புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாகஉறவு. - Page 2 Poll_c10நாகஉறவு. - Page 2 Poll_m10நாகஉறவு. - Page 2 Poll_c10 
20 Posts - 65%
heezulia
நாகஉறவு. - Page 2 Poll_c10நாகஉறவு. - Page 2 Poll_m10நாகஉறவு. - Page 2 Poll_c10 
11 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாகஉறவு. - Page 2 Poll_c10நாகஉறவு. - Page 2 Poll_m10நாகஉறவு. - Page 2 Poll_c10 
62 Posts - 63%
heezulia
நாகஉறவு. - Page 2 Poll_c10நாகஉறவு. - Page 2 Poll_m10நாகஉறவு. - Page 2 Poll_c10 
32 Posts - 33%
mohamed nizamudeen
நாகஉறவு. - Page 2 Poll_c10நாகஉறவு. - Page 2 Poll_m10நாகஉறவு. - Page 2 Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
நாகஉறவு. - Page 2 Poll_c10நாகஉறவு. - Page 2 Poll_m10நாகஉறவு. - Page 2 Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாகஉறவு.


   
   

Page 2 of 2 Previous  1, 2

தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Postதண்டாயுதபாணி Thu Dec 24, 2009 11:17 am

First topic message reminder :











நாகஉறவு என்னும் இந்தச் சித்திர கவியில் நான்கு பாம்புகள் இணைந்துள்ளனவாகக்
காட்டப்பட்டுள்ளன.

நான்கு பாம்புகளுக்குரிய நான்கு சிந்தியல் வெண்பாக்கள் கற்பிப்பு முறையில், ஒரு பாம்புக்கு ஒரு பாடல்
என்றவாறு அப்பாம்புகளின் உடல் வழியில் தொடர்ந்து எழுதப்பட்டுள்ளன.


நாகஉறவு. - Page 2 Sup15

பாடல்களில் வரும் எழுத்துளின் அமைப்பு முறை எவ்வாறு இருக்கவேண்டுமெனின், ஒவ்வொரு சந்தியிலும்,
பாடலடி கூடும் போது, வெவ்வேறு எழுத்து விரவி நிற்காது நின்ற எழுத்தே நின்று பாடலடி பிழையற்றிருக்க
வேண்டும். இந்தநாகப் பிணைப்பில் 23 சந்திகள் உள்ளன. இவ்வாறாக நான்கு வெண்பாக்களை எழுதி
ஓவியத்திலடைப்பது நாநாக உறவு என்னும் சித்திரகவியாகும். (இரண்டு வெண்பாக்களை எழுதி
ஓவியத்திலடைப்பது இரட்டை நாக உறவு என்னும் சித்திரகவியாகும்)


பாடல் 1.
தன்னை யறிதல் தலைப்படுத்துங் கல்வியதா
லெங்ங னறித லுலகியலை - முன்னுவந்
துன்னை யறிக முதல்.

பாடல் 2.
நீக்கு வினைநீக்கி நேர்மைவினைக் கின்னலையா
தீங்குநீ நன்மனத்தால் நன்னயங்க ளுன்ன
வுடன்பெறு வாயுய் தலை.

பாடல் 3.
ஓங்குபனை போலுயர்ந் தென்னே பயனுன்னத்
தீங்கு தனைமனத்து ளெண்ணித்தீ நீக்காதார்
தீங்கினைத் தீப்படுந் தீ !

பாடல் 4.
உன்னை யறிதற் குனதூழ் தரப்பெற்ற
பொன்னைப்பெண் மண்ணாசை போக்கலைக் காணாயே
லென்னை பயக்குமோ சொல் !


இந்தச் சித்திரகவியை எழுதியவர் உடுமலைப்பேட்டையில் வாழ்ந்து மறைந்த பாவலர் க.பழனிவேலனார் ஆகும்.
நன்றி : பாவலர் க.பழனிவேலன் அச்சாக்கியுள்ள சித்திரக்கவி நூல். (இந்நூலில் கோமுத்திரி (பசு நீர்த் தாரை),
இரட்டைநாக உறவு, நான்காரைச் சக்கரம், ஆறாரைச் சக்கரம், எட்டாரைச் சக்கரம், சுழி குளம், நாற்புற நுழைவாயிற்
கவிதை, முரசு வார்க்கட்டு ஆகிய சித்திரக் கவிகளும் உள்ளன)










சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 24, 2009 5:08 pm

மிக அழகாகவும் எளிமையாகவும் விளக்கமளித்துள்ளீர்கள் நந்திதா! நன்றி!



நாகஉறவு. - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Thu Dec 24, 2009 5:09 pm

https://eegarai.darkbb.com/-f17/-t465-10.htm

இந்த பதிவு ஈகரையில ஏற்கனவே உள்ளது என்பதை நினைவு கூறுகிறேன்..! நாகஉறவு. - Page 2 838572



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 24, 2009 5:14 pm

ஆம் பாடல் உள்ளது, ஆனால் விளக்கம் இப்பொழுதுதான் கிடைத்துள்ளது!



நாகஉறவு. - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Dec 24, 2009 5:21 pm

ஓங்குபனை போலுயர்ந் தென்னே பயனுன்னத்
தீங்கு தனைமனத்து ளெண்ணித்தீ நீக்காதார்
தீங்கினைத் தீப்படுந் தீ !


ஓங்கி நீண்டு உயர்ந்த பனை மரம் போல் வளர்ந்தென்ன பயன்? தன் மனத்திலுள்ள தீய எண்ணங்களை
நினைத்து அதனை விலக்காதாரை அவருள்ளத்திலுள்ள தீங்கினை எரிப்பது போல் தீயானது
அவரையே எரித்து விடும்






மிக்க நன்றி அக்கா , மிக சிறந்த கருத்துக்கள்.
தமிழ் மொழியின் மேன்மை என்னை வியப்படையசெய்கிறது



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Thu Dec 24, 2009 9:26 pm

வணக்கம்
எனக்கு எதற்கு நன்றியெல்லம். ஈகரையில் எழுத வாய்ப்புக் கொடுத்தமைக்கு நான் தான் உங்கள் அனைவருக்கும் நன்றி சொல்லக் கடப்பாடுள்ளவள்
அன்புடன்
நந்திதா

தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Postதண்டாயுதபாணி Fri Dec 25, 2009 7:51 pm

அக்கா மிக்க நன்றி நாகஉறவு. - Page 2 677196 நாகஉறவு. - Page 2 677196 நாகஉறவு. - Page 2 677196 நாகஉறவு. - Page 2 154550 நாகஉறவு. - Page 2 154550 நாகஉறவு. - Page 2 154550

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Fri Dec 25, 2009 8:16 pm

இளவல் திரு தண்டாயுத பாணி
வணக்கம்
சிந்நாட்களுக்கு முன் என் அன்புக்குரிய இளவல் திரு கிருபை ராஜன் ஒரு வினா எழுப்பி இருந்தார். அதற்கான விடை எழுத நேரமில்லாது போயிற்று. மதிப்புக்குரிய சிவா அவர்களின் அனுமதி கிடைக்கும் என்ற எண்ணத்தில் இதைப்பதிவு செய்கிறேன்

திரு முருகனுக்கு ஆறு முகங்கள். அவைகளை வரிசைப் படுத்து முகத்தான் அருணகிரி நாதர்
ஏறு மயிலேறி விளையாடு முகம் ஒன்று
ஈசனுடன் ஞான மொழி பேசு முகம் ஒன்று
கூறும் அடியார்கள் வினை தீர்க்கும் முகம் ஒன்று
குன்றுருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்று
மாறு படு சூரரை வதைத்த முகம் ஒன்று
வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்று
என்று ஆறு திருமுகங்களுக்கும் விளக்கம் கூறிய அருண கிரியார் திருமுருகனிடமே வேண்டுகின்றார்.
ஆறுமுகமான பொருள் நீ அருள வேண்டும்
ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே!
அப்படியெனின் அந்த ஆறு முகங்களுக்குக் காரணம் என்னை?
ஆறு கார்த்திகைப் பெண்கள் எடுத்து வளர்த்ததனால் ஆறு குழந்தைகளாகி பிறகு ஒன்றாகச் சேர்த்து ஓரூருவம் ஆக்கினர் என்பது புராணம். புராணங்களுக்குப் பின் உண்மைகள் மறைந்திருக்கும். கார்த்திகை என்பது அக்னி நட்சத்திரம். அவை எண்ணிக்கையில் ஆறு. வாக்கிற்கு அக்னி என்ற பெயரும் உண்டு என்கிறது நிருக்தம். அந்த வாக்கும் ஆறு பகுதிகளால் ஆனது.
அவை வர்ணம் ஸ்வரம் மாத்திரை பலம், சாமம் சந்தானம். விரிவஞ்சி இத்துடன் முடிக்கிறேன். வேத மந்திரம் கூறுகிறது
வாக் ஏஷா வை சுப்ரஹ்மண்யம் ஆஸீத். நாம் பேசும் இந்த வாக்குத்தான் சுப்ரமண்யம் ஆயிற்று. உலகின் முதன் மொழியான தமிழுக்கு இறைவன் முருகன் என்பது எல்லோராலும் ஒப்புக் கொள்ளப் பட்ட உண்மை.
கல்வி இரண்டு வகைப் படும் ஒன்று கேட்டுத் தெரிந்து கொளவது மற்றது உண்ர்ந்து தெரிந்து கொள்வது. இறைவனை ஒருமுறை வலம் வந்து மாங்கனியைப் பெற்றுக் கொண்டார் விநாயகன். ஆகவே முருகன் உணர்ந்து அறிந்து கொள்ள எடுத்துக் கொண்ட நிலை ஆஸ்ரமங்களின் முதற்படியில் உள்ள ப்ரம்மசரியம். அதற்கு முக்கியமான ஒன்று தண்டம் ( கம்பு அல்லது கோல்) காரணம் இந்தக் கம்பைப் போல் என்னுடைய படிப்பில் உறுத்தியாக இருப்பேன் என்று கொள்வதற்காக. தண்டமே ஆயுதமாக ஆனதால் முருகனுக்கு தண்ட பாணி ( பாணி என்றால் கை கையில் த்ண்டத்தை வைத்திருப்பதால்) என்றும் தண்டத்தையே ஆயுதமாகக் கொண்டு இருப்பதால் தண்டாயுத பாணி என்ற பெயரும் உண்டாயிற்று, மனம் என்னும் நிலத்தைப் பண் படுத்தி இறை என்னும் பயிரை விளைவிப்பதால் அந்தத் தலத்துக்கு பழனி (பழநி அல்ல) என்ற பெயர் ஏற்பட்டது. பழனம் என்றால் விளை நிலம். சடகோபர் என்னும் நம்மாழ்வார் என்றும் புகழப் பெற்ற வைணவ அடியார் தன்னைப் பற்றிக் கூறுங்கால் விளை நிலங்கள் சூழப் பெற்ற திருக்குருகூரில் அவதரித்த என்ற பொருள் படும்படியாகத் தம்மை "பழனக் குருகூர்ச் சடகோபன்" என்றார்.
இன்னும் விளக்கம் வேண்டின் தயங்காது எழுதுக. தெரிந்த வரை தருகிறேன்
திரு சிவா அவர்கள் அனுமதி வேண்டி நிற்கும்
அன்புடன்
நந்திதா

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக