புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 26 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 26 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 26 Poll_c10 
64 Posts - 50%
heezulia
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 26 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 26 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 26 Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 26 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 26 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 26 Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 26 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 26 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 26 Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 26 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 26 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 26 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 26 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 26 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 26 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 26 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 26 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 26 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 26 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 26 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 26 Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்


   
   

Page 26 of 100 Previous  1 ... 14 ... 25, 26, 27 ... 63 ... 100  Next

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4519
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Sep 02, 2020 11:49 am

First topic message reminder :

02.09.2020

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 26 Jg6TBOnYQw2fnIta5hr7+anupama

அனுபமா, பின்னணி பாடகி - 02.09.1968
இன்று பிறந்த நாள்.

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்  பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 26 1f382 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 26 1f389 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 26 1f387 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 26 1f386

இவருக்கு கர்னாடக சங்கீதமும் தெரியுமாம். லண்டன்ல உள்ள ட்ரினிட்டி காலேஜ்ல பியானோ வாசிக்க கத்துக்கிட்டார்.

ப்ரபல ஹிந்தி பின்னணி பாடகி ஆஷா போஸ்லேயும், தமிழ் பின்னணி பாடகி KS சித்ராவும் பாட்ற ஸ்டைல் இவருக்கு ரொம்ப பிடிக்கும்.

ஆரம்பத்ல AR ம்யூஸிக் போட்ட விளம்பரங்கள்ல நடிச்சிட்டு இருந்தார். 

AR ரஹ்மான் இவரை மே மாதம் [1993] படத்ல மொதல்ல பாடவச்சாலும், திருடா திருடா  [1993] படத்ல  அவர் ம்யூஸிக்ல  அனுபமா பாடிய "சந்த்ரலேகா' பாட்டு,
அதாங்க "கொஞ்சம் நிலவு கொஞ்சம்  நெருப்பு  ஒன்றாய்ச்  சேர்த்தால் எந்தன் தேகம்" ங்கிற பாட்டுதான் பயங்கரமான ஹிட்டோ ஹிட்டு. 
அனுபமாவை 'சந்த்ரலேகா அனுபமா'னு செல்லமா  கூப்ட்டாங்களாம். இந்த பாட்டுக்கப்புறந்தான் அனுபமா பேர் எங்கேயோ...........  போயிருச்சு. 

பாட்டை செலெக்ட் செஞ்சு பாட ஆரம்பிச்சார். தென்னிந்திய மொழிகள்ல, ஹிந்தியில, இங்கிலீஷ்லல்லாம் பாட்டு பாடியிருக்கார். 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்


heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4519
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu Jan 14, 2021 12:48 pm

14.01.2021 

காமெடி நடிகர் சுருளிராஜன் பிறந்த நாள் [1938 - 1980]

நடிக்க வர்றதுக்கு முன்னால, அமெச்சூர் நாடங்கள்ல நடிச்சிட்டு இருந்தார். OAK தேவர், பிசிர் ராமராவ், TN பாலு நாடக குழூல சேந்து நடிச்சார். 

அப்புறமா 1959ல சென்னைக்கு நடிக்கதுக்குன்னே வந்துட்டார். 1965ல ஜெய்சங்கர் அறிமுகமான படம் இரவும் பகலும் படத்ல சுருளிராஜனும் சின்ன ரோல்ல அறிமுகமானார். ஆனா ஆரம்பத்திலேயே 1966, 1967, 1968ல காதல் படுத்தும் பாடு, நான், மூன்றெழுத்து படங்கள்ல 30 வயசிலேயே 60 வயசான  கேரக்டர்தான் கெடச்சுது. அப்போதைய டைரக்ட்டர் TN பாலு எடுத்த படங்கள்லலாம் இவருக்கு ச்சான்ஸ் கொடுத்தார். 

1979ல மாந்தோப்பு கிளியே படத்ல இவர் நடிச்ச கஞ்சப்ரபுவை  மறக்க முடியுமா? இந்த படத்லதான், குடும்ப கட்டுப்பாடு பற்றிய வசனங்கள் முதல் முதலாக இடம் பெற்றன. முக்கியமா அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை பற்றி நடிச்சார். திருநங்கை, கம்பௌண்டர், மெக்கானிக், கழிவு அகற்றும் தொழிலாளி, பாம்பாட்டி இதுமாதிரி.
 
சிறந்த காமெடி நடிகருக்கான தமிழ்நாடு விருது வாங்கினார். 1984ல இவர் சார்புல, இவரோட மகன் கலைமாமணி விருது வாங்கினார். 


லாரிடிரைவர் ராஜாக்கண்ணு 1981


உப்புமா கிண்டி வையடி அடியே உப்புமா கிண்டி வையடி 

கீதா ஒரு செண்பகப்பூ 1980
ம்யூஸிக் : MS விஸ்வநாதன் 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82313
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jan 14, 2021 6:05 pm

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 26 Samikkanu-naan-3
-
நான் படத்தில் இடமிருந்து வலம்:
ஜெயலலிதா, மனோகர், மனோரமா, நாகேஷ் ஆகியோருடன்
சுருளிராஜன்
-
நன்றி- அன்று கண்ட முகம்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4519
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Jan 15, 2021 1:15 pm

15.01.2021

நடிகை பானுப்ரியா பிறந்த நாள் [1966]

1980களின் கனவுக்கன்னி. உண்மையான பேர் மங்காபானு. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட படங்கள்ல நடிச்சிருக்கார்.  சில ஹிந்தி படங்கள்லயும் நடிச்சார். இவரோட தங்கச்சி நிஷாந்தியும் நடிகை. 

இவரோட முதல் தமிழ் படம் 1983ல மெல்ல பேசுங்கள். பரதநாட்டியம், குச்சிப்புடி கத்துக்கிட்டார். இப்போ TV சீரியல்ல நடிச்சிட்டு இருக்கார். கண்களாலேயே பாவங்கள்  அழகா  காட்டுவார். அதுக்காக இவர் eyetex விளம்பரம் ப்ரபலமாச்சு. கல்யாணத்துக்கப்புறம் நடிக்கிறதை  கொறச்சுக்கிட்டார். டப்பிங் குரல் கலைஞர். 

சிறந்த நடிகைக்கான இந்தியன் எக்ஸ்பிரஸ் விருது, நந்தி விருது, ஃபிலிம்ஃபேர் விருது, தமிழ்நாடு சினிமா சிறப்பு விருதுகள், இன்னும் பல விருதுகள் வாங்கியிருக்கார். 


பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும்
காதுல வாங்கி போட்டுக்கணும் 

பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும் 1991
ம்யூஸிக் : சந்திரபோஸ் 

நாடோடி மன்னர்களே வணக்கம் வணக்கம்
நான் பாடும் மெல்லிசையோ இனிக்கும் இனிக்கும் 

வானமே எல்லை 1992
ம்யூஸிக் : மரகதமணி 
வரிகள் : வைரமுத்து 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4519
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Jan 15, 2021 1:23 pm

15.01.2021

நகைச்சுவை நடிகர் தங்கவேலு பிறந்த நாள் [1917 - 1994] 

டணால் தங்கவேலு. 1951ல சிங்காரி படத்தில டணால் டணால்னு வசனம் பேசியதால் இந்த பட்டபேர். இவரோட மனைவியும் காமெடி நடிகை M சரோஜா. இவங்க ரெண்டு பேரும் சேந்து நிறைய படங்கள் நடிச்சிருக்காங்க. 

கல்யாண பரிசு படத்தை மறக்க முடியுமா? மன்னார் & கம்பெனி. 

"ஒனக்கு பைரவன தெரியுமா?" அறிவாளி படத்ல
"அதான் எனக்கு தெரியுமே" முத்துலட்சுமி கூட பூரி சுட்ற காமெடி இன்னும் பல பல. 

கல்யாண பரிசு படத்தின் நூறாவது நாள் விழால சரோஜாவும், தங்கவேலுவும் கண்ணாலம் கட்டிகினாங்க. 

பத்து வயசிலிருந்தே நாடகங்கள்ல நடிக்க ஆரம்பிச்சுட்டார். 20 வயசில நாடகங்கள்ல காமெடி பண்ண ஆரம்பிச்சார். அப்போதான் கலைவாணர் புதுசா ஆரம்பிச்சிருந்த தன் யதார்த்தம் பொன்னுசாமிப்பிள்ளை நாடக குழூல தங்கவேலுவை இழுத்து போட்டுக்கிட்டார். 

தங்கவேலு நடிச்ச முதல் படம் MGR நடிச்ச சதிலீலாவதி, சின்ன ரோல்ல. 

காமெடி நடிகர் சந்தானத்துக்கு தங்கவேலுவையும், கவுண்டமணியையும் பிடிக்குமாம்.

1952ல பணம் படத்துல நடிச்சதுக்காக கலைவாணர் NSK அவருக்கு 5,000/- கொடுத்தாராம். அதை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு போனபோ, அவருடைய பெரியப்பா "அடேய், இந்த பணத்தை கலைவாணர்ட்ட இருந்து திருடியதுக்கு, நீ நல்லாவே இருக்கமாட்டேன்னு" சொல்லி திட்டி, தங்கவேலுவை இழுத்துட்டு கலைவாணர்ட்ட போனாராம் சித்தப்பா. NSK "பணம் படத்துல நடிச்சதுக்கு நா அவருக்கு கொடுத்த சம்பளம்" னு சொன்ன பிறகுதான், சித்தப்பா சமாதானமானார். 

கலைமாமணி விருது, கலைவாணர் விருது வாங்கினார். 


அதா எனக்கு தெரியுமே காமெடி அறிவாளி 1963


காதல் உண்டாகும் கட்டழகி உன்னாலே
நெஞ்சு ஒண்ணாகும் பக்கத்திலே நின்னாலே 

இரு வல்லவர்கள் 1966
ம்யூஸிக் : வேதா 
வரிகள் : கண்ணதாசன் 


பேபி


heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82313
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jan 15, 2021 2:00 pm

உல்லாச உலகம் உனக்கே சொந்தம்
-

-

அலிபாபாவும் நாற்பது திருடர்களும்
படத்தில் தங்கவேலு குலாம், செருப்பு தைக்கும்
தொழிலாளியாகச் சிறப்பாக நடித்திருக்கிறார்.

திருடர் குகையில் அகப்பட்டுக்கொண்ட காசிம், பிணத்தைத்
தைத்துக் கொடுத்துப் பணம் பெற்ற பிறகு அவர்
சந்தோஷத்தின் மிகுதியில் ‘உல்லாச உலகம் உனக்கே
சொந்தம், தய்யடா தய்யடா தய்யடா,
நீ ஜல்சா செய்யடா செய்யடா செய்யடா...’ என ஆடிப்பாடும்
பாடல் மறக்க முடியாதது.

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4519
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Jan 16, 2021 1:05 pm

16.01.2021

நடிகர் விஜய் சேதுபதி பிறந்த நாள் [1978]

விஜய குருநாத சேதுபதி காளிமுத்து.
ரசிகர்கள் வச்ச பட்ட பேர் மக்கள் செல்வன். நடிகர், பாடகர்,  பாடலாசிரியர், தயாரிப்பாளர், நிகழ்ச்சி தொகுப்பாளர், வசனகர்த்தா. கொஞ்ச தெலுங்கு, மலையாளம் ஹிந்தி படங்கள்ல நடிச்சிருக்கார். 

டைரக்டர் மகேந்திரன் சேதுபதியின் முகம் போட்டோவுக்கு நல்லா இருக்கும்னு  சொல்லியிருக்கார். அதனால இவருக்கு  நடிப்புல ஆச வந்துருச்சு. கூத்துப்பட்டறைல அக்கௌன்டட்டா வேல செஞ்சார். அங்க இருந்து சினிமாக்காரங்கள பக்கத்துல பார்க்கிற சான்ஸ் கெடச்சுதுனு அவரே சொன்னாராம். TV சீரியல்ல நடிச்சிருக்கார். டைரக்ட்டர் கார்த்திக் சுப்புராஜ் கூட குறும்படங்கள்ல நடிச்சிருக்கார். 

2006ல புதுப்பேட்டை படத்ல தனுஷின் friend ஆக அறிமுகமானார். 
இவர் ஹிந்தி படங்கள்ல நடிக்கப்போறதா தகவல். 

நார்வே குறும்பட தமிழ் திரைப்பட விழால சிறந்த நடிகருக்கான விருது வாங்கினார். தென்னிந்திய  ஃபிலிம்ஃபேர் விருது, விஜய் விருதுகள் இன்னும் பல விருதுகள் வாங்கியிருக்கார். 

நடுவுல கொஞ்சம்  பக்கத்த  காணோம் 2012 ப்பா காமெடி 


ஏவ்வீட்டில நா இருந்தேனே 
எதிர் வீட்டில அவள் இருந்தாளே 

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா 2013
ம்யூஸிக் : சித்தார்த் விபின் 
வரிகள் : லலிதானந்த் 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4519
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Jan 17, 2021 4:41 pm

17.01.2021

LV பிரசாத் [1908 - 1994]  அவர்கள் பிறந்த நாள் 

அக்கினேனி லட்சுமி ரவிப்ரசாதராவ். நடிகர், தயாரிப்பாளர்,  டைரக்ட்டர், இந்திய சினிமாவின் முன்னோடி.

ப்ரசாத் குழுமத்தின் நிறுவனர். இதுல ப்ரசாத் ஆர்ட் பிக்ச்சர்ஸ், ப்ரசாத் ஸ்டூடியோஸ், ப்ரசாத் ஐமேக்ஸ், LV ப்ரசாத் கண் மருத்துவமனை இன்னும் பல எல்லாமே அடங்கும்.

ஹிந்தி, தமிழ், தெலுங்கு, பெங்காலி மொழி படங்கள  தயாரிச்சிருக்கார், டைரக்ட் செஞ்சிருக்கார். சில படங்கள்ல நடிச்சிருக்கார். 

தலைவராக இருந்தது : 
சர்வதேச சினிமா விழால இந்திய பனோரமா பிரிவின் அகில இந்திய தேர்வுக்குழுவின் தலைவர்.  
சென்னை சிறுவர் திரைப்பட விழால சர்வதேச ஜூரிகளின் தலைவர். 
தென்னிந்திய சினிமா சம்மேளனத்தின் தலைவர். 
சினிமா தியேட்டர் உரிமையாளர்களின் தலைவர்.  
இது தவிர சினிமா தணிக்கை  வாரியத்தின் உறுப்பினராக இருந்தார்.

2006ல இவர் நினைவாக அஞ்சு ரூபா ஸ்டாம்ப் வந்துச்சு.
 
மூணு மொழிகள்ல ரிலீஸ் ஆன முதல் பேசும் படங்கள்ல [ஹிந்தி, தமிழ், தெலுங்கு] நடிச்ச பெருமை இவருக்கு இருக்கு. 

தாதாசாகிப் பால்கே விருது, ஆந்ரால ரகுபதி வெங்கையா விருது,  ஃபிலிம்ஃபேர் விருது, இன்னும் பல விருதுகள்  வாங்கினார். 


நீலவண்ண கண்ணா வாடா நீ ஒரு முத்தம் தாடா 

மங்கையர் திலகம் 1955 - டைரக்ட்டர் 
ம்யூஸிக் : S தட்சிணாமூர்த்தி 
வரிகள் : மருதகாசி 

அழகு சிரிக்கிறது ஆசை துடிக்கின்றது 
பழக நினைக்கின்றது பக்கம் வருகின்றது

இருவர் உள்ளம் 1963 - டைரக்ட்டர் 
ம்யூஸிக் : KV மகாதேவன் 
வரிகள் : கண்ணதாசன்  

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4519
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Jan 18, 2021 2:24 pm

18.01.2021

S. பாலசந்தர் அவர்கள் பிறந்த நாள் [1927 - 1990]

சுந்தரம் பாலசந்தர் என்ற வீணை S பாலசந்தர். நடிகர், வீணை கலைஞர், டைரக்ட்டர், ம்யூஸிக் டைரக்ட்டர், திரைக்கதாசிரியர். அவர் டைரக்ட்டின படங்களுக்கு அவரே ம்யூஸிக் போட்டுக்கிட்டார். 

இவரோட ஸ்பெஷாலிட்டி என்னான்னா யாரும் சொல்லி கொடுக்காமயே வீணை கத்துக்கிட்டதுதான். இது மட்டுமல்ல, பல இசை கருவிகள தானே கத்துகிட்டார். சினிமாலயும் பல புதுமைகள் செஞ்சார். 

7 வயசுல கஞ்சிரா அட்டகாசமா வாசிப்பாராம். பன்ரெண்டு வயசிலேயே தானே கத்துகிட்ட சித்தார் இசை கருவிய வச்சு தனி கச்சேரியே நடத்தினார். இதே மாதிரி பின்னால வீணை கச்சேரியும் நடத்தினார். அதனால வீணை பாலசந்தர் ஆனார். கர்னாடக ம்யூஸிக் மட்டுமில்லாம, வெஸ்ட்டன், ஹிந்துஸ்தானி இசைலயும் தேர்ந்தவர். ஆல் இண்டியா ரேடியோல கலைஞர். 

1934ல சீதா கல்யாணம் படத்ல குழந்தை நட்சத்திரமாக, கஞ்சிரா வாசிக்கும்  சிறுவனாக   அறிமுகமானார். இந்த படத்தில இவரோட குடும்பமே நடிச்சுது. 1948ல இது நிஜமா படத்ல   ஹீரோவா நடிக்க ஆரம்பிச்சார். 

இவர் 1954ல டைரக்ட்டின அந்த நாள் படத்ல பாட்டே கிடையாது. இவர் கதை எழுதி டைரக்ட்டினார். 1964ல இவர் டைரக்ட்டின பொம்மை படத்தில பின்னணி பாடகர் ஜேசுதாஸ் அவர்களை அறிமுகப்படுத்தினார். 

மேஜிக் ம்யூஸிக் ஆஃப் இண்டியா, சவுண்ட் ஆஃப் வீணா, இம்மார்ட்டல் சவுண்ட் ஆஃப் வீணா இப்டி பல ரெகார்ட் வெளியிட்டார். 

பத்மபூஷண் விருது, சங்கீத நாடக அகாடமி விருது, சங்கீத  கலாசிகாமணி விருது வாங்கினார். 

இவர் சினிமால செஞ்ச பல புதுமைகள்ல இதுவும் ஒண்ணு. 
பொம்மை [1964] பட டைட்டில்.
நடிப்பு, டைரக்ட்டர், தயாரிப்பு, ம்யூஸிக், கதை. இந்த படத்ல இவ்ளத்தையும் செஞ்சிருக்கார்.


உல்லாசமாகவே உலகத்தில் வாழவே 
மாப்பிள்ளையாகி ஆனந்தமாக மணமாலை சூடிடும் கல்யாணம் ஆஹாஹா கல்யாணம் 

பெண் 1954 - நடிப்பு 
ம்யூஸிக் : R சுதர்சனம் 
வரிகள் : உடுமலை நாராயணகவி 
பாடியவர் : JP சந்திரபாபு 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82313
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jan 18, 2021 8:06 pm

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 26 103459460 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 26 3838410834
-
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 26 Vikatan%2F2019-05%2F154af21f-583b-42d0-8359-3d6618be0c40%2Fs_balachandar_600_left_234.jpg?auto=format%2Ccompress&format=webp&w=640&dpr=1
-
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 26 Vikatan%2F2019-05%2Fc6334e26-f7e8-4910-8be6-4b43ec154f19%2Fs_balachandar_600_11.jpg?auto=format%2Ccompress&format=webp&w=640&dpr=1
வீணை S பாலசந்தர்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4519
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue Jan 19, 2021 1:01 pm

19.01.2021

சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் பிறந்த நாள் [1933 - 1988] 
 
கர்நாடக இசை பாடகர், சினிமா பின்னணி பாடகர், நடிகர். இவரை வெண்கல குரலோன்னு சொல்வாங்க. இவர் மகன் சிவசிதம்பரம் இவர்  மாதிரிதான்.
சினிமால பாட வர்றதுக்கு முன்னால நிறைய இசை போட்டிகள்ல ஜெய்ச்சிருக்கார். ஒளவையாருக்கு எப்டி KB சுந்தராம்பாள் அம்மையார் பொருத்தமோ, அகத்தியர்னா சீர்காழியார்தான். 
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட படங்கள்ல பாடியிருக்கார். 

1953ல ஒளவையார் படத்ல ஆத்திச்சூடி பாடினார். ஆனா படத்ல அவர் பேர் வர்ல. சினிமால பாடிய முதல் பாட்டு பொன்வயல் [1953] படத்ல "சிரிப்புத்தான் வருகுதையா". 

சங்கீத அகாடமி விருது, இசை பேரறிஞர் விருது, பத்மஸ்ரீ விருது, டாக்டர் கௌரவ பட்டம் இன்னும் பல பல விருதுகள் வாங்கினார். 


ABCD படிக்கிறே EFGH எழுதுறே   - திருச்சி லோகநாதன் கூட 

நல்ல தங்கை 1955ம்
யூஸிக் : G ராமநாதன் 
வரிகள் : மருதகாசி 

இதே மாதிரி பாட்ட அச்சமில்லை அச்சமில்லை [1984] படத்ல சுசீலாம்மாதான் பாடியிருக்காங்க. 
ஓடுகிற தண்ணியில ஒரசிவிட்டேன் சந்தணத்த
சேந்துச்சோ சேரலயோ செவத்த மச்சான் நெத்தியில  

பிள்ளை கனியமுது 1958
ம்யூஸிக் : KV மகாதேவன் 
வரிகள் : மருதகாசி 


பேபி


heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



Page 26 of 100 Previous  1 ... 14 ... 25, 26, 27 ... 63 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக