ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» அக்டோபர் 31 வரை பொது முடக்கம் நீட்டிப்பு: தமிழக அரசு
by ayyasamy ram Yesterday at 10:36 pm

» செவ்வாய்க்கிழமைகளில் இந்த மந்திரத்தை உச்சரித்தால் முருகன் உங்கள் கஷ்டங்களை தீர்ப்பார் !
by krishnaamma Yesterday at 9:37 pm

» மைக்ரோ கதை
by krishnaamma Yesterday at 9:10 pm

» குழந்தைகளெனக் கருதி தினமும் காக்கைகளுக்கு இரை ஊட்டும் பெண்கள்
by krishnaamma Yesterday at 9:08 pm

» ஹாலிவோட்டில் பிரபலமான தமிழ் பெண்கள்
by krishnaamma Yesterday at 9:06 pm

» மத்யம லோகம் ! By Krishnaamma ! - 'விறு விறு' குறுந்தொடர்...
by krishnaamma Yesterday at 8:55 pm

» அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் - ஸுதபஸே நமஹ.....!!!
by krishnaamma Yesterday at 8:51 pm

» படியளக்கும் பெருமாள் !
by krishnaamma Yesterday at 8:50 pm

» இன்று முதல், நீங்கள் வசிக்கும் மாவட்டம் ... ...
by krishnaamma Yesterday at 8:50 pm

» நற்றமிழ் அறிவோம் - ஒருவன் , ஒருத்தி
by M.Jagadeesan Yesterday at 7:41 pm

» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by velang Yesterday at 6:28 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 4:51 pm

» படம் தரும் பாடம் (தினமலர்)
by ayyasamy ram Yesterday at 4:44 pm

» முதல்வர் கூட்டத்தை புறக்கணித்த ஓ.பி.எஸ்., ஆதரவாளர்களுடன் ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 4:34 pm

» மெகபூபாவிற்கு இன்னும் எத்தனை நாள் காவல்: உச்சநீதிமன்றம் கேள்வி
by ayyasamy ram Yesterday at 4:31 pm

» இல.ஆதிமூலத்திற்கு விஜயேந்திரர் அருளாசி
by ayyasamy ram Yesterday at 4:27 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (283)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:52 pm

» செமஸ்டர் தேர்வில் 'மாஸ் காப்பி' : ஒரே மாதிரி விடைத்தாளால் குழப்பம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:46 am

» தேன் காய் என்ன என்பது எது?
by Guest Yesterday at 11:43 am

» கைரேகை ஜோசியர் தொழிலை மாத்திட்டார்!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:22 am

» மஹாத்மாவே… மறுபடியும் பிறக்க வேண்டாம்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 9:07 am

» மகாத்மா காந்தியும், பல்லும்!
by ayyasamy ram Yesterday at 8:49 am

» ரஸ்கின்… தோரோ… டால்ஸ்டாய்!
by ayyasamy ram Yesterday at 8:48 am

» காந்திஜியும், கோவணமும்!
by ayyasamy ram Yesterday at 8:47 am

» சினிமா செய்திகள் (வாரமலர்)
by ayyasamy ram Yesterday at 8:46 am

» இன்று 5,589 பேருக்கு கொரோனா தொற்று: 70 பேர் உயிரிழப்பு
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சென்னையில் கனமழை :
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நற்றமிழ் அறிவோம் - பல , சில
by M.Jagadeesan Yesterday at 6:25 am

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 2:14 am

» மனக்குழப்பம் நீக்குவார் குணசீலப் பெருமாள் !
by krishnaamma Mon Sep 28, 2020 10:05 pm

» மஹா பெரியவா தரிசன அனுபவங்கள் - தனவந்தருக்கு குங்கும ப்ரசாதம் !
by krishnaamma Mon Sep 28, 2020 9:49 pm

» ”சரணாகதி”
by krishnaamma Mon Sep 28, 2020 9:35 pm

» யுயுத்சு ! - அறியாத கதை !
by krishnaamma Mon Sep 28, 2020 9:32 pm

» தலைமுடி நன்கு அடர்த்தியாக வளரவும், நரை முடியைப் போக்கவும் இந்த காய் உதவும்...
by krishnaamma Mon Sep 28, 2020 9:22 pm

» எஸ்.பி.பாலசுப்ரமணியம் குரலில் சில முத்தான ஜோடிப்பாடல்கள்
by krishnaamma Mon Sep 28, 2020 9:19 pm

» எஸ்.பி.பாலசுப்ரமணியம் குரலில் சில முத்தான தனிப்பாடல்கள்-
by krishnaamma Mon Sep 28, 2020 9:18 pm

» எஸ்.பி.பி.யை முழுப் பெயர் சொல்லி அழைப்பவர்!
by krishnaamma Mon Sep 28, 2020 9:17 pm

» ஆர்யா தான் பேயா..? சுந்தர் சி-யின் அரண்மனை-3 அப்டேட்ஸ்..!
by krishnaamma Mon Sep 28, 2020 9:16 pm

» எனக்குப் பிடித்தமான SBP யின் பாடல்கள்....
by krishnaamma Mon Sep 28, 2020 9:14 pm

» போர் வீரர்கள் சோர்ந்து போய் காணப்படுகிறார்களே?
by ayyasamy ram Mon Sep 28, 2020 8:45 pm

» விவசாய மசோதாவுக்கு ஆதரவான பதிவு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது !
by M.Jagadeesan Mon Sep 28, 2020 7:33 pm

» நிதிஷ் கட்சியில் போலீஸ் அதிகாரி
by ayyasamy ram Mon Sep 28, 2020 3:40 pm

» எச்.ராஜாவுக்கு எம்.பி., பதவியா?
by ayyasamy ram Mon Sep 28, 2020 3:35 pm

» மே முதல் வாரம்! தமிழகம் உட்பட 5 மாநில சட்டசபை தேர்தல்
by ayyasamy ram Mon Sep 28, 2020 3:26 pm

» கரோனாவால் பாதித்த சுற்றுலாத் துறை: இன்று உலக சுற்றுலா தினம் !
by krishnaamma Sun Sep 27, 2020 10:47 pm

» படமும் செய்தியும்!
by krishnaamma Sun Sep 27, 2020 10:44 pm

» அமேசான் செயலியில் புதிதாக 'தமிழ்' இணைப்பு !
by சக்தி18 Sun Sep 27, 2020 9:33 pm

» பாக்.,கில், 'சார்க்' மாநாடு முறியடிப்பு !
by krishnaamma Sun Sep 27, 2020 8:35 pm

» எனக்குப் பிடித்த எஸ்.பி.பி. பாடல்: எழுதுங்கள் வாசகர்களே! - தினமலர்
by krishnaamma Sun Sep 27, 2020 8:32 pm

» கோயம்பேடு மார்க்கெட் மீண்டும் திறப்பு !
by krishnaamma Sun Sep 27, 2020 8:26 pm

Admins Online

'மாத்தி யோசி' ! - சிறுகதை - by Krishnaamma :)

Page 1 of 2 1, 2  Next

Go down

வாழ்த்து 'மாத்தி யோசி' ! - சிறுகதை - by Krishnaamma :)

Post by krishnaamma on Mon Aug 10, 2020 9:13 pm

மாத்தி யோசி ! by Krishnaamma 😊

அது ஒரு மகளிர் கலைக் கல்லூரி. ஆண்டு விழாவுக்காக ஏற்பாடு செய்திருந்தார்கள். வழக்கம் போல இறைவணக்கம், வரவேற்புரை என்று ஆனதும், கல்லூரி முதல்வர் தன் தோழி என்று சொல்லி ஒரு 60 வயது மதிக்கத்தக்க பெண்மணியை அறிமுகம் செய்தார். அவரும் வணக்கம் தெரிவித்து விட்டு பேச ஆரம்பித்தார்.

"அன்பு குழந்தைகளே, நான் இதுபோன்ற அரங்கங்களில் பேசியது இல்லை. நம் நாடு இன்று போகும் போக்கைக்கண்டு மனம் வெதும்பி உங்கள் முதல்வரிடம் பேசிக்கொண்டிருந்தேன். அவர் தான் என்னை ஊக்குவித்து இதை மாணவிகளின் முன் பேசுமாறு கேட்டுக்கொண்டார். நான் பேசுவதைக் கேட்டதும் யாரும் வரிந்து கட்டிக் கொண்டு சண்டைக்கு வரவேண்டாம். கொஞ்சம் அமைதியாக யோசித்துப் பார்த்து பின் வந்தால் போதும். சரியா?" என்று அன்புடன் ஆரம்பித்தார். மாணவிகளிடம் மயான அமைதி. இந்த அம்மா என்னதான் சொல்லப்போகிறார்கள் என்று.

அவர் மீண்டும் ஆரம்பித்தார், " நான் கொஞ்ச நாட்களாகவே பார்த்துவருகிறேன், இப்பொழுது உள்ள வீடுகளில் சுவாமி அறை என்பதே இல்லை. வெகு காலத்துக்கு முன்பே அது ஸ்வாமி  ஷெல்ப் ஆகி இன்று இல்லாமலே போனது. அதுதான் நாம் இன்று இருக்கும் இந்த கோலத்திற்கு காரணம். எந்த பேப்பரைப் பார்த்தாலும் 14 வயது சிறுவன் 10 வயது சிறுமியிடம்... என்றெல்லாம் செய்திகள் வருகின்றன. மத மாற்றம் பற்றி சொல்லவே வேண்டாம். நான் யாரையும் அல்லது எந்த மதத்தையும் குறை சொல்ல இங்கு வர வில்லை. நாட்டு நடப்பை சொன்னேன்.  இது எப்படி ஸ்வாமி ரூம் உடன் கனைக்ட் ஆனது என்று நீங்கள் யோசிக்கலாம்.

ஆம் கண்டிப்பாக தொடர்பு இருக்கிறது. நாம் சுவாமி ரூமுக்கு எப்படி போவோம், சுத்த பத்தமாக, பய பக்தியுடன். ஸ்வாமி என்றால் எதுக்கு அதனிடம் பயம் ?..பக்தி மட்டும் போறாதா?...அவர் தானே நமக்கு எல்லாம் என்று நீங்கள் யோசிக்கலாம். அதை விளக்க ஒரு சின்ன உதாரணம் சொல்கிறேன்.

நீங்க உங்கள் வகுப்பறைக்கு காலை இல் உள்ளே நுழைகிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். முதலில் என்ன யோசிப்பீர்கள். நம் friend வந்துவிட்டாளா, என்ன கலர் டிரஸ் போட்டிருக்கா, நான் தான் நேற்று முதலில் வந்தேன், இன்று அவள் வந்துவிட்டாளா... இப்படி பலப்பல யோசனைகளுடன் நுழைவீர்கள் தானே?... படிப்பு, கிளாஸ் டெஸ்ட் ஒருபக்கம் இருந்தாலும் இப்படியும் யோசித்துக்கொண்டு, அவளை பார்த்துவிட்டால், "ஹாய்" என்று உற்சாகமாய் கத்துவீர்கள்  தானே?...

...................


Last edited by krishnaamma on Mon Aug 10, 2020 9:25 pm; edited 2 times in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62850
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12665

Back to top Go down

வாழ்த்து Re: 'மாத்தி யோசி' ! - சிறுகதை - by Krishnaamma :)

Post by krishnaamma on Mon Aug 10, 2020 9:13 pm

அதே உங்களை ஸ்டாப் ஒருவர் ஸ்டாப் ரூமுக்கு வரச்சொல்லி இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம்.

எப்படி செல்வீர்கள்?...கொஞ்சம் நடையை நிதானமாக்கி, ஒரு ஓரமாய் ஸ்டாப் ரூம் வாசலில் இருந்து உள்ளே எட்டிப்பார்ப்பீர்கள். கண்ணால் அந்த ஸ்டாப் எங்கு இருக்கிறார் என்று பார்த்துக் கொள்வீர்கள். பின் அவர் கண்ணில் படும்படி நிற்பீர்கள். சரிதானே?...பின் அவர் உங்களைப் பார்த்து கண் அசைத்து அல்லது பேர்சொல்லி கூப்பிட்டதும், உள்ளே போய் என்ன எது என்று தெரிந்து கொள்வீர்கள். சரியா?

மாணவிகள் கூட்டம் மிக மிக மௌனமாய் இருந்தது. அவர் தொடர்ந்தார்,
" அடுத்தது உங்கள் பிரின்சிபால் உங்களைக் கூப்பிட்டு அனுப்புகிறார். நீங்கள் அங்கு எப்படி செல்வீர்கள்?... மிக மிக பணிவுடன் அவரின் அறை வாசலை அடைந்து அவரின் அழை ப்பிக்காக காத்திருப்பீர்கள். பியூன் உங்களை உள்ளே போக சொன்னதும், சப்தநாடிகளும் ஒடுங்கி, பயந்து அந்த ஏசி சத்தம் மட்டுமே கேக்கும் அறைக்குள் நுழைவீர்கள். சில சமயங்களில் உங்கள் இருதயம் துடிப்பது கூட உங்களுக்கு துல்லியமாக கேட்கும் தானே?...இப்பொழுது சொல்லுங்கள் நீங்கள் உங்கள் வகுப்பறைக்குப் போவது போல ஏன் இங்கு போகவில்லை?...என்ன பயம் பக்தி வேண்டி இருக்கிறது அவரிடம்?

ஏன் என்றால், அவர் இங்குள்ள 5000 மாணவிகளை கட்டி மேய்க்கிறார். அவர்களின் நல்லது கெட்டது பார்க்கிறார். எல்லோருக்கும் தலைவர். அப்படிப்பட்ட பொறுப்பான பதவியில் இருப்பவரை நம் தோழியைப் பார்க்கப் போவது போல ஜாலியாக போக முடியாது. சரிதானே?.. அப்படி ஒரு 5000 பேரைக் கட்டி ஆளும் மனிதருக்கே, இத்தனை மரியாதை என்றால், நம் அண்ட சராசரங்களை படைத்து காக்கும் அந்த ஸ்வாமி இடம் நமக்கு பய பக்தி இரண்டுமே வேண்டாமா? அந்த சன்னிதானத்தில் அமைதி காக்கவேண்டாமா?... அந்த ஸ்வாமி அறைக்கோ கோவிலுக்கோ பய பக்தியுடன் போகவேண்டாமா?...சொல்லுங்கள்?" என்றதுதான் தாமதம்...மாணவிகள் கரகோஷம் விண்ணைப்பிளந்தது.
..............


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62850
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12665

Back to top Go down

வாழ்த்து Re: 'மாத்தி யோசி' ! - சிறுகதை - by Krishnaamma :)

Post by krishnaamma on Mon Aug 10, 2020 9:14 pm

இரண்டுநிமிட இடைவேளைக்குப் பிறகு அந்த அம்மா தொடர்ந்தார்கள், " இதற்கும் இன்றைய நாட்டு நடப்புக்கு என்ன தொடர்பு என்று நீங்கள் யோசிக்கலாம். அதை விளக்கவே இங்கு நான் வந்துள்ளேன். இன்று ஸ்வாமி ரூமே இல்லாவிட்டால்.. அப்பொழுது இந்த பய , பக்தி இன்று மிஸ்ஸிங். நமக்கு மேல் ஒரு சக்தி இருக்கிறது, நாம் அதற்கு கட்டுப் பட்டுத்தான் இருக்கிறோம். என்கிற எண்ணமே வர வாய்ப்பே இல்லை. அதனால் நாம் என்னவேண்டுமானாலும் செய்யலாம், கேட்க ஆள் இல்லை என்கிற எண்ணம் குழந்தைகளுக்கு வந்துவிடுகிறது. இது அரக்க எண்ணம். இது வேரூன்றி வளர்கிறது என்கிற ஆபத்து கூடத் தெரியாமல் அம்மாவும் அப்பாவும் பணம் சம்பாதிக்க வெளியே போய்விடுகிறார்கள்.

அவர்களும் தங்களுக்கு உள்ள பிரச்சனை பிடுங்கல்களில் குழந்தைகளுக்கு தங்கள் சனாதன தர்மத்தைப் பற்றி சொல்லிக்கொடுக்க மறந்துவிடுகிறார்கள். இதனால் என்ன ஆகிறது, அவர்களுக்கும் மன அமைதி என்பது பழக்கத்தில் இல்லை குழந்தைகளுக்கோ அது பற்றித் தெரியவே தெரியாது. யாரைப் பார்த்தாலும் டென்ஷன், மனோ வியாதி என்று கஷ்டப்படுகிறார்கள். சிறு குழந்தைகளும் இதற்கு விதி விலக்கு இல்லை.

அதே, காலை மாலை இருவேளைகளிலும் ஒரு பத்து நிமிடங்கள் கை கால் அலம்பிக்கொண்டு, ஸ்வாமி முன்பு அமர்ந்து கொண்டு தனக்குப் பிடித்த பகவன் நாமாவளிகளை சொல்வது என்பது நம் மனோதிடத்தை அதிகப்படுத்தும். அந்த நேரத்தில் அந்த அமைதியான சூழ்நிலை இல் நம் மனம் ஒருமைப்படும். நம்மை நாம் ஆசுவாசப்படுத்திக் கொள்ளவும், இறைவன் பால் மனத்தை செலுத்தவும் முடியும். அப்படி நம்மால் கொஞ்சநேரம் உலகத்தை மறந்து, சுற்றுப்புற சூழ்நிலைகளை மறந்து, மனத்தை ஒருமுகப்படுத்த முடியுமானால், அதுவே நம் பிரச்சனைகளை நன்கு ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வர உதவும்.சின்னக் சின்ன பிரச்சினைகளுக்கெல்லாம் டென்ஷன் ஆகவேண்டியது இல்லை. நம்மால் கொஞ்சம் யோசித்து நல்ல முடிவுகள் எடுக்க இது உதவும்.

தெய்வங்களில் இரு வகை உண்டு. ஒன்று குலதெய்வம் மற்றது இஷ்டதெய்வம். இது உங்களில் எத்தனை பெருக்குத்தெரியும் என்று எனக்குத் தெரியாது.

..................


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62850
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12665

Back to top Go down

வாழ்த்து Re: 'மாத்தி யோசி' ! - சிறுகதை - by Krishnaamma :)

Post by krishnaamma on Mon Aug 10, 2020 9:15 pm

குலதெய்வ வழிபாடு என்பது மிக முக்கியம். வருடம் ஒருமுறையாவது சென்று கும்பிடவேண்டும். இஷ்டதெய்வம் என்பது அதே குலதெய்வத்தின் , ஆனால் நம் மனம் கவர் உருவம். நாம் நாமாவளிகளோ அல்லது சின்ன சின்ன ஸ்லோகங்களோ சொல்லி வழிபட வழிபட மனம் அமைதி பெறும். நமக்கு வரும் கஷ்ட நஷ்டங்களை பகிர்ந்து கொள்ளவும், அண்டி நிற்கவும் நம்மைக் காக்கவும் அவர் இருக்கிறார் என்கிற மனோ தைரியத்தைத்தரும். அவர், நாம் மற்றவருக்கு நல்லது செய்தால் நமக்கு நல்லதும், நாம் தப்பு செய்தால் தண்டிக்கவும் செய்வார். என்று பெற்றவர்கள் தான் சொல்லித்தரவேண்டும்.

சின்ன சின்ன பெருமாள் கதைகளை குழந்தைகளுக்கு சொல்லவேண்டும். நம் பண்டிகைகள், பழக்க வழக்கங்கள் சொல்லித்தரவேண்டும். இது குழந்தைகள் ஆரோக்கியமாய் , அதாவது மனோ விகாரங்கள் இல்லாமல் ஆரோக்கியமாய் வளர உதவும்.

நாங்கள் எல்லாம் சின்ன வயதில் இருக்கும் பொழுது எங்க அம்மா தினமும் எங்களுக்கு படுக்கும் முன் நெற்றி இல் விபூதி இடுவார். எந்தக் கெட்டக் கனவும் வராதிருக்க. பிறகு எல்லோருக்கும் சின்ன சின்ன சுவாமி கதைகள் சொல்லி தூங்க வைப்பர். கதை முடிந்ததும் நாங்கள் எல்லோரும் கைகளைக் கூப்பியபடி, "கோவிந்தா காப்பாத்து" என்று சொல்லிவிட்டு தூங்குவோம்.

ஒவ்வொரு பண்டிகையும் எதற்காக கொண்டாடுகிறோம், நம் வீட்டு வழக்கம் என்ன என்று சொல்லிக் கொடுப்பர். இன்று யாரையாவது கேளுங்கள், தெரியாது. அப்பா அம்மாக்கே தெரியமா என்று எனக்குத் தெரியாது. மிஞ்சிக் கேட்டால், நேரம் இல்லை என்று சொல்வார்கள். நாங்கள் சின்னவர்களாக இருந்தபோதும் இதே 24 மணி நேரம் தானிருந்தது ஒருநாளுக்கு. இப்பவும் அப்படித்தானே?..அப்போ இவர்களுக்கு மட்டும் நேரம் எப்படி இல்லாமல் போகும்????

................


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62850
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12665

Back to top Go down

வாழ்த்து Re: 'மாத்தி யோசி' ! - சிறுகதை - by Krishnaamma :)

Post by krishnaamma on Mon Aug 10, 2020 9:15 pm

ஏன் என்றால், இவர்களுக்கு பணம் மட்டுமே குறிக்கோள். அதற்காக எதையும் விட்டுக் கொடுத்துவிடுகிறார்கள் என்பது தான் கசப்பான உண்மை. இருவரும் இப்படிப் போய்விட்டால் குழந்தைகளை யார் கவனிப்பது?.... வீட்டுப் பெரியவர்களை கொண்டு போய் ஹோம் இல் விட்டாகிவிட்டது. வேளைக்கு ஒரு வேலைக்காரி வந்து குழந்தைகளை பார்த்துக் கொள்வாள். அவளுக்குத் தெரிந்ததை சமைத்துப் போடுவாள். அவளுடனேயே வளரும் குழந்தைகள் அவள் பழக்க வழக்கங்களைத்தானே தெரிந்து கொள்ளும்?.. பணம் காசு நகைகள் என்று எல்லாவற்றையும் பூட்டி வைத்து விட்டு, அதைவிட உயர்வான நம் குழந்தையை, நம் வருங்காலத்தை, நம் தேசத்தின் எதிர்காலத்தை எவளோ ஒருத்தி இடம் ஒப்படைக்க எப்படி உங்களுக்கு மனம் வருகிறது?... சொல்லுங்கள்???... நாட்டு நடப்பை பார்த்துவிட்டு, தங்கள் குழந்தைகளை லிப்ட் இல் கூட தனியாக அனுப்ப பயந்து கொண்டு தானே இறங்கிவந்து அவர்களை பஸ் இல் ஏற்றும் அம்மாக்கள் இருக்கும் ஊரில் தானே வீட்டையே திறந்து போட்டுவிட்டு ஆபீஸ் போகும் அம்மாக்களும் இருக்கிறார்கள்?.. .. அப்படி இருக்கும்பொழுது நம் குழந்தைகள் முழு நாளும் யாருடனோ பொழுதைக் கழிக்க வேண்டிய நிர்பந்தத்துக்கு ஆளாகிறார்கள் ஏன்? கொஞ்சம் யோசியுங்கள் பெண்களே !

நாளைய அம்மாக்கள் நீங்கள் தான்.

நான் வேலைக்கு போகின்ற பெண்களுக்கு எதிரி இல்லை. ஆனால் தான் படித்த படிப்பை எதற்காக en cash பண்ணவேண்டும் என்று ஏன் நினைக்கிறீர்கள் என்று தான் எனக்கு ஆச்சர்யம். படிப்பு என்பது நம் புத்தியை வளரச்செய்யவே அல்லாது பணம் சம்பாதிக்க இல்லை என்பதை நன்கு புரிந்து கொள்ள வேண்டும் நீங்கள். ஒரு ஆண் படித்தால், அது அவனுக்கு மட்டுமே உதவும். ஆனால் ஒரு பெண் படித்தால், அது அவள் குடும்பத்துக்கே உதவும்.

எத்தனை பெரிய பொறுப்பு தங்கள் கைகளில் இருக்கிறது என்பதைக் கொஞ்சமும் அறியாமல் பணத்தின் பின்னே ஓடுகிறார்கள் பெண்கள். குழந்தைகளை வளர்த்து ஆளாக்கவேண்டிய எத்தனை பெரிய பொறுப்பு உங்கள் கைகளில் இருக்கிறது அதை முதலில் செவ்வனே செய்யவேண்டாம் நீங்கள்? ஒரு சாதாரண செடி கொடி கூட தன்னைப்போல தன் வம்சம் வளர விதைகளை செவ்வனே விட்டுச்செல்கிறது. ஆனால் ஆறறிவுடைய நாம்????

.................


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62850
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12665

Back to top Go down

வாழ்த்து Re: 'மாத்தி யோசி' ! - சிறுகதை - by Krishnaamma :)

Post by krishnaamma on Mon Aug 10, 2020 9:15 pm

ஒரு பெண் தான் வாங்கும் சம்பளத்தில் பாதி வேலைக்காரிக்கு தந்துவிடுகிறாள். அவள் நம் குழந்தைக்கு உணவு தருகிறாளா இல்லை அவள் சாப்பிடுகிறாளா என்கிற கவலை.  சில வேலைக்காரிகள் நம் வீட்டில், நமக்குத்தெரியாமல் குடித்தனமே செய்வார்கள். இப்படி எல்லாம் அல்லாட்டம் எதற்கு ?... எந்தக் குழந்தைக்காக என்று சொல்லிக் கொண்டு இவர்கள் வெளியே போகிறார்களோ, அந்தக்குழந்தைக்கு ஒரு உடம்பு சரி  இல்லை என்றால் இவர்களால் சில சமயங்களில், கூட இருக்க முடியாமல் போகும்... அப்போது மனம் என்ன பாடு படும்... அந்தக் குழந்தை கேட்டதா எனக்கு பணம் வேண்டும், கார் வேண்டும் என்று?... அம்மா வேண்டும் என்று தான் கேட்கும். அதை உங்களால் தர  முடியாதா?  

சர்வ நிச்சயமாக ஒன்று நான் சொல்வேன், எந்த வேலைக்குப் போகும் பெண்ணும் தன்னைத்தானே கேட்டுக்கொள்ளும் ஒரு கேள்வி இது..." நான் நல்ல அம்மாவாக இருக்கிறேனா?"... இத்தனை கஷ்டப்பட்டு குழந்தைகளை வளர்த்துவிட்டு இந்தக் கேள்வி தேவை தானா?... விரலுக்கு ஏற்ற வீக்கம் இருந்தால் இந்தக் கஷ்டம் வருமா? சொல்லுங்கள்???

இங்கு நான் ஒன்று சொல்ல வேண்டும், நான் முதன் முதலில் தனிக்குடித்தனம் போகும்பொழுது என் அப்பா என்னை அழைத்தார். உனக்கு எதுவும் நான் பெரிதாக சொல்லப்போவது இல்லை. இத்தனைநாள் அம்மாவைப் பார்த்து வளர்ந்தவள், இப்பொழுது 2 வருடங்களாக அவ அம்மாவையும் நீ பார்த்து விட்டாய்.  என் பாட்டி தான் எனக்கு மாமியார்.  எனவே, குடித்தனத்தை கட்டு செட்டாக நடத்த நான் உனக்கு சொல்லித்தரத்தேவை இல்லை. உனக்கே தெரியும். என்றாலும்,  நான் உனக்கு ஒன்றே ஒன்று தான் சொல்வேன். இது என் அம்மா  எனக்கு சொன்னது...ஏனோ என்னால் அதை சரிவர செய்ய முடியவில்லை. ஆனால் சரியாக செய்தால்  மிக உயரத்தை  அடையலாம். என்று  பீ டிகை போட்டார். எனக்கோ ஆச்சர்யம் என்ன இது அப்பா இப்படி பேசுகிறார் என்று. குடும்பத்தை நிர்வகிப்பதில் கில்லாடி அவர். நான் மௌனமாக நின்றுகொண்டிருந்தேன். அவர் தொடர்ந்தார், " குழந்தாய், உனக்கு எதெல்லாம் அவசியமோ அதெயெல்லாம் கண்டிப்பாக வாங்காதே"... என்றா ர் ...'என்னது அவசியமானதை வாங்கக்கூடாதா'?... 'பக்' என்று இருந்தது எனக்கு...சரியாக காதில் விழவில்லையா  என்ன? என்கிற  எண்ணத்துடன்," என்னப்பா?" என்றேன் ...'இரு இரு, நான் இன்னும் முடிக்கவில்லை...என்று சொல்லி தொடர்ந்தார்."'தவிர்க்க முடியாததை மட்டும் வாங்கு" என்றார்.
..................


Last edited by krishnaamma on Mon Aug 10, 2020 9:17 pm; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62850
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12665

Back to top Go down

வாழ்த்து Re: 'மாத்தி யோசி' ! - சிறுகதை - by Krishnaamma :)

Post by krishnaamma on Mon Aug 10, 2020 9:16 pm

எனக்கு ஒருகணம் மூளை வேலை செய்யவில்லை. அவர் சொல்வதை ennaal உள் வாங்கிக் கொள்ள முடியவில்லை.
ஒரு நிமிட அமைதிக்குப் பின் 'புரியலைப்பா' என்றேன்.

சிரித்துக்கொண்டே சொன்னார், ' உனக்கு அவசியமானது எது தவிர்க்க முடியாதது எது என்று நான் ஒரு சின்ன லிஸ்ட் சொல்கிறேன், பிறகு புரியும் என்றார்'...நானும் 'உம்' என்றேன்.

'நீ இப்பொழுது தான் தனிக்குடித்தனம் போகிறாய், இங்குளள்து போல உனக்கும் டிவி, பிரிட்ஜ், மிக்சி இத்யாதி அவசியம் என்று எண்ணுகிறாய் ரைட்?' என்றார்.

'ஆமாம்' என்றேன், ஒன்றன் பின் ஒன்றாக வாங்க வேண்டும் என்று கணக்கு போடுகிறாய் சரியா என்றார். ஆமாம் என்றேன்... கடனை உடனை வாங்கி அவற்றை உபயோகிக்க துவங்குவாய். அது தான் வேண்டாம் என்று சொல்கிறேன். அவைகள் இல்லாமலே கூட குடித்தனம் நடத்த முடியும் தானே? ' யோசி ' என்றார்.

'ஆமாம்,இல்ல'? என்று எனக்குத் தோன்றியது. அவரே தொடர்ந்தார், ' ஆனால், நாளை சமையலுக்கு வேண்டிய அரிசி பருப்பு போன்றவைகள் இல்லாமல் உன்னால் வாழ முடியுமா ? என்றார்....முடியாது என்று தலை அசைத்தேன்.

'ம்ம்..இப்பொழுது புரிகிறதா அவசியத் தேவைகளுக்கும் தவிர்க்க முடியாத தேவைகளுக்கும் உள்ள வித் தித்தியாசம்..... நாம் காலம் தள்ள எவையெல்லாம் தேவையோ அவற்றை மட்டும் வாங்கிக்கொண்டு குடித்தனத்தை ஆரம்பி. ஓவர் நைட் இல் இங்குள்ள வீடுபோல செட்டப் செய்ய வேண்டும் என்று நினைக்காதே. கொஞ்சம் கொஞ்சமாய் முன்னேற்றம் தானே வரும். அகலக்கால் வைக்காதே, ஆற்றிலும் அளந்து போடு, கடனே வாங்காதே. ஒரு பழமொழி உனக்குத்தெரியும் என்று நினைக்கிறேன், ' ஏர் பிடித்தவன் என்ன செய்வான் பாவம் ? பானை பிடித்தவள் பாக்கியசாலி' என்று. அது தான் வாழ்க்கை. ஆண் நன்கு சம்பாதித்துப் போடுவான், அதைக் கொண்டு செட்டாக குடித்தனம் பெண் தான் செய்யவேண்டும். சமையல் ரூமில் தான் சிக்கனம் தேவை. என்ன' குப்பை கொட்டப்போகிறாய் நீ என்று நான் பார்க்கிறேன் என்று சொல்வார்கள்' முன்பு. அதாவது நாம் கொட்டும் குப்பையை வைத்தே நாம் குடித்தனம் செய்யும் அழகை கணித்துவிடுவார்கள். எத்தனை பண்டத்தை நாம் வீணடிக்கிறோம் என்று வைத்தே நம் பவிஷை சொல்லிவிடுவார்கள். அதனால் ஜாக்கிரதை' என்று சொன்னார்.
.............


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62850
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12665

Back to top Go down

வாழ்த்து Re: 'மாத்தி யோசி' ! - சிறுகதை - by Krishnaamma :)

Post by krishnaamma on Mon Aug 10, 2020 9:18 pm

நான் 100 சதவிகிதம் அவர் சொன்னது போலவே தான் செய்தேன், வெற்றியும் பெற்றேன். ஆனால் தன் குழந் தைகளைத் தான் என்றுமே புகழக்கூடாது என்று சொல்வார்கள். அதனால் ஒருமுறை கூட அவர் என்னைக் 'நன்னா குடித்தனம் செய்கிறாய் அம்மா' என்று சொன்னதில்லை. என் அம்மாவிடம் சொல்லி பெருமைப்பட்டுளார் என்று நான் பிறகு அறிந்து கொண்டேன். நான் இன்று இத்தனை நன்றாக இருக்கிறேன் என்றால் அதற்கு அவரின் அறிவுரை தான் காரணம். பெரியவர்களின் சொல்பேச்சு கேட்டவர்கள், கேட்பவர்கள் வீணாவதே இல்லை.

எங்க அப்பா சொன்னதை அப்படியே இங்கு வேலைக்கு அப்பளை பண்ணுங்கள்.

"அவசியமாக இருக்கு என்று வேலைக்கு போகாதீர்கள்...தவிர்க்க முடியாவிட்டால் வேலைக்கு போங்கள்"

நான் சொல்ல வந்ததது புரிந்ததா குழந்தைகளே!.... Comfort ஆக இருக்கும் என்று அதிக சௌகர்யத்துக்காக வேலைக்கு போகாதீர்கள். உள்ளதைக் கொண்டு சந்தோஷப் படுங்கள். இல்லை எனக்கு வேலைக்குப் போக மிகவும் ஆசையாக இருக்கிறது என்று சொல்வீர்கள் ஆனால், கல்யாணத்துக்கு முன் போய் பாருங்கள். அது பொறுப்புகள் குறைவான காலம். சந்தோஷமாய் அனுபவியுங்கள். ஆனால் கல்யாணம் ஆனதும், கணவன், மாமியார் மாமனார் என்று வாழ பழகுங்கள். குழந்தைகளை எதிர்கொள்ளத்தயாராகுங்கள். மனதளவில் உங்களை திடமாக்கிக் கொள்ளுங்கள்.

பொழுது போகவில்லை என்று சொல்லாதீர்கள். இது COVID காலம்... எனவே எதுவும் வீட்டில் இருந்த படியே சாத்தியம் என்று உங்கள் கண் முன் நிரூபித்த காலம். கிட்டத்தட்ட ஆறுமாத காலமாய் வேலைக்குப் போகும் பெண்கள் அனைவரும் வீட்டில் இருந்தபடியே வீட்டு வேலையும், பார்த்துக் கொண்டு, கணவன், குழந்தைகளையும் கவனித்துக்கொண்டு, வேலைக்காரியா வேறு உதவியோ இல்லாமல். அதாவது வெளி உணவு கூட இல்லாமல் 3 வேளையும் தாங்களே சமைத்து உண்டு, உடுத்திட்டு எல்லாம்தானே நடந்து கொண்டு இருக்கிறது?/???ம்ம் ..??? அத்தனை ஆற்றல் உண்டு பெண்களிடம். அதை வீணடிக்காதீர்கள். இதையே நீங்கள் தாராளமாய் தொடர்ந்து செய்யலாமே . உங்கள் தேவை என்னவோ அவற்றை கற்றுக்கொள்ளுங்கள்.
.............


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62850
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12665

Back to top Go down

வாழ்த்து Re: 'மாத்தி யோசி' ! - சிறுகதை - by Krishnaamma :)

Post by krishnaamma on Mon Aug 10, 2020 9:18 pm

ஸோ, என்ன குறை உங்களுக்கு?... எதுக்கு வீட்டை விட்டு வெளியே போகணும் சம்பாதிக்க?...அதுவும் கணவன் குழந்தைகளை சரிவர கவனிக்காமல்?.... ஆச்சு குழந்தைகள் எத்தனை வருடங்கள் உங்களுடன் இருக்கப்போகிறார்கள் 15 - 16?... பிறகு மேற்படிப்பு அப்புறம் வேலை அப்புறம் கல்யாணம் என்று போய்விடுவார்கள்.. பின் உங்களுடன் இருக்கும் இந்த வருடங்களை நீங்கள் வீணடிக்கலாமா? அவர்களுடன் தானே கழிக்கவேண்டும். உங்களுதவி அவர்களுக்குத் தேவைப்படும்பொழுது அதைத்தருவது தானே முறை?

நீங்க ஒன்று கவனித்திருக்கிறீர்களா? கார்ப்பரேஷன் ஆட்கள், வீதி களில் பிளாட் பாரங்களில் மரக்கன்றுகள் நடுவார்கள். அந்த கன்றுகளை யாரும் எதுவும் செய்துவிடக்கூடாது, மாடு ஆடு சாப்பிட்டுவிடக்கூடாது என்று, இரும்பால் ஆன பாதுகாப்பு வளைவை வைத்திருப்பார்கள். அந்த செடி மரமாகி, அந்த பாதுகாப்பு வளையத்தை விட உயரமானதும், இனி அந்த மரம் ஒன்றும் ஆகாது என்று அந்த வளையத்தை எடுத்து விடுவார்கள்;. அப்படி அவர்கள் ஒரு செடிக்கே செய்யும் பொழுது, நாம், நம் குழந்தைகள் பாதுகாப்பாக இந்த சமூகத்தில் உலவும் வரை அவர்களுக்குப் பாதுகாப்பாக இருந்துவிட்டு, பிறகு நம் கைகளை உருவிக் கொள்ளலாம் அல்லவா?....

வீட்டு வேலைகள் அதாவது உங்கள் தினசரி கடமைகள் முடிந்ததும், உங்களுக்கான நேரத்தை ஒதுக்கி என்ன வேண்டுமானாலும் படிக்கலாம். எந்த மொழியும் படிக்கலாம். ஒன்லைன் கோர்ஸ்ஸஸ் பண்ணலாம். வேலை செய்யலாம். ஒன்லைன் பிஸ்னஸ்ஸ் செய்யலாம் . எத்தனை எத்தன்னையோ கைத்தொழில்கள் உண்டு கற்றுக்கொள்ள.

விஜய காந்த் ஒரு படத்தில் சொல்வார், ' எனக்குப் பிடிக்காத ஒரு வார்த்தை மன்னிப்பு' என்று அது போல எனக்கு பிடிக்காத ஒரு சொற்றோடர்...' உன் காலில் நீ நில்லு' என்பது தான். இதைக் கேட்டாலே எனக்கு BP ஏறும். ஏன் வீட்டில் இருந்து குடித்தனம் நிறைவாக செய்யும் நாங்கள் எல்லாம் என்ன கட்டக் காலிலா நிற்கிறோம்??? எத்தனை அருமையாக பன்முகங்களிலும் புகழ் பெற்று இருக்கிறோம்?

.................


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62850
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12665

Back to top Go down

வாழ்த்து Re: 'மாத்தி யோசி' ! - சிறுகதை - by Krishnaamma :)

Post by krishnaamma on Mon Aug 10, 2020 9:19 pm

குழந்தைகளையும் வளர்த்து, பெரியவர்களையும் அனுசரித்து எங்களால் முயன்ற அளவு சிக்கனத்தையும் கடைப்பிடித்து குடும்பத்தை நடத்த வில்லையா?... பணம் சம்பாதித்தால் தான் ஆச்சா? அதைச் சிக்கனமாக செலவழித்து மீதியை சேமித்தாலும் கூட நம் குடும்பத்துக்கு நல்லதுதானே?... கிரிக்கெட்டர் ஸ்ரீகாந்தை உங்களுக்குத்தெரியும் தானே?...அவர் விளையாடும் பொழுது சொல்வார்கள் அவர் அடிக்கும் ரன்களுடன் அவர் தடுக்கும் நன்குகளும் சேர்ந்ததுதுதான் அவர் ஸ்கொர் தான் என்று. அது போலத்தான் இதுவும். இருவரும் சம்பாதித்தால்தான் சேர்க்கமுடியும் என்று எங்காவது விதி இருக்கிறதா என்ன ?.... அதே போல நிறைய பணம் இருந்தால் தான் சந்தோஷம் என்று விதி உள்ளதா?...இரண்டுமே இலை... சந்தோஷமாய் மன நிம்மதியோடு வாழ பணம் மட்டுமே தேவை இல்லை. அவை இரண்டும் நம் மனத்தில் இருக்கிறது. பணம் இருப்பவர்கள் மட்டுமே சந்தோஷமாய் வாழுவார்கள் என்று சொன்னால், அம்பானி, பிரில்லா மட்டுமே சந்தோஷமாய் வாழுகிறார்கள், ஒரு ஆட்டோ ஓட்டுனரோ ஒரு கிளார்க்கோ சந்தோஷமாய் வாழ வில்லையா? ...சொல்லுங்கள்????

நாங்கள் எல்லாம் படிக்கும் காலத்திலேயே கோலம் போடுவோம், சுவாமி மேடை இல் அரிசிமாவால் போடுவோம், வாசலில் கல்லுப் பொடியால் போடுவோம், வீட்டிற்குள் மாவரைத்து இழை கோலம் போடுவோம், வண்ணப்பொடிகளால் ரங்கோலி. தையல் வேலை செய்வோம், எங்களுக்கான துணிகளைத் தைத்துக் கொள்வோம், எம்பிராய்டரி போடுவோம், சம்கி , மணி வைத்து தைப்போம்... ஸ்பாஞ் ஷீட் களில் பொம்மைகள் செய்வோம்.... பூத்தொடுப்பது, கதை புத்தகங்கள் வாசிப்பது, ஸ்லோகங்கள் கேட்பது, கதாகால ஷேபங்களுக்கு போவது, சமைப்பது , விட்டு நிர்வாகம் என்று பலதும் கற்றுக்கொண்டோம். அம்மானை ஆடுவோம், பல்லாங்குழி ஆடுவோம், பாண்டி , தாயக் கட்டம் ,கும்மி கோலாட்டம் தட்டுவோம். பல்லாங்குழி சுங்கு எல்லாம் நியாப சக்தியை பெருக்கும் . வாய்ப்பாடு நன்றாக வரும்.கல்லுரலில் அம்மி இல் அரைத்திருக்கிறோம். எங்க அம்மா பாட்டி எல்லாம் உரலில் அரிசி குத்தி இருக்காளாம்... சொல்வார்கள். நம் விரல் நுனிகளுக்கு வெவேறு விதமான வேலைகள் கொடுத்து நம்மை நோய் நொடி இல்லாமல் பார்த்துக் கொண்டார்கள் அந்தக் காலத்துப் பெரியவர்கள்.

வருஷ சாமான்கள் வாங்கி காயவைப்போம். வத்தல் போடுவோம். புளி வாங்கி கொட்டை நீக்கி, காயவைத்து அடுக்கும்பொழுதே அதே புளியங்கொட்டை களை சேர்த்து வைத்து சுங்கு விளையாடுவோம். இந்தக் காலத்துப் பெண்களுக்கு இவையெல்லாம் வருமா? அல்லது தெரியுமா ?
...............


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62850
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12665

Back to top Go down

வாழ்த்து Re: 'மாத்தி யோசி' ! - சிறுகதை - by Krishnaamma :)

Post by krishnaamma on Mon Aug 10, 2020 9:19 pm

எத்தனை எத்தனை விஷயங்களை உங்கள் படிப்புக்காக வீட்டுக் கொடுத்துளீர்கள் என்று புரிகிறதா?... அதெல்லாம் இல்லாமலே நாம் காலம் தள்ள லாமே என்று உங்களுக்குத் தோன்றும் . அப்பொழுது எதிர்காலத்தில் நம் கலைகளின் நிலைமை??? மிகப்பெரிய கேள்விக்குறி யாச்சே அது??

நாங்கள் இத்தனை விளையாட்டுகள் விளையாடினோம் என்று சொ ல் கிறேனே, இந்தக்காலத்துக் குழந்தைகள் இதில் சில வற்றையாவது விளையாடி இருப்பீர்கள் . சிலதை வீடியோ கேம்ஸ் போல போனில் விளையாடி இருப்பீர்கள். அது போதாதா என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், எல்லோராலும் அது போல போனிலோ வீடியோ கேம்ஸ் லோ விளையாட முடியாது. அது போல விலையுர்ந்த வஸ்த்துக்களை வாங்க முடியாதவர்களும் உண்டு தானே?... ஆனால் நான் சொல்வது போல விளையாடினால் எல்லோரும் விளையாடலாம். அதில் இன்னும் ஒரு சௌகர்யமும் உண்டு. அது என்னவென்றால் நாம் தோற்றுப்போவோம் , என்று தெரிந்து கொள்வார்கள். அந்த தோல்வியைத்தாங்கும் மனப்பக்குவம் வரும். நாலு பேருடன் சேர்ந்து எப்படி பழகுவது,பேசுவது என்று இங்கிதம் தெரியும். விட்டுக்கொடுத்துப் போகும் குணம் வரும். விளையாடும் பொழுது சண்டை வரும் மறு நிமிடமே சேர்ந்து கொள்வார்கள். குழந்தைகளுக்கு மான அவமானம் கிடையாது. அதனால் தான் சொல்வார்கள், குழந்தைகள் சண்டை இல் பெரியவ ர்கள் தலை இடக்கூடாது என்று. ஏன் என்றால் இன்று சண்டை இடும் குழந்தைகள் நாளை சிரித்து விளையாதும். நாம் தான் ஒருவரை ஒருவர் ஏற இரங்கப் இறங்க பார்ப்போம்.

இதை யே போனில் தனியாக விளையாடும் குழந்தைக்கு தான் மட்டுமே எப்பொழுதும் ஜெயிக்க வேண்டும் என்கிற எண்ணம் மேலோங்கும். ஒருமுறை தோற்றுப்போனால், அல்லது தோற்பது போலத்தெரிந்தால் மீண்டும் reset செய்து, முதலில் இருந்து விளையாதும்.சரிதானே ?... பல்லக்கில் ஏறவேண்டும் என்கிற ஆசை எல்லோருக்கும் உண்டு தான். இப்படி எல்லோருமே பல்லக்கில் ஏற ஆசைப்பட்டால் தூக்குவது யார்?... இன்று நான், நாளை நீ என்கிற மனப் பக்குவம் வேண்டாமா? அது இந்தமாதிரி விளையாட்டுகளில் வருமா? தான் ஜெய்க்கவேண்டும் என்கிற மனநிலை தவ றி ல்லை, நான் மட்டுமே எப்பொழுதும் ஜெயிக்கவேண்டும் என்பது தான் ஆபத்தானது. துளி தோல்வியைக் கூட தாங்கி கொள்ள முடியாமல் போவது இதனால் தான்.
இந்த மனநிலைதான் அவர்க ளை நாலு மார்க் குறைந்து போனது என்று தற்கொலை செய்து கொள்ளும் மனோ நிலைக்குத்தள்ளும்.
..........


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62850
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12665

Back to top Go down

வாழ்த்து Re: 'மாத்தி யோசி' ! - சிறுகதை - by Krishnaamma :)

Post by krishnaamma on Mon Aug 10, 2020 9:21 pm

விளையாட்டிலேயே இத்தனை பண்புகளை நம் பெரியவர்கள் எளிதாத நமக்கு சொல்லிக்கொடுத்துள்ளார்கள் என்றால், அவர்களை எப்படி புகழ்வது. எவ்வளவு அருமையாக நமக்கு பாதை வகுத்துக் கொடுத்துளர்கள் பாருங்கள். எப்பொழுதுமே நாம் ஒரு பாதையை வகுத்துக் கொண்டு போவதை விட, ஏற்கனவே இருக்கும் ஒற்றைஅடிப் பாதை இல் போனால் ஊரை அடைவது எளிது என்று சொல்வார்கள்.

அதே போல நம் மனம் அமைதி பெறவும் நம் ஆத்மாவிற்கு வலு சேர்க்கவும் தான் இதிகாசங்கள் புராணங்கள் எல்லாம் எழுதி வைத்துளள்னர். அவற்றை எல்லாம் நாம் எளிதாக புரிந்து கொள்ளத்தான் கதாகாலக்ஷேபங்கள் செய்கிறார்கள்.

நான் அப்பொழுது ஸ்ரீ முக்கூர் நரசிம்மாச்சாரியார், ஸ்ரீ பால கிருஷ்ண சாஸ்திரிகள், ஸ்ரீ ஜெயராமசர்மா என்று பலரது உபன்யாசங்களும் கேட்டுக் கேட்டு வளர்ந்தவள். இன்றும் வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் மாமாவின் கதாகாலக்ஷேபங்களை கேட்டு வருகிறேன். நாம் இந்த உலகிலிருப்பதற்கு பணம் அவசியம் தான் ஆனால் அதை சேர்ப்பதிலேயே குறியாய் இருந்துவிட்டு நம் ஆத்மாவிற்கு எதுவுமே செய்யாவிட்டால்???? அப்புறம் மனிதராய் பிறந்ததற்கு என்ன பயன்? எனவே, இவைகளையும் நாம் செய்யவேண்டியவர்களாவோம். நாம் கற்றுக்கொண்டதை அடுத்த தலைமுறைக்குத் தரவேண்டாமா நாம்?...நாமே அவற்றை புறம் தள்ளிவிட்டால் ...பிறகு அவர்கள் எப்படி கற்றுக்கொள்வார்கள்???? பணத்தின் பின்னே அலைந்து திரிந்து விட்டு, நாம் நம் ஆத்மாவிற்கு மட்டும் அல்ல நம் சமூகத்திற்கும் எதுவும் செய்யாமல் போகிறோம். கலைகள் நம் மன அமைதிக்கு பெரிதும் உதவும். மதமும் அப்படித்தான். மன அமைதி தரும். நம் கஷ்ட காலங்களில் சாய்ந்து கொள்ள ஒரு தோளாக இருக்கும்.

இப்பொழுது பாருங்கள் காலக்ஷேபங்களில் எல்லாம் 40 + தான் உட்கார்ந்து கொண்டு இருக்கிறார்கள். அப்புறம் எப்படி குழந்தைகளுக்கு நம் மதத்தின் மேல் நம்பிக்கை வரும்? ஒழுக்கம் வரும்?...தனி மனித ஒழுக்கம், ஸ்ரத்தை என்று சொல்லக்கூடிய குவிந்த மனம் இரண்டும் இன்றைய தேவை. அதை பெண்களாகிய நாம் தான் குழந்தைகளுக்கு ஊட்ட முடியும். நாமும் முகத்தை திருப்பிக்கொண்டு பணம் சம்பாதிக்க கிளம்பினால் நம் வருங்காலம் எப்படி இருக்கும் என்று கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்.
.............


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62850
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12665

Back to top Go down

வாழ்த்து Re: 'மாத்தி யோசி' ! - சிறுகதை - by Krishnaamma :)

Post by krishnaamma on Mon Aug 10, 2020 9:22 pm

எதற்கு சொல்லவந்தேன் என்றால், சுயகாலில் நில்லு என்று மற்றவர்கள் சொல்வதற்கு உள் அர்த்தம் என்னவென்றால், நீ உன் தேவைகளுக்கு கணவனின் கையை எதிர் பார்க்காதே என்று சொல்லத்தான். இவளும் அவர்கள் சொல்கிறார்களே என்று தன்னுடைய better half என்று சொல்லக்கூடிய , இனி வாழ்வும் தாழ்வும் உன்னோடுதான் என்று அக்கினி சாட்சியாக கரம் பிடித்தவனை தவிக்க விட்டு விட்டு, மத்த வர்கள் அனைவரிடமும் கைகளை நீட்டி பிச்சை வாங்குவார்கள். ஆமாம், கணவனிடம் அத்தனை மானம் பார்ப்பவள் , எதற்கும் யாரையும் சாரக்கூடாது, தானே எல்லாம் செய்து கொள்ள வேண்டும்.... முடியுமா அது?..யாரையும் சாராமல் வாழமுடியுமா ஒருத்தரால்?... அது ஆணாகட்டும் அல்லது பெண்ணாகட்டு ம் ?

அவர்கள் எத்தனை பேரை காசு கொடுத்து சார்ந்து இருக்கிறார்கள், ஓசி இல் சார்ந்து இருக்கிறார்கள் என்று நான் பட்டியல் இடுகிறேன் பாருங்கள். இத்தனை பேரையும் சார்ந்து இருந்துவிட்டு, " நான் வேலைக்குப் போகிறேன், நான் சம்பாதித்தேன்" என்று சொல்வாளே பார்க்கணும்....என்று புன்னகைத்தார் அந்த அம்மா.

முதலில் வீட்டு வேலைக்கார அம்மா, சமைக்க ஒருத்தி குழந்தையை பார்த்துக் கொள்ள ஒருத்தி, அல்லது வீட்டு வேலைகளுக்காக ஒரு அம்மா, குழந்தையை பார்த்துக் கொள்ள குழந்தைகள் காப்பகம். ஒருவேளை வீட்டிலேயே குழந்தையை பார்த்துக் கொள்ள ஆள் என்றால், அதற்கான காமெரா, அதுவும் மறைவுக் கேமரா, தன் வீட்டு வேலைக்காரியை பார்க்க யார் யார் வருகிறார்கள் என்று தகவல் சொல்ல செக்யுரிட்டிக்கு அதிக பணம் , பணம் கொடுக்காமலே பக்கத்து போர்ஷன் மாமி இடம் சொல்லிவைப்பது. கணவன் அல்லது மனைவி மாறி மாறி போன் செய்து வேலைக்கார அம்மாவுடன் பேசுவது.

அவங்க கேட்கும்பொழுது பண உதவி செய்வது. அவர்களின் குழந்தைகளுக்கு உதவுவது. அதாவது இவங்க அவளை சந்தோஷமாய் வைத்துக் கொண்டால் அவள் இவள் குழந்தைகளை நன்கு பார்த்துக் கொள்வாள் என்று எண்ணுகிறாள் அந்தப் பெண். ஆனால் இது எதுவுமே இல்லாமல், இவள் கணவனை வளர்த்தது போல தன் மாமனாரும் மாமியாரும் தன் குழந்தையையும் வளர்ப்பார்கள் என்று அவள் நம்பவில்லை. வேலைக்கார அம்மாவை சந்தோஷமாய் வைத்துக் கொள்ளத்தெரிந்த பெண்ணுக்கு தன் மாமியார் மாமனாரை சந்தோஷமாய் வைத்துக்கொள்ள வேண்டும் என்று ஏன் தெரியவில்லை???? இது மில்லியன் டாலர் கேள்வி பெண்களே? அவை முழுவதும் நிசப்தம் ம்ம்.. நான் லிஸ்ட் ஐ தொடருகிறேன்....

குழந்தைகளை தான் சரிவர பார்த்துக் கொள்ள்வில்லையோ என்கிற கில்டி பீலிங் இல் அல்லது அவர்களது பள்ளி இல் நடக்கும் விழா , parents meeting போன்றவற்றில் கலந்து கொள்ள முடியாமல் போகும்பொழுது அல்லது அவர்களின் பிறந்த நாளைக் கொண்டாட முடியாத போது அதை மறைக்க குழந்தைகளுக்கு விலை உயர்ந்த பரிசுப் பொருட்களை, அவர்களுக்குத் தேவையா இல்லையா என்று கூட பார்க்காமல் வாங்கித்தருவது.
..................


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62850
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12665

Back to top Go down

வாழ்த்து Re: 'மாத்தி யோசி' ! - சிறுகதை - by Krishnaamma :)

Post by krishnaamma on Mon Aug 10, 2020 9:23 pm

காஸ் வந்தால் வாங்கிவைக்க, பால் வாங்கி வைக்க, ஒன்லைன் இல் ஆர்டர் பண்ணவை வந்தால் வாங்கி வைக்க அக்கம் பக்கம் உள்ளவர்கள் அல்லது செக்யூரிட்டி தேவை. குழந்தைகள் சீக்கிரம் பள்ளி இல் இருந்து திரும்பிவிட்டால், அல்லது விடுமுறை நாட்களில் அவர்கள் மீது ஒரு கண் வைத்துக் கொள்ள அக்கம் பக்கம் உள்ளவர்கள் தேவை. இப்படி லிஸ்ட் போகும். அக்கம் பக்கம் உள்ளவர்களின் உதவி எல்லோருக்கும் தேவைதான், ஆனால் அது பரஸ்பரம் இருக்க வேண்டாமா?...

இதில் beauty என்னவென்று நீங்கள் பார்த்தால், படித்த பெண்கள் தான் இத்தனை கஷ்டப்படுவார்கள். அந்தக்காலத்தில் நாத்து நடப்போன பெண்கள் குழந்தைகளையும் இடுக்கிக்கொண்டே போய்விடுவார்கள். இன்னும் சில வேலைக்கார அம்மக்கள் தங்கள் குழந்தைகளையும் கூட கூட்டிக் கொண்டு வருவதை நாம் பார்க்கலாம். இன்னொன்றும் சொல்கிறேன் கேளுங்கள், வம்ச விருத்தி குறைந்து கொண்டே வரும் இந்த நாட்களில் , பேரக் குழந்தைகள் ஆசை இல் இங்கே மாமியார் மட்டும்,’ எங்களுக்கு வயசு ஏறுகிறது, எப்போ குழந்தை பெற்றுக்கொள்ளப்போகிறாய்’ என்று கேட்டுவிடக் கூடாது. ஆனால் கல்யாணப் பத்திரிகை யை நீட்டும் பொழுதே, அவள் HR கேப்பாள் , when are you planning for a baby?... please remember your onsite job is on queue “ என்று சும்மாவே கொளுத்திப் போடுவாள்...இவளும் ஹிஹி என்று வருவாள்.

மாணவிகள் கரகோஷம் செய்து விசில் கூட அடித்தார்கள். அவர்கள் இது போன்ற கோணத்தில் யோசித்தது இல்லை என்று புரிந்தது. நீங்கள்? புன்னகை

அன்புடன்,
கிருஷ்ணாம்மா புன்னகை

.
.
.
.
.
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62850
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12665

Back to top Go down

வாழ்த்து Re: 'மாத்தி யோசி' ! - சிறுகதை - by Krishnaamma :)

Post by SK on Tue Aug 11, 2020 2:31 pm

அருமையான தொகுப்பு அக்கா


SK
SK
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8467
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1779

Back to top Go down

வாழ்த்து Re: 'மாத்தி யோசி' ! - சிறுகதை - by Krishnaamma :)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum