ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» வர இருக்கும் திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» மனதை வெற்றி கொள். - -ஸ்ரீஅன்னை
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» பெண்கள் முன்னேற்றமே என் மூச்சு!
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» இந்தியா-ஆஸ்திரேலியா போட்டிக்கு நடுவே, காதலிக்கு ப்ரபோஸ் செய்த இந்தியர், வைரல் வீடியோ!
by T.N.Balasubramanian Yesterday at 8:43 pm

» கிட்னி பெய்லியருக்கு சிறந்த சித்த மருத்துவம் எங்கு உள்ளது
by T.N.Balasubramanian Yesterday at 8:40 pm

» உபரிநீர் திறக்கப்பட்டபோது செடி, கொடிகள் சிக்கியது; மதகுகளை மூடமுடியாமல் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 21 அடிக்கு கீழ் சரிந்தது: மழைநீரை தேக்க முடியாத அவலம்
by T.N.Balasubramanian Yesterday at 8:39 pm

» நீளமான முடி: கின்னஸ் சாதனை படைத்த பெண்
by சக்தி18 Yesterday at 8:31 pm

» இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை..
by சக்தி18 Yesterday at 8:20 pm

» சஸ்பென்ஸ் நீடிப்பு... விரைவில் முடிவு எடுப்பதாக ரஜினிகாந்த் பேட்டி
by சக்தி18 Yesterday at 8:17 pm

» இனிப்பை விற்க 120 கிமீ சைக்கிள் பயணம்!
by சக்தி18 Yesterday at 8:03 pm

» 20 நாட்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,784 குறைந்தது
by T.N.Balasubramanian Yesterday at 6:59 pm

» ஐஏஎஸ் அதிகாரி சகாயம் விவகாரம் ! தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு !!
by T.N.Balasubramanian Yesterday at 6:17 pm

» சினிமா அமைப்புக்கு தூதராக ஏ.ஆர்.ரகுமான் நியமனம்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» நேற்று 31 மாவட்டங்களில் கொரோனாவுக்கு ஒருவர் கூட பலியாகவில்லை !
by ayyasamy ram Yesterday at 5:16 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» ஐமுகமுழவு/குடமுழா - தோற்கருவி
by T.N.Balasubramanian Yesterday at 4:17 pm

» காலம் - ஒரு வரலாற்றுச் சுருக்கம் - ஸ்டீஃபன் ஹாக்கிங் புத்தகம் இருந்தால் பகிரவும்
by Guest Yesterday at 2:06 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 1:43 pm

» மற்ற ஆல்-ரவுண்டர்களையும் வளர்ப்பது அவசியம்: ஹர்திக் பாண்ட்யா
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» வெள்ளை மாளிகையின் சுற்றுச்சூழல் தலைவராக இஸ்லாமியரை நியமிக்க ஜோ பைடன் முடிவு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:02 pm

» தொடத் தொடத் தொல்காப்பியம்(492)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:48 pm

» ஊரடங்கு புதிய தளர்வுகள்:
by ayyasamy ram Yesterday at 11:22 am

» ரமணீயன் கவிதைகள்
by T.N.Balasubramanian Yesterday at 10:17 am

» அமெரிக்க பள்ளிகளில் இந்திய வன மனிதன்!
by ayyasamy ram Yesterday at 9:37 am

» மயானங்களைப் புதுப்பிக்கும் தொழிலதிபர்!
by ayyasamy ram Yesterday at 9:19 am

» சாலைப் பள்ளி (Road Schooling) என்னும் புதிய கல்வி முறை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நம்பினால் நம்புங்கள் ஒரு ஹேண்ட் பேக் விலை ரூ.53 கோடி
by ayyasamy ram Yesterday at 8:59 am

» அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை உலகிலேயே மிகவும் சிறிய மெமரி சிப் கண்டுபிடிப்பு: பிளாஷ் மெமரி சிப்பை தூக்கி சாப்பிடும்
by ayyasamy ram Yesterday at 8:51 am

» பச்சை மயில் வாஹனனே
by ayyasamy ram Yesterday at 7:20 am

» 108 முருகர் போற்றி
by ayyasamy ram Yesterday at 7:19 am

» தி.மலையில் பக்தர்கள் இல்லாமல் முதல் முறையாக நடந்த தீப விழா
by ayyasamy ram Yesterday at 6:59 am

» கனடாவில் வளரும் காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பு; மோடி அரசுக்கு எதிராகப் போராட்டம்
by ayyasamy ram Yesterday at 6:52 am

» ஏப்ரலில்?தமிழக சட்டசபை தேர்தல்:ஒரே கட்டமாக நடத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» மினி ஸ்டோரி – பந்தலிலே பாகற்காய்!
by ayyasamy ram Yesterday at 6:42 am

» மூத்த மாப்பிள்ளை
by ayyasamy ram Yesterday at 6:40 am

» சீனாவுக்கு எதிரான பிரச்னையில் இந்தியாவுக்கு புதிய நிர்வாகம் முழு ஆதரவு அளிக்கும் : அமெரிக்க எம்.பி.,
by ayyasamy ram Yesterday at 6:33 am

» குளிர்காலம் கடுமையானதாக இருக்கும்: வானிலை மையம் எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 6:30 am

» மாப்பிள்ளை தேடுதல்!
by ayyasamy ram Yesterday at 6:25 am

» அறத்தால் வருவதே இன்பம்- அறிவுக்கதைகள்
by ayyasamy ram Yesterday at 6:25 am

» மாருதி வேணும்னு கேட்டதை தப்பாப் புரிஞ்சுக்கிட்டாங்க!
by ayyasamy ram Yesterday at 6:24 am

» மருமகன்களின் அறிவுத் திறமை
by ayyasamy ram Yesterday at 6:23 am

» படத்துலே உங்களுக்கு வசனமே கிடையாது..!!
by ayyasamy ram Yesterday at 6:22 am

» எஸ்.வி.சகஸ்ர நாமம் 10
by ayyasamy ram Yesterday at 6:19 am

» அன்பு
by kandansamy Sun Nov 29, 2020 9:56 pm

» மோசமான சுகாதார அமைப்பு கொண்ட இந்தியாவில் இருந்துதான் கொரோனா உருவானது - சொல்கிறது சீனா
by T.N.Balasubramanian Sun Nov 29, 2020 9:07 pm

» பாலிவுட் படத்தின் ரீமேக்கில் திரிஷா?
by ayyasamy ram Sun Nov 29, 2020 8:08 pm

» ஆதிபுருஷ் படத்தில் ராமராக பிரபாஸ்.... சீதையாக நடிக்கப்போவது யார் தெரியுமா?
by ayyasamy ram Sun Nov 29, 2020 8:02 pm

» அந்த ஒரு காரணத்திற்காக தனுஷ் படத்திலிருந்து நீக்கப்பட்டேன் - ஐஸ்வர்ய லட்சுமி
by ayyasamy ram Sun Nov 29, 2020 7:56 pm

» மீண்டும் ஒருமுறை சேஸிங் செய்ய முடியாமல் சரணடைந்த இந்தியா: தொடரையும் இழந்தது
by ayyasamy ram Sun Nov 29, 2020 7:51 pm

» மீம்ஸ்- மொட்டை மாடில விளக்கும் கொளுத்தி வைக்கணுமாம்..
by ayyasamy ram Sun Nov 29, 2020 5:58 pm

Admins Online

செருப்பு வேதம் – நகைச்சுவைக் கவிதை

Go down

 செருப்பு வேதம் – நகைச்சுவைக் கவிதை Empty செருப்பு வேதம் – நகைச்சுவைக் கவிதை

Post by சண்முகம்.ப on Fri Jan 24, 2020 10:52 am

 செருப்பு வேதம் – நகைச்சுவைக் கவிதை Kisspng-flip-flops-sandal-beach-shoe-microporous-light-plastic-beach-sandals-men-s-casu-5a8d129c77aa21.4845245115191947804902

வேதம் பேசும் ஜோடிச் செருப்பு
என்னுடன் உள்ளது;
அது கற்பனையில் உருவாகி, உருவகமாய் மாறி
வார்த்தைகளாய் இங்கு வழிகிறது!

“ரிக்வேதத்தில்
அஸ்வினித் தேவர்கள்
ஜோடியாய் வந்து காப்பாற்றுவதுபோல,
பாதையில் கல்லும் முள்ளும் குத்தாமலிருக்க
ஜோடியாய் என்னை ரட்சிப்பதால்
பாதரட்ஷை உனது பெயர்;

வேதம் பேச வந்ததால்
நீ எனக்கு குரு!
மெய்யான சத்குரு!
குருவாகிப் போனதனால்
குருகீதை சொல்வதுபோல்
பரப்பிரம்மமும் நீயே!” என்றேன்.

செருப்பு சொல்லியது,
"நீயே அது, தத்வமஸி!
உன் ஆழத்தில் போய்,
தேடலில் மூழ்கித்
தன்னை அறிந்து ஞானம் பெற்றால்,
நான் நீ என்ற
பேதமெல்லாம் மறைந்து விடும்;
பின் உன்னில் உண்மையையும்,
உண்மையில் உன்னையும்
காணலாம்" என்று.

சிரித்து விட்டுச்
சொன்னேன்,
"இதைப் படித்தால்
கமலஹாசன் கவிதைபோல்
இருக்கிறது என்பார்கள்;
கொஞ்சம் எல்லோருக்கும்
புரியும்படி
எதாவது சொல்!"

சிரிப்பு வார்விட்டுச் சிரித்தது;
நாம் வாய்விட்டுச் சிரித்தால்
நோய்விட்டுப் போகும்;
செருப்பு வார்விட்டுச் சிரித்தால் அதற்கு
நோய் வரும்!

பரவாயில்லை!
தெருமுனையில் செருப்பு வைத்தியர்
ஒருவர் இருக்கிறார்;
அவரது ஊசியை வைத்து,
ஒரு நிமிட அறுவை சிகிச்சையில்
வாரைத் தைத்து விடுவார்!

செருப்பு தொடர்ந்தது,
"சினிமாவில் பார்த்ததுண்டா?
காதல் கடிதம் கொடுப்பதற்கெல்லாம்
'செருப்பு பிஞ்சிடும்' என்று
பதில் சொல்வதுபோல்
காட்சிகள் இருப்பதுண்டு;
அவர்களுக்குப் புரியவில்லை,
காதலின் சின்னமே
ஜோடிச் செருப்புதான் என்று!
ஒன்றில்லாமல் இன்னொன்று
எப்படி இருக்கும்?

நாங்கள் இருவர்தான்;
ஆனால், நீங்கள்
எங்களை அணிந்து
நடக்கும் நடையில்
அந்த இருமை மறைந்து ஒருமை ஆகிறது;
துவைதம் மறைந்து அத்வைதம் ஆகிறது!

இரு காலணிகள், ஒரே நடை;
நெருப்பும் சூடும் இணைந்திருப்பது போல,
சக்தியும் சிவமும் இணைதிருப்பது போல,
வலதும் இடதுமான நாங்கள் இணைந்திருக்கிறோம்;
மனிதர்கள் நீங்கள்தான்
வலது சாரி, இடது சாரி என்று
அடித்துக் கொள்கிறீர்கள்;
எதுவாய் இருந்தால் என்ன?
ஒரு 'சாரி' சொல்லிவிட்டுப்
போய்விட வேண்டியது தானெ?”

"நியாமம்தான்" என்பதுபோல்,
தலையசைத்துவிட்டுக் கேட்டேன்,

"செருப்பு சத்குரு!
பல ஆண்டுகளுக்கு முன்
ஒரு பெரியவர் ராமனுக்குச்
செருப்பு மாலை போட்டதாக
ஒரு புரளி கிளம்பி இருக்கிறதே,
அதைப் பற்றிய தங்களது கருத்து?"

செருப்பு சொன்னது,
"செருப்பு ராமனின் அடையாளம்!
அவன் வனவாசம் சென்றவுடன்
அவனது செருப்புதான் நாட்டை ஆண்டது;
என்னால் அவனுக்கு மாலையணிவித்து
இருந்தால் எனக்கு அது பெரும்பாக்கியம்.
ராமனை முறைப்படி வணங்கியவர்
அவராய்த் தான் இருக்கும்,
அந்த நிகழ்வு உண்மையென்றால்."

பதறிப்போய் சொன்னேன்,
"உஷ்! மெதுவாய்ப் பேசு!
உன்னை 'ஆன்டி ஹிந்து'
என்று சொல்லி
உள்ளே வைத்து விடுவார்கள்."

அது நகைத்துச் சொன்னது,
"என்னை யாரும் உள்ளே வைக்க முடியாது,
எங்கு சென்றாலும் என்னை
வெளியில் ஒரு மூலையில்தான்
வைப்பார்கள்." என்று.

"அப்படியென்றால், ராமனுக்குச்
செருப்பு மாலை போட்டது தவறில்லையா?"
என்று மெதுவாய்க் கேட்டேன்.

அது சொல்லியது,
"அந்த பெரியவர்
போட்டாரா இல்லையா என்பது
ஒரு பக்கம் இருக்கட்டும்;
அவர் எந்த நோக்கத்தில் போட்டார்?
ஆதிக்கத்தை எதிர்த்துப் போட்டிருந்தால்
செருப்பு போட்டாலும் நியாயமே!
அதை ஆதரித்துப் போட்டால்
பூப் போட்டாலும் குற்றமே!

நீ சொல்லும்
இந்து தர்மத்தில்
இறை நிந்தனை என்ற
கோட்பாடே கிடையாது!

சொல்லப் போனால்,
நிந்த ஸ்துதி என்ற
ஒரு வகைத் துதியே உண்டு!
இறைவனை நிந்தித்துப் பாடினாலும்
அது பக்தியே!
துவேஷ பக்தி என்று சொல்வார்கள்.
கம்சனுக்குக் கண்ணன் மேல் இருந்தது அது,
அதனால் அவன் முக்திபெற்றதாகக் கதையும்
சொல்வார்கள்.

எச்சிலால் சிவனுக்கு அபிசேகம் செய்து,
பன்றிக்கறி படைத்துக்
கண்ணப்ப நாயனார்
வழிபாடு செய்த கதை கேட்டதில்லையா?

புலித்தோல் விரித்து சிவன் அமரும்போது,
மாட்டுத் தோலால் ஆன
செருப்பினால் ராமன் குளிர்காய்ந்தது
தவறில்லை!

அவரைப் போன்றவர்மீது
பழிகற்கள் எறிபவர்கள்
தான் எவ்வளவு ஒழுங்கு என்பதை
எண்ணிப் பார்க்கவேண்டும்;

யாரோ சில மனிதர்களுக்காக போராடும்
ஒருவனும் கடவுள் சேவையைத்தான் செய்கிறான்.
கண்ணீரைத் துடைப்பவன்
பக்தனைவிடக் கடவுளுக்கு நெருக்கமானவன்;
அவன் கடவுளை நம்பாவிட்டாலும் கூட!”.

தொடர்ந்து கேட்டேன்,
"செருப்பு சத்குரு,
ஆன்மீக அரசியல் பற்றி
உங்கள் கருத்து என்ன?"

"ஆன்மீகம் என்ற வார்த்தை ஆன்மா என்ற
வார்த்தையில் இருந்து வந்தது;
'ஆன்மா' என்ற வார்த்தைக்குப் பொருள்
பலருக்குத் தெரியாது; ஏன்,
பெரியாருக்கே தெரியாது;
ஆன்மா என்றால் 'தான்' என்று பொருள்;
அது தன்னைக் குறிக்கும் சொல்.
ஆன்ம ஞானம் என்றால் 'தன்னை அறிதல்';
ஆன்மிகப் பயணம் தனிமனிதப் பயணம்;
அதற்கும் அரசியலுக்கும் என்ன சம்பந்தம் என்று
சொன்னவரைக் கேள்" என்றது.

அடுத்துக் கேட்டேன், "ரஜினியைப் பற்றிய
உங்கள் கருத்து?"

"ரஜினியா! யாரது?" என்றது செருப்பு.

"அவர் எங்கெ எப்போ எப்படி வருவார்னு யாருக்கும் தெரியாது! வரவேண்டிய நேரத்தில் கட்டாயம் வருவார்" என்றேன் தலையைக் கோதியபடி..

"சரி வரட்டும் பார்க்கலாம்" என்றது செருப்பு!
சண்முகம்.ப
சண்முகம்.ப
பண்பாளர்


பதிவுகள் : 60
இணைந்தது : 11/01/2018
மதிப்பீடுகள் : 13

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum