ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» சே குவேரா புரட்சியாளர் ஆனது எப்படி
by Guest Today at 12:40 am

» "என்கிட்ட 20 ரூபாய் தான் இருக்கு, வரலாமா?" ஆட்டோ ஓட்டுநரிடம் கேட்ட முன்னாள் எம்.எல்.ஏ!
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» உங்ககுழந்தைகள்மீது உங்களுக்கு கொள்ளைப்பிரியமா?..இதை செய்யுங்க...
by krishnaamma Yesterday at 10:01 pm

» சாதம் எப்படி சாப்பிடவேண்டும்...???
by krishnaamma Yesterday at 9:59 pm

» வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை !
by krishnaamma Yesterday at 9:58 pm

» தமிழ் புத்தகம் படிக்க ஆங்கில வேண்டுதல் ஏன் ?
by venkat532 Yesterday at 9:54 pm

» டாக்டர் ராஜேந்திரப் பிரசாத் - டிசம்பர் 03 !
by krishnaamma Yesterday at 9:53 pm

» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV
by krishnaamma Yesterday at 9:48 pm

» பெரியவா அருள் வாக்கு !
by krishnaamma Yesterday at 9:47 pm

» சின்ன சின்ன கதைகள் :)
by krishnaamma Yesterday at 9:38 pm

» மனமே பிரச்சினை !
by krishnaamma Yesterday at 9:17 pm

» பாம்பாட்டி சித்தர் !
by krishnaamma Yesterday at 9:15 pm

» வாட்ஸ் அப் டிரெண்டிங்
by ayyasamy ram Yesterday at 9:10 pm

» சிவபெருமான் பற்றிய 133 தகவல்கள்.....
by krishnaamma Yesterday at 9:10 pm

» ஈஸ்வர சங்கல்பம்!...by Krishnaamma :)
by krishnaamma Yesterday at 9:00 pm

» ஆன்மிகம்- சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» ருத்ராட்சம் அணிய தகுதி
by krishnaamma Yesterday at 8:41 pm

» நியாயங்கள் – ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 8:39 pm

» ஜிப்மர் மருத்துவமனை- முன்பதிவு செய்ய…
by krishnaamma Yesterday at 8:37 pm

» அஞ்சல் துறை- பணி சிறக்க..
by krishnaamma Yesterday at 8:37 pm

» ஆறு வித்தியாசம் கண்டுபிடி!
by சக்தி18 Yesterday at 8:34 pm

» ரஜினி --அரசியலில் குதிக்கிறார் --
by krishnaamma Yesterday at 8:34 pm

» பிரச்னை தீரவில்லை என்றால் மேலிடதை அணுக வேண்டும்!
by krishnaamma Yesterday at 8:27 pm

» அவசரம் என்றால் அண்டாவிலும் கைநுழையாது!
by krishnaamma Yesterday at 8:25 pm

» பாம்பன் அருகே புரெவி புயல்: 3 மணி நேரத்தில் கடக்கிறது
by krishnaamma Yesterday at 8:24 pm

» தெற்கு அந்தமானில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது
by krishnaamma Yesterday at 8:19 pm

» இப்போ போறேன், திரும்பி வருவேன்: குட்பை சொன்ன ட்ரம்ப்
by krishnaamma Yesterday at 8:16 pm

» பெற்றோரால் ஏற்க முடியாத உண்மை!
by krishnaamma Yesterday at 8:13 pm

» ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
by சக்தி18 Yesterday at 7:58 pm

» சல்லடையில் கூட தண்ணீரை எடுத்துச் செல்வான் புத்திசாலி
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» தவத்தின் ஆற்றலால் எமனையும் வெல்லலாம்!
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை புரட்டிப் போட்ட புரெவி புயல்
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» இணையத்தில் பிரம்மாண்டமாக தமிழ் மொழி விழா கொண்டாடும் சிங்கப்பூர் தமிழர்கள்
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» இஸ்லாமிய சிந்தனைகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:56 pm

» பெண்கள் விரும்பும் ஆண்கள்! - வலைப்பேச்சு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm

» அவளின் கோபம் மவுனம் பயமுறுத்துகிறது! - வலைப்பேச்சு
by T.N.Balasubramanian Yesterday at 12:39 pm

» பங்குச் சந்தை கதை
by ayyasamy ram Yesterday at 11:39 am

» நம்பிக்கை
by kandansamy Yesterday at 9:58 am

» தொண்டை மண்டல ஆதீன 232வது மடாதிபதி காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:27 am

» படம் தரும் பாடம் (புகைப்பட ஆல்பம்)
by ayyasamy ram Yesterday at 7:24 am

» ஒடிசாவில் கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.400 ஆக குறைப்பு
by ayyasamy ram Yesterday at 7:16 am

» 'ஆஸ்கர்' விருதுகள் வழங்கும் விழா மேடையில் வழங்க முடிவு
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தோள் கொடுப்பாள் தோழி!
by ayyasamy ram Wed Dec 02, 2020 10:17 pm

» பிறந்த நாள் பாடல் பிறந்த கதை!
by ayyasamy ram Wed Dec 02, 2020 10:06 pm

» முதல் பெண் தட்டச்சர்!
by ayyasamy ram Wed Dec 02, 2020 10:03 pm

» சர்க்கரை நோய் தீர்க்கும் கரும்பேசுவரர் திருக்கோவில்
by ayyasamy ram Wed Dec 02, 2020 10:01 pm

» திருச்செந்தூர் திருத்தலம் பற்றி முனிவர்கள் கருத்து
by ayyasamy ram Wed Dec 02, 2020 9:57 pm

» பாணிபாத்திர சுவாமி
by ayyasamy ram Wed Dec 02, 2020 9:53 pm

» மனசுக்குள் மலை தீபம்
by ayyasamy ram Wed Dec 02, 2020 9:49 pm

» முல்லாவின் தந்திரம்
by ayyasamy ram Wed Dec 02, 2020 9:46 pm

Admins Online

முகமாற்று அறுவை சிகிச்சை: மருத்துவ துறையின் 'புதிய முகம்'

Go down

முகமாற்று அறுவை சிகிச்சை: மருத்துவ துறையின் 'புதிய முகம்' Empty முகமாற்று அறுவை சிகிச்சை: மருத்துவ துறையின் 'புதிய முகம்'

Post by தாமு on Thu Nov 18, 2010 7:42 am

மாட்ரிட் :
ஸ்பெயினில், உலகிலேயே முழுமையான முதல் முகமாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக ஒரு நபருக்கு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வெவ்வேறு நபர்களின் முக திசுக்கள், தோல், மூக்கு, உதடு, கன்னம் ஆகியவற்றை தானம் பெற்று, இந்த நபருக்கு பொருத்தி சாதனை
படைத்துள்ளனர், ஸ்பெயின் டாக்டர்கள். பிளாஸ்டிக் சர்ஜரி பற்றி நாம் அதிகமாகவே கேள்விப்பட்டுள் ளோம். குறிப்பாக, திரையுலகில்
பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொள்வோர் அதிகம். முகத்தில் உள்ள மூக்கு உள்ளிட்ட ஏதாவது உறுப்பின் அமைப்பு, தங்களுக்கு பிடிக்கவில்லை
எனில், நடிகைகள் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து, அவற்றின் அமைப்பை சரிசெய்து கொள்வது வழக்கம். விபத்தில் அல்லது பேராபத் தில் சிக்கி,
முகம் சிதைந்து போனால், முகமே விகாரமாகி விடும். விகாரத்தை மறைத்து, மீண்டும் முழுத் தோலுடன் முகத்தை மீட்பதற்கென,
'முக மாற்று அறுவை சிகிச்சை' செய்யப்படுகிறது. பிரான்ஸ் நாட்டில் தான், இந்த முகமாற்று அறுவை சிகிச்சைக்கு பிள்ளையார்
சுழி போடப்பட்டது.

கடந்த 2005ல் பிரான்சைச் சேர்ந்த இசபெல்லா (38) என்ற பெண், அவருடைய செல்ல நாய்க் குட்டியை அளவுக்கு அதிகமாக கொஞ்சியதாலோ
என்னவோ, அந்த நாய் அவருடைய முகத்தை கடித்துக் குதறி ஒரு வழியாக்கி விட்டது. முகத்தின் ஒரு பக்கம், விகாரமாகி விட்டது. சிதைந்து
போன பகுதியைச் சீராக்க, அவருக்கு முக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதற்கு பின், சீனா, அமெரிக்கா போன்ற
நாடுகளிலும் இந்த அறுவை சிகிச்சைகள் நடந்தன.

தற்போது, ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு, முழு முகத்தையும் மாற்றி அமைக்கும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
அறுவை சிகிச்சை செய்து கொண்டவரின் பெயர், மிகவும் ரகசிய மாக வைக்கப்பட்டுள்ளது. இவர், சில ஆண்டுகளுக்கு முன், ஒரு விபத்தில்
சிக்கிவிட்டார். அவரது முகத்தில் பலமாக அடிபட்டது. முகத்தின் அமைப்பு, முழுவதுமாக மாறி விட்டது. வாய் கோணலாகி, வித்தியாசமாக
காட்சி அளித்தது. பற்களையும் காணவில்லை. மூக்கு இருந்ததற்கான அடையாளமே தெரியவில்லை. அந்த இடத்தில் ஒரு சிறிய துளை
மட்டுமே இருந்தது. அதன் பின், அவரால் மூச்சு விட முடியவில்லை; உணவு உண்ண முடியவில்லை; பேச முடியவில்லை. இதையடுத்து,
டாக்டர் களை அணுகிய இந்த நபர், சிறிய அளவிலான முகமாற்று அறுவை சிகிச்சைகளை மேற் கொண்டார். பெரிய அளவில் பயன்
கிடைக்கவில்லை.

இதைத் தொடர்ந்து அங் குள்ள, வால் டி ஹெப்ரோன் என்ற மருத்துவமனையில் சேர்ந்தார். அங்கு அவருக்கு சமீபத்தில் முகமாற்று அறுவை
சிகிச்சை நடந்தது. 30 பேர் அடங்கிய மருத்துவக் குழுவினர், தொடர்ந்து 22 மணி நேரம் போராடி, அவரது முகத்தில் அறுவை சிகிச்சை
மேற்கொண் டனர். அடையாளம் காட்டப்படாத ஒரு நபரிடமிருந்து தானம் பெற்ற முகத் திசுக்கள், மூக்கு, தாடை, பற்கள், கன்னத்தில்
உள்ள எலும்புகள், தோல் ஆகியவை இவருக்கு பொருத்தப் பட்டன. பற்கள், கன்ன எலும்புகள் ஆகியவற்றை தாங்கி நிற்பதற்காக சிறிய
உலோகத் தகடுகளும் அவரது முகத்தில் பொருத்தப்பட்டன. அறுவை சிகிச்சை மேற் கொள்ளப்பட்டபோது, உறுப்புகளை தானம்
கொடுத்தவரின் முகம் போல், இவருக்கு அமைந்து விடக் கூடாது என்பதில், டாக்டர்கள் கவனமாக இருந்தனர். அறுவை சிகிச்சை முடிந்து,
ஒரு வாரம் அவர் ஓய்வில் இருந்தார். பின், டாக்டர்கள், கண்ணாடியில் அவரது முகத்தை காட்டினர். அதில் தனது புதிய முகத்தை பார்த்த
அந்த நபர், மகிழ்ச்சியும், திருப்தியும் தெரிவித்தார்.

அறுவை சிகிச்சை செய்து கொண்டவரின் உறவினர் ஒருவர் கூறுகையில், 'அறுவை சிகிச்சைக்கு முன், அவரது நெற்றி, கழுத்து ஆகிய
இடங் களில் பெரிய தழும்புகள் இருந்தன. தற்போது அதற்கான தடயமே இல்லை' என்றார். ஸ்பெயினில் நடந்துள்ள இந்த முழுமையான
முதல் முகமாற்று அறுவை சிகிச்சை, மருத்துவத் துறையில் ஏற்பட் டுள்ள முன்னேற்றத்தின் ஒரு மைல் கல்லாக கருதப்படுகிறது.

நன்றி - தின மலர்
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
மதிப்பீடுகள் : 420

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum