புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முதியோர் செக்ஸ் ஆராய்ச்சி... Poll_c10முதியோர் செக்ஸ் ஆராய்ச்சி... Poll_m10முதியோர் செக்ஸ் ஆராய்ச்சி... Poll_c10 
83 Posts - 55%
heezulia
முதியோர் செக்ஸ் ஆராய்ச்சி... Poll_c10முதியோர் செக்ஸ் ஆராய்ச்சி... Poll_m10முதியோர் செக்ஸ் ஆராய்ச்சி... Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
முதியோர் செக்ஸ் ஆராய்ச்சி... Poll_c10முதியோர் செக்ஸ் ஆராய்ச்சி... Poll_m10முதியோர் செக்ஸ் ஆராய்ச்சி... Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
முதியோர் செக்ஸ் ஆராய்ச்சி... Poll_c10முதியோர் செக்ஸ் ஆராய்ச்சி... Poll_m10முதியோர் செக்ஸ் ஆராய்ச்சி... Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
முதியோர் செக்ஸ் ஆராய்ச்சி... Poll_c10முதியோர் செக்ஸ் ஆராய்ச்சி... Poll_m10முதியோர் செக்ஸ் ஆராய்ச்சி... Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
முதியோர் செக்ஸ் ஆராய்ச்சி... Poll_c10முதியோர் செக்ஸ் ஆராய்ச்சி... Poll_m10முதியோர் செக்ஸ் ஆராய்ச்சி... Poll_c10 
1 Post - 1%
rajuselvam
முதியோர் செக்ஸ் ஆராய்ச்சி... Poll_c10முதியோர் செக்ஸ் ஆராய்ச்சி... Poll_m10முதியோர் செக்ஸ் ஆராய்ச்சி... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முதியோர் செக்ஸ் ஆராய்ச்சி... Poll_c10முதியோர் செக்ஸ் ஆராய்ச்சி... Poll_m10முதியோர் செக்ஸ் ஆராய்ச்சி... Poll_c10 
23 Posts - 88%
T.N.Balasubramanian
முதியோர் செக்ஸ் ஆராய்ச்சி... Poll_c10முதியோர் செக்ஸ் ஆராய்ச்சி... Poll_m10முதியோர் செக்ஸ் ஆராய்ச்சி... Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
முதியோர் செக்ஸ் ஆராய்ச்சி... Poll_c10முதியோர் செக்ஸ் ஆராய்ச்சி... Poll_m10முதியோர் செக்ஸ் ஆராய்ச்சி... Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முதியோர் செக்ஸ் ஆராய்ச்சி...


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat Oct 30, 2010 6:40 am

ஆசைகள் ஓய்வதில்லை...

சமீபகாலமாக பேப்பரைப் புரட்டினாலே, ‘அறுபது வயது முதியவர், இளம் பெண்ணிடம் சில்மிஷம்... எழுபது வயதுக்காரர், எட்டு வயதுச் சிறுமியை மானபங்கப்படுத்தினார்... ஐம்பது வயது ஆசிரியர், பதினாறு வயது மாணவியிடம் செக்ஸ் குறும்பு’ என்பது போன்ற அதிர்ச்சி செய்திகள்தான் அதிகம் கண்ணில் படுகின்றன. அதிலும் நொய்டா போன்ற சம்பவங்கள் ரத்தத்தையே உறைய வைத்துவிடுகிறது. வயதானவர்கள் ஏன் இத்தகைய இழிசெயல்களில் ஈடுபட்டு, அதுவரை தாங்கள் கட்டிக்காத்து வந்த மதிப்பையும் மரியாதையையும் கெடுத்துக் கொள்கிறார்கள்? பாலியல் தொடர்பாக அவர்களுக்குள் அப்படி என்ன பிரச்னைகள் ஏற்படுகின்றன என்பதை அறிய, பாலியல் நிபுணர் டாக்டர் நாராயண ரெட்டியைச் சந்தித்தோம்...

‘‘வயதானவர்கள் குறித்த பல விஷயங்களை நாம் மறுபரிசீலனை செய்ய வேண்டிய கால கட்டத்துக்கு வந்திருக்கிறோம் என்பதே உண்மை. கடந்த நான்காம் தேதி ஹைதராபாத்தில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கம் ஒன்றில் கலந்துகொண்டு ‘இந்தியாவில் வயோதிகமும் பாலியல் நாட்டமும்’ என்ற தலைப்பில் ஒரு ஆய்வுக்கட்டுரையை வெளியிட்டுள்ளேன். ஐம்பது வயதைத் தாண்டிய இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டவர்களிடம் பாலியல் ஈடுபாடு, பழக்கங்கள் பற்றி நான் மேற்கொண்ட அந்த ஆய்வின் போதுதான் பல உண்மைகள் எனக்குத் தெரிய வந்தது.

தற்போது உலகம் முழுக்கவே மனிதர்களின் ஆயுள் காலம் அதிகரித்து வருகிறது. 1950-ல் சராசரி இந்தியரின் ஆயுள்காலம் ஆணுக்கு நாற்பதாகவும் பெண்ணுக்கு முப்பத்தெட்டுமாக இருந்தது. நாளுக்குநாள் மருத்துவத் துறையில் ஏற்பட்டு வரும் மகத்தான வளர்ச்சியினால் மனிதர்களின் ஆயுள் காலம் 1995-ல் ஆணுக்கும், பெண்ணுக்கும் அறுபதாக உயர்ந்தது. கடைசியாக 2003-ல் எடுக்கப்பட்ட புள்ளிவிவரக் கணக்குப்படி ஆணின் சராசரி ஆயுள் அறுபத்து மூன்றாகவும், பெண்ணின் ஆயுட்காலம் அறுபத்து ஐந்தாகவும் அதிகரித்துள்ளது. வாழ்நாள் அதிகரிக்கும்போது, மனிதர்களின் காம ஆசை மட்டும் எப்படி நீர்த்துப் போகும்?

ஐம்பது வயதிலிருந்து தொண்னூறு வயது வரையிலான ஆண், பெண் என இருபாலரிடமும் அவர்களது பாலியல் பழக்கங்கள், விருப்பங்கள், தேவைகள் குறித்து மணிக்கணக்கில் பேசி, பல்வேறு விதமான தகவல்களைச் சேகரித்தோம்’’ என்ற டாக்டர் நாராயண ரெட்டி, அடுத்து தனது ஆய்வில் கிடைத்த புள்ளிவிவரங்களை முன்வைத்துப் பேச ஆரம்பித்தார்.

‘‘இந்த ஆய்வில் பங்கேற்றோரில் பெரும் பாலோனோர் 25 வயது முதல் 29 வயதுக்குள் தங்கள் முதல் பாலியல் அனுபவத்தைப் பெற்றி ருக்கிறார்கள். இதில் 53 சதவிகிதம் பேர் திருமணத்துக்குப் பின் தங்கள் துணையுடனும், 47 சதவிகிதம் பேர் திருமணத்துக்கு முன்பே பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ளோர் மற்றும் நெருங்கிய உறவினர்களிடமும் உறவு வைத் திருந்துள்ளனர். 50 முதல் 59 வயது வரையிலானவர்கள் சராசரியாக மாதத்துக்கு பத்து முறை உறவு வைத்துக்கொள்கிறார்கள். 60 முதல் 69 வயது வரையிலானவர்கள் மாதத்துக்கு மூன்று முறை வரை உறவு கொள்கிறார்கள். இந்த முடிவு களின்படி காமம் அனுபவிக்க வயது ஒரு தடையில்லை என்பது நிரூபணமாகிறது.

வயதாகி விடுவதால் ஆசை குறைவதில்லை. மாறாக, கணவன்-மனைவிக்கு இடையில் நெருக்கம் அதிகமாகத் தேவைப்படுகிறது. நடைமுறையில் நமது சமுதாயம் வயதானவர்களின் தேவைகளை சரிவர அறிந்து கொள்வதில்லை. ஏதோ சாப்பாடு போட்டுவிட்டால், மூலையில் முடங்கிக் கிடந்து விடுவார்கள் என்று நினைத்துக் கொள்கிறார்கள். சொத்துக்களைப் பிரித்துக் கொள்வதுபோல, ‘அம்மா என்கூட இருக்கட்டும், அப்பாவை நீ பார்த்துக் கொள்’ என சகோதரர்கள் பெற்றவர்களையே கூறுபோட்டு விடுகிறார்கள். இதனால் வயதானவர்கள் தவித்துப் போய்விடுகிறார்கள். வயதான காலத்தில் கணவன்-மனைவி இருவரும் இணைந்து இருப்பது தான் ஒருவருக்கு ஒருவர் பலமாக இருக்கும். ஏனோ படித்த பிள்ளைகள்கூட இந்த விஷயத்தைப் புரிந்துகொள்ள மறுக் கிறார்கள்.

இதைவிடக் கொடுமை... கூட்டுக் குடும்பமாக இருப்ப வர்கள், தாங்கள் சுகத்தை அனுபவிக்க, குழந்தைகள் இடைஞ்சலாக இருக்கக் கூடாது என்பதால் தாத்தா, பாட்டியிடம் போய் படுத்துக்கொள்ளுங்கள் என்று குழந்தைகளைப் பெரியவர்களிடம் தள்ளிவிட்டு விடுகிறார்கள். இதனால் வயதான தம்பதியினர் சந்தோஷமாக இருக்க முடிவதில்லை.

‘காமம் மறுக்கப்படும் போதும், தடுக்கப்படும்போதும் மனரீதியாகப் பிரச்னைகள் ஏற்படுகிறது’ என வாத்சாயனர் சொல்லியிருக்கிறார். வயதானவர்களுக்குத் தேவைப்படும் பாலியல் இன்பம் கிடைக்காதபோது அவர்களுக்கு மன அழுத்தமும், எரிச்சலும் அதிகரிக்கிறது. அதனால் அதிகமாகக் கோபப்படுகிறார்கள். வெறுப்பு காட்டுகிறார்கள். இதில் சிலர் கடைசியில், காமத்துக்கு வடி காலாக வெளியில் விலைமாதர்களிடம் சென்று ஹெச்.ஐ.வி. போன்ற ஆபத்துகளில் சிக்கிக்கொள்கிறார்கள். அல்லது ஏடாகூடமாக எங்கேயாவது சென்று பிளாக்மெயில் செய்யும் கும்பலிடம் மாட்டிக்கொள்கிறார்கள். இன்னும் சிலர் வீடுகளில் உள்ள குழந்தைகளை பாலியியல்ரீதியாகத் துன்புறுத்தும் தவறுகளிலும் ஈடுபடுகிறார்கள். அதுவே அவர்களைக் கொலைசெய்வது வரை கொண்டுபோய் நிறுத்திவிடுகிறது.

காமம் உடல் ஆரோக்கியத்துக்கு நலம் சேர்க்கிற விஷயம். அதை அனுபவிக்கும்போது சுரக்கும் என்டார்மின் அமிலம், உடல்வலியை போக்குகிறது. ஹீமோகுளோபின் அதிகரிப்பதால், இதயம் பாதுகாக்கப் படுகிறது. வயதாகி விடுவதால் ஆசை குறைவதில்லை, மாறாக வேகம் வேண்டுமானால் குறையலாம்.

இந்த நேரத்தில் ராமகிருஷ்ண பரமஹம்சர் சொன்ன கதை ஒன்று எனக்கு ஞாபகத்துக்கு வருகிறது. ‘இரண்டு துறவிகள் ஆற்றைக் கடந்து போக வேண்டியிருந்தது. அதில் ஒருவர் வயதான துறவி, இன்னொருவர் இளந்துறவி. இருவரும் ஆற்றைக் கடக்கும்போது ஒரு பெண்மணி, ‘ஆற்றில் தண்ணீர் அதிகமாக ஓடுகிறது. அந்தக் கரைக்கு செல்ல பயமாயிருக்கிறது. கொஞ்சம் உதவி செய்யுங்கள்’ என்று கெஞ்சிக் கேட்டிருக்கிறாள். வயதான துறவி, ‘ஐயையோ! நாங்கள் துறவிகள். பெண் களைத் தொடக் கூடாது’ என மறுத்து விட்டார். இளந் துறவியிடம் கேட்டபோது, அவர் உதவ முன்வந்து அந்தப் பெண்ணைத் தோளில் தூக்கி உட்காரவைத்துக் கரை சேர்த்தார். கரையில் பெண்ணை விட்டுவிட்டு இருவரும் தங்களது பயணத்தைத் தொடர்ந்தனர். பயணம் முழுக்க மூத்த துறவி& இளந்துறவியைப் பார்த்து, ‘நீயெல்லாம் துறவியா? பெண்களை நாம் தொடலாமா?’ என திட்டியபடியே வந்தார். கடைசியில் வாய்திறந்த அந்த இளந்துறவி, ‘நான் அந்தப் பெண்ணை அப்போதே இறக்கி விட்டுவிட்டேன். நீங்கள் ஏன் இன்னும் சுமந்துகொண்டிருக்கிறீர்கள்?’ என்று கேட்டார். இந்தக் கதையில் வருவதைப் போலத்தான் மனித வாழ்க்கையும். காமத்தைப் பற்றி வெறுமனே நினைத்துக்கொண்டிருந்தால், அது மன நோய்களைத்தான் உருவாக்கும். வயதானவர்களுக்கும் வடிகால் அவசியம் என்பதை நாம் உணர்ந்து கொண்டால், பாதி பாலியல் குற்றங்கள் குறைந்துவிடும்’’ என்றார்.

கருத்தில் கொள்ள வேண்டிய விஷயம்தான். ‘நொய்டா’ கொலைகளுக்கு காரணம் என்ன?

"நொய்டா குழந்தைக் கொலைகாரனுக்கும் செக்ஸ் வடிகால் இல்லாததால் வந்த மனக் கோளாறுதானா?" என்று டெல்லி போலீஸாரிடம் கேட்டபோது, அவர்கள் அதை மறுக்கிறார்கள்.

"அவன் விஷயத்தில் 'பாரஃபீலியா' என்ற மனக் குழப்பம் இருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். இது செக்ஸ் வக்கிரத்தின் மிகக் கொடூரமான பரிமாணம். இந்த மனக் குழப்பம் இருப்பவர்கள், பெரும்பாலும் தங்கள் செக்ஸ் வக்கிரங்களை எதிர்ப்பே காட்டாத குழந்தைகளிடம்தான் காட்டுவார்கள். முதல் நிலையாக ஒரு குழந்தையைக் குறி வைத்துவிட்டால், அதைத் தூர இருந்தே பார்த்து ரசிப்பார்கள். பிறகு, அந்தக் குழந்தை தங்கள் படுக்கையில் இருப்பதுபோல் கற்பனை உலகத்தில் மிதந்து அதிலேயே தனி சுகம் காண்பார்கள். அதன்பிறகு நிஜமான ஆக்ஷனில் இறங்குவார்கள். ஆனால், இது சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்கக்கூடிய மனநோய் என்று சொல்ல முடியாது. ஏனென்றால், மிகமிக நிதானமாக, கவனமாக திட்டமிட்டே தாக்குதலில் இவர்கள் இறங்குவார்கள். பொருந்தாத வயதினருடன் செக்ஸ் உறவு கொண்ட பிறகு அவர்களைத் தீர்த்துக் கட்டுவதிலும் தனி இன்பம் இவர்களுக்குக் கிடைக்கும். அப்படித்தான் நொய்டா கொலைகாரன் குழந்தைகளை ஒவ்வொருத்தராகக் கடத்திச் சென்று அனுபவித்து, அவர்களைக் கொலை செய்திருக்க வேண்டும்" என்று கூறுகிறார்கள் போலீஸார்.


நன்றி - விகடன்






புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 30, 2010 7:42 am

///காமம் உடல் ஆரோக்கியத்துக்கு நலம் சேர்க்கிற விஷயம். அதை அனுபவிக்கும்போது சுரக்கும் என்டார்மின் அமிலம், உடல்வலியை போக்குகிறது. ஹீமோகுளோபின் அதிகரிப்பதால், இதயம் பாதுகாக்கப் படுகிறது. வயதாகி விடுவதால் ஆசை குறைவதில்லை///

உண்மைதான்!



முதியோர் செக்ஸ் ஆராய்ச்சி... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat Oct 30, 2010 3:03 pm

நன்றி




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Oct 30, 2010 3:06 pm

மன்னிக்கணும் வழி மாறிடுச்சி நாங்க வருத்தப்பாடாத வாலிபர் சங்கத்தை சேர்ந்தவங்க

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக