ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 8:06 am

» தீபாவளிக்கு வெளியாகிறது மூக்குத்தி அம்மன் திரைப்படம்
by ayyasamy ram Today at 7:58 am

» “400 ரூபாய் இருந்தால் காலம் முழுவதும் உட்கார்ந்து சாப்பிடலாம்.”
by ayyasamy ram Today at 7:48 am

» படுமோசமாக சொதப்பிய சிஎஸ்கே... மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி!
by ayyasamy ram Today at 7:40 am

» கர்நாடகாவில் நவ.17 முதல் கல்லூரிகள் திறப்பு: அரசு முடிவு
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» ராப்பிச்சை ரொம்ப ட்ரண்டியா மாறிட்டான்!
by kandansamy Yesterday at 9:59 pm

» நீ என்னை விட்டு சென்றதில் இருந்து....
by kandansamy Yesterday at 9:46 pm

» வணக்கம்
by kandansamy Yesterday at 7:12 pm

» சென்னையில் புறநகர் ரயில் சேவையை விரைவில் தொடங்குக
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» பதிவை சேமிப்பது எப்படி ?
by kandansamy Yesterday at 5:33 pm

» மாஸ்க்கால் ஏற்படும் தழும்புக்கு சிகிச்சை…!!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:13 pm

» உத்தரபிரதேசத்தில் விதிமுறைகளை மீறி தாடி வைத்திருந்த காவலர் சஸ்பெண்ட்
by சக்தி18 Yesterday at 4:53 pm

» எப்ப பார்த்தாலும் இருக்கற எடத்த சுத்தம் பண்ணிக்கிட்டே இருந்தா அது என்ன வியாதினு தெரியுமா?
by சக்தி18 Yesterday at 4:42 pm

» துர்கா பூஜையில் சோனு சூட் சிலை! மாபெரும் விருது என்று பெருமிதம்
by ayyasamy ram Yesterday at 4:41 pm

» ஒரு ரெஸ்டாரெண்ட்…7 பெண்கள்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» முனியாண்டியின் ஆவி ,,!
by ayyasamy ram Yesterday at 4:28 pm

» ஆர் யூ நார்மல்..?!
by ayyasamy ram Yesterday at 4:27 pm

» முதியவர்களுக்கு வழிவிடுவோம்..!
by ayyasamy ram Yesterday at 4:26 pm

» நோ வொர்க் நோ பே..!
by ayyasamy ram Yesterday at 4:25 pm

» ‘டூயட்’ காட்சிகளை தவிர்ப்பேன்: “கதாநாயகிகளை தொட்டு நடிக்க மாட்டேன்” - நடிகர் யோகி பாபு சொல்கிறார்
by ayyasamy ram Yesterday at 4:18 pm

» பொங்கலுக்கு 4 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 4:15 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» சென்னை சூப்பர் கிங்ஸ் சரிவில் இருந்து மீளுமா? மும்பையுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 4:04 pm

» இப்படியெல்லாம் நடந்தால் பிளே-ஆஃப்ஸ் சுற்று வாய்ப்பு: கணக்குப்போடும் சிஎஸ்கே ரசிகர்கள்
by ayyasamy ram Yesterday at 3:58 pm

» கபில் தேவுக்கு மாரடைப்பு... டெல்லி மருத்துவமனையில் ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை
by ayyasamy ram Yesterday at 3:55 pm

» வடகிழக்கு பருவமழை அக்டோபர் 28ந்தேதி தொடங்க வாய்ப்பு
by ayyasamy ram Yesterday at 3:52 pm

» அரசியல் சாட் மசாலா..!
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---
by சக்தி18 Yesterday at 12:14 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 11:55 am

» #திருக்கழுக்குன்றம்:- #ஶ்ரீ திரிபுரசுந்தரி அம்மன் முழு அபிஷேகம்.
by velang Yesterday at 9:49 am

» தகவல் சுரங்கம்
by ayyasamy ram Yesterday at 8:23 am

» கேட்டு ரசிக்க-திரைப்பட பாடல்கள்- பட்டியல்
by ayyasamy ram Yesterday at 8:20 am

» பக்திக்கு சாஸ்திரமும் வேண்டாம் சம்பிரதாயமும் வேண்டாம்
by ayyasamy ram Yesterday at 8:13 am

» வேலன்:-எழுத்துரு டிசைன் கொண்டுவர -FontTwister
by velang Yesterday at 8:03 am

» நாரையாக மாறிய தேவதத்தன்
by ayyasamy ram Yesterday at 5:40 am

» கங்கையை கொணர்ந்த பகீரதன் தவம்
by ayyasamy ram Yesterday at 5:38 am

» ஆப்பிளை தோலோடு சாப்பிடுவது ஆபத்தா? ஆப்பிள் மீது பூசப்படும் மெழுகை நீக்கும் வழிகள்
by ayyasamy ram Yesterday at 5:33 am

» வெள்ளிக்கிழமை நவராத்திரி பிரசாதம்: வெல்ல புட்டு
by ayyasamy ram Yesterday at 5:22 am

» ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நயன்தாரா… வைரலாகும் போஸ்டர்
by ayyasamy ram Yesterday at 5:06 am

» பால்யம் - கவிதை
by ayyasamy ram Yesterday at 4:58 am

» கண்களும் சிரிப்பும்தான் எனக்கு அழகு! -அனுபமா பரமேஸ்வரன்
by ayyasamy ram Yesterday at 4:53 am

» ஒரு மணி நேரம் பெய்த மழையிலேயே தமிழகத்தின் தலை தள்ளாடுகிறது - கமல்ஹாசன்
by ayyasamy ram Yesterday at 4:48 am

» நாட்டின் இறையாண்மை அவமதிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது - டுவிட்டருக்கு மத்திய அரசு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 4:44 am

» மணீஷ் பாண்டே, விஜய்சங்கர் ஜோடி அபாரம் - ராஜஸ்தானை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஐதராபாத்
by ayyasamy ram Yesterday at 4:38 am

» தனியாய் பயணம், துணையாய் துணிவு!
by ayyasamy ram Thu Oct 22, 2020 9:49 pm

» மாணவன் கேட்காத பாடம்!
by ayyasamy ram Thu Oct 22, 2020 9:23 pm

» ஹர ஹர சங்கர, ஜெய ஜெய சங்கர !
by krishnaamma Thu Oct 22, 2020 8:50 pm

» திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் நந்தியின் பிரசித்தி !
by krishnaamma Thu Oct 22, 2020 8:46 pm

» பெரியவா சரணம் !
by krishnaamma Thu Oct 22, 2020 8:44 pm

» மரங்கள் இல்லாமல் காகிதம்!
by krishnaamma Thu Oct 22, 2020 8:16 pm

Admins Online

கொரோனா தொற்றை எளிதில் கண்டறியலாம்: நவீன கருவி மூலம் சோதனை தொடங்கியது - 25 நிமிடங்களில் முடிவு தெரியும்

Go down

கொரோனா தொற்றை எளிதில் கண்டறியலாம்: நவீன கருவி மூலம் சோதனை தொடங்கியது - 25 நிமிடங்களில் முடிவு தெரியும் Empty கொரோனா தொற்றை எளிதில் கண்டறியலாம்: நவீன கருவி மூலம் சோதனை தொடங்கியது - 25 நிமிடங்களில் முடிவு தெரியும்

Post by ayyasamy ram on Sun Apr 19, 2020 10:20 am

கொரோனா தொற்றை எளிதில் கண்டறியலாம்: நவீன கருவி மூலம் சோதனை தொடங்கியது - 25 நிமிடங்களில் முடிவு தெரியும் 202004190502472603_Easily-find-Corona-infection-The-test-began-with-a-modern_SECVPF
சென்னை,

இந்தியாவில் கொரோனா நோய் பரவுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள்
தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

ஏற்கனவே உள்ள பரிசோதனை முறை மூலம், ஒருவருக்கு கொரோனா தொற்று
உள்ளதா? இல்லையா? என்பதை கண்டறிவதில் மிகுந்த தாமதம் ஏற்படுகிறது.

இதனால் விரைவாக சோதனை நடத்தி முடிவை கண்டறிய உதவும்
‘ரேபிட் டெஸ்ட் கிட்’ என்ற நவீன துரித பரிசோதனை கருவிகளை சீனாவில் இருந்த
இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு செய்தது. இதற்கான ஆர்டரையும் கொடுத்தது.

இதேபோல், தமிழக அரசும் தனிப்பட்ட முறையில் சீனாவிடம் இருந்து அந்த கருவிகளை
வாங்குவதற்கு ‘ஆர்டர்’ கொடுத்து இருந்தது.

இந்த நிலையில், ஓரிரு நாட்களுக்கு முன் 3 லட்சம் துரித பரிசோதனை கருவிகள் சீனாவில்
இருந்து இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

தமிழக அரசு தனிப்பட்ட முறையில் ஆர்டர் செய்திருந்த 24 ஆயிரம் கருவிகளும் நேற்று
முன்தினம் தமிழகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அத்துடன், இந்திய அரசின் சார்பில்
ஆர்டர் செய்யப்பட்ட தொகுப்பில் இருந்து தமிழகத்துக்கு 12 ஆயிரம் கருவிகள் அனுப்பி
வைக்கப்பட்டன. இந்த கருவிகள் மீதான தர பரிசோதனை நடந்து வந்தது.

அது முடிந்ததை தொடர்ந்து, கொரோனா பரிசோதனைக்காக தமிழகத்தில் உள்ள ப
ல்வேறு மாவட்டங்களுக்கும் துரித பரிசோதனை கருவிகள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.

அந்த வகையில் திருநெல்வேலி, கோவை, ஈரோடு, வேலூர், சேலம், மதுரை, திருச்சி
ஆகிய 7 மாவட்டங்களுக்கு தலா 1,000 துரித பரிசோதனை கருவிகள் அனுப்பி வைக்கப்பட்டன.
சென்னையில் உள்ள ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு 1,000 கருவிகள் ஒதுக்கப்பட்டன.

மேலும் மீதம் இருக்கும் துரித பரிசோதனை கருவிகள் மற்ற மாவட்டங்களுக்கு விரைவில்
பிரித்து அனுப்பப்படும் என்றும், அந்த கருவிகள் மூலம், மாவட்ட அரசு ஆஸ்பத்திரிகளுக்கு
காய்ச்சல், சளி, இருமல், மூச்சுத்திணறல் உள்ளிட்ட கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன்
வருபவர்களுக்கு துரித பரிசோதனை செய்யப்படும் என்றும் சுகாதாரத்துறை உயர் அதிகாரி
ஒருவர் தெரிவித்தார்.

இந்த நிலையில் ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் நேற்று துரித பரிசோதனை கருவிகள்
மூலம் கொரோனாவை கண்டறியும் பரிசோதனை தொடங்கியது.

ஆஸ்பத்திரி ‘டீன்’ டாக்டர் ஜெயந்தி தலைமையில், கொரோனா அறிகுறிகள் காணப்பட்ட
நோயாளிகள் சிலருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ஒவ்வொரு
நோயாளியாக பரிசோதனை நடத்தப்பட்டது. இதற்காக துரித பரிசோதனை கருவிகள்
வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. அந்த பகுதியில் வேறு யாரும் செல்ல
அனுமதிக்கப்படவில்லை.

பின்னர் இந்த துரித பரிசோதனை முறை குறித்து ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரி
‘டீன்’ டாக்டர் ஜெயந்தி கூறியதாவது:-


‘ரேபிட் டெஸ்ட் கிட்’ கருவி என்பது ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளதா?,
இல்லையா? என்பதை விரைவாக கண்டுபிடித்து தெரிவிக்கும் கருவி ஆகும்.

இந்த கருவியில் 2 குமிழ்கள் உள்ளன. இதில் ஒரு குமிழில் பரிசோதனைக்கு
உட்படுத்தப்படுபவரின் விரல் நுனியில் இருந்து சேகரிக்கப்படும் ஒரு துளி ரத்தம்
இடப்படுகிறது. இன்னொரு குமிழில் ‘கன்ட்ரோல் சொல்யூசன்’ எனும் திரவம் ஒ
ரு துளி விடப்படுகிறது.

இந்த பரிசோதனையின் முடிவு 25 நிமிடங்களில் நமக்கு தெரிய வந்துவிடும்.

கருவியில் உள்ள திரையில் ஒரு கோடு வந்தால் சம்பந்தப்பட்ட நபருக்கு கொரோனா
தொற்று இல்லை என அறியலாம். 2 கோடுகள் வந்தால் அந்த நபருக்கு கொரோனா
தொற்று இருக்கிறது என்று உறுதி செய்யப்படுகிறது.

இந்த துரித பரிசோதனை கருவிகள் மூலம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால்
சம்பந்தப்பட்ட நபருக்கு ‘ஆர்.டி., பி.சி.ஆர்.’ பரிசோதனை மேற்கொள்ளப்படும்.
இதில் ஐ.ஜி.எம்., ஐ.ஜி.ஜி. பரிசோதனைகள் உட்படாது.

அதேவேளை கொரோனா தொற்று இல்லை (‘நெகட்டிவ்’) என்று வந்திருந்தாலும்,
சம்பந்தப்பட்ட நபருக்கு சளி, இருமல், மூச்சுத்திணறல், தும்மல் போன்ற அறிகுறிகள்
இருக்கும் பட்சத்தில் அவருக்கு அடுத்தகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

தற்போது ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு முதற்கட்டமாக ஆயிரம் கருவிகள் வந்து
உள்ளன. இன்னும் கருவிகள் வேண்டும் என கேட்டு இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா அறிகுறி உள்ளவர்கள், புறநோயாளிகள்
மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு இந்த கருவி மூலம் கொரோனா பரிசோதனை
மேற்கொள்ளப்பட உள்ளது.

தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61954
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum