புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சினிமாவில் மாற்றவே முடியாத சில ‘க்ளீஷே’க்கள்:- Poll_c10சினிமாவில் மாற்றவே முடியாத சில ‘க்ளீஷே’க்கள்:- Poll_m10சினிமாவில் மாற்றவே முடியாத சில ‘க்ளீஷே’க்கள்:- Poll_c10 
31 Posts - 55%
heezulia
சினிமாவில் மாற்றவே முடியாத சில ‘க்ளீஷே’க்கள்:- Poll_c10சினிமாவில் மாற்றவே முடியாத சில ‘க்ளீஷே’க்கள்:- Poll_m10சினிமாவில் மாற்றவே முடியாத சில ‘க்ளீஷே’க்கள்:- Poll_c10 
22 Posts - 39%
T.N.Balasubramanian
சினிமாவில் மாற்றவே முடியாத சில ‘க்ளீஷே’க்கள்:- Poll_c10சினிமாவில் மாற்றவே முடியாத சில ‘க்ளீஷே’க்கள்:- Poll_m10சினிமாவில் மாற்றவே முடியாத சில ‘க்ளீஷே’க்கள்:- Poll_c10 
1 Post - 2%
rajuselvam
சினிமாவில் மாற்றவே முடியாத சில ‘க்ளீஷே’க்கள்:- Poll_c10சினிமாவில் மாற்றவே முடியாத சில ‘க்ளீஷே’க்கள்:- Poll_m10சினிமாவில் மாற்றவே முடியாத சில ‘க்ளீஷே’க்கள்:- Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
சினிமாவில் மாற்றவே முடியாத சில ‘க்ளீஷே’க்கள்:- Poll_c10சினிமாவில் மாற்றவே முடியாத சில ‘க்ளீஷே’க்கள்:- Poll_m10சினிமாவில் மாற்றவே முடியாத சில ‘க்ளீஷே’க்கள்:- Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சினிமாவில் மாற்றவே முடியாத சில ‘க்ளீஷே’க்கள்:- Poll_c10சினிமாவில் மாற்றவே முடியாத சில ‘க்ளீஷே’க்கள்:- Poll_m10சினிமாவில் மாற்றவே முடியாத சில ‘க்ளீஷே’க்கள்:- Poll_c10 
305 Posts - 45%
ayyasamy ram
சினிமாவில் மாற்றவே முடியாத சில ‘க்ளீஷே’க்கள்:- Poll_c10சினிமாவில் மாற்றவே முடியாத சில ‘க்ளீஷே’க்கள்:- Poll_m10சினிமாவில் மாற்றவே முடியாத சில ‘க்ளீஷே’க்கள்:- Poll_c10 
293 Posts - 43%
mohamed nizamudeen
சினிமாவில் மாற்றவே முடியாத சில ‘க்ளீஷே’க்கள்:- Poll_c10சினிமாவில் மாற்றவே முடியாத சில ‘க்ளீஷே’க்கள்:- Poll_m10சினிமாவில் மாற்றவே முடியாத சில ‘க்ளீஷே’க்கள்:- Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
சினிமாவில் மாற்றவே முடியாத சில ‘க்ளீஷே’க்கள்:- Poll_c10சினிமாவில் மாற்றவே முடியாத சில ‘க்ளீஷே’க்கள்:- Poll_m10சினிமாவில் மாற்றவே முடியாத சில ‘க்ளீஷே’க்கள்:- Poll_c10 
17 Posts - 3%
prajai
சினிமாவில் மாற்றவே முடியாத சில ‘க்ளீஷே’க்கள்:- Poll_c10சினிமாவில் மாற்றவே முடியாத சில ‘க்ளீஷே’க்கள்:- Poll_m10சினிமாவில் மாற்றவே முடியாத சில ‘க்ளீஷே’க்கள்:- Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
சினிமாவில் மாற்றவே முடியாத சில ‘க்ளீஷே’க்கள்:- Poll_c10சினிமாவில் மாற்றவே முடியாத சில ‘க்ளீஷே’க்கள்:- Poll_m10சினிமாவில் மாற்றவே முடியாத சில ‘க்ளீஷே’க்கள்:- Poll_c10 
9 Posts - 1%
Guna.D
சினிமாவில் மாற்றவே முடியாத சில ‘க்ளீஷே’க்கள்:- Poll_c10சினிமாவில் மாற்றவே முடியாத சில ‘க்ளீஷே’க்கள்:- Poll_m10சினிமாவில் மாற்றவே முடியாத சில ‘க்ளீஷே’க்கள்:- Poll_c10 
4 Posts - 1%
Jenila
சினிமாவில் மாற்றவே முடியாத சில ‘க்ளீஷே’க்கள்:- Poll_c10சினிமாவில் மாற்றவே முடியாத சில ‘க்ளீஷே’க்கள்:- Poll_m10சினிமாவில் மாற்றவே முடியாத சில ‘க்ளீஷே’க்கள்:- Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
சினிமாவில் மாற்றவே முடியாத சில ‘க்ளீஷே’க்கள்:- Poll_c10சினிமாவில் மாற்றவே முடியாத சில ‘க்ளீஷே’க்கள்:- Poll_m10சினிமாவில் மாற்றவே முடியாத சில ‘க்ளீஷே’க்கள்:- Poll_c10 
4 Posts - 1%
jairam
சினிமாவில் மாற்றவே முடியாத சில ‘க்ளீஷே’க்கள்:- Poll_c10சினிமாவில் மாற்றவே முடியாத சில ‘க்ளீஷே’க்கள்:- Poll_m10சினிமாவில் மாற்றவே முடியாத சில ‘க்ளீஷே’க்கள்:- Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சினிமாவில் மாற்றவே முடியாத சில ‘க்ளீஷே’க்கள்:-


   
   
யுவா
யுவா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 13/01/2010

Postயுவா Wed Jan 27, 2010 4:41 pm

 சோகமான செய்தியை கேட்கும் கதாபாத்திரம், கண்டிப்பாக கையில் ஏதாவது வைத்திருந்து, செய்தி கேட்டதும் அதை கீழே போட்டு விடுவது..

 டேபிள் ட்ராயரில் அவசரமாக எதையாவது தேடும்போது, ட்ராயர் முழுவதையும் கலை, கலை என்று கலைத்துவிடுவது..

 கைதி, ஹீரோவாகவோ, முக்கிய நடிகராகவோ இருந்தால் கண்டிப்பாக FANCY NUMBER தான்!

 வக்கீல் கக்கூஸூக்கு போனாலும் கருப்பு கோட்டோடுதான் போவார்!(அதேபோல அதிகபட்ச படங்களில் வக்கீல்கள் வில்லன்களோடுதான் இருக்கிறார்!)

 எதிர்முனையில் ஃபோன் வைக்கப்பட்டாலும், திரையில் இருக்கும் கதாபாத்திரம் ரிசீவரை ஒரு பார்வை பார்த்துவிட்டுதான் வைப்பார்.

 எழுத்தாளர்கள், கவிஞர்களுக்கு உடை ஜிப்பாதான்.

 அதேபோல.. டீச்சருக்கு - கண்ணாடி + குடை / கலெக்டர் - கண்ணாடி மட்டும்.

 டாக்டர் சோகமான செய்தி சொல்லும் போது, மறக்காமல் கண்ணாடியை கழட்டுவார்.

 பெரும்பாலான கதாபாத்திரங்கள் வண்டியை நிறுத்தும் போது சடன் பிரேக் போட்டுத்தான் நிறுத்துவார்கள்.






“வெற்றி” என்பது நீ பெற்றுக் கொள்வது...!
தோல்வி” என்பது நீ கற்றுக் கொள்வது...!
அன்புடன்,
யுவா

யுவா
யுவா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 13/01/2010

Postயுவா Mon Feb 01, 2010 4:40 pm

வேறு யாருக்கும் தெரியாமல், உங்கள் கைபேசியில் காஞ்சிபுரம் தேவநாதனின் வீடியோ கிடைத்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்?

அனுப்பியவன் மீது புகார் கொடுப்பீர்களா, அந்தக் கணமே அதனை அழித்து விடுவீர்களா, அல்லது ஒரே ஒரு முறை பார்த்தால்தான் என்ன என்று தடுமாறுவீர்களா?

அறம், ஒழுக்கம், விழுமியங்கள் என்ற காரணங்களின் அடிப்படையில் சிந்தித்துப் பதிலளிக்கக் கூடிய நிலையில் நீங்கள் இருந்தால், பதிலளிப்பதில் சிரமமிருக்காது.

எனினும், இன்றைய சூழலில் பலரால் இதற்கு நிச்சயமான ஒரு பதிலைச் சொல்லிவிட இயலாது. கைபேசிகள் எனப்படுபவையே கையடக்கமான நீலப்படத் திரையரங்குகளாக மாறிக்கொண்டிருக்கும் இந்தக் காலத்தில், மேற்படி கேள்வியே கூட கொஞ்சம் அபத்தமானதாகவும், காலத்தால் பின்தங்கியதாகவும் சிலருக்குத் தோன்றலாம்.

· ஷகீலாக்களின் காலம் முடிந்து கொண்டிருக்கிறது. நாம் தேவநாதன்களின் காலத்தில் நுழைந்து விட்டோம்.

· தொலைக்காட்சிகளில் கூட சீரியல்களின் நடிப்பு திகட்டிப்போய், அவற்றின் இடத்தை ரியாலிடி ஷோக்கள் மெல்ல ஆக்கிரமித்து வரும் காலம் இது.

· ஒரு மனிதன் அடுத்தவன் வீட்டுக்கதவின் சாவித்துவாரத்தில் கண் வைத்துப் பார்ப்பதை அநாகரிகமாகக் கருதும் பொது ஒழுக்க நெறியே போய்விட்டதென்று கூறிவிட முடியாது.

· அதேநேரத்தில் சாவித்துவாரத்தில் காமெராவை வைத்துப் படம் பிடித்து, அதை மொத்த சமூகமும் உட்கார்ந்து பார்க்கும் புதிய ரசனை வளர்ந்து வருவதையும் மறுக்க முடியாது.

· இந்த இரசனையைக் காட்டிலும் முக்கியத்துவம் வாய்ந்தது, இந்தக் கலைக்கு சூட்டப்பட்டிருக்கும் பெயர்தான்- ரியாலிட்டி ஷோ.

· காதல், படுக்கையறைக் காட்சிகள், அடிதடி, கொலை ஆகியவற்றை நடிப்பில் பார்த்துப் பார்த்துத் திகட்டிப் போன ஒரு மனிதன், ஒரு பாலியல் உறவை, வல்லுறவை, சித்திரவதையை, கொலையை உண்மையாகவே நிகழ்த்தி, அதனை ரியாலிட்டி ஷோவாகப் படம் பிடித்துப் பார்க்க முடியாதா? என்று ஏங்குகிறான்.

· இப்படிக்கூட ஒரு மனிதன் சிந்திக்க முடியுமா என்று நீங்கள் நினைத்தால், முடியும் என்று கூறும் திரைப்படம் ஒன்றை சமீபத்தில் பார்க்க நேர்ந்தது.

· கதையின் களம்வேறெந்த நாடு, அமெரிக்காதான்.

8 எம்.எம்: ஆங்கிலத்திரைப்படவிமரிசனம்!

1995இல் வெளிவந்த எட்டு மில்லி மீட்டர் திரைப்படச்சுருள் என்பதைக் குறிக்கும் 8 எம்.எம் ஹாலிவுட் திரைப்படத்தை ஜோயல் ஷூமேக்கர் இயக்க நிக்கோலஸ் கேஜ் முதன்மைப் பாத்திரம் ஏற்று நடித்திருக்கிறார்.

கதைச்சுருக்கம்: பணக்காரச் சீமாட்டியான திருமதி கிறிஸ்டியானியின் கணவர் முதுமை காரணமாக இறக்கிறார். மரணத்துக்குப் பின் அவரது இரகசிய லாக்கரை உடைத்துப் பார்த்த போது பழமையான ஒரு கோடீசுவரனுக்கே உரிய பத்திரங்கள், விலையுயர்ந்த பொருட்கள் ஆகியவற்றோடு, அந்த லாக்கரில் ஒரு திரைப்படச்சுருளும் இருக்கிறது. வயது முதிர்ந்த அந்தச் சீமாட்டி, படச்சுருளைத் திரையிட்டுப் பார்க்கிறாள். அந்தப் படத்தில் உள்ளாடைகளுடன் இருக்கும் ஒரு பதின்வயது இளம் பெண்ணை வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கி கொடூரமான முறையில் கொலை செய்கிறான் ஒரு முகமூடி அணிந்த மனிதன். இந்தப் படத்தைப் பார்த்து அதிர்ச்சியடைகிறாள் அந்தச் சீமாட்டி.

அந்தப்படத்தில் வரும் கொலை உண்மையாய் இருந்துவிடக்கூடாதே என்று அவள் பதறுகிறாள். அந்தப் பெண் நலமாக இருக்கிறாளா என்பதை அறிந்து கொள்ளவும் விரும்புகிறாள். இப்படி ஒரு படத்தை தனது கணவன் எதற்காக இரகசிய லாக்கரில் வைத்திருக்க வேண்டும் என்ற கேள்வியும் அவளை நிம்மதி இழக்கச் செய்கிறது. இது குறித்து புலனாய்வு செய்து கண்டுபிடிக்க முடிவு செய்கிறாள். அதற்காக டாம் வெல்லஸ் எனும் தனியார் துப்பறிவாளன் நியமிக்கப்படுகிறான்.

ஸ்னஃப் என்று அழைக்கப்படும் பாலியல் கொடூரக் கொலைகளை சித்தரிக்கும் இத்தகைய படங்களெல்லாம் வெறும் நடிப்பு என்றும், இது ஒரு நகர்ப்புறத்து மாயை என்றும் சொல்கிறான் துப்பறிவாளன் வெல்லஸ். சீமாட்டி திருப்தியடையவில்லை. எனவே, உண்மையைக் கண்டுபிடிப்பதாக வாக்கு கொடுக்கிறான்.

முதலில் படத்தில் இருக்கும் பெண் யாரென்பதை காணாமல் போனவர்களின் பட்டியலை வைத்து கண்டுபிடிக்கிறான். அவளது வீட்டிற்கு சென்று அந்தப் பெண்ணின் தாயார் -ஜானட்- என்பளைச் சந்திக்கிறான். தனது மகள் மேரி ஆனி மாத்தீவ்ஸ், ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு நாள் (கடிதம் எழுதிவைத்துவிட்டு) வீட்டை விட்டு வெளியேறிவிட்டதாகக் கூறுகிறாள் தாய். அந்தக் கடிதத்தில் தான் ஒரு ஹாலிவுட் நட்சத்திரமாக மாறப்போவதாகவும், அதற்காகத் தனது காதலுடனுன் சேர்ந்து முயற்சி செய்யப்போவதாகவும் குறிப்பிட்டிருக்கிறாள் மேரி ஆனி. வெல்லஸ் அந்தக் காதலனை கண்டுபிடிக்கிறான். அவர்கள் காதல் அப்போதே உதிர்ந்து போய்விட்டதையும், ஆனி மட்டும் தனியாக ஹாலிவுட் சென்றதையும் அறிகிறான்.

கனவுகளைச் சுமந்தவாறு வாழ்க்கையைத் தொலைப்பதற்கு ஆண்டுதோறும் கோடம்பாக்கத்திற்கு வருபவர்களே பல்லாயிரம் பேர். ஹாலிவுட் என்பது உலகத்துக்கே கோடம்பாக்கம். எனில், அதை நோக்கிப் படையெடுப்பவர்களின் எண்ணிக்கையை மட்டுமல்ல அதன் பரிமாணத்தையும் புரிந்து கொள்ளலாம். அந்த மாய உலகத்தில் ஆனியைத் தேடுவது எங்கனம்? கன்யாஸ்தீரிகள் இல்லமொன்றில் ஆனி ஒரு மாதம் தங்கியிருந்ததைக் கண்டுபிடித்து, அங்கே இருந்த அவளது உடமைகளையும் பெற்றுக்கொள்கிறான். அவளுடைய டைரியில் இருந்த தொலைபேசி எண்களை வைத்து அவளது தடத்தை பின்தொடர்கிறான்.

அந்தப்படம் 92ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்டது என்பதைக் கண்டு பிடிக்கும் வெல்லஸ், அதே ஆண்டில் இறந்து போன சீமாட்டியின் கணவனது வங்கிக் கணக்கிலிருந்து ஒரு மில்லியன் டாலர் பணம் எடுக்கப்பட்டிருப்பதையும் சீமாட்டியின் உதவியுடன் கண்டுபிடிக்கிறான். இதிலிருந்து அந்தப்படம் சீமாட்டியின் கணவனுக்காகத்தான் எடுக்கப்பட்டிருக்கிறது என்பது உறுதியாகிறது.

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Mon Feb 01, 2010 4:48 pm

இது ஏற்கனவே நீங்கள் பதிந்தது என்று நினைக்கிறேன்...
VIJAY
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் VIJAY



யுவா
யுவா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 13/01/2010

Postயுவா Mon Feb 01, 2010 5:34 pm

VIJAY wrote:இது ஏற்கனவே நீங்கள் பதிந்தது என்று நினைக்கிறேன்...

தாங்கள் சொல்வது இந்த பதிவு என்று நினைக்கிறேன் சினிமாவில் மாற்றவே முடியாத சில ‘க்ளீஷே’க்கள்:- Icon_smile


https://eegarai.darkbb.com/-f8/-t18018.htm

https://eegarai.darkbb.com/-f5/-t17983.htm





“வெற்றி” என்பது நீ பெற்றுக் கொள்வது...!
தோல்வி” என்பது நீ கற்றுக் கொள்வது...!
அன்புடன்,
யுவா

யுவா
யுவா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 13/01/2010

Postயுவா Mon Feb 01, 2010 5:51 pm

இதன் தொடர்ச்சி...........................

ஹாலிவுட்டில் போர்னோ கடை ஒன்றில் (ஆபாக புத்தகங்கள், சி.டிக்கள் விற்கும் கடை) வேலை செய்யும் மாக்ஸ் கலிபோர்னியா என்ற இளைஞனைப் பிடித்து, அவன் உதவியுடன் ஹாலிவுட்டிற்குள் இயங்கும் அந்த இரகசிய உலகத்தில் நுழைகின்றான் வெல்லஸ். ஆபாசப்படங்கள், புத்தகங்கள், பணத்திற்கேற்ப நம்பகத்தன்மை கூடும் கொடூர ஆபாசப்படங்கள், கடைகள், தரகர்கள், விலைமாதர்கள் என அந்த இருண்ட உலகம் விரிகிறது. இனி நீ பார்க்கவிருக்கும் காட்சிகளை உன் கண்களிலிருந்து இனி அகற்றவே முடியாது என்று கூறி வக்கிரப் பாலுறவின் உலகத்துக்குள் வெல்லஸை அழைத்துப் போகிறான் மாக்ஸ். சித்திரவதை செக்ஸ், சாட்டையடி செக்ஸ், குழந்தைகள் செக்ஸ் என்று எண்ணிப்பார்க்கவே முடியாத வக்கிரங்களின் உலகம் விரிகிறது. இயல்பான மனநிலையில் நுழையும் எவரையும் விரைவிலேயே வெறி கொண்டவர்களாக மாற்றும் இந்த உலகில்தான் ஆனி சிக்கியிருக்கிறாள் என்பது தெளிவாகிவிட்டது.

செலிபிரிட்டி பிலிம்ஸ் எனும் உப்புமா கம்பெனியின் முதலாளி எடிபோலி என்பவனே ஆனிக்கு நட்சத்திர ஆசை காட்டி ஏமாற்றியிருப்பதை பல முயற்சிகளுக்குப் பிறகு வெல்லஸ் தெரிந்து கொள்கிறான். அவனை வைத்து கொடூர ஆபாசப்படங்களை இயக்கும் வெல்வெட், அந்தப்படங்களில் முகமூடி அணிந்து கொண்டு நடிக்கும் மெஷின் ஆகியோரையும் வெல்லஸ் புலனாய்வின் மூலம் அறிகிறான். உண்மையான பாலியல் வல்லுறவையும் உண்மையான கொலையையும் சித்தரிக்கும் ஒரு ரியாலிட்டி படத்தைத் தயாரிப்பதற்கு இவர்களிடம்தான் சீமாட்டியின் கணவன் பணம் கொடுத்திருக்கிறான். இந்தக் கும்பல் ஆனியை ஏமாற்றி இந்தப் படத்தில் நடிக்க வைத்து, பின்னர் கொலை செய்திருக்கிறது என்பதை வெல்லஸ் கண்டுபிடிக்கிறான். இதற்கு ஆதாரபூர்வமாக நிறுவுவதற்கான முயற்சியில் இறங்குகிறான். இயக்குநர் வெல்வெட்டை தொடர்பு கொண்டு தனக்கு ஒரு பலான படம் ஒன்று எடுக்கவேண்டுமென கேட்கிறான்.

இதற்குள் வெல்லஸ் தங்களது கொலைப்படத்தை கண்டுபிடித்து விட்டான் என்பதை அந்த கயவர் கும்பல் புரிந்து கொள்கிறது. வெல்லஸை அழைத்து வந்த அந்த இளைஞனைச் சித்திரவதை செய்து, வெல்லஸிடம் இருக்கும் படச் சுருளையும் கைப்பற்றித் தீ வைத்து அழிக்கிறது. அந்த இளைஞனும் கொலை செய்யப்படுகிறான். கடுமையாக தாக்கப்பட்ட வெல்லஸ், அவர்களிடமிருந்து தப்பிக்கிறான். சீமாட்டியைத் தொடர்பு கொண்டு, அவளிடம் உண்மைகளை கூறி, அடுத்த நாளே நாம் போலீசிடம் போக வேண்டும் என்று சொல்கிறான்.

ஆனால் சீமாட்டியோ அடுத்த நாள் தற்கொலை செய்து கொள்கிறாள். தனது கணவனின் வக்கிர வெறிக்காக ஒரு இளம் பெண் கொலை செய்யப்பட்டிருப்பதை அவளால் தாங்க முடியவில்லை. ஒரு கவரில் வெல்லசுக்கான ஊதியம், இன்னொரு கவரில் கொல்லப்பட்ட பெண் மேரி ஆனியின் தாய்க்குச் சேர்ப்பதற்கான நிவாரணத்தொகை. “எங்களை மறப்பதற்கு முயற்சி செய்என்று மட்டும் அந்தக் கவரின் மேல் எழுதியிருக்கிறாள் அந்தச் சீமாட்டி.

கைவசம் இருந்த ஆதாரமான படச்சுருள் எரிக்கப்பட்டு, அதை பார்த்த ஒரே சாட்சியான சீமாட்டியும் இறந்திருக்கும் நிலையில் வெல்லஸ் செய்வதறியாது திகைக்கிறான். அதே சமயம் இத்தகைய படுபாதகச்செயலை சாதாரண சினிமா படம் போல எவ்வித குற்றவுணர்வும் இல்லாமல் எடுத்திருக்கும் அந்த மூவர் கும்பலை விட்டுவிடவும் அவனுக்கு மனம் ஒப்பவில்லை. அவர்களை கொல்வதென முடிவு செய்து அதற்கு ஆனியின் தாய் ஜேனட்டிடம் ஒப்புதல் பெறுகிறான். அந்தப் படத்தின், அதாவது அந்தக் கொலையின், தயாரிப்பாளர், இயக்குநர், நடிகன் ஆகிய மூவரையும் தனித்தனியே கொல்கிறான் வெல்லஸ்.

ந்த இரகசிய உலகத்துக்குள் காலடி வைத்த கணத்திலிருந்து ஒரே ஒரு கேள்விதான் வெல்லஸை துன்புறுத்துகிறது. இவ்வளவு கொடூரமாக, வக்கிரமாக, இரக்கமற்றவர்களாக சில மனிதர்கள் இருக்க முடியுமா- என்பதுதான் அந்தக் கேள்வி. நம்பமுடியாததாகவும் அதே நேரத்தில் மறுக்க முடியாததாகவும் இருக்கும் இந்த எதார்த்தம், உண்மை என்று ஒப்புக் கொள்ள முடியாமலும், பொய் என்று நிராகரிக்க முடியாமலும், முன்னும் பின்னும் அலைக்கழித்து, இரம்பம் போல இரசிகனையும் அறுக்கிறது.

யுவா
யுவா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 13/01/2010

Postயுவா Mon Feb 01, 2010 5:54 pm

படத்தின் இறுதியில், மேரி ஆனியை வன்புணர்ச்சிக்கு ஆளாக்கி, கொல்லும் அந்தத் திரைப்படத்தின் நடிகனான மெஷினை, வெல்லெஸ் கொலை செய்யும் காட்சி இப்படி அமைந்திருக்கிறது. கொலை செய்வதற்கு முன், அவனது முகத்தைப் பார்த்துவிட வேண்டும் என்ற வெறியில், அவனுடைய மூகமூடியைப் பிய்த்தெறிகிறான் வெல்லெஸ்.

ஒரு திரைப்படத்துக்காக யாரோ ஒரு சின்னஞ்சிறு பெண்ணுக்கு போதை ஊசி போட்டு, அவளைத் துடிக்கத் துடிக்க வன்புணர்ச்சிக்கு ஆளாக்கி, மெல்ல, நிதானமாகக் கொலை செய்த அந்த மெஷினிடம்ஏன் இதைச் செய்தாய்?” என்று கேட்கிறான் வெல்லெஸ். “ஒரு காரணமும் இல்லை. எனக்குப் பிடித்திருக்கிறது, செய்தேன்என்று பதிலளிக்கிறான் மெஷின்.

முகமூடி இல்லாத மெஷினை வெல்லெஸ் நிதானமாக வெறித்துப் பார்க்கிறான். வழுக்கை விழுந்த, கண்ணாடி அணிந்த ஒரு சராசரி மனிதன். அவன் உண்மைப் பெயர் ஜார்ஜ். வெல்லெஸுடைய பார்வையின் அர்த்தத்தைப் புரிந்து கொண்ட மெஷின், அவனிடம் ஏளனமாகக் கேட்கிறான், எப்படி எதிர்பார்த்தாய்? ஒரு மிருகம் போல இருப்பேன் என்றா?

ரு கிரிமினல் குற்றத்தைத் கண்டுபிடிக்கும் புலனாய்வாளனின் பின்னால்தான் இத்திரைக்கதையே செல்கிறது என்ற போதிலும், ஒரு துப்பறியும் படம் தோற்றுவிக்கும் திகில் உணர்ச்சியை இது நம்மிடம் தோற்றுவிக்கவில்லை. மாறாக இப்படம் சித்தரிக்கும் உலகமும் அதன் மனிதர்களும்தான் நம்மைத் திகிலில் உறைய வைக்கின்றனர்..

பாலியல் வல்லுறவு, கொலை, பிணத்தைப் புணர்தல், வயிற்றைக் கிழித்து கருவை சிதைத்தல்.. என வன்முறையின் காணச்சகியாத கோரங்களையெல்லாம் சமீப காலங்களில் நாம் கண்டிருக்கிறோம். போஸ்னியாவின் வக்கிரங்களுக்குக் காரணம் மதவெறி-நிறவெறி; இலங்கையில் இனவெறி; குஜராத்தில் மதவெறி. பல்லாயிரம் பேரைப் பலி கொண்ட இத்தகைய வன்முறைகளைக் காட்டிலும், மேரி ஆனியைச் சிறுகச் சிறுகக் கொலை செய்த அந்த வன்முறையைக் காட்டிலும், நம்முடைய இரத்ததைச் சில்லிட வைப்பது, ஏன் செய்தாய், என்ற கேள்விக்கு மெஷின் கூறும் பதில்: ஒரு காரணமும் இல்லை. எனக்குப் பிடித்திருக்கிறது. செய்தேன்.

அந்தப் பதில் திமிர்த்தனமாகக் கூறப்பட்ட பதில் அல்ல. யாரோ ஒரு அப்பாவிப் பெண்ணைப் படுகொலை செய்த தனது செயலை மனிதத்தன்மையற்ற செயலாக அவன் கருதவே இல்லை. எனவேதான், தன்னுடைய செயலுக்காக சக மனிதனுக்கு விளக்கமளிக்க வேண்டிய அவசியமோ, ஏதோ ஒரு நியாயம் கற்பிக்க வேண்டிய அவசியமோ இருப்பதாகக் கூட அவன் நினைக்கவில்லை. எனக்குப் பிடித்திருந்தது, செய்தேன். என்பதை அவன் வெகு இயல்பாகக் கூறுகிறான். அவனுடைய பதிலில் காணப்படும் இந்த இயல்புத் தன்மைதான் மனிதர்கள் என்ற முறையில் நம்மைக் குலைநடுங்கச் செய்கிறது.

செத்துப்போன அந்தக் கோடீசுவரன், இலட்சக்கணக்கில் செலவு செய்து இப்படி ஒரு கொடூரத்தைப் படமெடுக்கச் செய்திருக்கிறானே, ஏன் செய்தான்? அவனுக்குப் பிடித்திருந்தது. செய்தான். யாரோ ஒரு பெண்ணை காதலிப்பதாகச் சொல்லி ஏமாற்றி, அவளுடன் உறவு கொண்டு, அதனைப் படமெடுத்து, பிறகு அதனைக்காட்டி மிரட்டியே அவளை மீண்டும் மீண்டும் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கும் குற்றங்கள் பற்றி அன்றாடம் படிக்கிறோமே, அந்த இளைஞர்கள் ஏன் அப்படிச் செய்கிறார்கள்? அவர்களுக்குப் பிடித்திருக்கிறது. செய்கிறார்கள். மற்றப்படி கசக்கி எறியப்பட்ட அந்தப் பெண்கள் மீது அவர்களுக்கு வேறு எந்த விரோதமும் கிடையாது.

ஏன் முஸ்லிம்களைக் கொன்றோம் என்று குஜராத் வன்முறையாளர்கள் பேசுவதைக் கேட்கும்போது நமக்கு ரத்தம் கொதிக்கிறது. இந்த வன்முறையாளர்களின் பதிலைக் கேட்கும்போதோ ரத்தம் சில்லிடுகிறது.

எனக்குப் பிடித்திருக்கிறது என்பதைத் தவிர தனது செயலுக்கு வேறு விளக்கம் எதுவும் சொல்லத் தேவையில்லை என்பதாக ஒரு மனிதனின் விழுமியங்கள் மாறுவதென்பது, வெறும் பாலியல்வேட்கை அல்லது வெறிதொடர்பான பிரச்சினை அல்ல. பாலியல் வேட்கை தோற்றுவிக்கும் பலவீனமான தருணங்கள் மட்டுமே இந்த மாற்றத்தை ஒரு மனிதனிடம் ஏற்படுத்தி விடுவதில்லை.

அரசியல் சமூக வாழ்வின் வெவ்வெறு தளங்களில் வெவ்வேறு விதமாக இந்த மாற்றம் துரிதகதியில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. முறுக்கிப்பிழிந்த பின் ஒதுக்கித் தள்ளப்படும் சக்கையாகவும், பல் குத்தியபின் விட்டெயெறியப்படும் குச்சியாகவும் தொழிலாளர்களைக் கருதுகின்ற முதலாளிகளை எடுத்துக் கொள்ளுங்களேன். அவர்களுக்கு அந்தத் தொழிலாளர்கள் மீது தனிப்பட்ட எந்தப் பகையுணர்ச்சியும் கிடையாது. அதேபோல, வீசியெறியப்பட்ட அந்தத் தொழிலாளிகளுக்கு என்ன நேரும் என்று சிந்திக்கும் இரக்கமும் அவர்களுக்குக் கிடையாது. பல்லைக் குத்தியபின் குச்சியை வீசியெறிவது என்ற ஏற்பாடு அவர்களுக்குப் பிடித்திருக்கிறது. அவ்வளவே.

நுகர்ந்துவிட்டுத் தூர எறியும் பண்டமாக மட்டுமே சக மனிதனையும் கருதப் பயிற்றுவிக்கும் இந்தச் சமூக அமைப்பின் முலையில் ஞானப்பால் குடித்து வளரும் மனிதன், மெஷினைப் போலப பேசுவது வியப்புக்குரியதல்ல.

யாரோ ஒரு அப்பாவிப் பெண்ணைக் கொலை செய்து விட்டு, எனக்குப் பிடித்திருந்தது செய்தேன் என்று மெஷின் கூறும் பதில் நம் ரத்தத்தை உறையவைக்கலாம். ஆனால் இதே வகையான பதில்கள், இதிலிருந்து வேறுபட்ட பல சந்தர்ப்பங்களில், பல உதடுகளிலிருந்து அலட்சியமாக உதிர்வதை நாம் கேட்காமலா இருக்கிறோம்?

இது எளிமைப்படுத்தலோ, பொதுமைப்படுத்தலோ அல்ல. தனது விருப்பங்கள், தெரிவுகள், செயல்கள் ஆகியவை சகமனிதர்கள் மீது ஏற்படுத்தும் பாதிப்புக்கு, தான் விளக்கமளிக்கத் தேவையில்லை என்ற கருத்து, துவக்கத்தில் ஒரு ஆணவம் போலத்தான் வெளிப்படுகிறது. அதுவே மெல்ல மெல்ல வளர்ந்து அவனுடைய இயல்பாகவும், பண்பாடாகவுமே மாறும்போது அந்தமனிதன் மெஷின் ஆகிவிடுகிறான்.

எனினும் மெஷின் முகமூடி அணிய வேண்டியிருக்கிறது. சட்டத்தின் கரங்களிலிருந்து தப்பிக்கும் காரணத்துக்காக மட்டுமல்ல, இன்னமும் இந்தச் சமூகத்தில் மனிதர்களே பெரும்பான்மையாக இருப்பதன் காரணமாகத்தான் மெஷினுக்குமுகமூடிதேவைப்பட்டிருக்கிறது. உண்மையைக் கேள்விப்பட்டவுடனே தற்கொலை செய்து கொள்ளும் மனைவியைப் பெற்றிருக்கின்ற காரணத்தினால்தான், அவளிடமிருந்து ஒளிந்து கொள்வதற்கு, அந்தக் கோடீசுவரக்கிழவனுக்கு ஒருலாக்கர் தேவைப்பட்டிருக்கிறது. பக்தர்களுடைய கண்களிலிருந்து மறைந்து கொள்ளும் பொருட்டுத்தான் தேவநாதனுக்கும் கருவறை தேவைப்பட்டிருக்கிறது.

சில நூறு பக்தர்களுக்குப் பிடிக்காது என்றுகருதி எந்தக் காட்சியை மறைப்பதற்கு தேவநாதன் முயன்றானோ, அந்தக் காட்சி பலஆயிரம் ரசிகர்களுக்குப் பிடித்தமான எதார்த்தக்காட்சியாக (Reality show) இருந்திருக்கிறது என்ற உண்மை, இப்போது தேவநாதனுக்குப் புரிந்திருக்கும்.

தான் முகமூடி அணிந்து நடித்த போதிலும், தன்னுடைய படத்தைப் பார்க்கும் ரசிகர்கள் முகமூடி அணிவதில்லை என்ற உண்மை மெஷின் என்று அழைக்கப்பட்ட ஜார்ஜுக்கு ஏற்கெனவே தெரிந்திருக்கிறது. அதனால்தான் முகமூடிகிழிக்கப்பட்ட மறுகணமே வெல்லஸிடம் ஏளனமாக அந்தக் கேள்வியைக் கேட்கிறான் மெஷின்: என்ன எதிர்பார்த்தாய்? ஒரு கொடிய மிருகம்போல இருப்பேன் என்றா?

என்ன எதிர்பார்த்தீர்கள்,

ஹாலிவுட் திரைப்பபட விமரிசனத்தையா?

காஞ்சிபுரம் கைபேசிகளில் ஓடியபடங்களுக்கு இந்தவிமரிசனம் பொருந்தவில்லையா?

காஞ்சிபுரத்துக்கும் ஹாலிவுட்டுக்கும் என்னவேறுபாடு?

காஞ்சிபுரம் அமெரிக்காவில் இல்லை என்பதைத் தவிர.





“வெற்றி” என்பது நீ பெற்றுக் கொள்வது...!
தோல்வி” என்பது நீ கற்றுக் கொள்வது...!
அன்புடன்,
யுவா

யுவா
யுவா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 13/01/2010

Postயுவா Mon Feb 01, 2010 6:16 pm

உங்களுக்கு எல்லாம் தெரிந்திருக்கிறது...



ஆம் நண்பர்களே..

உங்களுக்கு எல்லாம் தெரிந்திருக்கிறது. ஒரு படம் வருகிறது. இரண்டு மணிநேரம் அதை ரசிக்கிறீர்கள். பிடிக்கிறது, பிடிக்கவில்லை என்ற இரண்டு கோணங்களுக்கு மேல், மூன்றாவது கோணமாய் அதில் அவன் என்ன சொல்கிறான் என்று அலசி ஆராய்கிறீர்கள்.

ஆராய்ந்ததன் பயனாக உங்களுக்குக் கிடைத்ததெல்லாம் அதிர்ச்சிகள்தான். ஒரு பெயர், வெறும் பெயரல்ல.. அது குறியீடு என்கிறீர்கள். இசம் என்கிறீர்கள். சாதீயம் என்கிறீர்கள். கொண்டை தெரிகிறது, பூணூல் தெரிகிறது என்கிறீர்கள். நீங்கள் மெத்தப்படித்தவர்கள்.

எங்களுக்கு இடைவேளையில் பப்ஸ் இருக்குமா, இல்லை முறுக்குதானா என்ற விவாதம்தான் ஓடுகிறது மனதில். நாங்கள் அறிவிலிகள்.

படம் முடிந்ததும் என் வாகனத்தை பிற வாகனங்கள் மோதாமல் எடுக்க முடியுமா, வீட்டுக்கு வரும்போது ஏதோ வாங்கிவரச் சொன்னாளே என்றெல்லாம் கேள்விகளோடு வெளிவருகிறோம் நாங்கள். இடையே படம் தந்த சில நல்லுணர்வுகளின் நினைவுகள் இதம் தருகிறது எங்களுக்கு. நீங்கள் அதையெல்லாம் விடுத்து, வேறேதோ சிந்தனைகளில் உங்கள் நிகழைத் தொலைத்துக் கொண்டிருக்கிறீர்கள். முன்னர் நடந்த நிஜ நிகழ்வுகளும், திரைப்படமும் சொல்வது என்ன என்று யோசித்து யோசித்து படம் எடுத்தவன், நடித்தவன், பார்த்தவன், விமர்சனம் எழுதினவன் என்று போட்டுத் தாக்குகிறீர்கள். தாக்குவது என்று தீர்மானித்தபின் நாசூக்காவது மண்ணாவது. இருக்கவே இருக்கிறது வார்த்தைகள். வந்து விழுகின்றன உங்களுக்கென்றே....

எங்களுக்கு ஒன்றுமே தெரிவதில்லை.

நாங்கள் சொல்வது பொதுப்புத்தி. அதாவது அதிகமான பேரால் ஏற்றுக் கொள்ளப்படுவது பொதுப்புத்தி. அதை எதிர்ப்பதே அறிவுஜீவித் தனம். அது எங்களுக்கு வாய்க்கவில்லை. இதையே வேறுவிதமாய் சொல்வதானால் எல்லாவற்றிலும் நேர்சிந்தனையை மட்டுமே நினைத்துக் கொண்டிருப்பது பொதுப்புத்தி. இல்லை அதில் என்ன நெகடீவ் இருக்கிறது என்றும் நான் பார்ப்பேன் என்பது உங்கள் இசங்களும், தத்துவார்த்த சிந்தனைகளும் உங்களுக்குச் சொல்லிக் கொடுத்த அல்லது தானாய் உங்களுக்கு அமைந்த வரம். எங்களுக்கு அது கைகூடி வரவில்லை. நாங்கள் சாபம் பெற்றவர்கள்.

ஒரு நடிகன் சொல்லி கேட்டுவிடக் கூடிய நிலையில்தான் நான், நீங்கள், நாம் இருக்கிறோம் என்று நீங்கள் முடிவு செய்யக் காரணியாய் இருந்தது எதுவென எனக்குத் தெரியவில்லை. இப்படி ஒரு படம் வந்ததும் நாளையே நான் குறிப்பிட்ட பிரிவினரை தீவிரவாதியென்றால் என்னைவிடக் **யன் யாருமிருக்கப் போவதில்லை. அப்படியிருக்க அந்த நடிகன் சொல்லாத விஷயத்தை நீங்கள் உரைபோட்டு விளக்கிச் சொல்லி இப்படி ஊரையே பேச வைத்திருப்பது எவ்விதத்தில் நியாயமாய்ப் படுகிறது உங்களுக்கு?

நீங்கள் தாக்கி எழுதுவதென்று தீர்மானித்து விட்டீர்கள். உங்களை யாரும் தடுக்க முடியாது. எல்லாவற்றிற்கும் நீங்கள் பதில் வைத்திருக்கிறீர்கள். எங்களிடம் இருப்பதில்லை. பதில் கொடுக்க முடியாததற்குஇதற்கெல்லாம் பதில் கொடுக்க முடியாதுஎன்று சொல்லிவிடுவீர்கள். நாங்கள் எல்லாவற்றிற்கும் பதில் தேடிக் கொண்டே இருப்போம். கிடைப்பதற்குள் நீங்கள் எங்களுக்கு முன்னே போய்விட்டிருப்பீர்கள். எப்போதுமே உங்கள் சிந்தனைகளையும், வேகத்தையும் பார்த்து பிரமித்துக் கொண்டிருப்பதே எங்களுக்கு வேலையாகிப் போய்விட்டது!

நீங்கள் எழுதிய கருத்தில் எங்களுக்கு உடன்பாடில்லையெனினும் இப்படியெல்லாம் சிந்திக்க/எழுத முடியுமாவென அதையும் ரசித்துப் புளகாங்கிதமடைந்து அடுத்த படைப்புக்காக காத்துக் கொண்டிருக்கிறோம் நாங்கள்.


நாங்கள் பொதுமனிதர்கள். எங்களுக்குத் தெரியாததையெல்லாம் சொல்லிக் கொடுத்து, கெடுத்துவிடாதீர்கள். அடுத்த வாரம் துவரம் பருப்பு விலையேறுமா, சர்க்கரை இதே விலையில்தானிருக்குமா என்பது தொடங்கி பல கவலைகள் எங்களுக்குண்டு. முடிந்தால் அதைத் தீர்க்க வழிசொல்லுங்கள்.

என்ன செய்ய.. நாங்கள் சராசரிகள்.





“வெற்றி” என்பது நீ பெற்றுக் கொள்வது...!
தோல்வி” என்பது நீ கற்றுக் கொள்வது...!
அன்புடன்,
யுவா

thesa
thesa
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 817
இணைந்தது : 05/06/2009

Postthesa Mon Feb 01, 2010 10:54 pm

நண்பரே நீங்கள் குறிப்பிட்டுள்ள 8mm படம் 1999லேயே வந்திருந்தாலும் சென்ற வாரம் தான் பார்க்க நேர்ந்தது....

படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது...அதிலும் அந்த BGM அலற வைத்து விட்டது...ஒரு ஹாரர் படத்தை கூட இந்தளவுக்கு பயந்து பார்த்ததில்லை...அவ்வப்பொழுது சவுண்டை குறைத்து குறைத்துதான் பார்த்தேன்...

ஆனால் படம் ஹிட் ஆகவில்லையாமே...

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக