by சிவா Today at 1:13 am
» முத்துப்பழனியும் ஆவுடையக்காளும்
by சிவா Today at 1:02 am
» பழனி மலைக் கோயிலில் குடமுழுக்கு விழா
by சிவா Today at 12:42 am
» இன்று முதல் நம் தளத்தில் புதிய குறியீட்டு முறை #TAG System அறிமுகம்
by T.N.Balasubramanian Yesterday at 8:55 pm
» சிங்கமுத்து சேர்வை கோனார் வரலாறு
by சிவா Yesterday at 4:18 pm
» தமிழக அரசியல் செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:05 pm
» உலகச் செய்திகள்!
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» அன்பன் அ. முகம்மது நிஜாமுத்தீன் - Name Logo
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 27/01/2023
by Dr.S.Soundarapandian Yesterday at 11:54 am
» மடல் விரிக்கும் உடல் தாமரை
by T.N.Balasubramanian Thu Jan 26, 2023 8:06 pm
» மனித உடலியல்
by T.N.Balasubramanian Thu Jan 26, 2023 7:56 pm
» வாணி ஜெயராமுக்கு பத்ம பூஷண் விருது
by Guest. Thu Jan 26, 2023 6:02 pm
» சுதா ஹரி நாவல்கள் வேண்டும்
by Saravananj Thu Jan 26, 2023 3:48 pm
» தூக்கம் காக்கும் எளிய வழிகள்!
by சிவா Thu Jan 26, 2023 12:09 pm
» அப்பா என்றால் அன்பு - சிறுகதை
by சிவா Thu Jan 26, 2023 12:01 pm
» மகளென்னும் தோழி - சிறுகதை
by சிவா Thu Jan 26, 2023 11:55 am
» 74 - வது குடியரசு தின விழா | செய்திகளின் தொகுப்புகள்
by சிவா Thu Jan 26, 2023 11:31 am
» இன்று முதல் மாநில மொழிகளில் உச்ச நீதிமன்ற தீர்ப்புகள்!
by சிவா Thu Jan 26, 2023 10:18 am
» குடியரசு தின வாழ்த்துகள்
by சிவா Thu Jan 26, 2023 9:44 am
» கரிசலாங்கண்ணி
by சிவா Thu Jan 26, 2023 3:00 am
» சரஸ்வதி 108 போற்றி
by சிவா Thu Jan 26, 2023 2:46 am
» கலைமகள் துதி பாரதியார்
by சிவா Thu Jan 26, 2023 2:43 am
» இம்மாதம் 27ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு
by சிவா Wed Jan 25, 2023 8:44 pm
» வெளிநாடுகளில் உள்ள சில சட்டங்கள்
by T.N.Balasubramanian Wed Jan 25, 2023 8:41 pm
» வைட்டமின்கள்
by சிவா Wed Jan 25, 2023 8:15 pm
» கண்ணாம்மூச்சி விளையாட்டு(Hide and seek) தந்த சோகம்
by Guest. Wed Jan 25, 2023 7:43 pm
» புற்றுநோய் மருத்துவர் சாந்தா அவர்களின் நினைவு நாள்
by T.N.Balasubramanian Wed Jan 25, 2023 6:55 pm
» பூமியின் மையப்பகுதி எதிர் திசையில் சுயற்சி
by T.N.Balasubramanian Wed Jan 25, 2023 6:45 pm
» இன்று இரவு.
by selvanrajan Wed Jan 25, 2023 2:49 pm
» வில்வ ஓடு விபூதி திருநீர்
by Dr.S.Soundarapandian Wed Jan 25, 2023 12:21 pm
» பிரிட்டிஷ் ஆங்கிலத்திற்கும் அமெரிக்க ஆங்கிலத்திற்கும் இடையே வேறுபாடு ஏன்?
by Dr.S.Soundarapandian Wed Jan 25, 2023 12:19 pm
» தென் இந்தியர்களின் காலை உணவு பிரியாணி
by Dr.S.Soundarapandian Wed Jan 25, 2023 12:17 pm
» பாஞ்சாலங்குறிச்சி தளபதி சிங்கமுத்து சேர்வை கோன்
by Dr.S.Soundarapandian Wed Jan 25, 2023 12:14 pm
» குழந்தைகளுக்காக சொன்ன கதைகள் - காணொளிகள் !
by krishnaamma Tue Jan 24, 2023 10:34 pm
» என்னுடைய சமையல் + பொது வீடியோக்கள் - காணொளி பாருங்கள் ! by Krishnaamma - சால்ட் பட்டர் பிஸ்கட்!
by krishnaamma Tue Jan 24, 2023 9:50 pm
» 100%
by சிவா Tue Jan 24, 2023 9:17 pm
» நெய் உருகாத சிவன் கோயில் - திருச்சூர் வடக்கு நாதர் கோயில்.
by krishnaamma Tue Jan 24, 2023 8:09 pm
» எந்த ராசிக்காரர்களுக்கு என்ன சனி?
by krishnaamma Tue Jan 24, 2023 8:03 pm
» நீயும் இயற்கையும் - தமிழ்க் கவிதை
by சிவா Tue Jan 24, 2023 1:53 pm
» கற்பனையும் கவிதையும்! கவிஞர் இரா.இரவி!
by Dr.S.Soundarapandian Tue Jan 24, 2023 12:31 pm
» ஹாக்கி உலகக் கோப்பை 2023 தொடரில் இருந்து வெளியேறியது இந்தியா
by Dr.S.Soundarapandian Tue Jan 24, 2023 12:09 pm
» புதிய கோணங்கி – மகாகவி சுப்ரமணிய பாரதியார்
by Dr.S.Soundarapandian Tue Jan 24, 2023 12:08 pm
» நாவல்கள் வேண்டும்
by Guest. Mon Jan 23, 2023 10:06 pm
» ஏழே நாட்களில் உடல் எடையை குறைக்க எளிய வழிகள்
by krishnaamma Mon Jan 23, 2023 7:42 pm
» மகரத்திற்கு நல்ல செய்தி.--கலங்காதிரு மனமே !
by krishnaamma Mon Jan 23, 2023 7:29 pm
» ஈகரையின் பதிவுகளை உடனடியாக அறிய
by krishnaamma Mon Jan 23, 2023 6:23 pm
» அந்த மூன்றாவது பயணி திகில் கதை
by Guest. Mon Jan 23, 2023 12:17 am
» டிக்கெட் வேண்டாமாம் --நடத்துனரே சொல்லிட்டாரு.
by T.N.Balasubramanian Sun Jan 22, 2023 8:53 pm
» கரிசலாங்கண்ணி - கரிசாலை - இயற்கை மருத்துவம்
by T.N.Balasubramanian Sun Jan 22, 2023 7:25 pm
» ஏழைக்கு எழுத்தறிவித்தல்' என்றான் பாரதி.
by Dr.S.Soundarapandian Sun Jan 22, 2023 12:22 pm
கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள்
• Share
Page 1 of 4 • 1, 2, 3, 4
கரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலை உலகைக் கடந்துவிட்டது, தற்போது பொதுமுடக்கங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, இயல்பு வாழ்க்கை திரும்புவதாக நாம் நம்பிக்கொண்டிருந்தால், அது மிகப்பெரிய தவறு என்கிறது இந்தச் செய்தி.
இயல்பு வாழ்க்கை திரும்புவதாக நாம் கருதினாலும், விரைவில் நாட்டில் கரோனா மூன்றாம் அலை தாக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் அவ்வப்போது எச்சரிக்கை மணியை அடித்துக் கொண்டுதானிருக்கிறார்கள். அதுதான் உண்மைபோலும். ஆம், பொதுமுடக்கம் மற்றும் இயல்பு நிலை திரும்பியதாக மக்களின் மனநிலை ஆகியவை காரணமாக உலகம் முழுவதும், கரோனா பாதிப்பும், பலி எண்ணிக்கையும் மீண்டும் அதிகரித்து வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் இயல்பு நிலை திரும்பும் என்ற நம்பிக்கை தவிடுபொடியாகியுள்ளது.
9 வாரங்களாக கரோனா பெருந்தொற்று காரணமாக பலியாவோர் எண்ணிக்கை சரிந்து வந்த நிலையில், அந்த நிலை கடந்த வாரம் மாறியிருப்பதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.கடந்த வாரம் மட்டும் 55,000 பேர் கரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இது அதற்கு முந்தைய வாரங்களோடு ஒப்பிடுகையில் 3 சதவீதம் அதிகமாகும்.புதிதாக கரோனா பாதிப்பும் சுமார் 10 சதவீதம் அதிகரித்துள்ளது, கடந்த வாரத்தில் மட்டும் 30 லட்சம் பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. குறிப்பாக, பிரேசில், இந்தியா, இந்தோனேசியா மற்றும் பிரிட்டன் நாடுகளில்தான் இந்த அதிகரிப்பு பதிவாகியிருப்பதாகவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
இப்படி, கரோனா பரவலின் சரிவுநிலை திரும்புவதற்குக் காரணிகளாக, தடுப்பூசி செலுத்துவதில் மெத்தனம், முகக்கவசம் அணிவதிலிருந்து விலக்கு உள்ளிட்ட கரோனா கட்டுப்பாடுகளில் தளர்வு, அதிகம் பரவும் திறன் கொண்ட டெல்டா வகை உருமாறிய கரோனா, போன்றவை இருக்கின்றன. டெல்டா வகை உருமாறிய கரோனா தற்போது 111 நாடுகளில் பரவி வருவதாகவும் வரும் மாதங்களில் இது உலகளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கிறது.உலகம் முழுவதும் கரோன பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியிருக்கும் நிலையில், அர்ஜென்டினாவில் கரோனா பலி எண்ணிக்கை 1 லட்சத்தை எட்டியிருக்கிறது. ரஷியாவில் இந்த வாரம், பலி எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. பெல்ஜியத்தில் டெல்டா வகை கரோனா வைரஸ் இளைஞர்களை பாதிப்பதும் கடந்த வாரத்தில் கிட்டத்தட்ட இரண்டு மடங்காகியுள்ளது.
கடந்த ஆறு மாதங்களில் இல்லாத வகையில் பிரிட்டனில் ஒரு நாள் புதிய கரோனா பாதிப்பு 40 ஆயிரத்துக்கும் அதிகமாக பதிவாகியுள்ளது. மியான்மரியில் உள்ள மயானங்கள் காலை முதல் இரவு வரை இடைவிடாமல் இயங்கி வருகின்றன.கடந்த மாதம் ஒரு நாளைக்கு 8 ஆயிரம் புதிய கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வந்த இந்தோனேசியாவில் புதன்கிழமை 54,000 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டு, கிட்டத்தட்ட ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். ஜகார்த்தா அருகே இடுகாடுகளில் குழிகளைத் தோண்டும் பணியில் ஊழியர்கள் தேவை அதிகரித்ததால், பொதுமக்களும் அப்பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அவ்வாறு மக்கள் இப்பணியைச் செய்யாவிட்டால், உடல்களைப் புதைக்க பல நாள்கள் காத்திருக்கும் நிலை ஏற்படும் என்கிறார்கள் அங்குள்ள மக்கள்.
அமெரிக்காவிலோ, கடந்த இரண்டு வாரங்களில் கரோனா பாதிப்பு உறுதியாகும் எண்ணிக்கை இரண்டு மடங்காகியுள்ளது. ஒலிம்பிக் போட்டிக்குத் தயாராகிவிரும் டோக்கியோவில் கரோனா பாதிப்பு கடுமையாக உயர்ந்து, மருத்துவமனைகளில் படுக்கைகள் வேகமாக நிரம்பி வருவதால், அங்கு அவசரநிலையே அறிவிக்கப்பட்டுவிட்டது.கரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக சிட்னியில் பொதுமுடக்கத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. சியோலில் கடுமையான கட்டுப்பாடுகள் பின்பற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. உலகம் முழுவதுமுள்ள பல நாடுகளில் அதிகரித்திருக்கும் கரோனா பரவல் பற்றிய இந்தப் பட்டியல் மேலும் நீண்டுகொண்டேதான் இருக்கிறது. உலகம் முழுவதும் அச்சமூட்டும் வகையில் எண்ணிக்கை அமைந்திருந்தாலும், இந்த ஆண்டின் துவக்கத்தில் ஏற்பட்டதைப் போன்ற அபாய எண்ணிக்கையை இன்னும் எட்டவில்லை என்றும் கூறுகிறார்கள்.கடந்த ஏப்ரல் மாத ஒரு நாள் பாதிப்போடு ஒப்பிடுகையில் பாதியளவாக, உலகம் முழுவதும் ஒரு நாள் பாதிப்பு 4,50,000 ஆகவே உள்ளது. பல நாடுகளும், கரோனா பொதுமுடக்கத்தில் தளர்வுகளை அறிவிக்க வேண்டிய கட்டாய நிலையில் இருந்தாலும், இது கரோனா வைரஸ் பரவலுக்கு ஏற்படுத்திக் கொடுக்கும் ஒரு வாய்ப்பாக அமைந்து விடும் என்றும் உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
---------------------------------

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை குறைந்து வரும் நிலையில் சில நாட்களுக்கு முன்னதாக ஒரே நாளில் 2020 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது இறப்பு விகிதம் குறைந்துள்ளது.
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 1 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் சமீபகாலமாக 50 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 41,806 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 3,09,87,880 ஆக உயர்ந்துள்ளது.
ஒரே நாளில் 581 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 4,11,989 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3,01,43,850 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 4,32,041 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
---------------------------------

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
வியாழக்கிழமை ஜூலை 15 வரையில் கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் மொத்தம் 13,215 புதிய தொற்றுகள் அதிர்ச்சி தரும் வகையில் அதிகரித்திருக்கின்றன.
நேற்றைய எண்ணிக்கையோடு ஒப்பிடும்போது ஒரே நாளில் 2 ஆயிரத்துக்கும் கூடுதலான தொற்றுகள் அதிகரித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இது வரலாறு காணாத உயர்வாகும். இந்த எண்ணிக்கையில் இதுவரையில் ஒருநாள் தொற்றுகள் பதிவாகியதில்லை.
இன்றைய எண்ணிக்கையோடு சேர்ந்து நாட்டில் இதுவரை பதிவான மொத்த தொற்றுகளின் எண்ணிக்கை 880,782 ஆக உயர்ந்திருக்கிறது.
மாநிலங்களைப் பொறுத்தவரையில் முதல் இடத்தில் வழக்கம்போல் சிலாங்கூர் இருக்கிறது. 6,120 தொற்றுகளை சிலாங்கூர் பதிவு செய்திருக்கிறது. இதன் மூலம் 6 ஆயிரத்தைக் கடந்த தொற்றுகளைக் கொண்ட முதல் மாநிலமாக சிலாங்கூர் இருக்கிறது.
வழக்கம்போல் மொத்த தொற்றுகளில் ஏறத்தாழ பாதி எண்ணிக்கையிலான தொற்றுகள் சிலாங்கூரில் பதிவாகியிருக்கின்றன.
சிலாங்கூருக்கு அடுத்த நிலையில் 1,603 தொற்றுகளோடு நெகிரி செம்பிலான் இரண்டாவது இடத்தைப் பிடித்திருக்கிறது.
வழக்கமாக 2-வது இடத்தில் இருந்து வந்த கோலாலம்பூர் 1,499 தொற்றுகளோடு மூன்றாவது இடத்தில் இருக்கிறது
---------------------------------

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

---------------------------------

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

---------------------------------

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
கொரோனா வைரஸ் வேகமாக பரவிய நிலையில் பொது இடங்களில் மக்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது என்றும், பொது சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் கூறினார்.
மேலும், டெல்டா வைரஸ் 111 நாடுகளில் பரவி உள்ளதாகக் குறிப்பிட்ட அவர் விரைவில் உலக நாடுகள் முழுவதிலும் கொரோனா பரவி அதிகரிக்க முக்கிய காரணமாக இருக்கும் என அச்சம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கொரோனா 3 வது அலை வராது என்று கூற முடியாது, அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார். மேலும், தொற்றால் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்பாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
---------------------------------

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 33416
இணைந்தது : 03/02/2010
மருத்துவ உலகம் கூறுகிறது.
---------------------------------
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 33416
இணைந்தது : 03/02/2010
---------------------------------
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
மிகவும் வேகமாக பரவும் மரபணுவில் மாற்றம் கண்ட Delta கோவிட் வைரஸ் அடுத்த சில மாதங்களில் உலகை ஆக்மிரமிக்கும் என WHO எனப்படும் உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
முதன் முதலில் இந்தியாவில் கண்டறியப்பட்ட Delta வைரஸ் கடந்த வாரத்தை ஒப்பிடுகையில் 124 வட்டாரங்களில் பரவியுள்ளது. பல நாடுகளில் அந்த வைரஸ் தற்போது வேகமாக பரவி வருகிறது.
இதர வைரஸ்களை எல்லாம் பின்னுக்கு தள்ளிவிட்டு கோவிட்டின் Delta வைரஸ்தான் உலக நாடுகளில் இனி ஆக்கிரமிப்பாக இருக்கும் என உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கை அறிவித்தது.
Australia. Bangladesh. Botswana. Britain. China. Denmark. India,Indonesia, Israel, Portugal, Rusia, Singapore, தென்னாப்பிரிக்க உட்பட பல்வேறு நாடுகளில் Delta வைரஸ் பரவியுள்ளது.
Delta வைரஸைத் தவிர முதன் முதலில் பிரிட்டனில் கண்டறியப்பட்ட ALPHA வைரஸ் பரவலும் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது கடந்த ஆறு வாரத்தில் 180 வட்டாரங்களில் அந்த வைரஸ் பரவியுள்ளது.
முதன் முதலில் தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட Beta வைரஸ் 130 வட்டாரங்களிலும் முதன் முதலில் பிரேசிலில் கண்டறியப்பட்ட Gamma 78 வட்டாரங்களிலும் பரவியுள்ளது.
---------------------------------

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
T.N.Balasubramanian likes this post
இந்தியாவின் கோவிட் மரண எண்ணிக்கை அதிகாரத்துவ தரப்பால் அறிவிக்கப்பட்டதைக் காட்டிலும், பத்து மடங்கு அதிகமென, அமெரிக்க ஆராய்ச்சி குழு தெரிவித்துள்ளது. அந்நாட்டில் தற்போதைய கோவிட் மரண எண்ணிக்கை 4 லட்சத்து 15,000-ஆக பதிவாகியுள்ளது.
இவ்வேளையில், அந்த பெருந்தொற்று தொடங்கியதிலிருந்து இவ்வாண்டு ஜூன் வரை மேற்கொண்ட ஆய்வில், அந்நாட்டில் கோவிட் வைரசுக்கு 34 லட்சம் பேரிலிருந்து 47 லட்சம் பேர் வரை இறந்திருக்கலாமென அந்த ஆராய்ச்சி குழு குறிப்பிட்டுள்ளது.
அந்த எண்ணிக்கையின் படி, சுதந்திரத்திற்குப் பின்னர், அந்நாட்டில் நிகழ்ழந்திருக்கும் மோசமான மனித பேரழிவாக அந்த பெருந்தொற்று கருதப்படுமென, ஹார்வர்ட் ( Harvard ) பல்கலைக்கழக நிபுணர்களையும் உட்படுத்திய அந்த ஆய்வு குழுவினர் தெரிவித்துள்ளனர்.
---------------------------------

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
கரோனா வைரஸ் எவ்வாறு உருவானது என்பது குறித்து மீண்டும் ஆய்வு செய்யும் உலக சுகாதார அமைப்பின் திட்டத்துக்கு சீனா கடும் எதிா்ப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து செய்தியா ளா்களிடம் அந்த நாட்டின் தேசிய சுகாதார ஆணையத்தின் துணை அமைச்சா் ஸெங் யிக்ஸின் பெய்ஜிங்கில் வியாழக்கிழமை கூறியதாவது:
கரோனா வைரஸ்ஸின் தோற்றுவாய் குறி த்து உலக சுகாதார அமைப்பு மீண்டும் ஆய்வு நடத்த திட்டமிட்டுள்ளது கண்டிக்கத்தக்கது. அந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக, ஆய்வக நெறிமுறைகளை மீறி சீனா தங்களது ஆய்வுக்காக கரோனாவை வேண்டுமேன்றே மக்களிடையே பரப்பியதா என்று விசாரணை நடத்தப்போவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது அதிா்ச்சியை ஏற்படுத்துகிறது.
ஏற்கெனவே அந்த அமைப்பு சீனாவில் இதுதொடா்பாக நடத்திய ஆய்வின்போது, அதன் நிபுணா்கள் விரும்பும் இடங்களுக்குச் சென்று, விரும்பிய நபா்களிடம் விசாரணை நடத்த சீனா அனுமதி அளித்துள்ளது. சீனாவும் உலக சுகாதார அமைப்பும் இணைந்து மேற்கொண்ட அந்த ஆய்வு காலத்தால் அழிக்க முடியாது.
இந்த விவகாரத்தில் சீன நிபுணா்களின் அறிவுரைகளை உலக சுகாதார அமைப்பு பரிசீலனை செய்ய வேண்டும். அரசில் நெருக்கடிகளுக்கு இடம் தராமல், இந்த விவகாரத்தை அந்த அமைப்பு அறிவியல்ரீதியில் அணுக வேண்டும். அதுமட்டுமன்றி, கரோ னா வைரஸ் எவ்வாறு உருவானது என்பது தொடா்பான ஆய்வை உலகின் பிற பகுதிகளிலும் உலக சுகாதார அமைப்பு மேற்கொள்ள வேண்டும்.
கரோனா தொற்று முதல்முதலில் ஆவணப்படுத்தப்படுவதற்கு முன்னரே வூஹான் வைரஸ்யியல் ஆய்வகத்தில் பணியாற்றிய 3 பேருக்கு முதல்முதலில் அந்த நோய்த்தொற்று ஏற்பட்டதாகவும் அவா்களிடமிருந்துதான் அந்த நோய் வெளியுலகத்துக்குப் பரவியதாகவும் கூறப்படுவது முற்றிலும் தவறான தகவலாகும்.
வூஹான் ஆய்வகத்தில் பணியாற்றியவா்கள், மாணவா்கள் உள்பட யாருக்குமே கரோனா தொற்று ஏற்படவில்லை என்றாா் ஸெங் யிக்ஸின்.
சீனாவின் ஹூபே மாகாணம், வூஹான் நகரில் கடந்த 2019-ஆம் ஆண்டு நவம்பா் மாதம் முதல் கரோனா தொற்று மனிதா்களிடையே பரவத் தொடங்கியது. அந்த நகரிலுள்ள கடல் உணவு மொ த்தவிலை சந்தைக்குச் சென்று வந்தவா்களிடம்தான் தொடக்கத்தில் அந்த நோய் அதிகமாகக் கண்டறியப்பட்டது.
அந்த நோயை உருவாக்கிய கரோனா வைரஸ், வௌவாலின் உடலில் இருந்து எறும்புத் தீனியின் உடலுக்குள் சென்று, அங்கு மனிதா்களின் நுரையீரல் அணுக்களில் தொற்றி பல்கிப் பெருகும் வகையில் தன்னை தகவமைத்துக்கொண்டிருக்கலாம் என்று பெரும்பாலான நிபுணா்கள் கருதுகின்றனா்.
எனினும், வூஹான் நகரிலுள்ள வைரஸ்யியல் ஆய்வகத்தில் கரோனா வைரஸ் ஆய்வுக்காக செயற்கையாக உருவாக்கப்பட்டு, பின்னா் அது தவறுதலாக ஆய்வகத்திலிருந்து வெளியேறி மனிதா்களிடையே பரவியிருக்கலாம் என்றும் சிலா் தெரிவித்தனா்.
இதுதொடா்பாக விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என்று 2020-ஆம் ஆண்டு தொடக்கத்திலிருந்தே அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது. அப்போதைய அதிபராக இருந்த டொனால்ட் டிரம்ப், கரோனாவை ‘வூஹான் வைரஸ்’ என்றே அழைத்தாா்.
அவருக்குப் பிறகு அதிபா் பொறுப்பை ஏற்ற ஜோ பைடனும், கரோனா வின் தோற்றுவாய் குறித்து தெரிந்துகொள்வதற்கான முயற்சிகளை மும்மடங்கு அதிகரிக்க வேண்டும் என்று தங்களது புலனாய்வு அமைப்புகளுக்கு உத்தரவிட்டாா்.
இந்த ஆய்வுக்காக கேட்கப்படும் பல்வேறு தகவல்கள் சீனா்களின் தனி நபா் விவரப் பாதுகாப்பை மீறும்; தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று கூறி சீன அரசு அவற்றைத் தர மறுத்து வருகிறது.
இந்தச் சூழலில், நீண்ட காலமாக கரோனா விவகாரத்தை சீனா கையாளும் முறையைப் பாராட்டி வந்த உலக சுகாராத அமைப்பின் தலைவா் டெட்ரோஸ் அதானோம் கேப்ரியேசஸ், இந்த விவகாரத்தில் சீனா வெளிப்படைத்தன்மையுடன் நடந்துகொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினாா்.
இதற்கிடையே, வூஹான் உள்ளிட்ட பகுதிகளுக்கு தங்களது நிபுணா்களை அனுப்பி கரோனாவின் தோற்றுவாய் குறித்து ஆய்வு செய்திருந்த உலக சுகாதார அமைப்பு, அந்தத் தீநூண்மி வௌவாலின் உடலிலிருந்தே மனிதா்களுக்குப் பரவியிருக்கும் என்றாலும், பிற வாய்ப்புகளையும் ஒரேடியாக மறுப்பதற்கில்லை என்று தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், இதுதொடா்பாக மீண்டும் ஆய்வு நடத்த திட்டமிட்டுள்ளதாக அந்த அமைப்பு கூறியது. அதனைக் கண்டித்தே, சீன சுகாதார ஆணைய துணை அமைச்சா் ஸெங் யிக்ஸின் இவ்வாறு தெரிவித்துள்ளாா்.
---------------------------------

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
உலகம் முழுவதும் கரோனா நோயாளிகளிடமிருந்து சேகரிப்பட்டு பரிசோதனைக்குள்படுத்தப்பட்ட தீநுண்மிகளில் 75 சதவீதத்துக்கும் மேற்பட்டவை டெல்டா வகையைச் சோ்ந்தவையாக இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள வாராந்திர அறிக்கையில், இந்தியா, சீனா, ரஷியா, இஸ்ரேல், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் கடந்த 4 வாரங்களாக கரோனா நோயாளிகளிடமிருந்து சேகரிப்பட்டு, டெல்டா வகை என்று உறுதி செய்யப்பட்ட கரோனா மாதிரிகளின் எண்ணிக்கை 75 சதவீதத்தைக் கடந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் முதல்முறையாகக் கண்டறியப்பட்ட டெல்டா வகை கரோனா, மற்ற வகைகளை விட அதிக வேகத்தில் பரவும் தன்மை கொண்டது.
உலகம் முழுவதும் கரோனா தடுப்பூசி திட்டங்கள் விரிவுபடுத்தப்பட்டு வந்தாலும், சில நாடுகளில் தினசரி தொற்றுஎண்ணிக்கை அதிகரித்து வருவதாக தனது அறிக்கையில் உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.
---------------------------------

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
திருவனந்தபுரம்: இந்தியாவில் கோவிட் பாதிப்பு நேற்று முன்தினம் 35 ஆயிரமாக இருந்தது. இந்நிலையில் நேற்று 39 ஆயிரத்தை தாண்டியது. மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 39,097 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
கேரளாவில் தொற்று பாதிப்பு கடந்த 50 நாட்களில் இல்லாத அளவு உயர்ந்ததே தினசரி பாதிப்பு திடீரென அதிகரிக்க முக்கிய காரணம் எனக் கூறப்படுகிறது. அங்கு நேற்று முன்தினம் 12,818 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். ஆனால் நேற்று புதிதாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 17,518 ஆக உயர்ந்தது.
குறிப்பாக நேற்று, 1,28,489 மாதிரிகள் மட்டும் பரிசோதிக்கப்பட்ட நிலையில், பாதிப்பு சதவீதம் 13.6 ஆக உயர்ந்துள்ளது. குறிப்பாக மலப்புரம் மாவட்டத்தில் கோவிட் பாதிப்பு சதவீதம் 17ஆக உள்ளது. இதேபோல திருச்சூர், கோழிக்கோடு, எர்ணாகுளம், கொல்லம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் பாதிப்பு அதிகமாக உள்ளது. சமீபத்தில் அறிவிக்கப்பட்ட தளர்வுகளே தொற்று பரவலுக்கு காரணமாக கூறப்படுகிறது.
இதையடுத்து அம்மாநிலத்தில் மீண்டும் கட்டுப்பாடுகளை முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். அதன்படி மத்திய - மாநில அரசு அலுவலகங்களில் 50 சதவீத ஊழியர்களுடன் மட்டும் இயங்க உத்தரவிடப்பட்டு உள்ளது. அத்தியாவசிய கடைகள் மட்டும் திறக்கவும், ஓட்டல் மற்றும் டீ கடைகளில் பார்சல் மட்டும் வழங்கவும் அனுமதிக்கப்பட்டு உள்ளது. மேலும் பரவல் அதிகமாக உள்ள பகுதிகளில் கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்கவும், தடுப்பூசி பணிகளை தீவிரப்படுத்தவும் அரசு உத்தரவிட்டு உள்ளது.
---------------------------------

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
லண்டன்: கோவிட் பெருந்தொற்றுக்கு எதிராக செலுத்தப்பட்டு வரும் தடுப்பூசிகள் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கே போடப்படுகிறது. பைசர் நிறுவன தடுப்பூசி மட்டும் 12 வயதுக்கு மேற்பட்ட சிறாருக்கும் செலுத்தப்படுகிறது. பல தடுப்பூசிகள் 18 வயதுக்கு குறைவானவர்களுக்கு செலுத்துவதற்கான பரிசோதனையில் உள்ளன.
இந்நிலையில், அமெரிக்காவின் மாடர்னா நிறுவனத்தின் தடுப்பூசியை 12 - 17 வயதினர் 3,700க்கும் மேற்பட்டவர்களுக்கு செலுத்தி பரிசோதிக்கப்பட்டது. இதில், 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஏற்படும் ஆன்டிபாடிகளுடன் ஒப்பிடும் அளவுக்கு சிறாரிடமும் இந்த தடுப்பூசி ஆன்டிபாடிகளை ஏற்படுத்துவது கண்டறியப்பட்டு உள்ளது.
இதையடுத்து, 'மாடர்னா தடுப்பூசியை 12 முதல் 17 வயது வரையிலான சிறாருக்கு செலுத்தலாம்' என, அமெரிக்க மருந்துகள் நிறுவனம் பரிந்துரை செய்துள்ளதை அடுத்து இந்த தடுப்பூசிக்கு ஐரோப்பிய நிறுவனம் ஒப்புதல் வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
#மாடர்னா #தடுப்பூசி #கோவிட்19 #கொரோனா
---------------------------------

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
Page 1 of 4 • 1, 2, 3, 4
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்