புதிய பதிவுகள்
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by ayyasamy ram Today at 9:33 pm

» சினிமா பக்கம்
by ayyasamy ram Today at 9:27 pm

» படித்ததில் பிடித்த கவிதைகள் -தொடர்பதிவு
by ayyasamy ram Today at 8:47 pm

» 435 நூல்களை எளிதில் தரவிறக்க
by TI Buhari Today at 1:02 pm

» கருத்துப்படம் 24/09/2023
by mohamed nizamudeen Today at 9:35 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» அக்கவுண்டில் விழுந்த ரூ.9000 கோடி யார் பணம்? சைபர் க்ரைமில் புகார்.
by T.N.Balasubramanian Yesterday at 9:11 pm

» நாவல்கள் வேண்டும்
by TI Buhari Yesterday at 6:33 pm

» நாவல்கள் வேண்டும்..
by Karthikakulanthaivel Yesterday at 2:19 pm

» வாழ்க்கையில் பக்குவம் கிடைப்பது அவ்வளவு எளிதல்ல!
by Anthony raj Yesterday at 12:51 pm

» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by ayyasamy ram Yesterday at 12:17 pm

» ஆஹா 50 -டிப்ஸ் (மங்கையர் மலர்)
by ayyasamy ram Yesterday at 11:56 am

» <b>சுமார் 100க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள்</b>
by TI Buhari Yesterday at 10:12 am

» இணையத்திலேயே பயனுள்ள எழுத்துகளை வாசிக்க
by TI Buhari Yesterday at 9:54 am

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by ayyasamy ram Fri Sep 22, 2023 10:22 pm

» நகைச்சுவை தோரணங்கள்
by ayyasamy ram Fri Sep 22, 2023 8:01 pm

» இன்பம் பொங்கும் பாடலை அமைதியாக ஆறுதலாக அள்ளி தந்த PB ஸ்ரீநிவாஸின் பிறந்தநாள்
by ayyasamy ram Fri Sep 22, 2023 7:36 pm

» நட்டியின் ‘வெப்’ திரைப்படம் -விமர்சனம்
by ayyasamy ram Fri Sep 22, 2023 7:12 pm

» மண்ணெண்ணெய் விளக்கில் படிக்கும் மாணவி.. "வெளிச்சமாய்" தோன்றிய கலெக்டர்
by T.N.Balasubramanian Fri Sep 22, 2023 7:11 pm

» பாடலாசிரியர் வாலி அவர்களின் நினைவு தினம்
by heezulia Fri Sep 22, 2023 2:33 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 22, 2023 12:41 pm

» பெற்ற தாயையே திகைக்க வைத்த சிவாஜி
by ayyasamy ram Fri Sep 22, 2023 12:39 pm

» ஆதித்யா எல்1: சூரியனை ஆராய இஸ்ரோ அனுப்பும் விண்கலம்
by T.N.Balasubramanian Thu Sep 21, 2023 4:53 pm

» வலையில் வசீகரித்தது
by ayyasamy ram Thu Sep 21, 2023 4:22 pm

» சமையல் குறிப்புகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 21, 2023 4:20 pm

» இளைஞர்களுக்கு சமந்தா அறிவுரை
by ayyasamy ram Thu Sep 21, 2023 4:02 pm

» படித்ததில் பிடித்த கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 21, 2023 3:56 pm

» துடிக்கும் கரங்கள் – விமர்சனம்
by ayyasamy ram Thu Sep 21, 2023 3:54 pm

» ஆன்மீக தகவல்கள்
by ayyasamy ram Thu Sep 21, 2023 3:48 pm

» புத்தகம் தேவை
by ரேவதி2023 Thu Sep 21, 2023 10:42 am

» ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரம் பாடல் – 22
by ayyasamy ram Thu Sep 21, 2023 7:27 am

» பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்கள் எழுதிய சுமார் 450 நூற்களின் பட்டியல்
by TI Buhari Thu Sep 21, 2023 12:22 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed Sep 20, 2023 11:21 pm

» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Wed Sep 20, 2023 8:29 pm

» இப்படித்தான் சமைக்க வேண்டும் கீரைகளை!
by ayyasamy ram Wed Sep 20, 2023 8:13 pm

» கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Sep 20, 2023 8:11 pm

» தலைமுறை தலை நிமிர்ந்து நடக்கும்!. - கவிதை
by T.N.Balasubramanian Wed Sep 20, 2023 6:39 pm

» இல்லாத ஒன்றுக்கு ஏக்கம் எதற்கு?
by ayyasamy ram Wed Sep 20, 2023 3:34 pm

» மகளிர் இடஒதுக்கீடு மசோதா -அமுல் படுத்த ஆறு ஆண்டுகள் ஆகும்!
by ayyasamy ram Wed Sep 20, 2023 2:06 pm

» வாழ்த்தலாம் திரு அய்யாசாமி அவர்களை.
by ayyasamy ram Wed Sep 20, 2023 2:03 pm

» இலவசங்கள் பெற்று ஏமாறும் மக்கள்.
by T.N.Balasubramanian Wed Sep 20, 2023 11:29 am

» ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
by nandhini14 Tue Sep 19, 2023 11:02 pm

» புத்தகம் வேண்டும்
by prajai Tue Sep 19, 2023 10:28 pm

» ‘என் உயிர் தோழன்’ பாபு உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார்.
by ayyasamy ram Tue Sep 19, 2023 6:35 pm

» Dr ரேணுகா ராமகிருஷ்ணன்,
by ayyasamy ram Tue Sep 19, 2023 5:56 pm

» பதினைந்தாம் ஆண்டு நிறைவு நாள் ஈகரைக்கு இன்னும் சிறிது நேரத்தில்
by ayyasamy ram Tue Sep 19, 2023 5:43 pm

» எது வந்தால் எது போகும்- விதுர நீதி
by Anthony raj Tue Sep 19, 2023 4:10 pm

» சரணிகா தேவி நாவல்
by Saravananj Mon Sep 18, 2023 9:57 pm

» வரலாற்றின் இன்று -செப்டம்பர் 18
by T.N.Balasubramanian Mon Sep 18, 2023 6:18 pm

» இன்று விநாயக சதுர்த்தி
by T.N.Balasubramanian Mon Sep 18, 2023 6:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல்லடிப் பாலம் - சிறுகதை Poll_c10கல்லடிப் பாலம் - சிறுகதை Poll_m10கல்லடிப் பாலம் - சிறுகதை Poll_c10 
86 Posts - 54%
T.N.Balasubramanian
கல்லடிப் பாலம் - சிறுகதை Poll_c10கல்லடிப் பாலம் - சிறுகதை Poll_m10கல்லடிப் பாலம் - சிறுகதை Poll_c10 
27 Posts - 17%
TI Buhari
கல்லடிப் பாலம் - சிறுகதை Poll_c10கல்லடிப் பாலம் - சிறுகதை Poll_m10கல்லடிப் பாலம் - சிறுகதை Poll_c10 
9 Posts - 6%
heezulia
கல்லடிப் பாலம் - சிறுகதை Poll_c10கல்லடிப் பாலம் - சிறுகதை Poll_m10கல்லடிப் பாலம் - சிறுகதை Poll_c10 
7 Posts - 4%
Anthony raj
கல்லடிப் பாலம் - சிறுகதை Poll_c10கல்லடிப் பாலம் - சிறுகதை Poll_m10கல்லடிப் பாலம் - சிறுகதை Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
கல்லடிப் பாலம் - சிறுகதை Poll_c10கல்லடிப் பாலம் - சிறுகதை Poll_m10கல்லடிப் பாலம் - சிறுகதை Poll_c10 
6 Posts - 4%
prajai
கல்லடிப் பாலம் - சிறுகதை Poll_c10கல்லடிப் பாலம் - சிறுகதை Poll_m10கல்லடிப் பாலம் - சிறுகதை Poll_c10 
5 Posts - 3%
coderthiyagarajan1980
கல்லடிப் பாலம் - சிறுகதை Poll_c10கல்லடிப் பாலம் - சிறுகதை Poll_m10கல்லடிப் பாலம் - சிறுகதை Poll_c10 
5 Posts - 3%
manikavi
கல்லடிப் பாலம் - சிறுகதை Poll_c10கல்லடிப் பாலம் - சிறுகதை Poll_m10கல்லடிப் பாலம் - சிறுகதை Poll_c10 
3 Posts - 2%
ரேவதி2023
கல்லடிப் பாலம் - சிறுகதை Poll_c10கல்லடிப் பாலம் - சிறுகதை Poll_m10கல்லடிப் பாலம் - சிறுகதை Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
சிவா
கல்லடிப் பாலம் - சிறுகதை Poll_c10கல்லடிப் பாலம் - சிறுகதை Poll_m10கல்லடிப் பாலம் - சிறுகதை Poll_c10 
188 Posts - 32%
ayyasamy ram
கல்லடிப் பாலம் - சிறுகதை Poll_c10கல்லடிப் பாலம் - சிறுகதை Poll_m10கல்லடிப் பாலம் - சிறுகதை Poll_c10 
152 Posts - 26%
T.N.Balasubramanian
கல்லடிப் பாலம் - சிறுகதை Poll_c10கல்லடிப் பாலம் - சிறுகதை Poll_m10கல்லடிப் பாலம் - சிறுகதை Poll_c10 
97 Posts - 16%
Anthony raj
கல்லடிப் பாலம் - சிறுகதை Poll_c10கல்லடிப் பாலம் - சிறுகதை Poll_m10கல்லடிப் பாலம் - சிறுகதை Poll_c10 
57 Posts - 10%
heezulia
கல்லடிப் பாலம் - சிறுகதை Poll_c10கல்லடிப் பாலம் - சிறுகதை Poll_m10கல்லடிப் பாலம் - சிறுகதை Poll_c10 
38 Posts - 6%
mohamed nizamudeen
கல்லடிப் பாலம் - சிறுகதை Poll_c10கல்லடிப் பாலம் - சிறுகதை Poll_m10கல்லடிப் பாலம் - சிறுகதை Poll_c10 
23 Posts - 4%
prajai
கல்லடிப் பாலம் - சிறுகதை Poll_c10கல்லடிப் பாலம் - சிறுகதை Poll_m10கல்லடிப் பாலம் - சிறுகதை Poll_c10 
13 Posts - 2%
TI Buhari
கல்லடிப் பாலம் - சிறுகதை Poll_c10கல்லடிப் பாலம் - சிறுகதை Poll_m10கல்லடிப் பாலம் - சிறுகதை Poll_c10 
9 Posts - 2%
manikavi
கல்லடிப் பாலம் - சிறுகதை Poll_c10கல்லடிப் பாலம் - சிறுகதை Poll_m10கல்லடிப் பாலம் - சிறுகதை Poll_c10 
8 Posts - 1%
coderthiyagarajan1980
கல்லடிப் பாலம் - சிறுகதை Poll_c10கல்லடிப் பாலம் - சிறுகதை Poll_m10கல்லடிப் பாலம் - சிறுகதை Poll_c10 
8 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்லடிப் பாலம் - சிறுகதை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91237
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 31, 2023 8:30 pm


கல்லடிப் பாலம் - சிறுகதை 5

தலையில் மஞ்சள், நீலமென்று வண்ணவிளக்குகள் சுழன்றபடி வந்த போலீஸ் ஜீப், பாலத்தில் பிரவேசித்து ஆற்றைக் கடந்து ஓரமாய் வந்து நின்றது. அதிலிருந்து கீழிறங்கிய இன்ஸ்பெக்டர் கந்தவேல், சட்டைப் பையிலிருந்து ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்றவைத்தார்.

அதிகாலை இரண்டு மணி.பாலத்தின் சரிவில் சரளைக் கற்கள் சரசரக்க சறுக்கியபடி நடந்தார்.வருடத்தில் ஒருசில மாதங்கள் மட்டுமே மழைநீரை எடுத்துச் செல்லும் பருவகால நதியின் மேல் கட்டப்பட்ட பாலம். பக்கத்திலிருக்கும் கிராமங்களை இணைப்பதற்காக உள்ளூர்வாசிகள் பல வருடங்களாகப் போராடிப் பெற்ற பாலம். இப்போது, அதுவே உறவுகளைச் சேர்ப்பதற்குப் பதிலாக அவற்றைப் பிரிக்கிற பாலமாகி விட்டது.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் பாலத்தில் ஆரம்பித்த ஒரு தற்கொலையில் இருந்து இன்றுவரை தொடர்ந்தபடியே இருக்கிறது.அப்போது இறந்தவனின் பெயர் கூட அவருக்கு இன்னமும் நினைவிருக்கிறது - பாபுலால்.‘நான் ஏன் தற்கொலை செய்து கொள்கிறேன்’ என்று ஒரு செல்ஃபி வீடியோ எடுத்ததுடன், கையில் மொபைல் போனுடன் குதித்துத் தொலைத்தான். குதித்தவனுக்கு பணக்கஷ்டம். அதை வீடியோவாக சமூக தளங்களில் பரவவிட்ட அவனது உயிர் நண்பன் ஸ்போர்ட்ஸ் மாடல் பைக்கில் சுற்றி வந்து கொண்டிருக்கிறான். அது அவனது மரணத்தில் இவனுக்குக் கிடைத்த சம்பளம். அது வேறு கதை.

அதற்கப்புறம் அடிக்கடி தற்கொலை செய்துகொள்பவர்களின் புகலிடம் அந்தப் பாலம் என்றாகிவிட்டது. ஒவ்வொருத்தருக்கும் ஏதேதோ காரணங்கள். இரவில் போலீஸ் ரோந்து போனாலும் தற்கொலைகள் நிகழ்வதைத் தடுக்க முடியவில்லை.உருண்டையான கூழாங்கற்கள் கால்களைப் புரட்டி அவரைக் கீழே தள்ளுவதற்கு கடும் பிரயத்தனம் செய்தன. சமாளித்தபடி நடந்தார். நதிப்படுகையின் மையப் பகுதியை அடைந்தார்.

வெள்ளைத் துணியில் போர்த்தப்பட்டிருந்த உடலை நெருங்கினார். இன்ஸ்பெக்டரைப் பார்த்ததும் அதனருகில் இருந்த இரண்டு காவலர்கள் துணியை விலக்கினர்.

இறந்தவன் மற்றெல்லாரையும் போல பாலத்தின் கைப்பிடிச் சுவரிலிருந்து ஏறித்தான் விழுந்திருக்கிறான். ஆனால், விழுகையில் பாலத்தின் சுவரில் எங்கோ மோதியதுபோல் உடல் சற்று தள்ளியே விழுந்திருந்தது.

இத்தனைக்கும் கல்லடிப் பாலம் நதியின் மட்டத்திலிருந்து எழுபது அடி உயரம்தான். சாதாரணமாக அந்த உயரத்திலிருந்து குதிப்பவர்களுக்கு கை, கால் முறிந்து போகலாம். நிரந்தரமாக முடமாகும் அபாயங்களும் உண்டு. ஆனால், கல்லடிப்பாலத்திலிருந்து குதிக்கும் இடத்தில் பரவிக்கிடக்கும் பாறாங்கற்கள் குதிப்பவனின் நோக்கத்தை பூர்த்தி செய்கின்றன. கல்லடிப் பாலம் எனும் பெயரே அப்படி வந்ததுதான்.

குதித்திருந்தவன் குப்பறக் கவிழ்ந்தபடி கிடந்தான். விழுந்த வேகத்தில் மண்டை உடைந்து, மூளை மடிப்புக் கலையாமல் வெளியே பிதுங்கிக்கிடந்தது. காவல்துறையின் ஆஸ்தான போட்டோகிராபர் புகைப்படங்கள் எடுக்க ஆரம்பித்திருந்தார்.“திருப்பிப் போடுய்யா... ஏதாவது அடையாள அட்டை வெச்சிருக்கானான்னு பாரு...”பாண்ட் பாக்கெட்டிலிருந்து ரயில் டிக்கெட் ஒன்று அகப்பட்டது. கடைசிப் பயணத்திற்கு முந்தின பயணம் வரை காசு கொடுத்துத்தான் வந்திருக்கிறான்.“ஐடி ஏதாவது இருக்கான்னு சட்டைப் பையில பாருங்கன்னு நான் சொல்லணுமா?” என்று தொடர்ந்து சீறினார்.

கத்திரிக்கோல் போன்று இரு விரல்களைப் பாக்கெட்டில் விட்டு இழுத்ததில், ஒரு மடிக்கப்பட்ட காகிதம் வெளியில் வந்தது. அதை வாங்கிப் படித்தார். வீட்டு விலாசமிட்டு தன்னுடைய மரண சாசனத்தை எழுதியிருந்தான்.“இந்த அட்ரசுக்கு லோக்கல் போலீஸ் ஸ்டேஷன்ல பேசுங்க. பாடி அடையாளம் காட்ட ரிலேட்டிவ்ஸ் வரணும். போஸ்ட்மார்ட்டத்துக்கு ஏற்பாடு செய்யுங்க...” சிகரெட்டைப் பற்ற வைத்தபடி மறுபடி ஜீப்பில் ஏறி அமர்ந்தார்.

மனதிற்குள் அடைந்திருந்த விரக்தியைப் புகையாய் வெளியில் ஊதியபடி வண்டியை ஓட்டிக்கொண்டு வீட்டை வந்தடைந்தார்.வீட்டுக் கதவைத் திறந்து உள்ளே நுழைந்தார். அவரது மகனின் அறையில் விளக்கு எரிந்து கொண்டிருந்தது.‘இந்த நேரத்தில் என்ன செய்துகொண்டிருக்கிறான்’ என்று ஆவல் உந்தித் தள்ள மெதுவே அவனது கதவைத் திறந்தார்.

அறையில் விளக்கு எரிந்து கொண்டிருக்க, பையன் டேபிளில் கவிழ்ந்தபடி தூங்கிக் கொண்டிருந்தான். உண்மையில் அவருக்கு மொபைல் அழைப்பு வந்து கிளம்பியபோது அவன் முழித்துக்கொண்டுதான் இருந்தான்.

அவனைத் தொந்தரவு செய்யாமல் மெதுவே விளக்கை அணைத்துவிட்டு வெளியில் வந்தார். அந்த அகால வேளையிலும் மகனின் போனில் ஏதோ ஒரு குறுஞ்செய்தி வந்து கொண்டிருந்தது.

பன்னிரெண்டாம் வகுப்பு வரை நன்றாகப் படித்துக் கொண்டிருந்தவன், இஞ்ஜினியரிங் கல்லூரிக்குப் போகத் தொடங்கியதும் முற்றிலும் மாறிப் போய்விட்டான்.

ஊரைவிட்டுத் தள்ளியிருந்தது கல்லூரி. அதனால் தினசரி கல்லூரிப் பேருந்தில் வெகுநேரம் சென்றுவந்தால் படிப்பதற்குரிய தெம்பும் நேரமும் இருக்காது என்று நினைத்து அவனை ஹாஸ்டலில் சேர்த்தார். அதுதான் தப்பாகப் போயிற்று. கூடா நட்பு. சகவாச தோஷத்தில் வாழ்க்கைப் பாடத்தின் தவறான பக்கங்களைத் தேர்ந்தெடுத்துப் படித்தான். விடுமுறைக்கு வீட்டிற்கு வந்த பையனின் சட்டைப் பையில் கஞ்சா பாக்கெட். இடுப்பிலிருந்த பெல்ட்டை எடுத்து விளாறினார்.

அவரை முறைத்துப் பார்த்துவிட்டு, “வேணும்னா என்னையும் புடிச்சு உள்ள போடுங்க...’’ என்றான். அதுதான் அவன் அவரிடம் கடைசியாகப் பேசிய நீளமான வாக்கியம்.

மரியாதையாக இருந்த பையன் எப்படி இப்படி மாறிப் போனான் என்ற கேள்விக்கு அவருக்கு பதிலே இன்றுவரை கிடைக்கவில்லை.

ஏகப்பட்ட அரியர்சுடன் படிப்புக் காலம் முடிந்தது. கல்லூரி நண்பர்கள் விலகிப் போனார்கள். அப்போது விட்டதைப் பிடிக்க இப்போது இரவில் படிக்க நினைக்கிறான். வயதாகிக் கொண்டே போகிறது.

அரைகுறையாய் படித்த சிவில் இஞ்ஜினியரிங்கை வைத்துக் கொண்டு எங்கு நல்ல வேலை கிடைக்கும்? அவரது மறைமுக சிபாரிசில் ஒரு கம்பனியில் பில்டிங் சூபர்வைசர் வேலைக்குப் போகிறான். இரவில் இப்படி.ஆனாலும் அவனது வாழ்க்கை மண்துகள்களாய் நொடிக்கு நொடி கைவிரல் இடுக்கு வழியாக வழிந்துகொண்டேதான் இருக்கிறது.சட்டையைக் கழற்றி மாட்டிவிட்டு கட்டிலில் சாய்ந்தார். கட்டிலின் க்ரீச்சில் மனைவி எழுந்தாள். “என்னங்க... நடு ராத்திரியில...”“கல்லடிப் பாலத்தில் இன்னிக்கும் ஒண்ணு...” என்றார்“கடவுளே... மறுபடியுமா?” என்றபடி திரும்பிப் படுத்தவள் உறங்கிப் போனாள்.அவருக்கு உறக்கம் வரத் தாமதமாயிற்று.

காலையில் காவல்நிலையம் சென்றவுடனேயே, இறந்தவனைப் பற்றிய முழுவிபரமும் தெரிந்தது.“காதல் தோல்வி சார். பொண்ணு நம்ம ஊரு. தினமும் ட்ரெயின்ல போகவர பாத்துருக்கான். அந்தப் பொண்ணுக்கு இவனை யாருன்னு கூடத் தெரியாது. திடீர்னு ஒரு நாளக்கி அவகிட்டப் போய் பிரபோஸ் பண்ணியிருக்கான்...”“முன்னப்பின்னே தெரியாதவனை எப்படி ஏத்துக்கமுடியும். அதானே?” என்றார் கந்தவேல்.“ஆமாம் சார்.

ஆனாலும் பையன் பெத்தவங்ககிட்ட காதல் விஷயத்தைச் சொல்லி, பெண் கேட்கச் சொல்லியிருக்கான். அவங்க காது கொடுத்துக்கூட கேக்கல. தற்கொலை பண்ணிக்குவேன்னு வேற சொல்லி பயமுறுத்தியிருக்கான். ஒரு பிரயோசனமும் இல்லியே...”“இந்தக் காலத்துல பெத்தவங்க பசங்ககிட்ட பேசறது கிடையாது. அவங்களுக்குள்ள பேசறதுக்கு பொதுவாக எந்த விஷயமும் இல்ல. அதனால புரிதல்னு எதுவுமே கிடையாது. அவனுகளும் எப்பவும் நண்பர்களைக் கூட்டிக்கிட்டு ஊர் சுத்தறாங்க. இதுக்கு என்ன சொல்றீங்க...” என்றார் கந்தவேல்.

“ஆமாம் சார்...”“சரி... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் வந்தபிறகு ரிப்போர்ட் பண்ணுங்க...” மற்ற அலுவல்களைக் கவனிக்கப் போனார்.தானும் கூட மகனிடம் பேசுவதே இல்லை என்ற உண்மை அவரை உறுத்தியது. மகனிடம் பேசுவதை இனியும் தள்ளிப்போடக்கூடது என்று முடிவு செய்தார்.‘அதற்கு வீடு சரிப்படாது.

எப்பப் பார்த்தாலும் டிவியில் ஏதாவது ஓடிக்கொண்டிருக்கும். எங்காவது ஒரு ஹோட்டலுக்குக் கூட்டிக் கொண்டு போய் பேசவேண்டும்...’இதற்கு முன்னாலும் இப்படியெல்லாம் திட்டமிட்டதுண்டு. ஆனால், ஒருமுறைகூட அவனுடன் பேசமுடிந்ததில்லை. அவனைப் பார்த்ததும் உடம்பு தானாய் முறுக்கிக் கொள்கிறது. மனசு கஞ்சி போட்ட உடுப்பாய் விரைத்துக் கொள்கிறது.

இன்றைக்கு அப்படியெல்லாம் இருக்கக்கூடாது. ‘அவன் இன்னும் எனக்குக் குழந்தைதானே’ என்று நினைத்தபோதே ‘என்னை இப்பவும் குழந்தைன்னு நெனக்கிறீங்க. ஐ ஹேட் இட்...’ என்று அவன் வழக்கமாகக் கத்துவதும் காதில் ஒலிப்பது போலிருந்தது. அவருக்கு சிரிப்பு வந்தது. அதையும் பொறுமையாய்க் கேட்டுக் கொள்ளத்தான் வேண்டும்.

அன்றைய வேலை முடிந்து வீட்டிற்குப் போகும்போது எப்போதும் போல் மணி எட்டாகியிருந்தது. அவர் வீட்டினுள்ளே நுழையும்நேரம் பார்த்து அவன் வெளியில் கிளம்பிக் கொண்டிருந்தான்.அவரைப் பார்த்தவன் அவரிடம் ஏதோ கேட்க வந்தவன் போல் நெருங்கியவன் அப்படியே கடந்து போனான்.

திரும்பிப் பார்த்தார். வண்டியை எடுத்துக் கொள்ளவில்லை. அப்படியென்றால் தெருமுனையில் இருக்கும் சிகரெட் கடைதான். அவருக்கா ஒன்றும் தெரியாது?

மீசையைத் தடவியபடி வீட்டினுள் நுழைந்தார்.மனைவி டிவி பார்த்துக் கொண்டிருந்தாள். அவருக்குரிய இரவு உணவு டைனிங் மேசைமீது இருந்தது.

“உம்புள்ள எங்கடி போறான் இப்போ?”

டிவியிலிருந்து கண்ணை எடுக்காமல், “நீங்க கேக்கலையா?” என்றாள்.அவளிடம் கேட்காமல் இருந்திருக்கலாம். டிவி சீரியல் வசனங்கள் முக்கியம் அவளுக்கு.

‘தூங்குவதற்கு முன்னால் வந்துவிட்டால் பேசலாம். இன்றைக்கு முடியவில்லை என்றால் என்ன? நாளைக்கு அவனிடம் பேசிவிடவேண்டியதுதான்...’
அவனது அறையைக் கடந்து கைகால் கழுவச் சென்றவரின் கண்களில், மேசை மேலிருந்த அவனது மொபைல் போனும் அதன் கீழ் ஃபேன் காற்றில் படபடத்துக் கொண்டிருந்த பேப்பரும் அவருக்கு ஏதோ விபரீதத்தை உணர்த்தின.

போலீஸ் மூளைக்கே உண்டான சந்தேகத்துடன் அவனது அறைக்குள் நுழைந்தவர், காகிதத்தை எடுத்துப் படிக்க ஆரம்பித்தவர் தீயை மிதித்தது போலானார்.வீட்டு வாசலை நோக்கி ஓடினார்.“சாப்பிடாம அப்படி எங்க ஓடுறீங்க...” மனைவியின் வார்த்தைகள் பின்னாலேயே அவரைத் துரத்திக் கொண்டு வந்தன.மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு, வண்டியை விரட்டினார்.“நான் தற்கொலை செய்து கொள்ளப்போகிறேன்.

நான் முடிவில்லாத தோல்வியின் சின்னம். நண்பர்கள், சொந்தங்கள் யாரும் என்னிடம் பேசுவதில்லை. முகநூல், வாட்ஸ்அப்பில் லைக்கும், கமெண்டும், ஈமோஜியும் என்ன வேண்டிக்கிடக்கிறது? யாரும் ஒன்றும் பேசாதபோது, சோஷியல் மீடியாவில் எழுதும் போலி வார்த்தைகளால் என்ன பயன்? மனிதர்களாகப் பிறந்துவிட்டு மனதாரப் பேசிக்கொள்ளாமல் இருந்து உயிர் வாழ்றதுல என்ன அர்த்தம்...

அப்படில்லாம் தோணுது. எனது வீட்டிலிருந்து பாலம் வரைக்கும் அரைமணி நேரம் நடந்துதான் போகப் போகிறேன். அதற்குள் அப்பா, அம்மா, ஃபிரெண்ட்ஸ் அல்லது செல்லும் வழியில் எதிரில் வருபவர்கள் யாரேனும் ஒருத்தராவது பேசினாலோ அல்லது ஹலோ என்று சொன்னால்கூட நான் என் முடிவை மாற்றிக்கொள்வேன்...’’‘அவன் கிளம்பிப் போனபோது ஒரு வார்த்தை நான் பேசியிருந்தா இந்த முடிவுக்கு வந்திருப்பானா. அப்புறமாகப் பேசலாம்னு அவன் சாவுக்கு நானே காரணமாயிடுவேன் போலிருக்கே’ என்று அவரது மனது அரற்றியது.

அவரது அவசரத்தில், குறுகலான தெருக்களில் கூட மின்னல் வேகத்தில் வண்டி பறந்தது.இதோ நெருங்கியாயிற்று.கட்டாயம் இந்த வேகத்தில் அவரது மகன் நடந்து பாலத்திற்கு வந்திருக்க முடியாதுதான். ஆனாலும் மனது பரிதவித்தது.பாலத்தை நெருங்கினார்.பின்னிரவானதால் தெருவிளக்குகளின் வட்டமான வெளிச்ச உமிழ்களில், பாலம் நடமாட்டம் ஏதுமின்றி காட்சி அளித்தது.

ஆனாலும் பாலத்தின் மத்தியில் நடந்து கொண்டிருப்பது... அவரது மகன்தானோ?

வண்டி நெருங்க நெருங்க அதே கலர் சட்டை. அவர் சமீபத்தில் அவனுக்கு வாங்கித் தந்திருந்த ப்ளூகலர் கட்டம் போட்ட சட்டை.அவரது மனைவி அதைக் கொடுத்தபோது, ‘அவர் வாங்கிக் கொடுத்தா நான் போட்டுக்கணுமா என்ன?’ என்றபடி அவன் கட்டிலுக்குக் கீழே விட்டெறிந்த அதே சட்டை.‘எதையோ பேச விரும்பித்தான் அந்த சட்டையைப் போட்டு ஜாடை மாடையாகக் குறிப்பு காட்டியிருக்கிறான். சின்ன வயதுக்கே உரிய ஈகோ. சமாதானமாகி வந்திருக்கிறான். ஆனால், அவன் முதலில் பேச விரும்பவில்லை. அவராவது பார்த்துப் புரிந்துகொண்டு பேச்சை ஆரம்பித்திருந்தால் இப்படி ஆகியிருக்காதோ?’

சற்று நின்றவன், நிதானமாக கைப்பிடிச்சுவரில் ஏறப் பிரயத்தனம் செய்தான். கால்களால் உந்தி ஏறமுடியவில்லையா அல்லது மனது உந்தவில்லையா?
தொடர்ந்து ஒலியெழுப்பியபடி அவனை நெருங்கினார்.

அவன் அவரைத் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை.“டேய்... உதவாக்கரைப் பயலே... ஏண்டா என் உயிரை வாங்கற” என்று உரக்கக் கத்தியபடி வண்டியை அவனருகில் போய் நிறுத்தினார்.

திடுக்கிட்டுத் திரும்பியவன் பொறுமையாகக் கீழிறங்கினான்.வண்டிக்கு ஸ்டாண்டு போட்டு சாய்ந்த வாக்கில் நிறுத்திவிட்டு கந்தவேல் அவனை இறுகக் கட்டிக் கொண்டு அழுதார்.

பேசாமலிருந்தான்.“ஏறித் தொலை...” வண்டியை வீட்டை நோக்கித் திருப்பினார்.

“சரி...” என்கிற ஒற்றை வார்த்தையுடன் அவரது தோள்களைப் பற்றியபடி பின்சீட்டில் அமர்ந்தான்.பள்ளிக்கும் கல்லூரிக்கும் கொண்டு விடுகையில் அவரது தோள்களைப் பற்றிக்கொண்டிருந்த அதே விரல்களின் ஸ்பரிசம். அவரது முதுகை அழுத்திய அவனது உடல் பாரம்..‘ஆளுதான் எருமைமாடு மாதிரி வளர்ந்திருக்க...’ என்றபடி வண்டியை ஓட்டினார்.“லெட்டரைப் படிச்சியாக்கும்..?”“படிக்காம..? ஃப்ரேம் போட்டுத்தான் வெக்கணும். யாராவது ஹலோன்னு சொன்னாக்கூட முடிவ மாத்திக்கிருவேன்னு டயலாக் வேற...”

‘‘இதுதான் சாக்குன்னு பப்ளிக்கா திட்டுவீங்களா?” என்றான் அவரது தோள்களை இறுக்கியபடி.

“ஆமாம்... ஆயிரம் பேரு அங்க இருந்தாங்க பாரு...”அவர் புன்னகைத்தபடி தனது வலக்கரத்தை அவனது கையின் மேல் வைத்து மென்மையாக அழுத்தினார்.பின்னிரவின் குளிர் அவர்களது நெஞ்சிற்குள் தடையின்றி நுழைந்தது.வீட்டு வாசலில் அவரது மனைவி காத்துக் கொண்டிருந்தாள்.

“என்னடி... டிவி சீரியல் எல்லாம் முடிஞ்சு போச்சா..?”அவரது கிண்டலைக் கவனிக்காதது போல், “எங்க அப்படி ஓடினீங்க... எதோ உசிரே போறமாதிரி..?’’நடந்தது எதுவும் அவளிடம் சொல்லப்போவதில்லை என்று ஏற்கனவே தீர்மானித்திருந்தார்.“பசில உசிர் போவுது. நீயும் வரியாப்பா...” என்றார் மகனைப் பார்த்தபடி.“என்னடா இது? உங்கப்பா வாங்கித் தந்த சட்டை வேற போட்டிருக்க..? இது எப்போலேர்ந்து...’’ என்று மகனைப் பார்த்து வியந்தபடி அவள் அடுக்களைக்குள் நுழைந்தாள்.l

குங்குமம்
கல்லடிப் பாலம் - சிறுகதை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34539
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Sep 01, 2023 5:54 pm

போலீஸ் என்றாலே கடுகடுத்த சொற்கள்தானா?
கனிவு மறந்து போனதோ? இன்ஸ்பெக்டருக்கு

தற்கால பெண்மணிகளுக்கு சீரியல்தான் முக்கியம்.
மகனுடன் பேசி திருத்த நேரமில்லையோ?

கஞ்சா அபினைவிட மோசமான விஷக்கிருமி இந்த
கேடுகெட்ட சீரியல்கள் . இரமணியன்    * கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Rajana3480
Rajana3480
பண்பாளர்

பதிவுகள் : 57
இணைந்தது : 28/01/2022

PostRajana3480 Tue Sep 12, 2023 3:22 am

பதிவை வரவேற்கிறேன். ஆனால் மற்றவர்கள் கதையை பகிரும்போது அதை எழுதிய ஆசிரியர் பெயரையும் குறிப்பிடுவது அந்த எழுத்திற்கு நாம் அளிக்கும் குறைந்த பட்ச மரியாதை அல்லது அங்கீகாரம் என்பது என் கருத்து.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31416
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Sep 15, 2023 3:15 pm

:கதை arumai:z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக