புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Today at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Today at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Today at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழக அரசியல் செய்திகள் Poll_c10தமிழக அரசியல் செய்திகள் Poll_m10தமிழக அரசியல் செய்திகள் Poll_c10 
64 Posts - 58%
heezulia
தமிழக அரசியல் செய்திகள் Poll_c10தமிழக அரசியல் செய்திகள் Poll_m10தமிழக அரசியல் செய்திகள் Poll_c10 
41 Posts - 37%
mohamed nizamudeen
தமிழக அரசியல் செய்திகள் Poll_c10தமிழக அரசியல் செய்திகள் Poll_m10தமிழக அரசியல் செய்திகள் Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
தமிழக அரசியல் செய்திகள் Poll_c10தமிழக அரசியல் செய்திகள் Poll_m10தமிழக அரசியல் செய்திகள் Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழக அரசியல் செய்திகள் Poll_c10தமிழக அரசியல் செய்திகள் Poll_m10தமிழக அரசியல் செய்திகள் Poll_c10 
106 Posts - 60%
heezulia
தமிழக அரசியல் செய்திகள் Poll_c10தமிழக அரசியல் செய்திகள் Poll_m10தமிழக அரசியல் செய்திகள் Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
தமிழக அரசியல் செய்திகள் Poll_c10தமிழக அரசியல் செய்திகள் Poll_m10தமிழக அரசியல் செய்திகள் Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
தமிழக அரசியல் செய்திகள் Poll_c10தமிழக அரசியல் செய்திகள் Poll_m10தமிழக அரசியல் செய்திகள் Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழக அரசியல் செய்திகள்


   
   

Page 1 of 13 1, 2, 3 ... 11, 12, 13  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue May 19, 2015 11:16 pm

ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் டிராபிக் ராமசாமி மனு

தமிழக அரசியல் செய்திகள் 201505192025138979_traffic-ramaswamy-challenge-jayalalitha-acquittal_SECVPF
ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு தனிக்கோர்ட்டு விதித்த தண்டனையை ரத்து செய்தும், அவரை விடுதலை செய்தும் கர்நாடக ஐகோர்ட்டு கடந்த 11-ந் தேதி தீர்ப்பு அளித்தது.

இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி  ஒரு மனு தாக்கல் செய்தார்.அதில், கர்நாடக ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பில், ஜெயலலிதா பெற்ற கடன் தொகை பற்றி தவறாகக் கணக்கிடப்பட்டுள்ளது.   இந்த தவறால் சொத்துக்குவிப்பு குறித்த விகிதாச்சாரம் அதிகமாக உள்ளது; இந்த தவறான கணக்கு மற்றும் விகிதாச்சாரத்தினால் அவர் விடுதலை பெறுவதற்கு தகுதியற்றவர்.

அவர் தரப்பில் மேற்கொள்ளப்பட்ட பல முறைகேடான பணப்பரிமாற்றங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. அவருக்கு எதிரான மனுதாரர் தரப்பில் முன்வைக்கப்பட்ட சாட்சியங்களும் கவனத்தில் கொள்ளப்படவில்லை. எனவே ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், கர்நாடக ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.



தமிழக அரசியல் செய்திகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue May 19, 2015 11:17 pm

சுப்பிரமணிய சாமி - டாக்டர் ராமதாசுடன் மு.க. ஸ்டாலின் சந்திப்பு

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் பேரனும் மு.க.தமிழரசு மகனுமான நடிகர் அருள்நிதிக்கும், நீதிபதி கண்ணதாசனின் மகள் கீர்த்தனாவுக்கும் அடுத்த மாதம் 8-ந்தேதி திருமணம் நடைபெறு கிறது.

பொதுச் செயலாளர் அன்பழகன் தலைமையில் நடைபெறும் இந்த திருமண விழாவுக்கு அனைத்து கட்சி தலைவர்களும் அழைக்கப் பட்டு வருகின்றனர்.திருமண அழைப்பிதழை மு.க.ஸ்டாலினும் அவரது சகோதரர் மு.க.தமிழரசும் முக்கிய பிரமுகர்களுக்கு நேரில் சென்று வழங்கி வருகின்றனர்.

இன்று காலை 6.30 மணிக்கு மு.க.ஸ்டாலின் பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமியை, சாந்தோமில் உள்ள வீட்டுக்கு சென்று திருமண அழைப்பிதழை வழங்கினார். அவருடன் மு.க.தமிழரசும் சென்றிருந்தார்.

பா.ம.க. தலைவர் டாக்டர் ராமதாசை சந்திக்க மு.க.ஸ்டாலின், மு.க.தமிழரசு ஆகியோர் இன்று திண்டிவனம் சென்றனர். தைலாபுரம் தோட்டத்தில் டாக்டர் ராமதாசின் வீட்டுக்கு சென்று திருமண அழைப்பிதழை வழங்கி னார்கள். அப்போது பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் செந்தமிழ்செல்வன், கலிவரதன் ஆகியோர் இருந்தனர். அழைப்பிதழை கொடுத்த பிறகு 20 நிமிடம் மு.க.ஸ்டாலினும், டாக்டர் ராமதாசும் பேசிக்கொண்டு இருந்தனர்.



தமிழக அரசியல் செய்திகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue May 19, 2015 11:19 pm

பா.ஜ. தமிழகத்தில் தனித்து போட்டியிட வேண்டும்: சுப்ரமணியன் சுவாமி அட்வைஸ்!

மதுரை: தமிழகத்தில் பா.ஜனதா கட்சி தனித்துப் போட்டியிட வேண்டும் என்றும், போட்டியிட ஆள் இல்லாவிட்டால் என்னுடைய அமைப்பிலிருந்து ஆட்களை தருவேன் என்றும் அக்கட்சித் தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

நேதாஜி பற்றிய மறைக்கப்பட்ட உண்மைகளை மத்திய அரசு வெளியிட வேண்டுமென்று தன்னுடைய வி.ஹெ.எஸ். அமைப்பு மூலம், இன்று மதுரையில் ஆர்ப்பாட்டம் நடத்திய சுப்ரமணியன் சுவாமி. பின்பு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "நேதாஜி பற்றிய உணமைகளை காங்கிரஸ் அரசு வெளியிடாமல் மறைத்தது. மோடி அரசு யோசிக்கிறது, காரணம், அதை வெளியிட்டால் காங்கிரஸ்காரர்கள் ரோட்டில் நடமாடமுடியாது என்பதால். அப்படி மத்திய அரசு வெளியிடவில்லை என்றால், நான் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வேன்.

கணக்கில் மட்டுமல்ல, நீதிபதி குமாராசாமி அளித்த தீர்ப்பில் சொல்லப்பட்ட ஆதாரங்களிலும் தவறு உள்ளது. அது ஒரு தவறான தீர்ப்பு. அதைப்பற்றி குமாரசாமி ஓய்வு பெற்றதும் கேட்பேன். கர்நாடக அரசு அப்பீல் செய்யவில்லை என்றால் நான் அப்பீல் செய்வேன். தற்பொழுது ஜெயலலிதா முதல்வராக ஆவதற்கு தடை ஏதுமில்லை. வருகிற தேர்தலில் தமிழகத்தில் பாஜக தனித்து போட்டியிடவேண்டும், நிற்க கட்சியில் ஆள் இல்லையென்றால் என்னுடைய அமைப்பிலிருந்து ஆட்களை தருவேன்.

ஜெயலலிதாவை மோடி வாழ்த்துவது, அவர் நல்லாட்சி தருபவர் என்று பொன்.ராதாகிருஷ்ணன் புகழ்வதெல்லாம் அவர்களின் சொந்த கருத்து. அப்பீல் செய்வேன் என்று நான் சொல்வதும் என்னுடைய சொந்த கருத்துதான். பாஜகவின் கருத்தல்ல. ஆர்கே நகர் தொகுதியில் ஜெயலலிதா போட்டியிட்டால் அவரை எதிர்த்து சந்திரலேகாவை பொது வேட்பாளராக நிறுத்த அனைத்து கட்சிகளும் முன்வரவேண்டும்" என்றார்.



தமிழக அரசியல் செய்திகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue May 19, 2015 11:19 pm

ஜெ. வழக்கு: வாங்கியது ஒரு ரூபாயாக இருந்தாலும் லஞ்சம் லஞ்சம்தானே...? - கருணாநிதி கேள்வி

சென்னை: 'வாங்கியது ஒரு ரூபாயாக இருந்தாலும், ஒரு கோடி ரூபாயாக இருந்தாலும்; லஞ்சம் லஞ்சம்தான் - ஊழல் ஊழல்தானே!' என்று திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பி உள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நீதிபதி குமாரசாமி, ஜெயலலிதாவின் வருமானத்திற்கு மீறிய சொத்துக்கள் 8 சதவிகிதம்தான் என்றும், எனவே தான் அவர் விடுவிக்கப்படுகிறார் என்றும் தனது தீர்ப்பிலே தெரிவித்திருக்கிறாரே?

நீதிபதி குமாரசாமி, ஜெயலலிதா தரப்பினர் வங்கியிலே வாங்கிய கடன்கள் பத்து கோடி ரூபாயை, 24 கோடி ரூபாய் என்று கணக்கிட்டு, 8 சதவிகிதம்தான் அவர் வருமானத்திற்கு மீறிய சொத்துக்களின் மதிப்பு என்று கூறி ஜெயலலிதாவை விடுதலை செய்திருக்கிறார். கடன்களின் கூட்டுத் தொகை 10 கோடி ரூபாய்தான் என்று சரியாகக் கூறியிருந்தால், ஜெயலலிதாவின் வருமானத்திற்கு மீறிய சொத்து 76 சதவிகிதம் என்பதைப் புரிந்து கொண்டு தண்டனை கொடுத்திருப்பார்!

மேலும் நீதிபதி குமாரசாமி, தனது தீர்ப்பில், ஆந்திர மாநில அரசு, 13-2-1989 அன்று வெளியிட்ட ஒரு உத்தரவில் 20 சதவிகிதம் வரை வருமானத்திற்கு மீறிய சொத்துக்களை அரசு அலுவலர் ஒருவர் வைத்துக் கொள்ளலாம் என்று தெரிவித்திருக்கிறது என்பதை தனது வாதத்திற்கு உதவியாகச் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

நாம் அவரைக் கேட்க விரும்புவதெல்லாம், குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் அனைவரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கும்போது, ஆந்திர மாநில அரசைப்போல தமிழக அரசு அப்படி ஏதாவது ஒரு உத்தரவை எப்போதாவது பிறப்பித்திருக்கிறதா என்பது முக்கியமல்லவா? அப்படியென்றால் எந்தத் தேதியில் அந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது? ஆந்திர மாநில அரசு பிறப்பித்திருக்கும் உத்தரவு, அந்த மாநில அரசு அலுவலர்களுக்குத்தானே பொருந்தும்? அது எவ்வாறு தமிழ்நாட்டு அலுவலர்களுக்குப் பொருந்தும்?

அது மாத்திரமல்ல; சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குவித்த சொத்துக்களின் மதிப்பு பத்து சதவிகிதத்திற்கும் குறைவு என்பதால் ஜெயலலிதாவை வழக்கிலிருந்து விடுவித்து, நீதிபதி குமாரசாமி வழங்கியிருக்கும் தீர்ப்பு, 1977ஆம் ஆண்டில் இருந்த லஞ்ச ஒழிப்புச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டது என்றும், 1977ஆம் ஆண்டின் சட்டம், 1988ஆம் ஆண்டில் ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த போது திருத்தம் செய்யப்பட்டு, நடைமுறைக்கு வந்து விட்டது என்றும், ஆனால் அந்தத் திருத்தச் சட்டத்தில் இந்த 10 சதவிகிதத்திற்கும் குறைவான அளவில் சொத்துக் குவிப்பு இருந்தால், அதனை அலட்சியப் படுத்தி விடலாம் என்று எந்தக் குறிப்பும் இல்லை என்றும் சுப்பிரமணியன் சுவாமி தெளிவுபடுத்தியிருக்கிறார்.

ஆனால் ஜெயலலிதாவின் வருமானத்திற்கு மீறிய சொத்துக் குவிப்பு என்பது 8 சதவிகிதம் அல்ல, 76 சதவிகிதம் என்று நீதிபதி குமாரசாமி தீர்ப்பில் சொல்லியிருக்கும் புள்ளி விவரங்களே தெரிவிக்கின்றன.

இதற்கெல்லாம் பதில் என்ன என்பது உச்ச நீதிமன்றத்திலேதான் தெரிய வரும். எந்த ஆண்டில் லஞ்சம் பெற்றிருந்தாலும், எந்தச் சட்டத்தின்படி அது குற்றம் என்றாலும், வாங்கியது ஒரு ரூபாயாக இருந்தாலும், ஒரு கோடி ரூபாயாக இருந்தாலும்; லஞ்சம் லஞ்சம்தான் - ஊழல் ஊழல்தான்" எனக் கூறியுள்ளார்.



தமிழக அரசியல் செய்திகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue May 19, 2015 11:20 pm

ஜெயலலிதாவை சந்திப்பீர்களா? ராமதாசை சந்தித்த பின் ஸ்டாலின் பதில்!

சென்னை: பாமக நிறுவனர் ராமதாசை சந்தித்ததுபோல், ஜெயலலிதாவை சந்திப்பீர்களா என்ற கேள்விக்கு பதில் அளித்த ஸ்டாலின், "முதலில் ஜெயலிதா தன் கட்சிக்காரர்களை சந்திக்கட்டும் பிறகு அவரை சந்தித்து திருமண அழைப்பிதழ் கொடுப்பது பற்றி யோசிக்கலாம்" என தெரிவித்தார்.

தனது சகோதரர் மகன் அருள்நிதியின் திருமணத்திற்காக அ.தி.மு.க.வை தவிர்த்து தமிழகத்தின் அனைத்து பிரதான கட்சித் தலைவர்களையும் தி.மு.க பொருளாளர் மு.க.ஸ்டாலின் சந்தித்து வருகிறார்.

இந்நிலையில், இந்நிலையில் இன்று காலை காலை 10.45 மணிக்கு திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் உள்ள பாமக நிறுவனர் ராமதாசின் இல்லத்துக்கு திமுக பொருளாளர் ஸ்டாலின் முதன் முறையாக வந்தார். ஸ்டாலினை வாசலுக்கே வந்து ராமதாஸ் வரவேற்றார். பின்னர் தன் சகோதரர் மகன் திருமண அழைப்பிதழை ராமதாசிடம் அளித்துவிட்டு, திருமணத்திற்கு கட்டாயம் வருமாறு அழைப்பு விடுத்தார் ஸ்டாலின்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், "வடநாட்டில் நிலவும் அரசியலுக்கு அப்பாற்பட்ட பண்பாட்டை தமிழகத்தில் கொண்டுவர வேண்டும் என்ற உயரிய நோக்கத்தின் அடிப்படையில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் தலைவர்களையும் சந்தித்து அழைத்து வருகிறோம்" என்றார்.

தமிழகத்தில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் திமுக போட்டியிடுமா என்ற கேள்விக்கு "முதலில் தேர்தல் ஆணையம் இடைத்தேர்தல் தேதியை அறிவிக்கட்டும். அதன் பின்னர் திமுக உயர்மட்ட குழு கூடி தேர்தலில் போட்டியிடுவது குறித்து முடிவெடுக்கும்" என கூறினார்.

முன்னாள் முதல்வருக்கும் நேரில் திருமண அழைப்பிதழ் கொடுப்பீர்களா என்ற கேள்விக்கு "முன்னாள் முதல்வரா? மக்கள் முதல்வரா? என திருப்பி கேட்டுவிட்டு முதலில் அவர் தன் கட்சிக்காரர்களை சந்திக்கட்டும். பிறகு யோசிக்கலாம்" என்றார்.



தமிழக அரசியல் செய்திகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue May 19, 2015 11:20 pm

முதல்வர் படத்துக்கு தடை: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மறுசீராய்வு மனு!

புதுடெல்லி: அரசு விளம்பரங்களில் முதல்வர் படங்களை பிரசுரிக்க கூடாது என்று உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மறுசீராய்வு செய்யக் கோரி தமிழக அரசு மனுத் தாக்கல் செய்துள்ளது.

அரசு விளம்பரங்களில் பிரதமர், குடியரசுத் தலைவர் மற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி படங்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்றும், மாநில முதல்வர்கள் படங்களை பிரசுரிக்க கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்தது.

உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு தமிழகத்தில் அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

இந்நிலையில், அரசு விளம்பரம் குறித்து பிறப்பித்த உத்தரவை மனுசீராய்வு செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு இன்று மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

அதில், "மத்தியில் பிரதமர் செயல்படுவது போல் மாநிலத்தில் முதல்வர்கள் செயல்படுகிறார்கள். மாநில அரசின் திட்டங்கள் அனைத்தையும் முதல்வரே செயல்படுத்துகிறார். பிரதமர் படம் இடம்பெறுவது போல் முதல்வர் படமும் இடம் பெற வேண்டும் "என்று கூறப்பட்டுள்ளது.



தமிழக அரசியல் செய்திகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue May 19, 2015 11:21 pm

ஜெ. பதவியேற்பு: புதிய தகவல்!

ஒரு வழியாக தனது போயஸ்கார்டன் வீட்டைவிட்டு, வருகிற 22-ம் தேதி தாரை தப்பட்டை முழங்க பவனி வர உள்ளார் ஜெயலலிதா. பெங்களுரு கோர்ட் தீர்ப்புக்கு பின்னர், ஜெயலலிதா தனது ஒவ்வொரு நடவடிக்கையையும், பிரபல ஜோதிடரின் ஆலோசைனைக்குப் பின்னரே முடிவு எடுக்கிறார் என்கிறார்கள்.

கருணாநிதி வசிக்கும் ஆயிரம் விளக்கு தொகுதியில் நின்று வென்று காட்ட வேண்டும் என்பதுதான் முதலில் ஜெயலலிதாவின் எண்ணமாக இருந்ததாம். 'பெருமாள் பெயர் கொண்ட சட்டமன்ற தொகுதியில் நின்றால் நன்று' என்று ஜோதிடர் ஆரூடம் சொன்னதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஜெயலலிதாவிடம் உரிமையாக பேசக்கூடிய ஒருசிலர் ஶ்ரீரங்கம் தொகுதியை கோடிட்டுக் காட்டினர். அப்போது ஜெயலலிதா, ஜோதிடர் முகத்தை பார்க்க, அவர் காட்டிய திசைதான் ராதாகிருஷ்ணன் நகர் என கூறப்படுகிறது.

நிறைந்த அமாவாசை தினத்தில் போட்டியிடும் தொகுதியை அறிவித்தால் அமோகம், சுபிட்சம் என்று ஜோதிடர் சொன்னதறகு ஏற்ப, அன்றைக்கே ராதா கிருஷ்ணன் நகர் சட்டமன்ற உறுப்பினர் வெற்றிவேலை போயஸ்கார்டன் வரச்சொல்லி ராஜினாமா செய்யச் சொல்லினர். அதே அமாவாசை தினத்தில் ஆர்.கே நகர் தொகுதி ராஜினாமா அறிவிப்பு வெளியானது.

இந்நிலையில், வரும் 22-ம்தேதி காலையில் முதலில் சென்னை அண்ணாசாலையில் ஸ்பென்சர் அருகில் இருக்கும் எம்.ஜி.ஆர் சிலைக்கு ஜெ மாலை அணிவிக்கிறார். அடுத்து எம்.ஜி.ஆர் நிறுவிய அண்ணாசாலை அண்ணா சிலைக்கு மாலை மரியாதை. அதன்பின் பெரியார் சிலைக்கு மலர் தூவுகிறார்.

பின்னர் லாயிட்ஸ் சாலை அலுவலகத்திற்கு வரும் அவர், அங்கு சட்டமன்ற அதிமுக உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்துகொள்கிறார். அதன் பின் ராஜ்பவன் மாளிகைக்கு சென்று கவர்னர் ரோசய்யாவை சந்திக்கிறார். அப்போது பதவியேற்பு சம்பந்தமான ஆவணங்களை வழங்குவார் என்றும், அதனைத் தொடர்ந்து அன்றைய தினமே அவர் தமிழகத்தின் முதலமைச்சராக பதவியேற்பார் என்றும், அதற்கு ஏதுவாக தற்போதைய முதலமைச்சரான ஓ. பன்னீர் செல்வம் முன்னதாகவே ராஜினாமா செய்வார் என்றும் தகவல் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் ஜெயலலிதா பதவியேற்பு தினத்தில் மட்டும் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், 22 க்கு பதிலாக 23 ஆம் தேதி சனிக்கிழமையன்று சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா கட்டடத்தில் ஜெயலலிதா பதவி ஏற்பார் என்றும் தற்போது தகவல் வெளியாகி உள்ளது. அதே சமயம், இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் அறிவிக்கப்படவில்லை.



தமிழக அரசியல் செய்திகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue May 19, 2015 11:21 pm

சந்திப்புக்குப் பின் ஸ்டாலினை பாராட்டிய சுப்பிரமணியன் சுவாமி!

சென்னை: திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், பாஜக மூத் தலைவர் சுப்பிரமணியன் சுவாமியை சந்தித்து பேசினார். அப்போது, "ஸ்டாலின் அனைத்து கட்சிகளையும் அரவணைத்து செல்வது அவரது பக்குவத்தை காட்டுகிறது" என்று சுப்பிரமணிய சுவாமி பாராட்டினார்.

தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் தனது சகோதரர் மகன் திருமணத்திற்காக, முக்கிய அரசியல் தலைவர்களை சந்தித்து அழைப்பிதழ் கொடுத்து வருகிறார்.


இந்நிலையில், சென்னை சாந்தோமில் உள்ள பா.ஜ. தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி வீட்டிற்கு சென்று அவரை சந்தித்து, தமது சகோதரர் மு.க.தமிழரசுவின் மகன் அருள்நிதியின் திருமண அழைப்பிதழை வழங்கினார்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின்,''ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு மேல்முறையீடு பற்றி சுப்பிரமணியன் சுவாமியிடம் எதுவும் பேசவில்லை. அது பற்றி நீங்களே அவரிடமே கேட்டுக் கொள்ளுங்கள்.

ஜெயலலிதா வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என்று கர்நாடக அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா கூறி இருக்கிறார். ஜெயலலிதாவின் வழக்கு உச்ச நீதிமன்றத்திற்கு போனால்தான் உண்மையான நிலை, நாட்டு மக்களுக்கு தெரியவரும்.

கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்ய வேண்டும் என்று தலைவர் கலைஞர் ஏற்கனவே சொல்லி உள்ளார். அதுதான் எங்கள் நிலைப்பாடு அதைத்தான் நாங்கள் விரும்புகிறோம்" எனறார்ர

அதன்பின் சுப்பிரமணியன் சுவாமி செய்தியாளர்களிடம் கூறும்போது, ''மு.க.ஸ்டாலின் வீட்டுக்கு வந்து என்னை சந்தித்தது ஆரோக்கியமான விஷயம். ஸ்டாலின் அனைத்து கட்சிகளையும் அரவணைத்து செல்வது அவரது பக்குவத்தை காட்டுகிறது. ஜனநாயகத்தில் எதிரும் புதிருமாக உள்ள தலைவர்கள் சந்திப்பது புதிதல்ல.

வடநாட்டில் லாலு பிரசாத் யாதவ், முலாயம் சிங் வீட்டு திருமணங்களில் பல கட்சி தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். அதேபோல், தென் மாநிலத்தில் அரசியல் தலைவர்களை மு.க.ஸ்டாலின் சந்திக்கும் முயற்சி வரவேற்கதக்கது. இதற்காக அவரை நான் பாராட்டுகிறேன்.

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டாலும், உச்ச நீதிமன்றத்தில் இதை எதிர்த்து கர்நாடக அரசு கண்டிப்பாக அப்பீல் செய்ய வேண்டும். அப்படி கர்நாடக அரசு அப்பீலுக்கு போகாத பட்சத்தில் நான் அப்பீல் செய்வேன்.

நாங்கள் பொதுவாக இந்துத்துவா கொள்கை உடைய பார்ட்டி. இந்துத்துவா மறுமலர்ச்சிக்காக பாடுபடும் இயக்கம். தி.மு.க.வும், பா.ஜ.க.வும் கொள்கையில் ஒரே நிலைப்பாட்டில் கிடையாது. அதனால், கூட்டணி பற்றி நான் எதுவும் சொல்ல முடியாது.

தமிழக மீனவர்கள் பிரச்னையில் பிரதமர் மோடிக்கு ஜெயலலிதா அடிக்கடி கடிதம் எழுதி குறைசொல்லி வந்தார். என்னையும் குறை கூறி எழுதி இருந்தார். மோடி ஒன்றும் பள்ளி பிரின்சிபல் கிடையாது. நானும் மாணவன் இல்லை. ஜெயலலிதாவின் கடிதம் கோபத்தைதான் ஏற்படுத்தியது" என்றார்.



தமிழக அரசியல் செய்திகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue May 19, 2015 11:22 pm

அரசியல் கட்சிகளை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கொண்டு வர வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

அரசியல் கட்சிகளை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கொண்டு வரவேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஜனநாயக சீர்திருத்த சங்கத்தின் நிறுவன உறுப்பினரும் பேராசிரியருமான ஜெகதீப் எஸ். சோசோகர் மற்றும் தகவல் அறியும் உரிமை ஆர்வலர் சுபாஷ் சந்திர அகர்வால், ஆகியோர் பிரபல வழக்கறிஞர் பிரசாஷ் பூஷன் மூலம்,அரசியல் கட்சிகள் வெளிப்படத்தை தன்மையை கடைபிடிக்க வேண்டும் என கோரி உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர்.

இந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:- தேசிய மற்றும் பிரந்திய கட்சிகளின் நடவடிக்கைகளில் வெளிப்படைத்தன்மை கொண்டு வருவதற்காக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அரசியல் கட்சிகளை கொண்டு வரவேண்டும். கார்பரேட் நிறுவனங்கள், நன்கொடைகள், அறக்கட்டளைகள் மூலம் அரசியல் கட்சிகள் பெருமளவில் பணம் பெறுகின்றன. ஆனால், பெறும் நன்கொடைகள் குறித்து முழு தகவலையும் வெளியிட அரசியல் கட்சிகள் மறுக்கின்றன. எனவே தேர்தல் ஆணையத்தால் அங்கீரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் தங்கள் நன்கொடைகள் மற்றும் செலவீனங்களில் வெளிப்படைத்தன்மை கடைபிடிக்க வேண்டும் என்று உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த மனு விரைவில் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது.



தமிழக அரசியல் செய்திகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue May 19, 2015 11:24 pm

7 மாதங்களுக்குப் பிறகு வெளியே வரும் ஜெ... மே 22-ல் தலைவர்கள் சிலைக்கு மரியாதை!

சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைக்குப் போய் ஜாமீனில் வெளிவந்தது முதல் போயஸ் தோட்டத்தை விட்டு வெளியே வராமல் இருந்த அண்ணா தி.மு.க. பொதுச்செயலர் மே 22-ந் தேதியன்று முதல் முறையாக பொதுநிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். அன்றைய தினம் தலைவர்கள் சிலைக்கு ஜெயலலிதா மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளார்.

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ந் தேதியன்று ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனையை விதித்தது பெங்களூரு சிறப்பு நீதிமன்றம். இதனைத் தொடர்ந்து பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார் ஜெயலலிதா.

21 நாட்கள் சிறையில் இருந்த ஜெயலலிதா பின்னர் ஜாமீனில் வெளிவந்தார். ஜாமீனில் விடுதலையாகி சென்னை வந்த பின்னர் கடந்த 7 மாதங்களாக போயஸ் தோட்டத்து வீட்டை விட்டு அவர் வெளியேறியதே இல்லை. அண்மையில் சொத்து குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்ட பின்னர்தான் போயஸ் தோட்டத்தில் கடந்த சில நாட்களாக முதல்வர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோரையும் ஜெயலலித நேரில் சந்தித்து பேசி வருகிறார்.

ஜெயலலிதாவை விடுதலை செய்து நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பதால் அவர் மீண்டும் தமிழக முதல்வராக பதவியேற்க இருக்கிறார். இதன் முதல் கட்டமாக மே 22-ந் தேதியன்று காலை 7 மணிக்கு அண்ணா தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் அண்ணா தி.மு.க. சட்டசபை கட்சித் தலைவராக ஜெயலலிதா தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார். இதன் பின்னர் ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க ஜெயலலிதா உரிமை கோருகிறார்.

மே 22-ந் தேதியன்றே ஜெயலலிதா பதவியேற்பாரா? அல்லது மே 23-ந் தேதி பதவியேற்பாரா என்பது இன்னமும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இந்த நிலையில் அண்ணா தி.மு.க தலைமைக் கழகம் இன்று வெளியிட்ட அறிக்கையில், மே 22-ந் தேதியன்று பகல் 2 மணியளவில் சென்னையில் பெரியார், அண்ணா மற்றும் எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு ஜெயலலிதா மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது மே 22-ந் தேதி காலை எம்.எல்.ஏக்கள் கூட்டம் முடிந்த கையோடு முதல்வராக பதவியேற்ற பின்னர் தலைவர் சிலைகளுக்கு ஜெயலலிதா மலர் தூவி மரியாதை செலுத்துகிறாரா? அல்லது மே 23-ந் தேதி பதவியேற்பதை ஒட்டி முன்னதாக தலைவர்கள் சிலைக்கு அவர் மரியாதை செலுத்துகிறாரா என்பது தெரிவிக்கப்படவில்லை.



தமிழக அரசியல் செய்திகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 1 of 13 1, 2, 3 ... 11, 12, 13  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக