புதிய பதிவுகள்
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Yesterday at 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Yesterday at 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:16 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:15 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Yesterday at 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Yesterday at 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Yesterday at 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 6:58 am

» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Sun May 26, 2024 6:16 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Sat May 25, 2024 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Sat May 25, 2024 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Sat May 25, 2024 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Sat May 25, 2024 12:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்கள் வீட்டில் டீன் ஏஜ் பெண்கள் இருக்கிறார்களா? இந்தக் கட்டுரையை முதலில் படித்துவிடுங்கள்! Poll_c10உங்கள் வீட்டில் டீன் ஏஜ் பெண்கள் இருக்கிறார்களா? இந்தக் கட்டுரையை முதலில் படித்துவிடுங்கள்! Poll_m10உங்கள் வீட்டில் டீன் ஏஜ் பெண்கள் இருக்கிறார்களா? இந்தக் கட்டுரையை முதலில் படித்துவிடுங்கள்! Poll_c10 
16 Posts - 55%
heezulia

11 Posts - 38%
T.N.Balasubramanian

1 Post - 3%
rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்

294 Posts - 45%

278 Posts - 43%
mohamed nizamudeen
உங்கள் வீட்டில் டீன் ஏஜ் பெண்கள் இருக்கிறார்களா? இந்தக் கட்டுரையை முதலில் படித்துவிடுங்கள்! Poll_c10உங்கள் வீட்டில் டீன் ஏஜ் பெண்கள் இருக்கிறார்களா? இந்தக் கட்டுரையை முதலில் படித்துவிடுங்கள்! Poll_m10உங்கள் வீட்டில் டீன் ஏஜ் பெண்கள் இருக்கிறார்களா? இந்தக் கட்டுரையை முதலில் படித்துவிடுங்கள்! Poll_c10 
23 Posts - 4%

17 Posts - 3%
prajai

10 Posts - 2%
சண்முகம்.ப

9 Posts - 1%
Guna.D

4 Posts - 1%
Jenila

Anthony raj

jairam

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்கள் வீட்டில் டீன் ஏஜ் பெண்கள் இருக்கிறார்களா? இந்தக் கட்டுரையை முதலில் படித்துவிடுங்கள்!

Page 1 of 3 1, 2, 3  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Nov 16, 2018 8:30 pm

ஒரு குழந்தை பிறந்தது முதல் இரண்டு வருடங்கள் வரை மழலைப் பருவம் என்றழைக்கப்படுகிறது. இந்த வளர்ச்சி நிலையில் பெரும்பாலும் ஆண்குழந்தை, பெண்குழந்தை என்ற பாலியல் வேறுபாடு மட்டும்தான் காணப்படுகிறதே தவிர, மிகப்பெரிய அளவில் உடலியல் மாற்றங்கள் ஏதும் ஏற்படுவதில்லை. இருபாலரும் சிறு குழந்தைகளாகவும், மழலைமொழி பேசும் மலர்களாகவும் மட்டுமே வளாக்கப்படுகிறார்கள். அதனைத் தொடர்ந்து வரும் எட்டு முதல் பத்து ஆண்டுகள்தான் உடலளவிலும், மனதளவிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தி, அதற்குரிய பாதுகாப்பையும் வளர்ப்பு முறைகளையும் உணர்த்தி, ஆண் குழந்தைக்கும் பெண்குழந்தைக்கும் உள்ள வேறுபாட்டை குறிப்பிட்டுக் காட்டுகிறது. மழலைப் பருவத்தைத் தொடர்ந்துவரும் குழந்தைப் பருவமானது பெண் குழந்தையைப் பொருத்தவரை 2 முதல் 10 வருடங்களாகவும், ஆண்குழந்தைகளுக்கு 2 முதல் 12 வருடங்களாகவும் பகுக்கப்பட்டுள்ளது' என்கிறார் உணவியல் நிபுணர், ப. வண்டார்குழலி இராஜசேகர்.

நன்றி
தினமணி

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Nov 16, 2018 8:31 pm

வளரிளம் பருவம்

குழந்தைப் பருவத்திலிருந்து நடுத்தர வயதிற்கு மாறும் இடைப்பட்ட காலத்தில் உள்ள வளர்ச்சி நிலையே வளரிளம்பருவம் எனப்படுகிறது. பின்பள்ளிப் பருவத்தைத் தொடர்ந்து 10 முதல் 20 வயது வரை வளரிளம் பருவமாகக் கருதப்பட்டு மூன்று வித நிலைகளில் பிரிக்கப்பட்டுள்ளது. அவை 10 முதல் 14 வருடங்கள் முன் வளரிளம் பருவம், 12 முதல் 16 வருடங்கள் வளரிளம் பருவம், 16 முதல் 20 வருடங்கள் பின் வளரிளம் பருவம் என்பதாகும்.

வளரிளம்பருவம் என்பது பெரும்பாலும் "வாய்ப்புகளின் வயது' என்று அழகாகக் கூறப்படுகிறது. பெற்றோர்களால் மிக முக்கியமாகக் கவனிக்கப்பட்டு, அதீத பொறுப்புடன் தங்கள் பருவவயது பிள்ளைகளுக்கு உறுதியான, தெளிவான, எதையும் ஆராய்ந்து பார்த்து பிரச்னைகளை எதிர்கொள்கின்ற பக்குவத்தை உருவாக்கிக் கொடுக்க வேண்டிய காலம். இவ்வாறான செயல்பாடுகளே, வளரிளம் பருவ தலைமுறைகளின் எதிர்காலத்தை சிறப்பானதாக்கிக் கொடுக்கவல்லது.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Nov 16, 2018 8:32 pm

வளரிளம் பெண்களுக்கான ஊட்டச்சத்து

ஒரு மனிதன் ஆரோக்கியமாக இருக்கிறான் என்று எப்போது கூறமுடியும்? ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும், குழந்தையாக இருந்தாலும், வயதிற்கேற்ற உடல் எடையும் உயரமும் கொண்டு, வளர்சிதை மாற்றங்கள், உடலியல் நிகழ்வுகள், இயன்முறை செயல்பாடுகள் ஆகியவை முறையாக உடலில் நிகழ்வதற்கான தகுதியும், ஆத்மார்த்தமான, உள்ளார்ந்த மகிழ்ச்சியும் ஒருங்கே இணைந்திருக்கும்போதுதான் ஆரோக்கியமாக இருப்பதாகக் கூறமுடியும்.

மனித வளர்ச்சியில் ஒரு பெண்ணுக்கு திருமணமாகி, தாய்மையடைந்து, பாலூட்டும் தாயென்ற நிலையை அடைவதற்கு முழுமையான உடல் தகுதியையும், மனப்பக்குவத்தையும், சேர்த்துக்கொடுக்கக்கூடிய வயதுதான் வளரிளம்பருவ வயது என்பதால், இந்த வயதில் ஒவ்வொரு பெண்ணும், பரிபூரண ஆரோக்கியத்தைப் பெற்றிருக்க வேண்டும். இதற்கு, ஊட்டம் நிறைந்த சரிவிகித உணவு மிக முக்கியமான ஒன்றாகும்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Nov 16, 2018 8:33 pm

வளரிளம் பருவத்திற்கான சரிவிகித உணவானது, அந்த வயதில் ஏற்படும் உடற்கூறு சார்ந்த மாற்றங்கள், உடலுறுப்பின் இயக்கங்கள், உயிர் வேதியியல் வினைகள், மனம் மற்றும் சமூகம் சாட்ந்த வளர்ச்சி, அந்த வயதிற்கேற்ற முதிர்ச்சியும், பக்குவமும் சரியான முறையில் நிகழ்வதற்கு முழுமுதலாக துணைபுரிகிறது. ஏதோ ஒரு குறிப்பிட்ட சத்து அல்லது இரண்டு மூன்று சத்துக்கள் தொடர்ச்சியாக உடலுக்கு அளிக்கப்படவில்லை என்றால், இப்பருவப்பெண்ணின் உடலில் சுரக்கும் (IGF1) என்ற சராசரி வளாச்சிக்குரிய ஹார்மோனின் செயல்பாடு குறைவு ஏற்பட்டு வளர்ச்சியிலும் குறைபாடு ஏற்படுகிறது.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Nov 16, 2018 8:33 pm

தொடர்ச்சியான ஊட்டச்சத்து குறைவினால் ஏற்படும் உடல்ரீதியான மாற்றங்கள்

திருமணத்திற்குப் பிறகு, இனப்பெருக்கம் அல்லது பாலுணர்வு சார்ந்த செயல்பாடுகளில் குறைபாடு.

பெண் பூப்பெய்தும் வயது நீடித்தல் அல்லது பூப்பெய்தாமலே இருப்பது

பருவம் அடைந்த பிறகு, சீரான மாதவிடாய் இல்லாதிருத்தல்

வயதிற்கேற்ற சரியான மார்பக வளர்ச்சியின்மை

எலும்புகள் வலுவிழந்து, போதிய உயரமின்மை

ஒழுங்கற்ற உடல் அமைப்பும், இடுப்புப் பகுதியும் மன அழுத்தத்தையும்

மனக்குறையையும் ஏற்படுத்திவிடும்
தோல் பொலிவிழந்தும், காயங்களுடனும் காணப்படுதல்

அடிக்கடி தலைவலி மற்றும் பசியின்மை ஏற்படுதல்

எந்த வேலையிலும் சோர்வடைதல், எதிலும் விருப்பமில்லாமல் இருத்தல்

படிப்பில் கவனமின்மை, குறைவான உட்கிரகிக்கும் திறன், கற்றல் குறைபாடுகள்

அன்றாட நடைமுறைப் பழக்க வழக்கங்களில் குறைபாடுகள் ஒவ்வொன்றாக தொடங்குதல்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Nov 16, 2018 8:36 pm

மேற்கூறிய ஊட்டச்சத்து குறைபாடுகள் பொதுவானவையாகவும், உடல் ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்துவதாகக் கூறப்பட்டாலும், சத்துணவு சார்ந்த ஆரோக்கியக் குறைபாடுகள் மனதளவில் தாக்கத்தை ஏற்படுத்தி, உடலும் மனமும் சரிவர செயல்பட முடியாமல் அதிகப்படியான பிரச்சினைகளை வளரிளம்பருவ வயதில் ஏற்படுத்துகின்றன.

ஊட்டச்சத்து குறைபாடால் ஏற்படும் உடல் மற்றும் மனம் சார்ந்த சிக்கல்கள்

பருவ காலத்தில், ஆண் பிள்ளைகள் எப்பொழுதும் உறுதியான, எடுப்பான உடற்கட்டுடன் இருப்பதற்கும், பெண்பிள்ளைகள் அழகுடன், தோற்றப்பொலிவுடன் ஒல்லியான உடல்வாகுடன் இருப்பதற்கும் முக்கியத்துவம் அளிப்பார்கள். அந்தந்த பாலினத்திற்குரிய இயல்பான வளர்ச்சியில் சிக்கல் ஏற்படும்போதுதான் மனக்குழப்பத்திற்குள்ளாகி எதிலும் ஆர்வமின்மை ஏற்படுகிறது. இவற்றிற்கு, ஊட்டச்சத்து குறைபாடும், அளவிற்கு அதிகமான உணவுப்பழக்கமும் காரணமாகின்றன. அவற்றை சரி செய்துவிட்டால், ஆரோக்கியம் சீராகிவிடும் என்பதை உறுதியாக எண்ணவேண்டும். இந்த வகையான குறைபாடுகளை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Nov 16, 2018 8:37 pm

பசியற்ற உளநோய் (ANOREXIA NERVOSA)

இந்நிலை குறிப்பாக முன்பருவத்திலிருந்து பின்பருவத்திற்கு முன்புவரை (13 முதல் 16 வயது) அதிகமாகக் காணப்படுகிறது. சரியான உணவுகளை உண்ணாமல், பசியுடன் தனக்குத்தானே வருத்திக்கொண்டும், 85 சதவிகிதத்திற்கும் குறைவான உடல் எடையுடன், மெலிந்த தோற்றத்தில்ல் இருப்பார்கள். அவர்கள் தானாக முன்வந்து திருத்திக்கொள்ளாமலும், பெற்றோர்களால் சரிசெய்யப்படாமலும் விட்டுவிடும் தருணத்தில், உடல்நிலை மிகவும் மோசமாகிவிடும். பிறகு ஒழுங்கற்ற மாதவிடாய், கை கால்களில் பொலிவற்ற தன்மை, பூனை முடி (downy Hair) என்று கூறப்படும் வலுவிழந்த காவிநிற அல்லது சாம்பல் நிற முடிவளர்தல் ஆகியவை ஏற்பட்டு அழகற்றதன்மை நிரந்தரமாகிவிடும். சிறிதளவு உணவே உண்டாலும், குமட்டல், வயிற்று உப்புசம், ஏப்பம், மலச்சிக்கல் போன்ற சிறுசிறு உபாதைகளுக்கு ஆளாகிவிடுவார்கள்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Nov 16, 2018 8:40 pm

பசியற்ற உளநோய் உள்ள வளரிளம் பருவத்தினரின் உணவுமுறை மற்றும் மனப்பாங்கு

பசியை மறந்தும், மறைத்தும், குறைவான உணவான இருந்தாலும், அதிக நேர இடைவெளியில் உண்பார்கள்.

உணவு, அதிலுள்ள சத்துக்கள், பயன்கள் ஆகியவற்றைத் துல்லியமாக தெரிந்து வைத்திருப்பதுபோல் பாவனை செய்வார்கள்.

குறிப்பாக, கொழுப்பு உணவுகள், வாசனைப்பொருட்கள், அசைவம், பால் மற்றும் அவை சார்ந்த உணவுகளைத் தவிர்த்துவிடுவார்கள்.

சத்துக்கள் குறைந்த உணவானாலும், ஆடம்பரத்திற்காக உண்ணும் உணவும், சரியான சேர்க்கை இல்லாத உணவுகளுமே சரியான உணவுகள் என்று தர்க்கம் பேசுவார்கள்.

உணவு பரிமாறப்பட்டால், உண்ண வேண்டும் என்ற கட்டாயத்திற்காகவே பொது விழாக்களையும், குடும்ப விழாக்களையும் தவிர்த்துவிடுவார்கள்.

அதிக கோபத்தை வெளிப்படுத்தாமல் எதிலும் மிகச்சரியாக இருப்பதுபோல் தம்மை வெளிப்படுத்திக்கொள்வார்கள்.

மனச்சோர்வுடனும், எதையோ இழந்ததுபோன்ற ஒரு மனநிலையிலும், தன்னைக் குறைத்து மதிப்பிட்டுக்கொள்ளும் தாழ்வு மனப்பான்மையுடனும் காணப்படுவார்கள்.

உண்ணவில்லை என்றாலும், உடல் குண்டாகி விட்டதாக எண்ணும் உள்ளுணர்வால், தேவையற்ற அச்சத்துடன் அவசியமில்லாத உணவுக்கட்டுப்பாட்டு முறைகளை பின்பற்ற நினைப்பார்கள்.

எந்தவிதமான சமுதாய விழாக்களிலும், உறவினர்கள் மற்றும் பள்ளி அல்லது கல்லூரி விழாக்களிலும் தம்மை ஈடுபடுத்திக்கொள்ளமாட்டார்கள்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Nov 16, 2018 8:40 pm

இயற்கையை மீறிய பெரும்பசி (Bulimia Nervosa)

குறுகிய நேரத்தில் அளவிற்கு அதிகமான உணவை உண்ணுவதால் ஏற்படும் செரிமானக்கோளாறும், அதனைத் தொடர்ந்து அதிக உணவால் உடல் எடை ஏறிவிடும் என்ற மன உளைச்சலில் உண்ட உணவை வாந்தியாக எடுத்துவிடும் நிலைக்கு என்று ஆங்கிலத்தில் பெயர். இதைச் சரியான பொருளில் கூறும்போது, இயற்கையை மீறிய பெரும் பசி என்றும் கொள்ளலாம்.

இயற்கையை மீறிய பெரும் பசி உள்ள வளரிளம்பருவத்தினரின் உணவுமுறை மற்றும் உளவியல் வெளிப்பாடுகள்

வாந்தி எடுக்கும் நிலையானது, தானாக தொண்டையில் கைவிட்டு வாந்தி எடுத்தல், வாந்தி வருவதுபோல் இருக்கிறது என்று நினைத்துக்கொண்டும், பிறரிடம் கூறிக்கொண்டும், அதே சிந்தைனையில், குமட்டலுடன் வாந்தி எடுத்தல் என்று வெவ்வேறு நிலைகளில் நிகழ்த்துவார்கள்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Nov 16, 2018 8:41 pm

உண்ட உணவானது எளிதில் செரித்து, மலம் வெளியேற வேண்டும் என்பதற்காக மலமிலக்கிகள் மற்றும் சிறுநீர் பிரியும் மருந்துகளை உட்கொள்ளுதல் போன்றவைகளையும் இந்தப் பருவ வயதினருக்கு ஏற்படும் புளிமியா நெர்வோஸா (Bulimia Nervosa) நிலையின் இயல்பாகும்.

தன்னைத்தானே குறைத்து மதிப்பிட்டுக்கொள்ளுதல், தன் உடலைப் பற்றிய முரண்பாடான கருத்து, புற அழகையோ அல்லது உடல் தகுதியையோ முக்கியமாகக் காண்பிக்கும் பணியை விரும்பும் நிலை ஏற்படுதல். குழந்தைப் பருவத்திலிருந்து, நடுத்தர வயதுப்பருவத்திற்கு மாறும்போது ஏற்படும் மன உளைச்சல், இயற்கையை மீறிய பெரும்பசி நிலையை மேலும் அதிகரிக்கிறது.

செயற்கையாக வாந்தி எடுக்கும் இந்நிலையால், அடிக்கடி உடல்எடையில் மாறுபாடுகள் ஏற்படுகின்றன. உடலில் உள்ள தாது உப்புக்களில் குறைபாடு ஏற்படுவதால் உண்டாகும் இதயம் மற்றும் சிறுநீரகம் சார்ந்த தொல்லைகளால் ஆரோக்கிய சீர்கேடு நாளமில்லாச் சுரப்பிகளில் அழற்சி மற்றும் வீக்கம் ஏற்படுதல், கண்ணில் உள்ள இரத்த நாளங்களில் பிளவுகள், நாட்பட்ட நீரிழப்பு, வயிற்றுப்புண் ஏற்படும் நிலை தொடர்ச்சியாக வாந்தி எடுப்பதால், உணவுக்குழாய், தொண்டை, வாய்ப்பகுதியில் புண் மற்றும் இரத்தக்கசிவு ஏற்படுதல்.

Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக