புதிய பதிவுகள்
» சிற்றிதழ்களைப் பாதுகாக்கத் தான் வேண்டுமா?
by bharathichandranssn Today at 12:53 pm

» கருத்துப்படம் 01/12/2023
by mohamed nizamudeen Today at 10:38 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:00 am

» வாட்சப்பில் வந்த நகைச்சுவை.
by TI Buhari Yesterday at 9:56 pm

» காஞ்சி மகா பெரியவா --தொடர்
by T.N.Balasubramanian Yesterday at 8:04 pm

» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by krishnaamma Yesterday at 7:14 pm

» கிச்சன் டிப்ஸ் - குங்குமம் தோழி
by krishnaamma Yesterday at 7:12 pm

» வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்துக் கொள்ளலாம்? அரசின் விதி என்ன?
by krishnaamma Yesterday at 6:44 pm

» ரசிகர்களைக் கட்டிப்போடும் "பார்க்கிங்: திரை விமர்சனம்
by krishnaamma Yesterday at 6:43 pm

» ஈகரை வருகை பதிவேடு
by krishnaamma Yesterday at 6:38 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by TI Buhari Yesterday at 8:50 am

» வாழ்த்தலாம் T I Buhari அவர்களை, அவரது பிறந்ததினத்தில் --30 நவம்பர்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:00 am

» கவிதை - பொறுமை
by Anthony raj Wed Nov 29, 2023 11:49 pm

» இளைஞர்க்கு
by Anthony raj Wed Nov 29, 2023 11:47 pm

» உறுப்பினர் அறிமுகம்
by Anthony raj Wed Nov 29, 2023 11:42 pm

» மில்க் கேக்
by ayyasamy ram Wed Nov 29, 2023 11:20 pm

» படித்ததில் பிடித்தது
by T.N.Balasubramanian Wed Nov 29, 2023 9:11 pm

» புதுக்கவிதை
by T.N.Balasubramanian Wed Nov 29, 2023 8:51 pm

» நைரோபி முருகன் கோவில் கார்த்திகை தீபம் படங்கள் :)
by krishnaamma Wed Nov 29, 2023 7:12 pm

» அண்ணாமலை தீபம் --திருவண்ணாமலை கார்த்திகை தீபம்.
by krishnaamma Wed Nov 29, 2023 7:07 pm

» ஹலோ நான் பேய் பேசுறேன்...!
by krishnaamma Wed Nov 29, 2023 6:57 pm

» வங்கக் கடலில் உருவாகும் புதிய புயலின் பெயர்
by krishnaamma Wed Nov 29, 2023 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Wed Nov 29, 2023 4:39 pm

» வெந்தயப் பணியாரம், கேரட் கீர் & எலுமிச்சை இஞ்சி புதினா ஜூஸ்
by ayyasamy ram Wed Nov 29, 2023 4:01 pm

» பிரவீணா தங்கராஜ் இன் புத்தகங்கள் இருந்தால் பகிரவும்.
by Safiya Wed Nov 29, 2023 12:11 pm

» நாவல்கள் வேண்டும்
by fathimaafsa1231@gmail.com Wed Nov 29, 2023 11:12 am

» நாவல்கள் வேண்டும்
by fathimaafsa1231@gmail.com Wed Nov 29, 2023 11:05 am

» சஞ்சிகைகள், இதழ்கள்
by TI Buhari Wed Nov 29, 2023 10:59 am

» மன்னர் மன்னன் புத்தகங்கள்
by ManiThani Tue Nov 28, 2023 10:31 pm

» விபத்தில் உயிரிழந்த இளைஞரின் வீட்டுக்கு சென்ற நாய்
by T.N.Balasubramanian Tue Nov 28, 2023 6:56 pm

» கடந்த காலத்தை மறவாதீர்!- வாழ்க்கை தத்துவங்கள்
by ayyasamy ram Tue Nov 28, 2023 4:05 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 2:28 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 2:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 28, 2023 12:18 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by TI Buhari Tue Nov 28, 2023 11:05 am

» திரை விமர்சனம்: ஜோ
by ayyasamy ram Tue Nov 28, 2023 8:58 am

» மன அழுத்தத்தை ஏற்படுத்தும் டி.வி.சீரீயல்கள்!
by ayyasamy ram Mon Nov 27, 2023 10:39 pm

» இன்று இனிய நாள் --
by ayyasamy ram Mon Nov 27, 2023 10:28 pm

» பரணி தீபம் -ஏற்றினால் எம பயம் நீங்கும்
by T.N.Balasubramanian Mon Nov 27, 2023 7:30 pm

» மனதை தா என் மானே நாவல் வேண்டும்.
by Saravananj Mon Nov 27, 2023 2:22 pm

» நாவல்கள் வேண்டும்
by Nithi s Mon Nov 27, 2023 10:14 am

» மொட்டையா புகார் கொடுத்தா நாங்க எப்படி விசாரிப்பது!
by ayyasamy ram Mon Nov 27, 2023 7:32 am

» ராஜேஸ்குமார் நாவல்கள்
by prajai Sun Nov 26, 2023 10:00 pm

» மொழிபெயர்ப்பு நூல்கள்
by TI Buhari Sun Nov 26, 2023 9:50 pm

» சரோஜாதேவி நடித்த படங்களின் பாடல்களில் புதிய பரிமாணம்.
by heezulia Sun Nov 26, 2023 9:47 pm

» நாவல்கள் வேண்டும்..
by சுகவனேஷ் Sun Nov 26, 2023 9:33 pm

» 2023-புதுவரவு (நடிகைகள்)
by ayyasamy ram Sun Nov 26, 2023 8:17 pm

» சுய முன்னேற்றம் மற்றும் கணினி குறித்த நூற்கள்
by TI Buhari Sun Nov 26, 2023 7:21 pm

» சிரித்து வாழ வேண்டும்!
by ayyasamy ram Sun Nov 26, 2023 2:49 pm

» கார்த்திகை தீபம் சிறப்பு பாடல்கள் |
by ayyasamy ram Sun Nov 26, 2023 2:39 pm

இந்த வார அதிக பதிவர்கள்
TI Buhari
கிடைத்தற்கரியவை Poll_c10கிடைத்தற்கரியவை Poll_m10கிடைத்தற்கரியவை Poll_c10 
98 Posts - 51%
ayyasamy ram
கிடைத்தற்கரியவை Poll_c10கிடைத்தற்கரியவை Poll_m10கிடைத்தற்கரியவை Poll_c10 
30 Posts - 15%
krishnaamma
கிடைத்தற்கரியவை Poll_c10கிடைத்தற்கரியவை Poll_m10கிடைத்தற்கரியவை Poll_c10 
24 Posts - 12%
T.N.Balasubramanian
கிடைத்தற்கரியவை Poll_c10கிடைத்தற்கரியவை Poll_m10கிடைத்தற்கரியவை Poll_c10 
18 Posts - 9%
mohamed nizamudeen
கிடைத்தற்கரியவை Poll_c10கிடைத்தற்கரியவை Poll_m10கிடைத்தற்கரியவை Poll_c10 
5 Posts - 3%
Anthony raj
கிடைத்தற்கரியவை Poll_c10கிடைத்தற்கரியவை Poll_m10கிடைத்தற்கரியவை Poll_c10 
5 Posts - 3%
fathimaafsa1231@gmail.com
கிடைத்தற்கரியவை Poll_c10கிடைத்தற்கரியவை Poll_m10கிடைத்தற்கரியவை Poll_c10 
4 Posts - 2%
Rathinavelu
கிடைத்தற்கரியவை Poll_c10கிடைத்தற்கரியவை Poll_m10கிடைத்தற்கரியவை Poll_c10 
4 Posts - 2%
heezulia
கிடைத்தற்கரியவை Poll_c10கிடைத்தற்கரியவை Poll_m10கிடைத்தற்கரியவை Poll_c10 
3 Posts - 2%
Nithi s
கிடைத்தற்கரியவை Poll_c10கிடைத்தற்கரியவை Poll_m10கிடைத்தற்கரியவை Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
mohamed nizamudeen
கிடைத்தற்கரியவை Poll_c10கிடைத்தற்கரியவை Poll_m10கிடைத்தற்கரியவை Poll_c10 
2 Posts - 50%
bharathichandranssn
கிடைத்தற்கரியவை Poll_c10கிடைத்தற்கரியவை Poll_m10கிடைத்தற்கரியவை Poll_c10 
1 Post - 25%
Pampu
கிடைத்தற்கரியவை Poll_c10கிடைத்தற்கரியவை Poll_m10கிடைத்தற்கரியவை Poll_c10 
1 Post - 25%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிடைத்தற்கரியவை


   
   

Page 1 of 9 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
https://www.eegarai.net

PostAdmin Wed Oct 22, 2008 12:21 am

மூலம்: தமிழம்.நெட்

கிடைத்தற்கரியவை எண் 1.

தங்கமுலாம் பூசிய திருக்குறள் நூல்

திருக்குறள் தொடர்பாக எத்தனையோ நூல்கள் வந்துள்ளன. ஆனாலும் உலகத்தமிழ்மொழி அறக்கட்டளை, சிகாகோ, அமெரிக்கா வெளியிட்டுள்ள திருக்குறள் நூல் புதுமையானதாகவும், அரியதாகவும் உள்ளது. 1814 பக்கங்களில் திருக்குறளுக்கான ஆங்கில மொழிபெயர்ப்பு, திருக்குறள் தொடர்பான பல்வேறு ஆய்வுக் கட்டுரைகள், ஒவ்வொரு அதிகாரத்திற்கும் கோட்டுவடிவப்படங்கள் எனத் தொகுத்துள்ளது. திருக்குறள் தமிழ் மறை, தமிழ்ப்பண்பாட்டுக் கையேடு, தமிழின எதிர்கால வழிகாட்டி எனக் குறிப்பிட்டிருப்பதைப் போலவே - கிருத்துவர்களின் மறையான பைபிள் அச்சடிக்கும் அதே தாளில் அதே வடிவில் சிறப்பாக அச்சாக்கி, தங்கமுலாம் பூசி நூலை வெளியிட்டிருப்பது வணங்குதற்குரியதே.

கிடைத்தற்கரியவை Sup110

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
https://www.eegarai.net

PostAdmin Wed Oct 22, 2008 12:23 am

கிடைத்தற்கரியவை எண் 2.

பனை ஓலையில் திருமண அழைப்பிதழ்

திருச்சியிலிருந்து வெளிவரும் பழங்காசு இதழாளர் தனது மகள் மணவிழாவிற்கான அழைப்பிதழை புதிய வடிவில் வியக்கும்படி அச்சாக்கியுள்ளார். பனை ஓலையிலேயே திரையச்சு முறையில் பனை ஓலைச் சுவடி போலவே அழைப்பிதழை அச்சாக்கி அனுப்பியுள்ளார். மணவிழா நாள் : தி.பி.2033 சுறவம்(தைத்) திங்கள் 24 ஆம் நாள் (06-02-2002) அறிவன்(புதன்) கிழமை.

கிடைத்தற்கரியவை Sup210

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
https://www.eegarai.net

PostAdmin Wed Oct 22, 2008 12:25 am

கிடைத்தற்கரியவை எண் 3.

அஞ்சல் அட்டையில் திருக்குறள் நாள்காட்டி


1330 திருக்குறளையும் உள்ளடக்கிய அரை அங்குல அளவுள்ள திருக்குறள் நாள்காட்டி இது. நாள் ஒன்றுக்கு நான்கு திருக்குறள் என அனைத்துத் திருக்குறளையும் நாள்காட்டியில் அடக்கியதோடு, திருவள்ளுவர் பற்றிய அரிய செய்திகளும தரப்பட்டுள்ளன. அணு என்கிற அஞ்சலட்டை இதழை பல ஆண்டுகளாக நடத்தி வருகிற இதழாளா¢ன் நாள்காட்டி இது. நாள்காட்டியை படிக்க உதவுவதற்காக ஒரு உருப்பெருக்கி ஆடியும் தரப்பட்டுள்ளது.



கிடைத்தற்கரியவை Sup310

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
https://www.eegarai.net

PostAdmin Wed Oct 22, 2008 12:27 am

கிடைத்தற்கரியவை எண் 4.

ஹைக்கூ பாடல்களின் தொகுப்பு நூல்.

3 செ.மீ அகலமும் 10 செ.மீ நீளமும் உடைய தொகுப்பு நூல். செ. காமராசன், 34 அ. தேசிபாளையம் தெரு, காஞ்சிபுரம், 631 503.

கிடைத்தற்கரியவை Sup410

கொடுமைக்கார கணவன்
நசுக்கியபடி நடக்கிறாள்
மெட்டியை.

எனக்கு உயிர் இருப்பதாய்
எல்லோரும் ஒப்புக் கொள்கிறார்கள்
சம்பள நாள்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
https://www.eegarai.net

PostAdmin Wed Oct 22, 2008 12:30 am

கிடைத்தற்கரியவை எண் 5.

வாழ்த்துதற்குரிய திருமண அழைப்பிதழ்

பேராசிரியர் பெரியார்தாசன் அவர்களது மகன் வ.சி.வளவனுக்கும், ம.து.வாலண்டீனாவுக்கும் 16.5.04 அன்று நடைபெறுகிற திருமணவிழாவிற்கும், 19.5.04 அன்று நடைபெறுகிற வரவேற்பிற்குமான அழைப்பிதழ் இது. அழைப்பிதழ், 38 பக்கங்களில் சிறு நூலாக, பெண் என்னும் பேரழகு, காதல் குறிப்பு, இணையும் இன்பம், என்ன அழகு, காதல் சுகம், கூடித்தழுவும் பேரின்பம், என்கிற 6 தலைப்புகளில் 60 திருக்குறளையும் அதற்கான விளக்கத்தை 60 சுவையான உரைவீச்சிலும் தந்துள்ளது வியப்பூட்டுவதாக உள்ளது. சடங்குகளையும் தமிழ் வளர்ச்சிக் கருவிகளாக ஆக்குகிற இதுபோன்ற தமிழுள்ளங்கள் இன்னும் பெருகட்டும்.

முகவரி : பெரியார்தாசன், 109 மகாலட்சுமிநகர், திருவேற்காடு, சென்னை 77

கிடைத்தற்கரியவை Sup510

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
https://www.eegarai.net

PostAdmin Wed Oct 22, 2008 12:33 am

கிடைத்தற்கரியவை எண் 6.

உள்நாட்டு அஞ்சலில் ஓர் இதழ்

ஸ்வரம் : 1981 டிசம்பரில் உதகையிலிருந்து நந்தலாலா அவர்களால் தொடங்கப்பட்டது. இது இரண்டாவது இதழ். உள்நாட்டு அஞ்சலில் அச்சாக்கப்பட்டது இந்த இதழ். 4 ஆவது இதழ் நீள வடிவத்தில் தொடர்ந்தது, 8ஆவது இதழிலிருந்து 16 பக்கங்களில் 1/8 அளவில் தொடரப்பட்டது. இதன் ஆசிரியர் நந்தலாலா, திரு. வல்லிக்கண்ணன் அவர்களுக்கு எழுதிய கடிதத்தில்....

"பிரியமுள்ள ஐயாவுக்கு வணக்கம். உங்களுடைய கடிதம் கிடைத்தது. அந்த சந்தோஷத்தை எப்படிச் சொல்வது என்று தெரியவில்லை. என்னுடைய இந்த சின்ன முயற்சிக்கு வாழ்த்து சொல்லி வந்த முதல் கடிதம் உங்களுடையதே. காப்பி குடிப்பதை நிறுத்தினேன். சினிமா பார்ப்பதைக் குறைத்தேன். அதில் கிடைக்கும் பணத்தில் நல்ல புத்தகங்கள் வாங்கினேன். பின்பு இப்படியொரு யோசனை. நண்பர்களின் உதவியால் ஆரம்பித்தேன். இதழ் இலவசம்தான். எதையும் சாதிக்கும் முனைப்பில் அல்ல. சும்மா நடக்கவே. அன்புடன் நந்தலாலா - 19-1-82, ஜே.எஸ்.எஸ்.கல்லூரி, ராக்லேண்ட், உதகை."

கிடைத்தற்கரியவை Sup610

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
https://www.eegarai.net

PostAdmin Wed Oct 22, 2008 12:34 am

கிடைத்தற்கரியவை எண் 7.

அஞ்சலட்டையில் ஓர் இதழ்

அணு:1991 சனவரியில் சிவகங்கையிலிருந்து அணுவைத் துளைத்தெழு கடலைப் புகட்டி எனத் தலைப்பிலிட்டு, அஞ்சலட்டையில் இதழானது தொடங்கப்பட்டது. சிறு குறிப்புகள், உரைவீச்சுகள் எனத் தொடங்கப்பட்ட இந்த இதழ் திரையச்சு, அச்சு வடிவில் தொடர்ந்து ஒவ்வொரு இதழையும் அஞ்சலட்டையில் அச்சாக்குவதோடு புதிய புதிய நுணுக்கங்களையும் புகுத்தித் தொடர்ந்த, தொடரும் இதழிது.

கிடைத்தற்கரியவை Sup710

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
https://www.eegarai.net

PostAdmin Wed Oct 22, 2008 12:37 am

கிடைத்தற்கரியவை எண் 8.

பை அடக்க சினிமாப் பாட்டுப் புத்தகம்

வீரத் திருமகன் சினிமா பாட்டுப் புத்தகம் : 7 செ.மீ க்கு 9 செகிடைத்தற்கரியவை Sup8a10.மீ அளவுள்ள பையில் வைத்துக்கொள்ளும் அளவிற்கான சினிமாப் பாட்டுப்புத்தகம் இது. சினிமாப் பாடல்கள் மட்டுமல்லாது இதில் வைத்திருப்பவர்கள் எழுதுவதற்கான தன்குறிப்புப் பக்கமும், ஆண்டின் நாள்காட்டிப் பக்கமும், பின் உள் அட்டையில் ஞாபகப் பக்கமும், பாடலுக்கான இசைத்தட்டு எண்களும் உள்ளன.கிடைத்தற்கரியவை Sup810

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
https://www.eegarai.net

PostAdmin Wed Oct 22, 2008 12:42 am

கிடைத்தற்கரியவை எண் 9.

இழுத்தால் படம் மாறும் சினிமாப் பாட்டுப் புத்தகம்


சிவாஜி கணேசன் அளித்த எங்க ஊர் ராஜா திரைப்படத்தின் சினமா பாட்டுப் புத்தகம் இது. சன்னலுக்குப் பின்னால் இரண்டு படங்களை உள்ளடக்கிய அட்டையை உடையது இந்தப் பாட்டுப் புத்தகம். இதன் அட்டைப் பக்கத்தில் உள்ள இழு என்ற துண்டு அட்டையை இடது புறம் இழுத்தால் மேலே உள்ள படமும், வலது புறம் இழுத்தால் கீழே உள்ள படமும் கிடைக்கும். பாடல்கள் அனைத்தும் கவிஞர் கண்ணதாசன் எழுதியது. "யாரை நம்பி நான் பொறந்தேன போங்கடா, போங்க " இந்தப் படத்தின் இறுதிப்பாடல்.

கிடைத்தற்கரியவை Sup910
கிடைத்தற்கரியவை Sup9a10

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
https://www.eegarai.net

PostAdmin Wed Oct 22, 2008 12:44 am

கிடைத்தற்கரியவை எண் 10.

பாம்பு வடிவ சினிமாப் பாட்டுப் புத்தகம்

எங்கள் குல தெய்வம் என்ற சினிமாவிற்கான பாட்டுப் புத்தகம் இது. பாட்டுப் புத்தகத்தின் வலது புறத்தில் பாம்புப் படத்தை அச்சிட்டு, அதன் ஓரப்பகுதியை வெட்டி, ஒவ்வொரு பக்கத்திலும் ஓரத்தில் பாம்பு இருப்பதைப் போன்று பாட்டுப் புத்தகம் அமைந்துள்ளது. அன்றைய நாளில், பாட்டுப் புத்தகங்கள், மக்களை ஈர்த்துப் படம் பார்க்க வைக்கிற கருவியாக இருந்துள்ளதை இதன் வழியாக அறியமுடிகிறது. கிடைத்தற்கரியவை Sup1010

Page 1 of 9 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக