புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மெட்ராஸ்'... `வடசென்னை'... என்ன வித்தியாசம்? ஒரு சிம்பிள் ரசிகனின் பார்வை! Poll_c10மெட்ராஸ்'... `வடசென்னை'... என்ன வித்தியாசம்? ஒரு சிம்பிள் ரசிகனின் பார்வை! Poll_m10மெட்ராஸ்'... `வடசென்னை'... என்ன வித்தியாசம்? ஒரு சிம்பிள் ரசிகனின் பார்வை! Poll_c10 
20 Posts - 65%
heezulia
மெட்ராஸ்'... `வடசென்னை'... என்ன வித்தியாசம்? ஒரு சிம்பிள் ரசிகனின் பார்வை! Poll_c10மெட்ராஸ்'... `வடசென்னை'... என்ன வித்தியாசம்? ஒரு சிம்பிள் ரசிகனின் பார்வை! Poll_m10மெட்ராஸ்'... `வடசென்னை'... என்ன வித்தியாசம்? ஒரு சிம்பிள் ரசிகனின் பார்வை! Poll_c10 
11 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மெட்ராஸ்'... `வடசென்னை'... என்ன வித்தியாசம்? ஒரு சிம்பிள் ரசிகனின் பார்வை! Poll_c10மெட்ராஸ்'... `வடசென்னை'... என்ன வித்தியாசம்? ஒரு சிம்பிள் ரசிகனின் பார்வை! Poll_m10மெட்ராஸ்'... `வடசென்னை'... என்ன வித்தியாசம்? ஒரு சிம்பிள் ரசிகனின் பார்வை! Poll_c10 
62 Posts - 63%
heezulia
மெட்ராஸ்'... `வடசென்னை'... என்ன வித்தியாசம்? ஒரு சிம்பிள் ரசிகனின் பார்வை! Poll_c10மெட்ராஸ்'... `வடசென்னை'... என்ன வித்தியாசம்? ஒரு சிம்பிள் ரசிகனின் பார்வை! Poll_m10மெட்ராஸ்'... `வடசென்னை'... என்ன வித்தியாசம்? ஒரு சிம்பிள் ரசிகனின் பார்வை! Poll_c10 
32 Posts - 33%
mohamed nizamudeen
மெட்ராஸ்'... `வடசென்னை'... என்ன வித்தியாசம்? ஒரு சிம்பிள் ரசிகனின் பார்வை! Poll_c10மெட்ராஸ்'... `வடசென்னை'... என்ன வித்தியாசம்? ஒரு சிம்பிள் ரசிகனின் பார்வை! Poll_m10மெட்ராஸ்'... `வடசென்னை'... என்ன வித்தியாசம்? ஒரு சிம்பிள் ரசிகனின் பார்வை! Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
மெட்ராஸ்'... `வடசென்னை'... என்ன வித்தியாசம்? ஒரு சிம்பிள் ரசிகனின் பார்வை! Poll_c10மெட்ராஸ்'... `வடசென்னை'... என்ன வித்தியாசம்? ஒரு சிம்பிள் ரசிகனின் பார்வை! Poll_m10மெட்ராஸ்'... `வடசென்னை'... என்ன வித்தியாசம்? ஒரு சிம்பிள் ரசிகனின் பார்வை! Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மெட்ராஸ்'... `வடசென்னை'... என்ன வித்தியாசம்? ஒரு சிம்பிள் ரசிகனின் பார்வை!


   
   

Page 1 of 2 1, 2  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Oct 21, 2018 4:48 pm

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை முழுக்க முழுக்க கட்டுரையாளரின் பார்வையே தவிர விகடனின் பார்வை அல்ல.

`வடசென்னை' பற்றிய பாராட்டுகளையும், தூற்றல்களையும் மாறிமாறிப் படித்து மூளைக்காய்ச்சல் வராத குறை. ஒரு பக்கம் `குப்பையில் கூட டீட்டெயிலிங் காட்டியிருக்காரு' என்றும், இன்னொருபுறம் `குப்பையைவிட தரங்கெட்ட படைப்பு' என்றும் டைப்பி தீர்க்கிறார்கள். `ஏன் இப்படி' என நாலைந்து இடியாப்பத்தை கொசகொசவென பிசைந்து கையில் கொடுத்ததுபோல் ஏற்பட்ட பெரும் குழப்பத்திற்குப் பின், ஒரு முடிவுக்கு வரமுடிந்தது. `வடசென்னை'யில் என்ன பிரச்னை?!



" `வடசென்னை என்பது ரௌடிகளின் சரணாலயம். அங்கு, குழாயைத் திறந்தால் தண்ணீர் வராது ரத்தம்தான் வரும்' என்கிற அளவுக்கு வன்முறையையும் வன்முறையாளர்களையும் மட்டுமே வெற்றிமாறன் காட்டியிருக்கிறார். ஒரு பக்கத்தை மட்டும்தானே காட்னீங்க, இன்னொரு பக்கத்தையும் காட்டலாமே" எனப் பலரும் கொடுங்கோபம் கொண்டிருக்கிறார்கள். அதிலும் ஒருவர், வடசென்னையில் அவர்கள் எங்கே, இவர்கள் எங்கே என பெரும் பட்டியலே போட்டிருக்கிறார். ஒரு ஆளைக்கூட விடாமல் காட்ட இதுவொன்றும் கல்யாண வீடியோவும் இல்லைதான். இப்படி மிளகு தூக்கலாய் பொங்கல் வைப்பவர்கள் எல்லோரும் `மெட்ராஸ்'ஸை கொண்டாடித் தீர்க்கிறார்கள் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். `வடசென்னை'யில் இல்லாதது அப்படியென்ன `மெட்ராஸ்'ல `இருக்கு' எனக் கேட்டால், அப்படியொன்று `மெட்ராஸ்'ல் இருக்கு என்பதுதான் பதில். என்ன இருக்கு?
நன்றி
விகடன்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Oct 21, 2018 4:50 pm

வடசென்னை'யின் அன்பு மட்டுமல்ல, `மெட்ராஸ்' காளியும்தான் ஆயுதத்தைக் கையிலெடுக்கிறான், கொலை செய்கிறான். இருவரின் கேரக்டர் ஆர்க்கும் கிட்டத்தட்ட ஒன்றுதான். காளிக்கு ஃபுட்பால் என்றால், அன்புக்கு கேரம். காளி படித்து முடித்து ஐ.டி வேலைக்குச் செல்கிறான். அன்புக்கு படிப்பு ஏறவில்லை, கேரம் திறமையால் ஹார்பரில் அரசு உத்தியோகம் பெற முயல்கிறான். காளி-கலை, அன்பு-பத்மா. ஆட்டம், பாட்டம், காதல், கொண்டாட்டமெனச் செல்லும் வாழ்க்கை, ஓர் இடத்தில் தடம் மாறுகிறது. தடுமாறுகிறது எனும் வார்த்தை இன்னும் பொருத்தம். காளி தன் நண்பன் அன்புக்காக முதலில் ஆயுதத்தை எடுக்கிறான். அன்போ, தன் காதலி பத்மாவுக்காக எடுக்கிறான். கொலைகளும் திட்டமிட்டு நிகழ்த்தியதில்லை. கடைசியாக, இருவரும் தங்கள் நிலத்துக்காக, தங்கள் மக்களுக்காக ஆயுதம் தூக்குகிறார்கள். கிட்டத்தட்ட இரண்டு பாத்திரங்களுக்கும் பெரிய வித்தியாசமில்லை. ஆனால், இவர்களுக்குள் இருக்கும் சிற்சில வித்தியாசங்கள்தான் `மெட்ராஸையும் `வடசென்னையையும் `5E பஸ்' வருமா எனப் பிரித்துவிடுகின்றன. என்ன வித்தியாசங்கள் அவை?

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Oct 21, 2018 4:51 pm

மெட்ராஸ்' காளி கதாபாத்திரத்தின் ஆர்க்கில் அவன் தன் வாழ்க்கையைக் கொண்டாடிக்கொண்டிருக்கிறான் என்பதை, நண்பர்களோடு சேர்ந்து ஃபுட்பால், கேரம் விளையாடுவது, சட்டிமேளத்துக்கு ஆட்டம் போடுவது, ஏரியாவுக்குள் ஓடியாடி விளையாடுவதெனக் காட்சிப்படுத்தியிருப்பார்கள். அவனை வைத்தே அந்த நிலத்தின் பொதுவான கொண்டாட்டங்களைக் காண்பித்திருப்பார்கள். அது அந்த நிலத்தில் வாழும் மற்றவர்களோடும் அவனை இணைப்பதாய் இருக்கும். காளியின் ஆரம்பக்காலத்து ஆர்க்கில், அவன் ஒரு சர்வசாதாரண வியாசர்பாடிவாசி. சிம்பிள்! `வடசென்னை' அன்பின் வாழ்க்கையில் காட்டப்பட்டிருக்கும் கொண்டாட்டம் என்பது கடை புகுந்து டி.வி திருடுவது, பந்தயத்துக்கு கேரம் விளையாடுவது, பைனாக்குலர் வழியாக ஐஸ்வர்யா ராஜேஷை பார்ப்பது, சண்டைபோடுவது எனச் சுருங்குகிறது. அவனுக்கு நண்பனெனச் சொல்லிக்கொள்ள ஒரேயொருவன் மட்டும். அன்பு எந்த இடத்தில் அந்த ஊரோடு கலக்கிறான்? கலக்கிறானா?

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Oct 21, 2018 4:52 pm

கலந்திருப்பான், `பேலன்ஸ்' செய்திருந்தால். கதையின் தேவைக்கேற்ற பாத்திரங்களையும் வாழ்வியலையும் மட்டுமே பதிவிட முனைவது, நிச்சயம் எதிர்விளைவுகளைத் தரும். அதிலும், ஒரு கேங்ஸ்டர் சினிமாவில், விளிம்பு நிலை மக்கள் வாழும் பகுதியைக் களமாக எடுத்துக்கொண்டு கதைக்குத் தேவையான சூழலை மட்டும் காட்டுவேன் என்பது கண்ணிவெடியில் காலை வைப்பதற்குச் சமம். கேங்ஸ்டர்கள் அல்லாதோர்தான் அங்கு பெரும்பான்மை. சிகரெட், மது, பவுடர் இல்லாத கொண்டாட்டங்களும் அங்கு இருக்கின்றன. பாக்கெட்டில் பேனா வைத்திருப்பவர்கள் நிறைய இருக்கிறார்கள் என்பதை படத்தினுள்ளேயே ஆங்காங்கே அழுத்தமாய்ப் பதிந்து `பேலன்ஸ்' செய்வது மிகமிக அவசியமாகிறது.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Oct 21, 2018 4:53 pm

ஒருவேளை அப்படிச் செய்வது மையக்கதைக்கு இடையூறாக இருக்கிறது, திரைக்கதையின் பயணத்துக்கு `டேக் டைவர்ஷன்' காட்டுகிறது எனும் நேரத்தில், `மெட்ராஸ்' மற்றும் `அங்கமாலி டைரீஸ்' பயன்படுத்திய யுக்தி சிறப்பானது. ஒரேயொரு பாட்டில் அந்த நிலத்தின் ஒட்டுமொத்த வாழ்வியல் சூழலையும் குணாதிசயங்களையும் பதிந்துவிடுவது. `மெட்ராஸ்'-ன் `எங்க ஊர் மெட்ராஸ்' மற்றும் `அங்கமாலி டைரீஸ்'-ன் `எட்டு நாடும் கீர்த்தி பெட்டூர்' பார்க்கும்போதே அந்தப் பகுதிக்குள் சென்று சந்துபொந்தெல்லாம் சுற்றிவந்த உணர்வு கிடைக்கும். `மெட்ராஸ்'-ன் கதைக்கு அரசியல்வாதிகளும் அவர்களின் வலது, இடது கைகளும் அவற்றில் ஆறு டஜன் சாமான்களைக் காட்டுவதே போதுமானதுதான். அதையும் தாண்டி வேறொரு தளத்தில் நடந்துகொண்டிருக்கும் விஷயங்களையும் காட்டுதல் என்பது மிக அவசியமான ஒன்று.

நிலம்தான் கதைமாந்தர்களின் அடையாளம். கதை மாந்தர்கள்தான் நிலத்தின் அடையாளம்! நிலம்தான், கதைக்கும் கதை மாந்தர்களுக்குமான ஆதாரங்களைத் திட்டவட்டமாகப் புரிந்துகொள்ள உதவும். `சிட்டி ஆஃப் காட்ஸ்'-ல் ஒருவனைத் தவிர மற்றவர்கள் எல்லோருமே துப்பாக்கியோடு திரிகிறார்கள், சிறுவர்களும்கூட. அவன் மட்டும்தான் அங்கிருந்து கையில் கத்திக்குப் பதில் கேமராவை எடுத்திருக்கிறான். அவன்தான் கதையின் நாயகன். அவனை சுற்றித்தான் கதையே நகர்கிறது என்பது எப்படிப்பட்ட ஒரு `பேலன்ஸ்'!



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Oct 21, 2018 4:54 pm

கதையின் களம் ஒரு ஜெயில்தான் என்றாலும், நான்கைந்து அப்பாவிகளையும் காட்டுகிறோம் அல்லவா. அப்படியிருக்க, ஊரில் இருப்பவர்களையெல்லாம் குற்றவாளிகளாகவே காட்சிப்படுத்துவது எப்படி நிறைவைத் தரும்? குறைந்தபட்சம், `தி ரியல் மெட்ராஸ்' என யூ-டியூபில் வெளியிட்ட வீடியோவின் தரத்திலாவது காட்சிகள் ஆவணப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். நில அரசியலைப் பேசியிருக்கும் `வடசென்னை' நிச்சயம் நிலத்தை முடிந்த அளவுக்கு முழுமையாகப் பதிவுசெய்திருக்க வேண்டும். `அன்பு, ராஜன் & ஊர்' அத்தியாயத்திலாவது அதைச் செய்திருக்க வேண்டும்.

ஆம், நாங்கள் குற்றவாளிகள்தான். எங்கள் பலரின் கைகளில் ரத்தக்கறை படிந்திருக்கிறது. ஆனால், ஏன் இப்படி, இதற்கு என்ன காரணம்? நீங்கள்தான், உங்களின் அதிகாரம்தான், உங்களிடமிருந்து எங்களைக் காப்பாற்றிக்கொள்ள கைக்கு வந்த ஆயுதங்களே இவை. இதுதான் `வடசென்னை' பேசும் அரசியல். எத்தனை பேருக்கு இது சென்று சேர்ந்தது. `குடிசையோ, குப்பைமேடோ என் ஊர், இதை நான்தான் காப்பாற்ற வேண்டும். அப்படி பண்றதுக்குப்பெயர் ரவுடியிஸம்னா, ரவுடியிஸம் பண்ணலாம் தப்பில்லை’ என்கிறான் அன்பு. படத்தின் மையக்கதையே இதுதான். இதைப் பற்றிய டீட்டெயிலிங்குகள்தானே அதிகம் இடம்பெற்றிருக்க வேண்டும்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Oct 21, 2018 4:55 pm

ஏன் அந்த நிலம் அவர்களுக்கு முக்கியமென்றால், அதுதான் அவர்களுக்கு வாழ்வாதாரமாய் இருக்கும். அங்கு இருப்பவர்கள் கடலுக்கு சென்று மீன் பிடிக்கும் காட்சி எத்தனை இருக்கிறது? படகில் சென்று கொள்ளைதான் அடிக்கிறார்கள். `கம்மட்டிபாடம்' பேசுவதும் இதே அரசியல்தான், அதிகார மையம் எப்படி நம் கையை வைத்து நம் கண்ணையே குத்தும் என்பதை வெளிப்படையான வசனங்களின்றி காட்சிகளால் அவ்வளவு நுணுக்கமாகச் சொல்லியிருப்பார்கள். அதிகார மையங்களால் அடித்தட்டு மக்களின் வாழ்க்கை சுக்குநூறாய் நொறுங்கிப்போவதாய் நம்மால் உளமார உணரமுடியும். `வடசென்னை'யில் அப்படி உணரமுடியவில்லை.

`தமிழ்நாடு' என்ற பெயரில் படம் ஒன்றை எடுத்துவிட்டு, அதில் மதுரையின் வாழ்வியலை மட்டுமே காட்டிக்கொண்டிருந்தால் மற்ற மாவட்டத்தினர்கள் கொந்தளித்துவிடுவார்கள் இல்லையா? அல்லது `மதுரை' எனப் பெயர் வைத்துவிட்டு செல்லூர் ராஜு மற்றும் கிரம்மர் சுரேஷின் அட்ராசிட்டிகளை மட்டும் காட்டிக்கொண்டிருந்தால் மற்றவர்கள் சிரிப்பார்கள், `ஏன்டா யானையிடம் எவ்ளோ ஹைலைட்ஸ் இருக்கு' என மதுரைக்காரர்கள் கடுப்பாவோம்தானே! அவ்வளவு கலர்ஃபுல்லான மதுரைக்குள்ளேதான் இப்படியும் சிலர் எனக் காட்டுவதுதானே சரியாக, ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும். இந்தக் காரணிதான் `வடசென்னை'யை உயரப் பறக்கவிடாமல் பிடித்து இழுக்கிறது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Oct 21, 2018 5:15 pm

இன்னும் தெளிவான பிரிண்ட் வரவில்லை, வந்ததும் பார்த்துவிட்டுக் கூறுகிறேன்!



மெட்ராஸ்'... `வடசென்னை'... என்ன வித்தியாசம்? ஒரு சிம்பிள் ரசிகனின் பார்வை! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82371
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Oct 21, 2018 5:21 pm

வடசென்னை’ படம் பற்றி வடசென்னை மக்கள் என்ன நினைக்கிறார்கள்?
--
-


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Oct 21, 2018 5:48 pm

சிவா wrote:இன்னும் தெளிவான பிரிண்ட் வரவில்லை, வந்ததும் பார்த்துவிட்டுக் கூறுகிறேன்!
மேற்கோள் செய்த பதிவு: 1282328
இப்படி தான் படம் பார்க்கிறீர்களா?
சிவா பார்த்து

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக