ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Today at 6:12 pm

» உண்மையான ஆண்மை!
by ayyasamy ram Today at 6:10 pm

» நக்கீரர் முக்தி அடைந்த சிவத்தலம்…..(ஆன்மிக தகவல்கள் )
by ayyasamy ram Today at 6:05 pm

» உழைப்பு உயர்வைத் தரும்;
by ayyasamy ram Today at 6:04 pm

» சுவாமி முன் பூக்கட்டி பார்ப்பது சரியா? – (ஆன்மீக தகவல்கள்)
by ayyasamy ram Today at 6:03 pm

» ஒரத்தநாடு கார்த்திக் லிங்க் ஓபன் பண்ண பெர்மிஸன் வேண்டும் உதவி செய்க!
by சக்தி18 Today at 5:41 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---
by heezulia Today at 5:31 pm

» லேப்டாப் அன்பளிப்பா கொடுத்தது தப்பாப் போச்சா...ஏன்?
by kandansamy Today at 5:22 pm

» புதிய முகவரி-ஆன்லைன் மின் கட்டண சேவை
by kandansamy Today at 5:10 pm

» வணக்கம்
by kandansamy Today at 4:03 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by kandansamy Today at 3:30 pm

» வேலன்:-புகைப்படங்கள் எளிதில் பார்வையிட -Sunbil Photo Viewer
by சக்தி18 Today at 2:09 pm

» ஆதார் அட்டையிலும் தமிழ் இல்லையா? – புகாரால் பரபரப்பு!
by ayyasamy ram Today at 2:00 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (306)
by Dr.S.Soundarapandian Today at 1:23 pm

» வேலன்:-2D&3D வடிவங்களின் பரப்பளவு சுற்றளவு மற்றும் கொள்ளளவு அறிந்துகொள்ள
by velang Today at 1:22 pm

» ட்விட்டரில் இன்னும் அறிமுகமாகாத கோலிவுட் நட்சத்திரங்கள்
by சக்தி18 Today at 1:01 pm

» ‘கேப்டன் எங்கும் ஓட முடியாது’: சிஎஸ்கே தோல்வி குறித்து திரையுலக பிரபலங்கள் கருத்து
by சக்தி18 Today at 12:50 pm

» நடிக்கத் தெரியாதவர்கள்…!!
by சக்தி18 Today at 12:45 pm

» ஏர் இந்தியா ஒன்; இரண்டாவது விமானமும் இந்தியா வந்தது!
by ayyasamy ram Today at 12:24 pm

» அரசியல் கட்சி தொடங்கும் விஜய்?? திடீர் ஆலோசனையால் பரபரப்பு!
by Dr.S.Soundarapandian Today at 12:09 pm

» உப்பைப் போல் இரு!
by ayyasamy ram Today at 10:18 am

» பதற்றம் பலவீனம் குறைய…
by ayyasamy ram Today at 10:16 am

» ஆன்மீகம்- இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Today at 10:13 am

» இட்லி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:42 am

» பையனைக் கொஞ்சுற பாட்டு வேணும்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:40 am

» அக்.25 முதல் ‘வலிமை’ படப்பிடிப்பு தொடக்கம்
by ayyasamy ram Today at 9:37 am

» பாலிவுட் நடிகைகளை மணமுடித்த 5 IPL நட்சத்திரங்களின் புகைப்படம்..!
by ayyasamy ram Today at 9:34 am

» டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஐ.பி.எல். 2020 கிரிக்கெட்: ஐதராபாத் அணிக்கு 127 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பஞ்சாப்
by ayyasamy ram Yesterday at 10:00 pm

» ஊருக்கு உபதேசம் : இங்கிலாந்து மகாராணி மது அருந்தும் அளவு தெரியுமா...?
by ayyasamy ram Yesterday at 9:55 pm

» சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜை வாழ்த்துகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» எனக்குப் பிடித்த எஸ்.பி.பி. பாடல்: எழுதுங்கள் வாசகர்களே! - தினமலர்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» துல்லிய துலாபாரம்
by sugumaran Yesterday at 8:44 pm

» பொண்டாட்டிக்கு அமெரிக்காவே பரவால - கடுப்பான கடவுள்!
by ayyasamy ram Yesterday at 8:30 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» குரோதம்
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» குடும்பத்தலைவியின் நவராத்திரி பிரார்த்தனை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சானிடைஸர் -படிகாரம் நீர்
by ayyasamy ram Yesterday at 5:56 pm

» எப்ப பார்த்தாலும் இருக்கற எடத்த சுத்தம் பண்ணிக்கிட்டே இருந்தா அது என்ன வியாதினு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 5:56 pm

» “கல்லையும் கனியாக மாற்றலாம்”
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)
by sncivil57 Yesterday at 5:37 pm

» உ.பி-யில் பழைய பொருட்கள் சேகரிக்கும் என் தந்தைக்கு ‘நீட்’ என்றால் என்னவென்று தெரியாது : வெற்றிப் பெற்ற ஏழை மாணவருக்கு பாராட்டு
by ayyasamy ram Yesterday at 5:27 pm

» பாஜ-வின் பீகார் தேர்தல் வாக்குறுதி போல் அமெரிக்காவையும் விட்டு வைக்காத இலவச தடுப்பூசி : பிரசாரத்தில் கலக்கும் ஜோ பிடன்
by ayyasamy ram Yesterday at 5:21 pm

» உலகின் மிகப்பெரிய ரோபோ!
by ayyasamy ram Yesterday at 5:14 pm

» கூகுள் நிறுவனத்தின் புதிய ஜிமெயில் லோகோ அறிமுகம்..!!
by ayyasamy ram Yesterday at 5:11 pm

» ஆயுத பூஜையை முன்னிட்டு பழங்களின் விலை கிடுகிடு உயர்வு:
by ayyasamy ram Yesterday at 5:05 pm

» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by சக்தி18 Yesterday at 3:32 pm

» கபில் தேவுக்கு மாரடைப்பு... டெல்லி மருத்துவமனையில் ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை
by சக்தி18 Yesterday at 11:30 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 8:06 am

» தீபாவளிக்கு வெளியாகிறது மூக்குத்தி அம்மன் திரைப்படம்
by ayyasamy ram Yesterday at 7:58 am

Admins Online

56 அறிஞர்களுக்கு தமிழ்ப் புத்தாண்டு சித்திரை விருதுகள்எடப்பாடி பழனிசாமி இன்று வழங்குகிறார்

Go down

56 அறிஞர்களுக்கு தமிழ்ப் புத்தாண்டு சித்திரை விருதுகள்எடப்பாடி பழனிசாமி இன்று வழங்குகிறார் Empty 56 அறிஞர்களுக்கு தமிழ்ப் புத்தாண்டு சித்திரை விருதுகள்எடப்பாடி பழனிசாமி இன்று வழங்குகிறார்

Post by ayyasamy ram on Tue Feb 19, 2019 7:09 am

சென்னை,

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழுக்கும், தமிழியல் ஆய்வுக்கும் தொடர்ந்து தொண்டாற்றி வரும் தமிழ் அறிஞர்களுக்கும், கவிஞர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும், நற்றமிழ் நாவலர்களுக்கும், ஆராய்ச்சியாளர்களுக்கும், அயல் நாடுகளில் தமிழ் வளர்க்கும் சான்றோர்களுக்கும், தமிழில் சிறந்த மொழிபெயர்ப்பு வல்லுநர்களுக்கும், தமிழகம் முழுமையும் மாவட்டந்தோறும் தமிழமைப்பு வைத்து தமிழ் வளர்க்கும் ஆன்றோர்களுக்கும், கணினித் தமிழில் சிறந்து விளங்கும் அறிஞர்களின் தமிழ்ப் பணியை போற்றி சிறப்பிக்கப்படுகிறது.

அந்தவகையில் தமிழக வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா, ‘சித்திரைத் தமிழ்ப்புத்தாண்டு விருது’ எனக் கடந்த 2012-ம் ஆண்டிலிருந்து 2016-ம் ஆண்டு வரை 55 விருதுகளைத் தோற்றுவித்து அறிவித்து வரலாற்று சாதனைப்படைத்தார்.

அவருடைய வழியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 2017-18-ம் ஆண்டில் பல்வேறு நோக்கில் பல துறை சார்ந்து தமிழுக்கு உழைத்து வரும் தமிழறிஞர்களைப் பெருமைப்படுத்தும் வகையில் சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் பெயரிலும், 2018-19ஆம் ஆண்டில் தனித்தமிழ் தந்தை மறைமலையடிகளார் பெயரிலும் தமிழ்த்திரு அயோத்திதாசப்பண்டிதர் பெயரிலும் புதியதாக விருதுகளை அறிவித்தார்.

இந்நிலையில் 2019-ம் ஆண்டில் வழங்கப்படும் விருதுகளாக தனித்தமிழ்த் தந்தை மறைமலையடிகளார் விருது, தமிழ்த்திரு அயோத்திதாசர் பண்டிதர் விருது அமைந்திருப்பதால் அதை விடுத்து 2018-ம் ஆண்டுக்கான சித்திரைத் திங்கள் தமிழ்ப் புத்தாண்டு விருதுகள் பெறும் 56 பேரின் பெயர்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார்.

அவ்வகையில் தமிழ்த்தாய் விருது புவனேசுவர் தமிழ்ச் சங்கத்திற்கும், கபிலர் விருது புலவர் மி.காசுமான், உ.வே.சா. விருது நடன காசிநாதன், கம்பர் விருது க.முருகேசன், சொல்லின் செல்வர் விருது ஆவடிக்குமார், ஜி.யு.போப் விருது கு.கோ.சந்திரசேகரன் நாயர், உமறுப்புலவர் விருது பேராசிரியர் சா.நசீமாபானு, இளங்கோவடிகள் விருது சிலம்பொலி சு.செல்லப்பன், அம்மா இலக்கிய விருது உலகநாயகிபழனி, சிங்காரவேலர் விருது பா.வீரமணி மற்றும் 2017-ம் ஆண்டுக்கான முதல்-அமைச்சர் கணினித் தமிழ் விருது வை.மதன்கார்க்கி ஆகியோருக்கு வழங்கப்படவுள்ளன.

இந்த விருதுகளில் தமிழ்த்தாய் விருது பெறும் புவனேசுவர் தமிழ்ச் சங்கத்திற்கு ரூ.5 லட்சம் விருதுத் தொகையுடன் பாராட்டுக் கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படுகிறது. மற்ற விருதுகள் பெறுவோருக்கு ரூ.1 லட்சம் விருதுத் தொகையும் ஒரு சவரன் தங்கப்பதக்கமும் பொன்னாடை மற்றும் தகுதியுரையும் வழங்கப்படும். 2018-ம் ஆண்டுக்கான சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருதுகள் யூமா வாசுகி, லட்சுமண ராமசாமி, மு.சீனிவாசன், ஜி.குப்புசாமி, மருத்துவர் சே.அக்பர்கவுசர், ராஜலட்சுமி சீனிவாசன், செ.செந்தில் குமார், பழனி, அரங்கசாமி, எஸ். சங்கரநாராயணன், ச.நிலா ஆகியோருக்கு வழங்கப்படவுள்ளன. சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது பெறும் ஒவ்வொருவருக்கும் ரூ.1 லட்சம் விருதுத் தொகை தகுதியுரை மற்றும் பொன்னாடையும் வழங்கப்படும்.

2018-ம் ஆண்டுக்கான உலகத் தமிழ்ச் சங்க விருதுகளான இலக்கிய விருது டென்மார்க் நாட்டைச் சேர்ந்த வி.ஜீவகுமாரன், இலக்கண விருது பிரான்சு நாட்டைச் சேர்ந்த கி.பாரதிதாசன், மொழியியல் விருது பிரான்சு நாட்டைச் சேர்ந்த ச.சச்சிதானந்தம் ஆகியோருக்கு வழங்கப்பட உள்ளன.

விருதுகளை பெறும் ஒவ்வொருவருக்கும் ரூ.1 லட்சம் விருதுத் தொகையும் தகுதியுரை மற்றும் பொன்னாடை வழங்கப்படும். மாவட்டங்களில் தமிழ்ப்பணி ஆற்றி அருந்தொண்டாற்றி வரும் 32 மாவட்டங்களின் தமிழ்ச் செம்மல் விருது பெறுவோர் யு.எஸ்.எஸ்ஆர். கோ.நடராசன் (சென்னை மாவட்டம்), அமுதா பாலகிருஷ்ணன் (திருவள்ளூர் மாவட்டம்), அ.ராமானுஜம் (காஞ்சீபுரம் மாவட்டம்), ப.சிவராஜி (வேலூர் மாவட்டம்), ஆ.கவிரிஷி மகேஷ் (கிருஷ்ணகிரி மாவட்டம்), க.சம்பந்தம் (திருவண்ணாமலை மாவட்டம்), செ.வ.மதிவாணன் (விழுப்புரம் மாவட்டம்), இரா.சஞ்சீவிராயர் (கடலூர் மாவட்டம்), பெ.ஆறுமுகம் (பெரம்பலூர் மாவட்டம்), அ.ஆறுமுகம் (அரியலூர் மாவட்டம்), ஆ.கணபதி (சேலம் மாவட்டம்), பொ.பொன்னுரங்கன் (தர்மபுரி மாவட்டம்), சி.தியாகராஜன் (நாமக்கல் மாவட்டம்), வெ. திருமூர்த்தி (ஈரோடு மாவட்டம்), வெ.கருவைவேணு (கரூர் மாவட்டம்), மா.நடராசன் (கோவை மாவட்டம்).

மு.தண்டபாணிசிவம் (திருப்பூர் மாவட்டம்), சோ.கந்தசாமி (நீலகிரி மாவட்டம்), வீ.கோவிந்தசாமி (திருச்சி மாவட்டம்), மு.முத்து சீனிவாசன் (புதுக்கோட்டை மாவட்டம்), சே.குமரப்பன் (சிவகங்கை மாவட்டம்), த.உடையார்கோவில் குணா (தஞ்சாவூர் மாவட்டம்), கவிஞர் நா. சக்திமைந்தன் (திருவாரூர் மாவட்டம்), புலவர் மு.மணிமேகலை (நாகப்பட்டினம் மாவட்டம்), க.சுப்பையா (ராமநாதபுரம் மாவட்டம்).

சு.லக்குமணசுவாமி (மதுரை மாவட்டம்), வதிலைபிரபா (திண்டுக்கல் மாவட்டம்), சு.குப்புசாமி (தேனி மாவட்டம்), க.அழகர் (விருதுநகர் மாவட்டம்), கவிஞர் பே.ராஜேந்திரன் (நெல்லை மாவட்டம்), ப.ஜான்கணேஷ் (தூத்துக்குடி மாவட்டம்), கா.ஆபத்துக்காத்தபிள்ளை (கன்னியாகுமரி மாவட்டம்) தமிழ்ச் செம்மல் விருது பெறும் ஒவ்வொரு விருதாளர்களுக்கும் ரூ.25 ஆயிரம் விருதுத்தொகையுடன் தகுதியுரை வழங்கியும் மற்றும் பொன்னாடை அணிவித்தும் சிறப்பிக்கப்படுவர்.

இந்த 56 அறிஞர்களுக்கு விருதுகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (செவ்வாய்க்கிழமை) சென்னை, தலைமைச் செயலகத்தில் வழங்குகிறார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
--
தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62003
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

56 அறிஞர்களுக்கு தமிழ்ப் புத்தாண்டு சித்திரை விருதுகள்எடப்பாடி பழனிசாமி இன்று வழங்குகிறார் Empty Re: 56 அறிஞர்களுக்கு தமிழ்ப் புத்தாண்டு சித்திரை விருதுகள்எடப்பாடி பழனிசாமி இன்று வழங்குகிறார்

Post by anikuttan on Tue Feb 19, 2019 7:20 am

நமது தெர்மோகால் விஞ்ஞானிக்கும் ஏதாவது ஆறுதல் பரிசு குடுக்க வேண்டும்.
anikuttan
anikuttan
பண்பாளர்


பதிவுகள் : 202
இணைந்தது : 09/09/2012
மதிப்பீடுகள் : 46

Back to top Go down

56 அறிஞர்களுக்கு தமிழ்ப் புத்தாண்டு சித்திரை விருதுகள்எடப்பாடி பழனிசாமி இன்று வழங்குகிறார் Empty Re: 56 அறிஞர்களுக்கு தமிழ்ப் புத்தாண்டு சித்திரை விருதுகள்எடப்பாடி பழனிசாமி இன்று வழங்குகிறார்

Post by T.N.Balasubramanian on Tue Feb 19, 2019 12:20 pm

@anikuttan wrote:நமது தெர்மோகால் விஞ்ஞானிக்கும் ஏதாவது ஆறுதல் பரிசு குடுக்க வேண்டும்.
மேற்கோள் செய்த பதிவு: 1293540

அய்யா உங்களுக்கு தங்க மனசு.

ரமணியன் 


ரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 27298
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9748

Back to top Go down

56 அறிஞர்களுக்கு தமிழ்ப் புத்தாண்டு சித்திரை விருதுகள்எடப்பாடி பழனிசாமி இன்று வழங்குகிறார் Empty Re: 56 அறிஞர்களுக்கு தமிழ்ப் புத்தாண்டு சித்திரை விருதுகள்எடப்பாடி பழனிசாமி இன்று வழங்குகிறார்

Post by சக்தி18 on Tue Feb 19, 2019 2:38 pm

வைகை நதியை மூடிய தேர்மொகொல் விஞ்ஞானி.


மும்பாய் ரயில் தடங்கள் வெப்பம் காரணமாக விரிவடைவதை தடுக்க இலைகள் கொண்டு மூடிய விஞ்ஞானிகள்.மூடிக் கொண்டு போகும் போதே வாயு பகவான் அவற்றை எடுத்து அகற்றிக் கொண்டே சென்றார்.ஏன் இந்தக் கோபம்?

56 அறிஞர்களுக்கு தமிழ்ப் புத்தாண்டு சித்திரை விருதுகள்எடப்பாடி பழனிசாமி இன்று வழங்குகிறார் Mumbaitraintrack-759
சக்தி18
சக்தி18
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2067
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 627

Back to top Go down

56 அறிஞர்களுக்கு தமிழ்ப் புத்தாண்டு சித்திரை விருதுகள்எடப்பாடி பழனிசாமி இன்று வழங்குகிறார் Empty Re: 56 அறிஞர்களுக்கு தமிழ்ப் புத்தாண்டு சித்திரை விருதுகள்எடப்பாடி பழனிசாமி இன்று வழங்குகிறார்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum