புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:45 pm

» கருத்துப்படம் 05/06/2024
by mohamed nizamudeen Today at 7:16 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:41 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சின்னதாய் ஒரு மரணம் Poll_c10சின்னதாய் ஒரு மரணம் Poll_m10சின்னதாய் ஒரு மரணம் Poll_c10 
32 Posts - 51%
heezulia
சின்னதாய் ஒரு மரணம் Poll_c10சின்னதாய் ஒரு மரணம் Poll_m10சின்னதாய் ஒரு மரணம் Poll_c10 
29 Posts - 46%
mohamed nizamudeen
சின்னதாய் ஒரு மரணம் Poll_c10சின்னதாய் ஒரு மரணம் Poll_m10சின்னதாய் ஒரு மரணம் Poll_c10 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சின்னதாய் ஒரு மரணம் Poll_c10சின்னதாய் ஒரு மரணம் Poll_m10சின்னதாய் ஒரு மரணம் Poll_c10 
74 Posts - 57%
heezulia
சின்னதாய் ஒரு மரணம் Poll_c10சின்னதாய் ஒரு மரணம் Poll_m10சின்னதாய் ஒரு மரணம் Poll_c10 
50 Posts - 38%
mohamed nizamudeen
சின்னதாய் ஒரு மரணம் Poll_c10சின்னதாய் ஒரு மரணம் Poll_m10சின்னதாய் ஒரு மரணம் Poll_c10 
4 Posts - 3%
T.N.Balasubramanian
சின்னதாய் ஒரு மரணம் Poll_c10சின்னதாய் ஒரு மரணம் Poll_m10சின்னதாய் ஒரு மரணம் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சின்னதாய் ஒரு மரணம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 03, 2010 12:59 am

மெதுவாய் வெள்ளை உடையில் மிதந்து வந்தார்கள் அந்தத் தேவதைகள் இருவரும். தங்கநிற இறக்கைகள் மிதமாக அவர்களின் முதுகில் மின்னின. தென்றலெனத் தவழ்ந்து மருத்துவமனையில் குறிப்பிட்ட ஒரு பகுதியை நோக்கி மிதந்து கொண்டிருந்தார்கள் அவர்கள்.

ஒன்றின் முகம் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்து இருந்தது. கண்ணோரத்தில் கண்ணீர் முத்து கண்ணாடியாய் மின்னியது. அதன் பக்கத்திலிருந்த அந்தத் தேவதை குழப்பத்துடன் இருந்தது.

"என் பிரியமான தோழியே! இன்று என் இவ்வளவு சோகமாயிருக்கிறாய்? காலம் காலமாய் நாம் இந்த மருத்துவமனையில் வலம் வருகிறோம். நீ எதற்காக இவ்வளவு வருத்தப்படுகிறாய் என்று எனக்குச் சொல்ல மாட்டாயா?" என்று அன்பொழுகக் கேட்டது அந்தச் சின்ன தேவதை

"இன்று எனக்கிடப்பட்டிருக்கும் கட்டளையை நினைத்துக் கொண்டிருந்தேன். நான் ஒரு குழந்தையின் உயிரை எடுத்துச் செல்ல வேண்டும் அது தான் எனக்கு மிகச் சோகமாக இருக்கிறது" மெதுவாகச் சொன்னது அந்த மரண தேவதை.

"மரண தேவதையே, இதற்காக நீ ஏன் இவ்வளவு வருத்தப் படுகிறாய்? எத்தனை முறை நீ குழந்தைகளின் உயிரை எடுத்துச் சென்று இருக்கிறாய்? அதற்கெல்லாம் நீ இப்படி வருத்தப் பட்டதில்லையே!" குழப்பத்துடனே கேட்டது அடுத்த தேவதை.

"என் அன்பான சின்ன தேவதையே, உன் மனத்தை நீ திடப்படுத்திக் கொள். இன்னும் சில நிமிடங்களில் இங்கே ஒரு மரணம் நிகழப் போகிறது. அந்த மரணத்தினால் பாதிக்கப்பட்ட உயிரை ஆறுதல் படுத்தி வாழ வைக்க வேண்டிய பொறுப்பு உன்னுடையது. இந்த முறை உனது வேலை மிகக் கடினம்"

"நான் அதைத்தானே தினம் தினம் செய்து வருகிறேன். இன்று அப்படி என்ன நடக்கப் போகிறது?"

பேசிய படியே இருவரும் மருத்துவ மனையின் அறை ஒன்றின் வாசலுக்கு வந்தார்கள்.

அறையின் உள்ளே தூங்கிக் கொண்டிருந்தாள் எட்டு மாதக் கர்ப்பிணி. ஒருத்தி. அவளுக்கு முப்பது வயது இருக்கலாம். மருந்துகளின் காரணமாக ஆழ்ந்த மயக்கத்திலிருந்தாள் அந்தப் பெண்.

"இவள் யார் என்று எனக்குத் தெரிகிறது. இவள் கணவன் ஓட்டி வந்த வண்டி ஒரு லாரியோடு மோதி அந்த இடத்திலேயே அனைவரும் உயிரிழந்தனர். அவள் பெற்றோர், கணவன், அவனது பெற்றோர் என்று அனைவரையுமே இவள் ஒரே நிமிடத்தில் இழந்து விட்டாளே! பின்னால் படுத்துக் கொண்டு வந்ததினால் இவள் மட்டும் பிழைத்துக் கொண்டாள். இவளை ஆறுதல் படுத்த ஒரு குழந்தையிருக்கிறதே. வாழ்வில் அவளுக்கு நம்பிக்கையும் குறிக்கோளும் சீக்கிரமாய் திரும்பி விடும் என்று நான் கூடஎண்ணினேன்."
மெல்ல அந்தப் பெண்ணின் எம்பியிருந்த வயிற்றைத் தடவிக் கொடுத்தது அந்தச் சின்ன தேவதை.

மெளனமாக பார்த்துக் கொண்டிருந்தது மரண தேவதை.

நிமிர்ந்து பார்த்தது சின்ன தேவதை. அதற்கு ஏதோ புரிந்த மாதிரியிருந்தது. தன் தங்க இறக்கைகள் படபடக்க மரண தேவதையின் முன்னால் கை கூப்பி நின்றது. அதன் கண்களிலிருந்து மாலையாய் வழிந்தது கண்ணீர்.

"வேண்டாம், வேண்டாம்!தயவு செய்து வேண்டாம்!! இன்னும் இந்த உலகத்தில் பிறக்காத இந்த ஜீவனை நீ அழைத்துச் செல்லாதே " -கதறிக் கெஞ்சியது.

மரண தேவதை கனமான மெளனமும் கண்ணீர் தளும்பிய கண்களுமாய் அந்த பெண்ணின் தலை மாட்டில் நின்றது. ஒரு முறை சின்ன தேவதையைத் திரும்பிப் பார்த்தது. மெல்லமாய்க் குனிந்து அந்தப் பெண்ணின் நெற்றியில் மிக மென்மையாக முத்தமிட்டது. தேவதையின் இறகுகள் விசிறி அந்தப் பெண்ணின் தலை முடியை மெல்லக் கோதிவிட்டன. சுற்றி வந்து அந்தப் பெண்ணின் கால்களைத் தொட்டுக் கண்ணில் ஒற்றிக்கொண்டது, தான் செய்யப் போகும் காரியத்திற்கு மன்னிப்புக் கேட்பது போல.

"இந்தப் பெண்ணின் குழந்தை இறக்கப் போகிறது என்பதைவிட எப்படி இறக்கிறது என்பதுதான் கொடுமை"

"மருத்துவர்கள் தான் வயிற்றிலிருக்கும் உயிரைக் காப்பாற்றி விட்டார்களே? இனி எப்படி? நாம் அந்தக் குழந்தையை அப்படியே விட்டுவிட்டாலென்ன? இந்தப் பெண்ணுக்கும் நல்லது"-
சின்ன தேவதையின் விசும்பல்கள் காற்றாய்க் கரைந்தன.

"நான் மேலிடத்தில் எவ்வளவோ வாதாடினேன் ஆனால் பயனில்லை. என்னுடைய உத்தரவு இந்தக் குழந்தையின் உயிரை எடுத்துப் போவது, அதற்கு இன்னும் சில நிமிடங்களே இருக்கின்றன" - கவலையுடன் சொன்ன மரண தேவதை படுத்திருந்த கர்ப்பிணியைச் சுற்றிச் சுற்றிப் பட்டாம்பூச்சி போலப் பறந்தது.

"அப்படியானால் இந்தப் பெண்ணின் உயிரையும் எடுத்துச் செல். எல்லாரையும் இழந்து இவள் வாழ்வதில் பயனில்லை"

"இவள் உயிரை எடுத்துச் செல்வதற்கு எனக்கு கட்டளையிடப்படவில்லை அதற்காகத் தான் உன்னை அழைத்து வந்தேன் நான்"
இவர்கள் இருவரின் பேச்சு அந்த அறையில் ஒரு சலசலப்பை ஏற்படுத்தியது.

முனகிக் கொண்டே திரும்பிப் படுத்தாள் அந்தப் பெண். மீண்டும் புரண்டு படுத்தாள் பின் மயக்கத்திலேயே எழுந்து அவள் கழிப்பறை நோக்கி நடந்தாள். இயற்கை உபாதை எழுப்பிவிட்டிருக்கிறது போலும். மரண தேவதை. அவள் பின்னாலேயே பறந்தது. ஒரு முறை சோகமாகச் சின்ன தேவதையைத் திரும்பிப் பார்த்தது. பின் கழிவறைக்குள் அதுவும் நுழைந்தது. மயக்கத்திலேயே அந்தப் பெண் கழிப்பறையில் முனகும் சத்தம் கேட்டது. மெல்ல மெல்ல வந்த முனகல் மெதுவாய் அடங்கியது.

சில நிமிடங்களில் தன் கைகளில் சின்ன உயிரை ஏந்திய படி மரண தேவதை. மேலே மேலே பறந்தது. எதுவும் செய்ய முடியாமல், கழிப்பறையில் மயங்கிக் கிடக்கும் அந்தப் பெண்ணுக்குமாய், மரண தேவ¨தைக்குப் பின்னுமாய் பறந்தது சின்ன தேவதை.

நோயாளியைப் பரிசோதிக்க அறைக்குள் உள்ளே வந்த நர்ஸ் அலறினாள் : "அடக் கடவுளே, பாத்ரூம் போனவளுக்கு பிரசவம் ஆகி தண்ணீருக்குள் குழந்தை விழுந்து இறந்துவிட்டதே!"

சாமுண்டி



சின்னதாய் ஒரு மரணம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக