ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» மயானங்களைப் புதுப்பிக்கும் தொழிலதிபர்!
by T.N.Balasubramanian Today at 4:27 pm

» எதுவும் சுலபமில்லை, ஆனால்…
by T.N.Balasubramanian Today at 4:25 pm

» இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை..
by T.N.Balasubramanian Today at 4:14 pm

» பிக்பாஸ் பிரபலங்கள் இணையும் புதிய படம்
by ayyasamy ram Today at 2:46 pm

» கீர்த்தி சுரேஷ் தூங்கும்போது செல்பி எடுத்த ஹீரோ
by ayyasamy ram Today at 2:42 pm

» விஜய் சேதுபதி படப்பிடிப்புக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு... ஏன் தெரியுமா?
by ayyasamy ram Today at 2:38 pm

» ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார்
by ayyasamy ram Today at 2:34 pm

» புயல் சின்னம் வலுவடைந்தது- இந்திய வானிலை ஆய்வு மையம்
by ayyasamy ram Today at 2:30 pm

» வெள்ளை யானை - ஜெயமோகன் ஒலி புத்தகம்
by Guest Today at 1:03 pm

» மனிதன் மனிதனாக வாழ்வதற்கு…
by ayyasamy ram Today at 12:20 pm

» மீண்டும் மீண்டும் பார்க்கத் தோன்றும் அழகிய புகைப்படங்கள் :-)
by ayyasamy ram Today at 12:15 pm

» ஏன் கழற்றினாய்? – கவிதை
by ayyasamy ram Today at 12:11 pm

» எனக்கு இன்னொரு பேரும் இருக்கு! – பாப்ரி கோஷ்
by ayyasamy ram Today at 10:12 am

» துரியனின் பக்கபலம் கர்ணன்!
by ayyasamy ram Today at 10:04 am

» சிப்பிக்குள ஒரு முத்து
by ayyasamy ram Today at 10:03 am

» முறைகேடுகளில் ஈடுபடும் அரசு ஊழியர் முழு சொத்தையும் பறிமுதல் செய்யவேண்டும்: ஐகோர்ட் கிளை அதிரடி கருத்து
by SK Today at 9:47 am

» புதுமை விரும்பி கே.பாலசந்தர்
by ayyasamy ram Today at 9:17 am

» கே பாலசந்தர் பற்றிய சுவாரஸ்யங்கள்
by ayyasamy ram Today at 9:11 am

» ஆஷா சரத் மகள் அறிமுகம்
by ayyasamy ram Today at 8:39 am

» தாம்பரம், செம்பாக்கம், செம்மஞ்சேரியில் இருந்து வரும் மழைநீர் செல்ல 15 கி.மீ நீளத்துக்கு ரூ.581 கோடி செலவில் பெரிய கால்வாய் அமைக்க திட்டம்
by ayyasamy ram Today at 8:34 am

» பா.ஜ., வை வீழ்த்த புதிய ஆயுதம் கையில் எடுக்கிறது திரிணமுல்
by ayyasamy ram Today at 8:26 am

» ஜோ பைடனுக்கு காலில் எலும்பு முறிவு; நாயுடன் விளையாடியபோது விபத்து
by ayyasamy ram Today at 8:21 am

» தைரியம் இருந்தால் நடவடிக்கை எடுங்கள் பாக்., பிரதமர் இம்ரானுக்கு மரியம் சவால்
by ayyasamy ram Today at 8:19 am

» கொரோனா பரிசோதனை கட்டணம் டில்லியில் ரூ.800 ஆக குறைந்தது
by ayyasamy ram Today at 8:16 am

» வர இருக்கும் திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» மனதை வெற்றி கொள். - -ஸ்ரீஅன்னை
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» பெண்கள் முன்னேற்றமே என் மூச்சு!
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» இந்தியா-ஆஸ்திரேலியா போட்டிக்கு நடுவே, காதலிக்கு ப்ரபோஸ் செய்த இந்தியர், வைரல் வீடியோ!
by T.N.Balasubramanian Yesterday at 8:43 pm

» கிட்னி பெய்லியருக்கு சிறந்த சித்த மருத்துவம் எங்கு உள்ளது
by T.N.Balasubramanian Yesterday at 8:40 pm

» உபரிநீர் திறக்கப்பட்டபோது செடி, கொடிகள் சிக்கியது; மதகுகளை மூடமுடியாமல் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 21 அடிக்கு கீழ் சரிந்தது: மழைநீரை தேக்க முடியாத அவலம்
by T.N.Balasubramanian Yesterday at 8:39 pm

» நீளமான முடி: கின்னஸ் சாதனை படைத்த பெண்
by சக்தி18 Yesterday at 8:31 pm

» சஸ்பென்ஸ் நீடிப்பு... விரைவில் முடிவு எடுப்பதாக ரஜினிகாந்த் பேட்டி
by சக்தி18 Yesterday at 8:17 pm

» இனிப்பை விற்க 120 கிமீ சைக்கிள் பயணம்!
by சக்தி18 Yesterday at 8:03 pm

» 20 நாட்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,784 குறைந்தது
by T.N.Balasubramanian Yesterday at 6:59 pm

» ஐஏஎஸ் அதிகாரி சகாயம் விவகாரம் ! தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு !!
by T.N.Balasubramanian Yesterday at 6:17 pm

» சினிமா அமைப்புக்கு தூதராக ஏ.ஆர்.ரகுமான் நியமனம்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» நேற்று 31 மாவட்டங்களில் கொரோனாவுக்கு ஒருவர் கூட பலியாகவில்லை !
by ayyasamy ram Yesterday at 5:16 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» ஐமுகமுழவு/குடமுழா - தோற்கருவி
by T.N.Balasubramanian Yesterday at 4:17 pm

» காலம் - ஒரு வரலாற்றுச் சுருக்கம் - ஸ்டீஃபன் ஹாக்கிங் புத்தகம் இருந்தால் பகிரவும்
by Guest Yesterday at 2:06 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 1:43 pm

» மற்ற ஆல்-ரவுண்டர்களையும் வளர்ப்பது அவசியம்: ஹர்திக் பாண்ட்யா
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» வெள்ளை மாளிகையின் சுற்றுச்சூழல் தலைவராக இஸ்லாமியரை நியமிக்க ஜோ பைடன் முடிவு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:02 pm

» தொடத் தொடத் தொல்காப்பியம்(492)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:48 pm

» ஊரடங்கு புதிய தளர்வுகள்:
by ayyasamy ram Yesterday at 11:22 am

» ரமணீயன் கவிதைகள்
by T.N.Balasubramanian Yesterday at 10:17 am

» அமெரிக்க பள்ளிகளில் இந்திய வன மனிதன்!
by ayyasamy ram Yesterday at 9:37 am

» சாலைப் பள்ளி (Road Schooling) என்னும் புதிய கல்வி முறை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நம்பினால் நம்புங்கள் ஒரு ஹேண்ட் பேக் விலை ரூ.53 கோடி
by ayyasamy ram Yesterday at 8:59 am

» அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை உலகிலேயே மிகவும் சிறிய மெமரி சிப் கண்டுபிடிப்பு: பிளாஷ் மெமரி சிப்பை தூக்கி சாப்பிடும்
by ayyasamy ram Yesterday at 8:51 am

Admins Online

தாய்பால் இப்படித்தான் தயாராகிறது…!

Go down

தாய்பால் இப்படித்தான் தயாராகிறது…! Empty தாய்பால் இப்படித்தான் தயாராகிறது…!

Post by கார்த்திக் on Tue Sep 14, 2010 9:34 am

தாய்பாலின் மகத்துவத்தை பற்றிக் கூற வேண்டியதில்லை. பிறந்த குழந்தைக்கு இயற்கையான உணவு, ஊட்டச்சத்து, நோய் எதிர்ப்புக் கவசம் அது. மார்பகங்களின் அமைப்பு எப்படி இருக்கும்? தாய்பால் எப்படி தயாராகும் என்பதை நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
ஒரு நாளைக்கு ஒன்றரை லிட்டர்

* தாய்பால் கொடுக்கும் ஒரு தாய்க்கு ஒரு நாளைக்கு அரை லிட்டர் முதல் ஒன்றரை லிட்டர் வரை பால் சுரக்கிறது.

* குழந்தை பாலை உறிஞ்சும்போது பிட்யூட்டரி சுரப்பி, `ஆக்சிடோசின்’, `புரோலாக்டின்’ ஆகியவற்றை உற்பத்தி செய்கிறது, பால் உற்பத்தியைத் தூண்டுகிறது.

* ரத்தத்தில் இருந்து குளுக்கோஸை கிரகிப்பதற்கு பால் சுரபிகளை `புரோலாக்டின்’ தூண்டு கிறது. அந்த குளுக்கோஸானது லாக்டோஸாகவும் மற்ற சர்க்கரை களாகவும் மாற்றபடுகிறது. கால்சியம், அமினோ அமிலங்கள், புரதங்கள், கொழுப்பு ஆகியவையும் பெறப்படுகின்றன.

* பால் சுரபிகள் சுருங்கி, பால் நாளங் களுக்குள் பாலைச் செலுத்துவதை `ஆக்சிடோசின்’ தூண்டுகிறது.

* ஆரம்பத்தில் சுரக்கும் பால் அடர்த்தி குறைவானது. குழந்தையின் தாகத்தைத் தணிக்கிறது.

* பல நிமிடங்கள் கழித்துச் சுரக்கும் `சீம் பால்’, அடர்த்தியானது. அதிக கொழுப்பு உள்ள அது பசியை போக்குகிறது.

ஆண்களுக்கும் மார்பக புற்றுநோய்

ஆண்கள் தங்களின் மார்பகக் காம்புகளுக்கு பின்னே வேலை செய்யாத மார்பகத் திசுக் களைக் கொண்டிருக்கின்றனர். அதாவது, வளர்ச்சி அடையாத பால் நாளங்கள், கொழுப்பு மற்றும் இணைப்புத் திசு. ஆண்களில் 1000 பேரில் ஒருவருக்கு மார்பக புற்றுநோய் ஏற்படும் அபாயம் இருக்கிறது. அபாயக் காரணிகளில், பாரம்பரியம், கதிரியக்கதுக்கு உள்ளாகும் வாய்ப்பு போன்றவை அடங்கும்.

முழுமையான உணவு

* குழந்தைக்கு மிகவும் ஜீரணமாகக் கூடிய, கிரகித்துக்கொள்ளக் கூடிய விதத்தில் உள்ள தாய்பால், குழந்தைக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளையும் கொண்டுள்ளது. குழந்தைக்கு 6 மாதங்கள் வரை கட்டாயமாக பால் கொடுக்க வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைக்கிறது.

* மஞ்சள் புரதம் செறிந்த பால், குழந்தை பிறந்த முதல் சில நாட்களுக்கு சுரக்கிறது. அது குழந்தையின் உணவுக் குழலைச் சுத்தம் செய்கிறது, எதிர்உயிரிகளைக் கொண்டிருக்கிறது. குழந்தைக்கு இந்த பாலைக் கொடுப்பது அவசியம்.

* தாய்பால் கொடுப்பது, கர்ப பை மீண்டும் தனது உண்மையான அளவுக்கு சுருங்க உதவுகிறது, எடை இழப்பை ஊக்குவிக்கிறது.

சிறுவர்களும், சிறுமிகளும்…

சிறுவர், சிறுமியர் இருவருக்குமே மார்புக் காம்புக்கு பின் பால் நாளங்கள் இருக்கின்றன. சிறுமிகள் வயதுக்கு வரும்போது `ஈஸ்ட்ரோஜென்’னும் மற்ற ஹார் மோன்களும் பால் நாளங்களை வளரச் செய்கின்றன. கொழுப்பையும், இணைப்புத் திசுக்களையும் அதிகரிக்கச் செய்கின்றன. சிறுவர்களிடம் `டெஸ்ட்டோஸ்டிரான்’ அந்த வளர்ச்சியைத் தடுக்கிறது.

இரு மார்புகளும் ஒரே அளவல்ல…!

சிகரெட்டின் நிகோட்டின், ஆல்கஹால் மற்றும் பல மருந்துகள் தாய்பால் வழியாகக் குழந்தைக்குச் செல்லக்கூடும். தீங்குகளையும் ஏற்படுத்தக்கூடும்.

தாய்பாலானது பசுவின் பாலை விட இனிமையானது, அடர்த்தி குறைந்தது.

பெண் கடவுள் ஹேராவின் மார்பகத்தில் இருந்து உதிர்ந்த பால் துளிகளால் `பால் வீதி மண்டலம்’ உருவானதாக பண்டைய கிரேக்கர்கள் கருதி அப்பெயரைச் சூட்டினர்.

பெண்களின் இடது மார்பகம், வலது மார்பகத்தை விடச் சற்று பெரிதானது.

மார்பகத்தை அறுவைச் சிகிச்சையின் மூலம் நீக்குவது `மாஸ்டெக்டோமி’ எனபடுகிறது.

மார்பக பிரச்சினைகள்

சிஸ்ட்கள் – மார்பகத்தில் உருவாகும் நீர் நிறைந்த கட்டிகள்.

பைரோடினோமா – இழையும், உருளையுமான திசுக்களால் உருவான உறுதியான கட்டிகள்.

காலக்டோரியா – அளவுக்கு அதிகமான தாய்பால் உற்பத்தி.

கைனகோமேஸ்டியா – ஆண்களுக்கு மார்பகம் பெரிதாவது.

மஸ்டிடிஸ் – பால் நாளங்களில் அடைப்பு ஏற்படுவது.

மாஸ்டால்ஜியா – மாதவிலக்குக்கு முன் வலி அல்லதுதொளதொள தன்மை காணப்படுவது.

மார்புக் காம்பு பேசட்ஸ் வியாதி – மார்புக் காம்பில் ஒருவித சுரப்புடன் தெரியும் புற்றுநோய் அறிகுறி.

மார்பக புற்றுநோய் – பால் நாளங்கள், சுரபிகள் உள்ளிட்ட மார்பகத் திசுக்களில் உருவாகும் புற்றுநோய்.

நன்றி- தினத்தந்தி
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
மதிப்பீடுகள் : 45

Back to top Go down

தாய்பால் இப்படித்தான் தயாராகிறது…! Empty Re: தாய்பால் இப்படித்தான் தயாராகிறது…!

Post by சபீர் on Tue Sep 14, 2010 9:47 am

மிகவும் பயனுள்ள பதிவை பகிர்ந்தமைக்கு அன்பு நன்றிகள் தாய்பால் இப்படித்தான் தயாராகிறது…! 677196
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
மதிப்பீடுகள் : 138

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

தாய்பால் இப்படித்தான் தயாராகிறது…! Empty Re: தாய்பால் இப்படித்தான் தயாராகிறது…!

Post by கார்த்திக் on Tue Sep 14, 2010 9:50 am

@சபீர் wrote:மிகவும் பயனுள்ள பதிவை பகிர்ந்தமைக்கு அன்பு நன்றிகள் தாய்பால் இப்படித்தான் தயாராகிறது…! 677196

நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
மதிப்பீடுகள் : 45

Back to top Go down

தாய்பால் இப்படித்தான் தயாராகிறது…! Empty Re: தாய்பால் இப்படித்தான் தயாராகிறது…!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum