ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.


உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» இதற்கொரு கவிதை தாருங்களேன் 
by விமந்தனி Yesterday at 10:43 pm

» சின்ன மேகமே சின்ன மேகமே
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» தனியாக நிற்க வேண்டி வந்தால் தைரியமாக நில்…!
by விமந்தனி Yesterday at 9:38 pm

» அக்டோபர் முதல் கடும் வெள்ளப்பெருக்கு; தெற்கு, மத்திய மாவட்டங்கள் மிதக்குமாம்!: 'புயல்' ராமச்சந்திரன்
by விமந்தனி Yesterday at 9:37 pm

» அணில்! - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» 6 வித்தியாசம்- கண்டுபிடி
by விமந்தனி Yesterday at 9:19 pm

» தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'
by T.N.Balasubramanian Yesterday at 9:16 pm

» பெரியவா திருவடி சரணம்
by விமந்தனி Yesterday at 8:32 pm

» Lunar Eclipse 2020: ஜூலை 5ல் மீண்டும் வருகிறது சந்திர கிரகணம் !
by விமந்தனி Yesterday at 8:30 pm

» தத்துவம் மகா தத்துவம்
by விமந்தனி Yesterday at 8:29 pm

» யோக கலைக்கெல்லாம் இது முன்னோடி ; யானைய பாத்து கத்துக்கோங்க பாஸ்!
by விமந்தனி Yesterday at 8:19 pm

» பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே
by விமந்தனி Yesterday at 8:16 pm

» இந்த வார சினி துளிகள்
by ayyasamy ram Yesterday at 8:03 pm

» சமையல் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» காலநிலை மாற்றத்தில் இருந்து பூமியைக் காப்பாற்ற மொத்தம் எத்தனை மரங்கள் நட வேண்டும் தெரியுமா?
by T.N.Balasubramanian Yesterday at 6:39 pm

» பெட்ரோல் - டீசலை அடுத்து சமையல் கேஸ் சிலிண்டர் விலை உயர்வு :
by T.N.Balasubramanian Yesterday at 6:30 pm

» 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய
by online35 Yesterday at 6:26 pm

» மகா பெரியவா எனக்கு கொடுத்த வேலை சொல்கிறார் ஒரு பக்தர்,....
by T.N.Balasubramanian Yesterday at 6:20 pm

» தமிழ் புத்தகங்கள் ( 70Tamil Books PDF)
by BookzTamil Yesterday at 5:29 pm

» புத்தகம்
by kram Yesterday at 5:22 pm

» படம் தரும் பாடம் (புகைப்பட ஆல்பம்)
by ayyasamy ram Yesterday at 4:41 pm

» கல்வான் பள்ளத்தாக்கு இந்தியாவுக்கே சொந்தம்: மோடி ஆணித்தரம்
by ayyasamy ram Yesterday at 4:22 pm

» கல்வான் பள்ளத்தாக்கு இந்தியாவுக்கே சொந்தம்: மோடி ஆணித்தரம்
by ayyasamy ram Yesterday at 4:16 pm

» அப்ளிகேஷன்- ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 4:00 pm

» ‘கோப்ரா’வுக்காக உயிரைப் பணயம் வைத்து நடித்த விக்ரம்
by ayyasamy ram Yesterday at 3:47 pm

» சேகுவேரா-வின் பொன்மொழிகள் !!
by ayyasamy ram Yesterday at 3:43 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by krishnaamma Yesterday at 12:52 pm

» பிரபல பாலிவுட் நடன இயக்குனர் சரோஜ் கான் (71) நெஞ்சுவலியால் காலமானார்
by ayyasamy ram Yesterday at 12:41 pm

» கட்டிய EMI பணம் திருப்பி அளிக்கப்படும்...
by krishnaamma Yesterday at 12:29 pm

» சுற்றுலா - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» பணத்தின் மீது பற்று வையுங்கள்
by krishnaamma Yesterday at 12:19 pm

» 'எச் - 1 பி விசா'வுக்கான தடையை நீக்குவேன்: பிடன் உறுதி
by krishnaamma Yesterday at 12:18 pm

» விமானங்களுக்கு இணையான கட்டணத்துடன் 2023 ஏப்ரல் முதல் தனியார் ரயில்கள்: ரயில்வே அறிவிப்பு
by krishnaamma Yesterday at 11:59 am

» இளையராஜா அவர்களின் அனைத்து பாடல்களையும் எங்கே தரவிறக்கிக்கொள்ள இயலும்? நன்றி!
by krishnaamma Yesterday at 11:19 am

» உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் ரவுடிகளால் 8 போலீசார் சுட்டுக்கொலை
by ayyasamy ram Yesterday at 8:14 am

» வேலன்:-பிடிஎப் பைல்களை வேர்ட் பைல்களாக மாற்றிட -PDF TO WORD
by velang Yesterday at 7:33 am

» இனி இவற்றை பதிவிறக்கம் செய்யும் போது எச்சரிக்கை அவசியம் - மத்திய அரசு அறிவுறுத்தல்
by விமந்தனி Yesterday at 12:39 am

» விழுந்தாலும் மீண்டும் எழுதல் என்பது சாதனை!
by விமந்தனி Yesterday at 12:36 am

» ட்ரோன் பாய் பிரதாப் (DroneBoy Pratap)
by விமந்தனி Yesterday at 12:33 am

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Thu Jul 02, 2020 10:06 pm

» விதை முத்தங்கள் - கவிதை
by ayyasamy ram Thu Jul 02, 2020 9:48 pm

» அரட்டை – ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Jul 02, 2020 9:27 pm

» மனம் விரும்புதே – கவிதை
by ayyasamy ram Thu Jul 02, 2020 9:25 pm

» சன்னல் – கவிதை
by ayyasamy ram Thu Jul 02, 2020 9:24 pm

» சொல்வனம் - கவிதைகள்
by ayyasamy ram Thu Jul 02, 2020 9:23 pm

» புதிய சரித்திர நாவல்கள்
by rukman1304 Thu Jul 02, 2020 8:38 pm

» சிவப்பு முட்டைகோஸ் உங்கள் ஆயுளை அதிகரிக்கும்
by T.N.Balasubramanian Thu Jul 02, 2020 5:05 pm

» கண்ணை வர்ணிக்கும் புலவர்களின் கற்பனை
by ayyasamy ram Thu Jul 02, 2020 3:11 pm

» என் தாயே…(கவிதை)
by ayyasamy ram Thu Jul 02, 2020 3:09 pm

» மியான்மர் சுரங்கத்தில் நிலச்சரிவு- 50 தொழிலாளர்கள் பலி
by ayyasamy ram Thu Jul 02, 2020 3:01 pm

Admins Online

கொரோனாவின் ஆட்டத்திற்கு முற்றுப்புள்ளி எப்போது!!

 கொரோனாவின் ஆட்டத்திற்கு முற்றுப்புள்ளி எப்போது!!  Empty கொரோனாவின் ஆட்டத்திற்கு முற்றுப்புள்ளி எப்போது!!

Post by ayyasamy ram on Tue May 19, 2020 4:50 pm


ஒவ்வொரு மனித நினைவிலும் நீங்கா இடம் பிடித்த
கொரோனாவின் ஆட்டத்திற்கு முற்றுப்புள்ளி எப்போது!!
ரத்த கண்ணீருடன் காத்திருக்கும் மனித குலம்

*2019-ம் ஆண்டின் ஆயுள் முடிய ஒரு மாதமே இருந்த நிலையில்,
சீனாவின் வுகான் நகரத்தில் இருந்து தனது பேரளவு பயணத்தை
அமைதியாக தொடங்கியது அபாயகரமான கொரோனா வைரஸ்.

*பிறப்பிடம் சீனா என்றாலும் பாரபட்சம் பார்க்காமல் உலக பந்தில்
உள்ள 210 தேசங்கள் மீது ஆயுதங்களே இல்லாமல் போர்
தொடுத்தது covid-19 என்று பெயர் சூட்டப்பட்ட கொரோனா
நச்சுக்கிருமி.

*2,75,000 உயிர்களை பறிகொடுத்த பின் உஷாரான உலக நாடுகள்
கண்ணனுக்கு தெரியாத கொரோனா மீது பதில் தாக்குதல் நடத்தும்
நடவடிக்கையில் இறங்கின.

*முக்கிய சர்வதேச ஆய்வு நிறுவனங்களும், பல்கலைக்கழகங்களும்,
ஆராய்ச்சியாளர்களும், விஞ்ஞானிகளும், தடுப்பு மருந்து தயாரிப்பில்
அடுத்தடுத்து குதித்தனர். அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி
அபரிவிதமாக இருந்ததால் தான் நாம் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த
முயற்சிகளை எடுக்கிறோம்.

*இதுவரை ஏற்பட்ட நோய் தொற்றுகளை விட கொரோனா தொற்றை
கண்டறிவதில் உலகம் முழுவதும் ஓரளவு விழிப்புணர்வு ஏற்பட்டதற்கு
முக்கிய காரணம் அறிவியல் தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சி.

*ஒரு அபாயகரமான கிருமி தொற்றுக்கு தடுப்பு மருந்து கண்டறிவது
அவ்வளவு சுலபம் இல்லை. வைரஸ் ஒரே மாதிரியான தாக்கத்தை
பல நாடுகளில் ஏற்படுத்துகிறதா? என்பதை உறுதி செய்ய வேண்டும்.
அதனால் தடுப்பு மருந்தை ரெடிமேடாக தயாரித்து அளித்து விட
முடியாது.
சோதனை செய்ய கால அவகாசம் தேவை.

*கொரோனாவுக்கு முன்னர் ஏற்பட்ட சார்ஸ் தொற்றுக்கு தடுப்பு மருந்து
கண்டுபிடிக்கும் நேரத்தில் அந்த கிருமி முழுமையாக குறைந்து விட்டது.
இதனால் தடுப்பு மருந்து தயாரிப்பு பணிகள் பாதியிலேயே நின்று
விட்டன.
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 57935
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12990

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 கொரோனாவின் ஆட்டத்திற்கு முற்றுப்புள்ளி எப்போது!!  Empty Re: கொரோனாவின் ஆட்டத்திற்கு முற்றுப்புள்ளி எப்போது!!

Post by ayyasamy ram on Tue May 19, 2020 4:51 pm


*எனவே வைரஸ் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பது அதிக செலவு பிடிக்கும்
செயல் மட்டும் அல்ல. எல்லா நேரத்திலும் இதனை பயன்படுத்த முடியுமா?
என்ற துணைக்கேள்வியும் உள்ளடக்கியது.

*ஆனால் கொரோனாவை பொறுத்தவரை உலக நாடுகள் பலவும்,
முன்கூட்டியே செயல்பட தொடங்கிவிட்டன. எந்தெந்த நாடுகள் கொரோனா
வைரசுக்கு எதிரான தடுப்பு போரில் குதித்திருக்கின்றன என்று பார்ப்பதற்கு
முன்பு எதன் அடிப்படையில் எத்தனை கட்டங்களாக கொரோனா வைரசுக்கு
தடுப்பு மருந்து தயாரிக்கப்படுகிறது என்பதை அறிந்து கொள்வது சிறப்பு.

*கொலை கரங்களால் நாடுகளை இருக்கி வரும் கொரோனா கிருமி
சாதாரண சளியை ஏற்படுத்தும் வைரஸின் குடும்பத்தைச் சேர்ந்த புதிய
உறுப்பினர் தான். சார்ஸ், மெர்ஸ் வைரஸ்களும் கூட கொரோனாவுக்கு
நெருங்கிய உறவினர்கள் தான். கொரோனா வைரஸ் RNA virus ஆகும்.

*தனது இயல்புகளை சூழலுக்கு தக்கவாறு மாற்றிக் கொள்ளக்கூடிய தன்மை
படைத்தவை தான் RNA வகை கிருமிகள். இதனால் தான் பாஸ்போர்ட், விசா,
இல்லாமல் எத்தனை நாடுகளுக்கு சென்றாலும் கொரோனா வைரசால்
அந்த குறிப்பிட்ட நாட்டின் சூழலுக்கும், கால நிலைக்கும் ஏற்றவாறு தன்னை
மாற்றிக் கொள்ள முடிகிறது.

*இதனால் உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா அரக்கனை அழித்து
விட உலக நாடுகள் பலவும் வைரஸ் தடுப்பு மருந்து தயாரிப்பு பணிகளை
முடுக்கி விட்டிருக்கின்றன. இதில் சில வெற்றியும் பெற்றிருக்கின்றன.

இனி வைரஸ் தடுப்பு மருந்து எத்தனை கட்டங்களை தாண்டி இறுதி வடிவம்
பெரும் என்பதை பார்க்கலாம்.

*பொதுவாக மருத்துவ பரிசோதனைகள் 3 கட்டங்களாக நடைபெறும்.
வைரஸை கட்டுப்படுத்த தடுப்பு மருந்து கண்டறியப்பட்டால் முதலில் எலி,
முயல் உள்ளிட்ட விலங்குகள் உடலில் செலுத்தி சோதனை செய்ய வேண்டும்
என்பது விதி.

இந்த அடிப்படை பரிசோதனை சாதகமான முடிவை தந்தாள் மட்டுமே
தடுப்பு மருந்து சோதனை அடுத்த கட்டத்துக்கு செல்லும்.

*பாதுகாப்பினை பல முறை உறுதி செய்து கொண்ட பிறகு மனிதர்களிடம்
இரண்டாம் கட்ட சோதனை செய்யப்படும். அதாவது முதலில்
5 முதல் 10 தன்னாலர்வர்கள் உடலில் தடுப்பு மருந்தினை செலுத்தி விளைவுகள்
பதிவு செய்யப்படும்.

ஆய்வு முடிவுகள் நல்ல பலனை தந்தால் 50 முதல் 100 பேருக்கு மீண்டும்
செலுத்தப்பட்டு வைரசுக்கு எதிராக தடுப்பு மருந்து எவ்வாறு போராடுகிறது
என்பது ஆய்விடப்படும்.

*இந்த முடிவுகள் நல்ல பலனை தந்தாலும் இறுதி கட்டமாக பல்வேறு
நாடுகளில் பல விதமான சூழல்களில் வாழும் சமூகத்தை சேர்ந்த
1000 மனிதர்களிடம் சோதனை செய்து பார்க்கபப்டும் இதுதான் மூன்றாவது
மற்றும் இறுதிக்கட்ட சோதனை. இத்தனை கட்டங்களை கடந்து ஆய்வாளர்கள்
விஞ்ஞானிகள் மருத்துவ நிபுணர்களின் ஒப்புதலை பெற்ற பின்னர் தான்
வணிக ரீதியில் கொரோனா தடுப்பு மருந்து கடைகளுக்கு வரும்.

*இந்தியா, இஸ்ரேல், இத்தாலி, சீனா,அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள்
போட்ட போட்டிபோட்டு கொண்டு கொரோனா வைரசை களையெடுக்கும்
தடுப்பு மருந்து, சிகிச்சை முறைகள் கண்டுபிடிப்பதில் தீவிரமாக முயற்சி
செய்து வருகின்றன.

*கொரோனாவை வெல்லும் வழிக்காகவே ஒவ்வொரு மனிதர்களும் தற்போது
எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கிறார்கள். ஒட்டு மொத்தமாக மனித
குலத்தையே கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்து வருவதால் ஒவ்வொரு
குடிமக்களின் மனதிலும் நீங்கா இடம் பெற்றுள்ளது என்றால் அது மிகையாகாது.
-
தினகரன்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 57935
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12990

https://rammalar.wordpress.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை