புதிய பதிவுகள்
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm

» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஐ.பி.எல் -2018 !!  - Page 10 Poll_c10ஐ.பி.எல் -2018 !!  - Page 10 Poll_m10ஐ.பி.எல் -2018 !!  - Page 10 Poll_c10 
43 Posts - 49%
ayyasamy ram
ஐ.பி.எல் -2018 !!  - Page 10 Poll_c10ஐ.பி.எல் -2018 !!  - Page 10 Poll_m10ஐ.பி.எல் -2018 !!  - Page 10 Poll_c10 
31 Posts - 36%
prajai
ஐ.பி.எல் -2018 !!  - Page 10 Poll_c10ஐ.பி.எல் -2018 !!  - Page 10 Poll_m10ஐ.பி.எல் -2018 !!  - Page 10 Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
ஐ.பி.எல் -2018 !!  - Page 10 Poll_c10ஐ.பி.எல் -2018 !!  - Page 10 Poll_m10ஐ.பி.எல் -2018 !!  - Page 10 Poll_c10 
3 Posts - 3%
Jenila
ஐ.பி.எல் -2018 !!  - Page 10 Poll_c10ஐ.பி.எல் -2018 !!  - Page 10 Poll_m10ஐ.பி.எல் -2018 !!  - Page 10 Poll_c10 
2 Posts - 2%
jairam
ஐ.பி.எல் -2018 !!  - Page 10 Poll_c10ஐ.பி.எல் -2018 !!  - Page 10 Poll_m10ஐ.பி.எல் -2018 !!  - Page 10 Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
ஐ.பி.எல் -2018 !!  - Page 10 Poll_c10ஐ.பி.எல் -2018 !!  - Page 10 Poll_m10ஐ.பி.எல் -2018 !!  - Page 10 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஐ.பி.எல் -2018 !!  - Page 10 Poll_c10ஐ.பி.எல் -2018 !!  - Page 10 Poll_m10ஐ.பி.எல் -2018 !!  - Page 10 Poll_c10 
1 Post - 1%
M. Priya
ஐ.பி.எல் -2018 !!  - Page 10 Poll_c10ஐ.பி.எல் -2018 !!  - Page 10 Poll_m10ஐ.பி.எல் -2018 !!  - Page 10 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஐ.பி.எல் -2018 !!  - Page 10 Poll_c10ஐ.பி.எல் -2018 !!  - Page 10 Poll_m10ஐ.பி.எல் -2018 !!  - Page 10 Poll_c10 
86 Posts - 60%
ayyasamy ram
ஐ.பி.எல் -2018 !!  - Page 10 Poll_c10ஐ.பி.எல் -2018 !!  - Page 10 Poll_m10ஐ.பி.எல் -2018 !!  - Page 10 Poll_c10 
31 Posts - 22%
mohamed nizamudeen
ஐ.பி.எல் -2018 !!  - Page 10 Poll_c10ஐ.பி.எல் -2018 !!  - Page 10 Poll_m10ஐ.பி.எல் -2018 !!  - Page 10 Poll_c10 
7 Posts - 5%
prajai
ஐ.பி.எல் -2018 !!  - Page 10 Poll_c10ஐ.பி.எல் -2018 !!  - Page 10 Poll_m10ஐ.பி.எல் -2018 !!  - Page 10 Poll_c10 
6 Posts - 4%
Jenila
ஐ.பி.எல் -2018 !!  - Page 10 Poll_c10ஐ.பி.எல் -2018 !!  - Page 10 Poll_m10ஐ.பி.எல் -2018 !!  - Page 10 Poll_c10 
4 Posts - 3%
Rutu
ஐ.பி.எல் -2018 !!  - Page 10 Poll_c10ஐ.பி.எல் -2018 !!  - Page 10 Poll_m10ஐ.பி.எல் -2018 !!  - Page 10 Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
ஐ.பி.எல் -2018 !!  - Page 10 Poll_c10ஐ.பி.எல் -2018 !!  - Page 10 Poll_m10ஐ.பி.எல் -2018 !!  - Page 10 Poll_c10 
2 Posts - 1%
Baarushree
ஐ.பி.எல் -2018 !!  - Page 10 Poll_c10ஐ.பி.எல் -2018 !!  - Page 10 Poll_m10ஐ.பி.எல் -2018 !!  - Page 10 Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26
ஐ.பி.எல் -2018 !!  - Page 10 Poll_c10ஐ.பி.எல் -2018 !!  - Page 10 Poll_m10ஐ.பி.எல் -2018 !!  - Page 10 Poll_c10 
1 Post - 1%
jairam
ஐ.பி.எல் -2018 !!  - Page 10 Poll_c10ஐ.பி.எல் -2018 !!  - Page 10 Poll_m10ஐ.பி.எல் -2018 !!  - Page 10 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐ.பி.எல் -2018 !!


   
   

Page 10 of 11 Previous  1, 2, 3 ... , 9, 10, 11  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82018
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Apr 08, 2018 3:35 am

First topic message reminder :

ஐ.பி.எல் -2018 !!  - Page 10 Tamil_News_large_1995323
-
மும்பை:
ஐ.பி.எல்., தொடரின் மும்பை அணிக்கு எதிரான முதல்
போட்டியில் சென்னை அணி, 1 விக்கெட் வித்தியாசத்தில்
வெற்றி பெற்றது.

இந்தியாவில் ஐ.பி.எல்., உள்ளூர் 'டுவென்டி-20' தொடரின்
11வது சீசன் துவங்கியது. மும்பை வான்கடே மைதானத்தில்
முதல் போட்டி நடந்தது.

மும்பை அணி, 20 ஓவரில், 4 விக்கெட்டுக்கு 165 ரன்கள் எடுத்தது.
அடுத்து களமிறங்கிய சென்னை அணி, 19.5 ஓவரில்
9 விக்கெட்டுக்கு, 169 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
-
------------------------------
தினமலர்
-



ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82018
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat May 12, 2018 10:44 am

பரபரப்பான கடைசி ஓவரில் சென்னையை வீழ்த்தியது ராஜஸ்தான்
-
ஐ.பி.எல் -2018 !!  - Page 10 Josputler
-
பரபரப்பான கடைசி ஓவரில் ராஜஸ்தான் அணி 4 விக்கெட்
வித்தியாசத்தில் சென்னையை வென்றது. அந்த அணியின்
தொடக்க வீரர் ஆட்டமிழக்காமல் 95 ரன்களை குவித்து
வெற்றிக்கு வித்திட்டார்.

சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு
இடையிலான ஐபிஎல் 43-வது ஆட்டம் வெள்ளிக்கிழமை இரவு
ஜெய்ப்பூரில் நடைபெற்றது.

முன்னதாக டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங்கை தேர்வு
செய்தது. ஷேன் வாட்சன், அம்பட்டி ராயுடு ஆகியோர்
தொடக்க வீரர்களாக களமிறங்கினர். ஆட்டத்தின்
தொடக்கத்திலேயே இருவரும் அதிரடி ஆட்டத்தை மேற்
கொண்டனர்.

2 பவுண்டரியுடன் 12 ரன்களை எடுத்த ராயுடு, ஆர்ச்சர் பந்தில்
போல்டானார்.

39 ரன்களை எடுத்த வாட்சன், ஆர்ச்சர் பந்துவீச்சில் பட்லரிடம்
கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

அதிரடியாக ஆடிய ரெய்னா 1 சிக்ஸர், 6 பவுண்டரியுடன்
35 பந்துகளில் 52 ரன்களுடன் சோதி பந்துவீச்சில் பின்னியிடம்
கேட்ச் தந்து ஆட்டமிழந்தார்.

19.3-வது ஓவரில் பில்லிங்ஸ் 27 ரன்கள் எடுத்த நிலையில் ரன்
அவுட்டானார்.

23 பந்துகளில் 33 ரன்களுடன் தோனியும்,
1 ரன்னுடன் பிராவோவும் இறுதி வரை ஆட்டமிழக்காமல்
இருந்தனர். 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு சென்னை
அணி 176 ரன்களை எடுத்தது.

ராஜஸ்தான் தரப்பில் ஆர்ச்சர் 2 விக்கெட்டையும், சோதி
1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான்
அணி தரப்பில் ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ் தொடக்க
வீரர்களாக களமிறங்கினர்.

11 ரன்களில் ஸ்டோக்ஸ் வீழ்ந்தார். அவரைத் தொடர்ந்து
கேப்டன் ரஹானே 4, சஞ்சு சாம்சன் 21, பிரசாந்த் சோப்ரா
8 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.

ஸ்டுவர்ட் பின்னி 22 ரன்களுக்கு பிராவோ பந்தில்
ஆட்டமிழந்தார்.

அவருக்கு பின் வந்த கிருஷ்ணப்ப கெளதம் 2 சிக்ஸர் உள்பட
3 பந்துகளில் 13 ரன்கள் அடித்து வில்லி பந்தில் தோனியிடம்
கேட்ச் தந்து வெளியேறினார்.

தொடக்க வீரர் பட்லர் 2 சிக்ஸர், 11 பவுண்டரியுடன்
60 பந்துகளில் 95 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல்
இருந்தார். கடைசி ஓவரில் பட்லர் சிக்ஸர் அடித்து அணியை
வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

இறுதியில் ராஜஸ்தான் 19.5 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு
177 ரன்களை எடுத்து வென்றது.

சென்னை தரப்பில் வில்லி, ஹர்பஜன், ஜடேஜா, தாகுர்,
பிராவோ ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.
-
--------------------------------------
தினத்தந்தி

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sun May 13, 2018 9:36 pm

புனே: ஐதராபாத் அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் ராயுடு அதிரடி சதம் கைகொடுக்க சென்னை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.
இந்தியாவில் 11வது ஐ.பி.எல்., 'டுவென்டி-20' தொடர் நடக்கிறது. இன்று புனேயில் நடக்கும் லீக் போட்டியில் சென்னை, ஐதராபாத் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற சென்னை அணி கேப்டன் தோனி 'பவுலிங்' தேர்வு செய்தார். சென்னை அணியில் கரண் சர்மாவுக்குப்பதில் சகார் வாய்ப்பு பெற்றார். ஐதராபாத் அணியில் யூசுப் பதானுக்கு பதில் தீபக் ஹூடா இடம்பிடித்தார்.

தவான் அரை சதம் :
ஐதராபாத் அணிக்கு ஹேல்ஸ் (2) சொதப்பினார். பின், இணைந்த ஷிகர் தவான், கேப்டன் வில்லியம்சன் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஜடேஜா பந்தை சிக்சருக்கு பறக்கவிட்ட தவான் அரை சதம் அடித்தார். வில்லியம்சன் ஐ.பி.எல்., அரங்கில் 10வது அரை சதம் எட்டினார். பிராவோ பந்தில் தவான் (79) அவுட்டானார். வில்லியம்சன் 51 ரன்களில் ஆட்டமிழந்தார்.
ஷர்துல் தாகூர் 'வேகத்தில்' மணிஷ் பாண்டே (5) திரும்பினார். முடிவில், ஐதராபாத் அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 179 ரன்கள் எடுத்தது. தீபக் ஹூடா (21), சாகிப் (8) அவுட்டாகாமல் இருந்தனர். சென்னை அணி சார்பில் அதிகபட்சமாக தாகூர் 2 விக்கெட் வீழ்த்தினார்.
ஐ.பி.எல் -2018 !!  - Page 10 Gallerye_201433259_2020373
அபார துவக்கம்:
சென்னை அணிக்கு ராயுடு, வாட்சன் அசத்தல் துவக்கம் தந்தனர். பவுண்டரி சிக்சர்களாக விளாசிய இருவரும் முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்தனர். அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்திய வாட்சன், 3 சிக்சர், 5 பவுண்டரிகளுடன் அரைசதம் விளாசினார். ஒரு ரன்னுக்கு ஆசைப்பட்ட வாட்சன்(57), தேவையில்லாமல் ரன் அவுட் ஆனார். ரெய்னா(2) நிலைக்கவில்லை.

சரவெடி ராயுடு:
பின் தோனி களமிறங்க, ஆட்டத்தில் அனல் பறந்தது. இத்தொடரில் தொடர்ந்து ரன் குவித்து வரும் ராயுடு, இப்போட்டியிலும் ஏமாற்றவில்லை. 62 பந்தில் 7 பவுண்டரி, 7 சிக்சர்களுடன் சதம் விளாசிய ராயுடு, இந்த 'சீசனில்' வாட்சன் (சென்னை), கெய்ல் (பஞ்சாப்), ரிஷாப்பிற்குப்பின் (டில்லி) சதம் அடித்த 4வது வீரரானார்.
முடிவில், சென்னை அணி 19 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ராயுடு (100), தோனி (20) அவுட்டாகாமல் இருந்தனர்.
நன்றி - தினமலர்


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82018
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue May 15, 2018 2:43 am

இந்த வெற்றியின் மூலம் சென்னை
அணி தனது பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை உறுதி செய்தது.

ஹைதராபாத் அணியும் ஏற்கெனவே பிளே ஆஃப் சுற்றுக்குள்
நுழைந்து விட்டது குறிப்பிடத்தக்கது.
-
---------------------------------
தினமணி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82018
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon May 21, 2018 2:10 pm

டெல்லியிடம் தோல்வி அடைந்து வெளியேறியது மும்பை
-
ஐ.பி.எல் -2018 !!  - Page 10 1526827639-2383
-
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 55வது போட்டியான
இன்றைய முதல் போட்டி மும்பை அணிக்கு மிகவும்
முக்கியமான போட்டியாக இருந்தது.

இந்த போட்டியில் வெற்றி பெறவில்லை என்றால் வெளியேறும்
நிலை இருந்த நிலையில் டெல்லி அணியிடம் 11 ரன்கள்
வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதனால் அந்த
அணியால் பிளே ஆப் சுற்றுக்கு செல்ல முடியாத நிலை
ஏற்பட்டுள்ளது.

டெல்லி மற்றும் மும்பை அணியின் ஸ்கோர் விபரம்:

டெல்லி அணி: 174/4
20 ஓவர்கள்

ஆர்.ஆர்.பேண்ட்: 64
விஜய் சங்கர்:44

மும்பை அணி: 163/10 19.3 ஓவர்கள்

லீவிஸ்: 48
கட்டிங்:
ஆட்டநாயகன்:
அமித் மிஸ்ரா

இந்த வெற்றியின் மூலம் டெல்லி அணி 5 வெற்றிகள் பெற்று
10 புள்ளிகளுடன் இருந்தாலும், பிளே ஆப் சுற்றுக்கு தகுதி
பெறவில்லை என்பது மட்டுமின்றி புள்ளிப்பட்டியலில் கடைசி
இடத்தில் உள்ளது.
-
------------------------------------
வெப்துனியா

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82018
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue May 22, 2018 5:26 pm

அசத்தல் சாதனைப் படைக்க சுரேஷ் ரெய்னாவுக்கு அரிய வாய்ப்பு!
-
ஐ.பி.எல் -2018 !!  - Page 10 Suresh10
-


11-ஆவது சீசன் ஐபிஎல் போட்டித் தொடரின் கடைசி லீக்
ஆட்டம் 20-ஆம் தேதி நடைபெற்றது. இதில் வெற்றிபெற்ற
சென்னை சூப்பர் கிங்ஸ் குவாலிஃபையர் வாய்ப்பை தக்க
வைத்தது.

மேலும் பங்கேற்ற அனைத்து ஜபிஎல் தொடர்களிலும்
நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறிய முதல் அணி என்ற
பெருமையைப் பெற்றது.

இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரசிகர்களால்
சின்ன தல என்றழைக்கப்படும் சுரேஷ் ரெய்னா, ஐபிஎல் போட்டித்
தொடரில் 5 ஆயிரம் ரன்களை முதலில் கடந்த வீரர் என்ற
அசத்தல் சாதனை படைக்க நடப்பு சீசனில் அரிய வாய்ப்பு
ஏற்பட்டுள்ளது.

இதுவரை 174 போட்டிகளில் 4,931 ரன்கள் குவித்து அதிக ரன்கள்
குவித்தவர்கள் பட்டியலில் 2-ஆம் இடத்தில் உள்ளார்.
இதில் 441 பவுண்டரிகளும், 184 சிக்ஸர்களும் அடங்கும்.

அதிகபட்சமாக ஒரு இன்னிங்ஸில் 100* (ஒரு சதம்) மற்றும்
35 அரைசதங்கள் எடுத்துள்ளார்.

5 ஆயிரம் ரன்களைக் கடக்க இன்னும் 69 ரன்கள் மட்டுமே
உள்ள நிலையில், நடப்பு சீசனில் மட்டும் 3 வாய்ப்புகள் உள்ளது.
அதிரடி ஆட்டக்காரரான ரெய்னா, இந்த இலக்கத்தை
ஒரே இன்னிங்ஸில் சாதித்துவிடுவார் என்றே அவரது ரசிகர்கள்
எதிர்பார்க்கின்றனர்.

விராட் கோலி, 4,948 ரன்கள் குவித்து ஐபிஎல் போட்டிகளில்
அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் தற்போது வரை
முதலிடத்தில் நீடிக்கிறார். 163 போட்டிகளல் விளையாடியுள்ள
கோலி, 4 சதங்கள், 34 அரைசதங்கள் உட்பட ஒரு இன்னிங்ஸில்
அதிகபட்சமாக 113 ரன்கள் குவித்துள்ளார்.
இதில் மொத்தம் 434 பவுண்டரிகளும், 177 சிக்ஸர்களும் அடங்கும்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு வெளியேற்றப்பட்ட நிலையில்,
முதலிடத்தில் உள்ள விராட் கோலியை எளிதாக முந்திச் சென்று
நடப்பு சீசனிலேயே இதை சாதிக்கும் அரிய வாய்ப்பு
சுரேஷ் ரெய்னாவுக்கு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
----------------------------

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed May 23, 2018 9:46 am

நேற்றைய தேர்வாளர் 1 போட்டி முடிவு வரை திக் திக் திகில்தான்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82018
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun May 27, 2018 6:06 pm

ஐ.பி.எல். கோப்பை யாருக்கு? சென்னை-ஐதராபாத் இன்று பலப்பரீட்சை
-
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டியில்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சன் ரைசர்ஸ் ஐதராபாத்
அணியும் இன்று மோதுகின்றனர்.

மும்பை:

11-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம்
மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு
நடக்கிறது.

இதில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ்-
வில்லியம்சன் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஐதராபாத்
அணிகள் மோதுகின்றன.

ஐ.பி.எல். கோப்பை யாருக்கு?

இரு அணிகளும் சமபலம் பொருந்தியவை என்பதால் ஐ.பி.எல்.
கோப்பையை வெல்லப்போவது யார் என்று ஆவலுடன்
எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் 3-வது முறையாக ஐ.பி.எல். கோப்பையை
வெல்லும் ஆர்வத்துடனும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் 2-வது
தடவையாக கோப்பையை வெல்லும் ஆர்வத்துடனும் உள்ளன.

சென்னை அணி 2010, 2011-ம் ஆண்டுகளிலும் ,
ஐதராபாத் 2016-ம் ஆண்டும் சாம்பியன் பட்டம் பெற்று இருந்தன.

சென்னை அணியின் பேட்டிங்கும், ஐதராபாத் அணியின்
பந்துவீச்சுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவும்.

சென்னை அணியின் பலமே பேட்டிங் தான். கேப்டன் டோனி,
அம்பதி ராயுடு, வாட்சன், ரெய்னா ஆகியோர் நல்ல நிலையில்
உள்ளனர்.

ரஷீத்கான், சித்தார்த் கவூல், புவனேஷ்வர்குமார் ஆகியோர்
ஐதராபாத் அணியின் பந்துவீச்சில் முத்திரை பதிக்க கூடியவர்கள்.

சென்னை அணியில் பந்துவீச்சில் தென் ஆப்பிரிக்கா வேகப்பந்து
வீரர் நிகிடி மிகவும் நல்ல நிலையில் உள்ளார்.
தீபக் சாஹர், ‌ஷர்துல் தாகூர் ஆகியோரும் சிறப்பாக வீசக்
கூடியவர்கள். ஐதராபாத் அணியின் பேட்டிங்கில் கேப்டன்
வில்லியம்சன், தவான், மனீஷ்பாண்டே, யூசுப்பதான் ஆகியோர்
நல்ல நிலையில் உள்ளனர்.

இரு அணியிலும் விளையாடலாம் என்று எதிர்பார்க்கப்படும்
11 வீரர்கள் விவரம்:-

சென்னை சூப்பர் கிங்ஸ்: டோனி (கேப்டன்), வாட்சன், டுபெலிசிஸ்,
ரெய்னா, அம்பதி ராயுடு, பிராவோ, ஜடேஜா, தீபக் சாஹர்,
ஹர்பஜன்சிங் அல்லது கரண் சர்மா, ‌ஷர்துல் தாகூர், நிகிடி.

சன்ரைசர்ஸ் ஐதராபாத்: வில்லியம்சன் (கேப்டன்), விர்த்திமான் சகா,
தவான், சகீப்-அல்-ஹசன், தீபக் ஹூடா, யூசுப்பதான், பிராத்வெயிட்,
ரஷீத்கான், புவனேஷ்வர்குமார், சித்தார்த் கவூல், சந்தீப்சர்மா
அல்லது கலீல் அகமது அல்லது பாசி தம்பி.
-
--------------------------------
மாலைமலர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82018
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun May 27, 2018 6:06 pm

ஐ.பி.எல் -2018 !!  - Page 10 201805271703498130_CSK-to-face-SRH-in-IPL-final-today_SECVPF

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun May 27, 2018 6:22 pm

விறுவிறுப்பாக இருக்க வேண்டும்.
ஏதாவது ஒரு அணிதான் வெல்லமுடியும்.புன்னகை புன்னகை

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82018
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon May 28, 2018 8:05 am

சென்னை அணி சாம்பியன்: ஐ.பி.எல்., தொடரில் அசத்தல்
-
ஐ.பி.எல் -2018 !!  - Page 10 Gallerye_005708169_2029129
-

மும்பை:
ஐ.பி.எல்., 'டுவென்டி-20' தொடரில் சென்னை அணி கோப்பை வென்றது.
ஐதராபாத் அணிக்கு எதிரான பைனலில் வாட்சன் சதம் விளாச
8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐ.பி.எல்., 'டுவென்டி-20' தொடரின் பைனல் மும்பை வான்கடே
மைதானத்தில் நடந்தது. இதில் சென்னை, ஐதராபாத் அணிகள்
மோதின. 'டாஸ்' வென்ற சென்னை அணி கேப்டன் தோனி
'பவுலிங்' தேர்வு செய்தார். சென்னை அணியில் ஹர்பஜனுக்குப்
பதில் கரண் சர்மா வாய்ப்பு பெற்றார்.

ஐதராபாத் அணியில் சகா (காயம்), கலீல் அகமது நீக்கப்பட்டு
கோஸ்வாமி, சந்தீப் சர்மா இடம்பிடித்தனர்.

யூசுப் விளாசல்

ஐதராபாத் அணிக்கு கோஸ்வாமி (5) ஏமாற்றினார்.
ஜடேஜா பந்தில் தவான் (26) ஆட்டமிழந்தார். கரண் சர்மா 'சுழலில்'
கேப்டன் வில்லியம்சன் (47) அவுட்டானார். சாகிப் 23 ரன்கள் எடுத்தார்.
யூசுப் பதான் 'மின்னல்' வேகத்தில் ரன் குவித்தார். இவருக்கு
கார்லோஸ் பிராத்வைட் பங்களிப்பு கிடைக்க, 'ஸ்கோர்' சிறப்பாக
உயர்ந்தது.

தாகூர் பந்தில் பிராத்வைட் (21) சிக்கினார். முடிவில், ஐதராபாத்
அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 178 ரன்கள் எடுத்தது. யூசுப் (45)
அவுட்டாகாமல் இருந்தார். சென்னை அணி சார்பில் அதிகபட்சமாக
லுங்கிடி, கரண் உள்ளிட்டோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினார்.
-
வாட்சன் மிரட்டல்

எட்டிவிடக்கூடிய இலக்கை விரட்டிய சென்னை அணிக்கு
டுபிளசி (10) சொதப்பினார். பின், இணைந்த வாட்சன், ரெய்னா
அபாரமாக விளையாடினார். சந்தீப் வீசிய 13வது ஓவரில் மிரட்டிய
வாட்சன் 3 சிக்சர், இரண்டு பவுண்டரி விளாசினார். பிராத்வைட்
பந்தில் ரெய்னா (32) ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து அசத்திய வாட்சன், ஐ.பி.எல்., அரங்கில் 4வது சதத்தை
பதிவு செய்தார். ராயுடு ஒரு பவுண்டரி அடிக்க, சென்னை அணி
18.3 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 181 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
வாட்சன் (117), ராயுடு (17) அவுட்டாகாமல் இருந்தனர்.

3 முறை சாம்பியன்

சென்னை அணி மூன்றாவது முறையாக (2010, 11, 18) கோப்பை
கைப்பற்றியது. இதன் மூலம், ஐ.பி.எல்., தொடரில் அதிக பட்டம்
வென்ற அணிகளின் வரிசையில் மும்பையுடன் (3) முதலிடத்தை
பகிர்ந்து கொண்டது.

2வது சதம்

இந்த 'சீசனில்' சென்னையின் வாட்சன் அடித்த இரண்டாவது
சதம் இதுவாகும். இதற்கு முன், ராஜஸ்தானுக்கு எதிரான
போட்டியில் சதம் விளாசி இருந்தார். ஒட்டுமொத்தமாக, இந்த
'சீசனில்' பதிவான 5வது சதம் இது.

ஆரஞ்சு தொப்பி

இத்தொடரில் ஐதராபாத் அணியின் கேப்டன் வில்லியம்சன்
அதிக ரன் (735 ரன்) எடுத்து ஆரஞ்சு தொப்பி வென்றார்.

பர்ப்பிள் தொப்பி

தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பஞ்சாப் அணியின்
ஆன்ட்ரூ டை (24 விக்கெட்டுகள்) பர்ப்பிள் தொப்பியை வென்றார்.


---------------------
தினமலர்


Sponsored content

PostSponsored content



Page 10 of 11 Previous  1, 2, 3 ... , 9, 10, 11  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக