புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm

» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 - 2025 : கே.பி. வித்யாதரன்! Poll_c10 ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 - 2025 : கே.பி. வித்யாதரன்! Poll_m10 ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 - 2025 : கே.பி. வித்யாதரன்! Poll_c10 
43 Posts - 51%
ayyasamy ram
 ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 - 2025 : கே.பி. வித்யாதரன்! Poll_c10 ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 - 2025 : கே.பி. வித்யாதரன்! Poll_m10 ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 - 2025 : கே.பி. வித்யாதரன்! Poll_c10 
29 Posts - 34%
prajai
 ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 - 2025 : கே.பி. வித்யாதரன்! Poll_c10 ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 - 2025 : கே.பி. வித்யாதரன்! Poll_m10 ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 - 2025 : கே.பி. வித்யாதரன்! Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
 ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 - 2025 : கே.பி. வித்யாதரன்! Poll_c10 ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 - 2025 : கே.பி. வித்யாதரன்! Poll_m10 ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 - 2025 : கே.பி. வித்யாதரன்! Poll_c10 
3 Posts - 4%
Jenila
 ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 - 2025 : கே.பி. வித்யாதரன்! Poll_c10 ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 - 2025 : கே.பி. வித்யாதரன்! Poll_m10 ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 - 2025 : கே.பி. வித்யாதரன்! Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
 ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 - 2025 : கே.பி. வித்யாதரன்! Poll_c10 ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 - 2025 : கே.பி. வித்யாதரன்! Poll_m10 ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 - 2025 : கே.பி. வித்யாதரன்! Poll_c10 
1 Post - 1%
M. Priya
 ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 - 2025 : கே.பி. வித்யாதரன்! Poll_c10 ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 - 2025 : கே.பி. வித்யாதரன்! Poll_m10 ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 - 2025 : கே.பி. வித்யாதரன்! Poll_c10 
1 Post - 1%
jairam
 ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 - 2025 : கே.பி. வித்யாதரன்! Poll_c10 ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 - 2025 : கே.பி. வித்யாதரன்! Poll_m10 ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 - 2025 : கே.பி. வித்யாதரன்! Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
 ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 - 2025 : கே.பி. வித்யாதரன்! Poll_c10 ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 - 2025 : கே.பி. வித்யாதரன்! Poll_m10 ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 - 2025 : கே.பி. வித்யாதரன்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 - 2025 : கே.பி. வித்யாதரன்! Poll_c10 ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 - 2025 : கே.பி. வித்யாதரன்! Poll_m10 ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 - 2025 : கே.பி. வித்யாதரன்! Poll_c10 
86 Posts - 61%
ayyasamy ram
 ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 - 2025 : கே.பி. வித்யாதரன்! Poll_c10 ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 - 2025 : கே.பி. வித்யாதரன்! Poll_m10 ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 - 2025 : கே.பி. வித்யாதரன்! Poll_c10 
29 Posts - 21%
mohamed nizamudeen
 ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 - 2025 : கே.பி. வித்யாதரன்! Poll_c10 ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 - 2025 : கே.பி. வித்யாதரன்! Poll_m10 ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 - 2025 : கே.பி. வித்யாதரன்! Poll_c10 
7 Posts - 5%
prajai
 ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 - 2025 : கே.பி. வித்யாதரன்! Poll_c10 ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 - 2025 : கே.பி. வித்யாதரன்! Poll_m10 ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 - 2025 : கே.பி. வித்யாதரன்! Poll_c10 
6 Posts - 4%
Jenila
 ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 - 2025 : கே.பி. வித்யாதரன்! Poll_c10 ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 - 2025 : கே.பி. வித்யாதரன்! Poll_m10 ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 - 2025 : கே.பி. வித்யாதரன்! Poll_c10 
4 Posts - 3%
Rutu
 ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 - 2025 : கே.பி. வித்யாதரன்! Poll_c10 ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 - 2025 : கே.பி. வித்யாதரன்! Poll_m10 ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 - 2025 : கே.பி. வித்யாதரன்! Poll_c10 
3 Posts - 2%
Baarushree
 ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 - 2025 : கே.பி. வித்யாதரன்! Poll_c10 ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 - 2025 : கே.பி. வித்யாதரன்! Poll_m10 ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 - 2025 : கே.பி. வித்யாதரன்! Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
 ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 - 2025 : கே.பி. வித்யாதரன்! Poll_c10 ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 - 2025 : கே.பி. வித்யாதரன்! Poll_m10 ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 - 2025 : கே.பி. வித்யாதரன்! Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
 ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 - 2025 : கே.பி. வித்யாதரன்! Poll_c10 ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 - 2025 : கே.பி. வித்யாதரன்! Poll_m10 ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 - 2025 : கே.பி. வித்யாதரன்! Poll_c10 
1 Post - 1%
M. Priya
 ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 - 2025 : கே.பி. வித்யாதரன்! Poll_c10 ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 - 2025 : கே.பி. வித்யாதரன்! Poll_m10 ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 - 2025 : கே.பி. வித்யாதரன்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 - 2025 : கே.பி. வித்யாதரன்!


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 30, 2023 7:37 pm





 ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 - 2025 : கே.பி. வித்யாதரன்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 30, 2023 7:37 pm

 ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 - 2025 : கே.பி. வித்யாதரன்! BcZfKpn

மண்ணை பார்த்தோ, மற்றவற்றைப் பார்த்தோ பேசாமல் கண்ணைப் பார்த்தும் கருத்துகளை பார்த்தும் பேசிப் பழக்கப் பட்டவர் நீங்கள். கப்பலே கவிழ்ந்தாலும் கன்னத்தில் கை வைக்காமல் கிடைத்தத் துரும்பை துடுப்பாக்கி கரையேறுவீர்கள். எதார்த்தமான பேச்சால் எல்லோரையும் தன்வசப்படுத்தும் உங்களுக்கு இலவசம் பிடிக்காது.

அப்படிப்பட்ட உங்களுக்கு ராகுவும் கேதுவும் 8.10.23 முதல் 26.4.25 வரையிலான காலகட்டத்தில் எப்படிப்பட்ட பலன்களைத் தரப் போகிறார்கள் என்பதைப் பார்ப்போம்.ராகுவின் பலன்கள்

கடந்த ஒன்றரை வருட காலமாக ஏதேனும் ஒரு வகையில் உங்களைப் புலம்பித் தவிக்கவைத்தார் ராகு. இப்போது அவர் ராசிக்கு 12-ம் வீட்டிற்கு வந்தமர்வதால், இதுவரை உங்களுக்கு இருந்து வந்த நோய் நீங்கும். அழகு, இளமை கூடும். எப்போதுமே முகத்தில் சந்தோஷம் பொங்கும். மற்றவர்களின் பிரச்னைகளைக் கையிலெடுத்து அதனால் நீங்கள் சிக்கலில் தவித்தீர்களே... அந்த தர்மசங்கடமான நிலையிலிருந்து விடுபடுவீர்கள்.

பார்த்தும் பார்க்காமல் போனவர்கள் எல்லாம் வலிய வந்து பேசுவார்கள். இழுபறியாக இருந்த வேலைகள் உடனே முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். உங்கள் ஆலோசனையை எல்லோரும் ஏற்பார்கள். சந்தேகத்தால் பிரிந்திருந்த கணவன் - மனைவி ஒன்று சேர்வார்கள். வர வேண்டிய பணம் தாமதம் இல்லாமல் வரும். வீட்டில் சுபகாரியங்கள் தொடரும். பழைய உறவினர்கள், நண்பர்கள் வெகுநாள்களுக்குப் பிறகு உங்களைத் தேடி வருவார்கள். ஆன்மிகவாதிகளின் ஆசி கிட்டும். வெளிநாட்டுப் பயணம் திருப்திகரமாக அமையும். புண்ணிய நதிகளில் நீராடுவீர்கள்.

உங்களை ஏமாற்றியவர்களை இனங்கண்டறிந்து ஒதுக்குவீர்கள். அலர்ஜி, தோலில் இருந்த நமைச்சல் நீங்கும். விபத்துகளிலிருந்து மீள்வீர்கள். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கைக்குக் கிடைக்கும்.

ராகு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்


உங்களுக்கு 3 மற்றும் 6-க்கு உரியவரான புதனின் ரேவதி நட்சத்திரத்தில் 8.10.23 முதல் 15.6.24 வரை ராகு பகவான் செல்கிறார். இந்தக் காலகட்டத்தில் திடீர்ப் பயணங்கள், வீண் பயம், அலைச்சல், வாகனச் செலவுகள் வந்து போகும். உடலில் சிறுசிறு கொழுப்புக் கட்டிகள் தோன்றி மறையும். எவ்வளவு பணம் வந்தாலும் சேமிக்க இயலாதபடி செலவுகள் துரத்தும். சொத்துப் பத்திரத்தில் கையெழுத்திடும்போது கவனம் தேவை. பழைய வழக்கில் வழக்கறிஞர் ஆலோசனையின்றி எந்த முடிவுகளும் எடுக்கவேண்டாம்.

உங்களின் ஜீவன பாதகாதிபதியான சனியின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் 15.6.24 முதல் 22.2.25 வரை ராகு செல்வதால் மனக்குழப்பம், காரியத் தடங்கல் வரக்கூடும். உறவினர்கள், நண்பர்கள் சிலர் உங்களைத் தவறான பாதைக்குத் தூண்டுவார்கள். கவனம் தேவை. மற்றவர் பிரச்னைகளில் நீங்கள் தலையிட வேண்டாம். பழைய கடன் தொந்தரவு அவ்வப்போது மனசை வாட்டும். அரசுக் காரியங்கள் தடைப்பட்டு முடியும்.

உங்கள் பாக்ய விரயாதிபதியான குருபகவானின் பூரட்டாதி நட்சத்திரத்தில் 22.2.25 முதல் 26.4.25 வரை ராகுபகவான் செல்வதால் பெரிய பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். மகளின் திருமணத்தைச் சிறப்பாக நடத்துவீர்கள். சிலருக்குக் குழந்தைப் பாக்கியம் கிட்டும். பாதியில் நின்ற வீடு கட்டும் பணியைத் தொடங்க வங்கிக் கடன் உதவி கிடைக்கும். வழக்கு சாதகமாகும். தாயாரின் உடல் நலம் சீராகும். பூர்வீகச் சொத்து கைக்கு வரும்.

வியாபாரத்தில் புது முதலீடுகள் செய்ய பணம் வரும். சந்தை நிலவரம் அறிந்து புதிய சரக்குகளைக் கொள்முதல் செய்வீர்கள். உத்யோகத்தில் மாறுபட்ட அணுகுமுறையால் உயரதிகாரியைக் கவர்வீர்கள். பதவி உயர்வு, சம்பள உயர்வு உண்டு. கணினித் துறையினருக்கு வெளிநாட்டுத் தொடர்புடைய நிறுவனங்களில் இருந்து வாய்ப்பு வரும். இந்த ராசியைச் சேர்ந்த கலைஞர்கள், நல்ல வாய்ப்புகள் தடைப்பட்டது, வேலைக்கு உரிய பணம் வராமல் போனது குறித்தெல்லாம் தவித்தீர்கள் அல்லவா? அந்த நிலை மாறும். இனி வரும் வாய்ப்புகளால் புகழடைவீர்கள்; வசதி பெருகும்.

கேதுவின் பலன்கள்


கேது உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டில் அடியெடுத்து வைப்பதால் பிரச்னை களின் ஆணிவேரைக் கண்டறிந்து அகற்றும் சக்தியைக் கொடுப்பார். ஷேர் மூலம் பணம் வரும். சொத்து வாங்குவீர்கள். குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு முக்கியத்துவம் தருவார்கள். கணவன் மனைவிக்குள் ஈகோ பிரச்னைகள் வீண் விவாதங்கள் நீங்கும். பிள்ளைகளின் உணர்வுக்கு முக்கியத்துவம் தருவீர்கள். பழைய சொத்தை விற்றுவிட்டுப் புதிய சொத்து வாங்குவீர்கள்.

1.5.24 முதல் கேதுபகவானை குருபகவான் பார்ப்பதால், எதிரிகள் நண்பராவார்கள். இழுபறியான வழக்குகள் சாதகமாகும். வெளிநாட்டில் இருப்பவர்களால் ஆதாயம் உண்டு. செலவுகள் குறையும் சேமிப்பு கூடும்.

கேது பகவானின் நட்சத்திர சஞ்சாரம்


உங்கள் ராசிநாதனான செவ்வாயின் சித்திரை நட்சத்திரத்தில் 8.10.23 முதல் 11.2.24 வரை கேதுபகவான் செல்வதால் இக்காலக்கட்டங்களில் கௌரவப் பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். பணவரவு அதிகரிக்கும். சகோதரர்கள் உதவுவார்கள்.    </p>.<p>உங்கள் சுகாதிபதியான சந்திரனின் அஸ்தம் நட்சத்திரத்தில் 11.2.24 முதல் 19.10.24 வரை கேது செல்வதால் உங்களின் புகழ், கௌரவம் உயரும். ஆனால் தாயாரின் உடல் நிலை பாதிக்கும். ஷேர் மூலம் பணம் வரும். புது இடம் வாங்குவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. மகனுக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். புது வேலை கிடைக்கும். வேற்றுமதம், மொழி யினரால் ஆதாயம் உண்டு. கூடாப்பழக்க வழக்கங்களில் கவனம் தேவை.

உங்கள் பூர்வபுண்யாதிபதியான சூரியனின் உத்திரம் நட்சத்திரத்தில் 19.10.24 மதல் 26.4.25 வரை கேது செல்வதால், எதையோ இழந்ததைப் போல் ஒருவித கவலைகள், படபடப்பு, வீண் டென்ஷன், தாழ்வுமனப்பான்மை, சோர்வு, சலிப்பு வந்து நீங்கும். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்துவார்கள். சொத்துப் பிரச்னையை நிதானமாகக் கையாளுங்கள்.

ராசிக்கு 6-ல் கேதுபகவான் நிற்பதால் புத்தி சாதுர்யத்துடன் பேசி சில வேலைகளை முடிப்பீர்கள். கையில் காசு பணம் தங்கும். பழைய கடனை பைசல் செய்யும் அளவிற்கு வருமானம் கூடும்.

குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும். சொந்தம்பந்தங்களுக்கு மத்தியில் உங்களின் தகுதி உயரும். உடல்நலம் சீராகும். விலையுயர்ந்த ஆடை, ஆபரணங்களை வாங்குவீர்கள். வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்கும். கௌரவ பதவிகள் தேடி வரும். சொந்த ஊர் கோயில் விழாக்களுக்குத் தலைமை தாங்குவீர்கள்.

மாணவ - மாணவியருக்கு மதிப்பெண் உயரும். வியாபாரத்தில் போராட்டங்கள் நீங்கும். வாடிக்கையாளர்களின் தேவைகளை உணர்ந்து, அதற்கேற்ப செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். உத்தியோகத்தில் உங்களை வெறுத்த மேலதிகாரி இனி வலிய வந்து பேசுவார். உங்களின் கடின உழைப்புக்காக பதவி உயர்வு, சம்பள உயர்வு எல்லாம் உண்டு. எப்போதும் உங்களை குறை கூறிக் கொண்டிருந்த சக ஊழியர்கள் உங்களை புரிந்துகொள்வார்கள். வழக்குகள் வெற்றி அடையும்.

மொத்தத்தில் இந்த ராகு-கேது பெயர்ச்சி மனத்தளவில் ஒடுங்கி ஒதுங்கி இருந்த உங்களை வெளிச்சத்துக்குக் கொண்டுவரும். உங்களுக்கு திடீர் யோகம் மற்றும் வசதி வாய்ப்புகளை அள்ளி வழங்குவதாக அமையும்

பரிகாரம் :

ஒருமுறை திருநாகேஸ்வரம் மற்றும் கீழப் பெரும்பள்ளம் ஆகிய தலங்களுக்குச் சென்று வழிபட்டு வாருங்கள். வீட்டில் விளக்கேற்றிவைத்து துர்காதேவி துதிப் பாடல்களைப் பாடி வழிபடுங்கள். பிரதோஷ காலத்தில் குடும்பத்துடன் சிவாலயங்களுக்குச் சென்று வழிபாட்டில் கலந்து கொள்ளுங்கள். அன்னதானம் செய்வதற்கு இயன்ற பங்களிப்பை வழங்குங்கள். இறையருள் கைகூடும்; இன்னல்கள் நீங்கும்.




 ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 - 2025 : கே.பி. வித்யாதரன்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 30, 2023 7:47 pm

 ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 - 2025 : கே.பி. வித்யாதரன்! NOORHDC

ரிஷபம் - ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023


புரட்சியையும் புதுமையையும் விரும்பும் அன்பர் நீங்கள். எப்போதும் தொலைநோக்குடன் சிந்திப்பீர்கள். `அடிக்கிற கை அணைக்கும்' என்பதற்கு ஏற்ப, கோபப்பட்டாலும், அக்கம் பக்கம் உள்ளவர்களுக்கு வாரி வழங்குவீர்கள். சமயோஜித புத்தி கொண்ட நீங்கள், விவாதம் என்று வந்து விட்டால் வெளுத்து வாங்குவீர்கள்.

உங்களுக்கு இந்த ராகுவும், கேதுவும் இணைந்து 8.10.23 முதல் 26.4.25 வரை உள்ள காலகட்டங் களில் எப்படிப்பட்ட பலன்களைத் தரப்போகிறார்கள் என்பதை விரிவாகப் பார்ப்போம்.ராகுவின் பலன்கள்

ராகு பகவான் உங்கள் ராசிக்கு லாப வீட்டிற்கு வருவதால் புத்துணர்ச்சியும், புதிய முயற்சிகளில் வெற்றியையும், பண வரவையும் கொடுப்பதுடன் வீண் செலவுகளைக் கட்டுப்படுத்துவார். சவாலான காரியங்களையும் சர்வ சாதாரணமாக இனி செய்து முடிப்பீர்கள். கலாட்டா குடும்பமாக இருந்த நிலை மாறி அமைதி திரும்பும். உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும்.

கணவன்-மனைவிக்குள் விட்டுக்கொடுத்துப் போவீர்கள். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தைப் பாக்கியம் கிட்டும். அதிக வட்டிக் கடனை அடைத்து முடிப்பீர்கள். உங்கள் பிள்ளைகள், கெட்ட நண்பர்களிடமிருந்து விலகுவார்கள். உயர்கல்வியில் வெற்றி பெறுவார்கள். இதுவரை பல காரணங்களால் தடைப்பட்டுக்கொண்டிருந்த உங்கள் மகளின் திருமண முயற்சிகள் இனி கைகூடி வரும். மகளுக்கு நல்லபடியாகக் கல்யாணம் நடக்கும். வேலைக்கு விண்ணப்பித்துக் காத்துக்கொண்டிருந்த உங்கள் மகனுக்கு, அவர் விரும்பியபடி நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும்.

உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பால் சொத்து வகையில் இருந்து வந்த பிரச்னைகள் அனைத்தும் தீரும்; நிம்மதிப் பெருமூச்சு விடுவீர்கள். பல நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாமல் ஒதுங்கி நின்றீர்களே... இனி எல்லா நிகழ்வுகளிலும் உற்சாகமாய் கலந்துகொள்வீர்கள். விழாக்களில் முக்கியத்துவம் பெறுவீர்கள். வெளிநாட்டில் இருக்கும் உறவினர்கள், நண்பர்களால் ஆதாயம் உண்டு. உடலாலும் மனதாலும் நொந்து போயிருந்த நீங்கள், இனி ஆரோக்கி யமாகவும் உற்சாகத்துடனும் திகழ்வீர்கள்.

ராகு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்


உங்களின் தன, பூர்வபுண்யாதிபதியான புதனின் ரேவதி நட்சத்திரத்தில் 8.10.23 முதல் 15.6.24 ராகு பகவான் செல்வதால் பிள்ளைகளால் அலைச்ச லும், செலவினங்களும் இருக்கும். அதேநேரம் அவர்கள் மூலம் சமூகத்தில் உங்களின் அந்தஸ்து உயரும். பூர்வீகச் சொத்தில் பிரச்னைகள் வந்து தீர்வு கிடைக்கும். பணவரவு எதிர்பார்த்தபடி அதிகரிக்கும். கண்டும் காணாமல் விலகிச்சென்ற சொந்தபந்தங்கள், இனி உங்களைத் தேடி வருவார்கள்.

உங்களின் பாக்ய, ஜீவனாதிபதியான சனியின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் 15.6.24 முதல் 22.2.25 வரை ராகுபகவான் செல்வதால் தந்தைவழிச் சொத்து கைக்கு வரும். நெடுநாள் கனவான வீடு, வாகனம் வாங்கும் திட்டம் நிறைவேறும். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். நல்ல வேலை கிடைக்கும்.

உங்களின் அட்டம லாபாதிபதியான குருபகவானின் பூரட்டாதி நட்சத்திரத் தில் 22.2.25 முதல் 26.4.25 வரை ராகு பகவான் செல்வதால் வீண் அலைச்சல், உடல்நலக் குறைபாடுகள், மருத்துவச் செலவுகள், ஏமாற்றங்கள், பணப் பற்றாக்குறை, மூத்த சகோதர வகையில் கருத்துமோதல், சிறுசிறு விபத்துகள் ஆகியவை வந்து நீங்கும்.

வியாபாரிகளே! போட்டியாளர்களுக்கு ஈடுகொடுக்கும் அளவிற்கு புது யுக்திகளைக் கையாளுவீர்கள். புது ஏஜென்ஸி எடுப்பீர்கள். உத்தியோகஸ்தர் களுக்கு, மேலதிகாரிகளுடன் இருந்துவந்த மோதல் போக்குகள் மறையும். அவரின் ஆதரவு கிடைக்கும். சக ஊழியர்களிடம் இருந்து வந்த மனக்கசப்புகள் மாறும். உங்களின் திறமைகள் வெளிப்படும். வெகுநாட்களாக எதிர்பார்த்திருந்த பதவி உயர்வு, சம்பள உயர்வு எல்லாம் உண்டு.

கணினித் துறையினரே, உங்களில் சிலருக்கு அயல்நாட்டில் வேலை கிடைக்கும். கலைத்துறையினரே! வேற்றுமொழி வாய்ப்புகள் தேடி வரும். சம்பளப் பாக்கி கைக்கு வரும்.

கேதுவின் பலன்கள்


இதுவரை உங்களின் ராசிக்கு ஆறாம் வீட்டில் அமர்ந்து பிரச்னைகளைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த கேது பகவான் இப்போது உங்கள் ராசிக்கு பூர்வ புண்ணிய வீடான ஐந்தாம் வீட்டிற்கு வந்து அமர்கிறார். இதன் விளைவாக பிள்ளைகளால் வீண் அலைச்சலும், செலவும் வரும். அவர்களின் நட்பு வட்டத்தைக் கண்காணியுங்கள்.

கர்ப்பிணிப் பெண்கள் நீண்ட தூர பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. அதிகமான எடையைத் தூக்க வேண்டாம். மருத்துவரின் ஆலோசனையின்றி மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டாம். ஆன்மிகத்தில் உச்சத்தை அடைவீர்கள். உங்களைப் பற்றி வீண் வதந்திகள் வரும். ஆழ்மனதில் எப்போதும் ஒருவித பயமும், பதற்றமும், சந்தேகமும் இருக்கும். உறவினர் களில் ஒருசிலர் உங்களுக்குப் பகை ஆகலாம். தாய், தாய் மாமா வழியில் சங்கடங்கள் வரும். பூர்வீகச் சொத்துப் பிரச்னையில் மூழ்கி விடாதீர்கள்

கேது பகவானின் நட்சத்திர சஞ்சாரம்


உங்களின் சப்தம விரயாதிபதியான செவ்வாயின் சித்திரை நட்சத்திரத்தில் 8.10.23 முதல் 11.2.24 வரை கேதுபகவான் செல்வதால் இக்காலக்கட்டத்தின் முற்பகுதி கொஞ்சம் சவாலாக இருக்கும். பிற்பகுதியில் ஓரளவு பணவரவு உண்டு. உறவினர்கள், சகோதரர்களின் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். எனினும் இக்காலக்கட்டத்தில் விபத்துகள், ஏமாற்றங்கள், ஆரோக்கிய குறைபாடுகளைச் சந்திக்க வேண்டி வரும். பயணத்தின்போது கவனத்துடன் செயல்படுங்கள்.

உங்களின் சேவகாதிபதியான சந்திரனின் அஸ்தம் நட்சத்திரத்தில் 11.2.24 முதல் 19.10.24 வரை கேது செல்வதால், இக்காலக்கட்டத்தில் யாருக்காகவும் சாட்சிக் கையெழுத்திட வேண்டாம்; வீண் பிரச்னைகள் உண்டாக வாய்ப்பு உண்டு. இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. குடும்பத்தில் சலசலப்புகளும், பிரிவும், உறவினர்கள் மத்தியில் மனக்கசப்புகளும் வந்து நீங்கும்.

உங்களின் சுகாதிபதியான சூரியனின் உத்திரம் நட்சத்திரத்தில் 19.10.24 முதல் 26.4.25 வரை கேதுபகவான் செல்கிறார். இந்தக் காலக்கட்டத்தில் வீண் கவலை, விரயம், அநாவசியச் செலவு, சோம்பல், தாழ்வு மனப்பான்மை ஆகியவை வந்து நீங்கும். தாயாருக்கு நெஞ்சு வலி, மூட்டு-முழங்கால் வலி வரக்கூடும். எவரையும் எளிதில் நம்பி ஏமாறாதீர்கள். உடன் பிறந்தவர்கள், நெருங்கிய நண்பர்கள் என யாராக இருந்தாலும் அவர்களின் விஷயத்தில் அத்துமீறி மூக்கை நுழைக்காதீர்கள். அரசுக் காரியங்கள் இழுபறியாகும்.

1.5.24 முதல் குருபகவான் கேதுவைப் பார்ப்பதால் வெளிநாட்டினரால் திடீர் திருப்பங்கள் ஏற்படும். வெளி மாநில புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். கூட்டுத்தொழிலில் பங்கு தாரர்களிடையே நிலவிவந்த பனிப்போர் நீங்கும். உத்தியோகத்தில் வெகு நாள்களாக எதிர்பார்த்த பதவி உயர்வு, சம்பள உயர்வைக் கொஞ்சம் போராடி பெறவேண்டிய நிலை இருக்கும்.

மொத்தத்தில் இந்த ராகு கேது பெயர்ச்சி காலத்தில், கேது பகவான் உங்களைக் கொஞ்சம் உணர்ச்சிவயப்பட வைப்பார். ஆனால் ராகு பகவான் அதிரடி முன்னேற்றத்தைத் தருவார். அவரின் அருளால் வாழ்வில் அதிரடி முன்னேற்றங்கள் உண்டாக வாய்ப்பு உண்டு.

பரிகாரம் :

குடும்பத்துடன் ஒருமுறை பட்டீஸ்வரம் துர்கையை வழிபட்டு வாருங்கள். ஞாயிற்றுக் கிழமைகளில் ராகு கால வேளையில், அருகிலுள்ள சிவாலயம் சென்று நவகிரக சந்நிதியில் உள்ள ராகு பகவானுக்கு விளக்கேற்றி வழிபடுங்கள். கேது பகவானின் திருவருள் கைகூட விநாயகப் பெருமானை சிக்கென பற்றிக்கொள்ளுங்கள். சதுர்த்தி தினங்களில் கொள்ளு தானியத்தால் செய்யப்பட்ட பதார்த்தங்களை நிவேதித்து விநியோகிக்க, வினைகள் நீங்கும்.




 ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 - 2025 : கே.பி. வித்யாதரன்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Sep 30, 2023 7:47 pm

வணக்கம் சிவா! புன்னகை........என்னுடைய ராசி பலனுக்காக காத்திருக்கிறேன்.... ரிலாக்ஸ்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 30, 2023 7:54 pm

 ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 - 2025 : கே.பி. வித்யாதரன்! LR5ZVVd

கடகம் - ராகு கேது பெயர்ச்சி பலன்கள்


தொலை தூரச் சிந்தனை கொண்ட நீங்கள், சிறு வயதிலேயே பெரிய கனவுகள் காண்பவர்கள். இலக்கை எட்டிப் பிடிக்க இரவு பகல் பார்க்காமல் உழைப்பீர்கள். தர்மசங்கடமான நேரத்திலும் நகைச்சுவையாகப் பேசுபவர்! இறைவனின் படைப்பில் ஏற்றத்தாழ்வுகள் இல்லை என்பதை அறிந்த நீங்கள், பணம், பதவி பார்த்து பழகமாட்டீர்கள். உங்களுக்கு 8.10.23 முதல் 26.4.25 வரை உள்ள காலகட்டத்தில் ராகுவும், கேதுவும் சேர்ந்து என்ன பலன்களை தரப் போகிறார்கள் என்பதைப் பார்ப்போம்.

ராகுவின் பலன்கள்


ராகுபவான் இப்போது ஒன்பதாம் வீட்டில் வந்து அமர்கிறார். கிடப்பில்கிடந்த பல காரியங்களை முழுமூச்சுடன் முடித்துக்காட்டுவீர்கள். ஒளிந்து மறைந்து வாழ்ந்த வாழ்க்கை இனி பிரகாசிக்கும். குடும்பத்தினர் உங்கள் வார்த்தையை மீறி ஒன்று செய்யமாட்டார்கள். கணவன்-மனைவிக்குள் பாசப்பிணைப்பு அதிகரிக்கும். வீட்டில் தள்ளிப்போன சுபகாரியங்கள் கூடி வரும்.

கையில் காசு-பணம் தங்கும். குழந்தை இல்லாமல் கோவில், குளம் என்று சுற்றிக்கொண்டிருந்த தம்பதியர்க்குக் குழந்தைப் பாக்கியம் உண்டாகும். குலதெய்வக் கோயிலுக்குக் குடும்பத்துடன் சென்று நேர்த்திக்கடனை முடிப்பீர்கள். அரசாங்க அதிகாரிகளின் நட்பு கிடைக்கும்.

ராகுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்


உங்களுக்கு சேவக, விரயாதிபதியான புதனின் ரேவதி நட்சத்திரத்தில் 8.10.23 முதல் 15.6.24 வரை ராகுபகவான் செல்வதால் எதிர்பார்த்த பணம் வரும். திருவிழாக்களில் முதல் மரியாதை கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். புது வீடு, மனை வாங்குவீர்கள். விலகி நின்ற தூரத்து சொந்தகள் வலிய வந்து பேசுவார்கள். சுற்றுலா சென்று வருவீர்கள்.                    

உங்களின் சப்தமாதிபதியும், அட்டமாதிபதியுமான சனியின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் 15.6.24 முதல் 22.2.25 வரை ராகுபகவான் செல்வதால், பணப்பற்றாக்குறை, எதிர்மறை சிந்தனை, சிறுசிறு நெருப்புக் காயங்கள், வீண் டென்ஷன் வந்து போகும். மனைவிவழி உறவினர்களை அனுசரித்துப் போங்கள். நண்பர்களில் சிலர் செய்த துரோகங்களை நினைத்து வருந்துவீர்கள். கொழுப்புச் சத்துள்ள உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. \t

உங்களின் சஷ்டம, பாக்கியாதிபதியான குருபகவானின் பூரட்டாதி நட்சத்திரத்தில் 22.2.25 முதல் 26.4.25 வரை ராகுபகவான் செல்வதால் வி.ஐ.பியின் நட்பு கிட்டும். புது வாகனம் வாங்குவீர்கள். மகனுக்கு அயல்நாட்டு தொடர்புடைய நிறுவனத்தில் வேலை கிடைக்கும். சகோதர வகையில் உதவிகள் உண்டு. அரசுக் காரியங்கள் விரைந்து முடியும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். தாய்வழிச் சொத்துகளை அடைவதில் சிக்கல்கள் விலகும்.

ராகு ஒன்பதாம் வீட்டில் அமர்வதால் தந்தையாரின் ஆரோக்கியம் குறையும். சிலநேரம் அவருடன் கருத்துவேறுபாடுகள் வரும். பூர்வீகச் சொத்தை விற்று, வேறிடத்தில் இடம் வாங்குவீர்கள். வாழ்க்கைத் தரம் உயரும். ஆடை ஆபரணங்கள் சேரும். வி.ஐ.பிகள் துணையுடன் முக்கிய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். கேட்ட இடத்தில் பண உதவி கிடைக்கும்.

கன்னிப் பெண்களே! விரக்தியிலிருந்து விடுபடுவீர்கள். சோர்வு, களைப்பு நீங்கும். நினைத்தபடி திருமணம் முடியும். பாதியிலேயே விட்ட கல்வியை தொடர்வீர்கள். மாணவர்களே! எண்ணங்கள் பூர்த்தியாகும். விளையாட்டுப் போட்டியில் பரிசு, பாராட்டு கிட்டும். அரசியல்வாதிகள், சகாக்களுக்கு மத்தியில் மதிக்கப்படுவார்கள். வியாபாரிகளுக்குப்  பற்றுவரவு உயரும். பழைய சரக்குகளைச் சலுகைகள் மூலம் விற்றுத் தீர்ப்பீர்கள். அரசாங்க விஷயங்களில் அலட்சியம் காட்டாதீர்கள்.

உத்தியோகஸ்தர்களே! வேலைச்சுமை, வீண்பழி போன்றவை விலகும். உங்களின் நிர்வாகத்திறன் அதிகரிக்கும். உங்களை தரக்குறைவாக நடத்திய மேலதிகாரி வேறு இடத்திற்கு மாற்றப்படுவார். வெகுநாளாக எதிர்பார்த்த பதவியுயர்வு இப்போது கிடைக்கும். கணினித் துறையினருக்குப் புதிய வாய்ப்புகள் தேடி வரும். கலைத்துறையினரின் படைப்புகள் பட்டிதொட்டி எங்கும் பேசப்படும்.

கேதுவின் பலன்கள்


கேது பகவான் இப்போது மூன்றாவது வீட்டிலே முகம் மலர்ந்து அமர்கிறார். குடும்பத்தில் சங்கடங்கள் தீரும். சந்தோஷம் கூடும். கணவன்-மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். வி.ஐ.பிகளின் அறிமுகமாவார்கள். எதிர்பார்த்த வகையில் உதவிகள் கிடைக்கும். தாயாருடன் இருந்து வந்த கருத்து மோதல் நீங்கும். அவரின் உடல்நிலை சீராகும். ஆனால் இளைய சகோதரருடன் பனிப்போர் வந்து நீங்கும். பிரபலங்கள், தொழிலதிபர்களின் நட்பு கிட்டும். அவர்கள் வீட்டு விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள்

கேதுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்


உங்களின் பூர்வபுண்யாதிபதியும் ஜீவனாதிபதியுமான செவ்வாயின் சித்திரை நட்சத்திரத்தில் 8.10.23 முதல் 11.2.24 வரை கேதுபகவான் செல்வ தால் எதிர்பாராத திடீர் முன்னேற்றம் உண்டு. பணப்புழக்கம் அதிகரிக்கும். அலைச்சல் குறையும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். தந்தைவழியில் இருந்த பிணக்குகள் நீங்கும். புதிய சொத்து சேரும். கமிஷன் வகைகளால் ஆதாயமடைவீர்கள்.

உங்களின் ராசிநாதனான சந்திரனின் அஸ்தம் நட்சத்திரத்தில் 11.2.24 முதல் 19.10.24 வரை கேது செல்வதால் உங்களின் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். அதிகாரப் பதவிகள் கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். வேலை இல்லாதவர்கள் புது வேலையில் அமர்வார்கள். சில நேரங்களில் சளித் தொந்தரவு, கழுத்து வலி வந்து நீங்கும்.  

உங்களின் தனாதிபதியான சூரியனின் உத்திரம் நட்சத்திரத்தில் 19.10.24 முதல் 26.4.25 வரை கேது செல்வதால் எதிலும் சிக்கனமாக இருங்கள். தடாலடியாக எந்த முடிவுகளும் எடுக்காதீர்கள். வங்கிக் காசோலைகளைக் கவனமாகப் பயன்படுத்துங்கள். அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளில் அலட்சியம் வேண்டாம்.  

பணப்பற்றாக்குறையால் அரைகுறையாக வீடு கட்டும் பணி நின்றுபோனதே! இனி முழுமையாகக் கட்டி முடிப்பீர்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். பூர்வீகச் சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். சொந்த ஊரில் உங்களை மதிப்பார்கள். வெளிநாட்டில் இருப்பவர்களால் ஆதாயம் உண்டு. உறவினர்கள், நண்பர்கள் தேடி வருவார்கள். 1.5.2024 முதல் கேதுவை குரு பார்ப்பதால் அது முதல் உயரக வாகனங்கள் வாங்குவீர்கள். தங்க நகை சேரும். சொந்த வீட்டிற்கு மாறுவீர்கள். சிலர் கூடுதலாக அறை கட்டுவார்கள். பழைய கசப்பான சம்பவங்களை மறப்பது நல்லது. அடிக்கடி தொல்லை தந்த வாகனத்தை மாற்றுவீர்கள். உங்களால் பயன் அடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள்.

வியாபாரிகளே! பழைய சரக்குகளை எளிதாக விற்பீர்கள். புதிய சரக்கு களைக் கொள்முதல் செய்வீர்கள். உத்தியோகஸ்தர்களே! உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். உயரதிகாரி பாராட்டும்படி நடந்துகொள்வீர்கள். வெளிநாட்டுத் தொடர்புடைய நிறுவனங்களிலிருந்தும், புதிய வாய்ப்புகள் வந்தமையும். சக ஊழியர்களுடன் இருந்து வந்த பகை நீங்கும்.

மொத்தத்தில் இந்த ராகு, கேது பெயர்ச்சி மிகவும் சோர்ந்துபோய் இருந்த உங்களை உற்சாகப்படுத்தும் விதமான பலன்களைத் தரும். மேலும், எங்கும் எதையும் சாதிக்கவைப்பதாகவும் அமையும்

பரிகாரம் :

சதுர்த்தி தினங்களில் கொழுக்கட்டை படைத்து வீட்டில் விநாயகரை வழிபட்டு வாருங்கள். தினமும் காலைவேளையில் விநாயகர் அகவல் படித்து வணங்குவதால் நற்பலன்கள் கைகூடும்.

மயிலாடுதுறை - தரங்கம்பாடிக்கு அருகேயுள்ள திருக்களாஞ்சேரி எனும் தலத்தில் சுயம்பு லிங்கமாக அருளும் ஶ்ரீநாகநாதரை வணங்கி வாருங்கள். பழைய பள்ளிக்கூடம் அல்லது கோயிலைப் புதுப்பிக்க உதவி செய்யுங்கள்; வாழ்வில் அதிர்ஷ்டம் பெருகும்.




 ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 - 2025 : கே.பி. வித்யாதரன்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 30, 2023 8:11 pm

 ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 - 2025 : கே.பி. வித்யாதரன்! Cokp1fQ

சிம்மம் - ராகு கேது பெயர்ச்சி பலன்கள்


சுருக்கென்று சுண்டி இழுக்கும் பேச்சுக்கு சொந்தக்காரர்களான நீங்கள், எந்த வேலையையும் உடனே முடிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். உங்களுக்கு 8.10.23 முதல் 26.4.25 வரை உள்ள காலகட்டத்தில் இந்த ராகுவும், கேதுவும் எப்படிப்பட்ட பலன்களைத் தரப் போகிறார்கள் என்பதை பார்ப்போம்.

ராகுவின் பலன்கள்


இதுவரை உங்கள் ராசிக்கு ஒன்பதில் அமர்ந்து கொண்டு கிடைக்கின்ற வாய்ப்புகளையெல்லாம் தட்டிவிட்டதுடன், கையில் ஒரு காசும் தங்கவிடாமல் துடைத்தெடுத்த ராகு பகவான் இப்போது எட்டில் சென்று மறைகிறார். ராகு எட்டில் மறைவதால் அல்லல் பட்ட உங்கள் மனம் இனி அமைதியாகும். திக்குமுக்காடிக் கொண்டிந்த நீங்கள் இனி திசையறிந்து பயணிப்பீர்கள். இழுபறியாக இருந்த காரியங்களெல்லாம் இனி ஒவ்வொன்றாக முடியும். தந்தையின் உடல்நலம் அடிக்கடி பாதிக்கப்பட்டதே! இனி ஆரோக்கியம் கூடும். தந்தைவழிச் சொத்து கைக்கு வரும். கணவன் மனைவிக்குள் சின்ன சின்ன விவாதங்கள் வந்து நீங்கும். உங்களைச் சிலர் குறைத்து மதிப்பீடார்களே! இப்போது அவர்கள் ஆச்சர்யப்படும்படிப் பல விதங்களில் சாதிப்பீர்கள். சிலரின் ஆலோசனையைக் கேட்டுத் தவறான பாதையில் சென்று பலவிதங்களிலும் சிக்கித்தவித்தீர்களே, இனி நேர்பாதையில் பயணிப்பீர்கள். உறவினர்கள், நண்பர்களிடம் குடும்ப விஷயங்களைச் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். திடீர் பயணங்கள் அதிகரிக்கும். ராகு 8-ல் அமர்வதால் வாழ்க்கைத்துணைக்கு ஆரோக்கியத்தில் சிறு பிரச்னை வந்து நீங்கும். கொஞ்சம் கூடுதலாக அக்கறை காட்டுங்கள்.

ராகுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:


உங்களின் தன, லாபாதிபதியுமான புதனின் ரேவதி நட்சத்திரத்தில் 8.10.23 முதல் 15.6.24 வரை ராகுபகவான் செல்வதால் ஓரளவு பணவரவு உண்டு. மூத்த சகோதரர் உதவுவார். சிறுசிறு அறுவை சிகிச்சை, மன உளைச்சல், தூக்கமின்மை, வீண் செலவுகள் வந்து போகும். வீடு, வாகனம் சேரும். பழைய கசப்பான அனுபவங்கள் நினைவுக்கு வரும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு.  

உங்கள் சஷ்டம, சப்தமாதிபதியுமான சனியின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் 15.6.24 முதல் 22.2.25 வரை ராகுபகவான் செல்வதால் தடுமாற்றம், பணத்தட்டுப்பாடு, சொத்து பிரச்னை, தாயாருக்கு கை, கால் அசதி வலி, வந்து நீங்கும். இழுபறியாக இருந்த வழக்கில் வழக்கறிஞரை மாற்றுவீர்கள். பழைய பிரச்னைகள் மீண்டும் தலைத்தூக்கும். உறவினர்கள் நன்றி மறந்து பேசுவார்கள். குடும்ப விஷயங்களைப் பற்றி அக்கம்-பக்கத்தினரிடம் விவாதிக்க வேண்டாம்.  

உங்கள் பூர்வபுண்ணியாதிபதியும், அட்டமாதிபதியுமான குருபகவானின் பூரட்டாதி நட்சத்திரத்தில் 22.2.25 முதல் 26.4.25 வரை ராகுபகவான் செல்வதால் எதிர்பார்த்த பணம் வரும். மகளுக்கு திருமணம் முடியும். குழந்தை பாக்கியம் உண்டாகும். விலையுயர்ந்த ஆடை, ஆபரணம் சேரும். வீடு கட்ட வங்கியிருந்து லோன் கிடைக்கும். அயல்நாட்டிலிருப்பவர்களால் உதவிகள் உண்டு. ஹிந்தி, தெலுங்கு பேசுபவர்களால் திடீர் திருப்பம் உண்டாகும். ஆன்மிகக் காரியங்கள் பலவும் செய்வீர்கள்.

பிள்ளைகளின் எதிர்காலம் என்னவாகுமோ? என்று அவ்வப்போது கவலைப்பட்டீர்களே!  இனி வருந்தவேண்டாம். குடும்ப சூழ்நிலையைப் புரிந்து நடந்து கொள்வார்கள். உயர்கல்வியில் வெற்றி பெற்று உங்களை பெருமையடையச் செய்வார்கள். மகளுக்குத் தள்ளிப் போன கல்யாணம் கூடி வரும். நல்ல மணமகன் வந்தமைவார். புது வீடு மாறுவீர்கள். வெளிமாநில புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். வெளிவட்டாரத்தில் உங்களைச் சிலர் விமர்சனம் செய்வார்கள். கவலை வேண்டாம். அதனால் உங்கள் புகழ் கூடத்தான் செய்யும். விலை உயர்ந்த பொருள்களை கவனமாகக் கையாளப் பாருங்கள். தங்க ஆபரணங்களை இரவல் கொடுக்கவோ, வாங்கவோ வேண்டாம். வெளியூர் செல்லும்போது வீட்டை பாதுகாப்பாகப் பூட்டியிருக்கோமா என்று ஒருதடவைக்கு இருதடவை சரிபார்த்துக்கொள்ளுங்கள். யாருக்காகவும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். உணவு விஷயங்களில் கொஞ்சம் கட்டுபாடு தேவை. முடிந்த வரையில் வறுத்த, பொறித்த உணவு வகைகளைத் தவிர்த்துவிடுங்கள். காய்கறி, கீரை வகைகளை அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள். திருமணம் தடைபட்டுப் போய்க் கிடந்த பெண்களுக்கு மனம்போல் மாங்கல்யம் வந்துசேரும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். மாணவர் உயர்கல்வியில் கூடுதல் கவனம் செலுத்தி படியுங்கள்.  விடைகளையும் எழுதி பாருங்கள். நண்பர்களுடன் மனஸ்தாபங்கள் வெடிக்கும். விட்டுக் கொடுத்து போங்கள். அரசியல்வாதிகள் அவசர முடிவுகளைத் தவிர்ப்பது நல்லது. வீண் விமர்சனம் வேண்டாம்.

வியாபாரிகளுக்குப் பழைய சரக்குகள் விற்றுத்தீரும். மற்றவர்களை நம்பி பெரிய முதலீடுகளைப் போடாதீர்கள். வரவேண்டிய பாக்கிகளை நயமாகப் பேசி வசூல் செய்யுங்கள். ஷேர், புரோக்கரேஜ், கமிஷன் வகைகளால் லாபமுண்டு. உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரியின் அடக்கு முறை மாறும். இனி உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். சலுகைகளுடன், பதவியும் உயரும். கணினி துறையினருக்கு வெளிநாட்டிலிருந்து புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கலைத்துறையினரின் போராட்டத்திற்குப் பலன் கிட்டும். புது வாய்ப்புகள் வரும். மூத்த கலைஞர்களால் பாராட்டப்படுவீர்கள்.

கேதுவின் பலன்கள்:


இதுவரை உங்கள் ராசிக்கு மூன்றாவது வீட்டில் அமர்ந்து கொண்டு மன உறுதியையும், விடாமுயற்சியையும், தன்னம்பிக்கையையும் கொடுத்து வந்த கேது பகவான் இப்போது ராசிக்கு இரண்டாவது வீட்டில் நுழைகிறார். இனி சாணக்கியத் தனமாகப் பேசி சில காரியங்களைச் சாதிப்பீர்கள். ஆனால் சில நேரங்களில் சொற்குற்றம், பொருட் குற்றத்தில் சிக்குவீர்கள். சிலர் நீங்கள் பேசுவதைத் தவறாக புரிந்து கொண்டு சண்டைக்கு வருவார்கள். கையிருப்புகள் கரையுமளவிற்கு அத்தியாவசியச் செலவுகள் அதிகரிக்கும். கண் எரிச்சல், பல்வலி வந்து நீங்கும். மகளின் திருமணத்தை ஊரே மெச்சும்படி சிறப்பாக நடத்தவேண்டுமென நினைத்திருந்தீர்களே! உங்களின் கனவு இப்போது பலிக்கும். மகனுக்கு நிரந்தமான வேலை இல்லையே என வருந்தினீர்களே! இப்போது நல்ல வேலை கிடைக்கும். உங்களை சிலர் குறைத்து மதிப்பீடார்களே! அவர்களெல்லாம் ஆச்சர்யப்படும்படி பல விதங்களில் சாதிப்பீர்கள். அயல்நாட்டுப் பயணங்கள் தேடி. வரும். வாகனத்தை கவனமாக இயக்கப்பாருங்கள். தூக்கமின்மை, மன உளைச்சல் வந்து போகும்.

கேதுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:


உங்களின் சுகாதிபதியும் ,பாக்கியாதிபதியுமான செவ்வாயின் சித்திரை நட்சத்திரத்தில் 8.10.23 முதல் 11.2.24 வரை கேதுபகவான் செல்வதால் இக்காலக்கட்டங்களில் பணப்புழக்கம் அதிகரிக்கும். புது வேலைக்கு முயற்சி செய்தீர்களே! நல்ல பதில் வரும். அதிகார பதவியில் இருப்பவர்கள், தொழிலதிபர்கள் உதவுவார்கள். பழைய சொந்தங்கள் தேடி வரும். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள்.    

உங்களின் விரையாதிபதியான சந்திரனின் அஸ்தம் நட்சத்திரத்தில் 11.2.24 முதல் 19.10.24 வரை கேது செல்வதால் புது சொத்து வாங்குவீர்கள். திடீர் பயணங்கள் அதிகரிக்கும். செலவுகள் கட்டுக்கடங்காமல் போவதால் சேமிப்புகள் கரையும். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள். மகான்கள், சித்தர்களின் ஆசி கிட்டும்.  

உங்களின் ராசிநாதனான சூரியனின் உத்திரம் நட்சத்திரத்தில் 19.10.24 முதல் 26.4.25 வரை கேது செல்வதால் வாழ்வின் சூட்சுமத்தை அறிவீர்கள். துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். மகனுக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். தொட்ட காரியங்கள் துலங்கும்.  

கேதுபகவான் 2-ம் வீட்டில் அமர்வதால் பார்வைக் கோளாறு வரக்கூடும்-. கண்னை பரிசோதித்துக் கொள்ளுங்கள். அநாவசிய உறுதிமொழிகளைத் தவிர்ப்பது நல்லது. 1.5.24 முதல் குருபகவான் கேதுவை பார்ப்பதால் குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். திருமணம், சீமந்தம் போன்ற சுபநிகழ்ச்சிகள் வீட்டில் நடக்கும்.  

மொத்தத்தில் இந்த ராகு கேது மாற்றம் உங்களைச் சந்தர்ப்ப சூழ்நிலைக்குத் தகுந்தாறுபோல செயல்படவைக்கும் அனுபவ அறிவைத் தருவதுடன், ஓரளவு வசதி வாய்ப்புகளையும், நிம்மதியையும் தருவதாக அமையும்.

பரிகாரம் :

புதபகவானுக்குரிய கன்னியிலும் குருபகவானுடைய மீனத்தில் கேதுவும் ராகும் சஞ்சாரம் செல்ல இருப்பதால் பெருமாள் வழிபாடும் தட்சிணாமூர்த்தி வழிபாடும் பலன் தரும். வாய்ப்பிருப்பவர்கள் ஒருமுறை சரபேஸ்வரர் சந்நிதி இருக்கும் ஆலயம் சென்று வழிபட்டு வாருங்கள். வெள்ளிக்கிழமை ராகு கால வேளையிலோ ஞாயிற்றுக்கிழமை ராகு கால வேளையிலோ நவகிரக சந்நிதிக்குச் சென்று விளக்கேற்றி வழிபட்டு வாருங்கள் நன்மைகள் நடைபெறும்.




 ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 - 2025 : கே.பி. வித்யாதரன்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 30, 2023 8:18 pm

 ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 - 2025 : கே.பி. வித்யாதரன்! WV4JJwX

கன்னி - ராகு கேது பெயர்ச்சி பலன்கள்


மற்றவர்கள் முயன்று முடியாது என ஒதுக்கித் தள்ளிய விஷயத்தைக் கையிலெடுத்து முடித்துக் காட்டுவீர்கள். யாருடைய உருட்டல், மிரட்டலுக்கும் அஞ்சமாட்டீர்கள். கை ஓங்கினால் சர்வாதிகாரியாகும் நீங்கள், கும்பிட்ட கைகளுக்கு வாரி வழங்குவீர்கள். குழந்தைகளைக் கண்டால் குதுகளிக்கும் உங்கள் மனசின் ஓரத்தில் விளையாட்டுத்தனமும் ஒளிந்திருக்கும். சாயா கிரகங்களான இந்த ராகுவும், கேதுவும் 8.10.23 முதல் 26.4.25 வரை உள்ள காலகட்டத்தில் உங்களுக்கு என்ன செய்யப் போகிறார்கள் என்பதை பார்ப்போம்

ராகுவின் பலன்கள்


ராகு பகவான் இப்போது ராசிக்கு ஏழாம் வீட்டில் வந்து அமர்வதால், திக்கு திசையறிந்து வெளியுலகத்திற்கு வருவீர்கள். உங்களின் அறிவுத்திறனை மழுங்க வைத்த ராகுபகவான், இப்போது உங்களுக்குள் ஒளிந்து கிடந்த திறமைகளை எல்லாம் வெளிக்கொண்டு வரப்போகிறார். தொட்டதுக்கெல்லாம் வீண் விவாதங்களும், மன உளைச்சலும், டென்ஷனும்தானே மிஞ்சியது. அவையெல்லாம் இனி விலகும்.

எந்த விஷயத்தையும் மற்றவர்களின் ஆலோசனையின்றி சுயமாக சிந்தித்து முடிவெடுங்கள். குடும்பத்தினர் உங்கள் வார்த்தைக்கு முக்கியத்துவம் தருவார்கள். கணவன்-மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். என்றாலும் களஸ்திர ஸ்தானமான ஏழாம் வீட்டில் ராகு அமர்வதால் மனைவியுடன் சின்ன சின்ன வாக்கு வாதங்கள் வரத்தான் செய்யும். பெரிதுபடுத்த வேண்டாம். மனைவிக்குக் கர்ப்பப்பை கோளாறு, ரத்த அழுத்தம் வந்து போகும். மனைவிவழி உறவினர்களால் அவ்வப்போது கருத்துவேறுபாடுகளும் வந்து போகும். பிள்ளைப் பாக்கியத்துக்காகக் காத்திருக்கும் அன்பர்களுக்குப் பிள்ளை வரம் கிடைக்கும். அரசு வேலைகள் விரைந்து முடியும். குலதெய்வத்திற்குச் செய்யவேண்டிய நேர்த்திக் கடனைச் சிறப்பாக முடிப்பீர்கள்.

ராகுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்


உங்கள் ராசிநாதனும், ஜீவனாதிபதியுமான புதனின் ரேவதி நட்சத்திரத்தில் 8.10.23 முதல் 15.6.24 வரை ராகுபகவான் செல்வதால், பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். திடீர் பணவரவால் சேமிப்பீர்கள். விலையுயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். வழக்கால் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். பழைய வீட்டை விற்று, உங்கள் ரசனைக்கேற்பப் புது இடம் வாங்குவீர்கள்.

உங்களின் பூர்வபுண்ணியாதிபதியும், சஷ்டமாதிபதியுமான சனியின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் 15.6.24 முதல் 22.2.25 வரை ராகுபகவான் செல்வதால் எதிலும் வெற்றி உண்டு. நாடாளுபவர்களின் அறிமுகம் கிடைக்கும். சொத்துத் தகராறு சுமுகமாக முடியும். அரசியலில் செல்வாக்கு கூடும். வாகனம் வாங்குவீர்கள். திருமணம், சீமந்தம் என வீடு களை கட்டும்.

உங்களின் சுகாதிபதியும், சப்தமாதிபதியுமான குருபகவானின் பூரட்டாதி நட்சத்திரத்தில் 22.2.25 முதல் 26.4.25 முடிய ராகுபகவான் செல்வதால், அநாவசியச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். பழைய பிரச்னைகள் முடிவுக்கு வரும். அயல்நாடுப் பயணம் சாதகமாக அமையும்.

பிள்ளைகளின் வருங்காலத்தை மனதில் கொண்டு சேமிப்பீர்கள். அவர்கள், உயர்கல்வியில் வெற்றி பெற்று உங்களைப் பெருமைபடுத்துவார்கள். நிரந்தர வேலையின்றி தவித்துக் கொண்டிருந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தாழ்வுமனப்பான்மை, குழப்பங்களிலிருந்து விடுபடுவீர்கள். ஜாமீன், காரெண்டர் என்று கையெழுத்திட்டு மாட்டிக் கொள்ளாதீர்கள். கன்னிப் பெண்களுக்கு மாதவிடாய்க் கோளாறுகள், மன இறுக்கங்கள் விலகும். மாணவர்களுக்கு, விளையாடும்போது கவனம் தேவை. அரசியல்வாதிகள் தலைமையைப் பற்றி விமர்சிக்க வேண்டாம்.

வியாபாரத்தில் போட்டியாளர்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் உங்கள் அணுகுமுறையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரியின் போக்கை அறிந்து நடந்துகொள்ளுங்கள். பதவி உயர்வு உண்டு. கணிணித் துறையின ருக்கு வேலைச்சுமை அதிகரிக்கும். எனினும் மகிழ்ச்சிக்குக் குறை இருக்காது. கலைத்துறையினர் போராடி வெற்றி பெறுவார்கள். உங்களின் படைப்புகளுக்கு பாராட்டும் பரிசும் உண்டு; பணம் சேரும்.

கேதுவின் பலன்கள்


கேது பகவான் உங்கள் ராசியிலேயே வந்து அமர்வதால் இனி சமயோஜித புத்தியுடன் பேசவைப்பார். எப்போது பார்த்தாலும் எதிர்மறையாக சிந்தித்த நீங்கள், இனி ஆக்கபூர்வமாகச் செயல்படுவீர்கள். குடும்பத்தினருடன் இருந்து வந்த கூச்சல் குழப்பங்கள் நீங்கும். இனி அவர்களின் உணர்வுக்கு முக்கியத்துவம் அளிப்பீர்கள். பிள்ளைகளின் வருங்காலம் குறித்த கவலைகள் அவ்வப்போது வந்து போகும். தலைச்சுற்றல், சோர்வு, காய்ச்சல், தூக்கமின்மை, எதிலும் ஒரு சலிப்பு, டென்ஷன் வந்து நீங்கும்.

வாங்கிய கடனை எப்படி அடைக்கப் போகிறோமோ என்ற பயம் வரும். உடன்பிறந்தவர்களால் வீண் விவாதமும், மன உளைச்சலும் வந்து போகும். திடீர்ப் பயணங்களால் கையிருப்பு கரையும். இரவு நேரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. பெரிய நோய் இருப்பது போன்ற பிரம்மை வந்து நீங்கும்.

கேது பகவானின் நட்சத்திர சஞ்சாரம்


உங்களின் தைரிய, அஷ்டமாதிபதியான செவ்வாயின் சித்திரை நட்சத்திரத் தில் 8.10.23 முதல் 11.2.24 வரை கேதுபகவான் செல்வதால், பலம் பலவீனத்தை உணர்வீர்கள். பழைய கடன் தீரும். வருமானம் உயரும். பங்காளிப் பிரச்னை தீரும். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். தாயாரின் உடல் நலம் சீராகும்.

உங்களின் லாபாதிபதியான சந்திரனின் அஸ்தம் நட்சத்திரத்தில் 11.2.24 முதல் 19.10.24 வரை கேது செல்வதால் உங்களின் புத்திசாலித்தனம் வெளிப்படும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக்கொள்ளுங்கள். மனைவி வழியில் உதவிகள் உண்டு; பிள்ளைகளால் மகிழ்ச்சி தங்கும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். மூத்த சகோதரர் ஆதரவாகப் பேசுவார்.

உங்களின் விரயாதிபதியான சூரியனின் உத்திரம் நட்சத்திரத்தில் 19.10.24 முதல் 26.4.25 வரை கேது செல்வதால் வெளிவட்டாரத்தில் மதிப்பு, மரியாதை கூடும். வரவேண்டிய பணம் கைக்கு வந்து சேரும். எதிர்பாராத பெரிய பதவிகள், பிரபலங்களின் நட்பு, நாடாளுபவர்களால் பலன் அடைதல், வாகனம் வாங்குதல் ஆகியன பலன்கள் உண்டாகும்.

1.5.24 முதல் குரு உங்கள் ராசியில் உள்ள கேதுவைப் பார்ப்பதால் வெளி வட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். சமூகத்தில் உங்களின் மதிப்பும் அந்தஸ்தும் உயரும். சொத்து சம்பந்தப்பட்ட வழக்குகள் உங்களுக்குச் சாதகமாக முடியும். புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவதால் தெய்வப் பலம் கூடும். தியானம், யோகா ஆகியவற்றில் ஈடுபாடு அதிகரிக்கும். அக்கம்பக்கத்தாரின் ஆதரவு இருந்தாலும் சில நேரங்களில் அவர்களால் சச்சரவுகளும் இருக்கும்.

வியாபாரத்தில் பழைய பாக்கிகளைப் போராடி வசூலிப்பீர்கள். கொடுக்கல் வாங்கலில் நிம்மதியுண்டு. புது ஏஜென்ஸி எடுப்பீர்கள். அரசுக் காரியங்களில் அலட்சியம் வேண்டாம். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கத்தான் செய்யும். எனினும் மூத்த அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்; அவர் மூலம் சில சலுகைகளை அடைவீர்கள். உடன் பணி புரிபவர்கள் உங்களைக் குறை கூறத்தான் செய்வார்கள்; அவர்களின் விமர்சனங்கள் குறித்து கவலைப்பட வேண்டாம். சகலரையும் அனுசரித்துச் செல்லுங்கள்.

மொத்தத்தில் இந்த ராகு-கேதுப் பெயர்ச்சி வேலைச்சுமையால் களைப்பு, சோர்வையும், சின்னச் சின்ன தோல்விகளால் மனஇறுக்கத்தைத் தந்தாலும் தெய்வப் பலத்தாலும் கடின உழைப்பாலும் இலக்கை அடையவைக்கும்.

பரிகாரம் :

ஆஞ்சநேய வழிபாடு அல்லல்கள் அகற்றும். வியாழக் கிழமைகளில் வடைமாலை அல்லது வெற்றிலை மாலை சாத்தி அனுமனை வழிபடலாம். இயன்றபோதெல்லாம் ராமநாமம் ஜபித்து அனுமனை மகிழ்வியுங்கள்; கிரக தோஷங்கள் பாதிப்புகளைத் தராது. மேலும், ஈரோடுக்கு அருகேயுள்ள கொடுமுடியில் இருந்து சுமார் 7 கி.மீ. தொலைவிலுள்ள ஊஞ்சலூர் எனும் தலத்தில் வீற்றிருக்கும் நாகேஸ்வரரை வணங்குங்கள். அகதிகளுக்கு உதவுங்கள். நினைப்பதெல்லாம் நிறைவேறும்.




 ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 - 2025 : கே.பி. வித்யாதரன்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 30, 2023 8:25 pm

 ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 - 2025 : கே.பி. வித்யாதரன்! 0KCGZ0B

துலாம் - ராகுகேது பெயர்ச்சி பலன்கள்


தன் பெண்டு, தன் பிள்ளை, சோறு, வீடு, சம்பாத்யம் இவையுண்டு, தானுண்டு என்றில்லாமல் சுற்றம்-நட்புக்காகவும் உழைப்பவர்கள் துலாம் ராசிக்காரர்கள். பத்து ரூபாயைப் பையில் வைத்துக் கொண்டு பத்தாயிரம் ரூபாய்ப் பொருளை விலைபேசும் அளவிற்கு சாதுர்யமானவர்கள்.

உங்களுக்கு ராகுவும், கேதுவும் 8.10.2023 முதல் 26.4.2025 வரை உள்ள காலகட்டத்தில் எப்படிப்பட்ட பலன்கள் தர இருக்கிறார்கள் என்பதைப் பார்ப்போம்.

ராகுவின் பலன்கள்


ராசிக்கு ஏழாவது வீட்டில் நின்று கொண்டு உங்களை திக்கு திசையறியாது திணற வைத்ததுடன், பாடாய்படுத்திய ராகுபகவான் இப்போது உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் ஆற்றலுடன் வந்தமர்வதால் குடும்பத்தில் ஒற்றுமை ஓங்கும். வீண் சந்தேகம், ஈகோவால் பிரிந்த கணவன்-மனைவி ஒன்று சேர்வார்கள். வாழ்க்கைத்துணையின் ஆரோக்கியம் மேம்படும். கடனில் ஒரு பகுதியைப் பைசல் செய்வீர்கள். புதிய டிசைனில் ஆபரணங்களை வாங்குவீர்கள். பிள்ளைகளின் ஆசைகளைக் கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்தி முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். தந்தைவழி உறவினர்களால் ஏற்பட்ட சிக்கல்கள் தீரும்.

ராகுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:


உங்கள் பாக்கிய, விரயாதிபதியான புதனின் ரேவதி நட்சத்திரத்தில் 8.10.23 முதல் 15.6.24 வரை ராகுபகவான் செல்வதால் ஓரளவு வசதி, வாய்ப்புகள் பெருகும். வீட்டிற்குத் தேவையான பொருள்கள் வாங்குவீர்கள். உறவினர்கள் மத்தியிலிருந்த கசப்புணர்வுகள் நீங்கும். பாகப்பிரிவினை சுமுகமாக முடியும்.

உங்களின் சுகாதிபதியும், பூர்வபுண்ணியாதிபதியுமான சனியின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் 15.6.24 முதல் 22.2.25 வரை ராகுபகவான் செல்வதால் தாய்வழி உறவினர்களால் அலைச்சலும், செலவும் உண்டு. குழந்தை பாக்கியம் கிட்டும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்குக் கூடும். வீடு, மனை சேரும்.

உங்களின் சேவக, சஸ்டமாதிபதியுமான குருபகவானின் பூரட்டாதி நட்சத்திரத்தில் 22.2.25 முதல் 26.4.25 வரை ராகுபகவான் செல்வதால் பயணத்தின்போது கவனம் தேவை. மற்றவர்களை நம்பிப் பெரிய காரியங்களில் இறங்க வேண்டாம். வீண் விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம்

வெளியூர் பயணங்கள் திருப்திகரமாகும். மனைவிவழி உறவினர்களால் ஆதாயமுண்டு. பணப்பற்றாக்குறையால் பாதியிலேயே நின்றுபோன கட்டடப் பணிகளை, இனி முடிவடையும். சொத்து சம்பந்தப்பட்ட வழக்குகள் சாதகமாகும். உங்களைக் கண்டும் காணாமல் சென்ற உறவினர்களும், நண்பர்களும் இனி ஓடிவந்து உதவுவார்கள். குழந்தை இல்லையே என்று வருந்திய தம்பதிகளுக்குப் பிள்ளை பாக்கியம் உண்டாகும். வேலை இல்லாமல் அலைந்துத் திரிந்தவர்களுக்கு அவர்களின் படிப்பிற்குத் தகுந்த வேலை கிடைக்கும்.

மாணவர்களுக்கு நினைவாற்றல் பெருகும். மதிப்பெண் உயரும். ஆசிரியரின் ஆதரவு உண்டு. நல்ல நட்புச் சூழல் உருவாகும். அரசியல்வாதிகளுக்கு தலைமையின் அன்பும்,அரவணைப்பும் கிட்டும். என்றாலும் சகாக்களுக்கு மத்தியில் கொஞ்சம் பொறாமை இருக்கத்தான் செய்யும்.

வியாபாரிகள் புது யுக்திகளைக் கையாண்டு லாபத்தை பெருக்குவார்கள். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும். மருந்து, எண்ணெய் வித்துக்கள், ஏற்றுமதி-இறக்குமதி வகைகளால் ஆதாயம் அடைவீர்கள். உத்தியோகஸ்தர்களே! தொந்தரவு கொடுத்து வந்த மேலதிகாரி இனி கனிவாகப் பேசுவார். சக ஊழியர்களும் உங்களிடம் நட்புறவாடுவார்கள். வெளிநாட்டு வாய்ப்புகள் தேடி வரும். கலைத்துறையினர்களின் கற்பனைக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைக்கும்.

கேதுவின் பலன்கள்:


;இதுவரை உங்களின் ராசியிலேயே அமர்ந்து விரக்தியின் விளிம்பிற்கே அழைத்துச் சென்ற கேது இப்போது பனிரெண்டில் சென்று அமர்கிறார். இனி அந்த நிலையெல்லாம் மாறும். கோபம் குறையும். முகம் மலரும். இனி உடம்பு லேசாகும். தயக்கம், தடுமாற்றம் நீங்கும். இனி இடம், பொருள், ஏவலறிந்து பேசுவீர்கள். பேச்சில் முதிர்ச்சித் தெரியும். ஆரோக்கியம் மேம்படும். முன்கோபம் விலகும். குடும்பத்தினரின் தேவைகளைப் புரிந்து கொள்வீர்கள். மகனுக்குத் தடைப்பட்ட திருமணம் முடியும். உடல் சோர்வு, அசதி நீங்கி சுறுசுறுப்படைவீர்கள். மருத்துவச் செலவுகள் குறையும். எதிலும் பிடிப்பில்லாமல் இருந்தீர்களே! இனி அனைத்திலும் ஆர்வம் பிறக்கும். உடன்பிறந்தவர்களிடையே சின்ன சின்ன மனஸ்தாபங்கள் வந்து போனாலும் ஒற்றுமை குறையாது. பூர்வீகச் சொத்து சம்பந்தப்பட்ட பிரச்னைகள் தீரும். குலதெய்வ பிராத்தனைகளைப் பூர்த்தி செய்வீர்கள்.

கேதுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்


;உங்களின் தனாதிபதியும், சப்தமாதிபதியுமான செவ்வாயின் சித்திரை நட்சத்திரத்தில் 8.10.23 முதல் 11.2.24 வரை கேதுபகவான் செல்வதால் வயிற்று வலி, தலை வலி வந்து நீங்கும். சகோதரர்களால் வீண் விவாதங்கள் வரக்கூடும். வீடு, மனை வாங்குவது விற்பதில் கொஞ்சம் கவனமாகச் செயல்படுங்கள். மனைவிவழி உறவினர்களுடன் மனத்தாங்கல் வந்து நீங்கும்.

உங்களின் ஜீவனாதிபதியான சந்திரனின் அஸ்தம் நட்சத்திரத்தில் 11.02.24 முதல் 19.10.24 வரை கேது செல்வதால் சவாலான காரியங்களையும் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். வேலை கிடைக்கும். புண்ணிய தலங்கள் சென்று வருவீர்கள். ஆபரணங்கள் வாங்குவீர்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். வெளிவட்டாரத்தில் செல்வாக்குக் கூடும்.

உங்களின் லாப, பாதகாதிபதியான சூரியனின் உத்திரம் நட்சத்திரத்தில் 19.10.24 முதல் 26.04.25 வரை கேது செல்வதால் மன இறுக்கம் நீங்கும். சிலர் உங்களை விமர்சித்துப் பேசுவார்கள். வீண் வதந்திகள் வரத்தான் செய்யும். கொடுக்கல்-வாங்கலில் நிதானம் தேவை. காசோலைகளை கவனமாகக் கையாளுங்கள். பணப்புழக்கம் சுமாராக இருக்கும்.

1.05.2024 முதல் கேதுவை குரு பார்ப்பதால் வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். சொந்த ஊரில் உங்களின் செல்வாக்கு ஒருபடி உயரும். நிகழ்ச்சிகளில் முதல் மரியாதைக் கிடைக்கும். பிரபலங்களின் அறிமுகத்தால் சில தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வீர்கள். அருகிலிருக்கும் கோயிலுக்குக்கூடப் போக முடியாமல் போனதே! இனி புகழ் பெற்ற புண்ணிய தலங்களுக்கு அடிக்கடி செல்வீர்கள். அண்டை வீட்டாரின் அன்புத்தொல்லை நீங்கும்.

வியாபாரத்தில் வர வேண்டிய பாக்கிகள் வசூலாகும். வேலையாட்கள் முழு ஆதரவு கொடுப்பார்கள். கொடுக்கல்-வாங்கலில் நிம்மதி ஏற்படும். உத்தியோகத்தில் எல்லோராலும் மதிக்கப்படுவீர்கள். அலுவலகப் பிரச்னைகள் நீங்கி நிம்மதி பிறக்கும். நீங்கள் விருப்பப்பட்ட இடத்திற்கே இடமாற்றம் உண்டு. வெகுநாள்களாக இழுபறியில் இருந்த சம்பள உயர்வும், பதவியுயர்வும் இனித் தேடி வரும்.

இந்த ராகு-கேது மாற்றம் பிரச்னை புயலில் சிக்கியிருந்த உங்களைக் கரையேற்றுவதுடன் அதிரடி முன்னேற்றங்களையும் அள்ளித் தருவதாக அமையும்.

பரிகாரம்:

நரசிம்மர் ஆலயத்துக்குப் பிரதோஷ நாளில் சென்று வழிபாடு செய்துவாருங்கள். ஸ்ரீவராகர் மூலவரக இருக்கும் ஆலயத்துக்குச் சென்று வழிபாடு செய்துவர தடைப்பட்ட சுபகாரியங்கள் கூடிவரும். திருப்பதிக்குச் செல்லும் வழியில் உள்ள ஸ்ரீகாளஹஸ்திக்குச் சென்று, ஸ்ரீகாளத்திநாதரையும், ஸ்ரீஞானப்பூங்கோதை அம்பாளையும் வழிபட்டு வாருங்கள். இதய நோயாளிகளுக்கு உதவுங்கள்; வாழ்வில் நிம்மதி கிடைக்கும்.




 ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 - 2025 : கே.பி. வித்யாதரன்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

krishnaamma இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 30, 2023 8:31 pm

 ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 - 2025 : கே.பி. வித்யாதரன்! OLvUeun

விருச்சிகம் - ராகுகேது பெயர்ச்சி பலன்கள்


எதிரில் இருப்பவர் பேசத் தொடங்கும் போதே அடுத்ததாக அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை அறிவதில் கில்லாடிகள் நீங்கள்தான். உங்களைப் பணத்தைக் காட்டி விலைக்கு வாங்க முடியாது.

உங்களுக்கு 8.10.23 முதல் 26.4.25 வரை உள்ள காலகட்டத்தில் ராகுவும், கேதுவும் என்ன மாதிரியான பலன்களைத் தரப் போகிறார்கள் என்று பார்ப்போம்.

ராகுவின் பலன்கள்:


இதுவரை உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் அமர்ந்து கொண்டு வீண் அலைச்சல், பகை, கடன் தொந்தரவு என்று கலங்கடித்த ராகுபகவான்! இப்பொழுது உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் அடியெடுத்து வைக்கிறார். ஐந்தாம் இடம் ராகுவுக்கு உகந்த இடமல்ல. என்றாலும் குரு வீட்டில் அமர்வதால் கெடுபலன்களை குறைத்து ஓரளவு நல்லதையே செய்வார். கணவன்-மனைவிக்குள் சந்தோஷம் நிலைக்கும். என்றாலும் தேவையற்ற சந்தேகங்களைத் தவிர்ப்பது அவசியம். பிள்ளைகளின் வருங்காலம் கருதிக் கொஞ்சம் சேமிக்கவும் செய்வீர்கள். அவர்களின் உயர்கல்வி, உத்தியோகம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் அநாவசியமாக மூக்கை நுழைக்க வேண்டாம். நாடாளுபவர்களின் அறிமுகம் கிடைக்கும். அவ்வப்போது மனதில் இனம்புரியாத கவலைகள் வந்து செல்லும். வீட்டில் அடுத்தடுத்து சுபநிகழ்ச்சிகள் நடக்கும். குலதெய்வக் கோயிலைப் புதுப்பிப்பீர்கள். பயணங்களால் ஆதாயமுண்டு. கர்ப்பிணிகள் நெடுந்தூரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது.

ராகுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:


உங்களின் அஷ்டம, லாபாதிபதியுமான புதனின் ரேவதி நட்சத்திரத்தில் 8.10.23 முதல் 15.6.24 வரை ராகுபகவான் செல்வதால் இந்த நட்சத்திரக்காரர்களுக்கு உடல்நலம் சிறிது பாதிக்கும். உணர்ச்சிவசப்பட்டுப் பேசாதீர்கள். எதிலும் பொறுமையாக முடிவெடுப்பது நல்லது. நெருங்கியவராக இருந்தாலும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம்.

உங்களின் சேவ,சுகாதிபதியுமான சனியின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் 15.6.24 முதல் 22.2.25 வரை ராகுபகவான் செல்வதால் இக்காலக்கட்டத்தில் புதிய முதலீடுகளைத் தவிர்ப்பது நல்லது. சிலநேரம் அடுத்தவர்களை நம்பி ஏமாற வேண்டி வரும். வீண் விவாதங்களைத் தவிர்க்கவும். பெரிய நோய்கள் இருப்பது போன்ற பிரமை வரும். வழக்கில் அலட்சியம் வேண்டாம்.

உங்களின் தன, பூர்வபுண்ணியாதிபதி குருபகவானின் பூரட்டாதி நட்சத்திரத்தில் 22.2.25 முதல் 26.4.25 வரை ராகுபகவான் செல்வதால் குடும்பத்தில் நிம்மதி உண்டு. பணப்புழக்கம் அதிகரிக்கும். வீடு கட்ட லோனும் கிடைக்கும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். சுப நிகழ்ச்சிகள் கூடி வரும்.

மகனின் கல்வி, வேலை விஷயமாக நல்ல நிறுவனதிலிருந்து வாய்ப்புகள் வரும். ஆன்மிகவாதிகள், கல்வியாளர்களின் நட்பு கிடைக்கும். குடும்பப் பிரச்னைகளில் உணர்ச்சிவசப்படாமல் அறிவுப்பூர்வமாக அணுகுவது நல்லது. மாணவர்கள் பெற்றோரின் ஆலோசனைக்கு செவி சாய்ப்பீர்கள். உயர்கல்வியில் தேர்ச்சியடைவீர்கள். வகுப்பாசியர் பாராட்டுவார். அரசியல்வாதிகளே! ஒரு அளவுக்கு மேல் எதிர் கட்சியினரை விமர்சித்து பேசவேண்டாம்.

வியாபாரிகளுக்குப் பழைய சரக்குகள் விற்றுத்தீரும். வாடிக்கையாளரை அதிகப்படுத்தும் விதமாக கடையை விரிவுபடுத்தி நவீனமயமாக்குவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்குத் திறமைகளை வெளிப்படுத்தும் வாய்ப்பு உண்டாகும். தேங்கிக்கிடந்த வேலைகளை உடனே முடிப்பீர்கள். சக ஊழியர்களின் ஆதரவுக் கிடைக்கும். எதிர்பார்த்த சம்பள உயர்வு இப்பொழுது கைக்கு வரும். புதிய வாய்ப்புகளும் தேடி வரும். கலைத்துறையினர் வீண் வதந்திகளிலிருந்து விடுபடுவீர்கள். திறமைகளுக்கேற்ப நல்ல நிறுவனத்திலிருந்து வாய்ப்பு கிடைக்கும்.

கேதுவின் பலன்கள்:


இதுவரை உங்கள் ராசிக்குப் பன்னிரெண்டாம் வீட்டில் அமர்ந்து விரயச் செலவுகளையும், வீண் அலைச்சலையும், தூக்கமில்லாமலும் தவிக்க வைத்த கேது பகவான் இப்போது உங்கள் ராசிக்கு லாப வீடான பதினொன்றில் வந்தமருகிறார். வற்றிய பணப்பை நிரம்பும். கைமாற்றாக இருந்த கடனையும் தந்து முடிப்பீர்கள். ஷேர் மூலம் பணம் வரும். வி.ஐ.பிகள், தொழிலதிபர்களின் நட்பைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்வீர்கள். வீட்டில் தடைப்பட்ட சுபகாரியங்கள் ஏற்பாடாகும். குடும்ப வருமானத்தை உயர்த்தக் கூடுதல் நேரம் ஒதுக்கி உழைப்பீர்கள். வேலை பார்த்துக்கொண்டே சின்ன முதலீட்டில் வியாபாரம் செய்ய முயல்வீர்கள். மனைவி நெடு நாள்களாகக் கேட்டுக் கொண்டிருந்த தங்க ஆபரணம், ரத்தினங்களை வாங்கித் தருமளவிற்கு வசதியாக இருப்பீர்கள். இழுபறியான வழக்குகள் சாதகமாக முடியும். மூத்த சகோதரர் உதவுவார். அரைகுறையாக நின்று போன வீட்டைக் கட்டி முடித்து புது வீட்டில் புகுவீர்கள். பழைய பிரச்னைகளெல்லாம் ஒவ்வொன்றாகத் தீரும். போதிய காற்றோட்டம், இடவசதி, தண்ணீர் வசதியில்லாமல் தவித்துக் கொண்டிருந்தவர்கள் இயற்கைச் சூழல்மிகுந்த வீட்டிற்குக் குடி புகுவீர்கள்

கேதுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:


உங்கள் ராசிநாதனும், ரோகாதிபதியுமான செவ்வாயின் சித்திரை நட்சத்திரத்தில் 8.10.23 முதல் 11.2.24 வரை கேதுபகவான் செல்வதால் புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். அலைச்சல் வந்தாலும் நினைத்ததை முடிப்பீர்கள். சகோதர வகையில் சுபச் செலவுகள் உண்டு. சொத்து விஷயங்களில் இழுபறி நிலை மாறும். பழைய கடனை நினைத்து சில நேரங்களில் நிம்மதியிழப்பீர்கள். பிரார்த்தனைகள் நிறைவேறும்.

உங்களின் பாக்கியாதிபதியான சந்திரனின் அஸ்தம் நட்சத்திரத்தில் 11.2.24 முதல் 19.10.24 வரை கேது செல்வதால் பணவரவு அதிகரிக்கும். பிரபலங்கள் உதவுவார்கள். ஷேர் மூலம் பணம் வரும். வேலை கிடைக்கும். ஆடை, ஆபரணங்கள் சேரும். தந்தையாரின் உடல் நிலையில் அக்கறை தேவை. நண்பர்கள் வலிய வந்து பேசுவார்கள். வழக்கில் வெற்றி உண்டு.

உங்களின் ஜீவனாதிபதியான சூரியனின் உத்திரம் நட்சத்திரத்தில் 19.10.24 மதல் 26.4.25 வரை கேது செல்வதால் செல்வாக்குக் கூடும். உங்களின் நிர்வாகத் திறமைக் கூடும். வழக்கு சாதகமாகும். திடீர் பணவரவு உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். சொத்து சேரும். உத்தியோகத்தில் உயர்வு உண்டு. பெரிய பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத்தொல்லை நீங்கும்.

1.5.24 முதல் கேதுவை குரு பார்ப்பதால் நீங்கள் சாதாரணமாகப் பேசினாலே சண்டைக்கு வந்தார்களே! இனி உங்கள் பேச்சில் தெளிவு பிறக்கும். மறைமுக எதிரிகள் அடங்குவார்கள். புதிய நண்பர்களால் ஆதாயமுண்டு. ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தை மாற்றியமைப்பீர்கள். புது ஏஜென்ஸி எடுப்பீர்கள். பங்குதாரர்களை மாற்றுவீர்கள். அரசுக் கெடுபிடிகள் தளரும். வெளிநாட்டிலிருப்பவர்களால் ஆதாயம் உண்டு. உத்தியோகத்தில் உங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளிலிருந்து விடுபடுவீர்கள். கலைத்துறையினருக்கு இது ஏற்ற காலம்.

மொத்தத்தில் இந்த பெயர்ச்சி காலத்தில் ராகு உங்களை பின்னோக்கி இழுத்தாலும், கேதுவின் ஆதரவு வலுவாக உள்ளதால் எங்கும் எதையும் சாதிக்கும் வல்லமையுண்டாகும்.

பரிகாரம்

முருகப் பெருமானை செவ்வாய்க் கிழமைகளில் செந்நிற மலர்கள் சாத்தி வழிபட ராகுவால் ஏற்பட்ட தொல்லை கள் தீரும். பாதாளத்திலிருந்து தோன்றி ஆதிசேஷன் வழிபட்ட தலம் பாமணி. மன்னார்குடிக்கு வடக்கே 3 கி.மீ. தொலைவிலுள்ள இத் தலத்தில், சுயம்பு லிங்கமாக அருளும் ஶ்ரீநாகநாதரையும் ஶ்ரீஅமிர்த நாயகியையும் தரிசியுங்கள். தாயை இழந்தவர்களுக்கு உதவுங்கள்; நல்லது நடக்கும்.




 ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 - 2025 : கே.பி. வித்யாதரன்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 30, 2023 8:37 pm

 ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 - 2025 : கே.பி. வித்யாதரன்! 8ChXT1c

தனுசு - ராகுகேது பெயர்ச்சி பலன்கள்


தங்கத்தின் தரம் கூடக் குறையலாம் ஆனால் உங்கள் நடத்தையின் தரம் என்றும் குறையாது. குடிசை வீட்டில் பிறந்தாலும் விண்ணை முட்டும் உயர்ந்த லட்சியங்களுடன் வாழ்பவர்கள் நீங்கள்தான். ஏக்கர் கணக்கில் சொத்து சேர்ந்தாலும் ஆறடி நிலம்கூட சொந்தமாகப் போவதில்லை என்ற பிரம்ம சூத்திரத்தை அறிந்திருப்பீர்கள்.

உங்களுக்கு இந்த ராகுவும்,கேதுவும் இணைந்து 8.10.23 முதல் 26.4.25 வரை உள்ள காலகட்டங்களில் என்ன மாற்றத்தைத் தருவார்கள் என்று பார்ப்போம்.

ராகுவின் பலன்கள்:


இதுவரை உங்கள் ராசிக்கு ஐந்தில் அமர்ந்து எல்லோரையும் பகையாளி யாக்கிப் பாடாய்படுத்திய ராகுபகவான், இப்போது உங்கள் ராசிக்கு நான்காவது வீட்டில் வந்தமர்கிறார். ஐந்தாம் வீட்டை விட்டு ராகு விலகுவதால் குழந்தை இல்லாமல் தவிர்த்தவர்களுக்குக் குழந்தை பாக்கியம் கிட்டும். பிள்ளைகளின் பிடிவாத குணம் விலகும். இனி உங்கள் பேச்சுக்குக் கட்டுப்படுவார்கள். கணவன்-மனைவிக்குள் அந்நியோன்யம் இனிக்கும். உங்கள் குடும்பத்தில் பிரச்னை ஏற்படக் காரணமாக இருந்தவர்களைக் கண்டறிந்து ஒதுக்குவீர்கள். இழுபறியான வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். பூர்வீகச் சொத்து கைக்கு வரும். பக்குவமாய்ப் பேசி தடைப்பட்ட காரியங்களை முடிப்பீர்கள். குடும்பத்தில் இனி சந்தோஷம் நிலைக்கும். வீட்டில் தாமதமாகிக் கொண்டிருந்த கல்யாணம், காதுகுத்து, சீமந்தம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நல்ல விதத்தில் முடியும். ராகு 4-ம் வீட்டில் அமர்வதால் தாயாருக்கு நரம்புக் கோளாறு, ரத்த அழுத்தம் ஏற்பட்டு குணமாகும். தாய்வழி உறவினர்களால் அலைச்சலும், மனக்கசப்பும் வந்து நீங்கும். பயணங்களில் எச்சரிக்கை தேவை. கடன் பிரச்னை அதிகரிக்கும்.

ராகுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:


உங்களின் சப்தம, ஜீவனாதிபதியுமான புதனின் ரேவதி நட்சத்திரத்தில் 8.10.23 முதல் 15.6.24 வரை ராகுபகவான் செல்வதால் சாதுர்யமாகப் பேசி பல காரியங்களையும் சாதிப்பீர்கள். உங்களின் அனுபவ அறிவு கூடும். பழைய நண்பர்கள், உறவினர்கள் உதவுவார்கள். கோபம் குறையும். திடீர் பயணங்களும், செலவுகளும் அதிகரிக்கும். ஷேர் மூலம் பணம் வரும்.

உங்களின் தன, சேவகாதிபதியுமான சனியின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் 15.6.24 முதல் 22.2.25 வரை ராகுபகவான் செல்வதால் அதிரடியாகச் செயல்படுவீர்கள். வெளிவட்டாரத்தொடர்பு அதிகரிக்கும். தைரியமாகப் புதிய முதலீடுகள் செய்வீர்கள். குடும்பத்தில் அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகளால் மகிழ்ச்சி தங்கும். ஆபரணங்கள் சேரும். புது வாகனம் வாங்குவீர்கள். இளைய சகோதரர் உதவுவார். வழக்கு சாதகமாகும்.

உங்களின் ராசிநாதனும், சுகாதிபதியுமான குருபகவானின் பூரட்டாதி நட்சத்திரத்தில் 22.2.25 முதல் 26.4.25 வரை ராகுபகவான் செல்வதால் சவாலான காரியங்களைக்கூட சாதாரணமாக முடிப்பீர்கள். செல்வாக்குக் கூடும். வேலைச்சுமை அதிகரிக்கும். தாயாரின் நலனில் அதிக அக்கறை காட்டுவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். பணப்புழக்கம் இருக்கும். பெரிய பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். குழந்தை இல்லாதவர்களுக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

சகோதர, சகோதரிகளிடையே இருந்து வந்த மனஸ்தாபங்கள் நீங்கும். வெளி உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. தடைப்பட்ட உயர்கல்வியை மீண்டும் தொடர்வீர்கள். மாணவர்களுக்கு மறதி, மந்தம் நீங்கும். உயர்கல்வியில் அதிக மதிப்பெண் பெறுவீர்கள். அரசியல்வாதிகளுக்கு வேலைச்சுமை அதிகரிக்கும். கௌரவப் பதவிகள் தேடி வரும்.

வியாபாரத்தில் போட்டிகள் ஒருபுறமிருந்தாலும் ராஜதந்திரத்தால் லாபத்தைப் பெருக்குவீர்கள். வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குங்கள். உத்தியோகத்தில் யாராலும் செய்ய முடியாத கஷ்டமான வேலைகளையும் செய்து முடித்து சகஊழியர்களையும் ஆச்சர்யப்படுத்துவீர்கள். மேலதிகாரியைப் பற்றி விமர்சனம் செய்ய வேண்டாம். சிலருக்கு அதிக சம்பளத்துடன் அயல்நாட்டில் வேலை கிடைக்கும். கலைத்துறையினர் நெடுநாள்களாகக் காத்திருந்தற்கேற்பப் புது வாய்ப்புகள் வந்தமையும்.

கேதுவின் பலன்கள்:


இதுவரை உங்களின் ராசிக்கு பதினோராவது வீட்டில் அமர்ந்து ஓரளவு நல்ல பலன்களை௹ தந்த கேது பகவான் இப்போது பத்தாவது வீட்டில் வந்தமர்வதால் எதிலும் ஒரு பதட்டம், டென்ஷன் இருக்கும். நீங்கள் சும்மா இருந்தாலும் சிலர் உங்களைச் சீண்டிப் பாப்பார்கள். எடுத்த வேலையை நான்கைந்து முறை அலைந்து முடிக்க வேண்டியது வரும். அதனால் மன இறுக்கத்துக்குள்ளாவீர்கள். மூத்த சகோதரருடன் இருந்த கருத்துமோதல்கள் விலகும். பிரச்னைகளின் ஆணிவேரைக் கண்டறிந்து களைவீர்கள். குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு முக்கியத்துவம் அதிகரிக்கும். பிள்ளைகளால் உறவினர்கள் மத்தியில் பெருமையடைவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். சேமிக்க முடியாதபடி செலவுகளும் தொடரும்.

கேதுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:


உங்களின் பூர்வபுண்ணியாதிபதியும், விரயாதிபதியுமான செவ்வாயின் சித்திரை நட்சத்திரத்தில் 8.10.23 முதல் 11.2.24 வரை கேதுபகவான் செல்வதால் மதிப்பு, மரியாதை கூடும். சொத்துப் பிரச்னை தீரும். அரசால் ஆதாயமடைவீர்கள். திடீர் பணவரவு உண்டு. பழைய கடனைத் தீர்க்கப் புது உதவிகள் கிடைக்கும். கமிஷன், ஃபைனான்ஸ் வகைகளால் பணம் வரும்.

உங்களின் அஷ்டமாதிபதியான சந்திரனின் அஸ்தம் நட்சத்திரத்தில் 11.02.24 முதல் 19.10.24 வரை கேது செல்வதால் கொஞ்சம் அலைச்சல் இருக்கும். குடும்ப அந்தரங்க விஷயங்களை வெளியிட வேண்டாம். யாரையும் விமர்சித்துப் பேசாதீர்கள். சொந்த வாகனத்தில் இரவு நேரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. விலை உயர்ந்த பொருட்களை இரவல் தர வேண்டாம். பணப்பற்றாக்குறை நீங்கும். முன்கோபத்தைக் குறைப்பது நல்லது. வேலை கிடைக்கும்.

உங்களின் பாக்கியாதிபதியான சூரியனின் உத்திரம் நட்சத்திரத்தில் 19.10.24 முதல் 26.4.25 வரை கேது செல்வதால் வராது என்று நினைத்திருந்த பணம் கைக்கு வரும். பழைய கடனைப் பைசல் செய்வீர்கள். திருமணம் கூடி வரும். புதுமனைப் புகுவீர்கள். வங்கிக் கடன் கிடைக்கும். சிலர் புதுத் தொழில் தொடங்குவீர்கள். தந்தையாருடன் இருந்த மனத்தாங்கல் நீங்கும். பிதுர்வழி சொத்து கைக்கு வரும். பாகப் பிரிவினை சுமுகமாகும்.

1.5.24 முதல் கேதுவை குரு பார்ப்பதால் நாடாளுபவர்கள், தொழிலதிபர்களின் நட்பு கிட்டும். வெளிநாட்டில் வேலை அமையும். உங்களை ஏமாற்றிக் கொண்டிருந்தவர்களை இனங்கண்டறிந்து ஒதுக்குவீர்கள். தூரத்து உறவினர்கள், நண்பர்களால் ஆதாயமுண்டு. உங்களை ஏளனமாக நினைத்தவர்கள் எல்லாம் இனிப் பாராட்டி பேசுமளவிற்கு உங்கள் நிலை உயரும்.

வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்கும். வீண் வறட்டுக் கௌரவத்திற்காகக் கையிருப்பை கரைக்காதீர்கள். வேற்று மொழியினர் உதவுவார்கள். நெருங்கிய உறவினர்களால் கொஞ்சம் செலவுகளும், அலைச்சலும் வரும். சிக்கனத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. வியாபாரத்தில் அவசரப்பட்டுப் பெரிய முதலீடுகள் இறக்காதீர்கள். பழைய வாடிக்கையாளர்களைத் தக்க வைத்துக்கொள்ளப் போராட வேண்டியது வரும். விளம்பர யுக்திகளைக் கையாளுவீர்கள்.

மொத்ததில் இந்த ராகு-கேதுப் பெயர்ச்சி உங்களை ஓய்வெடுக்க முடியாதபடி கொஞ்சம் கசக்கி பிழிந்தாலும் இறுதியில் எல்லாம் நன்மைக்கே என்பதைப் புரிய வைக்கும்.

பரிகாரம்:

தேய்பிறை அஷ்டமி அன்று கால பைரவரை வழி படுங்கள். வெள்ளிக் கிழமை ராகு காலத்தில் துர்கை அம்மனுக்கு நெய் விளக்கேற்றி எலுமி ச்சை மாலை சாத்தி வழிபடுங்கள். வாழ் வில் துன்பங்கள் நீங்கி இன்பம் பிறக்கும்.

கும்பகோணம் நகரத்தின் மையத்தில் அமைந்துள்ள - ஆதிசேஷன் வழிபட்ட ஸ்ரீநாகேஸ் வரர் கோயிலில் அருளும் ஸ்ரீநாகேஸ் வரரையும் ஸ்ரீபெரிய நாயகியையும் வழிபட்டு வாருங்கள். மாற்றுத் திறனாளிக்கு உதவுங்கள்; வாழ்வில் வெற்றி கிட்டும்.




 ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 - 2025 : கே.பி. வித்யாதரன்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக