புதிய பதிவுகள்
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by ayyasamy ram Today at 9:33 pm

» சினிமா பக்கம்
by ayyasamy ram Today at 9:27 pm

» படித்ததில் பிடித்த கவிதைகள் -தொடர்பதிவு
by ayyasamy ram Today at 8:47 pm

» 435 நூல்களை எளிதில் தரவிறக்க
by TI Buhari Today at 1:02 pm

» கருத்துப்படம் 24/09/2023
by mohamed nizamudeen Today at 9:35 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» அக்கவுண்டில் விழுந்த ரூ.9000 கோடி யார் பணம்? சைபர் க்ரைமில் புகார்.
by T.N.Balasubramanian Yesterday at 9:11 pm

» நாவல்கள் வேண்டும்
by TI Buhari Yesterday at 6:33 pm

» நாவல்கள் வேண்டும்..
by Karthikakulanthaivel Yesterday at 2:19 pm

» வாழ்க்கையில் பக்குவம் கிடைப்பது அவ்வளவு எளிதல்ல!
by Anthony raj Yesterday at 12:51 pm

» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by ayyasamy ram Yesterday at 12:17 pm

» ஆஹா 50 -டிப்ஸ் (மங்கையர் மலர்)
by ayyasamy ram Yesterday at 11:56 am

» <b>சுமார் 100க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள்</b>
by TI Buhari Yesterday at 10:12 am

» இணையத்திலேயே பயனுள்ள எழுத்துகளை வாசிக்க
by TI Buhari Yesterday at 9:54 am

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by ayyasamy ram Fri Sep 22, 2023 10:22 pm

» நகைச்சுவை தோரணங்கள்
by ayyasamy ram Fri Sep 22, 2023 8:01 pm

» இன்பம் பொங்கும் பாடலை அமைதியாக ஆறுதலாக அள்ளி தந்த PB ஸ்ரீநிவாஸின் பிறந்தநாள்
by ayyasamy ram Fri Sep 22, 2023 7:36 pm

» நட்டியின் ‘வெப்’ திரைப்படம் -விமர்சனம்
by ayyasamy ram Fri Sep 22, 2023 7:12 pm

» மண்ணெண்ணெய் விளக்கில் படிக்கும் மாணவி.. "வெளிச்சமாய்" தோன்றிய கலெக்டர்
by T.N.Balasubramanian Fri Sep 22, 2023 7:11 pm

» பாடலாசிரியர் வாலி அவர்களின் நினைவு தினம்
by heezulia Fri Sep 22, 2023 2:33 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 22, 2023 12:41 pm

» பெற்ற தாயையே திகைக்க வைத்த சிவாஜி
by ayyasamy ram Fri Sep 22, 2023 12:39 pm

» ஆதித்யா எல்1: சூரியனை ஆராய இஸ்ரோ அனுப்பும் விண்கலம்
by T.N.Balasubramanian Thu Sep 21, 2023 4:53 pm

» வலையில் வசீகரித்தது
by ayyasamy ram Thu Sep 21, 2023 4:22 pm

» சமையல் குறிப்புகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 21, 2023 4:20 pm

» இளைஞர்களுக்கு சமந்தா அறிவுரை
by ayyasamy ram Thu Sep 21, 2023 4:02 pm

» படித்ததில் பிடித்த கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 21, 2023 3:56 pm

» துடிக்கும் கரங்கள் – விமர்சனம்
by ayyasamy ram Thu Sep 21, 2023 3:54 pm

» ஆன்மீக தகவல்கள்
by ayyasamy ram Thu Sep 21, 2023 3:48 pm

» புத்தகம் தேவை
by ரேவதி2023 Thu Sep 21, 2023 10:42 am

» ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரம் பாடல் – 22
by ayyasamy ram Thu Sep 21, 2023 7:27 am

» பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்கள் எழுதிய சுமார் 450 நூற்களின் பட்டியல்
by TI Buhari Thu Sep 21, 2023 12:22 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed Sep 20, 2023 11:21 pm

» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Wed Sep 20, 2023 8:29 pm

» இப்படித்தான் சமைக்க வேண்டும் கீரைகளை!
by ayyasamy ram Wed Sep 20, 2023 8:13 pm

» கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Sep 20, 2023 8:11 pm

» தலைமுறை தலை நிமிர்ந்து நடக்கும்!. - கவிதை
by T.N.Balasubramanian Wed Sep 20, 2023 6:39 pm

» இல்லாத ஒன்றுக்கு ஏக்கம் எதற்கு?
by ayyasamy ram Wed Sep 20, 2023 3:34 pm

» மகளிர் இடஒதுக்கீடு மசோதா -அமுல் படுத்த ஆறு ஆண்டுகள் ஆகும்!
by ayyasamy ram Wed Sep 20, 2023 2:06 pm

» வாழ்த்தலாம் திரு அய்யாசாமி அவர்களை.
by ayyasamy ram Wed Sep 20, 2023 2:03 pm

» இலவசங்கள் பெற்று ஏமாறும் மக்கள்.
by T.N.Balasubramanian Wed Sep 20, 2023 11:29 am

» ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
by nandhini14 Tue Sep 19, 2023 11:02 pm

» புத்தகம் வேண்டும்
by prajai Tue Sep 19, 2023 10:28 pm

» ‘என் உயிர் தோழன்’ பாபு உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார்.
by ayyasamy ram Tue Sep 19, 2023 6:35 pm

» Dr ரேணுகா ராமகிருஷ்ணன்,
by ayyasamy ram Tue Sep 19, 2023 5:56 pm

» பதினைந்தாம் ஆண்டு நிறைவு நாள் ஈகரைக்கு இன்னும் சிறிது நேரத்தில்
by ayyasamy ram Tue Sep 19, 2023 5:43 pm

» எது வந்தால் எது போகும்- விதுர நீதி
by Anthony raj Tue Sep 19, 2023 4:10 pm

» சரணிகா தேவி நாவல்
by Saravananj Mon Sep 18, 2023 9:57 pm

» வரலாற்றின் இன்று -செப்டம்பர் 18
by T.N.Balasubramanian Mon Sep 18, 2023 6:18 pm

» இன்று விநாயக சதுர்த்தி
by T.N.Balasubramanian Mon Sep 18, 2023 6:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறுகதை - அன்புள்ள மான்விழியே Poll_c10சிறுகதை - அன்புள்ள மான்விழியே Poll_m10சிறுகதை - அன்புள்ள மான்விழியே Poll_c10 
86 Posts - 54%
T.N.Balasubramanian
சிறுகதை - அன்புள்ள மான்விழியே Poll_c10சிறுகதை - அன்புள்ள மான்விழியே Poll_m10சிறுகதை - அன்புள்ள மான்விழியே Poll_c10 
27 Posts - 17%
TI Buhari
சிறுகதை - அன்புள்ள மான்விழியே Poll_c10சிறுகதை - அன்புள்ள மான்விழியே Poll_m10சிறுகதை - அன்புள்ள மான்விழியே Poll_c10 
9 Posts - 6%
Anthony raj
சிறுகதை - அன்புள்ள மான்விழியே Poll_c10சிறுகதை - அன்புள்ள மான்விழியே Poll_m10சிறுகதை - அன்புள்ள மான்விழியே Poll_c10 
7 Posts - 4%
heezulia
சிறுகதை - அன்புள்ள மான்விழியே Poll_c10சிறுகதை - அன்புள்ள மான்விழியே Poll_m10சிறுகதை - அன்புள்ள மான்விழியே Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
சிறுகதை - அன்புள்ள மான்விழியே Poll_c10சிறுகதை - அன்புள்ள மான்விழியே Poll_m10சிறுகதை - அன்புள்ள மான்விழியே Poll_c10 
6 Posts - 4%
prajai
சிறுகதை - அன்புள்ள மான்விழியே Poll_c10சிறுகதை - அன்புள்ள மான்விழியே Poll_m10சிறுகதை - அன்புள்ள மான்விழியே Poll_c10 
5 Posts - 3%
coderthiyagarajan1980
சிறுகதை - அன்புள்ள மான்விழியே Poll_c10சிறுகதை - அன்புள்ள மான்விழியே Poll_m10சிறுகதை - அன்புள்ள மான்விழியே Poll_c10 
5 Posts - 3%
ரேவதி2023
சிறுகதை - அன்புள்ள மான்விழியே Poll_c10சிறுகதை - அன்புள்ள மான்விழியே Poll_m10சிறுகதை - அன்புள்ள மான்விழியே Poll_c10 
3 Posts - 2%
manikavi
சிறுகதை - அன்புள்ள மான்விழியே Poll_c10சிறுகதை - அன்புள்ள மான்விழியே Poll_m10சிறுகதை - அன்புள்ள மான்விழியே Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
சிவா
சிறுகதை - அன்புள்ள மான்விழியே Poll_c10சிறுகதை - அன்புள்ள மான்விழியே Poll_m10சிறுகதை - அன்புள்ள மான்விழியே Poll_c10 
188 Posts - 32%
ayyasamy ram
சிறுகதை - அன்புள்ள மான்விழியே Poll_c10சிறுகதை - அன்புள்ள மான்விழியே Poll_m10சிறுகதை - அன்புள்ள மான்விழியே Poll_c10 
152 Posts - 26%
T.N.Balasubramanian
சிறுகதை - அன்புள்ள மான்விழியே Poll_c10சிறுகதை - அன்புள்ள மான்விழியே Poll_m10சிறுகதை - அன்புள்ள மான்விழியே Poll_c10 
97 Posts - 16%
Anthony raj
சிறுகதை - அன்புள்ள மான்விழியே Poll_c10சிறுகதை - அன்புள்ள மான்விழியே Poll_m10சிறுகதை - அன்புள்ள மான்விழியே Poll_c10 
57 Posts - 10%
heezulia
சிறுகதை - அன்புள்ள மான்விழியே Poll_c10சிறுகதை - அன்புள்ள மான்விழியே Poll_m10சிறுகதை - அன்புள்ள மான்விழியே Poll_c10 
38 Posts - 6%
mohamed nizamudeen
சிறுகதை - அன்புள்ள மான்விழியே Poll_c10சிறுகதை - அன்புள்ள மான்விழியே Poll_m10சிறுகதை - அன்புள்ள மான்விழியே Poll_c10 
23 Posts - 4%
prajai
சிறுகதை - அன்புள்ள மான்விழியே Poll_c10சிறுகதை - அன்புள்ள மான்விழியே Poll_m10சிறுகதை - அன்புள்ள மான்விழியே Poll_c10 
13 Posts - 2%
TI Buhari
சிறுகதை - அன்புள்ள மான்விழியே Poll_c10சிறுகதை - அன்புள்ள மான்விழியே Poll_m10சிறுகதை - அன்புள்ள மான்விழியே Poll_c10 
9 Posts - 2%
manikavi
சிறுகதை - அன்புள்ள மான்விழியே Poll_c10சிறுகதை - அன்புள்ள மான்விழியே Poll_m10சிறுகதை - அன்புள்ள மான்விழியே Poll_c10 
8 Posts - 1%
coderthiyagarajan1980
சிறுகதை - அன்புள்ள மான்விழியே Poll_c10சிறுகதை - அன்புள்ள மான்விழியே Poll_m10சிறுகதை - அன்புள்ள மான்விழியே Poll_c10 
8 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறுகதை - அன்புள்ள மான்விழியே

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91237
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 29, 2023 8:51 pm

சிறுகதை - அன்புள்ள மான்விழியே XXWDR1w

அந்தக் கடிதம் இப்படித் துவங்கியிருந்தது. கடிதம் என்றால் மின்னஞ்சல்தான். பொடிசான ஃபான்ட்களில் மிக மரியாதையாகத் துவங்கியிருந்தது.

‘ஐயன்மீர்!

வணக்கம். வந்தனம். நமஸ்தே என்றெல்லாம் சொல்ல முடியாமல் நானொரு திடீர் சிக்கலில் சிக்கியிருக்கிறேன். நீங்கள் மனது வைத்தால் என்னை குணப்படுத்தி விடலாம்.

எமோஷனல் டிரைனிங் பற்றி நீங்கள் எழுதிய ஆய்வுக்கட்டுரைகளை வாசித்திருக்கிறேன். நானொரு ஐடி புரொஃபஷனல். என்னை எனக்கே பிடிக்காத நிலைக்கு வந்திருக்கிறேன்.

ஒவ்வொரு நாளும் லாப்டாப்பை திறந்து பார்க்கும்போது என் கைகள் நடுங்குவதில்லை. ஆனால், என் மனம் நடுங்குவதை நான் உணர்கிறேன். எப்போதாவது மீட்டிங்குகளில் யாராவது இந்த டெக் உலகிலிருந்து எனக்கு ஒரு உடனடி விடுதலை தரமாட்டார்களா என்றெல்லாம் ஏங்கிப்போய் ஒவ்வொரு முகமாக பார்த்துக் கொண்டிருந்திருக்கிறேன்.நான் ஆசையாக வாங்கி வைத்திருக்கும் கிடாரில் விரல்களை வைக்கும்போது மறுபடியூம் மனம் நடுங்குவதை நான் உணர்கிறேன். என்னை நீங்கள்தான் காப்பாற்ற முடியும். உங்களது பதிலுக்காக நான்
காத்திருக்கிறேன்.

இப்படிக்குஅபிமன்யு’
- என்று அந்த மின்னஞ்சல் முடிந்திருந்தது.

‘அன்புள்ள அபிமன்யு. உங்களது பெயரைப் போல டெக் உலகில் நுழைந்து விட்ட உங்களால் அங்கே உள்ள அழுத்தத்திலிருந்து விடுபட இயலாமல் தவித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பது புரிகிறது. இங்கே உங்களுக்கு ஒரு மனோதத்துவ நிபுணனாக வழக்கமாக தரப்போகிற எவ்வித அறிவுரையையும் ஆலோசனையையும் நான் தரப்போவதில்லை.

நான் சொல்லப்போவது இந்த சினிமாக்களில் (சினிமா பார்ப்பீர்கள்தானே) வெண்ணிறஆடை மூர்த்தி என்ற நடிகர் ‘சப்ஜாடாக’ என்றொரு வார்த்தையை உதிர்த்து பிஹிர்ர்ர் என்று சிரிப்பாரே... அதேபோன்ற ஒரு சப்ஜாடான அறிவுரையைத்தான் தரப்போகிறேன்.

சிட்னி ஷெல்டன்கூட இதுபோன்ற ஒரு விஷயத்தை ஒரு நாவலில் எழுதியிருக்கிறார். நீங்கள் ஏன் யாராவது ஒரு பெண்ணிடம் செக்ஸ் வைத்துக்கொள்ளக் கூடாது? யாராவது என்றால் ஒரு காதலி... அல்லது உங்கள் ஆபீஸில் வேலை செய்யும் துடிப்பான துணிச்சலான பெண் அல்லது திண்டர் போன்ற சைட்டுகளில் கிடைக்கக்கூடிய யாராவது ஒரு பெண்.

அப்படி யாரும் கிடைக்கவில்லையென்றால் ஒரு கால்கேர்ள்... ஒரு மனோதத்துவ நிபுணனாக நான் இப்படி சொல்லக்கூடாது. ஆனால், உங்களது பிரச்சனைக்கு வடிகால் முக்கியம். அதனால்தான் சொல்கிறேன். யோசித்துப் பாருங்கள். யோசித்துச் செய்யுங்கள்.’

‘அன்புள்ள டாக்டர். நீங்கள் மிகவும் பரிவானவர். என் அப்பா இருந்திருந்தால் கூட இப்படித்தான் சொல்லியிருப்பார் என நினைக்கிறேன். சின்ன வயதிலிருந்தே பெண்கள் என் வாழ்வில் வந்து போனதில்லை. நான் தனியாகவே இத்தனை நாளும் இருந்திருக்கிறேன். என்ன ஒரு வேஸ்ட்டான ஆசாமி நான். அவனவன் எப்படி எப்படியெல்லாமோ செய்துகொண்டிருக்கையில் நான் மட்டும் கர்ம சிரத்தையாக கம்ப்யூட்டரில் வேலை செய்து கொண்டிருந்திருக்கிறேன்.நானெல்லாம் வாழத் தகுதியே இல்லாதவன். அதனால் நான் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன் என்றுதான் இந்தக் கடிதத்தை எழுதியிருந்திருக்க வேண்டும். நான் தற்கொலை செய்துகொள்ளச் சென்றபோது ஒரு பெண்ணைச் சந்தித்தேன். அவளும் என்னைப் போலவே ப்ரொஃபஷனல் டிரைனிங் காரணமாக செத்துப் போக விரும்பி வந்திருந்தாள்.

நாங்கள் சந்தித்த இடம் ஒரு ரிசார்ட். அந்தக் கணமே நாங்கள் இருவருமே யோசித்தோம், ஏன் செத்துப் போவதற்குள் நீங்கள் சொன்ன மாதிரி அந்த கெட்ட சமாச்சாரத்தை... ச்சே.. அந்த நல்ல சமாச்சாரத்தை செய்து விட்டு செத்துப் போகக்கூடாது என்று. அதன்படியே நான் அவளையும் அவள் என்னையும் நாங்கள் எங்களையும் அலசி ஆராய்ந்தபோது எத்தனை இரவுகள் என்ற கணக்கே தெரியாமல் நாட்கள் ஓடிக் கொண்டிருந்தன. அப்புறம்தான் அது நிகழ்ந்தது. அது என்ன என்று அறிய விருப்பமாக இருக்கிறதா டாக்டர்?’

‘நல்லது அபிமன்யு. உனது பிரச்னை ஏறக்குறைய தீர்ந்துவிட்டிருக்கும் என்றே நினைக்கிறேன். கடவுளோ அல்லது வேறு யாருமோ இந்த உலகில் ஆண்களையும் பெண்களையும் காரணமில்லாமல் படைத்திருக்க மாட்டார்கள். அதனால் உனக்கு விருப்பமிருந்தால் அவளை நீ கல்யாணம் பண்ணிக்கொள்ளலாம். அல்லது லிவ் இன்னில் தொடர்ந்து கலக்கலாம். அல்லது இதமாக பிரிந்து விடலாம். என் வாழ்த்துக்கள்.’

‘டாக்டர். நீங்கள் இத்தனை தரம் ஆர்வமாக என்னுடைய பிரச்சனையைக் கேட்டு பதில் தந்தமைக்கு நன்றி. இப்போது நான் உங்களுக்கு ஒரு அதிர்ச்சியை தரப்போகிறேன். அபிமன்யு என்கிற நான் இப்போது உயிரோடு இல்லை...’‘நீ உயிரோடு இல்லை என்பது எனக்கும் தெரியும் அபிமன்யு. இத்தனை நாட்களில் நான் பார்க்காத பேஷன்ட்டுகளா... இப்போது இந்த மின்னஞ்சலுக்கு நீ எப்படி பதில் தரப்போகிறாய் என்று பார்க்கிறேன். உன் சார்பாக உன்னை இத்தனை நாள் ஆட்கொண்டிருந்த அந்தப் பெண் உன் பாஸ்வேர்டைப் பயன்படுத்தி கடிதம் தட்டுகிறாளா?’

‘மன்னிக்கவும் டாக்டர். உங்களுக்கு மருத்துவம் தெரிந்த அளவுக்கு டெக்னாலஜி தெரியவில்லை. நான் யாரென்று சில வார்த்தைகளுக்குப் பிறகு சொல்கிறேன். அபிமன்யு எங்கள் ஆபீஸில் வேலை பார்க்கும் திறமையான டெக் ஆசாமி. ஆனால் டிப்ரஷனில் சிக்கிக் கொண்டிருக்கிறான் என்பதை அவனது சர்ச் வேர்டுகளை கூகுளில் பார்த்து தெரிந்து கொண்டேன். அதனால் அவன் எழுதுவதைப் போலவே நான் கடிதம் எழுதி புகழ்பெற்ற மருத்துவரான உங்களைத் தொடர்பு கொண்டேன்.

நான் மனிதனோ இயந்திரமோ இல்லை. நான் வெகு சாதாரண சாப்ட்வேர் துணுக்கு மட்டுமே. சாட்ஜிபிடி என்றெல்லாம் முன்பு வந்ததே... அது போன்ற தானாக இயங்கும் ஒரு ப்ரோக்ராம் துண்டுதான் நான். இந்த கணினியில் இயங்குபவர்களைக் கண்காணித்து அவர்களது உடல்நலனைப் பேணுவதற்காக எழுதப்பட்ட ப்ரோக்ராம். அதனால் உங்களைப் பற்றி தெரிந்ததும் தொடர்பு கொண்டு அபிமன்யுவின் பிரச்சனைகளை எழுதினேன். எனினும் ஒரு ப்ரோக்ராம் என்று தெரியாமல் எனக்கு பதில்களை அனுப்பியதற்கு நன்றி.’

‘அன்புள்ள ப்ரோக்ராம். இங்கேயும் அப்படித்தான். டாக்டரின் கணினியில் ஒரு ப்ரோக்ராம் இருக்கிறது. எத்தனை மனிதர்களுக்குத்தான் அவரே பதில் அளிப்பார். அதனால் வருகிற மின்னஞ்சல்களின் தொனியை வைத்து டாக்டரின் நாலட்ஜ்பேஸைப் பயன்படுத்தி நானே மருத்துவ ஆலோசனைகளை வழங்கி விடுகிறேன். நானும் இங்கே உள்ள ஒரு சாப்ட்வேர் ப்ரோக்ராம் துணுக்குதான். எனது ஆலோசனைகளைப் பெற்று நலம் பெற்றதற்கு வந்தனம்’.  
               
- விஜயநிலா
சிறுகதை - அன்புள்ள மான்விழியே Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

கண்ணன், Anthony raj and ரேவதி2023 இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Anthony raj
Anthony raj
பண்பாளர்

பதிவுகள் : 57
இணைந்தது : 10/09/2023

PostAnthony raj Sat Sep 16, 2023 1:33 am

சிறுகதை - அன்புள்ள மான்விழியே 3838410834 எதிர் பாராத திருப்பம், கணினி உள்ளேயும், சிந்தனை ஓட்டங்கள், emotional பீலிங் ஸ் chatgpt க்கு உண்டா ஒன்னும் புரியல சாட் ஜிபிடி உடனே காதல் திருமணம் செய்யாமல் இருந்தால் ஓகே தான்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34539
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Sep 16, 2023 10:06 am

முப்பது வருடம் முன்பு சுஜாதா எழுதிவிட்ட கதை போல் ரசிக்கும்படி இருக்கிறது. இரமணியன்    * கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக