புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Today at 3:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:44 pm

» மக்களின் அறியாமையை அடித்து கேட்டிருக்கிறார்.. Hats off: கங்கனாவை அறைந்த கான்ஸ்டபிளை பாராட்டிய சேரன்
by ayyasamy ram Today at 3:25 pm

» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Today at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Today at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Today at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 இளைஞர்களை விழுங்கும் போதை Poll_c10 இளைஞர்களை விழுங்கும் போதை Poll_m10 இளைஞர்களை விழுங்கும் போதை Poll_c10 
68 Posts - 59%
heezulia
 இளைஞர்களை விழுங்கும் போதை Poll_c10 இளைஞர்களை விழுங்கும் போதை Poll_m10 இளைஞர்களை விழுங்கும் போதை Poll_c10 
41 Posts - 36%
mohamed nizamudeen
 இளைஞர்களை விழுங்கும் போதை Poll_c10 இளைஞர்களை விழுங்கும் போதை Poll_m10 இளைஞர்களை விழுங்கும் போதை Poll_c10 
4 Posts - 3%
T.N.Balasubramanian
 இளைஞர்களை விழுங்கும் போதை Poll_c10 இளைஞர்களை விழுங்கும் போதை Poll_m10 இளைஞர்களை விழுங்கும் போதை Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 இளைஞர்களை விழுங்கும் போதை Poll_c10 இளைஞர்களை விழுங்கும் போதை Poll_m10 இளைஞர்களை விழுங்கும் போதை Poll_c10 
110 Posts - 60%
heezulia
 இளைஞர்களை விழுங்கும் போதை Poll_c10 இளைஞர்களை விழுங்கும் போதை Poll_m10 இளைஞர்களை விழுங்கும் போதை Poll_c10 
62 Posts - 34%
mohamed nizamudeen
 இளைஞர்களை விழுங்கும் போதை Poll_c10 இளைஞர்களை விழுங்கும் போதை Poll_m10 இளைஞர்களை விழுங்கும் போதை Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
 இளைஞர்களை விழுங்கும் போதை Poll_c10 இளைஞர்களை விழுங்கும் போதை Poll_m10 இளைஞர்களை விழுங்கும் போதை Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இளைஞர்களை விழுங்கும் போதை


   
   

Page 1 of 2 1, 2  Next

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Thu Aug 12, 2010 5:10 pm

 இளைஞர்களை விழுங்கும் போதை Say-no-to-drugs


உண்மைக் கதையிலிருந்து நாம் கற்கும் பாடம்


““எதிர்காலத்தில் நன்றாக வருவாய் என்றல்லவா நினைத்தேன்.... அந்த நினைப்பில் மண்ணையள்ளிப் போட்டு விட்டாயே''..... ““உன்னை இந்தக் கோலத்தில் பார்க்கத்தானா நாம் இவ்வளவு காலம் கஷ்டப்பட்டோம்''...., ஒரு தாயின் குமுறல்தான் இது.

குறிப்பாக போதைவஸ்துக்கு அடிமையாகி தன்னையும் தன் வாழ்க்கையையும் தொலைத்தவரை மகனாகப் பெற்ற ஒரு அபலைப்பெண்ணின் புலம்பல்.

சுரேஷ், (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கொழும்பில் ஒரு கௌரவமான குடும்பத்தின் செல்ல மகனாகப் பிறந்தான்.
இவனுக்கு இரண்டு சகோதரிகள். இவன் குடும்பம் ஒரு நடுத்தர வர்க்கத்தை சேர்ந்ததாக இருந்தாலும் கஷ்டம் என்று வரும் போது ஒரு நாளும் அடுத்த வீட்டைக்கூட நாடியதில்லை. கொழும்பில் பிரபலமான பாடசாலையில் கல்வி கற்று வந்தான் சுரேஷ். இவனுக்கு நண்பர்களின் சகவாசம் அதிகம் என்ற போதிலும் தனது படிப்பு விடயத்தில் அதிக கவனமாகவேயிருந்தான்.

இதன் விளைவு சிறந்த பெறுபேறுகளுடன் க.பொ.த. சாதரண தரத்தில் சித்தி. இதனால் அவன் குடும்பம் சந்தோஷமடைந்தது.
அடுத்து க.பொ.த. உயர் தரத்தில் படிப்பதற்காக ஆயத்தமாகிக் கொண்டிருந்தான். குடும்பத்தினரதும் நண்பர்களினதும் ஆலோசனைப்படி அவன் ஆரம்பத்தில் படித்த பாடசாலையிலேயே கணக்கியல் பிரிவில் சேர்ந்தான்.

இப்படி அவன் வாழ்க்கை வண்டி நன்றாகவே ஓடிக் கொண்டிருந்த போதும் எதிர்பாராத விதமாக கிடைத்த தீய சகவாசம் போதை என்ற மாய உலகுக்குள் அவனை அழைத்துச் சென்றது. இதனால் அவன் இழந்தது தன்னை மட்டும் அல்ல; தன் குடும்பத்தையும் தான்.
மகனின் நடவடிக்கையில் வித்தியாசத்தை கண்ட தாய் அது குறித்து வினவ சில நாட்களுக்கெல்லாம் வீட்டுக்கு வருவதையே நிறுத்திக் கொண்டான் சுரேஷ். இரவு வேளைகளில் போதைப் பொருட்களை உபயோகித்து தன்னை மறந்த நிலையில் நண்பர்களுடன் உல்லாசமாகப் பொழுதை கழிப்பதையே வாடிக்கையாக்கிக் கொண்டான்.

சுரேஷின் நடவடிக்கையால் அவன் குடும்பம் மனடைந்து போனது உண்மைதான். ஆனால் தங்களை நம்பி இரண்டு பெண் பிள்ளைகள் இருப்பதை உணர்ந்து அவர்களைக் கரையேற்றுவதில் அதிகம் நாட்டம் கொண்டனர் சுரேஷின் பெற்றோர்.

சுரேஷின் தான்தோன்றித்தனமான செயல் அவன் தங்கை அனுஷாவின் (பெயர் மாற்றப் பட்டுள்ளது) நடவடிக்கையிலும் மாற்றத்தை ஏற்படுத்தியது. யாருடனும் பேசாமலும் படிப்பில் ஆர்வம் அற்றுப்போய் வீட்டிற்குள்ளேயே அடங்கிக் கிடந்தாள் அனுஷா. அப்போது க.பொ.த சாதாரண தர பட்சைக்கான காலம் என்பதால் அவள் வாழ்க்கையும் சூனியமாகப் போகிறதே என்ற புதிய கவலை பெற்றோருக்கு.

சுரேஷின் மற்றொரு சகோதரி அவனை விட மூன்று நான்கு வயது மூத்தவள். சாதாரண தரத்துடனேயே தன் படிப்பை நிறுத்திக் கொண்டு தாய்க்கு உதவியாக வீட்டில் இருந்ததால் அவள் பற்றிய பயம் கொஞ்சம் குறைவாகவேயிருந்தது.
அமைதியாகப் போய் கொண்டிருந்த அவர்கள் குடும்பத்தில் சுரேஷின் முறைகேடான நடவடிக்கைகளினால் தினம் தினம் புயலடித்தது.

இரவானால் நண்பர்களுடன் சேர்ந்து போதைப் பொருட்களை பாவித்து விட்டு வீதியில் வீழ்ந்து கிடக்கும் அவனை அவன் தந்தை தான் கைத்தாங்கலாகப் பிடித்து வீடு கொண்டு வந்து சேர்ப்பார். சுரேஷ் போதைக்கு அடிமையாகிவிட்டானே என்ற கோபம் இருந்தாலும் அவன்மீது அலாதிப்பிரியம் அவருக்கு. பெற்ற மனம் அல்லவா?

அவ்வப்போது பொலிஸ் பிடித்துக் கொண்டு போகும் போது கூட அவனை அழைத்து வருபவரும் அவரே., நாட்களும் வேகமாக நகர்ந்தன. ஒரு நாள் பெண்ணொருவரை வீட்டிற்கு அழைத்து வந்த சுரேஷ் இவள் என் மனைவி என்று அறிகப்படுத்தி வைத்தான்.
மகனை எப்படியும் மீட்டு விடலாம் என்று நினைத்த பெற்றோருக்கு இது பேரிடியாக இருந்தது. ஏற்கனவே மகனின் முறைகேடான செயலால் பாதிப்படைந்த அந்த குடும்பம் சிதைந்து போனது. வெளியே போடா.. என்று அவனை கழுத்தைப் பிடித்துத் தள்ளாத குறையாக விரட்டியவர்கள் சமூதாயத்தை எதிர்கொள்ள தைரியம் இல்லாமல் வீட்டுக் கதவை அடைத்து வீட்டுக்குள்ளேயே இருந்தார்கள்.

சுரேஷால் மன ரீதியாக பாதிக்கப்பட்டவர்கள் இப்போது வேறொரு வீட்டிற்கு சென்று விட்டார்கள்.

உறவினர்களின் விஷேடங்களுக்கெல்லாம் முதலில் போய் நிற்கும் அவர்கள் தற்போது உறவினர்களை எதிர்கொள்ளத் தைரியம் இல்லாதவர்களாய் நடைப்பிணமாய் வாழ்ந்து வருகிறார்கள்.
ஆனால் சுரேஷை அவர்கள் யாரும் முற்றுழுதாக ஒதுக்கவில்லை. அதே சமயம் அவனை ஏற்றுக்கொள்ளவும் அவர்களுக்கு விருப்பமில்லை. அவனும் இப்போது வீட்டுக்கு வருவதுமில்லை.
எங்கே எப்படி இருக்கிறான் என்ற விபரம் கூட யாருக்கும் தெரியாது.
இன்று முழு உலகுமே முகங்கொடுக்கும் பிரச்சினைதான் போதைப் பொருள் பாவனை. இது தனி மனிதன், குடும்பம், சதாயம் என எல்லா வகையிலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதற்கு சுரேஷ் ஒரு நல்ல எடுத்துக் காட்டு.

சுரேஷின் போதைப் பொருள் பாவனையால் நல்ல கல்வி....
கௌரவமான வாழ்க்கை... சமூக அந்தஸ்து என எல்லாவற்றையும் இழந்து குடும்பத்தினாலும் உறவினர்களாலும் வெறுத்தொதுக்கப்பட்டு எங்கோ ஒரு மூலையில் வாழ்ந்து வருகிறான். அவனது தீய பழக்கம் அவனை மட்டுமல்லாமல் முழுக் குடும்பத்தையும் சிதைத்துவிட்டது.

உலக நாடுகள் எல்லாம் போதைப் பொருள் கடத்தலுக்கு எதிராகக் கடுமையான சட்டங்களைக் கொண்டு வந்து கட்டுப்படுத்தி வருகின்றன. ஆனால் ஹெரோயின், கஞ்சா போன்ற பொருட்களை விற்பதும் பிற நாடுகளுக்கு கடத்துவதும் இன்று வரையிலும் பெரும் இலாபம் தரும் தொழிலாக தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. இதற்குச் சுற்றுலாத் தலங்களிலும் வீதி ஒதுக்குப் புறங்களிலும் சிதறிக்கிடக்கும் மதுக்குப்பிகளும் வெற்று ஊசிகளுமே சிறந்த சான்றுகளாகும்.

இலங்கையிலும் போதைப் பொருள் பாவனை வீதம் அதிகத்து வருவதாக தேசிய போதைத் தடுப்பு சபை எச்சரித்துள்ளது. குறிப்பாக இளைஞர்களிடையே இப்பாவைனை சடுதியாக அதிகத்திருப்பதை அது சுட்டிக் காட்டியுள்ளது. அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றின் பிரகாரம் இலங்கையில் சுமார் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் போதைப் பொருளுக்கு நிரந்தரமாக அடிமையாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
பொதுவாக இலங்கையில் ஹெரோயின், கஞ்சா, அபின், மர்ஜுவானா ஆகிய நான்கு போதை தரும் பொருட்களே பாவனையிலுள்ளன.

இவற்றை 12 சதவீதமானோர் ஊசி மூலமே ஏற்றிக் கொள்கிறார்கள் என்றும் ஆய்வுகள் தெவிக்கின்றன.

இலங்கையில் அதிகம் பாவனையில் உள்ள போதைப்பொருளான கஞ்சா தற்போது பலவகைகளில் உள்ளது. கனாப்பிஸ் சற்றிவா (Cannabis Sativa) என்பது இதன் தாய்த்தாவரத்தின் பெயர். இலங்கையில் பரவலாகக் காணப்படுவது சாராஸ் (Charas) இனமாகும். இதில் முதிராத செடி மலர்களை தூளாக்கி சிகரட் மற்றும் பீடியுடன் சேர்த்துப் புகைப்பர். கஞ்சா பூவிலிருந்து வடியும் பிசினிலிருந்து காசிஸ் (Hashisa) எனப்படும் ஒருவகைத் தூள் சிகரட்டுகளாகச் செய்யப்பட்டு ஜொயின்ற்ஸ் (Joints) என்ற பெயரில் புகைக்கப்படுகிறது. அப்போது இதயம் படபடக்கும்; தசைகளும் துடித்த உளமாயத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.இதனை விட மிக அபாயகரமான விளைவை ஏற்படுத்தக்கூடியது ஹெரோயின் என்ற போதைப் பொருள். செந்நிறத்தூளாகக் காணப்படும் இது அதிக விலைக்கு விற்கப்படுகிறது. இது தவிர இலங்கையில் பாவனையிலுள்ள போதைப் பொருள்களில் இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளது.

அதே போன்று தான் சிகரெட் மதுபானம் ஆகியனவும் இளைஞர்கள் மத்தியில் பிரபலமான போதைப் பொருட்களாகவுள்ளன.
பொதுவாக போதைப் பொருட்களை உபயோகிப்போர் அதன் மூலம் ஒரு வித இன்ப உணர்வு ஏற்படுவதாக தெரிவிக்கின்றனர்.

இவர்களுக்கு ஏற்படும் இந்த இன்பம் கிட்டத்தட்ட ஆறு மணி நேரங்களுக்கே நீடிக்கும் அதன் பிறகு அவர்களுக்கு மன அழுத்தம் எளிதில் கோபமடைதல் நினைவாற்றலில் குறைபாடு போன்ற குணங்களை கொண்டவர்களாக மாறுவர் என தெவிக்கப்படுகிறது.

இலங்கையில் 12 சதவீதமான போதைப் பொருள் பாவனையாளர்கள் ஊசி மூலமே போதையேற்றுவதாக அறிக்கையொன்று தெரிவிக்கின்றது.இவர்கள் சக குடும்பப் பிரச்சினை, கல்வியில் தோல்வியடைதல், வேலையின்மை, நோய்த்தாக்கம், காதல் தோல்வி போன்ற பல காரணங்களுக்காக இந்தப் பழக்கத்திற்கு அடிமையாகிறார்கள்.
இது தவிர இதற்காக அவர்கள் சராசயாக செலவழிக்கும் பணம் நாளொன்றுக்கு 950 1000 ரூபா என்று மதிப்படப்பட்டுள்ளது.

வெளிநாடுகளிலிருந்து கொண்டு வரப்படும் ஹெரோயின் 1 டு, 3 மில்லியன் ரூபா பெறுமதியானது. இதில் 2 கிராமை சுமார் 500 பேர் பாவித்து போதை ஏற்றிக் கொள்ள முடியுமாம். வெளிநாடுகளில் வருடாந்தம் இலட்சக்கணக்கானோர் இதனால் பாதிக்கப்பட்டு தண்டனைக்கும் உள்ளாக்கப்படுகின்றனர்.

உலக போதைப்பொருள் பாவனையாளர்கள் தொடர்பான அறிக்கையின் புள்ளிவிபரப்படி உலகில் 2 கோடி பேர் ஹெரோயின் போதைப்பழக்கத்திற்கு அடிமையானவர்கள்.

இதில் அதிர்ச்சியான தகவல் என்னவெனில் தற்போது மேற்கத்திய நாடுகளில் போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை சதவிகிதத்தின் அடிப்படையில் குறையத் தொடங்கியுள்ளது. ஆனால் ஆசிய நாடுகளில் போதைப்பொருளுக்கு அடிமையானோரின் வீதம் அதிகமாகிக் கொண்டே செல்கின்றது. இதற்குக் காரணம் மேலைத்தேய நாடுகளில் ஏற்பட்டுள்ளதைப் போன்ற விழிப்புணர்வுகள் நம் நாடுகளில் இல்லாமல் போனமையாகும்..

இலங்கையில் திறந்த பொருளாதாரக் கொள்கை உல்லாசப் பயணிகளின் வருகை போன்ற காரணிகளால் நவீன போதைப் பொருட்கள் நாட்டினுள் பிரவேசிக்க ஆரம்பித்துள்ளன. இந்த போதைப் பொருட்கள் 1980 களில் இலங்கையில் பரவ ஆரம்பித்தாக தெவிக்கப்படுகிறது.

வரலாற்று ரீதியாக நோக்குமிடத்து போதைப் பொருள் பாவனை பண்டைய காலம் தொட்டே இருந்து வந்துள்ளதை அறிய முடிகின்றது. அபின், கஞ்சா, கள்ளு, சாராயம், கசிப்பு, பீடி, சிகரட், சுருட்டு என்பன மக்களால் சர்வ சாதாரணமாக பாவிக்கப்பட்டு வந்ததை நாம் தெரிந்து வைத்துள்ளோம்.
பொதுவாக களியாட்ட காலங்களில் மக்கள் போதை தரும் பான வகைகளை பயன்படுத்தியுள்ளனர்.

தற்போது அவை விஞ்ஞான வளர்ச்சி காரணமாக நவீன உருவில் தயாரிக்கப்பட்டு சர்வதேச தியில் பல நாடுகளுக்கும் கடத்தப்படுகின்றன. இதற்கான சர்வதேச கடத்தல் பாதைகளும் உள்ளன. சில நாடுகளின் பொருளாதாரம் போதைப் பொருள் வியாபாரத்திலேயே தங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. போதைப் பொருட்களை ஊசி மூலம் உடலில் செலுத்தும் பழக்கம் தீவிர பாவனையாளர்களிடம் பரவலாகவே காணப்படுகிறது. இதன் மூலம் எயிட்ஸ் வைரஸ்களும் தொற்றிக் கொள்ள வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

இவற்றைத் தவிர போதைப் பொருள் பாவனையால் பசியின்மை, உடல்நிறை குறைதல், நரம்பு மண்டல பாதிப்பு, கண் பார்வை குறைதல், நரம்பு உணர்ச்சி குறைதல், உதடு கறுத்தல், ஆண்மை குறைவு போன்ற பல நோய்கள் ஏற்படுகின்றன.

ஒட்டு மொத்த சதாயத்தையும் பாதிக்கவல்ல இந்த போதைப் பொருளை முற்றிலுமாக ஒழிக்கும் நடவடிக்கையில் உலக நாடுகள் அனைத்தும் முனைப்புடன் செயற்பட்டு வருகின்றது. இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்கிறது ஜுன் 26 ஆம் திகதி அனுஷ்ட்டிக்கப்படும் உலக போதைப் பொருள் ஒழிப்பு தினம். இது தவிர போதைப் பொருள் கடத்தலுக்காக சில அரசுகள் மரண தண்டனையையும் சட்டமாகப் பிரயோகித்து வருகின்றன.

இதே போல் இலங்கையில் போதைப் பொருள் பாவனையை ஒழிப்பதற்காக போதைத் தடுப்பு பணியகம் ஆரம்பிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

ஆனாலும் இந்த முறைகேடான பழக்கத்தை முற்று முழுதாக ஒழிக்க அனைவரதும் ஒத்துழைப்பு அவசியமாகும்.

புதிதாக அப்பாவனைக்கு அடிமைப்படாமல் இளம் சதாயத்தை பாதுகாப்பது என்ற நோக்கிலே அரசாங்கங்கள் பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றன. என்ற போதும் இலங்கையில் நடைமுறையில் உள்ள சட்டங்களைப் பொறுத்தவரை இப் பாவனையை தடுத்து நிறுத்தப் போதுமானதாக இல்லை. எனவே இதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு மிக மிக அவசியமாகிறது.

இந்த போதைப் பொருள் பாவனை சிறுபராயத்திலியே ஏற்பட்டு விடுவதால் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் விடயத்தில் அவதானமாக இருக்க வேண்டும். குறிப்பாக அவர்கள் தனிமையை விரும்பினால் அடிக்கடி பணம் கேட்டால், படிப்பில் நாட்டம் குறைந்தால் உரையாடல்களில் மாற்றம் தெரிந்தால் வழக்கத்திற்கு மாறாக நடவடிக்கை தென்படுமாயின் அவர்களை சற்று கூர்ந்து அவதானிப்பது சிறந்தது.

உண்மையிலே அவர் போதைப் பொருளுக்கு அடிமையாகியிருந்தால் ஆரம்பத்திலே இனங்காண்பதன் மூலம் முளையிலேயே கிள்ளி எறிந்து விடாலாம்.

முக்கியமாக இன்றைய இளம் சதாயத்தினர் இணையதளத்தை தங்கள் உலகமாகக் கருதி வாழ்வதால் அடிக்கடி அவர்கள் பார்க்கும் இணைய தளங்கள் குறித்து பெற்றோர் விழிப்புடன் இருக்கவேண்டும். இவற்றைத்தவிர சிறுவயதிலிருந்தே இசையில் அதிக நாட்டத்தை ஏற்படுத்தல் பத்திரிகை வாசித்தல் விளையாடுதல் இறைவழிபாடு செய்தல் போன்ற பழக்கவழக்கங்களை கற்றுக் கொடுத்தல் சிறந்தது. இதன் மூலம் எங்கள் குழந்தைகளை நாமே பாதுகாத்துக் கொள்ளலாம்.

மாறாக அவர்கள் யாராயினும் போதைப் பொருளுக்கு அடிமையாகிவிட்டார்கள் எனின் மருத்துவர்களினதும் உள வளத்துணையாளர் களினதும் ஆலோசனைப்படி செயலாற்றுவது நல்ல பலனைக் கொடுக்கும். இது அவர்கள் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பிச் செல்லாமல் இருக்கவும் வழி சமைக்கும்.

ஆறுமணி நேர அற்ப சந்தோஷத்திற்காக தங்கள் வாழ்கையை பணயம் வைக்கும் இளைய சதாயத்தினரிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களை மீட்பது நம் அனைவரதும் கடைமையாகும். எனவே நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து போதை பொருள் பாவனையில்லாத சமூகத்தை உருவாக்குவோம். சுரேஷைப் போல இன்னொரு இளைஞன் நமது வீட்டிலும் உரு வாகாமல் விழிப்பாக இருப்போம்.

நன்றி.
ஆர். சரண்யா




 இளைஞர்களை விழுங்கும் போதை Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Thu Aug 12, 2010 5:14 pm

நல்ல கருத்துள்ள கட்டுரை அப்புகுட்டி.....நல்ல வேளை நான் போதைக்கு அட்மையாகலப்பா........ சியர்ஸ்

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Aug 13, 2010 3:34 am

gunashan wrote:நல்ல கருத்துள்ள கட்டுரை அப்புகுட்டி.....நல்ல வேளை நான் போதைக்கு அட்மையாகலப்பா........ சியர்ஸ்

வாழ்த்துக்கள் தொடர்ந்து அப்படியே இருங்கள் காலங் கெட்டுக்கெடக்கு கண்டியலே



 இளைஞர்களை விழுங்கும் போதை Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat Aug 21, 2010 12:31 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி




 இளைஞர்களை விழுங்கும் போதை Power-Star-Srinivasan
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Aug 25, 2010 5:54 pm

பிளேடு பக்கிரி wrote: அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
ஒன்னும் புரியல ஒன்னும் புரியல



 இளைஞர்களை விழுங்கும் போதை Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
megastar
megastar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 452
இணைந்தது : 26/07/2010
http://www.bmrafi.blogspot.com

Postmegastar Wed Aug 25, 2010 5:56 pm

அப்புகுட்டி wrote:
பிளேடு பக்கிரி wrote: அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
ஒன்னும் புரியல ஒன்னும் புரியல
ஏன் கண்ணெல்லாம் சொருகுது..



"பேசுகின்ற உதடுகளை விட கொடுக்கின்ற கைகளே புனிதமானது."
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Aug 25, 2010 5:57 pm

megastar wrote:
அப்புகுட்டி wrote:
பிளேடு பக்கிரி wrote: அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
ஒன்னும் புரியல ஒன்னும் புரியல
ஏன் கண்ணெல்லாம் சொருகுது..

பார்ட்டி மப்புல இருக்கு சிரி சிரி




 இளைஞர்களை விழுங்கும் போதை Power-Star-Srinivasan
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Aug 25, 2010 5:58 pm

megastar wrote:
அப்புகுட்டி wrote:
பிளேடு பக்கிரி wrote: அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
ஒன்னும் புரியல ஒன்னும் புரியல
ஏன் கண்ணெல்லாம் சொருகுது..

அவர் ஏன் முளிக்கிறார் அதான் எனக்கு ஒன்றும் புரியல என்று சொன்னேன் சைகை ஒன்னும் புரியல



 இளைஞர்களை விழுங்கும் போதை Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Aug 25, 2010 6:00 pm

பிளேடு பக்கிரி wrote:
megastar wrote:
அப்புகுட்டி wrote:
பிளேடு பக்கிரி wrote: அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
ஒன்னும் புரியல ஒன்னும் புரியல
ஏன் கண்ணெல்லாம் சொருகுது..

பார்ட்டி மப்புல இருக்கு சிரி சிரி

அது சரி சொல்லவே இல்ல ஜாலி



 இளைஞர்களை விழுங்கும் போதை Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Aug 25, 2010 6:02 pm

அப்புகுட்டி wrote:
பிளேடு பக்கிரி wrote:
megastar wrote:
அப்புகுட்டி wrote:
பிளேடு பக்கிரி wrote: அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
ஒன்னும் புரியல ஒன்னும் புரியல
ஏன் கண்ணெல்லாம் சொருகுது..

பார்ட்டி மப்புல இருக்கு சிரி சிரி

அது சரி சொல்லவே இல்ல ஜாலி

நான் உங்களை சொன்னேன் சிரி சிரி




 இளைஞர்களை விழுங்கும் போதை Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக