புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தொல்காப்பிய இலக்கணம் (619) - Page 4 Poll_c10தொல்காப்பிய இலக்கணம் (619) - Page 4 Poll_m10தொல்காப்பிய இலக்கணம் (619) - Page 4 Poll_c10 
60 Posts - 48%
heezulia
தொல்காப்பிய இலக்கணம் (619) - Page 4 Poll_c10தொல்காப்பிய இலக்கணம் (619) - Page 4 Poll_m10தொல்காப்பிய இலக்கணம் (619) - Page 4 Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
தொல்காப்பிய இலக்கணம் (619) - Page 4 Poll_c10தொல்காப்பிய இலக்கணம் (619) - Page 4 Poll_m10தொல்காப்பிய இலக்கணம் (619) - Page 4 Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
தொல்காப்பிய இலக்கணம் (619) - Page 4 Poll_c10தொல்காப்பிய இலக்கணம் (619) - Page 4 Poll_m10தொல்காப்பிய இலக்கணம் (619) - Page 4 Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
தொல்காப்பிய இலக்கணம் (619) - Page 4 Poll_c10தொல்காப்பிய இலக்கணம் (619) - Page 4 Poll_m10தொல்காப்பிய இலக்கணம் (619) - Page 4 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
தொல்காப்பிய இலக்கணம் (619) - Page 4 Poll_c10தொல்காப்பிய இலக்கணம் (619) - Page 4 Poll_m10தொல்காப்பிய இலக்கணம் (619) - Page 4 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
தொல்காப்பிய இலக்கணம் (619) - Page 4 Poll_c10தொல்காப்பிய இலக்கணம் (619) - Page 4 Poll_m10தொல்காப்பிய இலக்கணம் (619) - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொல்காப்பிய இலக்கணம் (619)


   
   

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Feb 09, 2022 10:14 am

First topic message reminder :

தொல்காப்பிய இலக்கணம் (570)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

அடுத்ததாகத் தொல்காப்பியர் இடைச்சொற்களைப் பாகுபடுத்திக் காட்டுகிறார்:-

அவைதாம்
புணரியல் நிலையிடைப் பொருணிலைக் குதவுநவும்
வினைசெயன் மருங்கிற் காலமொடு வருநவும்
வேற்றுமைப் பொருள்வயின் உருபா குநவும்
அசைநிலைக் கிளவி யாகி வருநவும்
இசைநிறைக் கிளவி யாகி வருநவும்
தத்தங் குறிப்பிற் பொருள்செய் குநவும்
ஒப்பில் வழியாற் பொருசெய் குநவுமென்று
அப்பண் பினவே நுவலுங் காலை (இடையியல் 2)

‘புணரியல் நிலையிடைப் பொருள் நிலைக் குதவுநவும்’ – இரு சொற்கள் புணரும்போது, இடையே ஏதேனும் ஒரு பொருளுக்காக வருவனவும்,
‘வினைசெயன் மருங்கிற் காலமொடு வருநவும்’ – வினைச் சொல்லில் காலம் , பால்,இடம் காட்டுபவைகளும்,
‘வேற்றுமைப் பொருள்வயின் உருபா குநவும்’- வேற்றுமைப் பொருளைத் தரும் உருபுகளாக நிற்பவையும்,
‘அசைநிலைக் கிளவி யாகி வருநவும்’ – தனக்கெனப் பொருள் இலாது, தான் சார்ந்த பெயர் வினைகளோடு ஒட்டிநின்று அவற்றைச் சிறப்பிக்க உதவுவனவும்,
‘இசைநிறைக் கிளவி யாகி வருநவும்’ – செய்யுளில் இசையை நிறைக்க வருபவைகளும்,
‘தத்தங் குறிப்பிற் பொருள்செய் குநவும்’ – கூறுபவர்களின் குறிப்புப் பொருளை வெளிப்படுத்த நிற்பவைகளும்,
‘ஒப்பில் வழியாற் பொருள்செய் குநவும் என்று’ – வெவ்வேறு பொருட்களாக இருந்தாலும், ஏதோ ஒரு ஒப்புமையால் ஒன்றுபட்டு நிற்க உதவுபவைகளும்,
‘அப்பண் பினவே நுவலுங் காலை’ – ஆகத் திகழ்வதே இடைச்சொற்களாம்,உரைக்கப் புகின்!

இப்படி நடக்கும் இடைச்சொற்களுக்கு எடுத்துக்காட்டுகளைக் காண்போம்.

1 . ’ புணரியல் நிலையிடைப் பொருணிலைக் குதவுந’

பாட்டு +இன் + இனிமை = பாட்டின் இனிமை
இதில், ‘இன்’ எனும் சாரியை இடைச்சொல் , நடுவே வந்து , பொருளைத் தருகிறது; ‘பாட்டு’, ‘இனிமை’ என்று தனித் தனியாக நின்றால் பொருள் திரளாது என்பதைக் கவனிக்க!

2 . ‘வினைசெயன் மருங்கிற் காலமொடு வருந’
வாழ்+ வ்+ஆன் = வாழ்வான்
இங்கே, ’வ்’எனும் இடைச்சொல்லாகிய எதிர்கால இடைநிலை வந்ததால்தான் ‘வாழ்வான்’ என்ற வினைச்சொல்லுக்குப் பொருளே ஏற்படுவதைக் காண்கிறோம்.

3 . ‘வேற்றுமைப் பொருள்வயின் உருபாகுந’

குமணனை வாழ்த்தினான் – இங்கே, ‘ஐ’ எனும் இடைச்சொல்லாகிய வேற்றுமை உருபுதான் தொடர்ப் பொருளையே நல்குவதைக் காணலாம்; இல்லையேல், ‘குமணன் வாழ்த்தினான’ என நின்று , வாழ்த்தியவன் குமணன் எனும் தவறான பொருள் அல்லவா ஏற்படும்?

4 . ‘அசைநிலைக் கிளவி யாகி வருந’
சேனாவரையரின் விளக்கம்- “அசைத்தல் – சார்த்துதல். பொருளுணர்த்தாது பெயரொடும் வினையொடுஞ் சார்த்திச் சொல்லப்பட்டு நிற்றலின் அசைநிலை யாயிற்று.அவை ‘அந்தில்’ முதலாயின. ‘புகழ்ந்திகு மல்லரோ பெரிதே’, ‘உரைத்திசினோரே’ எனச் சார்ந்த மொழியை வேறுபடுத்து நிற்றலின்,அசைநிலைச் சொல்லாயின என்பாரு முளர்”

இங்கே ஒன்றை நான் தெளிவுபடுத்த வேண்டும்!

‘அசைநிலை’ வேறு, ‘அசைச் சொல்’ வேறா?
உரையாசிரியர் சிலரின் நடை இந்த ஐயத்தை நமக்குத் தோற்றுவிக்கிறது!

அசைநிலை வேறு, அசைச் சொல் வேறு எனத் தொல்காப்பியர் கருதியிருந்தால், இடைச் சொற்களைப் பாகுபடுத்திக் கூறும் அவரின் பட்டியலில், இரண்டும் அல்லவா இடம் பெற்றிருக்க வேண்டும்?பட்டியலில் ‘அசைநிலைக் கிளவி’ என்ற ஒன்று மட்டும்தானே உள்ளது?

‘மா’ எனும் சொல், வியங்கோளை அடுத்துவரும் ‘அசைச் சொல்’ எனத் தொல்காப்பியர்(இடை.25) கூறச் ,சேனாவரையர், “அது வியங்கோளைச் சார்ந்து, ‘அசைநிலையாய் வரும்’’என்றார்.
இதனால், அசைநிலையும் அசைச் சொல்லும் ஒன்றுதான் என்பது தெளிவாகிற தல்லவா?
ஆகவே,
அசைநிலைக் கிளவி =அசைநிலைச் சொல் = அசைநிலை= அசைச் சொல் !

மேற் சேனாவரையர் உரையிற் கண்ட இரு அசைநிலைகளை வருமாறு பார்க்கலாம்-

புகழ்ந்திகு மல்லரோ பெரிதே – இதில், ‘இகும்’ என்ற அசைநிலை இடைச்சொல் உள்ளது.
உரைத்திசினோரே - இதில், ‘இசின்’ என்ற அசைநிலை இடைச்சொல் உள்ளது.

5 . ‘ இசைநிறைக் கிளவி யாகி வருந ’

இசையை நிறைக்க வரும் சொல் , இசைநிறை இடைச்சொல் எனப்படும்.
இசையை நிறைக்க – யாப்புக் குறையைப் போக்க
‘கடாஅக் களிற்றின்மேல்’ – இந்த இரு சீர்களில், முதற்சீரிலுள்ள ‘அ’வை எடுத்துவிட்டால், ‘கடாக்’ என்று ஒரே ஒரு நிரைஅசையாக மட்டும் நிற்கும்; சீர் கிடைக்காது;யாப்பிலக்கணம் பிழையாகும். ஆகவே சீர் ஏற்பட்டு, யாப்பிலக்கணம் செம்மையாக, ‘அ’ சேர்க்கப்படுகிறது; இதுவே இசை நிறைக்கப்படுதல்.
இங்கே ‘அ’ , இசைநிறைக்கும் இடைச்சொல்.

இன்னோர் எடுத்துக்காட்டு:
‘காடிறந் தோரே’ – இதில், இரண்டாம் சீரின் ஈற்றில் உள்ள ஏகாரமே இசைநிறைக்க வந்த இடைச்சொல். ஏன்?
ஈற்று ஏகாரத்தை எடுத்துவிட்டால், ‘தோர்’ என்பது மட்டுமே மிஞ்சும்; இஃது ஓர் அசைதானே தவிரச் சீர் ஆகாது; சீர் ஆக்கவேண்டும் என்பதற்காகவே ஈற்றில், ‘ஏ’ சேர்க்கப்படுகிறது; அஃதாவது, யாப்பியல் நோக்கில் சேர்க்கப்படுகிறது; இதனால்தான் ‘இசை நிறை’ எனப்படுகிறது.
6 . தத்தங் குறிப்பிற் பொருள்செய்குந

‘சிறியகட் பெறினே எமக்கீயும் மன்னே’ (புறம்235)- இதில், ‘மன்’ எனும் இடைச்சொல் வந்துள்ளது. ‘சிறு அளவிலான கள் இருந்தால் அவன் எனக்குத் தந்துவிடுவான்! அப்படிப்பட்ட அரசன் அவன் ! அது ஒரு காலம்!’ எனக் கடந்துபோன (கழிந்துபோன) செயலைக் குறிப்பது எது? ‘மன்’அல்லவா? இதனால், ‘மன்’ எனும் இடைச்சொல், கழிவுப் பொருளைக் குறிப்பால் தருகிறது என்கிறோம்!

7 . ‘ஒப்பில் வழியாற் பொருசெய்குந’

இதற்கும் உரையாசிரியரிடையே வேறுபட்டு கருத்துகள் உண்டு!

நம் விளக்கத்தை வருமாறு வைக்கலாம்.

காளை மாடும் மணி என்ற மனிதனும் ஒன்றா?
வேறு வேறுதானே?
இரண்டையும் ஒன்று எனக் கூற முடியாது என்பதே , ‘ஒப்பில் வழி’!
ஆனால், இப்படிப்பட்ட ‘ஒப்பில்வழி’யாக இருப்பினும் , சில உருபுகளைப் போட்டுப் நாம் விரும்பிய பொருளை வெளிப்படுத்துகிறோம்! இந்த உருபுகளை நாம் உவம உருபுகள் என்கிறோம்! இவைகள் இடைச்சொற்களே!

காளை அன்ன மணி – இங்கே , ‘காளை’ , ‘மணி’ ஆகியன ஒப்பில்வழிச் சொற்கள்; ஆனால், ‘அன்ன’ எனும் இடைச்சொல்லால், நம்மால் ஓர் ஒப்பீட்டைத் தர முடிந்துள்ளது!இதைத்தான் தொல்காப்பியர் தன் நூற்பாவில் குறித்துள்ளார்!
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Mar 10, 2022 1:24 pm

முனைவர் சௌந்தர பாண்டியன் wrote:
1 . புலி அறப்பசித்தும் புல் தின்னாது - இங்கு உரிச்சொல், ‘அற’; அற – முற்றும்
2 . அவள் இறை நாணி நின்றாள் – இங்கு உரிச்சொல்,’இறை’; இறை – சிறிது
3 . துவரப் பசித்தாலும் – இங்கு உரிச்சொல், ‘துவர’; துவர – முற்றும்
5 . வான்கோழி – இங்கு உரிச்சொல், ‘வான்’; வான் - பெரிய
6 . வால்எயிறு – இங்கு உரிச்சொல், ‘வால்’; வால்- வெண்ணிற
7 . கோடித் துணி – இங்கு உரிச்சொல், ‘கோடி’; கோடி- புதிய
8 . மட அன்னம் – இங்கு உரிச்சொல், ‘மட’; மட- இளமை
9 . ஆற்றவும் கற்றார் – இங்கு உரிச்சொல், ‘ஆற்ற’; ஆற்ற - முற்றும்
10 . படுகுழி – இங்கு உரிச்சொல், ‘படு’; படு- பெரிய

நன்றி முனைவர் அவர்களே.!அரிய தகவல்களை அறிய தந்தமைக்கு.

[You must be registered and logged in to see this link.]



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Mar 11, 2022 12:10 pm

நன்றி இரமணியன் அவர்களே!



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Mar 11, 2022 12:11 pm

தொல்காப்பிய இலக்கணம் (600)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

தொல்காப்பியரின் முதல் உரிச்சொல் பட்டியல் இதுதான்!:

அவைதாம்
உறுதவ நனியென வரூஉ மூன்றும்
மிகுதி செய்யும் பொருள என்ப (உரியியல் 3)

உறு,தவ, நனி – இந்த மூன்று உரிச்சொற்களுக்கும் பொருள் , ‘மிகுதி’ என்பதாம்.
எங்காவது இந்த உரிச்சொற்களை நாம் பார்த்தால், இவற்றின் பொருள் ‘மிகுதி’ எனக் கொள்ளவேண்டும்.
சேனாவரையர் பார்த்த இடங்கள் –
1 . உறுபுனல் (நாலடி.85)
2 . உயிர் தவப்பலவே (புறம். 233)
3 . நனிவருந்தினை (அகம். 19)

உறுபுனல் – மிக்க நீர்
தவப்பல – மிகப்பல
நனிவருந்தினை – மிக வருந்தினை

‘மிகுதி’ என்பதை உணரவே முடியும், காட்ட முடியாது ஆகையால் , இந்த மூன்று உரிச்சொற்களும் குறிப்புப் பற்றிவந்த ( Mental Apprehension)உரிச்சொற்கள் ஆம்.

அடுத்த நூற்பாவில், ‘உரு’, ‘புரை’ எனும் இரு உரிச்சொற்களை அறிமுகம் செய்கிறார் :
உருஉட் காகும் புரைஉயர்பு ஆகும் (உரியியல் 4 )

உரு = உட்கு (அச்சம்)
புரை = உயர்பு (உயர்வு)

இந்த இரு உரிச்சொற்களும் ‘குறிப்புப் பற்றி’ வந்தனவே.

சேனாவரையரின் எடுத்துக்காட்டுகளுக்கு விளக்கம் –
‘உருகெழு கடவுள்’ – அச்சம் மிக்க கடவுள்
‘புரைய மன்ற புரையோர் கேண்மை’ (நற்றிணை 1) – உயர்ந்தோர் நட்பு , உயர்வுடையது ஆகும். மன்ற – உறுதிப் பொருளில் வந்த இடைச்சொல்; கேண்மை – நட்பு.

இப்போது- ‘குரு’ , ‘கெழு’! :
குருவுங் கெழுவு நிறனா கும்மே (உரியியல் 5)

‘குரு’ , ‘கெழு’ ஆகிய இரு உரிச்சொற்களும் ‘நிறம்’ எனும் பொருள் கொண்டவை.
இவை பண்பு ( Quality) பற்றி வந்த உரிச்சொற்கள் ஆம்.
பண்பு – நிறப் பண்பு

இளம்பூரணர் எடுத்துக்காட்டுகளை வருமாறு விளக்கி அறியலாம்:

1 . ‘குருத்துளி பொழிந்தது’
‘நிறத்தையுடைய துளி பொழிந்தது ’ என்பது பொருள்.
‘குரு’ என்ற சொல், ஆசானைத் தொல்காப்பியர் காலத்தில் குறிக்கவில்லை எனும் அரிய குறிப்பைத் தருகிறார் சிவலிங்கனார். (ஆ.சிவலிங்கனார்,தொல்காப்பியம் உரைவளம்,சொல்லதிகாரம்- உரியியல், அடிக்குறிப்பு ப.29, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை 113,முதற் பதிப்பு, 1987 )

2 . ‘கேழ்கிளர் அகலத்து’ (மதுரைக்காஞ்சி 493)
‘கெழு’ என்ற உரிச்சொல்லின் ஈறு கெட்டுக் ‘கேழ்’ ஆகியுள்ளது; இப்போதும் அஃது உரிச்சொல்லே.
அகலம் - மார்பு
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Mar 12, 2022 5:20 pm

தொல்காப்பிய இலக்கணம் (601)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

‘இன்னாமை’
என்ற பொருளைத் தரக்கூடிய இரு உரிச்சொற்கள்:

செல்லல் இன்னல் இன்னா மையே (உரியியல் 6)

சேனாவரையரின் காட்டுகளை வருமாறு விளக்கலாம் –
1 . செல்லல் – ‘மணங்கமழ் வியன்மார் பணங்கிய செல்லல்’ (அகம். 22)

‘மணங்கமழும் அகன்ற மார்பு வருத்திய துன்பம்’ என்பது பொருள்; ‘செல்லல்’ எனும் உரிச்சொல்லுக்கு ‘இன்னாமை ’, ‘துன்பம்’ என்றெல்லாம் பொருள் இருப்பதை அறிகிறோம்.
‘செல்லல்’ எனும் தொழிற்பெயருக்குப் ‘போதல்’ என்ற பொருளே நாம் அறிந்தது! ஆனால் , இங்கு ’இன்னாமை’ என்ற பொருளில் வந்துள்ளது; இதனால்தான் ‘உரிச்சொல்’ என்ற வகையே (Separate Class of Tamil Words) ஏற்படுகிறது!

2 . இன்னல் – ‘வெயில்புறந் தரூஉம் இன்னல் இயக்கத்து’ (மலைபடு.374)
நேரடியாகப் பார்த்தால், ‘வெயிலானது பாதுகாக்கும் துன்பமான வழியில்’ என்ற பொருள் ஏற்படுகிறது! வெயிலால் துன்பமா? இன்பமா? துன்பம் அல்லவா?‘வெயில் பாதுகாக்கும்’ என்பது பொருந்தவில்லையே?
வெயில் புறந்தரூஉம் – நல்ல சுகமான காற்றைத் தடுக்கும் வெயில்; அந்த வெயிலில் , துன்பம் உள்ள வழியில் என்பது அடியின் பொருள்.

‘இன்’ அடியாக ‘இன்பம்’ எனும் சொல்லை நாம் அறிவோம்; இங்கு அதே அடியால் ‘துன்பம்’ எனும் பொருள் வந்துள்ளதை என்னவென்று சொல்வது?
உரிச்சொல் என்று சொல்வது!

செல்லல், இன்னல் – இரண்டுமே குறிப்பால் ஏற்பட்ட உரிச்சொற்களே.

குறிப்பால் உணர்த்தப்படும் அடுத்த உரிச்சொல் – மல்லல்!:

மல்லல் வளனே (உரியியல் 7)
இங்கே உரிச்சொல் – ‘மல்லல்’
வளன் – வளம்
’மல்லல் மூதூர்’ (அகம். 50) = வளமான பழைய ஊர்; இங்கே ‘மல்லல்’எனும் உரிச்சொல் – குறிப்புணர்த்தும் உரிச்சொல்- வந்துள்ளது.
இந்த உரிச்சொல்லோடு, ‘மல்லர்’, ‘மல்ல யுத்தம்’, ‘மல்யுத்தம்’ ஆகியன ஒப்பிட்டு ஆயத் தக்கன.

அடுத்த உரிச்சொல் நூற்பா –
“ஏ பெற்றாகும்” (உரியியல் 8)

உரிச்சொல் – ‘ஏ’
ஏ- பெற்று ; இது குறிப்புப் பொருள்.
பெற்று – பெருக்கம்;நிறைய; அநேகம்

‘ஏகல் அடுக்கத்து ’ (நற்றிணை 116) – இதனை மேற்கோள் காட்டுபவர் சேனாவரையர்.
‘நிறையக் கற்களால் அடுக்கப்பெற்ற’ என்பது பொருள்.
‘ஏ’ எனும் இடைச்சொல்லை முன்பு பார்த்துள்ளோம்; அதனுடன் இந்த உரிச்சொல் ‘ஏ’யைக் குழப்பிக்கொள்ளக் கூடாது.

அடுத்து, ‘உகப்பு’, ‘உவப்பு’ ஆகிய இரு சொற்களைத் தருகிறார் தொல்காப்பியர்:

உகப்பே உயர்தல் உவப்பே உவகை (உரியியல் 9)
உகப்பு – உயர்தல்
உவப்பு – உவகை;மகிழ்ச்சி

இந்த இரு உரிச்சொற்களும் குறிப்புப் பொருள் காட்டுவன.

‘விசும்புகந்து ஆடாது’- ‘உகப்பு’ எனும் நூற்பாச் சொல்லானது, ‘உகந்து’ என எச்சம் பொருளில் வந்துள்ளதை நோக்கலாம்.
விசும்பு - ஆகாயம்
‘விசும்புகந்து ஆடாது’- விண்ணில் உயர்ந்து பறக்காது

‘உவந்துவந்து ஆர்வ நெஞ்சமொடு ஆய்நலன் அளைஇ’ (அகம்.35) – இங்கு, வந்துள்ள நூற்பாச் சொல் ‘உவப்பு’; இதுவே, எச்சப் பொருளில் ‘உவந்து’ என வந்துள்ளது.
‘மகிழ்ந்து மகிழ்ந்து ஆர்வ நெஞ்சத்தோடு அருமை அழகை அனுபவித்து’ – என்பது பொருள்.
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Mar 22, 2022 7:38 pm

தொல்காப்பிய இலக்கணம் (602)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

‘பயப்பே பயனாம்’என்பது உரியியலின் அடுத்த நூற்பா(உரியியல் 10).

பயப்பு – பயன்
இந்தச் சொல், ‘பயவாக் களரனையர் கல்லா தவர்’(குறள் 406) என்று வந்தமை காணலாம்; ‘பயனற்ற களர் நிலம் போன்றவர்களே கல்லாதவர்கள்’ என்பது வள்ளுவம்.
‘பயப்பு’ எனும் நூற்பாச் சொல், ‘பயவா’ என்ற ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சமாக வந்துள்ளது.
பயவா – பயனற்ற

‘பயப்பு’ வேறு, ‘பசப்பு’ வேறு!
அடுத்த நூற்பாவைப் பாருங்கள் –
பசப்பு நிறனாகும் (உரியியல் 11)
பசப்பு – பசலை
‘மையில் வாண்முகம் பசப்பூ ரும்மே’ (கலி.7) எனும் சேனாவரையரின் எடுத்துக்காட்டுக்கு ‘குற்றமில்லாத ஒளியுடை முகத்தில் பசலை நிறம் பரவும் ’என்பது பொருள்.
‘பயப்பு’ எனும் சொல், குறிப்புப் பொருளது; ‘பசப்பு’ , பண்புப் பொருள் பற்றியது.
பயனைக் கருத்தால், மனத்தால் உணரவேண்டும்; பசலை நிறத்தைக் கண்ணிற் காணலாம்.இதுவே குறிப்புப் பொருளுக்கும் பண்புப் பொருருளுக்கும் உள்ள வேறுபாடு; இது முன்பும் சொல்லப்பட்டுள்ளது.

இப்போது, ‘இயைபு’ எனும் சொல்:

இயைபே புணர்ச்சி (இடையியல் 12)

‘இயைபு’ - புணர்ச்சி ; பொருந்தல்; கூட்டம் (joining)
‘இயைந்தொழுகல்’ – பொருந்தி ஒழுகல்
‘இயைந்த கேண்மை’ (புறம். 190) = பொருந்திய நட்பு
இயைபு – கூட்டம் உணர்த்தும் குறிப்புச் சொல்

அடுத்த உரிச்சொல்-
இசைப்பிசை யாகும் (உரியியல் 13)
1 .இசைப்பு – இசை(tune)
2 .‘யாழ் இசையூப் புக்கு’, ‘இசைத்தலு முரிய’, ‘வாயிலிசை’ – இவை தெய்வச்சிலையார் உரையிற் கண்டவை.

3 . ‘இசைப்பு’ எனும் நூற்பாச் சொல்லானது, இசைப் பொருண்மை உணர்த்தியது ஆம்.

ஆனால், இளம்பூரணர் மட்டும் மேல் 1,2,3 கருத்துகளை ஏற்கவில்லை! “ ‘இசைந்துழுகும்’ என்றக்கால், இசையத் தோன்றிவிடும் என்பதாம்” என்பது இளம்பூரணர் உரை.
இளம்பூரணர் கருத்துப்படி, இசைப்பு – பொருத்தம்.
இதனை ஆதித்தரும் சிவலிங்கனாரும் ஆதரிக்கின்றனர்.
சிவலிங்கனார், ‘இசை என்பது இசை (ஓசை) என்னும் பொருள் தருவது வெளிப்படை யாதலின் , இளம்பூரணர் கருத்தே நன்று’ என விளக்கினார்.

சிவலிங்கனார் விளக்கம் ஏற்புடையதாகவே உள்ளது!
‘பொருள் வேறு கிளத்தல்’ என்பதுதானே தொல்காப்பியம்?
இப்படிக் காணும்போது, ‘இசைப்பு’ , குறிப்புப் பொருண்மை தரும் சொல் என ஆகும்.

‘இசை’ என்பதுதான் ‘எசை’ என வழக்கில் வருகிறது! ‘எசப்பாட்டு’ என்பது, ‘இசைப் பாட்டுதான்’; எசப் பாட்டு – பொருத்தப் பாட்டு; இசை (music)அமைந்த பாட்டு அல்ல!

இரண்டு கற்கள் சேர்வதற்காக ‘எசைக்குச் சாந்துபோடு’ என்று கத்துவார் தமிழ்க் கொத்தனார்.
ஒரு கணக்கோடு இன்னொரு கணக்கை ஒப்பிடுவதை ‘ஒத்திசைவு’ என்கின்றனர்.இந்த இசைவுதான் ‘இசை’; இதுவே ‘இசைப்பு’.
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Mar 24, 2022 12:25 pm

தொல்காப்பிய இலக்கணம் (603)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

இப்போது நாம் பார்க்கப்போகும் சொற்கள் – அலமரல், தெருமரல்!:

அலமரல் தெருமரல் ஆயிரண்டும் சுழற்சி (உரியியல் 13)

சுழற்சி – மனத் தடுமாற்றம் ( நச்சர் உரை)

‘அலமரல் ஆயம்’ (ஐங்.64) – இதில், ‘அலமரல்’ குறிப்புப் பொருள் சுட்டியது.
‘அலமரல் ஆயம் என்றக்கால், சுழன்று வரும் ஆயம்’என்பதாம். (இஃது இளம்பூரணர் உரை. )
‘பணத்துக்கு அல்லாடினேன்’ என்பதில் உள்ள , ‘அல்லாடு’ என்பதன் பகுதியாம் ‘அல்’லோடு, உரிச்சொல் அலமரலின் பகுதி ஒப்பிட்டு ஆயத் தக்கது.

தெருமரல் – சுழற்சி; தடுமாற்றம்
தடுமாற்றமும் மனம் தொடர்பனது ஆகையால், ‘தெருமரல்’ எனும் சொல்லானது, குறிப்புப் பொருண்மை சுட்டுவது ஆகும்.

‘தெருமரல் உள்ளம் ’ என்பது, சுழன்று வரும் உள்ளம் என்பதாம் (இளம்பூரணர் உரை)

அடுத்தது-
‘மழ’, ‘குழ’ எனும் இரு உரிச்சொற்கள்!:

மழவுங் குழவும் இளமைப் பொருள (உரியியல் 14)

மழ – இளமை
‘மழ களிறு (புறம் 38) – இளங் களிறு
‘வரைபுரையும் மழகளிற்றின் மிசை’ (புறம். 38) (நச்சர் காட்டியது)
‘மலையைப் போன்ற இளம் யானை மேல், பெரும் கொம்புடைய எருமையது இளமைமிகு நடையுடைய கன்று’ என்பது பொருள்.
இளமையைத் தொட்டுக் காட்ட முடியாது; ஆகையால், ‘மழ’, குறிப்புப் பற்றி வந்த உரிச்சொல்; ‘குழ’வும் குறிப்புப் பற்றி வந்ததே.
குழ- இளமை
குழக் கன்று (நாலடி. 101)- இளங் கன்று
‘குழக்கன்று கடிது யாத்தாள்’ என்றக்கால், இளங்கன்று கடிது யாத்தாள் என்றதாம்(இளம்பூரணர் உரை).
‘தடமருப் பெருமை மடநடைக் குழவி’ (நற்.120) (நச்சரின் எடுத்துக்காட்டு)
‘தடித்த கொம்புடைய எருமையின் இளநடையை உடைய இளம் கன்று’ என்பதே பொருள்.

இங்கே , ‘குழ’ எனும் உரிச்சொல்லும் ,’குழவி’ எனும் பெயர்ச்சொல்லும் ஒப்பிட்டு ஆயத்தக்கன.
‘குழ’ எனும் உரிச்சொல் அடியாகக் ‘குழவி’ எனும் பெயர்ச்சொல் வந்ததாக இங்கு ஆகிறது.

உரிச்சொற்கள் அப்படியே நீண்ட காலம் தங்குவதில்லை; அவை பெயர் (noun) முதலிய வடிவங்களை ஏற்று வளர்கின்றன என்ற கருத்தியலை இங்கு நாம் பெறுகிறோம். இது தமிழ்ச் சொற்களின் அமைப்புச்(Structure of Tamil Words) சிறப்புகளில் ஒன்று.

உயிரினம் அனைத்துக்குமே இளமைப் பெயராகக் ‘குழவி’ இருப்பதைத் தொல்காப்பிய ம் மரபியல் நூற்பா1 , காட்டுகிறது.
‘குழவி மருங்கினும் கிழவதாகும்’ (புறத்திணையியல் 29) என்றும் தொல்காப்பியர் எழுதக் காண்கிறோம்.
சங்க இலக்கியத்தில், ‘குழவி’ என்ற சொல்லாட்சியைக் (ஐங். 92, நற். 15) காண்கிறோம்.
‘குழ’ அடிப்படையாகக் குழந்தை, குழகன், குழந்தைச்சாமி, குழவிஞாயிறு முதலிய சொற்கள் தமிழில் உருவாகியுள்ளன.
குழகன் – கந்தன்( வழக்கில் ‘குழவன்’ ஆகியுள்ளது)
குழந்தைச்சாமி – கந்தன்
குழவிஞாயிறு – இளம் ஞாயிறு (அதிகாலைச் சூரியன்)
குழந்தைநீர் – இளநீர்(coconut water)

இவ் வகையில் ஆயும்போது, தொல்காப்பிய உரியியல் தொன்மைத் தமிழ்ச் சொல் வடிவங்களை நமக்கு அறிமுகப்படுத்துவதாகக் கொள்ள இடம் ஏற்படுகிறது.

***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Mar 26, 2022 8:07 pm

தொல்காப்பிய இலக்கணம் (604)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

சீர்த்தி மிகுபுகழ் (உரியியல் 15)

சீர்த்தி’ எனும் சொல்லுக்கு, ‘மிகுபுகழ்’ (great fame)என்பது பொருள்.
‘வயக்கஞ் சால் சீர்த்தி’ என்றக்கால் மிக்கபுகழ் என்பதாம் – என உரை எழுதினார் இளம்பூரணர்.
வயக்கம் – விளக்கம்; சீர்த்தி – குறிப்புப் பொருண்மை உடைய உரிச்சொல்.
‘ஆனாச் சீர்க் கூடல்’ (கலி.30)- இங்கு ‘சீர்’ எனும் சொல்லைக் காண்கிறோம்.
சீர் – புகழ்
இதே உரியியல் நூற்பா 55இல், ‘சீர்மைக்கு’ , ‘விழுமம்’ எனும் பொருள் காணப்படுகிறது.
‘சீர்த்தி’ என்றதும் நமக்கு நினைவுக்கு வருவது, ‘கீர்த்தி’.
‘கீர்த்தி’ எனும் சொல் சங்க இலக்கியத்தில் இல்லை.
ஆனால், ‘சீர்த்தி’ எனும் சொல் சங்க இலக்கியத்தே உள்ளது(கலி.83; புற.15)
‘கீர்த்தி’யிலிருந்து ‘சீர்த்தி’ வந்ததா? ‘சீர்த்தி’யிலிருந்து ‘கீர்த்தி’ வந்ததா?
‘கீர்த்தி’யிலிருந்தே ‘சீர்த்தி’ வந்ததாக லெக்சிகன் (தொகுதி 3-2, ப. 1483, சென்னை 1982) நவில்கிறது.
அங்ஙனமாயின், ‘கீர்த்தி’யே, பழைய சொல் என்றாகிறது; இஃது ஆய்வுக்குரியது.
‘சீர்’ அடியாகப் பல சொற்கள் பிறந்துள்ளது போலக் ‘கீர்’ அடியாகப் பல சொற்கள் பிறக்கவில்லை.
சீர்மை, சீமை வந்துள்ளது போலக் கீர்மை, கீமை வரவில்லை.
‘சீர்மை’யிலிருந்தே ‘சீமை’ வந்துள்ளது; ‘சிவகங்கைச் சீமை’ எனில், ‘சீர்மையுள்ள, ஒழுங்குபட்ட , ஆட்சிப் பண்புள்ள பகுதி ’ என்பது பொருள்.
சீ – இதுதான் வேர்ச்சொல் (root)
வரிசையாக, ஒழுங்காக நீள்முள் அமைந்துள்ளதால் மயிர்வாரும் கருவி, சீப்பு
எனப்பட்டது.
வரிசையாக, ஒழுங்காகப் பழங்கள் அமைந்துள்ளதால், ‘வாழைப்பழச் சீப்பு’ என்கிறோம்.
தலைமுடியை ஒழுங்கு செய்வதை ‘சீவிவிடுதல்’ என்கிறோம்; பொருட்களைத் தட்டுகளில் ஒழுங்காக வைத்துத்தருவதால் அது ‘சீர்’; ‘என்ன சீர் கொண்டுவதாய்?’ –சண்டையில் , மாமியார் மருமகளைக் கேட்பாள்!
ஒழுங்காகக் கட்டமைப்புடன் கூடியதால் , ‘சீரங்கம்’! அது பிறகு, ஸ்ரீரங்கம் ஆயிற்று! ஆதிப் பெயர், சரியான பெயர் ‘சீரங்கம்’தான்!
சீவல்லபன் √ - ஸ்ரீவல்லபன் ×
சீவல்லபப் பேரேரி √ – ஸ்ரீவல்லபப் பேரேரி ×; இதுவே சீவலப்பேரி
சீவில்லிபுத்தூர் √ – ஸ்ரீவில்லிபுத்தூர் ×
சீனிவாசன் √ - ஸ்ரீநிவாசன் ×
சீமான் √ - ஸ்ரீமான் ×
இவ்வாறு ‘சீ’ எனும் வேருக்குப் பொருண்மை மதிப்பு ( Semantic value) மிகுதி!
மொழியியல் நோக்கில் , ‘சீர்’ எனும் உருபனுக்கு (morph), மாற்றுருபன் (allomorph)‘கீர்’ ஆகும்.
கீர்த்திக்கும் , சீர்த்திக்கும் பொருளில் பெரிய வேறுபாடு இல்லை.
இரண்டில், ஒன்றிலிருந்து ஒன்று தோன்றியதற்கு ஓலைச் சுவடியே (palmleaf manuscript) காரணம்!
ஆம்!
அந்தக்காலத்தில் ஓலைச் சுவடியில் எழுதும்போது ‘கீ’ எழுதினாலும், ‘சீ’எழுதினாலும் , வேக எழுத்தில், இரண்டும் ஒன்றாகவே தோன்றும்! இப்படித்தான் , ஒன்றிலிருந்து மற்றொன்று பிறந்துள்ளது!
இவ்வாறு ஓலைச்சுவடிகள் ஈன்றெடுத்த தமிழ்ச் சொற்கள் பல!

அடுத்த உரிச்சொல் – மாலை!:

மாலை இயல்பே (உரியியல் 16)

மாலை- இயல்பு (nature); ‘இரவரல் மாலையன்’ (குறிஞ்சிப். 239) என்றவழி இரவில் வரும் இயல்பினன் என்றதாம்- என உரை எழுதியவர் இளம்பூரணர்.

மாலையன் – இயல்பினன்
‘குறிப்பேவல் செயல் மாலைக் கொளைநடை அந்தணீர்’ (கலி. 9)- என்ற மேற்கோளை எழுதியவர் நச்சர்.
‘ஐம்பொறிகளும் உங்களுக்கு ஏவல் செய்தலை இயல்பாக உடைய , கோட்பாட்டையும் ஒழுக்கத்தையும் உடைய அந்தணர்களே’ என்பது பொருள்.
‘மாலை’ – குறிப்புணர்த்தும் உரிச்சொல்.

அது சரி! ‘மாலை’, மாலைப் பொழுதைக் குறித்தது எப்படி?
மாலை – இச் சொல்லுக்கு வேர்ச்சொல், ‘ம’.
ம- இந்த வேர்ச்சொல்தான் , ‘மற்று’, ‘மாற்றம்’ , ‘மயக்கம்’ முதலிய சொற்களை ஈன்றெடுத்துள்ளது.
‘காலை’ ப் பொழுது , மயங்கிப் பிறகு ஏற்பட்ட பொழுது ஆகையால் அது ‘மாலை’ ஆனது!
எதிரும் புதிருமாகக் – மயக்கமாகக்- கட்டப்படுவதால் அது மாலை(garland).
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Mar 26, 2022 10:16 pm

Code:
அந்தக்காலத்தில் ஓலைச் சுவடியில் எழுதும்போது ‘கீ’ எழுதினாலும், ‘சீ’எழுதினாலும் , வேக எழுத்தில், இரண்டும் ஒன்றாகவே தோன்றும்! இப்படித்தான் , ஒன்றிலிருந்து மற்றொன்று பிறந்துள்ளது!
இவ்வாறு ஓலைச்சுவடிகள் ஈன்றெடுத்த தமிழ்ச் சொற்கள் பல!

நல்லதொரு காரணம். தொல்காப்பிய இலக்கணம் (619) - Page 4 1571444738



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Mar 27, 2022 6:42 pm

நன்றி இரமணியன் அவர்களே! தொல்காப்பிய இலக்கணம் (619) - Page 4 1571444738



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Mar 27, 2022 6:46 pm

தொல்காப்பிய இலக்கணம் (605)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

இனி, வேறு இரு உரி வடிவங்கள் - கூர்ப்பு, கழிவு!:

கூர்ப்பும் கழிவும் உள்ளது சிறக்கும் (உரியியல் 17)

‘கூர்ப்பும் கழிவும் ஒன்றனது சிறத்தலாகிய குறிப்பை உணர்த்து’- சேனாவரையம்.

உள்ளது சிறத்தல்- ‘ முன்பு உள்ளதன்கண் மிகுதியைக் குறிக்கும்’ (தெய்வச்சிலையார் உரை)
உள்ளது – என்றது , முன் சிறவாது உள்ளது என்றவாறு (சேனாவரையர் உரை)

‘உப்புக் கூர்ந்தது’, ‘உப்புக் கழிந்தது’ என்பன சிறப்புச் சொல்லாயவாறாம்(இளம்பூரணர் உரை)
இளம்பூரணர் உரைக்கு விளக்கம்-
உப்பு முன்பு உணவில் இருந்தது போதாது; அதன் பிறகு தேவையான உப்பைப் போட்டு ருசி பார்த்தால் ‘உப்பு அருமை’ என்று சொல்லும்படியாக உள்ளது; இதுவே ‘உள்ளது சிறத்தல்’. ‘உப்புக் கழிந்தது’ என்றாலும் இதே பொருள்தான்.

‘கூர்ப்பு’ எனும் நூற்பாச்சொல்லுக்குச் சேனாவரையரின் எடுத்துக்காட்டு – ‘துனிகூர் எவ்வமொடு’ (சிறுபாண். 39)
‘வெறுத்தல் மிக்க வருத்தத்தோடு’ என்பது இதன் பொருள்.
(துனி – வெறுத்தல்; கூர்- மிக்க ; எவ்வம் – துயர்)

எடுத்துக்காட்டுத் தொடர்களில், ‘கூர்ந்தது’ என்றும், ‘கூர்’ என்றும், ‘கூர்ப்பு’ பயிலக் காண்கிறோம்.

இதனால், உரிச்சொல் வடிவம் ஒன்றைத் தொல்காப்பியர் காட்டினாலும் , அதன் முற்றுவினை வடிவம், எச்ச வடிவங்கள், அதன் பகுதி (stem) முதலியனவும் உரிச்சொல்லின் இயல்புகளையே கொள்ளும் என அறியக்கிடக்கிறது.

கழி – இந்த உரிச்சொல்லுக்குக் ‘கழி கண்ணோட்டம்’ (பதிற்.22) என்ற தொடரைக் காட்டினார் சேனாவரையர்.
கழி கண்ணோட்டம் – முன்னிலும் சிறந்த கண்ணோட்டம் .
இங்கே , ‘கழி’ என்ற உரிச்சொல் வடிவம் மாறாமல் வந்துள்ளது.
கூர்ப்பு , கழிவு – இரு சொற்களும் குறிப்புப் பொருண்மையன.
அடுத்துக் ‘கதழ்வு’, ‘துனைவு’! :

கதழ்வும் துனைவும் விரைவின் பொருள (உரியியல் 18)

‘கதழும் துறைவன்’ (குறுந். 117) – விரையும் துறைவன் (இளம்பூரணர் உரை)
‘கதழ்பரி நெடுந்தேர்’ (நற்.203); கதழ்பரி – விரைவை உடைய குதிரை.
கதழ் – குறிப்புப் பொருள் உணர்த்தும் உரிச்சொல்
’கதழ்’எனும் உரிச்சொல்லானது, ‘கதழ்வு’ எனும் பெயர்ச்சொல்லை ஏற்படுத்தித் தந்துள்ளது.
இந்த நுணுக்கத்தைத் தெய்வச்சிலையார் குறிக்கிறார் – “கதழ், துனை என்னும் சொற்களை இனிது விளக்குவதற்குப் பெயராக்கி ஓதினார்”. இதனை மேலும் விளக்கினார் சிவலிங்கனார் – “கதழ், துனை என்பனவே உரிச்சொற்கள். அவற்றைத் தொழிற்பெயர் விகுதியாகிய ‘வு’ என்பதைச் சேர்த்துக் கதழ்வு, துனைவு என ஓதினார் ஆசிரியர்” (தொல்காப்பியம் உரைவளம்,சொல்லதிகாரம் – உரியியல், உ.த.ஆ.நி., அடிக்குறிப்பு, ப.47, சென்னை113, முதற் பதிப்பு 1987) .
‘கதழ்வு’ என ஆக்கப்பட்ட பின்னர் அதுவே நிகண்டுகளிலும் ஏறலாயின.
கதழ்வு – விரைவு (சேந்தன் திவாகரம்)

உரிச்சொல் ‘துனை’ க்கு மேற்கோள் – ‘துனைபறை நிவக்கும் புள்ளின் மான’(மலைபடு. 55) (இளம்பூரணர் உரை).
‘வேகமாகப் பறக்கக் கூடிய பறக்கும் செயலில் ஓங்கிநிற்கும் பறவைக் கூட்டம் போல’
என்பது பொருள்.
பறை நிவக்கும்- பறத்தல் தொழிலில் ஓங்கிநிற்கும்; பறை , வாத்தியம் அல்ல; புள் – பறவை இனம்.
துனை – விரைவு (fastness).
‘துனை’க்குத் தெய்வச்சிலையார் காட்டும் மேற்கோள் – ‘துனைபரி துரக்கும் துஞ்சாச் செலவின்’ (அகம். 9) .
துனைபரி – வேகமாகச் செல்லும் குதிரை; துரக்கும் – முடுக்கும் ; துஞ்சா – அயராத. ‘வேகமாகச் செல்லும் குதிரையினை மேலும் முடுக்கி, அயராது ஓட்டுகிறோம்’ என்பது பொருள்.
‘துனை-தல்’ என்பதற்கு, லெக்சிகன் தரும் மேற்கோள் - ‘கோதைக்குத் துனைந்து சென்றுரைப்ப’ (சிலப். 8-114)
துனைந்து – விரைந்து
‘துனை’ எனும் உரிச்சொல்லானது, ‘துனைந்து’ எனும் வினையெச்சத்தை ஈன்றுள்ளது என்பதை ஈண்டு பெறுகிறோம்; உரிசொல் ஒன்று, வினையெச்ச உள்உறுப்பாக வருவதற்குச் சிலப்பதிகார எடுத்துக்காட்டு இது.
இவ்வாறு,
‘துனை’க்கு இருக்கும் ‘விரைவு’ப் பொருள் – சொன்மதிப்பு (semantic value)
‘துனை’யின் ‘விரைந்து’ முதலியன – தொடர்மை மதிப்பு (syntactic value)
துனை – குறிப்புப் பொருள் உணர்த்தும் உரிச்சொல்
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக