புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 45 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 45 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 45 Poll_c10 
31 Posts - 53%
heezulia
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 45 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 45 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 45 Poll_c10 
21 Posts - 36%
mohamed nizamudeen
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 45 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 45 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 45 Poll_c10 
2 Posts - 3%
சிவா
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 45 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 45 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 45 Poll_c10 
1 Post - 2%
Manimegala
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 45 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 45 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 45 Poll_c10 
1 Post - 2%
ஜாஹீதாபானு
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 45 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 45 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 45 Poll_c10 
1 Post - 2%
jairam
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 45 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 45 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 45 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 45 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 45 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 45 Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 45 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 45 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 45 Poll_c10 
114 Posts - 38%
mohamed nizamudeen
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 45 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 45 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 45 Poll_c10 
13 Posts - 4%
prajai
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 45 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 45 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 45 Poll_c10 
9 Posts - 3%
Jenila
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 45 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 45 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 45 Poll_c10 
4 Posts - 1%
jairam
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 45 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 45 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 45 Poll_c10 
3 Posts - 1%
Rutu
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 45 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 45 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 45 Poll_c10 
3 Posts - 1%
Guna.D
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 45 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 45 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 45 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 45 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 45 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 45 Poll_c10 
2 Posts - 1%
Baarushree
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 45 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 45 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 45 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்


   
   

Page 45 of 60 Previous  1 ... 24 ... 44, 45, 46 ... 52 ... 60  Next

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4332
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Dec 13, 2021 12:14 pm

First topic message reminder :

13.12.2021

நடிகை லட்சுமி அவர்கள் பிறந்த நாள் [1952]

நடிகை, TV நிகழ்ச்சி தொகுப்பாளர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட, ஹிந்தி படங்கள்ல  நடிச்சார்.

அம்மா குமாரி ருக்மணி பழம்பெரும் நடிகை. அப்பா வரதராவ் சினிமா சம்பந்தப்பட்டவர். மகள் நடிகை ஐஸ்வர்யா.

லட்சுமி நடிச்ச முதல் படம் ஸ்ரீவள்ளி [1961]. குழந்தை நட்சத்திரம். 

தேசிய விருது, ஃபிலிம்ஃபேர் விருதுகள், நந்தி விருதுகள், தமிழ்நாடு, கர்நாடக மாநில விருதுகள் வாங்கினார். 

தொட்டாக்கா வெட்கம் வரும் நில்லு ராமையாஹா - LR ஈஸ்வரி & TMS 

ஆசீர்வாதம் 1972 / MS விஸ்வநாதன் / கண்ணதாசன் 

இரண்டு கண்கள் பேசும் மொழியில் எழுத்துக்கள் இல்லை - P சுசீலா & TMS 

சங்கே முழங்கு 1972 / MS விஸ்வநாதன் / கண்ணதாசன் 

எத்தனை மலர்கள் எத்தனை நிறங்கள் எத்தனை மணங்கள் திருமணங்கள் - வாணி ஜெயராம் & TMS 

ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் 1978 / MS விஸ்வநாதன் / ஜெயகாந்தன் 

பேபி

சிவா and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்


heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4332
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue Jun 27, 2023 11:19 am

27.06.2023

26.06.2023 - நடிகர் சுரேஷ் கோபி பிறந்த நாள் [1960]

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 45 9o8O7DI

மலையாள நடிகர். கேரளால முன்னணி நடிகர்.  பாடகரும்கூட. இவரோட அப்பா சினிமா பட டிஸ்ட்ட்ரிப்யூட்டர். 

மோகன்லால் ஒரு சில தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி படங்கள்லயும் நடிச்சிருக்கார். காலேஜ் படிக்கும்போது ஸ்டூடன்ட் ஃபெடரேஷன் ஆஃப் இந்தியால ஆக்டிவ் மெம்பராக இருந்தார். ஏசியாநெட் TVல நீங்களும் ஆகலாம் கோடீஸ்வரன் மலையாள நிகழ்ச்சியை நடத்தினார். 

1965ல குழந்தை நட்சத்திரமாக மலையாள படத்தில சின்ன ரோல்ல நடிக்க ஆரம்பிச்சார். 1986ல ஹீரோவா நடிக்க ஆரம்பிச்சார். 1980கப்புறம் வில்லன், துணை நடிகர் ரோல்ல நடிச்சார். 

விருதுகள் :
தேசிய சினிமா விருது, கேரள மாநில சினிமா விருது


ஒரு குறிஞ்சிப்பூ மெல்ல சிரிக்குதே என்றோ நடத்திய குறும்பு உயிராய் நடக்கிறதே

சமஸ்தானம் 2002 / தேவா \ பா விஜய் 


பேபி மீண்டும் சந்திப்போம்  

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4332
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Jun 28, 2023 7:37 pm

28.06.2023

நடிகை வெண்ணிற ஆடை நிர்மலா பிறந்த நாள் [1948]

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 45 J9mCgZm

பாரம்பரிய குடும்பத்தில பிறந்தவர். சொந்த பேர் சாந்தி. வேற ரெண்டு பேரும் உண்டு. நிர்மலா, உஷாகுமாரி. பரதநாட்டிய கலைஞர். 

1950கள்ல பாரம்பரிய குடும்பத்தில பிறந்தவங்கள இப்டி  டான்ஸ் ஆட அனுப்புறது கிடையாது. சொந்தக்காரங்க இதை அப்ஜெக்ட் செஞ்சாங்க. ஆனாலும் அப்பா மகளை 4 வயசிலேயே டான்ஸ் கத்துக்க அனுப்பினார். இவர் பரதநாட்டியம் கத்துகிட்டது வைஜயந்திமாலா நாட்டியாலயா டான்ஸ் ஸ்கூல்ல. பல மேடைகள்ல டான்ஸ் ஆடினார்.  தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட படங்கள்ல நடிச்சிருக்கார். மலையாள படங்கள்ல இவர் பேர் உஷாகுமாரி. TV சீரியல்கள்லயும் நடிச்சார்.  

தமிழ்ல நிர்மலாவா நடிச்சார். நடிச்ச முதல் படம் வெண்ணிற ஆடை. முதல் படமே ஓஹோன்னு ஓடினதால வெண்ணிற ஆடைனு பட்டபேர் சேந்துருச்சு. இனிமே நடிக்கவேணாம்,  படிப்பை  தொடரலாம்னு நெனைச்சார். ஆனா மலையாள படத்தில நடிக்க கூப்பிட்டுட்டாங்க. அங்க  ப்ரபலமானார். அதனால படிக்க முடியல. 

நிர்மலாவுக்கு தேசிய அளவுலயும், சர்வதேச அளவுலயும் ரசிகர்கள் இருக்காங்க. 

விருதுகள் :
தேசிய விருது : மலையாள படத்துக்கு 
சிறப்பு தேசிய விருது - வெகுளிப்பெண் 
கலைமாமணி விருது - பரத நாட்டியத்துக்காக. 
பரத நாட்டியதில இவருக்கு கெடச்ச பட்டங்கள் : நாட்டிய திலகம், நாட்டிய கலைவாணி, லலிதாகலா நிருத்ய பூஷணி இன்னும் சிலவும். 


சித்திரமே சொல்லடி முத்தமிட்டால் என்னடி நித்தம் நித்தம் தென்றல் உன்னை தொட்டதில்லையோ தொட்டு தொட்டு நெஞ்சில் இன்பம் பட்டதில்லையோ - ஜானகி & PB ஸ்ரீனிவாஸ்

வெண்ணிற ஆடை 1965 / விஸ்வநாதன் - ராமமூர்த்தி \ கண்ணதாசன் 

கண்ணில் தெரிகின்ற வானம் கைகளில் வராதோ துள்ளி திரிகின்ற மேகம் தொட்டு தழுவாதோ கட்டி அணைக்கின்ற மேனி பட்டொளி கொள்ளாதோ - LR ஈஸ்வரி & TMS

ரகசிய போலீஸ் 115 - 1968 / MS விஸ்வநாதன் \ கண்ணதாசன்

போட சொன்னால் போட்டுக்குறேன் போடும்வரை கன்னத்திலே பொன்னழகே பெண்ணழகே போவதெங்கே கோபத்திலே - LR ஈஸ்வரி & TMS

பூவா தலையா 1969 / MS விஸ்வநாதன் \ வாலி

சொர்க்கம் பக்கத்தில் நேற்று நினைத்தது கைகளில் மலர்ந்தது பெண்ணின் வண்ணத்தில் பெண்ணின் வண்ணத்தில் நாளை வருவது இன்றே தெரிந்தது மின்னும் கன்னங்களில் சிந்தும் முத்தங்களில் - LR ஈஸ்வரி & TMS

எங்க மாமா 1970 / MS விஸ்வநாதன் \ கண்ணதாசன் 

அடி சரிதான் போடி வாயாடி சண்டைக்கு நீயா சரிஜோடி அட சரிதான் போயா சிடுமூஞ்சி சிரிச்சா போதும் அழுமூஞ்சி ஆ மக்கு ஆ மண்டு ஆ குண்டு ஆ கோட்டா - LR ஈஸ்வரி & TMS

பூவா தலையா 1969 / MS விஸ்வநாதன் \ வாலி


பேபி மீண்டும் சந்திப்போம்

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4332
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu Jun 29, 2023 6:24 pm

29.06.2023

28.06.2023 - சாண்டோ MM சின்னப்பா தேவர் அவர்கள் பிறந்த நாள் [1915 - 1978]

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 45 6vg4uAW            பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 45 Chinna10

தயாரிப்பாளர் & நடிகர். குடும்ப சூழ்நிலை காரணமாக அஞ்சாப்புக்கு மேல படிக்க முடியல. கஷ்ட்டப்பட்டுதான் வளந்தார். இரும்பை சம்மட்டியால அடிக்கிற வேல, மோட்டார் கம்பெனீல  லேபராக வேல செஞ்சார். இது தவிர, பால், அரிசி வ்யாபாரம், சோடா தயாரிச்சு விற்பனை வேலைல்லாம் செஞ்சார். நண்பர்களுடன் சேந்து, வீரமாருதி தேகப் பயிற்சி சாலையை  ஆரம்பிச்சார். இங்க பயிற்சி செஞ்சு, உடலை ஃபிட்டா வச்சுக்கிட்டார். மல்யுத்தம், வாள்சண்டை, கம்பு சண்டை கத்துக்கிட்டார். இங்க வந்து உடற்பயிற்சி செஞ்ச MGRக்கு வாள்சண்டையின் நுணுக்கங்களை கத்துக்கொடுத்தார்.  
ஜூப்பிட்டர் பிக்ச்சர்ஸின் படங்கள்ல சண்டை ஸீன்கள்ல, புராண படங்கள்ல நடிக்க ஆரம்பிச்சார். அப்புறமா துணை நடிகரானார். புராண படங்களை தயாரிச்சு CV ராமன்கிட்ட தயாரிப்பு நிர்வாகியா இருந்தார். அங்கதான் தேவர் சினிமா தயாரிப்பு நுட்பங்களை கத்துக்கிட்டார். 

தேவர் ஃபிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் சொந்தக்காரர். டைரக்ட்டர் MA திருமுகம் தேவரின் தம்பி.சினிமா எடுக்கிற ஆசைல, நண்பர்கள்கிட்ட பணம் வாங்கி சேத்துக்கிட்டு, சென்னைக்கு வந்து தேவர் 1955ல இந்த நிறுவனத்தை ஆரம்பிச்சார். விஜயா வாஹினி ஸ்டூடியோல சினிமா சம்பந்தப்பட்ட எல்லா வேலைகளையும் செஞ்சார். 

முதல் படத்திலியே பெரிய நடிகர்களை வச்சு படம் எடுக்கணும்னுதான், முதல்முதலா MGRஐ வச்சு 1956ல தாய்க்குப்பின் தாரம் படத்தை தயாரிச்சார். தம்பி MA திருமுகம் இந்த படத்துக்கு டைரக்ட்டர். தேவர் ஃபிலிம்ஸின் MGR நடிச்ச எல்லா படங்களுமே வெற்றி படங்கள்தான். இந்த நிறுவனத்தின் படங்களுக்கு அநேகமா திரை இசை திலகம் KV மகாதேவன் ம்யூஸிக் போட்டார். 

தேவரின் நிறுவனத்துல நடிச்சிட்ருந்த MGRஐ மத்த பட அதிபருங்க அவங்க படங்கள்ல நடிக்க கூப்ட்டாங்க. அவரும் நடிச்சார். அதனால MGR இல்லாம படங்களை தயாரிக்க தன் மகன் பேர்ல தண்டாயுதபாணி ஃபிலிம்ஸ்னு தனியா ஒரு கம்பெனியை ஆரம்பிச்சு படங்களை தயாரிச்சார். 

கட்டுமஸ்த்தான உடம்புள்ள இவர் சினிமால சண்டை காட்சிகள்ல நடிக்க சான்ஸ் கெடச்சுது. இதுதான் தேவருக்கு சினிமால ஒரு பிடிப்பு குடுத்துச்சு. இங்கதான் புரட்சி தலைவர் MGR பழக்கம் ஏற்பட்டு, ரெண்டு பேரும் திக்கோ திக்கு ஃப்ரெண்ட்ஸ் ஆயிட்டாங்க. கொஞ்ச நாள்லலியே MGRஐ வச்சு பல வெற்றி படங்களை எடுத்தவர் தேவர். அப்புறமா ரெண்டு பேருக்கும் சின்ன சின்ன சண்ட நடந்தாலும், ஒருத்தர ஒருத்தர் விட்டுக் கொடுக்காம சேந்தேதான் இருந்தாங்க. தேவர் MGRஐ ஆண்டவரேன்னும்,  MGR தேவரை முதலாளின்னும் கூப்பிடுவாங்க. 

தேவர் தனக்கென ஒரு கதை இலாகா வச்சிருந்தார். அவங்க கதை எழுதியவுடனே இவர் கேப்பார். பிடிச்சிருந்தா படமா எடுப்பார். இல்லேன்னா மறுபடியும் கதை உருவாகும். படத்தின் பூஜை அன்னிக்கே, படம் ரிலீஸ் தேதியை சொல்லிருவார். அந்த தேதீல நிச்சயமா அந்த படம் ரிலீஸ் ஆச்சு. அவர் படங்கள்ல நடிச்சவங்க, மத்த கலைஞர்கள், ஊழியர்கள் எல்லாருக்கும் சிங்கிள் பேமெண்ட், அதுவும் படப்பிடிப்பு தொடங்குறதுக்கு முன்னாலயே கொடுத்தார். இவரோட  ஸ்பெஷல் ஸ்டைல் இது. நடிகர் திலகத்தை வச்சு ஒரு படம்கூட  தேவர் தயாரிக்கல. 

ஏழெட்டு ஹிந்தி படங்களை தயாரிச்சார். அதுல சில அவர் தயாரிச்ச தமிழ் படங்களின் ரீமேக். 1971ல கலைமாமணி விருது வாங்கினார். 

தேவரின் படங்கள்ல முக்கிய அடையாளமா இருந்தது மிருகங்கள். தேவர் இருந்தவரை கெடச்ச லாபத்தை தனக்கு ஒரு பங்கு எடுத்துக்கிட்டு, நண்பர்களுக்கு ஒரு பங்கு, கோயிலுக்கு ஒரு பங்குனு கொடுத்தார்.

தேவருக்கு பிறகு, அவரோட மருமகன் டைரக்ட்டர் தியாகராஜன், தேவர் ஃபிலிம்ஸ்  நிறுவனத்திலேயே  படங்களை  தயாரிச்சார்.


தேவியின் திருமுகம் தரிசனம் தந்தது தேவியின் அறிமுகம் உறவினை தந்தது - சுசீலா & TMS
வெள்ளிக்கிழமை விரதம் 1974 [தேவர் ஃபிலிம்ஸ்] [/b] \ சங்கர் - கணேஷ் \ மருதகாசி

மூங்கில் இலை மேலே தூங்கும் பனீ நீரே தூங்கும் பனீ நீரை வாங்கும் கதீரோனே - சுசீலா

காட்டு ராணி 1965 [தேவர் ஃபிலிம்ஸ்] \ PS திவாகர் \ கண்ணதாசன்

கரும்பாக இனிக்கின்ற பருவம் இதை கதையாக சொல்லுது உன் காதல் உருவம் - சுசீலா & சீர்காழியார்

கொங்கு நாட்டு தங்கம் 1961 [தேவர் ஃபிலிம்ஸ்] \ KV மகாதேவன் \ கோவை குமாரதேவர்

கண்ணால் இதுவரையில் காணாத பாதையிலே தன்னந்தனிமையில் இவ்வேளையிலே எங்கே வந்தாய் எங்கே வந்தாய் - சுசீலா

கொங்கு நாட்டு தங்கம் 1961  [தேவர் ஃபிலிம்ஸ்] \ KV மகாதேவன் \ மருதகாசி

அசைந்தாடும் தென்றலே தூது செல்லாயோ தேன் அமுதான கவி பாடி சேதி சொல்லாயோ - பானுமதி

தாய்க்குப்பின் தாரம் 1956 [தேவர் ஃபிலிம்ஸ்] \ KV மகாதேவன் \ தஞ்சையார்


பேபி  மீண்டும் சந்திப்போம்

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4332
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Jun 30, 2023 1:23 am

30.06.2023

28.06.2023 - பழம்பெரும் நடிகர் RS மனோகர் பிறந்த நாள் [1925 - 2006]

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 45 13DwIA1

நாடகம், சினிமா நடிகர். சொந்த பேர் லட்சுமிநரசிம்மன். சின்ன வயசில மனோகரா நாடகத்தில  நடிச்சதால, மனோகர்னு பேர் வச்சுகிட்டார். பல நாடகங்களை அரங்கேற்றி நடத்தினார். 

பட்டதாரியான இவர் போஸ்ட்டல் துறைல வேல செஞ்சார். கர்நாடத்தில வசிச்சபோது, அங்க  ஷேக்ஸ்பியர் நாடங்களை பாத்துதான், இவருக்கு நாடகம் மேல ஒரு பிடிப்பு வந்துச்சு. காலேஜ்ல நாடகத்தில நடிச்சு பாராட்டு வாங்கினார். சுகுணாவிலாஸ் சபா நாடாகத்தில   நடிக்கும்போது  நாடக தந்தை பம்மல் சம்பந்த முதலியார் பாத்து பாராட்டினார். 1950கள்ல VC கோபாலரத்தினம் நாடக சபால சேந்து நடிச்சு நடிப்பை பற்றிய நுணுக்கங்களை கத்துக்கிட்டார்.  

நடிச்ச முதல் படம் ராஜாம்பாள் 1951. சினிமால நடிக்க ஆரம்பிச்ச பிறகு கூட, மனோகருக்கு நாடகம் மேல இருந்த ஆசை போகல. நேஷனல் தியேட்டர்ஸ் நாடக நிறுவனத்தை ஆரம்பிச்சு சமூக, ப்ரமாண்ட இதிகாச, வரலாற்று  நாடகங்களை அரங்கேற்றினார். மேடை அமைப்பு, நாடகங்கள்ல தந்திர காட்சிகளையும்  ஜனங்கள் ரொம்பவே ரசிச்சாங்க. முக்கியமா ப்ரமாண்ட இலங்கேஸ்வரன் நாடகம் சிலோன்ல 21 நாட்கள் நடத்த சான்ஸ் கெடச்சுது. ஜனங்கள் அந்த நாடகத்தை பாத்து வியந்துட்டாங்க. ஆஹா ஓஹோன்னு ஒரே பாராட்டுதான். அது மட்டுமில்லாம மனோகருக்கு 'இலங்கேஸ்வரன்'னு பட்டம் கொடுத்து கௌரவிச்சாங்க. நிறைய தடவ மேடை ஏறிய நாடகம் இது மட்டும்தான். குறிப்பிட்ட நேரத்தில நாடகம் தொடங்கணும்,   நாடகத்தில  எல்லாமே  பெர்ஃபெக்ட்டா இருக்கணும்னு மனோகர் நெனைச்சார். ஒவ்வொரு நாடகமும் 30 நாள் ரிகர்சல் நடந்துச்சு. 

சினிமால ஆரம்பத்தில ஹீரோவா நடிச்சாலும், பிற்காலத்துல வில்லனா நடிச்சு முத்திரை பதிச்சார். கலைச்செல்வி ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, மனோகரை இயல் இசை நாடக மன்றத்துக்கு செயலாளராக நியமிச்சார். முன்னாள் ஜனாதிகள் ராதாகிருஷ்ணன், R வெங்கட்ராமன், ப்ரதமர் இந்திரா காந்தி இவங்கல்லாம் மனோகரின் நாடகங்களை பாத்தாங்க. 

விருதுகள் : 
இசை பேரறிஞர், நாடக காவலர் போன்ற விருதுகளும், பட்டங்களும் கலைமாமணி விருது, MGR விருது,   தமிழ் இசை சங்கமம் 1987ல இசை பேரறிஞர் விருது கொடுத்துச்சு.


ஒரு நாள் இருந்தேன் தனியாக ஒரு பெண் நடந்தாள் அருகே சிரித்தேன் சிரித்தாள் மெதுவாக சிவக்கும் ரோஜா மலரே - சுசீலா, வசந்தா & TMS

எதிரிகளை ஜாக்கிரதை 1960 / வேதா / கண்ணதாசன் 

பாரடி கண்ணே கொஞ்சம் பைத்தியமானது நெஞ்சம் தேடுதடி மலர் மஞ்சம் சிரிப்புக்கு என்னடி பஞ்சம் ஹோய் பைத்தியமே கொஞ்சம் நில்லு வைத்தியரிடம் போய் சொல்லு - சுசீலா, TMS & சீர்காழியார்
வல்லவனுக்கு வல்லவன் 1965 / வேதா \ கண்ணதாசன்

எல்லோருமே காண கல்யாணமே செய்து உல்லாசமாய் இனிமேலே இன்ப உலகாளலாம்  மனம்போலே - ஜிக்கி & AM ராஜா

புதுமைப் பெண் 1959/ TG லிங்கப்பா \ பட்டுக்கோட்டையார்  

நடந்து காட்டு நடந்து காட்டு எனக்கு முன்னாலே நா வருவேன் நா வருவேன் ஒனக்கு பின்னாலே - சுசீலா

கொஞ்சும் குமரி 1963 \ வேதா \ நல்லதம்பி


பேபி மீண்டும் சந்திப்போம்

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4332
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Jun 30, 2023 12:01 pm

30.06.2023

29.06.2023 - நடிகர்  ஹரீஷ் கல்யாண் பிறந்த நாள் [1990]

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 45 Harish11

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 45 Harish12

2010ல சிந்து சமவெளி படத்தில முதல் முதலா நடிக்க ஆரம்பிச்சார். கீபோர்ட் வாத்தியத்தை வாசிக்கவும், ஹிந்துஸ்தானி ம்யூஸிக்கயும்  கத்துக்கிட்டார். இவரே பாட்டெழுதி தனிப்பாடல் பாடியிருக்கார். இவரோட அப்பா சினிமா பட விநியோகஸ்த்தர்.

முத்தத்தால சண்ட போட்டு பாத்தா என்ன மோதி பாக்க என்னோட வாடி வாடி - ரீட்டா & நவீன்

சிந்து சமவெளி 2010 / சுந்தர் C பாபு \ நா முத்துகுமார்


பேபி  மீண்டும் சந்திப்போம்

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4332
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Jun 30, 2023 12:11 pm

30.06.2023

29.06.2023 - ம்யூஸிக் டைரக்ட்டர் கார்த்திக் ராஜா பிறந்த நாள் [1973]

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 45 GX2s3Yz               பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 45 3mIPBOc

இசை குடும்பத்தில பிறந்தவர். இசைஞானி இளையராஜாவின் மூத்த மகன். தம்பி யுவன் சங்கர் ராஜா, தங்கச்சி பவதாரிணி. வெஸ்டர்ன் கிளாசிக்கல் ம்யூஸிக் கத்துக்கிட்டார். முக்கியமா ப்யானோ வாசிக்க கத்துக்கிட்டார். TV கோபாலகிருஷ்ணன், V தட்சிணாமூர்த்தி இவங்ககிட்ட கர்னாடக சங்கீதம் கத்துக்கிட்டார். சின்ன வயசில அப்பா கூட ரெக்கார்டிங் ஸ்டூடியோவுக்கு போனார். 1987ல அப்பா ம்யூஸிக் போட்ட நினைக்க தெரிந்த மனமே... படத்துல "கண்ணுக்கும் கண்ணுக்கும் மோதல்" பாட்டுக்கு கீபோர்ட்  வாசிச்சார். இப்டி சில பாட்டுக்களுக்கு கீபோர்ட் வாசிச்சார்.  

1992ல இளையராஜா ம்யூஸிக் போட்ட பாண்டியன் படத்தில "பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா" பாட்டுக்கு மட்டும் ம்யூஸிக் போட்டார். கார்த்திக் ராஜா ம்யூஸிக் போட்ட முதல் பாட்டு. இப்டி ரெண்டு மூணு படங்கள்ல ஒவ்வொரு பாட்டுக்கு ம்யூஸிக் போட்டார். சில படங்கள்ல பின்னணி இசை மட்டும் போட்டார். தனியா ம்யூஸிக் போட்ட முதல் படம் எனக்கொரு மகன் பிறப்பான் 1996. ஒண்ரெண்டு தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, இங்கிலீஷ் படங்களுக்கும் ம்யூஸிக் போட்டார். பின்னணி பாடினார். தனி ஆல்பங்களுக்கு ம்யூஸிக் போட்டார். 

விருதுகள் :
ஹிந்தி பட ம்யூஸிக் - ஃபிலிம்ஃபேர் RD பர்மன் விருது 
சிறந்த ம்யூஸிக் டைரக்ட்டர் - சினிமா எக்ஸ்ப்ரஸ் விருது - டும் டும் டும் 2001


இந்த படத்துக்கு ம்யூஸிக் இளையராஜா. இந்த பாட்டுக்கு மட்டும் கார்த்திக்ராஜா.
பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா வேண்டி நின்ற பைங்கிளிக்கு உய்யலாலா கையில் தந்தேன் கல்யாண மாலை மையல் கொண்டேன் நான் இந்த வேளை - சித்ரா & மனோ

பாண்டியன் 1992 \ கார்த்திக்ராஜா \ பஞ்சு அருணாசலம்

சந்தனம் தேச்சாச்சு ஏமாமா சங்கதி என்னாச்சு சித்திர வந்தாச்சு ஏமாமா நித்திர போயாச்சு நிச்சய தாம்பூலம் ஏமாமா நெஞ்சுக்குள் நடந்தாச்சு - பவதாரிணி

மாணிக்கம் 1996 \ கார்த்திக்ராஜா \ பார்த்தி பாஸ்கர்

வீசும் காற்றுக்கு பூவை தெரியாதா பேசும் கண்ணுக்கு என்னை புரியாதா அன்பே உந்தன் பேரைத்தானே விரும்பி கேட்கிறேன் போகும் பாதை எங்கும் உன்னை திரும்பி பார்க்கிறேன் - ஹரிணி & உன்னிகிருஷ்ணன்

உல்லாசம் 1997 \ கார்த்திக்ராஜா / பழனிபாரதி

அத்தான் வருவாக ஒரு முத்தம் தருவாக என் அச்சம் வெக்கம் கூச்சம் அதை அள்ளி ருசிப்பாக கதவை சாத்தினால் ஜன்னல் திறப்பாக ஜன்னல சாத்த தான் மனசில்லையே

டும் டும் டும் 2001 \ கார்த்திக்ராஜா \ பா விஜய்


பேபி  மீண்டும் சந்திப்போம்

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4332
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Jul 01, 2023 1:21 pm

01.07.2023

பழம்பெரும் பின்னணி பாடகர் AM ராஜா அவர்கள் பிறந்த நாள் [1929 - 1989]
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 45 WbzMaKC      பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 45 C4eRS3x    

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 45 6aJeHPh

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட படங்கள்ல பாடினார். பல படங்களுக்கு ம்யூஸிக்கும் போட்டிருக்கார். ப்ரபல பின்னணி பாடகி கிருஷ்ணவேணி என்ற ஜிக்கி இவரோட மனைவி. இவங்க ரெண்டு பேரும் சேந்து பல பாட்டு பாடியிருக்காங்க. 

ம்யூஸிக் பிடிச்சதால கர்னாடக இசை, மேற்கத்திய இசை கத்துக்கிட்டார். காலேஜ் படிக்கும்போதே பல போட்டிகள்ல பாடி ஜெயிச்சார். இவரை பற்றி கேள்விப்பட்ட HMV நிறுவனம் ரெண்டு தெலுங்கு மெல்லிசை பாட்டு பாட்றதுக்கு ராஜாவை செலெக்ட் செஞ்சாங்க. ராஜாவே ரெண்டு பாட்டையும் எழுதி, அதுங்களுக்கு ம்யூஸிக்கும் போட்டார். இதுக்கு ஹெல்ப் செஞ்சவர் KV மகாதேவன். இந்த ரெண்டு பாட்டும் ஆல் இண்டியா ரேடியோல ப்ரபலமாச்சு. இதை கேட்ட ஜெமினி SS வாசன் தன் படத்ல ராஜாவை பாட வைக்கணும்னு ஆசைப்பட்டார். 1951ல சம்சாரம் படத்துல பாட வச்சார். "சம்சாரம் சம்சாரம் சகல தர்ம சாரம்" பாட்டுதான். இந்த படம் தெலுங்கு பட ரீமேக். இதுக்கப்புறம் ஹிந்திலயும் ரீமேக் ஆச்சு. மூணு மொழிகள்லயும் இந்த பாட்டை  ராஜாதான் பாடினார். இப்டி சினிமால அட்டகாசமா பின்னணி பாடி அசத்த ஆரம்பிச்சுட்டார் ராஜா. 

சிவாஜி கணேசன், MGR, ஜெமினி கணேசன்னு பலருக்கு பாடினாலும், இவர் குரல் ஜெமினி கணேசனுக்குன்னே வந்த குரல் மாதிரி இருந்துச்சு. அவ்ளோ கனகச்சிதமா பொருந்தி, கேக்குறதுக்கு சூப்பரான இருக்குல்ல. PB ஸ்ரீனிவாஸ் வந்து ஜெமினி கணேசனுக்கு பாட ஆரம்பிக்கிற வரைக்கும் ஜெமினி கணேசனனின் குரலாவே வாழ்ந்தார். ஜெமினி கணேசன் சில படங்கள்ல நடிக்கவும் செஞ்சார். 

ராஜா முதல் முதலா ம்யூஸிக் போட ஆரம்பிச்சது தெலுங்கு படத்துக்கு. ஸ்ரீதர் டைரக்ட்டின முதல் படம் கல்யாண பரிசு. ராஜா ம்யூஸிக் போட்ட முதல் தமிழ் படம் இதுதான். எல்லா பாட்டுமே ஹிட்டோ ஹிட், இல்லியா? இப்டியே மலையாள படங்களுக்கும் ம்யூஸிக் போட்டு அங்கயும் ஸ்ட்டார் சிங்கரா இருந்தார். 

சினிமால சான்ஸ் கொறஞ்ச பிறகு, மெல்லிசை கச்சேரிகள்ல ராஜா பாடினார். பல வருஷங்கள் கழிச்சு V குமார் ராஜாவை சினிமால பாட வச்சார். 1971ல ரங்கராட்டினம் படம்.
 


தேன் உண்ணும் வண்டு மாமலரை கண்டு திரிந்தலைந்து பாடுவதேன் ரீங்காரம் கொண்டு பூங்கொடியே நீ சொல்லுவாய் ஓ............ பூங்கொடியே நீ சொல்லுவாய் - சுசீலா & AM ராஜா

அமரதீபம் 1956 / T சலபதிராவ் \ KP காமாட்சிசுந்தரம்

மாசிலா உண்மை காதலே மாறுமோ செல்வம் வந்த போதிலே பேசும் வார்த்தை உண்மைதானா பேதையை ஏய்க்க நீங்கள் போடும் வேஷமா கண்ணிலே மின்னும் காதலே கண்டுமா சந்தேகம் எந்தன் மீதிலே - P பானுமதி & AM ராஜா

அலிபாபாவும் 40 திருடர்களும் 1956 \ S தட்சிணாமூர்த்தி \ மருதகாசி

காயிலே இனிப்பதென்ன கனியானால் கசப்பதென்ன வாயாடி வம்பு பேசும் மானே பதில் சொல்லு - ஜிக்கி & AM ராஜா

மனமுள்ள மறுதாரம் 1958  \ KV மகாதேவன் \ மருதகாசி

அய்யா முதலாளி வாங்க நோ வேகன்ஸி போர்டு பாருங்க வேலை இல்லை போர்டு பாருங்க போர்டு வாங்குங்க - AM ராஜா

அன்பு 1953 \ TR பாப்பா / கா மு ஷெரிஃப்

சின்ன சின்ன கண்ணிலே வண்ண வண்ண ஓவியம் அங்கும் இங்கும் யார் வரவை தேடுது துணை இங்கிருக்க யாரை எண்ணி பாடுது - சுசீலா & AM ராஜா

தேன் நிலவு 1961 \ AM ராஜா \ கண்ணதாசன்


பேபி மீண்டும் சந்திப்போம்

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4332
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Jul 01, 2023 2:18 pm

01.07.2023

டைரக்ட்டர் விசு அவர்கள் பிறந்த நாள் [1945 - 2020]
 
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 45 NiOo1VV           பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 45 Z0x8pBH

டைரக்ட்டர், தயாரிப்பாளர், கதாசிரியர், வசனகர்த்தா, நடிகர். மேடை நாடகம், TV சீரியல்கள்ல நடிச்சார். இயக்குனர் சிகரம் K பாலசந்தரிடம் அசிஸ்டன்ட் டைரக்ட்டராக இருந்தார். விசுவின் படங்கள் சமூக, குடும்ப சூழ்நிலையை அடிப்படையாக இருக்கும். கூட்டு குடும்பம்னா எப்டி  இருக்கணும்னு இப்போதைய  தலைமுறையினர் பாத்து தெரிஞ்சுகிற மாதிரி இவர் படங்கள் இருக்கும். நடிகர் கிஷ்மு விசுவின் தம்பி. 

சன் TVல அரட்டை அரங்கம்னு ஒரு நிகழ்ச்சியை நடத்தினார். அது ஜனங்களிடையே ரொம்ப பாப்புலராச்சு.  அதுக்கப்புறம் இதே மாதிரி மக்கள் அரங்கம்னு ஒரு நிகழ்ச்சியை ஜெயா TVல நடத்தினார். 

டைரக்ட்டின முதல் படம் 1982ல கண்மணி பூங்கா. இவர் படங்கள்ல உமா என்ற கேரக்ட்டர்  கண்டிப்பா இருக்கும். இதுக்கு ஒரு கதை இருக்கு. விசு ஒரு தடவ 30, 40 பெண்களோடு விருது கொடுக்கும் ஒரு விழாவுக்கு சிலோனுக்கு போனார். அவங்க எல்லாரும் டீச்சருங்க. அங்க அந்த பெண்களுக்கு விருது கொடுக்கப்பட்டுச்சு. விசு ரூமுக்கு வெளிய உக்காந்து முதல் முதலா கதை எழுதிட்டு இருந்தார். இதை ஒரு டீச்சர், அவர் பேர்தான் உமா கேட்டார்.  

"என்ன செய்றீங்க" னு கேட்டார். 

விசு : கதை எழுதிட்டு இருக்கேன். 

டீச்சர் : என்ன கதை எழுதுறீங்க. அந்த கதையை சொல்லுங்க. 

விசு கதை சொன்னார். அந்த டீச்சர் கண்ணீர் விட்டார். 

டீச்சர் : எவ்ளோ அரும்மையான கதை. ரொம்ப நல்லா இருக்கு. நீங்க இங்க இருக்க வேண்டிய ஆளில்ல. உங்க வாழ்க்கைல கண்டிப்பா நீங்க பெரிய ஆளா வருவீங்க. 

அதுக்கப்புறம்தான் அவர் எழுதுற கதைல எல்லாம் உமா என்ற பேரை வைக்கணும்னு முடிவு செஞ்சார். இதுதான் இவர் படங்கள்ல வர்ற ஹீரோயின் உமாவின் கதை.
 

திரைக்கதை, வசனம், டைரக் ஷன், நடிப்பு - விசு
மந்திர புன்னகை மின்னிடும் மேனகை சந்தன பூங்கொடியோ இந்திரன் மாளிகை சுந்தர தேவதை சித்திர பைங்கிளியோ அவள்தானோ இவள்தானோ - சசிரேகா & SPB

மணல் கயிறு 1982 \ MS விஸ்வநாதன் \ வாலி 

கதை, திரைக்கதை, வசனம், டைரக் ஷன், நடிப்பு - விசு
பார்த்து சிரிக்குது பொம்மை இங்கு பாடி நடிக்குது பெண்மை தடுமாறும் நிலை கண்டு தன்னைபோல் இவளும் பொம்மை இனம் என்று - வாணி ஜெயராம்

திருமதி ஒரு வெகுமதி 1987 / சங்கர் - கணேஷ் \ வைரமுத்து

கதை, திரைக்கதை, வசனம், டைரக் ஷன், நடிப்பு - விசு
ஜெயதி ஜெயதி பாரத மாதா குலமாதா எண்பது கோடி மக்களை பெற்ற மங்கள தாய் நீயே வாழ்க வாழ்க வளர்க - KS சித்ரா

வேடிக்கை என் வாடிக்கை 1990 \ சங்கர் - கணேஷ் \ உதயசந்திரன் 

கதை, திரைக்கதை, வசனம், டைரக் ஷன், நடிப்பு - விசு
ஜானகி தேவி ராமனை தேடி இரு விழி வாசல் திறந்து வைத்தாள் ராமன் வந்தான் மயங்கிவிட்டாள்  தன் பேரை கூட மறந்துவிட்டாள் - KS சித்ரா

சம்சாரம் அது மின்சாரம் 1986 \ சங்கர் - கணேஷ் \ வைரமுத்து 
 
கதை, திரைக்கதை, வசனம், டைரக் ஷன், நடிப்பு - விசு / டைரக் ஷன் முதல் படம்  
கிட்ட வாடி ஏம்முட்டகோசு நா கொஞ்சம் தாரேன் ஆப்பிள் பீசு ஒட்டி வந்து கட்டிக்கிட்டா மத்தத நா பாத்துக்குறேன் - ஜானகி & மலேசியா வாசுதேவன்

கண்மணி பூங்கா 1982 / MS விஸ்வநாதன் \ உதயசந்திரன்

பேபி மீண்டும் சந்திப்போம்

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4332
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Jul 02, 2023 3:12 pm

02.07.2023

நடிகை கௌதமி பிறந்த நாள் [1968]

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 45 Yxv3mBd                   பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 45 FPrklkU

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி படங்கள்ல நடிச்சிருக்கார். TV சீரியல்கள்ல நடிச்சார். TV நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். நடுவராகவும் இருந்தார். மலேசியாவின் ஆசிய மெட்ரோபாலிட்டன் பல்கலைக்கழகம் இவர் செஞ்ச சமூக சேவைக்காக டாக்ட்டர் பட்டம் கொடுத்திருக்கு. 

கௌதமி முதல்ல நடிக்க ஆரம்பிச்சது தெலுங்கு படத்தில. தமிழ்ல அறிமுகமானது குரு சிஷ்யன் 1988ல. 2000க்கு அப்புறமா படங்கள்ல ஆடை வடிவமைப்பாளராக வேலை செஞ்சார். தசாவதாரம் [2008] படத்துக்காக சிறந்த ஆடை வடிவமைப்பாளருக்கான விஜய் விருது வாங்கினார். அதுக்கப்புறம் 2015ல பாபநாசம் படத்தில மறுபடியும் நடிக்க ஆரம்பிச்சார். 

புற்று நோயால பாதிக்கப்பட்டவங்களுக்கு உதவி செய்றதுக்காக Life Again Foundation (LAF) என்ற அமைப்பை ஏற்படுத்தினார். இந்த அமைப்புள்ள 2 மொபைல் ஆஸ்பத்திரி நடத்தினார். 

விருதுகள் :  [தமிழ் படங்கள்]
தமிழ்நாடு மாநில சிறப்பு விருது - நம்ம ஊரு பூவாத்தா ௧௯௯௦
ஃபிலிம்ஃபேர் விருது - சிறந்த தமிழ் நடிகை - நீ பாதி நான் பாதி  1991
சினிமா எக்ஸ்ப்ரஸ் விருது - சிறந்த நடிகை - நீ பாதி நான் பாதி ௧௯௯௧
விஜய் விருது - சிறந்த காஸ்ட்யூம் டிசைனர் - தசாவதாரம் 2008


ஜிங்கிடி ஜிங்கிடி ஒனக்கு இங்க என்னடி ஒம்மனக்கணக்கு சொல்லடி சொல்லடி எனக்கு இந்த சின்ன புத்தி ஒனக்கெதுக்கு சந்தேகம் வரலாமா காதல் கிளிக்கு தேகம் சுடலாமா - சித்ரா & மனோ
குரு சிஷ்யன் 1988 \ ம்யூஸிக் & வரிகள் : இளையராஜா

வெள்ளி கொலுசுமணி வேலான கண்ணுமணி சொல்லி இழுத்ததென்ன தூங்காம செஞ்சதென்ன பாடாத ராகம் சொல்லி பாட்டு படிச்சதென்ன கூடாம கூட வச்சு சேத்ததென்ன - சித்ரா & அருண்மொழி

பொங்கி வரும் காவேரி 1989/ இளையராஜா \ கங்கை அமரன்  

சூப்பர் ஸ்ட்டாரு யாருன்னு கேட்டா சின்ன கொழந்தையும் சொல்லும் கண்ணா ஒங்க பேர ஒரு தரம் சொன்னா நிமிர்ந்து எழுந்திடும் புல்லும் மேக்கப்ப ஏத்துங்க கெட்டப்ப மாத்துங்க செட்டப்ப மாத்தாதிங்க ஹ - ஷைலஜா & SPB

ராஜா சின்ன ரோஜா 1986 \ சந்திரபோஸ் \ வைரமுத்து

சொர்கமே என்றாலும் அது நம்மூர போல வருமா அட எந்நாடு என்றாலும் அது நம் நாட்டுக்கீடாகுமா பல தேசம் முழுதும் பேசும் மொழிகள் தமிழ் போல் இனித்திடுமா - ஜானகி & இளையராஜா
ஊரு விட்டு ஊரு வந்து 1990 \ இளையராஜா \ கங்கை அமரன்

ஏதேதோ கற்பனை வந்து என்னை அழைக்கிறதே எங்கேயோ விண்ணில் பறக்க ரெக்கை முளைக்கிறதே கண்களிலே கைகளிலே காதலி தாவணி மோதியபோது - லலிதா சாகரி & TL தியாகராஜன்
வாய்க்கொழுப்பு 1989 / சந்திரபோஸ் / வைரமுத்து
 

பேபி மீண்டும் சந்திப்போம்

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4332
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue Jul 04, 2023 11:38 am

04.07.2023

03.07.2023 - நடிகை கனிகா பிறந்த நாள் [1982]

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 45 IMpVxne                         பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 45 LvayFV1

சொந்த பேர் திவ்யா. அம்மா, அப்பா ரெண்டு பேருமே என்ஜினியர். கனிகாவுக்கு சின்ன வயசிலேயே நல்ல பாடும் திறமை உண்டு. படிக்கும்போதே மெல்லிசை, பாப் இசை போட்டிகள்ல  கலந்துக்கிட்டார். 2001ல மிஸ் சென்னை அழகி போட்டீல கலந்துக்கிட்டு ஜெயிச்சார். இவர் சினிமால நடிக்க இதுதான் நல்ல சான்ஸா இருந்துச்சு. 

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட படங்கள்ல நடிச்சார். அதிகமா நடிச்சது மலையாளத்துல. நடிக்க ஆரம்பிச்ச காலத்திலேயே பாட்றது மட்டுமில்லாம டப்பிங் குரலும் கொடுத்தார். தமிழ்ல நடிக்க ஆரம்பிச்சது 2002ல Five Star படத்தில. முதல் படத்திலியே ஒரு டூயட் பாட்டு பாடினார். ஒரு மேகஸீன் கவர்ல கனிகாவின் போட்டோவை பாத்த டைரக்ட்டர் சுசி கணேசன்தான் திவ்யாவை கனிகாவாக்கி இந்த படத்தில நடிக்க வச்சார். கனிகா அப்போ படிச்சிட்டு இருந்ததால, சம்மர் லீவ்ல இந்த படத்தை முடிச்சு கொடுத்தார். TV சீரியல்கள்ல  நடிச்சிட்டு இருக்கார். நிகழ்ச்சிகளை  தொகுத்து வழங்கினார். சில விளம்பரங்கள்லயும் நடிச்சிருக்கார். 

நடிகை ஜெயஸ்ரீயின் சகோதரரை கனிகா 2008ல கல்யாணம் செஞ்சுக்கிட்டார். கல்யாணத்துக்கப்புறம் நடிக்கவேணாம்னு நெனச்சு, முடிக்காத படங்களை மட்டும் முடிச்சு கொடுத்தார். ஆனாலும் 2009ல மறுபடியும் மலையாள படங்கள்ல நடிக்க ஆரம்பிச்சார். 

டப்பிங் குரல் கொடுத்தது : 
ஜெனிலியா - சச்சின் 2005
சதா - அந்நியன் 2005
சிரியா - சிவாஜி The boss 2007


எங்கிருந்து வந்தாயடா என்னை பாடுபடுத்த நீ என்னை பாடுபடுத்த எங்கு கொண்டு சென்றாயடா என்னை தேடி எடுக்க நான் என்னை தேடி எடுக்க - சந்தனபாலா
ஃபைவ்5ஸ்டார் 2002 / அனுராதா ஸ்ரீராம் & ஸ்ரீராம் பரசுராம்

திருதிருடா திருதிருடா தீஞ்சுவை நானடா திருதிருடா திருதிருடா தீண்டியே பாரடா கை வாளால் என்னை தொட்டு முத்தத்தால் வெட்டு வெட்டு முந்தானை கட்டில் போட வாராயா - சுஜாதா & ஸ்ரீனிவாஸ்

ஃபைவ்5ஸ்டார் 2002/ அனுராதா ஸ்ரீராம் & ஸ்ரீராம் பரசுராம்
 

 பேபி மீண்டும் சந்திப்போம்

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



Page 45 of 60 Previous  1 ... 24 ... 44, 45, 46 ... 52 ... 60  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக