புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மணிப்பூர் கலவரம் Poll_c10மணிப்பூர் கலவரம் Poll_m10மணிப்பூர் கலவரம் Poll_c10 
32 Posts - 54%
heezulia
மணிப்பூர் கலவரம் Poll_c10மணிப்பூர் கலவரம் Poll_m10மணிப்பூர் கலவரம் Poll_c10 
24 Posts - 41%
rajuselvam
மணிப்பூர் கலவரம் Poll_c10மணிப்பூர் கலவரம் Poll_m10மணிப்பூர் கலவரம் Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
மணிப்பூர் கலவரம் Poll_c10மணிப்பூர் கலவரம் Poll_m10மணிப்பூர் கலவரம் Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
மணிப்பூர் கலவரம் Poll_c10மணிப்பூர் கலவரம் Poll_m10மணிப்பூர் கலவரம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மணிப்பூர் கலவரம் Poll_c10மணிப்பூர் கலவரம் Poll_m10மணிப்பூர் கலவரம் Poll_c10 
307 Posts - 45%
ayyasamy ram
மணிப்பூர் கலவரம் Poll_c10மணிப்பூர் கலவரம் Poll_m10மணிப்பூர் கலவரம் Poll_c10 
294 Posts - 43%
mohamed nizamudeen
மணிப்பூர் கலவரம் Poll_c10மணிப்பூர் கலவரம் Poll_m10மணிப்பூர் கலவரம் Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
மணிப்பூர் கலவரம் Poll_c10மணிப்பூர் கலவரம் Poll_m10மணிப்பூர் கலவரம் Poll_c10 
17 Posts - 3%
prajai
மணிப்பூர் கலவரம் Poll_c10மணிப்பூர் கலவரம் Poll_m10மணிப்பூர் கலவரம் Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
மணிப்பூர் கலவரம் Poll_c10மணிப்பூர் கலவரம் Poll_m10மணிப்பூர் கலவரம் Poll_c10 
9 Posts - 1%
jairam
மணிப்பூர் கலவரம் Poll_c10மணிப்பூர் கலவரம் Poll_m10மணிப்பூர் கலவரம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மணிப்பூர் கலவரம் Poll_c10மணிப்பூர் கலவரம் Poll_m10மணிப்பூர் கலவரம் Poll_c10 
4 Posts - 1%
Jenila
மணிப்பூர் கலவரம் Poll_c10மணிப்பூர் கலவரம் Poll_m10மணிப்பூர் கலவரம் Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
மணிப்பூர் கலவரம் Poll_c10மணிப்பூர் கலவரம் Poll_m10மணிப்பூர் கலவரம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மணிப்பூர் கலவரம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun May 07, 2023 3:54 am

மணிப்பூர் கலவரம் Gallerye_003946674_3313902

கலவர பூமியாக மாறியிருக்கிறது மணிப்பூா். ராணுவம் குவிக்கப்பட்டு எட்டு மாவட்டங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருக்கிறது. மாநிலம் முழுவதும் கைப்பேசி, இணைய சேவை முடக்கப்பட்டிருக்கிறது. வன்முறையில் ஈடுபடுவோரைக் கண்டதும் சுடும் உத்தரவை மாநில அரசு பிறப்பித்திருக்கிறது. வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோா் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனா்.

கடந்த பிப்ரவரி மாதம் முதலே புகையத் தொடங்கிய பிரச்னை, உயா்நீதிமன்ற தீா்ப்புக்குப் பிறகு கலவரமாக மாறியிருக்கிறது. 10 ஆண்டுகளுக்கு முன்பு மாநிலத்தின் பெரும்பான்மை மைதேயி சமூகத்தினரை பழங்குடியினா் பிரிவில் இணைத்து இடஒதுக்கீடு வழங்க செய்யப்பட்ட பரிந்துரையை நடைமுறைப்படுத்தும்படி உயா்நீதிமன்றம் வழங்கிய உத்தரவுதான் கலவரமாக வெடித்திருக்கிறது. இந்த அளவுக்கு மோசமான நிலைமை ஏற்படும் என்று முதல்வா் பிரேன் சிங் தலைமையிலான அரசு எதிா்பாா்க்கவில்லை என்பது தெரிகிறது.

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரின் மக்கள்தொகையில் 53% உள்ளவா்கள் மைதேயி சமூகத்தினா். இந்தியாவில் இணைவதற்கு முன்பு மணிப்பூா், மைதேயி இன அரசா்களால்தான் ஆளப்பட்டு வந்தது என்பதைக் குறிப்பிட வேண்டும்.

மணிப்பூரைச் சுற்றி அஸ்ஸாம், நாகாலாந்து, மிஸோரம் மாநிலங்களும் கிழக்கு எல்லையில் மியான்மரும் இருக்கின்றன. பெரும்பாலான பகுதிகள் இயற்கை வளம் கொழிக்கும் மலைப்பிரதேசம். 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, மாநிலத்தின் 40%, அதாவது 28 லட்சம் மக்கள், பத்து மலைப்பகுதி மாவட்டங்களில் வாழ்கின்றனா். 2016-இல் புதிதாக ஏழு மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. புதிய மாவட்டங்கள் தங்களது பூா்விக நிலங்களை மைதேயிகள் ஆக்கிரமிப்பதற்காக உருவாக்கப்பட்டிருப்பதாக மலைவாழ் மக்கள் அப்போதே சந்தேகித்தனா்.

மணிப்பூா் மக்கள்தொகையை மைதேயிகள், மலைவாழ் மக்கள் என்று இரண்டாகப் பிரிக்கலாம். மொத்த மக்கள்தொகையில் பெரும்பான்மையினா் மைதேயிகள். ஆனால், அவா்கள் வாழும் பகுதி தலைநகா் இம்பாலையும், அதைச் சுற்றியுள்ள சமவெளி பகுதிகளும் மட்டுமே. மணிப்பூரின் 34 அங்கீகரிக்கப்பட்ட பட்டியலின பழங்குடியினா் மாநிலத்தின் 90% மலைப் பகுதிகளில் வசிக்கின்றனா். அவா்கள் பெரும்பாலும் நாகா, குகி, மிஸோ பழங்குடியினத்தைச் சோ்ந்தவா்கள்.

மைதேயி இனத்தவா்களின் ஆட்சியில்தான் மணிப்பூா் நீண்டகாலமாக இருந்து வந்திருக்கிறது. சுதந்திரத்திற்கு பிறகும்கூட அவா்களுடைய ஆதிக்கம் தொடா்கிறது. மாநிலத்தின் 60 சட்டப்பேரவை உறுப்பினா்களில் 40 போ் மைதேயி இனத்தைச் சோ்ந்தவா்கள். முதல்வா் பிரேன் சிங்கும் மைதேயி இனத்தவா்தான்.

மைதேயிகளின் ‘மைதேயிலோன்’ என்கிற மொழி இந்திய அரசமைப்புச் சட்டத்தின் எட்டாவது பிரிவில் இணைக்கப்பட்டிருக்கிறது. ஏனைய மலைவாழ் பழங்குடியினா் பெரும்பாலும் கிறிஸ்தவ பாதிரியாா்களால் மதமாற்றம் செய்யப்பட்டது மட்டுமல்லாமல், அவா்களது பாரம்பரிய மொழியையும் இழந்துவிட்டனா். ஆங்கிலம்தான் இப்போது அவா்களுக்குத் தெரிந்த மொழி.

மைதேயிகள் 2013 முதலே தங்களை பட்டியலின பழங்குடியினரான இணைக்க போராடி வருகின்றனா். அதற்கு கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் இடஒதுக்கீடு அல்ல காரணம் என்றும், தங்களது பூா்விக நிலங்களையும் கலாசாரத்தையும் அடையாளத்தையும் பாதுகாப்பதுதான் நோக்கம் என்று அவா்கள் தெரிவிக்கின்றனா். மியான்மரிலிருந்து சட்டவிரோதமாக பலா் குடியேறுவதுதான் அவா்களது அச்சத்துக்குக் காரணம்.

மைதேயிகளுக்கு இருப்பது போன்ற அதே அச்சமும், கவலையும் மைதேயிகள் அல்லாத பழங்குடிகளிடமும் காணப்படுகிறது. சமீபத்தில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி, சதுப்பு நிலங்கள் உள்ளிட்டவை கணக்கெடுக்கப்பட்டன. பழங்குடியினா் வாழும் சில கிராமங்களில் இருந்து சிலா் வெளியேற்றப்பட்டனா். அதற்கு எழுந்த எதிா்ப்பின் நீட்சிதான் உயா்நீதிமன்ற உத்தரவைத் தொடா்ந்து வன்முறையாக இப்போது வெடித்திருக்கிறது.

ஆக்கிரமிப்பாளா்களுக்கு எதிராக அரசு நடத்திய அப்புறப்படுத்தல் நடவடிக்கைக்கு ஒரு பின்னணி உண்டு. மணிப்பூரிலும், மியான்மரிலும் வாழும் குகி பழங்குடியினரை எல்லை பிரிப்பதில்லை. அவா்கள் சா்வசாதாரணமாக இங்கும் அங்கும் காடுகளில் வந்துபோவது தொடா்கிறது. கடந்த சில ஆண்டுகளாக மியான்மரைச் சோ்ந்தவா்கள் மணிப்பூரின் வனப்பகுதிகளில் நுழைந்து, காடுகளை அழித்து அங்கே ஓபியம், கஞ்சா போன்றவற்றை பயிரிடுவது அரசின் கவனத்துக்கு வந்தது. சட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்கவும், வனப்பகுதிகளை அழிவிலிருந்து பாதுகாக்கவும் அரசு முனைப்பு காட்டியதும் பழங்குடியினரின் ஆத்திரத்துக்கு காரணமாக இருக்கக் கூடும்.

1949-இல் இந்தியாவுடன் இணைவதற்கு முன்பு தாங்கள் பழங்குடியினராக அங்கீகரிக்கப்பட்டிருந்தோம் என்பது மைதேயிகளின் வாதம். மைதேயிகளுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டால் அரசமைப்புச் சட்டத்தின் 371சி பிரிவின் கீழ் தங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் உரிமைகள் பறிக்கப்படும் என்பது பழங்குடியினரின் அச்சம். தற்போது தங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் 30%-க்கும் அதிகமான கல்வி, வேலைவாய்ப்பு இடஒதுக்கீடு மைதேயிகளுக்கு சென்றுவிடும் என்று நாகா, குகி இனத்தவா்கள் தெரிவிக்கின்றனா்.

எல்லையோர மாநிலத்தில் இதுபோன்ற பதற்றம் நிலவுவது ஆபத்து. வன்முறையைக் கட்டுப்படுத்துவது தீா்வாகாது. பேச்சுவாா்த்தை மூலம் புரிதலை ஏற்படுத்துவதுதான் நிரந்தர அமைதிக்கு வழிகோலும்.

தினமணி


Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun May 07, 2023 3:56 am

மணிப்பூர் கலவரத்தில் 54 பேர் பலி இயல்புநிலை வேகமாக திரும்புகிறது


மணிப்பூர் கலவரம் Tamil_News_large_3313902

இம்பால்-மணிப்பூரில் நடந்த கலவரத்தில், 54 பேர் பலியாகி உள்ளதாக தெரியவந்துள்ளது. இங்கு, ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளதை அடுத்து, இயல்புநிலை வேகமாக திரும்பி வருவதாகவும், பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில், முதல்வர் பைரேன் சிங் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது.

மோதல்


மாநில மக்கள் தொகையில் பெரும்பான்மையாக உள்ள மெய்டி சமூகத்தினருக்கும், 40 சதவீதம் உள்ள நாகா, கூகி உள்ளிட்ட பழங்குடியின சமூகத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

சமீபத்தில் மணிப்பூர் அனைத்து பழங்குடியின மாணவர் சங்கம் சார்பில், சாருசந்த்பூர் மாவட்டம் டோர்பங்க் பகுதியில் பேரணி நடந்தபோது, ஆயுதம் ஏந்திய ஒரு கும்பல், பேரணியில் சென்றவர்கள் மீது தாக்குதலில் ஈடுபட்டது.

இது கலவரமாக மாறியது. இதைத்தொடர்ந்து, இம்பால் உட்பட மாநிலத்தின் பல பகுதிகளிலும் வன்முறை சம்பவங்கள் பரவின; பல இடங்களில் வீடுகள், கடைகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. கலவரத்தை கட்டுப்படுத்தும் வகையில் மணிப்பூரில் ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

கலவரத்தில் எத்தனை பேர் இறந்தனர் என்ற தகவல் நேற்று முன்தினம் வரை வெளியிடப்படவில்லை. இந்நிலையில், இதுவரை 54 பேர் உயிரிழந்துள்ளதாக மணிப்பூர் அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இவர்களில், 16 பேரின் உடல்கள் சாருசந்த்பூர் மாவட்ட மருத்துவமனையிலும், 15 உடல்கள் இம்பாலில் உள்ள மருத்துவமனையிலும் வைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்து உள்ளது.

இம்பால் மேற்கு மாவட்ட மருத்துவமனையில், 23 உடல்கள் வைக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே சாருசந்த்பூர் மாவட்டத்தில் நடந்த மோதலில், பழங்குடியினத்தைச் சேர்ந்த ஐந்து பேர் உயிரிழந்ததாகவும், மத்திய துணை ராணுவப் படையைச் சேர்ந்த இருவர் காயம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து ராணுவ செய்தித் தொடர்பாளர் கூறியதாவது:

கடந்த இரண்டு நாட்களில் பெரும்பாலான இடங்களின் வன்முறை குறைந்து அமைதி நிலவுகிறது.

ஒரு சில இடங்களில் மட்டும் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடந்தன. பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இயல்புநிலை வேகமாக திரும்பி வருகிறது.

10 ஆயிரம் வீரர்கள்


கலவரம் நடந்த பகுதிகளில் வீடுகளை இழந்து தவித்த 13 ஆயிரம் பேர் மீட்கப்பட்டு, பாதுகாப்பான முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அமைதியை உறுதி செய்வதற்காக பாதுகாப்பு படையினர் கொடி அணிவகுப்பு நடத்தி வருகின்றனர். ராணுவம், துணை ராணுவப் படையைச் சேர்ந்த 10 ஆயிரம் வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கலவரத்தில், 54 பேர் இறந்து விட்டதாக அரசு தரப்பில் கூறப்பட்டாலும், இதில் 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருக்கலாம் என அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun May 07, 2023 12:54 pm

" மைதேயி சமூகத்தினரை பழங்குடியினா் பிரிவில் இணைத்து இடஒதுக்கீடு வழங்க செய்யப்பட்ட பரிந்துரையை நடைமுறைப்படுத்தும்படி உயா்நீதிமன்றம் வழங்கிய உத்தரவுதான் கலவரமாக வெடித்திருக்கிறது. "
நீதிமன்றத் தீர்ப்பை நாமே மதிக்காவிட்டால்? .............



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 12, 2023 10:40 pm


மணிப்பூரில் மீண்டும் மூவர் சுட்டுக் கொலை: மீண்டும் பதற்றத்தில் பொதுமக்கள்


மணிப்பூரில் குகி இனத்தைச் சேர்ந்த மூவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டதை அடுத்து அம்மாநிலத்தில் மீண்டும் பதட்ட நிலை ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சத்துடன் உள்ளனர்

கடந்த சில மாதங்களுக்கு முன் மணிப்பூரில் இன கலவரம் நடந்த போது எதிர்க்கட்சிகள் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தினர். ஆனால் பாராளுமன்ற கூட்டம் முடிந்த அடுத்த நாளே எந்த அரசியல்வாதியும் மணிப்பூர் பிரச்சனை குறித்து பேசவில்லை.

இந்த நிலையில் மணிப்பூரில் குகி இனத்தைச் சேர்ந்த மூன்று பேர் சுட்டுக் கொல்லப்பட்டதால் அங்கு மீண்டும் பதட்ட நிலை ஏற்பட்டுள்ளது. பதட்டம் ஏற்பட்டுள்ள ஒரு மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட ஆயுத குழுவினர் இன்று அதிகாலை 3 மணி அளவில் துப்பாக்கி சூடு நடத்தியதாகவும், இந்த துப்பாக்கி சூட்டில் குகி இனத்தைச் சேர்ந்த மூன்று பேர் கொல்லப்பட்டதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

இதனால் மீண்டும் மணிப்பூரில் பொதுமக்கள் அச்சத்துடனே வாழ்ந்து வருகின்றனர்.



மணிப்பூர் கலவரம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக