புதிய பதிவுகள்
» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Yesterday at 4:59 pm

» மக்களின் அறியாமையை அடித்து கேட்டிருக்கிறார்.. Hats off: கங்கனாவை அறைந்த கான்ஸ்டபிளை பாராட்டிய சேரன்
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Yesterday at 3:46 pm

» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Yesterday at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Jun 06, 2024 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Jun 06, 2024 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஞாபகத் தீயின் சுவாலையில்… ஓர் எரியும் தேசத்தின் முடிவிலித் துயரங்கள் Poll_c10ஞாபகத் தீயின் சுவாலையில்… ஓர் எரியும் தேசத்தின் முடிவிலித் துயரங்கள் Poll_m10ஞாபகத் தீயின் சுவாலையில்… ஓர் எரியும் தேசத்தின் முடிவிலித் துயரங்கள் Poll_c10 
69 Posts - 58%
heezulia
ஞாபகத் தீயின் சுவாலையில்… ஓர் எரியும் தேசத்தின் முடிவிலித் துயரங்கள் Poll_c10ஞாபகத் தீயின் சுவாலையில்… ஓர் எரியும் தேசத்தின் முடிவிலித் துயரங்கள் Poll_m10ஞாபகத் தீயின் சுவாலையில்… ஓர் எரியும் தேசத்தின் முடிவிலித் துயரங்கள் Poll_c10 
41 Posts - 34%
mohamed nizamudeen
ஞாபகத் தீயின் சுவாலையில்… ஓர் எரியும் தேசத்தின் முடிவிலித் துயரங்கள் Poll_c10ஞாபகத் தீயின் சுவாலையில்… ஓர் எரியும் தேசத்தின் முடிவிலித் துயரங்கள் Poll_m10ஞாபகத் தீயின் சுவாலையில்… ஓர் எரியும் தேசத்தின் முடிவிலித் துயரங்கள் Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
ஞாபகத் தீயின் சுவாலையில்… ஓர் எரியும் தேசத்தின் முடிவிலித் துயரங்கள் Poll_c10ஞாபகத் தீயின் சுவாலையில்… ஓர் எரியும் தேசத்தின் முடிவிலித் துயரங்கள் Poll_m10ஞாபகத் தீயின் சுவாலையில்… ஓர் எரியும் தேசத்தின் முடிவிலித் துயரங்கள் Poll_c10 
5 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஞாபகத் தீயின் சுவாலையில்… ஓர் எரியும் தேசத்தின் முடிவிலித் துயரங்கள் Poll_c10ஞாபகத் தீயின் சுவாலையில்… ஓர் எரியும் தேசத்தின் முடிவிலித் துயரங்கள் Poll_m10ஞாபகத் தீயின் சுவாலையில்… ஓர் எரியும் தேசத்தின் முடிவிலித் துயரங்கள் Poll_c10 
111 Posts - 59%
heezulia
ஞாபகத் தீயின் சுவாலையில்… ஓர் எரியும் தேசத்தின் முடிவிலித் துயரங்கள் Poll_c10ஞாபகத் தீயின் சுவாலையில்… ஓர் எரியும் தேசத்தின் முடிவிலித் துயரங்கள் Poll_m10ஞாபகத் தீயின் சுவாலையில்… ஓர் எரியும் தேசத்தின் முடிவிலித் துயரங்கள் Poll_c10 
62 Posts - 33%
mohamed nizamudeen
ஞாபகத் தீயின் சுவாலையில்… ஓர் எரியும் தேசத்தின் முடிவிலித் துயரங்கள் Poll_c10ஞாபகத் தீயின் சுவாலையில்… ஓர் எரியும் தேசத்தின் முடிவிலித் துயரங்கள் Poll_m10ஞாபகத் தீயின் சுவாலையில்… ஓர் எரியும் தேசத்தின் முடிவிலித் துயரங்கள் Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
ஞாபகத் தீயின் சுவாலையில்… ஓர் எரியும் தேசத்தின் முடிவிலித் துயரங்கள் Poll_c10ஞாபகத் தீயின் சுவாலையில்… ஓர் எரியும் தேசத்தின் முடிவிலித் துயரங்கள் Poll_m10ஞாபகத் தீயின் சுவாலையில்… ஓர் எரியும் தேசத்தின் முடிவிலித் துயரங்கள் Poll_c10 
7 Posts - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஞாபகத் தீயின் சுவாலையில்… ஓர் எரியும் தேசத்தின் முடிவிலித் துயரங்கள்


   
   
sathyan
sathyan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Postsathyan Tue Apr 06, 2010 12:56 am

ஞாபகத் தீயின் சுவாலையில்… ஓர் எரியும் தேசத்தின் முடிவிலித் துயரங்கள்…



December 24th, 2009 | Categories: English



2008 டிசம்பர் மாதத்தின் அந்தக் கடைசி நாட்கள்… உங்கள் ஞாபகப் பேழையை மெல்லத் திறந்து பாருங்கள். உலகின் மனசாட்சி செத்துப்போய்விட்ட ஒரு தருணத்தில்… எதேச்சதிகார ஆதிக்கச் சக்திகளின் கொடூரமான மறுபக்கத்தைத் தோலுரித்துக் காட்டிய அந்தப் பதினாறு நாட்கள்… இன்றுவரை கடலெனப் பெருகி ஓடும் எம் சொந்தங்களின் ரத்தம்…


ஞாபகத் தீயின் சுவாலையில்… ஓர் எரியும் தேசத்தின் முடிவிலித் துயரங்கள் Gazaslide_4__585x43_464483a6

இந்தப் புகைப்படங்களை நினைவிருக்கிறதா? இவை கிறிஸ்துமஸ் பண்டிகைக்காகவோ ஆங்கிலப் புத்தாண்டுக் கொண்டாட்டத்துக்காகவோ பற்பல வர்ணங்களில் வெடித்துச் சிதறும் வானவெடிகளா? இல்லை சோதரரே இல்லை.
ஞாபகத் தீயின் சுவாலையில்… ஓர் எரியும் தேசத்தின் முடிவிலித் துயரங்கள் Image005


சர்வதேசரீதியாகத் தடைசெய்யப்பட்டுள்ள நாசகார வெண்பொஸ்பரஸ் குண்டுகள் அடுக்கடுக்காகப் பொழியப்படும் கோரக்காட்சிதான் இது. வெடிக்கும் போதே பற்பல துண்டங்களாகச் சிதறிவெடித்து மனிதத் தோலையும் சதையையும் அப்படியே உருக்கிவிடும் கொடூரமான குண்டுகள் அவை. ‘பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்’ என்றான், பாரதி. உலகத்துக்கே பொலீஸ்காரனாய் கூவிக்கூவித் தன்னைப் பற்றிக் கூறிக்கொள்ளும் அமெரிக்காவும் அதன் கூட்டணிகளும் பலஸ்தீன் ஆண்களும் பெண்களும் பச்சிளம் பாலகரும் தள்ளாத முதியோரும் உயிரோடு பொசுங்கிப் போவதைக் கண்டும் காணாதது போல, இதயமற்ற இஸ்ரேலின் அரக்கத்தனத்தை ‘ இஸ்ரேலின் தற்காப்பு யுத்தம்’ என்று முழுப் பூசணிக்காயை சோற்றுக்குள் மறைக்க முயன்ற அந்தக் கறுப்பு நாட்களை மீண்டும் ஒருதரம் உங்கள் நினைவுப் புத்தகத்திலிருந்து திருப்பிப் பாருங்கள்… .
ஞாபகத் தீயின் சுவாலையில்… ஓர் எரியும் தேசத்தின் முடிவிலித் துயரங்கள் Gazaslide_1__585x43_464431a

தங்கள் சொந்த நிலத்திலேயே அடிமைகளைப் போல உரிமைகள் அற்று வாழும் பரிதாப நிலை எங்கள் மக்களுக்கு. ஐரோப்பாவில் அடியும் உதையும் பட்டு, அண்டிப் பிழைக்கவந்த பிடாரிகள், இன்முகத்தோடு இருப்பிடமளித்த இஸ்லாமிய பூமியை சூழ்ச்சிகளாலும் அடாவடித்தனத்தாலும் அபகரித்துக்கொண்டு அந்த அப்பாவி முஸ்லிம்களுக்கு இதுகாலம் வரை செய்துவரும் அட்டூழியங்கள் ஒன்றா இரண்டா? எண்ணிக் கணக்கிட்டுப் பார்க்கத்தான் முடியுமா?



ஞாபகத் தீயின் சுவாலையில்… ஓர் எரியும் தேசத்தின் முடிவிலித் துயரங்கள் Captive-children1-300x202



தேடுதல் வேட்டை, சுற்றி வளைப்பு என்ற போர்வையில் தினந்தினம் எத்தனை அப்பாவிகளைக் கைதுசெய்து இழுத்துப் போய்த் தமது சித்திரவதைக்கூடங்களில் அடைத்து வைத்துத் துன்புறுத்துகின்றனர்?

அப்படிக் கடத்திக்கொண்டு செல்லப்படுவோரில் எத்தனை எத்தனை பேர் பெண்களும் குழந்தைகளும் உள்ளனர்? அந்த சீருடை மிருகங்கள் எமது பெண்களைக் கடித்துக் குதறுவதைக் கண்டும் கேட்டும் எமது உள்ளங்கள் உருகவில்லையா?

ஞாபகத் தீயின் சுவாலையில்… ஓர் எரியும் தேசத்தின் முடிவிலித் துயரங்கள் Prisoners_big_woman

தமக்குரிய குழந்தைப்பருவத்தின் இயல்பான வசந்தத்தை நுகர முடியாமல் சிறைக்கூடங்களிலும் அகதிமுகாம்களிலும் அல்லலுறும் பச்சிளம் பாலகர்களைப் பார்த்துத்தான் மனங்கலங்கவில்லையா?


இஸ்ரேலியச் சிறைகளிலே முஸ்லிம் நோயாளிகளுக்கு மருந்தில்லை…மருத்துவப் பராமரிப்பில்லை… அடித்தடித்தே குற்றுயிராய்க்கிடக்கும் எமது சகோதர சகோதரிகளின் உடல் உள் உறுப்புகளை வெட்டியெடுத்து தமது கூலிப்பட்டாளத்துக்குப் பொருத்திக்கொள்ளும் ஈனத்தனமான உறுப்புத் திருட்டைக் கேள்விப்பட்டுத்தான் நெஞ்சம் கொதிக்கவில்லையா?
ஞாபகத் தீயின் சுவாலையில்… ஓர் எரியும் தேசத்தின் முடிவிலித் துயரங்கள் Images_news_2009_08_20_organ-harvesting_300_01-218x300


நான்கு புறமும் முற்றுகை, பொருளாதாரத் தடை என்று கொஞ்சங்கொஞ்சமாக அந்தப் பலஸ்தீன் முஸ்லிம்களைக் கொல்வதில் திருப்தி காணாமல்தான் காஸாமீது நெஞ்சை நடுங்கச் செய்யும் கொடூரமான ஆக்கிரமிப்பு யுத்தத்தைக் கட்டவிழ்த்துவிட்டது இஸ்ரேல்.


அந்த ஆக்கிரமிப்பு யுத்தத்தில் எத்தனை எத்தனை பிஞ்சுப்பூக்கள் பூத்துக் குலுங்கு முன்னரே பொசுங்கிப்போயின! பூக்களுக்குத் தீவைத்த கொடுங்கோலர்களைப் பாருங்கள்! ஞாபகத் தீயின் சுவாலையில்… ஓர் எரியும் தேசத்தின் முடிவிலித் துயரங்கள் Burnt-alive-2-230x300

நெஞ்சில் ஈரம்வற்றிப்போன அந்த நீசர்களுக்கு ஓன்றுமறியாத இந்தப் பாலகர்கள் என்ன தீமை செய்துவிட்டார்கள்?
ஞாபகத் தீயின் சுவாலையில்… ஓர் எரியும் தேசத்தின் முடிவிலித் துயரங்கள் Burnt-alive-300x238


இதையும் சற்றுப் பார்த்துக் கொள்ளுங்கள்… உயிருடன் கருகிப்போன சின்னஞ்சிறு கைக்குழந்தை…

ஞாபகத் தீயின் சுவாலையில்… ஓர் எரியும் தேசத்தின் முடிவிலித் துயரங்கள் Baby_khan_younis

பஞ்சுப் போன்ற அந்தப் பிஞ்சு உடல் கொடூரமான வெண்பொஸ்பரஸ் அமிலத்தில் வெந்து கருகியபோது எப்படியெல்லாம் கதறித் துடித்திருக்கும்? இந்தக் காட்டுமிராண்டித் தனமான தண்டனைக்கு ஆளாவதற்கு அந்தச் சின்னஞ்சிறு சிசு என்ன அநீதிசெய்தது?



கண்ணுக்கு முன்னால் தம் குழந்தைகளைப் பறிகொடுத்துவிட்டு இவர்களைப் போலவே பரிதவிக்கும் அன்னையர், தந்தையர் எத்தனைபேர் அங்கே….
ஞாபகத் தீயின் சுவாலையில்… ஓர் எரியும் தேசத்தின் முடிவிலித் துயரங்கள் Balousha-family-150x150 ஞாபகத் தீயின் சுவாலையில்… ஓர் எரியும் தேசத்தின் முடிவிலித் துயரங்கள் 301148548-150x150
குண்டுத் தாக்குதலால் இடிந்துபோன வீட்டுக்குள் உயிரிழந்த ஒரே குடும்பத்தின் ஐந்து மலர்கள் இவர்கள்…
ஞாபகத் தீயின் சுவாலையில்… ஓர் எரியும் தேசத்தின் முடிவிலித் துயரங்கள் Images_news_2008_12_31_gaza-children-killed291208_300_01
ஞாபகத் தீயின் சுவாலையில்… ஓர் எரியும் தேசத்தின் முடிவிலித் துயரங்கள் Bed-room-of-5-killed-girls-150x150
ஞாபகத் தீயின் சுவாலையில்… ஓர் எரியும் தேசத்தின் முடிவிலித் துயரங்கள் Gaza-war

இந்தப் பாலகர்களைப் பாருங்கள்… கல்லுக்குள்ளும் ஈரமிருப்பதைக் கண்டிருக்கிறோம் நீர்த்துளிகள் கசிவதைக் கண்டு…ஆனால், இஸ்ரேலியக் கொடியவர்களுக்கு இதயமே கல்லாகி இருப்பதை நேரில் பார்க்கிறோம் பச்சிளம் பாலகரின் ரத்தத்தை இப்படி சிந்தக்கண்டு…


உயிரோடு மண்ணுக்குள் புதையுண்டுபோன எத்தனை எத்தனை சிறார்கள் இவர்களைப்போல… புதையுண்டு போனவை இந்த உயிர்கள் மட்டும்தானா? இல்லை சோதரரே இல்லை… முழு உலகத்தினதும் நீதியும் நியாயமும் தான்!
ஞாபகத் தீயின் சுவாலையில்… ஓர் எரியும் தேசத்தின் முடிவிலித் துயரங்கள் 148175

ஞாபகத் தீயின் சுவாலையில்… ஓர் எரியும் தேசத்தின் முடிவிலித் துயரங்கள் Falluja2-1-10-2004_jpg-300x215

இதோ உள்ளத்தைக் கசக்கிப் பிழியும் மற்றொரு காட்சி…



உயிரோடு மண்ணுக்குள் புதையுண்டுபோன இன்னமும் எத்தனை சிறார்கள் இவர்களைப்போல… புதையுண்டு போனவை இந்த உயிர்கள் மட்டும்தானா? இல்லை… இவ்வுலகின் மனிதாபிமானமும் மனித விழுமியங்களும்தாம்..

ஒரு தாயும் அவளின் நான்கு குழந்தைகளும் ஒன்றாகவே இவ்வுலகை நீத்த இந்த உள்ளம் உருக்கும் காட்சியைப் பாருங்கள்…
ஞாபகத் தீயின் சுவாலையில்… ஓர் எரியும் தேசத்தின் முடிவிலித் துயரங்கள் 4-childrenmother
பாடசாலையில் படித்துக்கொண்டிருந்த மாணவமணிகள் இரத்த வெள்ளத்தில் மிதந்த காட்சியைக் கண்கொண்டு பார்க்கத்தான் முடிகிறதா?
ஞாபகத் தீயின் சுவாலையில்… ஓர் எரியும் தேசத்தின் முடிவிலித் துயரங்கள் Image023-150x150 ஞாபகத் தீயின் சுவாலையில்… ஓர் எரியும் தேசத்தின் முடிவிலித் துயரங்கள் Image021-150x150

ஐ.நா. அலுவலகமாவது தப்பியதா?


பதினாறு நாட்கள் இஸ்ரேல் மேற்கொண்ட அட்டகாசங்களினால் எத்தனைபேர் இன்னமும் அங்கவீனர்களாய்… நடைபிணங்களாய் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் என்பதைப் பற்றி எண்ணிப் பார்க்கிறோமா நாம்? ஞாபகத் தீயின் சுவாலையில்… ஓர் எரியும் தேசத்தின் முடிவிலித் துயரங்கள் S0-rap00-150x150



இந்த நிமிஷம் வரை உடலாலும் உள்ளத்தாலும் எத்தனையோ இன்னல்களை அனுபவித்துவரும் எங்கள் சகோதர சகோதரிகளுக்காக நாம் என்னதான் செய்துவிட்டோம்!


ஞாபகத் தீயின் சுவாலையில்… ஓர் எரியும் தேசத்தின் முடிவிலித் துயரங்கள் Injuredboy-300x200இனி இந்த உலகத்தின் வர்ணங்களை.. அழகிய காட்சிகளைக் … ஏன் தன் தாயின் முகத்தைக்கூடக் காணமுடியாமல் விழிகளை இழந்துவிட்ட இந்த சிறுவனைப் பாருங்கள்…


இன்றுவரை எத்தனையோ கொடுமைகளையும் அடக்குமுறைகளையும் சொல்லொணாச் சித்திரவதைகளையும் அனுபவித்துவரும் எமது சக முஸ்லிம்களின் பொருட்டு நாம் என்னதான் செய்துவிட்டோம்! ஞாபகத் தீயின் சுவாலையில்… ஓர் எரியும் தேசத்தின் முடிவிலித் துயரங்கள் Shifa-hospital-icu-6-year-with-brain-trouma-150x150



முஸ்லிம்களின் முதல் கிப்லாவாம் பைத்துல் அக்ஸாவையும் அல்குத்ஸையும் மீட்பதற்காக எம் சார்பாகப் போராடிக் கொண்டிருக்கும் எமது உடன்பிறப்புக்களுக்காக நாம் என்ன உதவி செய்திருக்கிறோம்? அன்றாடம் செத்துச் செத்துப் பிழைக்கும் எமதே சகோதர முஸ்லிம்களுக்காய் மனமுருகி ஒருதுளிக் கண்ணீர் சிந்தி எம் இறைவனிடம் இறைஞ்சினோமா?
ஞாபகத் தீயின் சுவாலையில்… ஓர் எரியும் தேசத்தின் முடிவிலித் துயரங்கள் Images_news_2009_12_08_aqsa-attacked-0_300_01



இஸ்லாத்தின் எதிரிகளின் எதேச்சதிகாரத்தை முடிவுக்குக் கொண்டுவந்து அந்த விஷப் பாம்புகளின் பல்லைப் பிடுங்கி, அவர்களை ஒடுக்குவதற்காக அவர்களின் பொருளாதாரத்தை ஆட்டங்காணச் செய்வதற்காக எமது ஒருசில அசௌகரியங்களை சகித்துக் கொள்ளத்தான் தயாராக இருக்கிறோமா? சொல்லுங்கள் என்னருமை இஸ்லாமியச் சொந்தங்களே!
நீங்கள் அனைவரும் தயாராக இருந்தால் இன்ஷா அல்லாஹ் இரத்தக்காட்டேறிகளாய் எம்மவர் இரத்தத்தை உறிஞ்சும் இஸ்ரேலுக்கு எதிரான எமது பகிஷ்கரிப்புப் போராட்டத்தை உடனே தொடங்குவோம்… குடிநீரில் இருந்து ஆரம்பிப்போம்… நாம் பருகுவது தண்ணீரா இல்லை எமதே சொந்தச் சகோதரர்களின் செந்நீரா என்பதைப் பற்றி இன்ஷா அல்லாஹ் நாளை கலந்துரையாடுவோம்… ஒற்றுமை என்னும் கயிற்றைப் பற்றிப் பிடித்துக்கொண்டு இஸ்லாத்தின் எதிரிகளுக்கு ஒரு பாடம் புகட்டுவோம், அல்லாஹு அக்பர்!


அவர் (நிராகரிப்பவர்)களை எதிர்ப்பதற்காக உங்களால் இயன்ற அளவு பலத்தையும், திறமையான போர்க் குதிரைகளையும் ஆயத்தப்படுத்திக் கொள்ளுங்கள். இதனால் நீங்கள் அல்லாஹ்வின் எதிரியையும், உங்களுடைய எதிரியையும் அச்சமடையச் செய்யலாம். அவர்கள் அல்லாத வேறு சிலரையும் (நீங்கள் அச்சமடையச் செய்யலாம்). அவர்களை நீங்கள் அறிய மாட்டீர்கள் - அல்லாஹ் அவர்களை அறிவான். அல்லாஹ்வுடைய வழியில் நீங்கள் எதைச் செலவு செய்தாலும், (அதற்கான நற்கூலி) உங்களுக்கு பூரணமாகவே வழங்கப்படும். (அதில்) உங்களுக்கு ஒரு சிறிதும் அநீதம் செய்யப்பட மாட்டாது.” ( அல்குர்ஆன் - 8:60 ).

ஞாபகத் தீயின் சுவாலையில்… ஓர் எரியும் தேசத்தின் முடிவிலித் துயரங்கள் Boycott-israel-275x275

இஸ்ரேலியப் பொருட்களைப் பகிஷ்கரிப்போம்!





ஆக்கம்: லறீனா அப்துல் ஹக்.
புகைப்படங்கள் உபயம்: PIC


--
தமிழ் முஸ்லிம் சகோதரர்கள் குழுமம் குறித்து:
http://groups.google.com/group/tamilmuslimbrothers?hl=en

To unsubscribe from this group, send email to
tamilmuslimbrothers+unsubscribe@googlegroups.com



Windows Live: Make it easier for your friends to see what you’re up to on Facebook.

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Tue Apr 06, 2010 1:04 am

நாசக்காற இஸ்ரேலை மனதால் வெறுக்க மட்டுமே முடியும்.



ஞாபகத் தீயின் சுவாலையில்… ஓர் எரியும் தேசத்தின் முடிவிலித் துயரங்கள் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Apr 06, 2010 1:07 am

என்ன கொடுமை இது இறைவா... இதற்கெல்லாம் விடிவுவராதா,,,?

அமைதி நிலவாதா...? ஞாபகத் தீயின் சுவாலையில்… ஓர் எரியும் தேசத்தின் முடிவிலித் துயரங்கள் 440806




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Tue Apr 06, 2010 1:10 am

கண்கள் கண்ணீரை சிந்தியது! நன்றி தோழரே!இவர்கள் சிந்திய இரத்தத்துக்கும்,
கண்ணீருக்கும் பதில் சொல்லியே ஆகணும்! அழுகை அழுகை அழுகை



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Apr 06, 2010 1:12 am

இந்த செய்தியை படித்துவிட்டு மனம் கலங்கி விட்டேன்.
மேலும் இதுல உள்ள படங்களை என்னால் பார்க்க கூட முடியவில்லை.

இறைவா உலகை அமைதியாக்கு - நீ இருந்தால்....



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Tue Apr 06, 2010 1:16 am

இதுபோன்ற கொடுமைகள் என்றுதான் தீருமோ...? இறைவா இருந்தால் நீ பதில் சொல்லு. ஞாபகத் தீயின் சுவாலையில்… ஓர் எரியும் தேசத்தின் முடிவிலித் துயரங்கள் 440806



வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

ஞாபகத் தீயின் சுவாலையில்… ஓர் எரியும் தேசத்தின் முடிவிலித் துயரங்கள் Avatar15523pf0
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக