புதிய பதிவுகள்
» ஆலமரம் போல் தனித்துவமாக வாழ....
by சிவா Today at 5:08 pm

» சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்
by சிவா Today at 4:12 pm

» மாநிலத்தின் செயல்பாட்டை முடக்கும் ஆளுநர் பதவி தேவையா?
by சிவா Today at 3:41 pm

» 6 ஆண்டுகளில் 10,814 என்கவுன்ட்டர்கள்... உ.பி-யில் நடப்பது சட்டத்தின் ஆட்சியா?
by சிவா Today at 3:37 pm

» அதிமுக vs பா.ஜ.க.
by சிவா Today at 3:24 pm

» தமிழ்நாடு பட்ஜெட் 2023-2024
by சிவா Today at 3:15 pm

» [மின்னூல்] உடல், பொருள், ஆனந்தி - ஜாவர் சீதாராமன்
by சிவா Today at 11:26 am

» கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள்
by சிவா Today at 4:09 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 4:01 am

» மந்திரங்கள்
by சிவா Today at 3:49 am

» மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை பெற தகுதியானவர்கள் யார்?
by சிவா Today at 2:41 am

» கல்யாணம் முதல் கருவுறுதல் வரை - உணவு முறை
by சிவா Today at 2:33 am

» ஸ்ரீராம தரிசனம்
by சிவா Today at 1:29 am

» பிக்மென்டேஷன் எதனால் ஏற்படுகிறது? அதற்கான தீர்வு என்ன?
by சிவா Yesterday at 10:24 pm

» கருத்துப்படம் 21/03/2023
by mohamed nizamudeen Yesterday at 7:46 am

» நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன சாப்பிடலாம்? வைட்டமின் மாத்திரைகள் உடலுக்கு நல்லதா?
by சிவா Yesterday at 2:32 am

» சீனாவில் மோடியின் பெயர் ‘லாவோக்சியன்’: #modi_laoxian
by சிவா Yesterday at 2:17 am

» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Mon Mar 20, 2023 9:08 pm

» மகா பெரியவாளும் காந்திஜியும்
by T.N.Balasubramanian Mon Mar 20, 2023 7:23 pm

» வல்லாரை கீரையின் மகிமைகள்
by T.N.Balasubramanian Mon Mar 20, 2023 5:09 pm

» மனதை ஒருநிலைப்படுத்தும் உணர்ச்சி நுண்ணறிவு
by Dr.S.Soundarapandian Mon Mar 20, 2023 12:49 pm

» உலகச் செய்திகள்!
by சிவா Sun Mar 19, 2023 9:18 pm

» வியர்வை வாடை: காரணம், தீர்வுகள், கட்டுப்படுத்தும் வழிகள்
by T.N.Balasubramanian Sun Mar 19, 2023 9:11 pm

» உங்களுக்கு வந்திருப்பது கொரோனா தொற்றா அல்லது H3N2-வா அல்லது N1N1 தொற்றா?
by சிவா Sun Mar 19, 2023 9:07 pm

» பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (14)
by T.N.Balasubramanian Sun Mar 19, 2023 9:04 pm

» மகிழ்ச்சியான மணவாழ்க்கைக்கு 30 கட்டளைகள்
by Dr.S.Soundarapandian Sun Mar 19, 2023 9:02 pm

» கும்பத்தில் வலுவாகும் சனி:
by சிவா Sun Mar 19, 2023 9:02 pm

» பூண்டு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
by சிவா Sun Mar 19, 2023 9:00 pm

» அண்ணாமலையின் பேச்சுக்கு, நான் பதவுரை எழுத முடியாது! - வானதி சீனிவாசன்
by T.N.Balasubramanian Sun Mar 19, 2023 8:45 pm

» நரம்பு மண்டலம் பாதிப்படைந்து இருப்பதை உணர்த்தும் சில அறிகுறிகள்
by சிவா Sun Mar 19, 2023 8:35 pm

» தமிழக அரசியல் செய்திகள்
by Dr.S.Soundarapandian Sun Mar 19, 2023 1:54 pm

» கோஹினூர் வைரம்
by Dr.S.Soundarapandian Sun Mar 19, 2023 1:48 pm

» ரௌடியை பிரதமர் கையெடுத்துக் கும்பிட்டது ஏன்?
by சிவா Sun Mar 19, 2023 12:30 am

» லண்டன் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட உள்ள கோஹினூர் வைரம்
by சிவா Sun Mar 19, 2023 12:23 am

» தேவாலயத்திற்கு வரும் பெண்களை நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டியதாக பாதிரியார்
by T.N.Balasubramanian Sat Mar 18, 2023 5:44 pm

» சிறப்பு குழந்தைகள்! கவிஞர் இரா.இரவி
by eraeravi Fri Mar 17, 2023 8:41 pm

» பற்களை பராமரிப்பதில் நாம் செய்யும் தவறுகள்
by T.N.Balasubramanian Fri Mar 17, 2023 7:34 pm

» உலக தூக்க தினம் - மார்ச் 17
by T.N.Balasubramanian Fri Mar 17, 2023 6:21 pm

» 18 நாடுகள் இந்திய ரூபாயில் வர்த்தகம் செய்ய அனுமதி
by T.N.Balasubramanian Fri Mar 17, 2023 6:10 pm

» அதிகம் மாசடைந்த நகரங்களின் பட்டியலில் முன்னணியில் இந்தியா
by mohamed nizamudeen Fri Mar 17, 2023 9:56 am

» கடன் வாங்கி ஆடம்பரத் திருமணம் செய்ய வேண்டாமே...
by Dr.S.Soundarapandian Thu Mar 16, 2023 10:03 pm

» வெளிநாட்டு வழக்கறிஞர்கள் இந்தியாவில் பயிற்சி செய்யலாம், ஆனால் நீதிமன்றத்தில் ஆஜராக முடியாது
by Dr.S.Soundarapandian Thu Mar 16, 2023 10:00 pm

» 3 வல்லரசுகள் உருவாக்க திட்டமிடும் அணுசக்தி நீர்மூழ்கி படை
by Dr.S.Soundarapandian Thu Mar 16, 2023 9:54 pm

» முதுமலையில் படமாக்கப்பட்ட ஆவணப்படம் ஆஸ்கர் விருது வென்றுள்ளது
by Dr.S.Soundarapandian Thu Mar 16, 2023 9:46 pm

» கண் அழுத்த நோய் - Glaucoma
by சிவா Thu Mar 16, 2023 8:17 pm

» ஆன்லைன் சூதாட்டமும் அரசியல் சூதாட்டமும்
by சிவா Thu Mar 16, 2023 5:28 pm

» போதை வலையில் சிறுவர்கள்... என்னவாகும் தமிழ்நாடு?
by T.N.Balasubramanian Thu Mar 16, 2023 5:19 pm

» 5,000 கலை அம்சங்கள் உடன் 5,000 ஆண்டுகால இந்திய நாகரிகத்தை சிறப்பிக்கும் புதிய நாடாளுமன்ற கட்டிடம்
by சிவா Thu Mar 16, 2023 5:00 pm

» பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்!
by சிவா Thu Mar 16, 2023 4:09 pm

» முத்துலட்சுமி ராகவன் நூல்கள்
by சிவா Thu Mar 16, 2023 3:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
சிவா
கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 13 Poll_c10கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 13 Poll_m10கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 13 Poll_c10 
23 Posts - 70%
T.N.Balasubramanian
கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 13 Poll_c10கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 13 Poll_m10கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 13 Poll_c10 
5 Posts - 15%
Dr.S.Soundarapandian
கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 13 Poll_c10கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 13 Poll_m10கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 13 Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 13 Poll_c10கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 13 Poll_m10கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 13 Poll_c10 
1 Post - 3%
venkat532
கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 13 Poll_c10கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 13 Poll_m10கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 13 Poll_c10 
1 Post - 3%
கோபால்ஜி
கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 13 Poll_c10கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 13 Poll_m10கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 13 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
சிவா
கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 13 Poll_c10கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 13 Poll_m10கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 13 Poll_c10 
435 Posts - 67%
T.N.Balasubramanian
கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 13 Poll_c10கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 13 Poll_m10கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 13 Poll_c10 
95 Posts - 15%
Dr.S.Soundarapandian
கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 13 Poll_c10கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 13 Poll_m10கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 13 Poll_c10 
65 Posts - 10%
mohamed nizamudeen
கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 13 Poll_c10கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 13 Poll_m10கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 13 Poll_c10 
23 Posts - 4%
Dhivya Jegan
கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 13 Poll_c10கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 13 Poll_m10கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 13 Poll_c10 
12 Posts - 2%
Elakkiya siddhu
கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 13 Poll_c10கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 13 Poll_m10கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 13 Poll_c10 
6 Posts - 1%
eraeravi
கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 13 Poll_c10கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 13 Poll_m10கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 13 Poll_c10 
4 Posts - 1%
THIAGARAJAN RV
கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 13 Poll_c10கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 13 Poll_m10கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 13 Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு

3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வலைப்பதிவு

கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு

Page 13 of 14 Previous  1 ... 8 ... 12, 13, 14  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 88781
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 26, 2010 10:31 pm

First topic message reminder :

கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு வைரமுத்து

'கவிப்பேரரசு' வைரமுத்து அவர்கள் எழுதிய 'கருவாச்சி காவியம்' என்ற நூல் வெளியீட்டு விழா 2006 டிசம்பர் 16 அன்று சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது.

கலைஞர் கருணாநிதி நூலை வெளியிட, முதல் நூலை உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.ஆர். லட்சுமணன் பெற்றுக் கொண்டார்.

[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 88781
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 15, 2015 2:02 am

[You must be registered and logged in to see this image.]

"அந்தக் கெழவனுக்கு ஒரு காரீயமாவது இருந்திச்சு. ஒங்க கெழவனுக்கு ஒரு ஒட்டுக் கோமணமாச்சும் இருக்கா?"

"ஏன் இந்த வீடும் காடும் இல்லையா?"

"ஆமாம். இந்த வெளங்காத வீடும் வெளை யாத காடும் உப்புக் கல்லுக்கு ஆகுமா? ஏதோ ஒன் தாட்டியத்துல ஓடிக்கிருக்கு வண்டி. நீ வட்டிவாசிக்குக் குடுத்து வாங்குற காசிலதான மாமன் மஞ்சக் குளிச்சுக்கிட்டிருக்கு.

"என்னடி சொல்ற?"

"வைத்தியம் பண்ண வாங்கித் தின்னன்னு வார காசெல்லாம் கெழவனுக்கே போயிட்டா நாளப்பின்ன நம்மளுக்குன்னு என்ன இருக்கு? நாளக்கி நீயும் விழுந்திட்டன்னு வச்சுக்க ஒன்னையும் நாந்தான தூக்கிச் சுமக்கணும்? எம் முந்தானையில முடிஞ்சுவைக்க என்ன இருக்கு?

என் புருசனத் தவிர?" இப்படி எத்தனையோ தடவ எறும்பா ஊரி ஊரி அந்தக் கல்ல தேய்ச்சிட்டா.

தானியம் வித்த பணத்தையும் வட்டிவாசிக்கு வார காசையும் பொண்டாட்டி பொறுப்புல விட்டுட்டான் கட்டையன். போகப் போகத் தகப்பனுக்கும் மகனுக்கும் பேச்சுவார்த்தை இல்லாமப் பிரிச்சேபுட்டா திம்சு.

ஒரு கோட்டைச் சுவர் இருக்கு. எங்கிருந்தோ ஒரு பறவை பறந்து வந்து அதுல உக்காருது. எச்சமிடுது. அதுலருந்து ஒரு வெத விழுகுது. விழுந்த வெத மொளைக்குது. அது வேர்விட வேர்விட விரிசல் கண்டுபோகுது சுவரு. தெரியாமச் செய்யுது பறவை தெரிஞ்சே செய்றா திம்சு.

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 88781
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 15, 2015 2:12 am

[You must be registered and logged in to see this image.]

அம்புலிப்புத்தூர விட்டு அழகுசிங்கத்த மீட்டு வந்தன்னைக்கிருந்து கண்ணுல ஒறக்கம் தங்கல கருவாச்சிக்கு. நெஞ்சாங்கூட்ல கத்தி குத்தி முதுகுப் பக்கம் முள்ளுத் தச்ச கதையாகிப்போச்சு
கருவாச்சி கதை.

அழகுசிங்கத்த நெனச்சா அவளுக்கு அழுகையா வருது. எதிரிகள விலாவுல குத்தி விழுத்தாட்டிட்டுக் கொம்புல குடல் மால சுத்தி வர வேண்டிய என் வீட்டுக் காரிக்காள, இப்பிடி எச்சி எல மேயப் போயி ஈனப்பட்டு நிக்குதே... இது நெஞ்சாங்கூட்டுல பாஞ்சு நட்டுக்குத்தலா நிக்கிற கத்தி.

யாருக்கும் தெரியாமக் காசு குடுத்து அவனத் தேவடியா வீட்டுக்கு ஏவிவிட்ருக் காளே ஒரு எழவெடுத்த சிறுக்கி... அது முதுகுல குத்தி முனையடிஞ்சு நிக்கிற முள்ளு.

ஏதோ லவுக்க போட்ட லம்பாடி பொழச்சுப் போகட்டும்னு கண்டுங் காணாம இருந்த கருவாச்சி இப்பப் பளிச்சுன்னு முழிச்சுக்கிட்டா.

இவ யாரு?

எந்தக் காட்டுச் சிறுக்கி?

ஒழுங்கு மொறையான பொம்பளதானா?

ஒண்டவந்த பிடாரியா?

மேட்டு நெலத்துல நட்டவனும் கெட்டான் மேனாமினுக்கியக் கட்டுன வனும் கெட்டான்னு சொல்லுவாகளே... இவ நல்ல சிறுக்கியா? மேனா மினுக்கியா?

இவளக் கண் கொத்திப் பாம்பு மாதிரி கவனிச்சே ஆகணும்னு பொட்டுல பொறிதட்டுது கருவாச்சிக்கு.

நான் பொத்தி வளத்த மகனக் காப்பாத்தணுமே இந்தப் பொட்ட நரி கடிக்காம. "ஆம்பளச் சாமிகளா! பொம்பளச் சாமிகளா! எல்லாம் தொலஞ்சு எல்லாம் கழிஞ்சு ஏம் பொழப்புல ஈவுன்னு நான் மிச்சம் வச்சிருக்கிறது ஒத்தையில பெத்த ஏம் பிள்ள ஒண்ணுதான்.

ஏம் பிள்ளையப் பெராந்து தூக்கிட்டுப் போயிராமக் காபந்து பண்ணிக் கரை சேத்துருங்க."

குத்துக் கல்லக் கண்டாலும் கும்புட்டுக் கும்புட்டுக் காலுக்கு விழுந்திர்றா கருவாச்சி.

ஆனா, ஆத்தாள ஆத்துல விட்டுட்டு அவன் போக்குல போயிக்கிட்டிருக்கான் மகன்காரன். பெரும் பாதையை விட்டுப் பிரிஞ்சு ஓடி ஒதுங்கி ஒடுங்கி, கண்காணாத காட்டுக்குள்ள காணாமப் போகுதா இல்லையா ஒத்தையடிப் பாதை... அப்படி ஆத்தா பிடிய விட்டு வெலகி வெலகி வெளிய வெகு தூரம் போறான் பய. ஆத்தா என்ன செஞ்சாலும் அது சொத்த இது சொத்தைங் குறான். இல்லாத நொட்டச் சொல்லெல் லாஞ் சொல்லி ஆத்தாளக் கிறுக்குக் குத்துறான்.

அன்னைக்குக் களிக் கிண்டிக் கருவாட்டுக் குழம்பு வச்சதுல ஒரு கூத்தாகிப்போச்சு.

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 88781
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 16, 2015 3:34 am

[You must be registered and logged in to see this image.]மீனாட்சின்னா மூக்குத்தி கண்ணகின்னா செலம்பு வேலு நாச்சின்னா கத்தி ஆண்டாள்னா மால பாஞ்சாலின்னா சீலங்கிற மாதிரி கருவாச்சின்னா ஞாபகம் வாரது கரு வாட்டுக் குழம்புதான். கருவாட்டுக் குழம்பு வைக்கிறதுல சில்லாவுல அவள அடிக்க ஆள் கெடையாது. அவ கைப்பதம் யாருக்கும் வராது. பாதகத்தி குழம்பு வச்சா கருவாடு மீனாப் போகும் கத்திரிக்கா தேனாப் போகும்.

அம்மியில மஞ்ச மொளகா வச்சு அரச்சு, தேங்காயில ஒரு எளஞ்சில்லு எடுத்து நச்சுன்னு நசுக்கி, சின்ன வெங்காயம் ரெண் டெடுத்து மேல் தோலச் செல்லமா ஒரு உரி உரிச்சு, பெத்த பிள்ளைய அடிக்கிற மாதிரி பொத்துனாப்புல ரெண்டு தட்டுத் தட்டிக் கொழவிய இழுத்து அரைச்சு அரைச்சத ஒண்ணு தெரட்டி, அதுல அறுத்து வச்ச கத்திரிக்காயையும் கருவாட்டையும் உப்பையும் போட்டு அஞ்சு வெரலையும் விட்டுப் *பெசறி, அளந்து தண்ணி வச்சு அடுப்புக் கூட்டி, அங்கிட்டும் இங்கிட்டும் போகாம அங்கேயே இருந்து அளவாத் தீ எரிச்சு, ஒரு கொதி ரெண்டு கொதி விட்டு மூணாங் கொதி கொதிச்சு அடங்கிப் பொருந்தப் புளியக் கரைச்சு ஊத்தி, நாலாங் கொதி கொதிக்க நறுக்கா எறக்கி வைக்கிறதுதான் ஊர்நாட்ல கருவாட்டுக் குழம்புக்குண்டான கம்ப சூத்திரம். இப்படித்தான் வைப்பாக எல்லாரும்.

இதுக்கெல்லாம் மேல கருவாட்டுக் குழம்புக்கு யாரும் பாக்காத ஒரு பண்டுதம் பாப்பா கருவாச்சி. மூணாங் கொதியில புளி கரைச்சு ஊத்தி நாலாங் கொதியில எறக்குறதுக்கு முன்னால கரண்டியில சுட வச்ச நல்லெண்ணயக் கருவாட்டுக் குழம்புச் சட்டிக்குள்ள எறக்கி, சாமிக்குச் சூடம் காமிக்கிற மாதிரி ஒரு அளாவு அளாவி மினுமினுமினுன்னு எண்ணெ மெதக்க எறக்கி வப்பா பாருங்க... அந்த வாசன அடுத்த தெரு வரைக் கும் அடிக்கும் நாக்குச் செத்த ஆளுக்கும் நமநமங்கும்.

அன்னைக்கி வச்ச கருவாட்டுக் குழம்புல ரெண்டு ஒச்சமாகிப்போச்சு. அங்க இங்க தேடியும் கத்திரிக்கா சிக்கல பாவப்பட்ட பொம்பளைக்குப் பாகக்காயிதான் சிக்குச்சு. தாளிக்கலாம்னு சீசாவ எடுத்துப் பாத்தா, சரீரத்துக்குள்ள ஆத்மாவக் கண்டுபுடிச்சுப் புடலாம் போலிருக்கு சீசாவுக்குள்ள நல்லெண்ணையக் கண்டுபுடிக்க முடியல.

அடித் தூர்ல மஞ்சளாத் தெரியுதே... அது எண்ணெயாத்தான் இருக்கும்ங்கற ஒரு தெய்வ நம்பிக்கையில கவுத்தா, இருந்த ஒண்ணு ரெண்டு சொட்டும் தாய் வீட்லருந்து மாமியா வீட்டுக்குப் போற புள்ளத் தாச்சி மாதிரி நிதானமா... வேண்டா வெறுப்பா எறங்கி வந்துச்சு.

மூதாக்கமாரு செஞ்ச தர்மம்... வருது நல்லெண்ணன்னு அவ சாமியக் கும்பிட்டுப் பாத்துக்கிட்டே இருக்க, சிவபெருமான் தொண்டை யோட நின்னுபோன நஞ்சு மாதிரி, இறங்கி வந்த எண்ணெ சீசாவோட கழுத்துலயே சீவன விட்டிருச்சு.

கேப்பக் களிய மூணு வெரல்ல பட்டும் படாமப் பிச்சுக் கருவாட்டுக் குழம்புல ஒரு முக்கு முக்கி என்னமோ நாவப் பழத்த வாய்க்குள்ள எறியிற மாதிரி களித் துண்ட நாக்குல எறிஞ்சவன், கண்ண இறுக்கி மூடிக் களியத் த்தூன்னு துப்புனான் பாருங்க...

பசுமாட்டுக்குச் சோளத்தட்ட வெட்டிக்கிட்டிருந்த கொண்ண வாயன் மூஞ்சியில களிமண் அடிச்ச மாதிரி ஓடி ஒட்டிக்கிருச்சு களி.

"அய்யா ராசா! என்னாச்சுய்யா... என்னாச்சு?"

"ராசாவாம் ராசா... கருவாட்டுச் சாறுக்குக் கத்திரிக்கா வாங்க வக்கில்லாத சிறுக்கி... நீ பெத்த மகன் மட்டும் ராசா எங்கிட்டு ஆகிறது ராசா..?

அடிச்சான் தட்டத் தூக்கித் தலகீழா.

நெளிஞ்சுபோச்சு தட்டு செதறிப் போச்சு களி தெறிச்சு ஓடி வெறச்சு விழுந்ததுல ரெண்டாஞ் சாவு செத்துப்போச்சு கருவாடு.

ஊர் ஒடுங்கிருச்சு.

அரசமரத்துக் கல்திட்டுல வேட்டிய இழுத்துப் பொத்தி ஒரு கையத் தலைக்கும் ஒரு கையத்தொடை இடுக்குலயும் வச்சு அழுதுக்கிட்டே படுத்துக்கெடந்த அழகுசிங்கத்த, கையில தூக்குவாளியோட எழுப்புறா சலவைக்காரி.

"எம் மகன் பட்டினி கெடந்தா எனக்கு ஒறக்கம் வராதுன்னு ஒங்க நல்லத்தா குடுத்துவிட்டுச்சு. சாப்பிட்டுச் சட்டியக் குடு நான் இங்கயே இருக்கேன்." தெறந்து பாத்தா சட்டி கொள்ளாம அமுக்கி அடச்ச நெல்லுச் சோறு அது மேல ரெண்டு அவிச்ச முட்ட. அவன் ஆவலாதியாக் கைவிட்டு அள்ளப் போனா, கால் சட்டிச் சோத்துக்குச் கீழ கறியா அடைஞ்சு வச்சிருக்கா திம்சு.

அவன் அள்ளித் திங்கத் திங்க சோறு மாதிரி நெஞ்சுக்குள்ள போறா திம்சு அவன் விட்ட ஏப்பம் மாதிரி அவனுக்குள்ளயிருந்து வெளியேர்றா கருவாச்சி.

லட்சுமிபுரத்துல பத்திரகாளியம்மன் கோயில் திருவிழா. இந்த வருசம் கரகாட்டமாம். அம்புலிப்புத்தூர் கனகு ஆட வாராளாம். பத்துப் பதினஞ்சு பஞ்சாயத்து எல்லைக்குள்ள அம்புலிப் புத்தூர் கனகு பேரச் சொன்னா வளஞ்ச வாழத்தண்டும் பத்திக்கிரும் அவ கரகம் சுத்துனான்னா பல பேருக்கு ஒலகம் சுத்தும்.

அம்புலிப்புத்தூர் அண்டான்னு வயசுப்பயக அவளுக்குச் செல்லமா வச்ச பேரு செல்லுபடியாகிப்போச்சு. தலையில தூக்கிவச்சதையும் சேத்து மொத்தம் அவளுக்கு மூணு கரகம்னு சீட்டுக் கிழிஞ்ச சில பெருசுக சிரிச்சுச் சிரிச்சுப் பேசிக்கிருவாக.

அம்புலிப்புத்தூர்க்காரி கரகம் பாக்க ணும்னு ஆச வந்திருச்சு அழகு சிங்கத்துக்கு.

சும்மா வெறுங்கைய வீசிப் போய் வந்திர முடியுமா? வழிச் செலவுக்கும் வாங்கித் திங்கவும் காசு வேணாமா? அடுக்குப் பானைய உருட்டிப் பாத்தான் அஞ்சறைப் பெட்டியப் புரட்டிப் பாத்தான் கொண்ணவாயன உருட்டிப் பாத்தான் ஒண்ணும் கதைக்காகல.

மலட்டுப் பொம்பள அரச மரத்தச் சுத்திச்சுத்தி வார மாதிரி ஆத்தாளச் சுத்திச்சுத்தி வாரான்.

காய்ச்சல்னு நெத்தியில பத்துப் போட்டுக் கட்டில்ல படுத்துக்கெடக்கா கருவாச்சி. எப்படிக் கேக்குறது?

கையேந்தி நின்னாக் கேவலம் களவாண்டுட்டுப் போனா வீரம்னு அவன் புத்தி சொல்லுது.

அவ முந்தானை யில எப்பவும் காசு முடிஞ்சுவச்சிருப்பா. முந்தான எங்க இருக்குன்னு மோப்பம் புடிச்சுப் புடிச்சுப் பாக்குறான் கண்ணுக் குச் சிக்கல. புத்துக்குள்ள இருக்கிற புதையலப் பாம்பு பாதுகாத்துப் படுத்துக் கெடக்கிற மாதிரி முந்தானையச் சுருட்டித் தலயணைக்குக் கீழவச்சு அதுக்கு மேல தலயவச்சுப் படுத்திருக்கா கருவாச்சி. கண்ணுக்குச் சிக்காதது கைக்கு எங்க சிக்கப்போகுது? இப்பப் பெரண்டு படுப்பா அப்பறம் பெரண்டு படுப்பான்னு பய மருகி மருகி நிக்கிறான்.

சீரங்கத்துல ரங்கநாதரு ஒருக்களிச்சுப் படுத்த மாதிரி படுத்தவதான் ஆடல அசையல.

முந்தானையில முடிஞ்ச காச முழுசா எனக்குக் குடுத்திரு பாதிய உண்டியல்ல போடுறேன்னு பத்திர காளியம்மனுக்கும் நேந்துக்கிட்டான்.

அது மூணு தலமொற கண்ட கயித்துக் கட்டிலு. உரிச்ச ஆட்டுக் கொடலு சரியும் பாருங்க... அப்படிக் கயிறு ஒழுகி நிக்கிற கட்டிலு அது. அவன் நேந்தது வீண்போகல பத்திரகாளியம்மன் பார்வை பட்டிருச்சு. தலகாணிய விட்டுத் தப்பிச்சுக் கயித்துக் கட்டில் ஓட்ட வழி இப்பத் தொங்குதய்யா முந்தான முடிச்சு. அது ஆட ஆட அழகுசிங்கம் ஆவியே ஊசலாடுது.

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 88781
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon May 18, 2015 12:55 am

[You must be registered and logged in to see this image.]
கட்டிலுக்குக் கீழ தலையக் குடுத்து, கத்திய வச்சு ஆத்தா முந்தானைய அறுத்துப் பாத்தா ரெண்டே ரெண்டு கால் ரூவா ஈன்னு இளிக்குது. ரெண்டு ஒரு ரூவாய எதிர்பார்த்த பய ரெண்டு கால் ரூவாயக் கண்டதும் சீ! பிச்சக்காரச் சிறுக்கின்னு கத்துனானோ இல்லையோ, கண்ணு முழிச்சு எந்திரிச்சுட்டா கருவாச்சி.

"பொழப்பா பொழைக்கிற பொழப்பு... இந்தா இத நீயே வச்சுக்க. நீ செத்தா ஒனக்கு ஒரு நெத்திக் காசு. நான் செத்தா எனக்கு ஒரு நெத்திக் காசு." அவ மூஞ்சியிலயே விட்டெறிஞ் சிட்டு விறுவிறுவிறுன்னு வெளியேறிட்டான் அழகுசிங்கம்.

நேரா சலவைக்காரி வீட்டுக்குப் போனான். கழுதை கத்துனா நல்ல சகுனம்னு நெனச்சானோ என்னமோ, அத ஓங்கி ஒரு எத்து எத்திக் கத்தவிட்டான்.

"கரகாட்டம் பாக்கப் போறேன். நல்லத்தாகிட்டக் காசு வாங்கிட்டு வா"அவள ஏவிவிட்டுட்டுத் திண்ணையில அவ வாங்கிவச்சிருந்த ஊர்ச்சோறு தின்டு உக்காந்திட்டான்.

தெள்ளக் கடஞ்சவ திம்சு. இந்த மொரட்டு முட்டாப்பயலக் கவுட்டுக்குள்ள நொழைக்கக் காலம் பாத்துக்கிட்டிருந்தா காலம் அவ காலுக்குள்ள வந்து நிக்குது இப்ப.

ஒரு தீக்குச்சி இருந்தா கரடிக்கிட்டத் தப்பிச்சுக்கிரலாம். மரமேறத் தெரிஞ்சா புலிகிட்டத் தப்பிச்சுக்கிரலாம். பள்ளத்துல எறங்கிக்கிட்டா யானகிட்டத் தப்பிச்சுக் கிரலாம். ஓடாமத் திரும்பிப் பாக்காம நின்னு நிதானமாப் போனா நாய்கிட்டத் தப்பிச்சுக்கிரலாம். இப்படி எல்லாம் தெரிஞ்ச வளுக்கு, காசும் கறித்தண்ணியும் குடுத்தாத்தான் இந்த மொரட்டு முட்டாப் பயகிட்டயிருந்து தப்பிக்க முடியும்னு தெரியாதா?

பச்ச அஞ்சு ரூவாயப் பாத்தா பகவானப் பாக்குற மாதிரியிருந்த காலத்துல முழு ரெண்டு ரூவாயத் தூக்கிக் "கரகாட்டம் பார்றா மகனே"ன்னு குடுத்துவிட்டுட்டா.

சோத்துல பள்ளம் வெட்டிக் காசுல மூடிப்புட்டா. அன்னைக்கி விழுந்தவன் தான் எந்திரிக்கவேயில்ல.

காலம் நகர நகர, அவ காயும் நகருது.

கட்டையன் கூட்டாளிகள வேரோட வெட்டிவிடத் திட்டம் போட்டா திம்சு. ரெண்டு மூணு வருசத்துல சாதிச்சும்புட்டா.

கட்டையன் கண்ணுல எப்பப்பக் கங்கு தெரியுதோ அப்பப்ப எண்ணெய ஊத்தி எரியவிட்டா.

"மாமா! கூட்டாளியப் பத்திக் குறை சொல்றாளே சிறுக்கின்னு கோவிச்சுக்கிராதிக. ஒங்க பாண்டிப் பய பார்வை சரியில்ல. எப்பவும் என்னியக் கண்ணப் பாத்துப் பேசாமக் கழுத்துக்குக் கீழேயே பாத்து வெறிச்சு நிக்கிறான் பய." அவன் சீட்டக் கிழிச்சா அன்னைக்கிருந்து.

"ஒங்க ஒலக்கையன் ஒரு கடன் காரப்பய. நீ இல்லாத நேரம் பாத்து வந்து காசு குடு, காசு குடுன்னு குரும்பைய அணில் கடிக்கிற மாதிரி காதோரம் வந்து கறிச் கறிச்சுங்கிறான்".

அன்னைக்கிருந்து வீட்டுக்குள்ள சேக்கவிடாம ஒலக்கையன வெலக்குனா.

"மாமோய்! எப்பத் தண்ணி மோந்து குடுத்தாலும் இந்தப் பன்னியாம்பேரன் செம்புக்குள்ள கைவிட்டு என் விரலக் கிள்ளாம வாங்குறான் இல்ல." அன்னைக்கிருந்து ஓஞ்சுபோச்சு அவன் கதையும்.

நடை தளந்துபோனாரு சடையத் தேவரு. சாராயமும் ஈரலும் போதும்னு சாஞ்சு கெடக்கான் கட்டையன். அவ "தோ தோ தோ"ன்னு கூப்பிட்டதும் அவ கால மோந்து பாக்குற கறுப்பு நாயாகிப் போனான் அழகுசிங்கம்.

அவ வாக்கப்பட்டு வந்து வருசம் ஏழாகியும் பிள்ளை இல்ல என்னா எவடம்னு கேட்கவும் நாதியில்ல.

நல்ல வெயிலு. சுட்டுக்கெடக்கு சொக்கத்தேவன்பட்டி.

ஈ ஆடல எறும்பாடல வேப்ப மரத்துல எல ஆடல. அகமலையில கட்டிக் குடுத்த மக வீட்டுக்கு, சொக்கத்தேவன்பட்டி வழியாப் போற குப்பணம்பட்டிக் கெழவி ஒருத்தி, கருவாச்சி வீட்டு வேப்பமரத்து நெழல்ல ஒதுங்கி வேர்வையத் தொடச்சு அதே முந்தானையில விசிறிக்கிட்டிருக்கா.

வாழப்பழம் ஒரு கையிலயும் வடை ஒரு கையிலயுமா வாங்கி, இந்த ஊர ஆள வந்த மகாராணி நாந்தானாக்கும்னு திடும் திடும்னு அந்த வழியா எட்டுவச்சுப் போறா திம்சு.

குறுகுறுகுறுன்னு அவளையே பாத்தா கெழவி திரும்பித் திரும்பிக் கெழவியையே பாத்தா திம்சு. படக்குன்னு தலையக் கவுந்து விசுக்குன்னு எட்டுவச்சு வெரசா ஓடி ஒளிஞ்சுபோனா.

முதுகுத்தண்டுல சிலீர்னு தண்ணியடிச்ச மாதிரி வளஞ்ச கூனு நிமிந்து ஒக்காந் துட்டா கெழவி.

யாரோ அசலூர்க் கெழவி... வீட்டு வாசல்ல வேர்த்து உக்காந்திருக்கா. தவிச்ச வாய்க்குத் தண்ணி குடுப்போம்ன்னு புளிச்ச தண்ணியக் கொண்டாந்து குடுத்தா கருவாச்சி.

புளிச்ச தண்ணிச் சொம்ப வலது கையில வாங்கி வச்சுக்கிட்டு, "அந்தா போறா பாரு லவுக்க போட்டு... அவ யாரு தாயி?"ன்னு கேட்டா கெழவி.

"திம்சு."

"இல்ல ஆத்தா. அவ பேரு பேயம்மா. இந்த ஊர்ல அவளுக்கு என்னா சோலி?"

"ரெண்டாந் தாரமா வாக்கப்பட்டு வந்திருக்கா."

"ரெண்டாந் தாரமாவா?"

"ஆமா, பிள்ளையில்லாத ஒரு பெரிய வீட்டுக்கு வாரிசு குடுக்க வந்திருக்கா!"

"வாரிசா? கூமுட்டை எப்படிக் குஞ்சு பொரிக்கும்?"

"என்னாத்தா சொல்ற?"

"ஆமா தாயி! கர்ப்பப்பை இல்லாதவ எப்படிப் பிள்ள பெற முடியும்?"

"கர்ப்பப்பை இல்லையா? நெசமாவா?"

"பொய்யா சொல்றேன். அவளுக்குக் கருக்கலச்சவ நானு கர்ப்பப்பை எரிஞ்சு போச்சுன்னு

சொன்னவ நானு. நான் கும்புடுற மூணுசாமி மேல சத்தியம்."

நெஞ்சப் புடிச்சு நின்னுபோன கருவாச்சி, கெழவியக் கையப் புடிச்சு இழுத்து வீட்டுக்குள்ள கூட்டிட்டுப் போனா.

கெழவி உள்ள போனதும் அடைக்குது கருவாச்சி கதவு அரவமில்லாமக் கமுக்கமாத் தொறக்குது

திம்சோட கடந்த காலக் கதவு.

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 88781
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jul 13, 2015 12:02 am

"அந்தக் கெழவனுக்கு ஒரு காரீயமாவது இருந்திச்சு. ஒங்க கெழவனுக்கு ஒரு ஒட்டுக் கோமணமாச்சும் இருக்கா?"

"ஏன் இந்த வீடும் காடும் இல்லையா?"

"ஆமாம். இந்த வெளங்காத வீடும் வெளை யாத காடும் உப்புக் கல்லுக்கு ஆகுமா? ஏதோ ஒன் தாட்டியத்துல ஓடிக்கிருக்கு வண்டி. நீ வட்டிவாசிக்குக் குடுத்து வாங்குற காசிலதான மாமன் மஞ்சக் குளிச்சுக்கிட்டிருக்கு.

"என்னடி சொல்ற?"

"வைத்தியம் பண்ண வாங்கித் தின்னன்னு வார காசெல்லாம் கெழவனுக்கே போயிட்டா நாளப்பின்ன நம்மளுக்குன்னு என்ன இருக்கு? நாளக்கி நீயும் விழுந்திட்டன்னு வச்சுக்க ஒன்னையும் நாந்தான தூக்கிச் சுமக்கணும்? எம் முந்தானையில முடிஞ்சுவைக்க என்ன இருக்கு? என் புருசனத் தவிர?" இப்படி எத்தனையோ தடவ எறும்பா ஊரி ஊரி அந்தக் கல்ல தேய்ச்சிட்டா.

தானியம் வித்த பணத்தையும் வட்டிவாசிக்கு வார காசையும் பொண்டாட்டி பொறுப்புல விட்டுட்டான் கட்டையன். போகப் போகத் தகப்பனுக்கும் மகனுக்கும் பேச்சுவார்த்தை இல்லாமப் பிரிச்சேபுட்டா திம்சு.

ஒரு கோட்டைச் சுவர் இருக்கு. எங்கிருந்தோ ஒரு பறவை பறந்து வந்து அதுல உக்காருது. எச்சமிடுது. அதுலருந்து ஒரு வெத விழுகுது. விழுந்த வெத மொளைக்குது. அது வேர்விட வேர்விட விரிசல் கண்டுபோகுது சுவரு. தெரியாமச் செய்யுது பறவை தெரிஞ்சே செய்றா திம்சு.

அம்புலிப்புத்தூர விட்டு அழகுசிங்கத்த மீட்டு வந்தன்னைக்கிருந்து கண்ணுல ஒறக்கம் தங்கல கருவாச்சிக்கு. நெஞ்சாங்கூட்ல கத்தி குத்தி முதுகுப் பக்கம் முள்ளுத் தச்ச கதையாகிப்போச்சு கருவாச்சி கதை.

அழகுசிங்கத்த நெனச்சா அவளுக்கு அழுகையா வருது. எதிரிகள விலாவுல குத்தி விழுத்தாட்டிட்டுக் கொம்புல குடல் மால சுத்தி வர வேண்டிய என் வீட்டுக் காரிக்காள, இப்பிடி எச்சி எல மேயப் போயி ஈனப்பட்டு நிக்குதே... இது நெஞ்சாங்கூட்டுல பாஞ்சு நட்டுக்குத்தலா நிக்கிற கத்தி.

யாருக்கும் தெரியாமக் காசு குடுத்து அவனத் தேவடியா வீட்டுக்கு ஏவிவிட்ருக் காளே ஒரு எழவெடுத்த சிறுக்கி... அது முதுகுல குத்தி முனையடிஞ்சு நிக்கிற முள்ளு. ஏதோ லவுக்க போட்ட லம்பாடி பொழச்சுப் போகட்டும்னு கண்டுங் காணாம இருந்த கருவாச்சி இப்பப் பளிச்சுன்னு முழிச்சுக்கிட்டா.

இவ யாரு?

எந்தக் காட்டுச் சிறுக்கி?

ஒழுங்கு மொறையான பொம்பளதானா?

ஒண்டவந்த பிடாரியா?

மேட்டு நெலத்துல நட்டவனும் கெட்டான் மேனாமினுக்கியக் கட்டுன வனும் கெட்டான்னு சொல்லுவாகளே... இவ நல்ல சிறுக்கியா? மேனா மினுக்கியா? இவளக் கண் கொத்திப் பாம்பு மாதிரி கவனிச்சே ஆகணும்னு பொட்டுல பொறிதட்டுது கருவாச்சிக்கு.

நான் பொத்தி வளத்த மகனக் காப்பாத்தணுமே இந்தப் பொட்ட நரி கடிக்காம.

"ஆம்பளச் சாமிகளா! பொம்பளச் சாமிகளா! எல்லாம் தொலஞ்சு எல்லாம் கழிஞ்சு ஏம் பொழப்புல ஈவுன்னு நான் மிச்சம் வச்சிருக்கிறது ஒத்தையில பெத்த ஏம் பிள்ள ஒண்ணுதான். ஏம் பிள்ளையப் பெராந்து தூக்கிட்டுப் போயிராமக் காபந்து பண்ணிக் கரை சேத்துருங்க."

குத்துக் கல்லக் கண்டாலும் கும்புட்டுக் கும்புட்டுக் காலுக்கு விழுந்திர்றா கருவாச்சி.

ஆனா, ஆத்தாள ஆத்துல விட்டுட்டு அவன் போக்குல போயிக்கிட்டிருக்கான் மகன்காரன். பெரும் பாதையை விட்டுப் பிரிஞ்சு ஓடி ஒதுங்கி ஒடுங்கி, கண்காணாத காட்டுக்குள்ள காணாமப் போகுதா இல்லையா ஒத்தையடிப் பாதை... அப்படி ஆத்தா பிடிய விட்டு வெலகி வெலகி வெளிய வெகு தூரம் போறான் பய. ஆத்தா என்ன செஞ்சாலும் அது சொத்த இது சொத்தைங் குறான். இல்லாத நொட்டச் சொல்லெல் லாஞ் சொல்லி ஆத்தாளக் கிறுக்குக் குத்துறான்.

அன்னைக்குக் களிக் கிண்டிக் கருவாட்டுக் குழம்பு வச்சதுல ஒரு கூத்தாகிப்போச்சு. மீனாட்சின்னா மூக்குத்தி கண்ணகின்னா செலம்பு வேலு நாச்சின்னா கத்தி ஆண்டாள்னா மால பாஞ்சாலின்னா சீலங்கிற மாதிரி கருவாச்சின்னா ஞாபகம் வாரது கரு வாட்டுக் குழம்புதான். கருவாட்டுக் குழம்பு வைக்கிறதுல சில்லாவுல அவள அடிக்க ஆள் கெடையாது.

அவ கைப்பதம் யாருக்கும் வராது. பாதகத்தி குழம்பு வச்சா கருவாடு மீனாப் போகும் கத்திரிக்கா தேனாப் போகும்.

அம்மியில மஞ்ச மொளகா வச்சு அரச்சு, தேங்காயில ஒரு எளஞ்சில்லு எடுத்து நச்சுன்னு நசுக்கி, சின்ன வெங்காயம் ரெண் டெடுத்து மேல் தோலச் செல்லமா ஒரு உரி உரிச்சு, பெத்த பிள்ளைய அடிக்கிற மாதிரி பொத்துனாப்புல ரெண்டு தட்டுத் தட்டிக் கொழவிய இழுத்து அரைச்சு அரைச்சத ஒண்ணு தெரட்டி, அதுல அறுத்து வச்ச கத்திரிக்காயையும் கருவாட்டையும் உப்பையும் போட்டு அஞ்சு வெரலை யும் விட்டுப் *பெசறி, அளந்து தண்ணி வச்சு அடுப்புக் கூட்டி, அங்கிட்டும் இங்கிட்டும் போகாம அங்கேயே இருந்து அளவாத் தீ எரிச்சு, ஒரு கொதி ரெண்டு கொதி விட்டு மூணாங் கொதி கொதிச்சு அடங்கிப் பொருந்தப் புளியக் கரைச்சு ஊத்தி, நாலாங் கொதி கொதிக்க நறுக்கா எறக்கி வைக்கிறதுதான் ஊர்நாட்ல கருவாட்டுக் குழம்புக்குண்டான கம்ப சூத்திரம். இப்படித்தான் வைப்பாக எல்லாரும்.

இதுக்கெல்லாம் மேல கருவாட்டுக் குழம்புக்கு யாரும் பாக்காத ஒரு பண்டுதம் பாப்பா கருவாச்சி. மூணாங் கொதியில புளி கரைச்சு ஊத்தி நாலாங் கொதியில எறக்குறதுக்கு

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 88781
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jan 19, 2023 7:32 pm

முன்னால கரண்டியில சுட வச்ச நல்லெண்ணயக் கருவாட்டுக் குழம்புச் சட்டிக்குள்ள எறக்கி, சாமிக்குச் சூடம் காமிக்கிற மாதிரி ஒரு அளாவு அளாவி மினுமினுமினுன்னு எண்ணெ மெதக்க எறக்கி வப்பா பாருங்க... அந்த வாசன அடுத்த தெரு வரைக் கும் அடிக்கும் நாக்குச் செத்த ஆளுக்கும் நமநமங்கும்.

அன்னைக்கி வச்ச கருவாட்டுக் குழம்புல ரெண்டு ஒச்சமாகிப்போச்சு. அங்க இங்க தேடியும் கத்திரிக்கா சிக்கல பாவப்பட்ட பொம்பளைக்குப் பாகக்காயிதான் சிக்குச்சு. தாளிக்கலாம்னு சீசாவ எடுத்துப் பாத்தா, சரீரத்துக்குள்ள ஆத்மாவக் கண்டுபுடிச்சுப் புடலாம் போலிருக்கு சீசாவுக்குள்ள நல்லெண்ணையக் கண்டுபுடிக்க முடியல. அடித் தூர்ல மஞ்சளாத் தெரியுதே... அது எண்ணெயாத்தான் இருக்கும்ங்கற ஒரு தெய்வ நம்பிக்கையில கவுத்தா, இருந்த ஒண்ணு ரெண்டு சொட்டும் தாய் வீட்லருந்து மாமியா வீட்டுக்குப் போற புள்ளத் தாச்சி மாதிரி நிதானமா... வேண்டா வெறுப்பா எறங்கி வந்துச்சு. மூதாக்கமாரு செஞ்ச தர்மம்... வருது நல்லெண்ணன்னு அவ சாமியக் கும்பிட்டுப் பாத்துக்கிட்டே இருக்க, சிவபெருமான் தொண்டை யோட நின்னுபோன நஞ்சு மாதிரி, இறங்கி வந்த எண்ணெ சீசாவோட கழுத்துலயே சீவன விட்டிருச்சு.

கேப்பக் களிய மூணு வெரல்ல பட்டும் படாமப் பிச்சுக் கருவாட்டுக் குழம்புல ஒரு முக்கு முக்கி என்னமோ நாவப் பழத்த வாய்க்குள்ள எறியிற மாதிரி களித் துண்ட நாக்குல எறிஞ்சவன், கண்ண இறுக்கி மூடிக் களியத் த்தூன்னு துப்புனான் பாருங்க...

பசுமாட்டுக்குச் சோளத்தட்ட வெட்டிக்கிட்டிருந்த கொண்ண வாயன் மூஞ்சியில களிமண் அடிச்ச மாதிரி ஓடி ஒட்டிக்கிருச்சு களி.

"அய்யா ராசா! என்னாச்சுய்யா... என்னாச்சு?"

"ராசாவாம் ராசா... கருவாட்டுச் சாறுக்குக் கத்திரிக்கா வாங்க வக்கில்லாத சிறுக்கி... நீ பெத்த மகன் மட்டும் ராசா எங்கிட்டு ஆகிறது ராசா..?

அடிச்சான் தட்டத் தூக்கித் தலகீழா.

நெளிஞ்சுபோச்சு தட்டு செதறிப் போச்சு களி தெறிச்சு ஓடி வெறச்சு விழுந்ததுல ரெண்டாஞ் சாவு செத்துப்போச்சு கருவாடு.

ஊர் ஒடுங்கிருச்சு.

அரசமரத்துக் கல்திட்டுல வேட்டிய இழுத்துப் பொத்தி ஒரு கையத் தலைக்கும் ஒரு கையத் தொடை இடுக்குலயும் வச்சு அழுதுக்கிட்டே படுத்துக்கெடந்த அழகுசிங்கத்த, கையில தூக்குவாளியோட எழுப்புறா சலவைக்காரி.

"எம் மகன் பட்டினி கெடந்தா எனக்கு ஒறக்கம் வராதுன்னு ஒங்க நல்லத்தா குடுத்துவிட்டுச்சு.

சாப்பிட்டுச் சட்டியக் குடு நான் இங்கயே இருக்கேன்."

தெறந்து பாத்தா சட்டி கொள்ளாம அமுக்கி அடச்ச நெல்லுச் சோறு அது மேல ரெண்டு அவிச்ச முட்ட. அவன் ஆவலாதியாக் கைவிட்டு அள்ளப் போனா, கால் சட்டிச் சோத்துக்குச் கீழ கறியா அடைஞ்சு வச்சிருக்கா திம்சு.

அவன் அள்ளித் திங்கத் திங்க சோறு மாதிரி நெஞ்சுக்குள்ள போறா திம்சு. அவன் விட்ட ஏப்பம் மாதிரி அவனுக்குள்ளயிருந்து வெளியேர்றா கருவாச்சி.

லட்சுமிபுரத்துல பத்திரகாளியம்மன் கோயில் திருவிழா. இந்த வருசம் கரகாட்டமாம். அம்புலிப்புத்தூர் கனகு ஆட வாராளாம். பத்துப் பதினஞ்சு பஞ்சாயத்து எல்லைக்குள்ள அம்புலிப் புத்தூர் கனகு பேரச் சொன்னா வளஞ்ச வாழத்தண்டும் பத்திக்கிரும் அவ கரகம் சுத்துனான்னா பல பேருக்கு ஒலகம் சுத்தும்.

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 88781
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jan 19, 2023 7:37 pm

அம்புலிப்புத்தூர் அண்டான்னு வயசுப்பயக அவளுக்குச் செல்லமா வச்ச பேரு செல்லுபடியாகிப்போச்சு. தலையில தூக்கிவச்சதையும் சேத்து மொத்தம் அவளுக்கு மூணு கரகம்னு சீட்டுக் கிழிஞ்ச சில பெருசுக சிரிச்சுச் சிரிச்சுப் பேசிக்கிருவாக.

அம்புலிப்புத்தூர்க்காரி கரகம் பாக்க ணும்னு ஆச வந்திருச்சு அழகு சிங்கத்துக்கு. சும்மா வெறுங்கைய வீசிப் போய் வந்திர முடியுமா? வழிச் செலவுக்கும் வாங்கித் திங்கவும் காசு வேணாமா? அடுக்குப் பானைய உருட்டிப் பாத்தான் அஞ்சறைப் பெட்டியப் புரட்டிப் பாத்தான் கொண்ணவாயன உருட்டிப் பாத்தான் ஒண்ணும் கதைக்காகல. மலட்டுப் பொம்பள அரச மரத்தச் சுத்திச்சுத்தி வார மாதிரி ஆத்தாளச் சுத்திச்சுத்தி வாரான்.

காய்ச்சல்னு நெத்தியில பத்துப் போட்டுக் கட்டில்ல படுத்துக்கெடக்கா கருவாச்சி. எப்படிக் கேக்குறது?

கையேந்தி நின்னாக் கேவலம் களவாண்டுட்டுப் போனா வீரம்னு அவன் புத்தி சொல்லுது. அவ முந்தானை யில எப்பவும் காசு முடிஞ்சுவச்சிருப்பா. முந்தான எங்க இருக்குன்னு மோப்பம் புடிச்சுப் புடிச்சுப் பாக்குறான் கண்ணுக் குச் சிக்கல. புத்துக்குள்ள இருக்கிற புதையலப் பாம்பு பாதுகாத்துப் படுத்துக் கெடக்கிற மாதிரி முந்தானையச் சுருட்டித் தலயணைக்குக் கீழவச்சு அதுக்கு மேல தலயவச்சுப் படுத்திருக்கா கருவாச்சி. கண்ணுக்குச் சிக்காதது கைக்கு எங்க சிக்கப்போகுது? இப்பப் பெரண்டு படுப்பா அப்பறம் பெரண்டு படுப்பான்னு பய மருகி மருகி நிக்கிறான்.

சீரங்கத்துல ரங்கநாதரு ஒருக்களிச்சுப் படுத்த மாதிரி படுத்தவதான் ஆடல அசையல.

முந்தானையில முடிஞ்ச காச முழுசா எனக்குக் குடுத்திரு பாதிய உண்டியல்ல போடுறேன்னு பத்திர காளியம்மனுக்கும் நேந்துக்கிட்டான்.

அது மூணு தலமொற கண்ட கயித்துக் கட்டிலு. உரிச்ச ஆட்டுக் கொடலு சரியும் பாருங்க...

அப்படிக் கயிறு ஒழுகி நிக்கிற கட்டிலு அது. அவன் நேந்தது வீண்போகல பத்திரகாளியம்மன் பார்வை பட்டிருச்சு. தலகாணிய விட்டுத் தப்பிச்சுக் கயித்துக் கட்டில் ஓட்ட வழி இப்பத் தொங்குதய்யா முந்தான முடிச்சு. அது ஆட ஆட அழகுசிங்கம் ஆவியே ஊசலாடுது.

கட்டிலுக்குக் கீழ தலையக் குடுத்து, கத்திய வச்சு ஆத்தா முந்தானைய அறுத்துப் பாத்தா ரெண்டே ரெண்டு கால் ரூவா ஈன்னு இளிக்குது. ரெண்டு ஒரு ரூவாய எதிர்பார்த்த பய ரெண்டு கால் ரூவாயக் கண்டதும் சீ பிச்சக்காரச் சிறுக்கின்னு கத்துனானோ இல்லையோ, கண்ணு முழிச்சு எந்திரிச்சுட்டா கருவாச்சி.

"பொழப்பா பொழைக்கிற பொழப்பு... இந்தா இத நீயே வச்சுக்க. நீ செத்தா ஒனக்கு ஒரு நெத்திக் காசு. நான் செத்தா எனக்கு ஒரு நெத்திக் காசு."

அவ மூஞ்சியிலயே விட்டெறிஞ் சிட்டு விறுவிறுவிறுன்னு வெளியேறிட் டான் அழகுசிங்கம்.

நேரா சலவைக்காரி வீட்டுக்குப் போனான். கழுதை கத்துனா நல்ல சகுனம்னு நெனச் சானோ என்னமோ, அத ஓங்கி ஒரு எத்து எத்திக் கத்தவிட்டான்.

"கரகாட்டம் பாக்கப் போறேன். நல்லத் தாகிட்டக் காசு வாங்கிட்டு வா"அவள ஏவிவிட்டுட்டுத் திண்ணையில அவ வாங்கிவச்சிருந்த ஊர்ச்சோறு தின்டு உக்காந்திட்டான்.

தெள்ளக் கடஞ்சவ திம்சு. இந்த மொரட்டு முட்டாப்பயலக் கவுட்டுக்குள்ள நொழைக்கக் காலம் பாத்துக்கிட்டிருந்தா காலம் அவ காலுக்குள்ள வந்து நிக்குது இப்ப.

ஒரு தீக்குச்சி இருந்தா கரடிக்கிட்டத் தப்பிச்சுக்கிரலாம். மரமேறத் தெரிஞ்சா புலிகிட்டத் தப்பிச்சுக்கிரலாம். பள்ளத்துல எறங்கிக்கிட்டா யானகிட்டத் தப்பிச்சுக் கிரலாம். ஓடாமத் திரும்பிப் பாக்காம நின்னு நிதானமாப் போனா நாய்கிட்டத் தப்பிச்சுக்கிரலாம். இப்படி எல்லாம் தெரிஞ்ச வளுக்கு, காசும் கறித்தண்ணியும் குடுத்தாத்தான் இந்த மொரட்டு முட்டாப் பயகிட்டயிருந்து தப்பிக்க முடியும்னு தெரியாதா?

பச்ச அஞ்சு ரூவாயப் பாத்தா பகவானப் பாக்குற மாதிரியிருந்த காலத்துல முழு ரெண்டு ரூவாயத் தூக்கிக் "கரகாட்டம் பார்றா மகனே"ன்னு குடுத்துவிட்டுட்டா.

சோத்துல பள்ளம் வெட்டிக் காசுல மூடிப்புட்டா. அன்னைக்கி விழுந்தவன் தான் எந்திரிக்கவேயில்ல.

காலம் நகர நகர, அவ காயும் நகருது.

கட்டையன் கூட்டாளிகள வேரோட வெட்டிவிடத் திட்டம் போட்டா திம்சு. ரெண்டு மூணு வருசத்துல சாதிச்சும்புட்டா.

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 88781
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jan 19, 2023 8:18 pm

கட்டையன் கண்ணுல எப்பப்பக் கங்கு தெரியுதோ அப்பப்ப எண்ணெய ஊத்தி எரியவிட்டா.

"மாமா! கூட்டாளியப் பத்திக் குறை சொல்றாளே சிறுக்கின்னு கோவிச்சுக்கிராதிக. ஒங்க பாண்டிப் பய பார்வை சரியில்ல. எப்பவும் என்னியக் கண்ணப் பாத்துப் பேசாமக் கழுத்துக்குக் கீழேயே பாத்து வெறிச்சு நிக்கிறான் பய." அவன் சீட்டக் கிழிச்சா அன்னைக்கிருந்து.

"ஒங்க ஒலக்கையன் ஒரு கடன் காரப்பய. நீ இல்லாத நேரம் பாத்து வந்து காசு குடு, காசு குடுன்னு குரும்பைய அணில் கடிக்கிற மாதிரி காதோரம் வந்து கறிச் கறிச்சுங்கிறான்".

அன்னைக்கிருந்து வீட்டுக்குள்ள சேக்கவிடாம ஒலக்கையன வெலக்குனா.

"மாமோய்! எப்பத் தண்ணி மோந்து குடுத்தாலும் இந்தப் பன்னியாம்பேரன் செம்புக்குள்ள கைவிட்டு என் விரலக் கிள்ளாம வாங்குறான் இல்ல." அன்னைக்கிருந்து ஓஞ்சுபோச்சு அவன் கதையும்.

நடை தளந்துபோனாரு சடையத் தேவரு. சாராயமும் ஈரலும் போதும்னு சாஞ்சு கெடக்கான் கட்டையன். அவ "தோ தோ தோ"ன்னு கூப்பிட்டதும் அவ கால மோந்து பாக்குற கறுப்பு நாயாகிப் போனான் அழகுசிங்கம்.

அவ வாக்கப்பட்டு வந்து வருசம் ஏழாகியும் பிள்ளை இல்ல என்னா எவடம்னு கேட்கவும் நாதியில்ல.

நல்ல வெயிலு.

சுட்டுக்கெடக்கு சொக்கத்தேவன்பட்டி.

ஈ ஆடல எறும்பாடல வேப்ப மரத்துல எல ஆடல.

அகமலையில கட்டிக் குடுத்த மக வீட்டுக்கு, சொக்கத்தேவன்பட்டி வழியாப் போற குப்பணம்பட்டிக் கெழவி ஒருத்தி, கருவாச்சி வீட்டு வேப்பமரத்து நெழல்ல ஒதுங்கி வேர்வையத் தொடச்சு அதே முந்தானையில விசிறிக்கிட்டிருக்கா.

வாழப்பழம் ஒரு கையிலயும் வடை ஒரு கையிலயுமா வாங்கி, இந்த ஊர ஆள வந்த மகாராணி நாந்தானாக்கும்னு திடும் திடும்னு அந்த வழியா எட்டுவச்சுப் போறா திம்சு.

குறுகுறுகுறுன்னு அவளையே பாத்தா கெழவி திரும்பித் திரும்பிக் கெழவியையே பாத்தா திம்சு. படக்குன்னு தலையக் கவுந்து விசுக்குன்னு எட்டுவச்சு வெரசா ஓடி ஒளிஞ்சுபோனா. முதுகுத்தண்டுல சிலீர்னு தண்ணியடிச்ச மாதிரி வளஞ்ச கூனு நிமிந்து ஒக்காந் துட்டா கெழவி.

யாரோ அசலூர்க் கெழவி... வீட்டு வாசல்ல வேர்த்து உக்காந்திருக்கா. தவிச்ச வாய்க்குத் தண்ணி குடுப்போம்ன்னு புளிச்ச தண்ணியக் கொண்டாந்து குடுத்தா கருவாச்சி.

புளிச்ச தண்ணிச் சொம்ப வலது கையில வாங்கி வச்சுக்கிட்டு, "அந்தா போறா பாரு லவுக்க போட்டு... அவ யாரு தாயி?"ன்னு கேட்டா கெழவி.

"திம்சு."

"இல்ல ஆத்தா. அவ பேரு பேயம்மா. இந்த ஊர்ல அவளுக்கு என்னா சோலி?"

"ரெண்டாந் தாரமா வாக்கப்பட்டு வந்திருக்கா."

"ரெண்டாந் தாரமாவா?"

"ஆமா, பிள்ளையில்லாத ஒரு பெரிய வீட்டுக்கு வாரிசு குடுக்க வந்திருக்கா!"

"வாரிசா? கூமுட்டை எப்படிக் குஞ்சு பொரிக்கும்?"

"என்னாத்தா சொல்ற?"

"ஆமா தாயி! கர்ப்பப்பை இல்லாதவ எப்படிப் பிள்ள பெற முடியும்?"

"கர்ப்பப்பை இல்லையா? நெசமாவா?"

"பொய்யா சொல்றேன். அவளுக்குக் கருக்கலச்சவ நானு கர்ப்பப்பை எரிஞ்சு போச்சுன்னு சொன்னவ நானு. நான் கும்புடுற மூணுசாமி மேல சத்தியம்."

நெஞ்சப் புடிச்சு நின்னுபோன கருவாச்சி, கெழவியக் கையப் புடிச்சு இழுத்து வீட்டுக்குள்ள கூட்டிட்டுப் போனா.

கெழவி உள்ள போனதும் அடைக்குது கருவாச்சி கதவு அரவமில்லாமக் கமுக்கமாத் தொறக்குது திம்சோட கடந்த காலக் கதவு.

திம்சு கதைய மருத்துவச்சி சொல்லச் சொல்ல திக்குதிக்குன்னு நெஞ்சடைச்சுக் குப்புகுப்புன்னு வேர்த்துப்போச்சு கருவாச்சிக்கு.

யாத்தே, இப்படி ஒரு பொம்பளையா? இவளும் ஒரு பொம்பளையா? ரெண்டு கையிலயும் மார்ல அடிச்சு மல்லாந்து விழுந்துபோனா கருவாச்சி.

புத்தி தெளிஞ்சு எந்திரிச்சுப் பொறுமையா யோசிச்சா. பந்தல்ல தொங்குறது புடலங்காயில்ல, பச்சப் பாம்புன்னு பளிச்சுன்னு தெரிஞ்சுபோச்சு அவளுக்கு பொம்பள வேசம் போட்டு எம ராசா புகுந்திருச்சு சடையத்தேவன் வீட்டுக்குள்ளன்னு புரிஞ்சுபோச்சு.

இதுவரைக்கும் இவ என்னென்னா கூத்து நடத்தியிருக்கா? என்னா நடக்குது என்னியச் சுத்தி? நெனைக்க நெனைக்கப் பொறி பறக்குது புத்திக்குள்ள.

ஆமா, இந்த அஞ்சாறு மாசமாவே அழகு சிங்கம் பய சரிவர வார தில்லயே! புத்துல பாம்பு மாதிரி எப்பவாச்சும் தலையக் காமிச்சுட்டுப் பொசுக் பொசுக்குன்னு ஓடி ஒளிஞ்சுபோறானே...

எங்க போறான்... எங்க வாரான்? இவ மருந்து மாயம் வச்சிருப்பாளோ மகனுக்கு? ஒண்ணும் புடிபடல.

அப்பப்ப வெள்ளையுஞ்சொள்ளையுமா வாரான். உள் பையில கைய விட்டு ஒண்ணு ரெண்டு தாரான். இந்தாடா ராசா சாப்பிடுன்னா எட்டி மிதிச்சிட்டுப் போறான்.

"அய்யா தங்கம்... புலி வாயில குடியிருக்கிற மாதிரி எதிரிகளோட இருக்குறமடா. ஒன்னிய அடிச்சாக் கேக்க ஆளில்லடா மகனே! ஆளத் தேடிச் சீரத் தேடு, தாய் வழிச் சொந்தத்துல பொண்ணக் கட்டு. மொதலக்கம்பட்டி மொறைப் பொண்ணு செந்துருக்கம், கட்னா மாமனத்தான் கட்டுவேன்னு கட்ன சீல அவுக்காமக் கண்ணொழுக நிக்கிறாளாம். அவளக் கட்டிக்க. ஆள்கட்டு உள்ள வம்சமடா. ஒம் மேல எல விழுந்தாலும் தல விழுகுமடா!"

சொல்லித்தான் பாத்தேன். சொன்னதுல தப்புமில்ல சொரக்காய்க்கு உப்புமில்லன்னு ஓடி ஒளிஞ்சு போனான் பய. ஏழெட்டு ஊர்கள்ல அலையறானாம் ஏவாரம் பண்றானாம். எங்கதான் போறானோ? என்ன ஏவாரம் பண்றானோ?

நண்டு கொழுத்தா வளையவிட்டு வெளியேறியாகணுமில்ல. வராமலா போயிருவான்? பாப்பம். ஆனா ஒண்ணு இனிமே கோளாறாத்தான் பொழைக்கணும் இந்தக் குடிகெடுக்க வந்த சிறுக்கிகிட்ட.

கிராமத்து ஊருணிக்கரை இருக்கு பாருங்க, அதப் பொழுது விடிஞ்சும் விடியாம இருள் பிரியிற நேரம் பாக்கணும். இல்ல, பொழுது மசங்கியும் மசங்காம வெயில் அடங்கற நேரம் பாக்கணும்.

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

redindian இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 88781
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jan 19, 2023 8:22 pm

ஒரு ஊருணியில ஒரு ஊருக்குப் பொழப்பும் இருக்கு பொழுதுபோக்கும் இருக்கு. எல்லா எடத்தையும் கண்ணு ஓடி ஓடித்தான் பாக்குது கண்ணு ஒக்காந்து பாக்குறதுக்கு ஒண்ணு ரெண்டு எடம்தான் இருக்கும் ஒரு கிராமத்துல.

ஊருணிங்கறது கண்ணு ஒக்காந்து ஒக்காந்து போற எடம். வெயில் தாழ ஒரு ஊருணிக்கரையில நடக்கிற கண்காட்சி இருக்கே... காணக் காணாது கண்ணு ரெண்டும். காயப்போட்ட ஒரு வெள்ளச் சீல கொடிய அத்துக்கிட்டு ஆகாய மார்க்கமா வார மாதிரி கூட்டங் கூட்டமாப் பறந்து வருதுக கொக்குக.

கொளத்தவிட்டுக் கோவிச்சுட்டு வார மீனுக்காகப் பட்டாக்கத்தி மூக்க நீட்டிக்கிட்டு அலையுதுக நாரைக.

நான் தின்டது போக மிச்சந்தான் உங்க ளுக்கின்னு முங்கி முங்கி ஒரு மீனோட எந்திரிக்குது ஒரு *முக்குளிச்சான்.

ஊருணிக்குள்ளயிருக்கிற கருவேலந் தோப்புல அடைய வந்த குருவிக, குஞ்சுக எண்ணிக்கை கூட்டுல கொறையாம இருக்கக்கண்டு கும்மாளங் கொட்டிக் கூத்தடிக்குதுக.

இன்னைக்கி **மருக்கைய ஒரு போடு போட்றணும்னு அது பின்பக்கம் மோந்து பாத்துக்கிட்டே தொடுத்துப் போயிக் கெடையில கலகம் பண்ணுது ஒரு கெடா.

நான் சரளக்கல்லு வழி போயிக்கிட் டிருக்கேன்னு சாராங்கத்துக்கெல்லாம் தடதடதடன்னு தகவல் சொல்லுது எங்கேயோ தூரத்துல ஒரு வண்டிச் சட்டம்.

காத்து தன் மேல பறிச்சுப் போற பள்ளத்துலயெல்லாம் மஞ்ச வெளிச்சத்த வாங்கி ஊத்தி ஊத்தி நெப்பிக்கிட்டிருக்கு ஊருணிச் செந்தண்ணி.

ஒத்த ஆளு மட்டும் நடந்து போற ஊருணிக்கரை மேல, அகமலையில வெறகெடுத்து சொக்கத்தேவன்பட்டி பாத்துப் போயிக்கிட்டிருக்கா கருவாச்சி. கையில ரெண்டு வெறும் பையப் புடிச்சு சாமான்சட்டு வாங்க அன்னஞ்சியப் பாத்து எதுக்க வந்துக்கிட்டிருக்கா திம்சு.

வாக்கப்பட்டு வந்த ஏழு வருசத்துக்கப்பறம் மூஞ்சிக்கு மூஞ்சி பாக்கப் போறாக கட்டையன் கட்டித் தீத்தவளும் கட்டையன் கட்டிக்கிட்டு வந்தவளும்.

இதென்னடா இது கடுவன் பூன வருது கரையிலன்னு நெனச்ச கருவாச்சி ஒதுங்கிரலாம்னு ஓரங்கட்னா. வாரவ கடந்து போக வசதியும் பண்ணிக்குடுத்தா. தலச்சொம வெறக நட்டுக்குத்தலா எறக்கி அதைக் கருவேல மரத்துல சாச்சு வச்சிட்டு, போற பிடாரி போகட்டுமின்னு மூஞ்சி திருப்பி வழிவிட்டா.

அவளா போவா? தவ்வி ஓடி வந்து வெறகுக்கட்டத் தாங்கிப் புடிச்சுக் கிட்டா. வாழாவெட்டியாப் போனவளும் வாழ வந்தவளும் இப்ப மூஞ்சிக்கு மூஞ்சி கண்ணுக்குக் கண்ணு பாத்து நிக்கிறாக.

கையில இருந்த பையைக் கரையில போட்டுட்டு, வாயில இருந்த வெத்தலையத் த்தூன்னு துப்பிட்டு, யக்கான்னு கட்டிப்புடிச்சுச் சத்தம்போட்டு அழுக ஆரம்பிச்சா திம்சு.

கருவேல மரத்துல காரியம் பாத்துக்கிட்டிருந்த ரெண்டு கரிச்சான் குருவிக என்னமோ ஒரு அசம்பாவிதம் ஆகப்போகுதுன்னு விசுக்குன்னு பறந்து வெளியேறிருச்சுக.

"யக்கா! ஒன்னிய இத்தன வருசம் கழிச்சு இங்கயா பாப்பேன்? வீடாள வேண்டிய ராசா மகள வெறகு சொமக்க வச்சிருச்சே விதி. ஆன மாதிரி ஒரு புருசன் இருந்தும், புலி மாதிரி ஒரு பிள்ள இருந்தும் வேகாத காட்ல வெந்து சாகிறதே ஒம் பொழப்பாப்போச்சே! நான் குடிக்கிறது ஒங் கஞ்சி உடுத்துறது ஒஞ் சேல படுக்கறது ஒம் பாயி. சக்களத்தி ஆனாலும் நீதான்டி ஏந் தாயி."

ஒப்பாரிக்கு உண்டான ராகத்த வசனத்துக்கு எசகூட்டி வாங்கு வாங்குன்னு வாங்குறா திம்சு. வாயத் தொறந்தா அவளுக்குப் பாட்டு வந்திருது. ஆனா, வரச்சொன்னாக் கண்ணீரும் வந்திருதே... இவ நீலிக்கு அக்காதான்னு நெஞ்சுக்குள்ள சொல்லிக்கிட்டா கருவாச்சி. அவள லேசா வெலக்கி வெலக்கித் தன்ன விடுவிச்சுக்கிட்டா.

தன்னப்பத்தி எனக்கு ஒண்ணுந் தெரியாதுன்னு இவ இந்த வேசங்கட்டி ஆடுறா. எனக்கு ஒன்
சரித்திரமே தெரியுமடி சக்களத்தின்னு இவளுக்கு நான் எப்படிச் சொல்றது?
பட்டுன்னு ஒரு மின்னலு அவ பொட்டுல அடிச்சு ஓடுச்சு பளிச்சின்னு கேட்டுப்புட்டா கருவாச்சி.

"நெறைஞ்ச வீட்டுக்காரி அழுகலாமா? கண்ணத் தொடச்சுக்க பேயம்மா."

காதுக்குள்ள பாம்பு கொத்துன மாதிரி கபாலம் செதறிப்போச்சு அவளுக்கு. கண்ணீரு ஒழுகி இன்னும் காயாத கண்ணுல இப்பத் தீ எரியுது. ஒரு எட்டு பின்னுக்கு வச்சு சடார்னு சாயப்போனவ தைரியத்தக் கூப்பிட்டுத் தன்னத் தாங்கிப் புடிக்கச் சொன்னா. ஒம் மொத்தப் பொழப்பும் தெரியும்டீ ஆத்தான்னு ஒரே வார்த்தையில அடிச்செறிஞ்சுட்டாளே இவ கெட்ட சாதிச் சிறுக்கின்னு முடிவுக்கு வந்துட்டா. வெத்தல போட்ட வாயி இப்ப வெளுத்துப்போச்சு வெத்தல போடாத கண்ணு செவந்துபோச்சு.

"ஏம் பேரு..."

"ஒம் பேரு மட்டும் இல்லடியம்மா... ஒன் வம்சமும் தெரியும் ஒன் வகிசியும் தெரியும்."

"என்னா தெரியும் ஒனக்கு?" இப்ப தொனி மாறிப்போச்சு திம்சுக்கு.

"சொன்னாத் தாங்க மாட்ட. வாழ வந்துட்ட... வாழ்ந்துட்டுப் போ!"

"வாழாம..? ஒன்னிய மாதிரி வாழாவெட்டியாப் போயிருவேன்னு பாத்தியா?"

"என்னிய மாதிரி வாழாவெட்டி ஆகமாட்ட. ஆனா, வம்சவிருத்தியும் பண்ண மாட்ட."

"அக்கா நாக்கு என்ன அனுமார் வாலா நீளுது? புருசன் அத்துவிட்ட பெறகு பிள்ள பெத்தவளுக்கு மப்பு எதுக்கு மப்பு?"

"அடியே பேயம்மா. நான் ஒருத்தனுக்கு முந்தி விரிச்சு ஒரு பிள்ள பெத்தவ. நீ மூணு பேருக்கு முந்தி விரிச்சு ஒரு பிள்ளையும் பெறாதவ."

ஆவி ஒடுங்கி நாடி அடங்கிப்போச்சு திம்சுக்கு. காக்கா ஒக்காந்துபோன வேப்பங்கொப்பு மாதிரி திரேகம் ஆடுது.

"இந்தாத்தா கருவாச்சி. மரியாதையக் கெடுத்துக்கிராத. நீயும் நானும் ஒருத்தனுக்கு ஒரு பாயில படுத்தவுக மறந்துராத."

"நிறுத்துடி... ஏலா நிறுத்துடி. நீயும் நானும் ஒண்ணுன்னா சாமி குத்தமாகிப் போயிருமடி. நீ உள்ள இருந்தாலும் கட்டுச்சோத்துல கட்டுன எலி. நான் வெளிய இருந்தாலும் வேப்பமரத்து நெழலு. தாய்ப்பாலும் எருக்கிலம்பாலும் ஒண்ணாயிருமா பேயம்மா?"

எருக்கிலம்பாலுன்னு சொன்னதும் திம்சுக்கு வீரியம் கொறைஞ்சுபோச்சு வெறைச்சுப்போச்சு கைகால் எல்லாம்.

"சொல்லட்டுமா... ஒன் எருக்கிலம்பால் கதையச் சொல்லட்டுமா? ஒன் கர்ப்பப் பைய அழிச்சதும் எருக்கிலம்பால்தான் நீ ஒம் முதல் புருசன ஊத்திக் கொன்னதும் எருக்கிலம் பால்தான்."

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 88781
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jan 31, 2023 2:44 am

கால் ரெண்டும் கரையில நிக்கல திம்சுக்கு. கருவேல மரத்த முதுகுக்கு முட்டுக் குடுத்துச் சாஞ்சு நிக்கிறா சரிஞ்சு. கருவாச்சி சொல்லச் சொல்லப் படம் படமா ஓடுது அவ பழைய கதை.

குப்பணம்பட்டி. பச்சைச் சீலய விரிச்சுக் காயப் போட்ட மாதிரி கண்ணுக்கு எட்டுன மட்டும் சோளக்காடு.

பேச்சுத் தொணைக்கு ஆளில்லாத கெழவி தானாப் பொலம்பித் தானாச் சிரிச்சுக்கிட்டுப் போற மாதிரி சலசலசலன்னு ஓடுது ஓடைத் தண்ணி.

தாவணி சுத்துன தலவாழ எல மாதிரி ஊரையே பித்துப்பிடிக்க வைக்கிற பதினாறு வயசுப் பேயம்மா, அய்த்த மகன் ஆரியபட்டி சின்னவீரன் மேல அவ ஆசப்பட்டது... ரெட்ட ஆலமர அடித்தண்டுப் பொந்துக்குள்ள ரெண்டு பேருமாப் புகுந்து பகல் பூராக் கதை பேசிப் பாம்பு வெரட்டவும் பயந்து ஓடிவந்தது...

துணி தொவைக்க வந்தவள நீச்சல் பழகித் தாரேன் வாடீன்னு கம்மாக்குள்ள இழுத்து அவளத் தண்ணியில மெதக்கவிட்டுத் தாங்கிப்புடிக்கிறேன்னு அவ தங்க வயித்துல கைவச்சது...

அடிவயித்துல வச்ச கையி அங்கயே நிக்காம மேலயும் கீழயும் போயி வேவு பாத்தது...

அவ சீன்னு செல்லக் கோபம் கோவிச்சு ஓடிப் போனது மறுநாள் தொவைக்க அழுக்குத்துணி இல்லாமப் போகவும், தொவைச்சுக் காய்ஞ்ச துணிகளையே கொடத்துக்குள்ள அமுக்கிக் கம்மாக்கரைக்கு ஓடிவந்து அவன் வலது கைய எடுத்துத் தன் வயித்துக்கடியில வச்சுக்கிட்டது...

அப்பறம் குளிக்கையில ரெண்டு பேரும் அழுக்காப்போனது...

இவ அப்பன் ஆத்தா இல்லாதவ, கஞ்சிக் கில்லாத அண்ணன் ஆதரவுல காலந் தள்ளுறவ, இவ வெத்துச்சிறுக்கி வெறுஞ்சிறுக்கி இவள மறந்துர்றா மகனேன்னு கொளத்தடி வயக்காட்ட எழுதி வாங்கிட்டுச் சின்னவீரனுக்கு அவுக அப்பன் தும்மக்குண்டுக்காரியக் கட்டிவச்சது...

அப்பறம் பேயம்மா வாயும் வயிறுமா நின்னது...

பொட்டுலுபட்டிக் கம்மாக்குள்ள எருக்கிலம்பால் வச்சு மருத்துவச்சி முனியம்மா அவ கருவக் கலச்சது...

அந்த வேக்காடு தாங்காம கர்ப்பப்பையும் வெந்துபோனது...

ஆம்பள வர்க்கத்துமேலயே அன்னைக்கிருந்து அவ வம்மம் வச்சது...

காசுதாண்டா கேட்டீக காசு... சம்பாரிச்சுக் காமிக்கிறன்டான்னு தீட்டுச் சீல மேல அவ சத்தியம் பண்ணுனது...

அப்புறம் கீழக்குடி மிராசுதார் சொட்டையத்தேவருக்கு மூணாந்தாரமா வாக்கப்பட்டது...

மேல் வெளையாட்டோட கெழவன் கவுந்தடிச்சுப் படுத்துக்கிர, இவ அப்பப்ப லேசா அத்துமீறப் பாத்தது...

ஒன்னியக் காணாப் பொணமாக்கிப்புடுவேன்னு மிராசுதார் அவளக் கண்டிச்சது...

கிழவனக் காலிபண்ண இவ காலம் பாத்து நின்னது...

சோழவந்தான் வயக்காட்டை வித்து வீட்ல பெரும்பணம் வச்சிருந்த அன்னைக்கு அவரு காதுல எருக்கிலம்பால் ஊத்திக் கொன்னுபுட்டு, தானும் மாரடிச்சு அழுதுட்டுப் பணத்தோட வெளியேறி அண்ணன் வீட்ல அதக் குடுத்துவச்சிட்டு, பின்னத்தேவன்பட்டிப் பெரியத்தா வீட்டுக்கு ஓடி ஒளிஞ்சுபோனது...

அங்க கட்டையன் அவளப் பாத்து ஆசப்பட்டுக் கல்யாணம் பண்ணிக்கிட்டது...

இந்த ஏழு வருசத்துல நான்தான் கண்ணகின்னு ஊரையே நம்பவச்சது...

எல்லாம் அவ கண்ணுக்கு முன்னுக்க ஒண்ணொண்ணா ஓடி மறையுது அவ கனாக்கண்டு நிக்கிறது கருவாச்சிக்கும் தெரியுது.

Page 13 of 14 Previous  1 ... 8 ... 12, 13, 14  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக