ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» இளையராஜா பாடல்கள்
by heezulia Today at 3:03 pm

» ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 3:03 pm

» புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் தவசி காலமானார்
by T.N.Balasubramanian Today at 2:57 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Today at 2:56 pm

» சினி செய்திகள் -வாரமலர்
by ayyasamy ram Today at 2:54 pm

» புரிதலில் இருக்கும் அன்பு தான் அகிம்சை –
by ayyasamy ram Today at 2:43 pm

» மீண்டும் பாலகிருஷ்ணா படத்தின் நாயகி மாற்றம்
by ayyasamy ram Today at 2:35 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (334)
by Dr.S.Soundarapandian Today at 2:35 pm

» வாட்சப் நகைச்சுவை
by T.N.Balasubramanian Today at 2:32 pm

» தமிழில் மீண்டும் ஆசிஷ் வித்யார்த்தி
by ayyasamy ram Today at 2:31 pm

» பாடகருக்குத் திருமணம் ஆகிவிட்டது!
by T.N.Balasubramanian Today at 2:28 pm

» அந்தக்கால நினைவுகள் (70 களை நோக்கி ஒரு பயணம்)
by சக்தி18 Today at 2:03 pm

» `பொம்மி’ அபர்ணா பாலமுரளி
by சக்தி18 Today at 1:43 pm

» துயில் - எஸ்.ராமகிருஸ்ணன்
by Shivramki Today at 1:08 pm

» எல்.சி.திவாகர் " தேய்ந்திடாத வெண்ணிலா"
by Shivramki Today at 12:42 pm

» ‘நிவர்’ புயல் - தற்போதைய நிலவரம் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:31 pm

» சாலிய வாகன வம்சத்தை பற்றிய வரலாற்று பதிவுவிற்கான புத்தகம் கிடைக்குமா?
by Shivramki Today at 12:26 pm

» ஜோ பைடனுக்கு ஆட்சி அதிகாரத்தை மாற்ற சம்மதித்த டொனல்டு டிரம்ப்
by ayyasamy ram Today at 12:20 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Shivramki Today at 11:58 am

» சுய அறிமுகம்
by T.N.Balasubramanian Today at 11:44 am

» இறுதிக்கட்ட படப்பிடிப்பில் தனுஷின் பாலிவுட் படம்
by ayyasamy ram Today at 11:40 am

» இதயத்தை திருடாதே சீரியலில் இடம்பெற்றுள்ள 'தீரா கனா' பாடல்
by ayyasamy ram Today at 11:37 am

» சசிகலாவை தொடர்ந்து இளவரசியும் ரூ.10 கோடி அபராதம் செலுத்தினார்
by T.N.Balasubramanian Today at 10:39 am

» நெடுஞ்சாலை ஓரத்தில் கொட்டப்படும் மருத்துவக்கழிவுகள்; கொரோனா அச்சத்தில் பொதுமக்கள்
by T.N.Balasubramanian Today at 10:26 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 10:21 am

» 100 வயதை எட்டிய முன்னாள் ஊழியருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ரெயில்வே: ஓய்வூதியத்தை இரட்டிப்பாக்கியது
by T.N.Balasubramanian Today at 10:21 am

» காற்றில் அதிகரிக்கும் கிரீன் ஹவுஸ் வாயுக்கள்; ஐநா எச்சரிக்கை
by ayyasamy ram Today at 7:24 am

» அசாம் 'மாஜி' முதல்வர் தருண் கோகோய் மரணம்
by ayyasamy ram Today at 7:22 am

» சோழ ராணி -சரித்திர நாவலை டவுன்லோட் செய்ய.
by Shivramki Yesterday at 11:13 pm

» நடிகர்திலகம் டிவி (NadigarThilagamTV)
by nadigarthilagamtv Yesterday at 11:02 pm

» சில தமிழ் புத்தகங்கள்
by Shivramki Yesterday at 11:02 pm

» விக்கிரமன் நாவல்கள்
by Shivramki Yesterday at 10:44 pm

» ’லவ்வும், ஜிகாத்தும் கைகோர்த்து செல்லாது’ - நுஸ்ரத் ஜஹான்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம்.. கமலா ஹாரிஸ் அதிரடி அறிவிப்பு….
by சக்தி18 Yesterday at 8:18 pm

» ஈஸ்வரன் பட காட்சியில் சிம்பு வைத்திருப்பது ரப்பர் பாம்பு-
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» காசு,பணம்,துட்டு, money money.. ப்ரியா ஆனந்தின் வைரல் புகைப்படம்
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» பசுக்களை பாதுகாக்க “கோமாதா வரி” … இது மத்திய பிரதேச அரசின் புது ஸ்டைல்…
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» அறிமுகம் -சிவராமகிருஷ்ணன்
by Shivramki Yesterday at 5:47 pm

» நிவர் புயல் - செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 4:53 pm

» தொடத் தொடத் தொல்காப்பியம்(487)
by Dr.S.Soundarapandian Yesterday at 4:50 pm

» பானி ஆன்தெம் (தண்ணீர் கீதம்) இந்திப் பாடல்
by T.N.Balasubramanian Yesterday at 3:42 pm

» என். கணேசன் புத்தகம் pdf
by T.N.Balasubramanian Yesterday at 3:41 pm

» முற்றிலும் இலவசம் - அசத்தல் அறிவிப்பு வெளியிட்ட நெட்ப்ளிக்ஸ்
by ayyasamy ram Yesterday at 3:32 pm

» பசியும் ருசியும்!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» படிப்போம்… மாற்றுவோம்!
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» என்.  சீதாலட்சுமி - வயல்விழி தமிழ் நாவல்
by Shivramki Yesterday at 2:52 pm

» மனைவிக்கு பயந்தவன் கண்டு பிடிச்ச விளையாட்டு..!
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்:
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:34 pm

Admins Online

மலட்டுத்தன்மை

Go down

மலட்டுத்தன்மை Empty மலட்டுத்தன்மை

Post by சபீர் on Sun Jul 11, 2010 11:43 am

■பெண்களில் கருக்கட்டும் தன்மை என்பது பிரசவமடைந்து குழந்தை பெறக்கூடிய தன்மை என்பதாகும். பெண்ணின் இனப்பெருக்கக்காலம் பூப்படைதல் முதல் மாதவிடாய் நிறுத்தும் வரையிலாகும்.
■பெண் குழந்தை ஒன்று பிறப்பிலேயே 400,000 முட்டைகள் கொண்ட சூலகங்களுடன் பிறக்கிறது. அலள் பூப்படைந்தவுடன், மாதவிடாய் சக்கரங்கள் ஆரம்பிக்கின்றன. ஒவ்வொறு சக்கரத்தின் போதும், ஒரு சூலகம் ஒரு முட்டையை வெளிவிடும். இம்முட்டை விந்துடன் கருக்கட்டி பிரசவம் ஆரம்பிக்கலாம்.
■இம்முட்டை விருத்தியடைந்து வெளியேறுவது, ஓமோன்களின் தன்மையில் தங்கியுள்ளது.
■ஆண“களில் கருக்கட்டும் தன்மை என்பது, ஒரு பெண்ணை பிரசவமடையச்செய்யும் தன்மையாகும். இது ஆண் இனப்பெருக்கத்தெகுதியில் விந்து உற்பத்தியிலும் சேமிப்பிலும் தங்கியுள்ளது. மற்றும் விந்து வெளியேற்றமும் முக்கியமான விடயமாகும்.
■பெண்களை போலன்றி, ஆண்கள் தொடர்ச்சியாக புதிய வந்துகளை உருவாக்கலாம். ஒவ்வொரு 72 நாட்களுக்கு ஒரு முறை புதிய விந்துகள் உற்பத்தியாகும்.
PICTURE
முக்கிய கவனிப்பு
முட்டை மாதத்திற்கு ஒரு மறை மாத்திரமே வெளியேறும், 12-24 மணி நேரமே வாழும்.
விந்துகள் ஒவ்வொரு நாலும் உற்பத்தியாகும். பெண் இனப்பெருக்கத்தொகுதியில் 24-72 மணி நேரம் வாழும். யோனி கால்வாயினுள் இடப்பட்ட விந்து கருப்பையினுள் நீந்து செல்லும்.

கருக்கட்டக்கூடிய வயது என்ன?
பெண்ணின் இனப்பெருக்க வயது 15-44 லரை.
தகுந்த காலம் 20 வயதிற்கு பின் மற்றும் 35 வயதிற்கு முன்.
பிரசவமடைய தகுந்த காலம் 22-24 வயது.
வயது கூட கூட பிரசவம் சம்பந்தமான பிரச்சினைகள் அதிகரிக்கும். கருக்கட்டும் தன்மை 35 வயதிற்குப்பின் குறைய ஆரம்பிக்கும்.
எனினும் 15 வயதிற்கு முன்னும் 44 வயதிற்கு பின்னும் கருக்கட்டலாம்.v 18 வயதிற்கு முன் பிரசவமடைதல் தாய்க்கும் குழந்தைக்கும் கேடு விளைவிக்கும்

பிரசவம் ஒன்றுக்கு தயாராகும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை.
■இருவரும் ஒரே நோக்கத்தில் இருக்கவேண்டும்.■ருபேல்லா தடுப்பூசி, குறைத்தபட்சம் 3 மாதங்களுக்கு முன் போடப்பட்டிருக்கவேண்டும்.■Folic acid (போலிக் அமிலம்) 3 மாதங்களுக்கு முன்னாவது எடுக்கவேண்டும்.■உங்களுக்கு (பெண்) ஏதாவது நோய் இருப்பின் வைத்தியரை நாடவும்.■ஆண் துணைக்கு ஏதாவது நோய்கள் இருப்பின் உ+ம் உயர் குருதி அமுக்கம், நீரிழிவு கட்டுப்பாடு தேவை.■பாதுகாப்பற்ற உடலுறவு வாரத்திற்கு 3 முறை.■தகுந்த காலத்தை பற்றிய அறிவு இருக்கவேண்டும்.■சந்தேகங்களுக்கு வைத்திய ஆலோசனை நாடவும்.
தகுந்த காலம்- கருக்கட்டல் அதிகம் நிகழக்கூடிய காலம். இது முட்டை வெளியேற்றத்திற்கு 4 நாள் முன் தொடங்கி, 4 நாட்களுக்கு பின் முடிவடையும்

முட்டை வெளியேறும் நாள்(x) = சக்கர காலம்(உ+ம் 24 நாள்) – 14 நாள்
எனவே தகுந்த காலம் = X -4 இருந்து X+4 நாட்கள்
உதாரணமாக சக்கரம் எனின்
சூழ்கொள்ளும் நாள்
உதாரணம்: 24 நாள் சக்கரம்- முதல் நாள் (D1) இரத்தப்போக்கின் முதல் நாளாக்கருதப்படும்
சூழ்கொள்ளும் நாள் 24-14 = 10
கருக்கட்ட சாத்தியமான காலம் (D10-4) & (D10+4) 6 ஆம் நாள் முதல் 14ஆம் நாள் வரை
35 நாள் சக்கரம் சூழ்கொள்ளும் நாள் 35 – 14 = 21
கருக்கட்ட சாத்தியமான காலம் (D21-4) & (D21+4) 17ஆம் நாள் முதல் 25ஆம் நாள் வரை
நான் கர்ப்பமடைவதை அறிந்து கொள்வது எப்படி?
நீங்கள் மாதவிடாய் ஒன்றை தவறவிட்டால் மட்டுமே அதை கண்டுபிடிக்கலாம்.
கர்ப்பகால அறிகுறிகள் கடைசி மாதவிடாயிலிருந்து 6 கிழமைகழுக்கு பின்தான் ஏற்படும்.
எனும் சிறுநீர் பரிசோதனையின் மூலம் கண்டு பிடிக்கலாம்.
ஸ்கேன் மூலம் மாதவிடாய் தவறவிட்ட நாலில் இருந்து இரு கிழமைகளில் கண்டுபிடிக்கலாம்.
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
மதிப்பீடுகள் : 138

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

மலட்டுத்தன்மை Empty Re: மலட்டுத்தன்மை

Post by சபீர் on Sun Jul 11, 2010 11:45 am

கர்ப்ப பரிசோதனை செய்வது எப்படி?
PICTURE

■இது ஒரு இலகுவான மற்றும் செலவு குறைந்த பரிசோதனை ஆகும்.
■கால அவதியாகும் நாளை முதலில் சரி பார்க்கவும்.
■சிறுநீ்ர் (காலை) ஒரு சுத்தமான பாத்திரத்தில் சேமிக்கவும்.
■காட்டியை சிறுநீரினுள் இடவும்
■1-2 நிமிடங்கள் வைத்து விட்டு நிறமாற்றத்தை அவதானிக்கவும்.
PICTURE
கர்ப்ப பரிசோதனை சரி எனின் ...................
வாழ்த்துக்கள்

■இப்போது நீங்கள் ஒரு சுகாதார அதிகாரியை (வைத்தியர்) நாடவேண்டும். அவர் உங்களை வழிநடத்துவார்.
■கர்ப்பம் தரிக்க முடியவில்லை, ஏன் என தெரியவில்லை.
உங்கள் கருக்கட்டும் ஆற்றல் பற்றி பிரச்சினை இருப்பின் முதலாவது ஒன்றை தெறிந்து கொள்ளுங்கள். நீங்கள் தனியாக இல்லை. உலக சுகாதார அமைப்பு (who) இன் கணிப்பின் படி 15% குழந்தைப் பாக்கியம் அற்றவர்கள், வைத்திய உதவியை நாடிய வண்ணம் உள்ளனர்.

■கருக்கட்டும் ஆற்றல் குறைவு (Sub fertility) .
■குறைந்தபட்சம் ஒரு வருடம் பாதுகாப்பற்ற உடலுறவின் பின் கருக்கட்ட முடியாத நிலை தொடர்ச்சியான பாதுகாப்பற்ற உடலுறவின் மூலம் 85 பிரசவம் அடையலாம். இக்குறைபாடு ஒவ்வொரு 7 ஜோடிகளுக்கு ஒரு ஜோடி என்ற விகிதாசாரத்தில் இருக்கிறது. இதன் முதன்மையானது அல்லது வேறு காரணங்களால் ஆனது.
■முதன்மை கருக்கட்டும் ஆற்றல் குறைவு- ஒரு முறையாவது கருக்கட்டல் நடக்காத சோடி.
■வேறு காரணங்களால்- ஏற்கனவே ஒரு முறையாவது கருக்கட்டி, பின் அடுத்தடுத்து கருக்கட்ட முடியாத நிலை.

சரியான கர்ப்பத்திற்கு தேவையானவை

■ஆண் துணையிடம் போதுமான அளவு விந்தணுக்கள் காணப்படல்
■பெண் முட்டை வெளியேற்றம்
■குழாய்களில் குறைபாடுகள் இல்லாதிறுத்தல்
■சாதாரணமான கர்ப்பப்பை


■இதில் ஏதாவது ஒரு காரணியில் பிரச்சினை இருந்தாலும் கர்ப்பம் தாமதமாகும்

கருக்கட்டும் ஆற்றல் குறைவு

■ஆண் காரணிகள்
■பெண் காரணிகள்
■இருவரின் காரணிகள்
■எந்தவொரு காரணியும் கண்டுபிடிக்க இயலாது.
ஆண் காரணிகள்


■விந்து எண்ணிக்கையிலும் செயற்திறனிலும் குறைதல்
■இதுவே அதிகப்படியான காரண்யாகும்
■சுக்கிலத்தின் அளவு, விந்துக்களின் எண்ணிக்கை, விந்தின் அசையும் தன்மை, செயற்திறன் விந்து அளவு மற்றும் வடிவம் என்பன முக்கிய காரணிகளாகும்.
■விந்துக்களின் எண்ணிக்கை முக்கியம் எனினும், அதன் அசையும் தன்மையும் செயற்திறனும் கருக்கட்டலும் இன்றியமையாதவை.
■விந்துக்களின் எண்ணிக்கை, செயற்திறன் குறைப்பன : புகைத்தல், மது அருந்துதல், தொற்றுநோய்கள், வரிக்கோசீல் (varicocoel), சூடான சூழழுக்கு, ஓமோன் குறைபாடு, கீழ்செல்லா விதைகள்.
■சுக்கில வெளியேற்றத்தில் பிரச்சினைகள்
■சுக்கில பாய் பொருள் பின்செல்லுதல் ஒரு முக்கிய காரணமாகும்.
■நீரிழிவு நோய், மருந்து வகைகள் என்பன வேறு காரணங்களாகும்.
ஆண்குறி நேராகாமை
இது கருக்கட்டும் ஆற்றலை குறைக்காது எனினும் உடலுறவில் பிரச்சினையை ஏற்படுத்தும்.

பெண் காரணிகள்
சூல் வெளியேற்றத்தில் பிரச்சினை இதுவே பொதுவான காரணியாகும்
முட்டை விருத்தி தற்றும் வெளியேற்றம் பாதிக்கப்பட்டுள்ளது.
உ+ம் பொலிஸ்டிக் ஓவேரியன் நோய் (PCOD), சூலக விருத்தி குறைவு, ஓமோன் மாற்றங்கள்
தற்போதைய சிகிச்சை முறைகளால் கருக்கட்டும் தன்மை அதிகரித்துள்ளது.
குழாய்களில் பிரச்சினை
பலோப்பியன் குழாய் மிக மெல்லிய குழாய்கள் என்பதால் இலகுவில் சேதமடையலாம். குழாய்களில் அடைப்பு ஏற்கனவே ஏற்பட்ட நோயால் அல்லது சத்திரசிகிச்சையினால் ஏற்படலாம்.
உடலுறவு மூலம் பரவும் நுண்ணுயிர்கள் ஏற்படுத்தும் நோய்கள் குழாய் அடைப்பை ஏற்படுத்தலாம்.
அடைத்த குழாய்கள் முட்டை –விந்து சந்திப்பை தடுக்கும்
கர்ப்பபையின் காரணிகள்
கர்ப்பபையில் நோய்கள், அல்லது பிறப்புரிமையினாலே ஏற்ப்பட்ட நோய்கள் மூலம் கர்ப்பபையில் சேதம் ஏற்படலாம்.
கருச்சிதைவு மற்றும் சத்திரசிகிச்சைகளும் கர்ப்பபையை பாதிக்கலாம்.
கஉடலுறவில் பிரச்சினை
உடலுறவின் போது வலி
உட்செலுத்த முடியாமை

பொது காரணிகள்
மிக அதிக நிறை தன்மை
வயது
புகைத்தல்
அதிகப்படியான மது பாவனை
போதைப பொருள்
மருந்து வகைகள் :- NSAAIDS
மனோதத்துவ காரணங்கள்

வேறு
10-15% சோடிகளிடையே கருக்கட்டல் தன்மை குறைவு காரணம் கண்டுபிடிக்க முடியாது.

எப்போது உதவியை நாடவேண்டும்?
பாதுகாப்பற்ற உடலுறவின் பின் கர்ப்பம் தரிக்காவிட்டால்
பெண்ணின் வயது 35 க்கு குறைவெனின்- ஒரு வருடம்
பெண்ணின் வயது 35 க்கு அதிகமெனின்-ஆறு மாதங்கள்
அல்லது பின்வரும் காரணங்கள் இருப்பின் உடனே வைத்தியரை நாடவும்
பெண் :-
முன்னைய சத்திரசிகிச்சை (அடிவயிற்றுப்பகுதியில்)
Endometriosis நோய் இருப்பின்• மாதவிடாய் சீரற்றுப்போதல் ஏற்கனவே ஏற்பட்ட குறைப்பிரசவம்
அடி வயிற்று உறுப்பு நோய்கள்

ஆண் :-
நோய்கள்
விதை வீக்கம்
விதை / விதைப்பை சத்திரசிகிச்சை
கீழ் செல்லாத விதைகள்(சத்திரசிகிச்சையின் பின்)

எங்கு செல்ல வேண்டும் :-
அரச தனியார் மருத்துவர்
கிளினிக்குகள்
கருக்கட்டும் ஆற்றல் குறைவு தொடர்பான நிலையங்கள்
விசேட பிரசவ மற்றும் பெண்நோயியல் மருத்துவர்
அரச வைத்தியசாலை
குடும்ப சுகாதார பணியகம்(FHB)
குடும்ப வைத்தியர்
குடும்ப கட்டுப்பாட்டு நிலையம்

கருக்கட்டும் திறன் குறைவை நிர்ணயிக்கும் பரிசோதனைகள்
ஆண்கள்

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
மதிப்பீடுகள் : 138

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

மலட்டுத்தன்மை Empty Re: மலட்டுத்தன்மை

Post by சபீர் on Sun Jul 11, 2010 11:46 am

1.சுக்கில பாய்பொருள் கணிப்பு
சுக்கில பாய்பொருள் கணிப்பு என்றால் என்ன? அதற்கு எவ்வாறு தயாராவது?
சுக்கில பாய்பொருள் சிறிதளவு சேமிக்கப்பட்டு விந்துக்களின் எண்ணிக்கையும் செயற்திறனும் பரிசோதிக்கப்படும். பரிசோதனைக்கு 3 நாட்களுக்கு முன் உடலுறவு கொள்ளக் கூடாது. பரிசோதனை நிலையம் அருகே உள்ள இடமொன்றில் சேமிப்பு நடப்பது உகந்தது. தற்சுகம் மூலம் சுத்தமான பாத்திரமொன்றில் சுக்கில பாய்பொருள் சேமிக்கப்படும். சுக்கிலம் முலுவதும் சேமிக்கப்படும், சுக்கிலம் கொட்டுப்பட்டால் பரிசோதனை நிலையத்திற்கு அறிவிக்கப்படவேண்டும். விந்து எண்ணிக்கை மிகவும் குறைவெனின் இன்னொரு பரிசோதனை கூடிய சீக்கிரத்தில் செய்யவேண்டும்.
சாதாரண கணிப்பு
கனவளவு > 2ml
எண்ணிக்கை ≥ 20 million / ml
அசைவு திறன் > 50% (வேகமானவை >25% + மெதுவானது).
உயிர் நிலை > 50%
கட்டமைப்பு ≥ 30% சாதாரணமானவை
படிவுகள் < 5% புலம்

கீழுள்ள பரிசோதனைகள் தேவைப்படும் போது மாத்திரம்
1.சுக்கில பாய்பொருள் வளர்ப்பு
2.இரத்த பரிசோதனை- FSH/LH/Testosterone ஓமோன்கள்
3.ஸ்கேன்- வயிறு, விதைப்பை
4.விதை இழைய பரிசோதனை

பெண்கள்
1.முட்டை வெளியேற்றத்தை பரிசோதிக்க
a)வெப்பநிலை வரைபு பேணுதல்
வெப்பமானியை படுக்கை அருகே வைத்துக்கொள்க.
நித்திரையிலிருந்து எழுந்தவுடன் வெப்பநிலையை கணிக்க ; தேநீர் அருந்த முன், பற்களை சுத்தம் செய்ய முன்.
வெப்பமானியை வாயினுள் 2 நிமிடங்கள் வைக்க.
வெப்பநிலையை ஒரு சதுர தாளில் குறிக்க.
டுத்தடுத்த நாளில் வெப்பநிலையை கணித்து, வெப்பநிலையை குறிக்க. இக்குறிகளை கோடுகளால் இணைக்க.
வெப்பமானியை கழுவி பாதுகாப்பான இடத்தல் வைக்க
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
மதிப்பீடுகள் : 138

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

மலட்டுத்தன்மை Empty Re: மலட்டுத்தன்மை

Post by எஸ்.அஸ்லி on Tue Jul 27, 2010 8:36 pm

மலட்டுத்தன்மைபற்றி நல்லதொரு விளக்கப்பதிவு மிக்க நன்றி
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010
மதிப்பீடுகள் : 6

Back to top Go down

மலட்டுத்தன்மை Empty Re: மலட்டுத்தன்மை

Post by சபீர் on Thu Sep 30, 2010 1:06 pm

@எஸ்.அஸ்லி wrote:மலட்டுத்தன்மைபற்றி நல்லதொரு விளக்கப்பதிவு மிக்க நன்றி
புன்னகை நன்றி நன்றி நன்றி நன்றி அன்பு மலர்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
மதிப்பீடுகள் : 138

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

மலட்டுத்தன்மை Empty Re: மலட்டுத்தன்மை

Post by V.Annasamy on Thu Sep 30, 2010 1:09 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010
மதிப்பீடுகள் : 18

Back to top Go down

மலட்டுத்தன்மை Empty Re: மலட்டுத்தன்மை

Post by சபீர் on Mon Oct 04, 2010 9:46 am

@V.Annasamy wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
நன்றி நன்றி
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
மதிப்பீடுகள் : 138

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

மலட்டுத்தன்மை Empty Re: மலட்டுத்தன்மை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum