புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ஆனந்திபழனியப்பன் Today at 12:59 am

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 11:45 pm

» நாவல்கள் வேண்டும்..
by சுகவனேஷ் Yesterday at 9:38 pm

» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Yesterday at 8:18 pm

» சாதிப்பதற்கே வாழ்க்கை
by VIJIVIJAY Yesterday at 5:29 pm

» கருத்துப்படம் 06/12/2023
by mohamed nizamudeen Yesterday at 9:26 am

» புகழ்பெற்ற அகதா கிறிஸ்டி நாவல்கள்
by prajai Tue Dec 05, 2023 10:24 pm

» கருத்தே கடவுள் !!!
by rajuselvam Tue Dec 05, 2023 6:11 pm

» நாஞ்சில் நாட்டு மீன்குழம்பு
by ayyasamy ram Tue Dec 05, 2023 5:21 pm

» கவிதைச்சோலை - வலிமை! .
by ayyasamy ram Tue Dec 05, 2023 5:16 pm

» உனக்கு தேவையா? மாமே?
by ayyasamy ram Tue Dec 05, 2023 4:53 pm

» சினிமா செய்திகள் - (தமிழ் வெப்துனியா)
by ayyasamy ram Tue Dec 05, 2023 2:37 pm

» மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்
by ayyasamy ram Tue Dec 05, 2023 1:36 pm

» சென்னை குறள்
by ayyasamy ram Tue Dec 05, 2023 9:51 am

» இன்று இனிய நாள் --தொடர்
by ayyasamy ram Tue Dec 05, 2023 9:50 am

» முத்து மணி மாலை(கவி துளிகள்) ·
by ayyasamy ram Tue Dec 05, 2023 9:24 am

» வருத்தத்துடன் ஓர் பதிவு (2)
by ayyasamy ram Tue Dec 05, 2023 9:17 am

» இதை குழம்பா வைக்கலாமா?
by ayyasamy ram Tue Dec 05, 2023 9:02 am

» சென்னையில் ஓய்ந்தது மிக்ஜாம் புயல் மழை...
by ayyasamy ram Tue Dec 05, 2023 6:45 am

» பிரவீணா தங்கராஜ் இன் புத்தகங்கள் இருந்தால் பகிரவும்.
by ஆனந்திபழனியப்பன் Mon Dec 04, 2023 9:48 pm

» எழிலன்பு நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon Dec 04, 2023 9:42 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Mon Dec 04, 2023 6:29 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Mon Dec 04, 2023 3:03 pm

» உதயணன் சரித்திர நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Dec 03, 2023 11:31 pm

» இதுதான் சார் உலகம்…
by ayyasamy ram Sun Dec 03, 2023 10:13 pm

» ஒருநாள் புரியும் (ச. யுனேசா )
by Yunesha. S Sun Dec 03, 2023 9:56 pm

» "மல்லிகையின் காதல் "
by Yunesha. S Sun Dec 03, 2023 9:27 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Dec 03, 2023 5:58 pm

» வாட்சப்பில் வந்த நகைச்சுவை.
by ayyasamy ram Sun Dec 03, 2023 5:38 pm

» 4 பெண்கள்... 4 சூழல்கள்... ஒரு கதை! - ‘கண்ணகி’ ட்ரெய்லர் ...
by ayyasamy ram Sun Dec 03, 2023 5:32 pm

» 3 மாநிலங்களில் பாஜக வெற்றி முகம்... காங். வசமாகும் தெலங்கானா -
by ayyasamy ram Sun Dec 03, 2023 5:22 pm

» மிக்ஜாம் புயல் -லேட்டஸ்ட் அப்டேட்
by ayyasamy ram Sun Dec 03, 2023 5:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Dec 03, 2023 4:26 pm

» ஒரு முறைதான் வாழ்க்கை.. அதை சரியாக வாழுங்கள்!
by T.N.Balasubramanian Sun Dec 03, 2023 3:43 pm

» சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்! நாள் வரலாறு, கருப்பொருள்!
by ayyasamy ram Sun Dec 03, 2023 3:31 pm

» சரோஜாதேவி நடித்த படங்களின் பாடல்களில் புதிய பரிமாணம்.
by heezulia Sun Dec 03, 2023 1:06 pm

» நாவல்கள் வேண்டும்
by Visweswaran Sun Dec 03, 2023 10:24 am

» ராமர் கோவில் திறப்பு விழா.. வெளியானது அதிகாரப்பூர்வ தேதி..!!
by ayyasamy ram Sun Dec 03, 2023 9:27 am

» படமாகும் பெருமாள் முருகன் நாவல்!
by ayyasamy ram Sun Dec 03, 2023 7:34 am

» தட்டான் பூச்சிகள் இருக்கும் இடத்தில் கொசுக்கள் இருக்காது!
by ayyasamy ram Sun Dec 03, 2023 7:27 am

» உறுப்பினர் அறிமுகம்
by heezulia Sat Dec 02, 2023 10:09 pm

» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Sat Dec 02, 2023 9:44 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Sat Dec 02, 2023 6:30 pm

» நாவல்கள் வேண்டும்
by fathimaafsa1231@gmail.com Sat Dec 02, 2023 10:36 am

» இன்று ஒரு தகவல்..
by ayyasamy ram Sat Dec 02, 2023 5:32 am

» 38 மனைவிகள், 89 பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்த நபர் மறைவு - தொடர்ந்து கூட்டாக வாழும் குடும்பத்தினர்!
by ayyasamy ram Sat Dec 02, 2023 5:27 am

» சஞ்சிகைகள், இதழ்கள்
by TI Buhari Sat Dec 02, 2023 12:47 am

» கவிஞர் முத்தமிழ்விரும்பியின் கவிதைகளில் நவீனக் கூறுகள் - பாரதிசந்திரன்
by bharathichandranssn Fri Dec 01, 2023 7:41 pm

» டிச.5-ந்தேதி புயல் கரையை கடக்கும்... வானிலை ஆய்வு மையத்தின் புதிய அறிவிப்பு
by T.N.Balasubramanian Fri Dec 01, 2023 5:52 pm

» பரணி தீபம் -ஏற்றினால் எம பயம் நீங்கும்
by ayyasamy ram Fri Dec 01, 2023 4:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூன்றாவது கண்! சுகி. சிவம் Poll_c10மூன்றாவது கண்! சுகி. சிவம் Poll_m10மூன்றாவது கண்! சுகி. சிவம் Poll_c10 
34 Posts - 62%
ஆனந்திபழனியப்பன்
மூன்றாவது கண்! சுகி. சிவம் Poll_c10மூன்றாவது கண்! சுகி. சிவம் Poll_m10மூன்றாவது கண்! சுகி. சிவம் Poll_c10 
5 Posts - 9%
T.N.Balasubramanian
மூன்றாவது கண்! சுகி. சிவம் Poll_c10மூன்றாவது கண்! சுகி. சிவம் Poll_m10மூன்றாவது கண்! சுகி. சிவம் Poll_c10 
4 Posts - 7%
heezulia
மூன்றாவது கண்! சுகி. சிவம் Poll_c10மூன்றாவது கண்! சுகி. சிவம் Poll_m10மூன்றாவது கண்! சுகி. சிவம் Poll_c10 
4 Posts - 7%
சுகவனேஷ்
மூன்றாவது கண்! சுகி. சிவம் Poll_c10மூன்றாவது கண்! சுகி. சிவம் Poll_m10மூன்றாவது கண்! சுகி. சிவம் Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
மூன்றாவது கண்! சுகி. சிவம் Poll_c10மூன்றாவது கண்! சுகி. சிவம் Poll_m10மூன்றாவது கண்! சுகி. சிவம் Poll_c10 
2 Posts - 4%
rajuselvam
மூன்றாவது கண்! சுகி. சிவம் Poll_c10மூன்றாவது கண்! சுகி. சிவம் Poll_m10மூன்றாவது கண்! சுகி. சிவம் Poll_c10 
1 Post - 2%
Saravananj
மூன்றாவது கண்! சுகி. சிவம் Poll_c10மூன்றாவது கண்! சுகி. சிவம் Poll_m10மூன்றாவது கண்! சுகி. சிவம் Poll_c10 
1 Post - 2%
prajai
மூன்றாவது கண்! சுகி. சிவம் Poll_c10மூன்றாவது கண்! சுகி. சிவம் Poll_m10மூன்றாவது கண்! சுகி. சிவம் Poll_c10 
1 Post - 2%
Hari Prasath
மூன்றாவது கண்! சுகி. சிவம் Poll_c10மூன்றாவது கண்! சுகி. சிவம் Poll_m10மூன்றாவது கண்! சுகி. சிவம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூன்றாவது கண்! சுகி. சிவம் Poll_c10மூன்றாவது கண்! சுகி. சிவம் Poll_m10மூன்றாவது கண்! சுகி. சிவம் Poll_c10 
63 Posts - 46%
TI Buhari
மூன்றாவது கண்! சுகி. சிவம் Poll_c10மூன்றாவது கண்! சுகி. சிவம் Poll_m10மூன்றாவது கண்! சுகி. சிவம் Poll_c10 
28 Posts - 20%
T.N.Balasubramanian
மூன்றாவது கண்! சுகி. சிவம் Poll_c10மூன்றாவது கண்! சுகி. சிவம் Poll_m10மூன்றாவது கண்! சுகி. சிவம் Poll_c10 
13 Posts - 9%
heezulia
மூன்றாவது கண்! சுகி. சிவம் Poll_c10மூன்றாவது கண்! சுகி. சிவம் Poll_m10மூன்றாவது கண்! சுகி. சிவம் Poll_c10 
11 Posts - 8%
mohamed nizamudeen
மூன்றாவது கண்! சுகி. சிவம் Poll_c10மூன்றாவது கண்! சுகி. சிவம் Poll_m10மூன்றாவது கண்! சுகி. சிவம் Poll_c10 
6 Posts - 4%
ஆனந்திபழனியப்பன்
மூன்றாவது கண்! சுகி. சிவம் Poll_c10மூன்றாவது கண்! சுகி. சிவம் Poll_m10மூன்றாவது கண்! சுகி. சிவம் Poll_c10 
6 Posts - 4%
prajai
மூன்றாவது கண்! சுகி. சிவம் Poll_c10மூன்றாவது கண்! சுகி. சிவம் Poll_m10மூன்றாவது கண்! சுகி. சிவம் Poll_c10 
4 Posts - 3%
Saravananj
மூன்றாவது கண்! சுகி. சிவம் Poll_c10மூன்றாவது கண்! சுகி. சிவம் Poll_m10மூன்றாவது கண்! சுகி. சிவம் Poll_c10 
2 Posts - 1%
Kpc71
மூன்றாவது கண்! சுகி. சிவம் Poll_c10மூன்றாவது கண்! சுகி. சிவம் Poll_m10மூன்றாவது கண்! சுகி. சிவம் Poll_c10 
2 Posts - 1%
bharathichandranssn
மூன்றாவது கண்! சுகி. சிவம் Poll_c10மூன்றாவது கண்! சுகி. சிவம் Poll_m10மூன்றாவது கண்! சுகி. சிவம் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூன்றாவது கண்! சுகி. சிவம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 80467
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Nov 10, 2018 6:01 pm

மூன்றாவது கண்! சுகி. சிவம் Im7

விழிப்புணர்வு என்ற வார்த்தையைப் படித்துவிட்டு அதெல்லாம்
மகான்கள், ஞானிகள் சமாச்சாரம் என்று தூரத்தில் போய் விட
வேண்டாம்...

ஏழெட்டு கேள்விகள் கேட்கிறேன்... பாத்ரூமுக்குள் குளிக்க
ஆரம்பித்த பிறகு, "ஆஹா துண்டு எடுக்கவில்லை... சோப்பு
கொண்டு வரவில்லை' என்று கவலைப்பட்ட துண்டா?

கழிவறையை உபயோகப்படுத்திய பிறகு, "அடடா... குழாயில்
தண்ணீர் வரவில்லையே' என்று கண்டறியும் விநோத மனிதரா
நீங்கள்?

அடையாள அட்டை, பாஸ்போர்ட், டிக்கட் இத்யாதிகளைத்
தேடுகிறேன் பேர்வழி என்று கலவரம் அடைந்து கலாட்டா
செய்கிறவரா?

கைபேசி எங்கே வைத்தோம் என்பது தெரியாமல் பிறரிடம்
மிஸ்டு கால் கொடு என்று கெஞ்சிய பிறகு, அடடா silent-இல்
அல்லவா போட்டோம் என்று தலையில் அடித்துக் கொள்ளும்
பழக்கம் உண்டா?

இருவரிடம் அல்லது மூவரிடம் சந்திப்பதாக (ஒரே நாள் ஒரே
நேரத்தில்) வாக்குக் கொடுத்து விட்டு, "அடடா... முட்டாள்
தனம் செய்துவிட்டோமே' என்று வருத்தப்பட்ட துண்டா?

"நாம் இவ்வளவு கோபப் பட்டிருக்க வேண்டாம்... இந்த
விஷயத்தைக் கேட்டிருக்க வேண்டாம்... அந்த வார்த்தையைச்
சொல்லியிருக்க வேண்டாம்' என்று Flash Back சீன்களை
ஓட்டி அதை Erase (அழிக்க) அல்லது Delete (நீக்க) பண்ண
தத்தளிப்பது உண்டா?

"அதைச் சாப்பிட்டிருக்க வேண்டாம்... இதை இந்த அளவு
சாப்பிட்டிருக்கக் கூடாது'' என்று பலமுறை சொல்லிக் கொள்கிற
அல்லது நினைக்கிற பழக்கம் உண்டா?

தொடர்ந்து தாமதமாகப் போய் பள்ளி, கல்லூரி, அலுவகங்களில்
அவமானப்படுவது உண்டா? மன்னிப்பு கேட்டு இளிக்கும்
வழக்கம் உள்ளவரா?

பேசக் கூடாத மனிதரிடம் பேசக் கூடாத விஷயத்தைப் பேசி
பிரச்சனைக்கு அடிக்கடி ஆளாவது வழக்கமா?

உங்கள் செயல்களை மற்றவர் விமர்சித்தாலும் பிடிக்காது...
தானாகவும் தன்னை விமர்சிக்கும் வழக்கமுமற்றவரா?

என்னுடைய மதம், மொழி, இனம், நாடு, வழிபாடு, ஜாதி, குலம்,
கோத்திரம் மிகமிக உயர்ந்தது என்கிற கர்வம் உடையவரா?

இதில் எந்த கேள்விக்கு "ஆம்' என்ற பதில் வந்தாலும் நீங்கள்
விழிப்படைய வேண்டியவர். இன்னும் விழிப்படையாதவர்.
இத்தனை கேள்வி எழுப்பும் இவன் ரொம்ப யோக்யனா?

இவன் மட்டும் இந்த மாதிரி இருப்பதில்லையா? இப்படிக் கேட்க
இவனுக்கு என்ன தகுதி இருக்கிறது? என்று பொருமுகிற நபரா?

மன்னிக்கவும் நீங்கள் ரொம்பவே தூக்கத்தில் இருப்பவர்...
விழிக்க இரண்டு மூன்று ஜன்மங்கள் கூட எடுக்க வேண்டி
இருக்கலாம்... கோபம் வருகிறதா? சரி வம்பை நிறுத்திவிட்டு
விஷயத்துக்கு வருகிறேன்.
-
------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 80467
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Nov 10, 2018 6:04 pm

விழிப்பு என்பது மதத்திற்கு அப்பாற்பட்டது.
கிறித்தவத்தில் இயேசுவின் பணி கூட மதமாகப் புரிந்து
கொள்ளப்பட்டதே ஒழிய, அதன் சூட்சுமம் பலருக்கும் தெரிய
வில்லை. இயேசு குறித்து என் பார்வையைச் சொல்கிறேன்.

பிறகு முடிவு செய்யுங்கள்... இயேசுவின் வசனங்களில் புகழ்
பெற்ற வசனம் உண்டு.

"இறந்தவனை இறந்தவர்களிடமே விட்டுவிடுங்கள்.
இறந்தவரை இறந்தவர்களே பார்த்துக் கொள்வார்கள்'
என்றொரு பொன்மொழி.

இதன் ஆழமான பொருள் மதத்தன்மையில் ஊறியவர்களுக்கு
ஒருபோதும் விளங்காது. மதவெறி கடந்து
விழிப்படைந்தவர்களுக்கு மட்டுமே அதன் உண்மை
தரிசனமாகும். விளக்குகிறேன்.
--
ஆழமான ஏரியில் ஒருவர் வலையை வீசி மீன் பிடித்துக்
கொண்டிருந்தார். அவர் நிறைய மீன்கள் பிடித்த
மகிழ்ச்சியில் மீன் போலவே துள்ளினார்.

அப்போது அவரது தோள்களை வலிவும் பொலிவும் மிக்க
கைகள் அழுத்தின. அந்த அழுத்தத்தில் அளவு கடந்த அன்பும்
கருணையும் அர்த்தமாயின. திடுக்கிட்டுத் திரும்பிய மீனவர்
தம் தோள்களை அழுத்திக் கொண்டிருக்கும் கைகளுக்குச்
சொந்தக்காரரைக் கண்டார்.

ஊடுருவும் பார்வை. கவர்ந்திழுக்கும் காந்தம் போன்ற
திருமுகம். அவரது ஆளுமை வட்டத்தில் இருந்து மீளுவது
அத்தனை சுலபமல்ல.

"இப்படிச் சின்னச் சின்ன மீன்களைப் பிடித்தே காலம்
கழிக்கிறாயே? என்னுடன் வா. வாழ்க்கையைப் பிடிக்க, இதை
விட உயர்ந்தவற்றை வலை வீசி பிடிக்கும் கலையைச் சொல்லித்
தருகிறேன்'' என்றார் அந்தப் புனிதர்...

அவர் பெயர் இயேசுபிரான். மறுதலிக்க முடியாதவராய்,
வலையையும் மீன்களையும் வீசி விட்டு அவர் பின்னே நடக்கத்
தொடங்கினார் அந்த மீனவர்.

அவரது கருணை மழை, ஞான அலை, மீனவரை அவர் பின்னே
போக விட்டது. இருவரும் சிறிது தொலைவு நடந்த சமயம்...
உறவினர்கள் ஓடி வந்தார்கள்.

"உன் தகப்பன் இறந்து விட்டான்... வா... உடனே வா'' என்று
மீனவரின் உறவினர்கள் கூவி அழைத்தனர். கைகளைக்
கூப்பி யேசுவை நோக்கியவர்,

"போதகரே என் தந்தை இறந்து விட்டாராம்... அவரை அடக்கம்
செய்துவிட்டு உங்கள் பின்னே வந்து விடுகிறேன்... நீங்கள்
கொஞ்சம் காத்திருக்க இயலுமா?'' என்று கண்ணீர் மல்கக்
கேட்டார் அவர்.

இயேசு சிரித்தபடி சொன்னார். "இறந்தவரை இறந்தவர்களே
அடக்கம் செய்யட்டும். நீ போக வேண்டாம். நீ என்னுடன் வா.
நீ உயிருடன் இருக்கிறாய். இந்தக் கிராமத்தில் அநேக
மனிதர்கள் இறந்தவர்கள். அவர்கள் இறந்தவரை அடக்கம்
செய்து விடுவார்கள்'' என்றபடி இயேசு புறப்பட்டார்.

இறந்தவர்கள் இறந்தவரை அடக்கம் செய்வார்கள் என்ற
வசனம் புரிகிறதா? உயிரோடு இருக்கும் போதே சிலர்
செத்தவர்களைப் போல ஆகி விடுவதை யேசு குறிப்பிடுகிறார்.


அவர்கள் விழிப்படையாதவர்கள். இருந்தும் இல்லாதவர்கள்.
உயிருண்டு... ஆனால் உயிர்ப்பில்லை. அவர்கள் இறந்தவர்கள்...
அவர்கள் நிஜமாகவே மரித்துப்போனவர்களை அடக்கம்
செய்வார்கள் என்கிறார் யேசு.

என்னை உலுக்கிய வரிகளில் வலிமையான வரி இது!
-
---------------------
-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 80467
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Nov 10, 2018 6:09 pm


-
விழிப்புணர்வு என்பது மதங்கடந்தது என்பதை உணர்த்த
இஸ்லாத்தில் இருந்தும் ஓர் உதாரணம் தருகிறேன்.

ஹசரத் அலி என்கிற பெருமகனார், இஸ்லாத்தை - மார்க்கத்தை
நிலை நாட்ட ஒருவருடன் போருக்கு அழைக்கப்பட்டார். போரிட
வந்தவருக்குக் கொள்கை விளக்கங்களை உணர முடியாததால்,

"என்னைப் போரில் நபிகள் வென்றால் மார்க்கத்தில்
இணைகிறேன். வெற்றி முடிவானது'' என்று சவால் விட்டார்
.
நபிகள் ஹசரத்தைப் போரிட பணித்தார்.

மற்ற விவரங்களை நாகூர் ரூமி அவர்கள் புத்தகத்திலிருந்து
படித்ததைத் தருகிறேன்.

தன் எதிரியைக் கீழே தள்ளி அவன் நெஞ்சின் மீது அலி
உட்கார்ந்து விட்டார்கள். வெற்றி முடிவானது. அந்த நேரத்தில்
அந்த எதிரி ஒரு காரியம் செய்தான். தோற்றுப் போகப்
போகிறோம் என்று தெரிந்து விட்ட தருணத்தில் யாரும்
செய்ய நினைக்காத, செய்யத் துணியாத காரியம் அது.

திடீரென்று அலீயவர்கள் முகத்தில் காறி உமிழ்ந்துவிட்டான்.
அவ்வளவுதான்! அலீக்குக் கோபம் பொங்கியது. அவனைக்
கொல்ல வாளை உருவினார்கள்.

ஆனால் என்ன நினைத்தார்களோ, உடனே எழுந்து
விட்டார்கள். "உன்னைக் கொல்லாமல் விட்டுவிடுகிறேன்.
நீ போய்விடு'' என்றார்கள்.

எதிரிக்கு ஒரே ஆச்சரியம். நாமாக இருந்திருந்தால்
தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடி வந்திருப்போம்.
ஆனால் அவனோ அலீயின் செயலுக்கு விளக்கம் கேட்டான்.

முகத்தில் காறி உமிழ்ந்து அவமானப்படுத்தியும்
ஏன் என்னை விடுகிறீர்கள்? என்று கேட்டான்.

அலீ சொன்னார்கள்: நீ என் முகத்தில் காறி உமிழ்ந்த போது
எனக்கு பயங்கரமான கோபம் வந்துவிட்டது. உடனே நான்
உன்னைக் கண்டம் துண்டமாக வெட்டிப் போட நினைத்தேன்.

ஆனால் அப்படி நான் செய்திருந்தால், அது என் கோபத்தின்
காரணமாக உன்னைக் கொலை செய்ததாகும்.
இது இறைவனுக்காக நடத்தப்படும் யுத்தம். இதில் என்னுடைய
உணர்ச்சிகளுக்கு இடம் கொடுத்து இந்தப் போரின்
புனிதத்தைக் கெடுக்க நான் விரும்பவில்லை.

ஃபார்ஸி மொழியில் இயற்றப்பட்ட தனது மஸ்னவி என்ற
காவியத்தில் மௌலானா ஜலாலுத்தீன் ரூமி (ரஹ்) அவர்கள்
இந்த நிகழ்ச்சியை விவரித்து சிலாகிக்கிறார்கள்'' என்கிறார்
நாகூர் ரூமி.

இறைவனுக்காக என்று தொடங்கிய சண்டை தன் மீது எச்சில்
துப்பியதற்கான கொலையில் முடிவது சரியல்ல என்ற விழிப்பே
அலீ அவர்களின் சிறப்பு.
-
-----------------------------
-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 80467
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Nov 10, 2018 6:12 pm
கோபத்தில் நாம் எதுசெய்தாலும் அது விழிப்புணர்வற்ற
செயல் என்று அறிய வேண்டும். இன்னும் பல புனிதமான
பெயர்களில் மனிதர்கள் வன்முறை இன்று
நிகழ்த்துகிறார்கள்.

ஆனால் உண்மையான காரணம் அறிவு தூங்கி வழிய,
மனக்குழப்பம் தலைவிரித்தாடி அந்தப் பிழைகளை
அரங்கேற்றம் செய்கிறார்கள்.

இந்த நுட்பமான பார்வையை உங்கள் மூன்றாவது
கண்தான் வழங்கமுடியும். விழிப்புணர்வற்ற நிலையை
விளக்கும் ஜென் கதை ஒன்று சொல்கிறேன்.
கொஞ்சம் நம்ம ஊர் சரக்காக்கித் தருகிறேன்.


பல அடுக்குகளைக் கொண்ட மாடியின் உச்சியில் நின்று
கொண்டிருந்தார் ஒரு நபர். தரை தளத்தில் தெரிந்த நீச்சல்
குளத்தை இரசித்துக் கொண்டிருந்தார்.

அப்போது பக்கத்தில் ஒரு பெருங்கூச்சல் கேட்டது.
"ஏ... ராமசாமி உன் மகன் நீச்சல் குளத்தில் விழுந்துட்டான்''
என்று அலறினார் ஒருவர். அவ்வளவுதான்... மேல்
மாடியிலிருந்து நீச்சல் குளம் நோக்கிக் குதித்தார் அந்த நபர்.

ஆனால் நீச்சல் குளம் நோக்கித் தலை கீழாக வரும் பாதி
வழியில் தான் அவருக்கு உரைத்தது... "நான் ராமசாமி
இல்லையே... கிருஷ்ணசாமி அல்லவா என் பெயர்' என்று
குழம்பினார்.

கொஞ்ச தூரத்தில் வரும்போது நமக்கு மகன் இல்லை
காரணம் திருமணமே ஆகவில்லை... அப்படியிருக்க
ஏன் குதித்தோம் என்று கவலைப்பட்டார்.

இது உண்மையல்ல... ஒரு வேடிக்கைக் கதை...

ஆனால் பல மனிதர்கள் குழப்பத்திலும் மயக்கத்திலும்
செயல்படுகிறார்கள். என்பதை எடுத்துரைக்கும்...
இல்லை... இடித்துரைக்கும் கதை.

நாம் குழப்பத்தில் செயல்படுகிறோம் என்பதை உணரும்
அந்தக் கணத்தில்தான் விழிப்பே தொடங்குகிறது...

புரிந்தால் சரி!
-
---------------------------------------
நீ... நான்... நிஜம்! -தொடர் கட்டுரையிலிருந்து


ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4624
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sat Nov 10, 2018 6:21 pm

சொல்வேந்தரின் வார்த்தைகளை வரிகளாக பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிகள் ஐயா ...புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Nov 11, 2018 12:24 pm

சுகி சிவம் அவர்கள்
கருத்துக்கள் மனதில்
ஒரு எழுச்சியை ஏற்படுத்தும்.
அமைதியான அறிவுபூர்வமான
கருத்துக்கள்.

நன்றி ஐயா

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக