட்டு துரத்தும் போது, நீங்க நோட்டீஸ் கொடுத்தீங்களா...''

''ரெண்டு மாச சம்பளத்தை கொடுத்தோமே...''

''நான், என் மூணு மாச சம்பளத்தை, உங்க கம்பெனிக்கு தர்றேன்னு மேனேஜர் கிட்ட போய் சொல்லுங்க,'' என்றேன்.

வாயைப் பிளந்தபடி, என்னை ஆச்சர்யமாய் பார்த்தாள், ஹெச்.ஆர்., மேனேஜர்.
''தருண்... இப்ப நீங்க பார்த்திட்டிருக்கிற புராஜெக்டோட மூளையே நீங்க தான்; இப்படி திடீர்ன்னு விட்டுட்டுப் போனீங்கன்னா, கம்பெனிக்கு எவ்வளவு நஷ்டம்ன்னு யோசிச்சீங்களா...'' என்றாள்.
என் கண் முன், நவீன், இளங்கோ, கதிர் அங்கிள் வந்து போக, வார்த்தைகள் என் கட்டுப்பாட்டை மீறி வெடித்துச் சிதறின.

''உங்க முதலாளியோட லாபத்தை விட, எனக்கு, மனுஷனோட உயிர் முக்கியம்,'' என்றபடி திரும்பிப் பார்க்காமல், வாசலை நோக்கி வேகமாக நடந்தேன்.

எதுவும் புரியாமல், குழப்பத்துடன், நான் போவதையே பார்த்துக் கொண்டிருந்தாள் ஹெச்.ஆர்., மேனேஜர்!

சி.ஆர்.செலின்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக