புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 8:25 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Today at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Today at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Today at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:17 pm

» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Today at 12:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கோயமுத்தூர் மாவட்டம் Poll_c10கோயமுத்தூர் மாவட்டம் Poll_m10கோயமுத்தூர் மாவட்டம் Poll_c10 
43 Posts - 51%
ayyasamy ram
கோயமுத்தூர் மாவட்டம் Poll_c10கோயமுத்தூர் மாவட்டம் Poll_m10கோயமுத்தூர் மாவட்டம் Poll_c10 
29 Posts - 35%
mohamed nizamudeen
கோயமுத்தூர் மாவட்டம் Poll_c10கோயமுத்தூர் மாவட்டம் Poll_m10கோயமுத்தூர் மாவட்டம் Poll_c10 
3 Posts - 4%
prajai
கோயமுத்தூர் மாவட்டம் Poll_c10கோயமுத்தூர் மாவட்டம் Poll_m10கோயமுத்தூர் மாவட்டம் Poll_c10 
3 Posts - 4%
Jenila
கோயமுத்தூர் மாவட்டம் Poll_c10கோயமுத்தூர் மாவட்டம் Poll_m10கோயமுத்தூர் மாவட்டம் Poll_c10 
2 Posts - 2%
jairam
கோயமுத்தூர் மாவட்டம் Poll_c10கோயமுத்தூர் மாவட்டம் Poll_m10கோயமுத்தூர் மாவட்டம் Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
கோயமுத்தூர் மாவட்டம் Poll_c10கோயமுத்தூர் மாவட்டம் Poll_m10கோயமுத்தூர் மாவட்டம் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கோயமுத்தூர் மாவட்டம் Poll_c10கோயமுத்தூர் மாவட்டம் Poll_m10கோயமுத்தூர் மாவட்டம் Poll_c10 
1 Post - 1%
M. Priya
கோயமுத்தூர் மாவட்டம் Poll_c10கோயமுத்தூர் மாவட்டம் Poll_m10கோயமுத்தூர் மாவட்டம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கோயமுத்தூர் மாவட்டம் Poll_c10கோயமுத்தூர் மாவட்டம் Poll_m10கோயமுத்தூர் மாவட்டம் Poll_c10 
86 Posts - 61%
ayyasamy ram
கோயமுத்தூர் மாவட்டம் Poll_c10கோயமுத்தூர் மாவட்டம் Poll_m10கோயமுத்தூர் மாவட்டம் Poll_c10 
29 Posts - 21%
mohamed nizamudeen
கோயமுத்தூர் மாவட்டம் Poll_c10கோயமுத்தூர் மாவட்டம் Poll_m10கோயமுத்தூர் மாவட்டம் Poll_c10 
7 Posts - 5%
prajai
கோயமுத்தூர் மாவட்டம் Poll_c10கோயமுத்தூர் மாவட்டம் Poll_m10கோயமுத்தூர் மாவட்டம் Poll_c10 
5 Posts - 4%
Jenila
கோயமுத்தூர் மாவட்டம் Poll_c10கோயமுத்தூர் மாவட்டம் Poll_m10கோயமுத்தூர் மாவட்டம் Poll_c10 
4 Posts - 3%
Rutu
கோயமுத்தூர் மாவட்டம் Poll_c10கோயமுத்தூர் மாவட்டம் Poll_m10கோயமுத்தூர் மாவட்டம் Poll_c10 
3 Posts - 2%
Baarushree
கோயமுத்தூர் மாவட்டம் Poll_c10கோயமுத்தூர் மாவட்டம் Poll_m10கோயமுத்தூர் மாவட்டம் Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
கோயமுத்தூர் மாவட்டம் Poll_c10கோயமுத்தூர் மாவட்டம் Poll_m10கோயமுத்தூர் மாவட்டம் Poll_c10 
2 Posts - 1%
manikavi
கோயமுத்தூர் மாவட்டம் Poll_c10கோயமுத்தூர் மாவட்டம் Poll_m10கோயமுத்தூர் மாவட்டம் Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
கோயமுத்தூர் மாவட்டம் Poll_c10கோயமுத்தூர் மாவட்டம் Poll_m10கோயமுத்தூர் மாவட்டம் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோயமுத்தூர் மாவட்டம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Dec 15, 2010 10:06 pm


கோயமுத்தூர் மாநகர வரலாறு


கோயம்புத்தூர் மாவட்டம் பண்டைய காலம் தொட்டு கொங்கு மண்டலத்தின் ஒரு பகுதியாகவே இருந்து வந்துள்ளது.இதன் வரலாறு சங்ககாலம் முதலே அறியப்படுகிறது.பழங்காலத்தில் இப்பகுதி பழங்குடியின வசிப்பிடமாக இருந்துள்ளது.அவர்களில் மிகுந்த வலிமையான, பெரும்பான்மையான கோசர்கள் இன மக்கள் கோசம்புத்துர் என்னும் இடத்தை தலைமையிடமாக கொண்டு வசித்து வந்தனர்.இவர்கள் வாழ்ந்த இடமான கோசம்புத்துர் காலப்போக்கில் பெயர் மருவி கோயம்புத்தூர் என்றே அழைக்கபடுகிறது. ஆயினும் இப்பழங்குடிகளின் ஆதிக்கம் நீண்ட காலம் நீடித்து இருக்கவில்லை.இப்பகுதி இராஷ்டிரகுட்டர்களின் படையெடுப்பால் அவர்களின் வசமானது.

இராஷ்டிரகுடர்களிடமிருந்து சோழர்களின் பொற்காலம் எனப் போற்றப்படும் இராஜ இராஜ சோழனின் ஆட்சிக் காலத்தில் அவர்களின் கைகளிலிருந்து வீழ்ந்தது. சோழர்களின் வீழ்ச்சிக்குப் பின் கொங்கு மண்டலம் சாளுக்கியர்கள் மற்றும் அவர்களுக்கு பின்னால் வந்த பாண்டியர்களாலும், ஹோசைலர்களாலும் ஆக்கிரமிக்கப்பட்டது.பாண்டிய மன்னர்களிடையே ஏற்பட்ட உள்நாட்டு சண்டையினால் இப்பகுதி டில்லி முகலாயர்களிடம் வீழ்ந்தது. பின்னர் மதுரை சுல்தான்களிடமிருந்து விஜய நகர ஆட்சியாளர்கள் 1377 - 78ல் இப்பகுதியை போரிட்டு வென்றனர். சில காலம் இப்பகுதி நாயக்கர்களின் சுதந்திரமான கட்டுப்பாட்டின் கீழ் இருந்துள்ளது.

முத்து வீரப்ப நாயக்கரின் ஆட்சிக் காலம் மற்றும் திருமலை நாயக்கர் ஆட்சிக் காலத்திலும் ஏற்பட்ட உள் நாட்டு சண்டை, விட்டு விட்டு வந்த போர்களினாலும் விஜய நகர பேரரசு அழிவதற்கு காரணமானது. இதன் விளைவாக திருமலை நாயக்கர் ஆட்சிக் காலத்தில் கொங்கு மண்டலம் மைசூர் ஆட்சியர்களின் கைகளில் விழுந்தது, அவர்களிடமிருந்து ஹைதர்அலி இப்பகுதியை கைப்பற்றினார். ஆயினும் 1799ல் மைசூரில் திப்பு சுல்தானுக்கு ஏற்ப்பட்ட வீழ்ச்சியினால் கொங்கு மண்டலம் மைசூர் மகாராஜாவால் கிழக்கிந்திய கம்பெனிக்கு விட்டுக் கொடுக்கப்பட்டது. இதற்கு கைம்மாறக திப்பு சுல்தானிடம் இழந்த இராஜ்ஜியத்தை மீண்டும் மைசூர் மகாராஜாவிற்கே பிரிட்டிஷார் வழங்கினர். அதிலிருந்து 1947ல் இந்தியா சுதந்திரம் அடையும் வரை கோவை மண்டல பகுதி பிரிட்டிஷாரின் முறையான வருவாய் நிர்வாகத்தின் கீழ் இருந்தது.

கோவை வட பகுதிகளுடன் சேலம் பகுதிகள் சில இணைக்கப்பட்டன.தென் பகுதி தாராபுரத்தை தலைமையிடமாக கொண்டு அமைக்கப்பட்டது. 1804 ஆம் ஆண்டு கோவை மாவட்டமாக உருவானது. 1866ஆம் ஆண்டு நகராட்சியானது. அப்போதைய மக்கள் தொகை 24,000 ஆகும். அதன் பிறகு வளர்ச்சி பெற்று 01.05.1951 ஆம் ஆண்டு மாநகராட்சியாக மாற்றம் செய்யப்பட்டது. தற்போது மக்கள் தொகை 9,13,474 ( 2001ல் கணக்கெடுப்பு) தொழில் துறை வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் முக்கிய காரணமாக இருப்பது இங்கு தடையின்றி பெறப்படும் குடிநீரும் மின்சாரமும் ஆகும்.

கோவை மாநகர் தமிழகத்தின் மூன்றாவது பெரிய நகரமாகும். மேற்கில் பாலக்காட்டு கணவாய்க்கும், வடக்கிலுள்ள சகல்கட்டி கணவாய்க்கும் இடையில் அமைந்திருப்பதால் நீண்டகாலம் தொ ட்டு, இந்நகர் சரித்திர முக்கியத்துவம் பெற்று திகழ்கிறது. மதுரையை ஆண்டு வந்த நாயக்க மன்னர்கள் கோவையை கைப்பற்றி படைத்தளம் அமைத்தனர். பின்னர் மைசூர் மன்னர்கள் இதை கைப்பற்றிக் காண்டனர். ஹைதர் அலியும், திப்பு சுல்தானும் ஆங்கிலேயருடன் பலமுறை போர் செய்தனர். இதனால் இப்பகுதி அடிக்கடி கைமாறிக் காண்டே இருந்தது. 1768ல் ஆங்கிலேயர்கள் கோவையை கைப்பற்றி இழந்தனர். 1783ல் மீண்டும் இதுவே நிகழ்ந்தது. 1790ல் 5 மாத காலம் இப்பகுதியை முற்றுகையிட்ட திப்பு சுல்தான் ஆங்கிலேயரிடமிருந்து இதை கைப்பற்றிக் கொண்டார்.

1799ல் நடந்த மைசூர் போரில் திப்புவை வென்று கோவையை கைப்பற்றிக் கொண்ட ஆங்கிலேயர்கள் அதனை 1947 வரை அரசு புரிந்தனர். திப்பு இறந்ததும் கவர்னர் ஜெனரலாக இருந்த வெல்ஹெசி பிரவு உடனடி நடவடிக்கையில் இறங்கினார் . திப்புவின் வாரிசுகளுக்கும் அவரைச் சார்ந்தவர்களுக்கும் ஓய்வூதியம் வழங்கப்பட்டு அரசு உரிமை பறிக்கப்பட்டது. பழைய அரச குடும்பத்தினரான கிருஷ்ண ராஜ உடையாரிடம் மைசூரை ஆளும் உரிமையை ஒப்படைத்த ஆங்கிலேயர்கள் கன்னடம், வயநாடு, கோயம்புத்தூர், ஈரோடு,தாராபுரம், ஆகிய பகுதிகளை தங்கள் வசம் வைத்துக் கொண்டனர். ஹைதராபாத் நிஜாமுக்கு ஊட்டி குர்ரம் கொண்ட ஆகிய பகுதிகள் தரப்பட்டன. இந்த பிரிவினைகளால் கோவை பிரிட்டீஸ் ஆட்சியின் கீழ் வந்தது. அப்பாது மாவட்டத்தின் பரப்பளவு அதிகமாக இருந்த்தால் 1799ம் ஆண்டு கோவை பகுதி இரு பகுதிகளாக பிரிக்கப்பட்டது.

தொடக்கத்தில் கோயம்புத்தூர் வருவாய் நிர்வாகத்திற்கு ஏற்ப இரு பகுதிகளாக பிரிக்கப்பட்டிருந்தது.1804ல் பிரிக்கப்பட்ட இப்பகுதிகள் ஒரு மாவட்ட ஆட்சியரின் கீழ் ஒன்றிணைக்கப்பட்டது. அப்போது திரு. ஹேச்.எஸ்.கிரிம் (பொ) 20.10.1803 லிருந்து 20.01.1805 ஆண்டு வரை இம்மாவட்ட ஆட்சியராக பொறுப்பிலிருந்தார். 1868ல் நீலகிரி மாவட்டம் கோவை மாவட்டத்திலிருந்து தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டது. இந்த நுற்றாண்டின் தொடக்கத்தில் கோவை மாவட்டத்தில் 10 வருவாய் வட்டங்கள் இருந்தது. அவைகள் பின்வருமாறு: பவானி, கோயம்புத்தூர், தாராபுரம், ஈரோடு , கரூர் கொள்ளேகால், பல்லடம், பொள்ளாச்சி, சத்தியமங்கலம்,உடுமலைப்பேட்டை. சத்தியமங்கலம் என்னும் வருவாய் வட்டம் பின்னர் கோபிச்செட்டிபாளையம் என்னும் பெயர் மாற்றப்பட்டது. அவினாசி வருவாய் வட்டம, கரூர் வருவாய் வட்டம் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்கு மாற்றப்பட்ட போது உருவாக்கப்பட்டது.

1927ல் பவானி வருவாய் வட்டத்தின் சில கிராமங்களும் சேலம் மாவட்டத்தில் சில கிராமங்களும் மேட்டூர் பகுதிகளோடு இணைக்கப்பட்டது. ஆனால் 1929ல் இந்த பகுதிகள் சேலம் மாவட்டத்திற்கு மாற்றப்பட்டது. மீண்டும், 1956ல் குறிப்பிடத்தக்க மிகப்பெரிய பகுதியான கொள்ளேகால் வருவாய் வட்டம் முழுவதும் மைசூர் மாநிலத்திற்கு, மாநில சீரமைப்பு திட்டத்தின் போது மாற்றப்பட்டது. 1975ல் சத்திய மங்கலம் துணை வருவாய் வட்டம் நன்கு வளர்ச்சியடைந்த வருவாய் வட்டமாக தரம் உயர்த்தப்பட்டது. மீண்டும் 1979ல் பெருந்துறை துணை வருவாய் வட்டம் ஈரோட்டிலும், அவினாசி துணை வருவாய் வட்டம் மேட்டுப்பாளையத்திலும் சிறப்பு வருவாய் வட்டங்களாக தரம் உயர்த்தப்பட்டது. அதனால் மொத்த வருவாய் வட்டங்கள் இந்த மாவட்டத்தில் 12 ஆக உயர்ந்தது,இது நீண்ட நாட்கள் நீடித்து இருக்கவில்லை. 1979ல் 6 வருவாய் வட்டங்கள் இம்மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு புதிய மாவட்டமாக ஈரோடு மாவட்டம் அரசு ஆணை நிலை என் 1917ன் படி வருவாய் துறை தேதி:31.08.1979, பின்வரும் 6 வருவாய் வட்டங்கள் பவானி, கோபிச் செட்டிபாளையம், சத்தியமங்கலம்,ஈரோடு, பெருந்துறை, மற்றும் தாராபுரம் கோவை மாவட்டத்திலிருந்து பிரித்து புதிய ஈரோடு மாவட்டம் உருவாக்கப்பட்டது. அச்சமயம் கோவை மாவட்டத்திலிருந்து திருப்பூர் தனி மாவட்டமாக பிரிக்கப்படுவதற்கு முன்பு 9 வருவாய் வட்டங்களை கொண்டிருந்தது. அவைகள் பின்வருமாறு கோவை வடக்கு, கோவை தெற்கு, மேட்டுப்பாளையம்,அவிநாசி, பல்லடம், திருப்பூர், பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை மற்றும் வால்பாறை.

அரசு ஆணை நிலை என் 617,618ல் வருவாய் துறை தேதி 24.10.2008 கோவை மாவட்டத்தில் உள்ள நான்கு வருவாய் வட்டங்கள் அதாவது (திருப்பூர்,உடுமலைப்பேட்டை,பல்லடம் மற்றும் அவினாசி பகுதி) மற்றும் ஈரோடு மாவட்டத்தில் உள்ள மூன்று வருவாய் வட்டங்கள் அதாவது (தாராபுரம், காங்கேயம்,பெருந்துறை பகுதிகள்) ஆகியன பிரிக்கப்பட்டு திருப்பூர் தனி மாவட்டமாக உருவாக்கப்பட்டது. இப்பொழுது கோவை மாவட்டத்தில் 6 வருவாய் வட்டங்கள் உள்ளன. அவைகள் பின்வருமாறு : கோவை வடக்கு, கோவை தெற்கு,மேட்டுப்பாளையம்,சூலூர் ,பொள்ளாச்சி மற்றும் வால்பாறை, மற்றும் இரண்டு வருவாய் மண்டலங்கள் கோயம்புத்தூர் மற்றும் பொள்ளாச்சி உள்ளன.



கோயமுத்தூர் மாவட்டம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Dec 15, 2010 10:10 pm

மாவட்ட நிர்வாகம்
கோயம்புத்தூர் மாவட்டம் தமிழ்நாட்டின் முப்பதொன்று மாவட்டங்களில் ஒன்றாகும். இந்த மாவட்டத்தில் இரண்டு வருவாய் கோட்டங்களும் மற்றும் 6 வட்டங்கள், 295 வருவாய் கிராமங்களை உள்ளடங்கியது.


இரண்டு வருவாய் கோட்டங்களில் கோயம்புத்தூர் வருவாய் கோட்டம் தொழிற்துறையிலும் பொள்ளாச்சி வருவாய் கோட்டம் விவசாயத்திலும் வளர்ச்சியடைந்த கோட்டங்களாகும்.



வ.எண்வருவாய் கோட்டம்வருவாய் வட்டங்கள்குறுவட்டங்கள்உள்வட்டங்கள்வருவாய் கிராமங்கள்
1கோயம்புத்தூர்4721163
2பொள்ளாச்சி2312132
மொத்தம் 61033295

உள்ளாட்சி அமைப்புகளின் விவரங்கள்:-

வ.எண்நகராட்சியமைப்புகள் மற்றும் உள்ளாட்சியமைப்புகள்எண்ணிக்கை
1மாநகராட்சி1
2நகராட்சி 6
3ஊராட்சி ஒன்றியங்கள் 12
4பேரூராட்சிகள் 44
5கிராம ஊராட்சிகள் 229





கோயமுத்தூர் மாவட்டம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Wed Dec 15, 2010 10:11 pm

நான் இருக்கும் இடம் பற்றி நான் அறியா தகவலை அளித்தமைக்கு நன்றி...



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Dec 15, 2010 10:13 pm

மாவட்டம் ஒரு பார்வை


கோயம்புத்தூர், மாநிலத்தில் மூன்றாவது பெரிய நகரம், தமிழ் நாட்டில் ஒரு சிறந்த தொழில் வளர்ச்சி அடைந்த நகரம் ஆகும். இது தென்னிந்தியாவின் நெசவுத் தொழிலின் தலைநகரம் அல்லது தென்னிந்தியாவின் ஜவுளி உற்பத்தியின் தலைநகரம் என்றழைக்கப்படுகிறது. இந்நகரம்,நொய்யலாற்றின் கரையில் அமைந்துள்ளது. கோயம்புத்தூர் முற்கால சோழனாகிய கரிகாலனின் ஆட்சிக் காலமான இரண்டாம் அல்லது மூன்றாம் நுhற்றாண்டிலிருந்தே இருந்து வந்துள்ளது. இதனை இராஷ்டிரகுட்டர்கள் , சாளுக்கியர்கள், பாண்டியர்கள், ஹோசைளர்கள் மற்றும் விஜயநகர பேரரசுகள் ஆட்சி புரிந்துள்ளன. கொங்கு நாடு, தென்னிந்தியாவோடு பிரிட்டிஷாரின் கைகளில் விழுந்த பொழுது இதன் பெயர் கோயம்புத்தூர் என மாற்றப்பட்டது. தற்பொழுதும் இதே பெயரில் அழைக்கப்படுகிறது. தமிழில் இந்த ஊர் கோவை என்று சுருக்கமாக அழைக்கப்படுகிறது.

கோயம்புத்தூர் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையின், மழை சாரல் மிகுந்த பகுதியில் அமைந்துள்ளதால் இங்கு மனதிற்கு இதம் அளிக்கின்ற கால நிலை வருடம் முழுவதும் நிலவுகிறது. 25 கி.மீ நீளமுள்ள பாலக்காட்டு கணவாய் வழியாக வீசும் குளிர்ந்த காற்று இதன் பருவ நிலைக்கு காரணமாக அமைகிறது. இங்கு அதிகமாக உள்ள கரிசல் மண் இந்த பகுதியில் விவசாயம் மற்றும் அதனை சார்ந்த தொழில்கள் சிறந்து விழங்க ஒரு காரணியாக அமைந்துள்ளது. மேலும் இங்கு வெற்றிகரமாக விளங்கும் பருத்தி விளைச்சல், நெசவு தொழிற்சாலைகளுக்கு சிறந்த அடித்தளத்தை அமைக்க வழி செய்துள்ளது. முதல் நெசவு நூற்ப்பாலை 1888 ல் அமைக்கப்பட்டது. ஆனால் இங்கு இப்பொழுது நூற்றுக்கு அதிகமான நூற்ப்பாலைகள் இயங்கி வருகின்றது. இதன் விளைவாக நிலையான பொருளாதாரம் மற்றும் கோயம்புத்தூர் புகழ் மிக்க நூற்ப்பாலை நகரமாக உருவெடுக்க காரணமாக அமைந்தது. இங்கு 25000க்கு மேல் சிறு நடுத்தர பெரிய தொழிற்சாலைகள் மற்றும் நுhற்பாலைகள் உள்ளன. கோயம்புத்தூர் நீர் ஏற்றுக் குழாய் மற்றும் (Motor pump sets), இயந்திர பொறியமைப்பு கருவிகளின் சிறந்த உற்பத்தி மையமாக விளங்குகிறது. 1930ல் பைகாரா நீர்மின் திட்டம் செயல்பட தொடங்கியதன் காரணமாக கோயம்புத்தூர் நகரம் தொழில் வளர்ச்சியில் உச்சத்தை அடைந்தது.

கோயம்புத்தூர் மாவட்டம் அண்டை மாநிலமான கேரளத்திற்க்கும் புகழ்மிகுந்த உதக மண்டலத்த்திற்க்கும் நுழைவு மற்றும் முடிவு வாயிலாக அமைந்துள்ளது. மேட்டுப்பாளையத்திருந்து இயங்கும் புகழ்ப்பெற்ற மலை இரயில் இங்கிருந்து 35 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. கோயம்புத்தூரிலிருந்து ஊட்டிக்கு வழக்கமான பேருந்து போக்குவரத்துகள் உள்ளன.

மலைவளம் :

இம்மாவட்டத்தின் தட்பவெட்ப நிலைக்கும் மழைக்கும் காரணமாக அமைவது இம்மாவட்டத்தைச்சுற்றியுள்ள மலைகளே ஆகும். இம்மாவட்டத்தின் தெற்கில் உள்ளது. ஆணைமலை, வடமேற்கில் குச்சும்மலை, மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நீலகிரி மலை, வெள்ளியங்கிரி மலை உள்ளது. மற்றும் குமரிக்கல், புதுக்கல், அஞ்சநாடு பள்ளத்தாக்கு பொளாம்பட்டி மலைகள், ஆசனூர், பருகூர், பாலமலை, போன்ற மலைகள் உள்ளன. இம்மலைகளின் உயரம் 4000 அடிமுதல் 5000 அடி வரை உள்ளது, கடல் மட்டத்திலிருந்து 6000 அடிமுதல் 8000 அடிவரை உள்ளது.

வனவளம் :

கோயம்புத்தூர் மாவட்டத்தில் காடுகள் அடர்த்தியாகவும் சிறந்த உயர்ந்த மரங்களைக் கொண்டும் விளங்குகின்றன. இத்தகைய காடுகளை 8 தொகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன.1951 - ஆண்டிலிருந்து தனியாக வனத்துறை அமைக்கப்பட்டு காடுகள் பராமரிக்கப்படுகிறது. இம்மாவட்ட காடுகளின் எல்லை நீலகிரி மலை சரிவையும், மேற்கில் போலம்பட்டி தடாகம் பள்ளதாக்கு பகுதிகளில் உள்ள காடுகளையும், கிழக்கில் ஆணைமலை காடுகளையும் கொண்டுள்ளது. இதில் தேக்கு மரங்கள் அடர்ந்து காணப்படுகின்றன. பொள்ளாச்சி டாப்சிலிப் , ஆணைமலை , துணக்கடவு தொகுதிகள் என பிரிக்கப்பட்டுள்ளது. இங்கு காணப்படும் மரங்கள் 150 அடி உயரம் வரை வளர்கின்றன. மூங்கில் பெரும்பான்மையாக கோவை மாவட்டத்திலேயே கொள்முதல் செய்யப்படுகின்றன.

கனிம வளம்:

இம்மாவட்டத்தில் குறிப்பிடதக்க கனிம வள இடங்கள் மிக, கருங்கல், சுண்ணாம்பு குவார்ட்ஸ் என்னும் பொருட்கள் சிறிய அளவில் கிடைக்கின்றன.இவைகளைக் கொண்டு மதுக்கரையில் சிமெண்ட் தயாரிக்கப்படுகிறது.

வேளாண்மை :

கோவை மாவட்டம் தலைசிறந்த தொழில் மாவட்டமாக விளங்கிய போதிலும், வேளாண்மையில் தஞ்சை, திருச்சி மாவட்டங்களைப் போல சிறந்து விளங்குகிறது.மொத்த நிலபரப்பில் 65 சதவிகிதம் விவசாயம் சாகுபடி செய்யப்படுகின்றன.

நெல், சோளம், கம்பு, ராகி, திணை, சாமை வரகு, முதலியவை சாகுபடி செய்யப்படுகின்றன.பயிறு வகைகளில் துவரை உளுந்து, கொள்ளு, மொச்சை, கடலை வகைகளும் சாகுபடி ஆகின்றன.பணப்பயிர்களான பருத்தி, நிலக்கடலை, புகையிலை, கரும்பு, தேங்காய் வாழை, மஞ்சள் போன்றவைகளும் பயிராகின்றன.பயிர் செய்யும் மொத்த நிலப்பரப்பில் 1,16,000 ஹெக்டர்கள்.

கோயம்புத்தூர் பொள்ளாச்சி உடுமலைப்பேட்டை வட்டங்களில் அமராவதி, பவானி, ஆழியாறு, பாசன வசதியால் நெல் மிகுதியாக விளங்கிறது.



கோவை மாவட்ட பொது தகவல்கள்

தலைநகர் : கோயமுத்தூர்
பரப்பு : 4696.39 ச.கி.மீ
மொத்த மக்கள்தொகை : 2916620
ஆண் : 1482228
பெண் : 1434392
எழுத்தறிவு : 2018527 (69%)
ஆண் : 1113577 (75%)
பெண் : 904950 (63.1%)
மக்கள் நெருக்கம் (ச.கி.மீ) : 601
பிறப்பு விகிதம் : 15.1
இறப்பு விகிதம் : 3.6

தோற்றம் :

கிபி 1804 ம் ஆம் ஆண்டு கோவை மாவட்டம் தனி மாவட்டமாக உருவானது. இம்மாவட்டத்தின் வடக்கு எல்லையாக பெரியார் மாவட்டமும், தெற்கில் கரூர் மாவட்டமும், மேற்கில் கேரள மாநிலமும், கிழக்கில் சேலம் மாவட்டமும் அமைந்துள்ளது. 1979 - ஆம் ஆண்டு நிர்வாக வசதிக்காக கோவை மாவட்டம், பெரியார் மாவட்டம் என இரண்டாக பிரிக்கப்பட்டது. இது தமிழ்நாட்டின் மேற்கு பகுதியோரம் அமைந்துள்ளது.

உள்ளாட்சி நிர்வாகம் : மாநகராட்சி – கோயம்புத்தூர்

ஊராட்சி ஒன்றியங்கள் : 12
காரமடை, மதுக்கரை, பெரியநாயக்கன் பாளையம்,சர்க்கார்சாமகுளம், தொண்டாமுத்தூர்,அன்னூர், சூலூர், சுல்தான்பேட்டை, ஆணைமலை, கிணத்துக்கடவு, பொள்ளாச்சி (வடக்கு), பொள்ளாச்சி (தெற்கு)

பேரூராட்சிகள் : 44

ஊராட்சிகள் : 229, நகராட்சிகள் : 6, மாநகராட்சி : 1

வருவாய் நிர்வாகம் கோட்டங்கள் : 2 பொள்ளாச்சி, கோவை.

வட்டங்கள் : 6

கோவை வடக்கு, கோவை தெற்கு, மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, வால்பாறை, சூலூர்

சட்டசபை தொகுதிகள் :9

மேட்டுப்பாளையம், தொண்டாமுத்தூர், சிங்காநல்லூர், கோவை வடக்கு, கோவை தெற்கு, பேரூர், கிணத்துகடவு, பொள்ளாச்சி, வால்பாறை



கோயமுத்தூர் மாவட்டம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Dec 15, 2010 10:17 pm

கோவை மாவட்ட சமயத் திருத்தலங்கள்

பேரூர் பட்டீஸ்வரர் திருக்கோவில்

பேரூர் பட்டீஸ்வரர் திருக்கோவில் கொங்குநாட்டின் மிகப்பழம்பெரும் கோவிலாகும். “மேலை சிதம்பரம்” என வழங்கப்படுகிற இக்கோவில் கோவைக்கு மேற்கே 6 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. ஆதிசங்கரர் எழுதிய சங்கர பாராயணத்தில் இத்திருத்தலத்தின் பெருமைகள் போற்றப்படுகின்றன. பஞ்சபாண்டவர்கள் இங்கு வந்து வழிபாடு செய்திருக்கிறார்கள். அதன் பின்னரே வெள்ளியங்கிரிக்கு சென்றார்கள் என்னும் குறிப்புகள் தல புராணத்தில் இருந்து கிடைக்கின்றன. இரவாத பனை, பிறவாத புளி, புளுக்காத சாணம், எலும்பு கல்லாவது, வலது காது மேல் நோக்கியிருப்பது ஆகிய ஐந்து வகை சிறப்புகள் இத்தெய்வ தல திருத்தலத்திற்கு உண்டு. இறைவன் திருநாமம் பட்டீஸ்வரர் இறைவி பச்சைநாயகி, அரச மரம் கோவிலின் ஸ்தல விருட்சமாகும். சமயக் குரவர்களால் பாடப் பெற்று எழுந்தருளியுள்ள முருகப் பெருமானை அருணகிரிநாதரும் பாடி சிறப்பித்துள்ளார். ஆனி மாதத்தில் கிருத்திகை நாள் அன்று நடைபெறும் ‘நாற்று நடவு உற்சவம்’ பிரசித்தி பெற்றது.

ஈச்சனாரி விநாயகர்

கோவையிலிருந்து 10 கி.மீ தூரத்தில் பொள்ளாச்சி செல்லும் பிரதான சாலையில் ஈச்சனாரி விநாயகர் திருக் கோயில் அமைக்கபட்டுள்ளது. சிறியதாக இருந்து பழைய கோயிலை பின்பு பெரியதாக கட்டி கும்பாபிசேகம் நிகழ்த்தியுள்ளனர். கிழக்குப் பார்த்துள்ள கருவறையில் பெரிய தோற்றத்தில் வீற்றிருக்கிற விநாயகப் பெருமான் பக்தர்களின் நெஞ்சங்களை குளிர்வித்து அருள் வழங்குகிற வல்லமை யோடு காட்சி தருகிறார். ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி இங்கு மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஏனைய பண்டிகை நாட்களிலும் மாதத்தின் முக்கிய நாட்களிலும் இங்கு விசேச பூஜைகள் நிகழ்த்தப்படுகிறது. ஞானசம்பந்தரின், திருநாவுக்கரசரின், தேவாரங்களும், திருமூலரின் திருமந்திரமும் மற்றும் பலரின் பாடல்களும் விநாயகப் பெருமானின் பெருமையை போற்றுகின்றன.

ஆனைமலை மாசாணியம்மன் கோவில்

கோவை மாவட்டம் பொள்ளாச்சியிலிருந்து தென்மேற்கே 15 கி.மீ தூரத்தில் ஆனைமலையிலிருந்து சேத்துமடை செல்லும் பிரதான சாலையில் மாசாணியம்மன் கோவில் நுழைவு வாயில் உள்ளது. கொடுங்கோண்மையை எதிர்க்கும் போது மாரியம்மனாய் உருவெடுக்கும் இந்த மாதேவி மாசாணியம்மனாக இருந்து மகிமை புரிகிறாள். இந்த கோவில் மயான மண்ணில் அமைந்திருப்பதாலும், மூலவரான அம்மனும் மயான மண்ணில் குடிகொண்டு விளங்குவதாலும் மாசாணியம்மன் என்னும் பெயர் அழைப்புப் பெயராக அமைந்து பின்னர் நிலைபெயராகிவிட்டது.

17 அடி நீளமுள்ள பெரிய உருவமாக மேற்கில் தலைவைத்து கிழக்கில் கால்கலை நீட்டி படுத்த நிலையில் காட்சி தருகிற இந்த அம்மனின் திருக் கோலமானது பார்ப்பவர்களுக்கு மெய் சிலிர்ப்பை உண்டாக்குகிறது. இங்கு வழிபாடு செய்பவர்களுக்கு பில்லி, சூனியம், மாந்திரீகம் ஏவல் கட்டு போன்றவைகளால் பாதிப்பு இருந்தால் அவற்றிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது.

பிறரால் வஞ்சிக்கப்பட்டவர்களும் , சொத்துக்களை பரிகொடுத்தவர்களும், திருட்டு போன்ற ஏமாற்றங்களுக்கு ஆளானவர்களும் இங்கு வந்து அம்மனின் முன்னால் நின்று முறையிட்டால் எதிராளிகள் மிகுந்த தண்டனைக்கு ஆளாகின்றனர். மாசாணியம்மன் கோவிலில் தினசரி மூன்று கால பூஜைகளும் செவ்வாய், வெள்ளி நாட்களில் சிறப்பு பூஜைகளும் நடைபெறுகின்றன. தையம்மாவாசை அன்று கொடியேற்றம் செய்வித்து பதினேழாம் நாளில் குண்டம் இறங்கும் நிகழ்ச்சி சிறப்புற நடைபெற்று வருகிறது.

தண்டு மாரியம்மன் கோவில்

கோவை மாநகரில் அவினாசி நெடுஞ்சாலையில் வடக்கு நோக்கி இந்த இறைவியின் திருக் கோவில் அமையப் பெற்றுள்ளது. கொங்கு நாட்டு கோட்டைகளில் முக்கியமானதாக விளங்கிய கோயம்புத்தூர் கோட்டை 1768 லிருந்து 1791 ஆம் ஆண்டு வரை மூன்று தடவை முற்றுகையிடப்பட்டது. ஆங்கிலேய படைகளுடன் திப்பு சுல்தான் படைகள் மும்முரமாக மோதிக் கொண்டிருந்த சமயம் இதில் கலந்து கொள்ள மைசூர் படைகளும் வந்து சேர்ந்து இருந்தன. மைசூரிலிருந்து வந்த படைகளுடன் ஒரு படைக்கலமாக இந்த அம்மனின் லிங்க வடிவத்திலான உருவமும் கலந்து கொண்டு வந்து சேர்ந்து விட்டது. போர் முடிந்து புறப்படும் போது இந்த லிங்கத்தை எடுத்து சென்று விட்டனர். ஆனால் அங்கு சென்று பார்த்தால் இந்த லிங்கம் மாயமாய் மறைந்து விட்டது. மறுபடியும் இங்கு வந்து பார்த்தபோது மாரியம்மன் இங்கேயே குடியமர்ந்திருக்கின்ற அபூர்வம் அவர்களுக்கு புலப்பட்டிருக்கிறது. இதை எடுத்த செல்ல முயன்றும் அவர்களால் முடியவில்லை.

படைக்கலன்களுக்கு தண்டு என்று பொருள் அதனாலேயே தண்டுமாரியம்மன் எனும் பெயர் நிலைபெயராகிவிட்டது. ஒவ்வாரு ஆண்டும் சித்திரை மாத்தின் முதல் செவ்வாய் கிழமை தொடங்கி 13 நாட்களுக்கு பிரம்மாத்சவமும், ஆண்டு திருவிழாவும் நடைபெற்று வருகிறது. அது தவிர வருடத்தின் முக்கிய தினங்களில் சிறப்பு பூஜை நடைபெற்று வருகிறது.

பேரூர் சாந்தலிங்கர் திருமடம்

இந்து மதத்தில் தோன்றிய உட்பூசல்கள் பொருளற்ற சடங்குகள்,மூட நம்பிக்கைகள், சாதி,சமய வேறுபாடுகள் ஆகியவற்றின் காரணமாக தெற்கே பிற மதங்களான சமணமும், புத்தமும், செல்வாக்கு பெறத் தொடங்கிய காலம் அது. அறிவில் சிறந்த சமய சான்றோர்கள் வைதீக தர்மத்தை காக்கும் பொருட்டு மடாலயங்களை நிறுவி சைவ சமயம் மற்றும் வீர சைவ சமயத்திற்கு புத்துயிர் ஊட்ட தொடங்கினர். வீர சைவம் தோன்றியது கன்னட நாட்டில் பசவேசர் வீர சைவத்திற்கு புத்துயிர் கொடுத்தார். தமிழ்நாட்டில் பல மடங்கள் தோன்றின. வீரசைவம் தலையெடுத்து பரவ தொடங்கியது. வீர சைவர்களின் திருமடங்கள் தமிழ்நாட்டில் 12 உண்டு. பேரூர் மட்டும் அவற்றில் ஒன்று. இதனை நிறுவியவர் தவத்திரு சாந்தலிங்க சுவாமிகள் ஆவார். இவர் சந்தான சாரியர்கள் நால்வருள் ஒருவரான மெய்கண்ட தேவரான பரம்பரையில் வந்த துறையூர் சிவப்பிரகாசரின் மாணவராவார். 17ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தோன்றியவர். சில காலம் இத்திருமடம் முகமதியர் படையெடுப்பால் காலத்தின் வேகத்தால் இருக்கும் இடம் தெரியாமால் இருந்தது. ஆனால் சாந்தலிங்கர் இயற்றிய கொலை மறுத்தல் வைராக்கிய சதகம், வைராக்கிய தீபம் முதலான நூல்கள் அறிஞர்கள் மத்தியில் சிறந்து விளங்கியதால் இத்திருமடம் பிற்காலத்தில் சிறப்புறலாயிற்று. 19ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இம்மடத்தின் வரலாற்றில் ஒரு மறுமலர்ச்சி ஏற்ப்பட்டது. மெளவுன சுவாமிகள் இராமலிங்க சுவாமிகள், மாணிக்க சுவாமிகள் காலத்தின் மாற்றத்தில் செல்வாக்கு வளர தொடங்கியது. கொங்கு நாட்டு தனவந்தர்களின் ஆதரவினால் மடத்தின் சர்பாக பல கல்வி நிறுவனங்கள் நிறுவப்பட்டன. அவற்றில் குறிப்பிடத்த்க்கது பிரசித்தி பெற்ற பேரூர் தமிழ் கல்லூரியாகும். தற்பாதைய மடாதிபதியாக விளங்குபவர் தவத்திரு சாந்தலிங்க இராமசாமி அடிகளாவார். தவத்திரு மருதாசல அடிகளார் இளவரசு பட்டம் ஏந்தியுள்ளர்.

சிரவணபுரம் கெளமார மடாலயம்

இது இந்து மதத்தின் ஆறு உட்பரிவுகளில் கெளமாரமும் ஒன்று. முருகப் பெருமானை முதல்வனாகக் கொண்டு பக்தி நெறியைப் பரப்பும் மையங்கள் கெளமார மடாலயங்கள் என அழைக்கப் பெறும். இத்தகைய மடாலயங்களுள் மிகவும் குறிப்பிடத்தக்கது சிரவணபுரம் கெளமாரமடாலயம். கோவையை அடுத்து கணபதி அருகே அமைந்துள்ளது. வண்ணச் சரபம் புகழ் அருள்திரு தண்டபாணி சுவாமிகளின் சீடரான ராமானந்த சுவாமிகள் இதன் நிறுவனராவர். கொங்கு நாட்டின் 20-வது நூறாறாண்டின் பெரும் புலவரும், துறவியுமான தவத்திரு கந்தசாமி சுவாமிகள் இம்மடத்தின் 2-வது மடாதிபதி. இத்திருமடத்தில் உருவாகிய தவச்சீலர்களே மூன்று தலைமுறையாக பேரூர் சாந்தலிங்கர் திருமடத்து தலைவர்களாய் திகழ்கின்றனர். அந்நாளில் இம்மடத்து தலைவராக விளங்கிய தவத்திரு சுந்தர சுவாமிகள் தம் சிறுவயதிலேயே இத்திருமடத்தின் குருகுல முறைப்படி கல்வி பயின்று புலமை பெற்று துறவியானவர். தமிழுடன் கெளமாரத்தை வளர்த்து வந்தவர். வெள்ளி கிழமை தோறும் மதியம் பஜனை நடக்கிகறது. மாலை கெளமார நூல்கள் ஆராயப்படுகின்றன. இம்மடத்தின் அங்கங்களாக திகழ்பவை தண்டபாணி சுவாமி கோயிலும், கனக சபையும் ஆகும். சபாலயம், ராமானந்த சுவாமிகளும், கந்தசாமி சுவாமிகளும் சமாதி காண்டிருக்கும் இடமாகும். கனகசபை இராமானந்த சுவாமிகள் தனது குருவான தண்டபாணி சுவாமிகள் திருவுருவை வைத்து பூஜித்த இடம். மூலவர் முருகப் பெருமானுக்கு தண்டபாணி என்பது திருநாமம். உற்றுவரின் பெயர் குமரகுருபரர். கீரணம் கெளமார சபையும், வெள்ளகிணறு ஞான மணிப்பிள்ளை இராமானந்த ஆசிரமமும், முதலிபாளையம் இராமானந்த மடலயமும் இத்திருமடத்தின் கிளைகளாகும்.

கோவை ஸ்ரீ ஜெகந்நாதர் ஆலயம்

ஒரிஸ்ஸா மாநிலத்தின் பூரியில் வீற்றிருந்து அருள்பாலித்துவரும் பகவான் ஸ்ரீ ஜெகந்நாதர் தென்னிந்தியாவில் கோவை மாநகரிலும் எழுந்தருளி உள்ளார். கோவையில் அமைந்துள்ள இந்த ஸ்ரீ ஜெகந்நாதர் திருக்கோயில் கோவை மாவட்டத்தின் பெருமைகளுக்கெல்லாம் சிகரம் வைத்த்து போலாகும். கோவை நகர மக்களுக்கு மாநகரின் மையப் பகுதியான புகைவண்டி நிலையத்திலிருந்து சுமார் 8 கி.மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலையான அவினாசி சாலையில் பொறியியர் கல்லூரியின் எதிர்புறம் சுமார் 8.3 ஏக்கர் நிலப்பரப்பில் அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தால் (இஸ்கான்) கட்டப்பட்டுள்ளது. இந்த ஜெகந்நாதர் ஆலயத்தில் கும்பாபிஷேகம் பிப்ரவரி மாதம் 4ம் தேதி மிகச்சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஸ்ரீ ஜெகந்நாதர் ஆலயத்தின் கோபுரம் பூரி கோவிலின் கோபுரத்தை நினைவுபடுத்தும் வகையில் கட்டிடக் கலை நுணுக்கத்துடன் கலசம் வைணவக் கொடி, சுதர்ஸன சக்கரம் ஆகியவற்றை தாங்கி கம்பீரமாக நிற்கிறது. இந்த ஆலயத்தின் பகவான் ஸ்ரீ ஜெகந்நாதர் பலராமன் மற்றும் சுபத்ரா தேவியுடன் கெளரிதாய் மற்றும் ஸ்ரீநரசிம்மமூர்த்தி தன் பக்தன் பிரகலாதருடன் எழுந்தருளியுள்ளார்.

புனித மிக்கேல் அதிதூதர் பேராலயம்:

இது கோவை மாநகரின் மையப்பகுதியான டவுன்ஹாலில் அமைந்துள்ளது. கி•பி 16,17 நூற்றாண்டுகளில் கோவையும், அதனை சுற்றியுள்ள பகுதிகளும் மதுரை மிசன் உடன் அமைந்திருந்தன. 1650ல் கிருஸ்துவ சமயம் வேர் விட ஆரம்பித்தன. இவ்வருடத்தில் தான் முதன்முதலாக புனித பிரான்சிஸ் சவரியர் பெயரில் ஆலயம் கட்டப்பட்டது. 1773 வரை சேசு சபையை சார்ந்தவர்கள் இறை ஊழியம் செய்தனர். 1775-ல் பாரிஸ் வேத போதக சபைகளிடம் ஒப்படைக்கப்பட்டது. 1845ஆம் ஆண்டு ஏப்ரல் 3ஆம் நாள் கருமத்தம்பட்டி கோவை மாவட்டத்தின் தலைமையிடமானது. பிரேசியாக் ஆயர் கோவையில் 1850ஆம் ஆண்டு இறுதியில் மேற்றிராசனக் கோயிலுக்கு அடிக்கல் நாட்டினார். இந்த பேராலயம் கட்டி முடிக்க 17 ஆண்டுகள் ஆயின. 1867ஆம் ஆண்டு ஏப்ரல் 28ம் நாள் மேதகு தெப்பாமியா ஆயர் அவர்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. மேற்றிராசனக் கோவிலில் மூன்று மணிகளும் நேர்த்தியான மர வேலைபாடுகளும் புனித சூசையப்பர் பீடமும் உள்ளது. 1931ல் ஆலய வளாகத்தில் சிறுவாணி குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டது. 1947ம் ஆண்டு முதல் இந்திய ஆயராகிய உபகாரசாமி அவர்கள் எல்லா மக்களும் ஆலயத்தின் எல்லா பகதிகளிலும் அமரலாம் என்று ஏற்பாடு செய்தார். கோவை மக்களின் ஆயராக 1950ஆம் ஆண்டு ஏப்ரல் 26ம் நாள் மேதகு பிரான்சிஸ் சவரிமுத்து உயர்த்தப்பட்டார். 1947ஆம் ஆண்டு கோவை மறைமாவட்ட நூறாவது ஆண்டு விழா நினைவாக மேற்றிராசனக் கோயிலருகில் மேற்கு புறம் சேசுவின் திரு இருதய கெபியினை கட்டினார். கோவை மறைமாவட்ட நூற்றி ஐம்பதாவது ஆண்டு நிறைவு விழா மேதகு ஆயர் அம்ரோஸ் அவர்கள் திருநிலைப்படுத்தப்பட்ட 25 ஆண்டு நிறைவு விழா நினைவாக ஆலயம் முன்பு மண்டபம் கட்டப்பட்டது. தற்போது பேராலய பங்கின் இருதுணைப் பங்குகள் ஒன்று என்.எச் சாலையில் உள்ள புனித சவேரியர் கோயிலும் மற்றது ஆத்துப்பாலம் நஞ்சுண்டாபுரம் இட்டேரி பகுதியிலுள்ள புனித மார்டினார் ஆலயமும் ஆகும்.

கிருஸ்துவ அரசர் ஆலயம்

கொங்கு திருநாடு நீர்வளமும், நிலவளமும், பொருள் வளமும் செறிந்த நாடு. ஆங்காங்கு எழுந்துள்ள கோயில்கள் இதை காண்பிக்கின்றன. சென்ற அரை நூற்றாண்டுகளாக இறைமகன் இயேசுவின் அன்பின் ஆட்சியை பறைசாற்றி வரும் கிருஸ்துவ அரசர் ஆலயம் தற்போது அருளோடும் பொழிவோடும் கம்பீர தோற்றத்தோடும் இவ்வாலயம் எழுந்துள்ள சுமார் ஒரு ஏக்கர் நிலத்தை திருமதி சைமன் அம்மையார் தானமாக வழங்கினார். 1933 அக்டோபர் 22 கோவை மறை மாவட்ட ஆயராக இருந்த மிக்-வந்-லூயிஸ் துரினியே என்பவர் அடிக்கல் நாட்டினார். இது 27.10.1935ல் கட்டி முடிக்கப்பட்டது. சங்சர்லஸ் சர்வியோ சுவாமிகள் 1936ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் முதல் காட்டூர் கிருஸ்தவ அரசர் தேவாலய பங்கின் முதல் பங்கு தந்தையாக பங்கு பெற்றார். இவரே பங்கு மக்களின் ஆன்மீக மறுமலர்ச்சிக்கு அடிகோலியவர் இவரே பாலர், வாலிபர், கன்னியர், ஆண், பெண், முதியோர் அனைவரும் தத்தம் வயதுக்கு ஏற்றபடி பங்கு கொள்ளும் சர்பிரசாத வீரர் சபை, மரியாவின் மைந்தர் சபை ,மகளிர் சபை, கத்தோலிக்க சங்கம் தாய்மார் சபை என பல சபைகளை நிறுவி பலன் கண்டார். ஆலய பலி பீடத்திற்கே அழகு சேர்க்கும் பின்புற சுவற்றில் பதிக்கப்பட்டிருக்கும் வண்ணக்கண்ணாடி சித்திரங்களை பிரான்ஸ் தேசத்திலிருந்து வரவழைத்து அழகுற அமைத்தார். ஆலயத்தில் ஒளிப்பதற்கென முதல் மணி 1937ல் வாங்கி கோயிலின் பின்புறம் அமைக்கப்பட்டது. ஆண்டு தோறும் பெரிய வெள்ளியன்று ஏழைகளுக்கு அன்னதானம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இம்மானுவேல் ஆலயம்

வரலாற்று சிறப்புமிக்க கோவைக்கு கி.பி.1830ஆம் ஆண்டு இலண்டன் மிஸன் சங்கத்தின் மிஸனரியாக வந்தவர்கள் தான் திரு ஆடிஸ் அவர்கள். இவருடைய முயற்சியால் தான் 1831ஆம் ஆண்டு இம்மானுவேல் ஆலயம் கட்டப்பட்டது. பின்னர் 1880ஆம் ஆண்டு விரிவுபடுத்தப்பட்டது. ஆரம்ப காலத்தில் திரு.ஆடிஸ் அவர்களே கெளரவ குருவாக இருந்தார். இந்த ஆலயத்தின் 150ஆம் ஆண்டு விழா 1981 ஆம் ஆண்டு சிறப்பாக கொண்டாடப்பட்டது. பின்னர் மக்கள் வருகை அதிகரித்ததால் புதிய ஆலயம் கட்டப்பட வேண்டும் என அனைவரின் மனதிலும் ஏற்பட்டது. காலஞ்சென்ற பேராயர் பேரருள் திரு.ஜெ.தங்கமுத்து அவர்களால் 01.01.1983 புத்தாண்டு தினத்தன்று அடிக்கல் நாட்டப்பட்டது. தொடக்கத்தில் திரு. ராஜாசிங் அவர்களின் மேற்பார்வையில் கட்டப்பட்டது. பின்னர் டாக்டர். அலெக்சாண்டர், டாக்டர் இராஜேந்திரன் அவர்களின் மேலான ஆலோசனையால் கட்டப்பட்டது. இது கட்டி முடிக்க சுமார் ஒரு கோடி செலவானது. இத்தொகை முழுவதும் இந்த சபை மக்களே கொடுத்தார்கள் என்பது பெருமைக்குரியது. இதன் கீழ் அல்போனிய மேல்நிலைப்பள்ளியும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. 2001ஆம் ஆண்டு கோவை மாவட்டத்திலேயே முதல் மதிப்பெண் பெற்ற மாணவியும் இந்த பள்ளியில் பயின்றார் என்பது சிறப்புக்குறியது.

அத்தார் ஜமாத் பள்ளி வாசல்

நூறு ஆண்டுகளுக்கு முன்பு நெல்லையிலிருந்து அத்தார்விற்கும் வியாபாரிகள் சிலர் வந்து கோவை மைய பகுதியில் தங்கினர். அவர்கள் வீடுகளும் வியாபாரத்திற்கு கடைகளும் அமைத்து அதன் மூலம் அமையப்பெற்ற குடும்பமே அத்தார் குடும்பம் என அழைக்கப்பட்டது. இந்த பள்ளி வாசல் முதன் முதலில் ஓலை மூலமே அமைத்தனர். அதன்பின் கி.பி.1900ல் இது பெரிய பள்ளி வாசலாக கட்ட தொடங்கப்பட்டது. தற்போது தமிழ்நாட்டில் பெரிய பள்ளி வாசலாக 1904ல் உருவானது முதலில் 100 பேர் மட்டுமே தொழ முடியும். தற்போது மூன்றாயிரம் பேர் தொழக்கூடிய விதத்தில் அமைந்துள்ள. இதன் பராமரிப்பில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக கடைவீதியில் ஜெமிசாதர்கா என்றும் திருச்சி ரோட்டில் ஜங்கர் பீர்தர்கா என்றும் உள்ளது. இதன் நிர்வாகத்தில் ஆண்,பெண் உயர்நிலை பள்ளிக்கூடமும் நடைபெற்று வருகிறது.

ஹீதயாத்து இஸ்லாம் ரபிஹீய்யா ஜமாத் பள்ளி வாசல்

கோவை மாநகரின் இருதயமாக விளங்கிய கோட்டை மேடு மைசூர் திப்பு சுல்தானின் கோட்டை கொத்தலங்கள் இருந்தமையால் இன்றும் கோட்டை மேடு என்று அழைக்கப்படுகிறது. இந்து முஸ்லீம் மத ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் அமைந்துள்ள இடத்தில் இப்பள்ளி வாசல் உள்ளது. இந்த பள்ளி வாசலை சுற்றிலும் கோயில்கள் சர்ச்சுக்களும் அமைந்துள்ளன. இந்த பள்ளி வாசல் மைசூர் திப்பு சுல்தானால் 1855-ல் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. ஆரம்பத்தில் வெறும் மட்டைகளால் வேய்ந்த பள்ளி வாசலாக இருந்த்து. அப்போது நாற்பது பேர் மட்டுமே தொழ முடியும் இதை ஒரு முஸ்லீம் பெரியவர் பராமரித்து வந்தார் பின்னர் இப்பகுதியில் வாழ்ந்த மர்ஹிம் ஹாஜி முகமது பிள்ளை ராவுத்தரிடமும் அவரிடம் இணைத்து வாணிபம் செய்தவர்களிடமும் இப்பள்ளி வாசலை ஒப்படைதார். அன்று முதல் அப்பள்ளி வாசல் சிறிது சிறிதாக வளர்ந்தது. பின்னர் 1910-ல் வசித்த குடும்பங்கள் ஒருமித்து ஹீதயாத்து இஸ்லாம் ரபிஹீய்யா ஜமாத் என்ற நிறுவனத்தை அமைப்பு முறையோடு செயல்படுத்தி தமிழகத்திலேயே சிறப்பு மிக்க பள்ளி வாசலாக உருவாக்கினார். அக்காலத்தில் சிமெண்ட் இல்லாமையால் மட்டி காரை சுண்ணாம்பு போன்றவற்றை கொண்டே இப்பள்ளி வாசலை கட்டி முடித்தனர். தற்போது இதன் மூலம் ஒரு மேல்நிலைப் பள்ளியும் அரபிக் கல்லூரியும் மகளிர் தையற்பயிற்சி நிலையமும் சிறப்பாக நடைப்பெற்று வருகிறது.

குருத்துவார கோயில் (சிங்)

கோவை மாநகரில் அனைத்து மதத்தினரும் வழிபடும் வகையில் சீக்கியர்களின் புனித கோயிலும் அமைந்துள்ளது. இந்த குருத்துவார கோயில் 1972-ல் ராய்சாப் கிண்லால் என்ற இந்துவின் தலைமையில் அப்போது இருந்த 7 சீக்கிய குடும்பங்களும் சேர்ந்து கட்டுமான பணி தொடங்கப்பட்டு 1973-ல் முடிக்கப்பட்டது. இந்த கோயிலின் சார்பில் இலவச மருத்துவமனையும், செயல்பட்டு வருகிறது. அனைத்து மதத்தினரும், இங்கு வழிபாடு செய்கின்றனர். தற்போது 150க்கு மேற்பட்ட சீக்கிய குடும்பங்கள் கோவை மாநகரில் வசித்து வருகின்றனர். சீக்கியர்களின் புனித பண்டிகையான வைசாகி பண்டிகையும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

ஜெயின் கோவில்

பக்தி என்னும் எண்ணத்தினால் சூழபட்ட பக்தி குளமாகிய தேவாதி தேவர்களின் அன்பினால் நிறைந்த புனித பூமியாகிய தென்னிந்தியா பிரதேசத்தில் உள்ள தமிழ்நாட்டின் ஒரு முக்கியமான வியாபார நகரமாகிய கோயம்புத்தூரில் உள்ள ரங்கே கௌண்டர் தெருவில் ஸ்ரீ ராஜஸ்தான் ஜைன ஸ்வேதம்பர் மூர்த்தி பூஜக்(உருவ வழிபாடு பூஜை) சங்கத்தினர் புனிதாமான பரந்த பூமி வளாகத்தில் ஒரு பிரமாண்டமான சித்திர வேலைபாடுள் மற்றும் குளிர்ந்த நிலவு போல் கண்ணை கவரும் மேற்கிந்திய அழகிய வெள்ளைநிற பிரகாசமான பளிங்கு கற்களினால் ஆகாயத்தை ஈர்க்கக்கூடிய வசீகரமான சிகரம் போல் ஜைன கோவில் நிறுவப்பட்டுள்ளது. நவீனமான இந்த ஆலயம ஜைனதுவதின் கடவுள்களின் ஒருமித்த உருவங்களை பிரதிபலிக்கும் இந்து மதத்தின் மூர்த்திகளின் கண்காட்சி ஒரு எடுத்துகாட்டகவும் ஜைன கோவிலின் சித்திர கலைகள் மனதை ஈர்க்கும்படியாகவும்,வாஸ்து கலைக்கு ஒரு கடலாகவும் இணையற்ற எடுத்துகாட்டகவும் விளங்குகிறது. நவீன தேவாலயம் மூல நாயகன் பகவான் ஸ்ரீ சுபாஸ்ர்வநாத் சுவாமி அவார் இவர் மக்களின் பிரகாசமான வாழ்வுக்கும் வளர்ச்சிகளும் அன்பை பொழிபவரகவும் வீற்றிருக்கிறார்.இந்த பிரமாண்ட கோவில் 101 அடி நிளமும் 41 அடி அகலமும் கொண்டதாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது.இங்கு பஞ்ச உலோகத்தால் ஆனா கிரஹ சிலைகளும் உள்ளது.கர்ப கிரஹதிற்கு வெளியே மூல நாயகன் ஸ்ரீ சுபர்ஸ்வநாத் பகவானின் அதிர்ஷ்ட தேவதை ஸ்ரீ மாதங்யக் மற்றும் அதிர்ஷ்ட தேவதை ஸ்ரீ சாந்தி தேவி ஆகிய இரண்டு அழகிய அமைதி அளிக்கு பெண் தெய்வங்களும் விற்றிருக்கின்றன. புகழ்மிக்க கோயம்புத்தூர் நகரின் அழகிய உற்சாகம் மிக்க தட்பவெட்ப சூழ்நிலையில் பூஜைக்கும் வணக்கத்திற்கும் உரிய ஆட்சாரிய பகவான் ஆன்மிகவாதி ஸ்ரீமத் விஜயகாலபுர்ன சுரிஸ்வர்ஜி,மகராஜ் சாஹிப் சுப்பிரீயர் ஸ்ரீ கால பிரம்ம விஜய ஜி மற்றும் பலரால் புனித நாளில் 9.12.1996 அன்று காலை சூரியோதய வேலையில் 8.00 மணி 11 நிமிடத்தில் கும்பாபிஷேகம் நிறைவேறியது.



கோயமுத்தூர் மாவட்டம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Dec 15, 2010 10:20 pm

கோவை மாவட்ட வரலாற்று சிறப்பிடங்கள்


தொல்பழங்கால ஓவியங்கள் வெள்ளருகம் பாளையம், வேடர் பாத்தி,சோமனூர் குமிட்டிபதி,பதிமலை ஆகிய ஊர்களின் தொல்பழங்கால ஓவியங்கள் உள்ள குகைகள் உள்ளன.இக் குகைகளில் வெள்ளருகம்பாளைய குகை 400 அடி உயரத்தில் உள்ளது.மற்ற குகைகள் தரைப்பகுதியில் உள்ளன இந்த ஓவியங்கள் கி.மு 1000 – கி.பி 100 வரையிலான காலகட்ட்தை சேர்ந்தவை.வேட்டை கட்சிகள் சண்டை கட்சிகள்,நடனக்கட்சிகள், தேர்வடிவம்,கட்டிடங்கள் ஆகியவை வரையப்பட்டுள்ளன. அரசி,புத்தர்,மைத்ரேயர் ஆகிய பொம்மைகள் கிடைத்துள்ளன. இங்குள்ள கோவில் கல்வெட்டுக்கள் இவ்வூரின் வரலாற்றை அறிய உதவுகின்றது. நாகேஸ்வரம் (சின்ன கோவில்),திருமலைக்கோயில்,முட்டத்து அம்மன் கோயில் ஆகிய கோயில்கள் பழமை வாய்ந்தவை. இங்கு நிலை பெற்றுருந்த கட்டிடங்கள் அழிந்துவிட்டன.அவை கி.பி 8 ஆம் நூற்றாண்டை சார்ந்தவை.

பேரூர்

இவ்வூர் கோவையிலிருந்து 6 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இங்கு பெருங்கற்காலம் முதல் மக்கள் வாழ்ந்துள்ளனர் அகழ்வில் முதுமக்கள், தாழிகள். கல்மணிகள், கட்டிடங்கள் ஆகியவை கிடைத்துள்ளன. கி.பி. 7-ம், 8-ம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த தாய்வார் எழுவர் சிற்பங்கள் இங்கு வழிபடப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் அரிதாக கிடைக்கின்ற இலகுலசர் சிற்பம் இங்கு இருந்தது. இவ்வூரில் 200 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டு இருந்த 2 அணைகளும் உள்ளன. வெள்ளலூர் கொங்கு நாடு யவனர்களுடன் கொண்டிருந்த வாணிபத் தொடர்பில் வெள்ளலூர் பெரும்பங்கு வகிக்கிறது. வெள்ளலூரில் ரோமானிய காசுகள் மட்டுமின்றி அவர்கள் விட்டுச்சென்ற அணிகலன்களும் கிடைத்துள்ளன. 9-ம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் 19 - ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் இவ்வூரில் 1000-த்திற்கும் அதிகமான ரோமானிய காசுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவ்வணிகலன்களில் கணையாழி, கல்பதித்த கணையாழி, தாயத்துகள் ஆகியவை அடங்கும். இவை அனைத்தும் பொன்னால் செய்யப்பட்டவை. இவை மட்டுமின்றி குதிரையின் உருவம் வடிக்கப்பெற்ற கார்னீலியம் கல்லும் கிடைத்துள்ளது.

திருமுருகன் பூண்டி

இவ்வூரில் முருகநாதர் கோவில், திருமால் கோவில், நீலகண்டி அம்மன் கோவில் ஆகிய கோவில்கள் உள்ளன. இக்கோவில்களில் 60 க்கும் மேற்பட்ட கல்வெட்டுக்கள் உள்ளன. மன்றாட்டு, அடிக்கீழ்த்தளம் ஆகியவை பற்றிய கல்வெட்டுக்கள் குறிப்பிடத்தக்கவை. இவ்வூரில் கபாலீஸ்வரார் கோவில், பெரியம்மன் கோவில், அக்கசாலீஸ்வரர் கோவில், சுந்தரபெருமாள் கோவில் ஆகிய கோவில்கள் உள்ளன. அக்கசாலீஸ்வரர் கோவில் பொற்க்கொள்ளர்களால் கட்டப்பட்டது. இவ்வூரில் உள்ள ஐய்யனார் உருவம் மனைவியருடன் வடிக்கப்பெற்றள்ளது. இச்சிற்பம் 10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. அன்னூர் இவ்வூரில் பண்டைய நாளில் மன்னியூர் என்று அழைக்கப்பெற்று வந்தது. இங்குள்ள மன்னீஸ்வரர் கோவிலில் உளள கல்வெட்டுக்களில் வரலாற்றுச் செய்திகள் மிகுதியாக உள்ளன. இந்த கல்வெட்டுக்களில் வெள்ளாளர் புலவர், குயவர், பாரசிவர், பிராமணர், ஆகியோர் குறிக்கப்பெறுகின்றனர்.

இராசக்கேசரிப் பெருவழி :

இப்பெருவழி முதலாம் ஆதித்தக் சோழன் காலத்தில் போடப்பட்டது. பெருவழி காட்டுப் பகுதியில் அமைந்துள்ளது. இங்குள்ள கல்வெட்டுக்கள் வடமொழியிலும் தமிழிலும் பொறிக்கப்பட்டுள்ளன. இந்தியாவிலேயே காலத்தால் முற்பட்ட பெருவழி இதுவே. இக்கல்வெட்டில் அழகிய வெம்பாவும் உள்ளது.

திருநிழலு மன்னுயிருஞ் சிறந்தடைப்ப
ஒரு நிழல் வெண்டிங்கள் போலோங்கி
இருநிழல போல் வாழியர் கோச்சோழன்

இப்பெருவழி 30 அடி அகலம் கொண்டது. இரண்டு கி.மீ நீளமுடையது.

ஆணைமலை :

இவ்வூர் ஆழியாற்றங்கரையில் உள்ளது சோமேஸ்வரர் கோயில், ஆணைக்கீஸ்வரமுடையார் கோயில், அம்மன்கோயில் ஆகிய கோயில்கள் உள்ளன. இக்கோயில்கள் கொண்ட இவ்வூர் நன்னனூர் என்றழைக்கப்பெறுகின்றது. ஆதனால் பெண்கொலை புரிந்த நன்னன் ஆட்சியில் இவ்வூர் இருந்தது எனலாம். இவ்வூரில் ரோமானியக் காசுகள் கிடைத்துள்ளன. பொள்ளாச்சி, வடபூதிநத்தம் ஆகிய ஊர்களில் ரோமானியக் காசுகள் கிடைத்துள்ளன. இப்பகுதியில் பெருங்கற்சின்னங்கள் மிகுதியும் உண்டு.

சமணப்பள்ளிகள் :

ஆழியாற்று அணைப்பகுதியில் உற்புறத்தில் ஆதாழி (ஆத்தாஞ்ழி) அம்மன் கோயில் உள்ளது. இங்கிருக்கும் தீர்த்தங்கரரை அம்மனாக்கி வழிபாடு செய்கின்றனா. இங்குள்ள குகையில் சமணப்படுக்கைகள் உள்ளன. திருமூர்த்திலை அமணலிங்கேஸ்வரர் கோயிலும் அத்தகையதே.

அமராவதி ஆற்றங்கரை :

இவ்வாற்றின் கரை நெடுகிலும் பாண்டியர் குழிகள் பெருங்கற் சின்னங்கள் உள்ளன. கொழுமம், குமரலிங்கம் (குமரங்க பீம சதுர்வேதி மங்கலம்) கல்வாடிபுத்தூர் காரத்தொழு, சோழமாதேவி, கடத்தூர் ஆகிய ஊர்கள் சோழர் காலத்தில் செல்வாக்கு பெற்றிருந்த ஊர்கள். வீரசோழன் (மன்னன்) பிறந்தநாளும் சூரிய கிரஹணமும் ஒரே நாளில் வந்தமையால் ஏற்பட்ட பிரம்மஹத்தி கோடத்தைப் போக்க கொழுமத்தில் வீரசோழிஸ்வரர் கோயில் என்ற கோயிலைக் கட்டினான்.

மருதமலை:

கோவையிலிருந்து வடமேற்கே 12 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. முருக கடவுளின் ஏழாவது படை வீடாக சிறப்பு பெற்றுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாக இருக்கிற இந்த மலையின் மத்திய பகுதியில் மருதாசலக் கடவுளின் திருக்கோயில் மகிமையோடு விளங்குகிறது. அடிவாரத்தை கடந்து மேலே சற்று தூரம் சென்றவுடன் தான்தோன்றி விநாயகர் காட்சியளிக்கிறர். உளிபடாத இவரின் உன்னத தோற்றம் உள்ளத்தை உதயக்கதிராக தீண்டுகிறது. கோயிலின் வலதுபுறம் தலவிருட்சமாகிய மருதமரம் உள்ளது. மருதமலை பற்றிய குறிப்பு காணப்படுகிறது வெள்ளியங்கிரியை சிவபெருமானின் உருவமாகவும் நீலி மலையை பார்வதியின் உருவமாகவும், மருதமலை முருகனின் உருவமாகவும், ஒப்பிட்டு மும்மூர்த்திகளாகப் பேரூர் தலபுராணம் கணக்கிடுகிறது. கருவரையின் உள்ளேயிலிருந்து கிழக்கு நோக்கிய வண்ணம் தண்டாயுதம் கையில் கொண்டு அருள் ததும்பிய மருதாசல மூர்த்தி காட்சி தருகிறார் பரவசம் மிகுதியாகி ஈடு இணையில்லாத பக்தியின்பம் உள்ளத்தில் பிரவகித்து உடலெங்கும் நிறைகிறது. மருதமலை முருகனை வழிபட்டு பாம்பாட்டி சித்தர் தவம் மேற்கொண்ட குகையாகும். இது கொங்கு நாட்டு சித்தர்களின் முக்கியமானவராக விளங்கிய அவர் இந்த இறைவனின் அணுகிரம் பெற்று இங்கேயே ஐக்கியமாகிவிட்டார். தினசரி பூஜைகளும், முருக கடவுளுக்கு உகந்த நாட்களில் சிறப்பு பூஜைகளும், முக்கிய நாட்களில் நாள் முழுக்க பூஜைகளும் நடைபெறுகிறது.



கோயமுத்தூர் மாவட்டம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Dec 15, 2010 10:21 pm

கோவை மாவட்ட சுற்றுலா தளங்கள்

வெள்ளியங்கிரி மலை:

கோவையிலிருந்து மேற்கே 37 கி.மீ தூரத்தில் பூண்டி எனப்படும் வெள்ளியங்கிரித் திருத்தலம் அமைந்துள்ளது. மேற்குதொடர்ச்சி மலைகளின் பிரம்மாண்டமான வடிவங்களில் ஒரு பகுதியாகவிளங்குகிற இங்கே சிவபெருமான் லிங்கத்திரு மேனியராக எழுந்தருளியுள்ளார் அடிவாரத்திலிருந்து அடுக்காக தொடரும் மலைகளுக்கு அப்பால் உயரமான இடத்தை தனக்குரிய தலமாக தேர்ந் தெடுத்துள்ளார் நில மட்டத்திலிருந்து 5400 மீட்டர் தூரத்திலும், 1200 மீட்டர் உயரத்திலும் வெள்ளிங்கிரி ஆண்டவன் குகைகோயில் பக்தி மணம் கமல அமையப்பெற்றுள்ளது. கொங்கு நாட்டின் மேற்கு எல்லையாக விளங்குகிற இந்த மலை கோயிலுக்கு வருடத்தின் மாசி, பங்குனி, சித்திரை குறிப்பிட்ட மாதங்களில் மட்டும்தான் பக்தர்கள் சென்று வருகின்றனர். வெள்ளை விநாயகர் ஆலயம், வழுக்குபாறை, பாம்பாட்டிமலை, கைதட்டிசுனை, சீதை வனம், பொய்ப்பாலம் நாம் செல்கிற வழிகளில் மலைகளின் முக்கிய அம்சக விளங்குகிறது. வெள்ளிங்கிரி மலைக்கும் பின்புறம் இருப்பது கேரளபகுதியாகும். வெள்ளிங்கிரியின் தென்பகுதியில்தான் சிறுவாணி அணைக்கட்டும் உள்ளது. இத்திருத்தலத்தை அருணகிரி நாதார் பக்தி உள்ளத்தால் பூஜித்து பாடியுள்ளார்

ஆணைமுடி:

ஆணைமுடி தென்னகத்திலேயே அதிக மழை பெறும் வளமான காட்டுப்பகுதி இங்கு ஆண்டுக்கு 203 செ.மீ. மழை பெய்கிறது. நீலகிரி லங்கூர் குரங்கு, சிங்கவால் குரங்கு நீலகிரி, டாஹர் எனும் மலையாடுகள் உள்ளன. இது 2000 மீட்டர் உயரமுள்ளள சிகரமாகும்.

சிறுவாணி அணைக்கட்டு :

பாவனி நதியின் உபநதியான சிறுவாணி கேரளத்தில் பாலக்காடு மாவட்டத்திலுள்ள மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உற்பத்தியாகிறது. அங்கு அட்டப்பாடி பள்ளத்தாக்கு வழியாக வடகிழக்கே ஓடி நீலகிரி மலையடிவாரத்தில் உள்ள மேட்டுப்பாளையத்திற்கும் மேற்கே பவானியுடன் கலக்கிறது. இந்த சிறுவாணி ஆற்றில் ஒரு சிறு அணைகட்டி அந்த அணையில் தேங்கிய நீரை ஒரு குகை மூலம் மலையின் மறுபுறம் அதாவது கிழக்குப் பக்கம் கொண்டு வந்து கோவை நகருக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. அணையின் கட்டுமானப்பணி 1927 – தொடங்கப்பட்டு 1931-ல் முடிக்கப்பட்டது. அணையின் உயரம் 23 அடிகளாகும். நகர வளர்ச்சி, மக்கள்தொகைப் பெருக்கம் இவற்றின் காரணமாக ஏற்பட்ட குடிநீர்ப் பற்றாக்குறையைப் போக்க இந்த அணைக்குக் கீழே 2.2 கி.மீட்டர் தொலைவில் மூத்திகுளம் நீர்வீழ்ச்சி நீர், கோபி ஆறு, அணசோலை ஆறு மற்றும் பட்டி ஆறு ஆகியவற்றின் நீர்களைத் தேக்கும் விதத்தில் 1984 - ஆம் ஆண்டு புதிய அணை கட்டப்பட்டது. இவ்விரு அணைகளிலிருந்தும் பல மில்லியன் காலன் குடிநீர் கோவை மாநகருக்கு விநியோகம் செய்யப்பட்டுகிறது. இந்தியாவின் வேறெந்த நகருக்கும் கிடைக்காத தூய்மையான, சுவைமிக்க இச்சிறுவாணி நீர் கோவை மக்களுக்குக் கிடைத்த அரிய வரப்பிரசாதமாகும். கோவைக்கு மேற்கே 37 கி.மீ தொலைவில் அமைந்துள்ள சிறுவாணி அணைக்கட்டும், நீர்விழ்ச்சி, இவ்வழியில் அமைந்துள்ள கோவை குற்றாலம் எனப்படும் முத்தி குளம், வைதேகி நீர்விழ்ச்சியும் காணத்தக்கன.

நொய்யல் :

வெள்ளிங்கிரி மலையில் உற்பத்தியாகும் நொய்யல் ஆறு பெரியாறு சின்னாறுகளுடன் கலக்கிறது. பேரூர் வழியில் ஓடி வரும் போது காஞ்சி மகாநதி என்றும் சிறப்பு பெருகிறது. இது கோவை நகர பகுதிகளில் 15 கி.மீ. பாய்கிறது. பருவமழையால் மட்டுமே இதில் தண்ணீர் வரும்.

அமராவதி ஆறு :

கேரள மாநிலம் அஞ்சநாடு பள்ளத்தாக்கில் இது உற்பத்தியாகி ஆணைமலை, பழனிமலை பள்ளத்தாக்கு வழியாக இது ஓடி வருகிறது. தாராபுரம் வழியாக ஓடி வரும்போது உப்பாறு இத்துடன் சேருகிறது.

ஆழியார்:

இது பொள்ளாச்சி வட்டத்திலுள்ள ஆணைமலை பகுதியில் உற்பத்தியாகிறது. இத்துடன் பல காட்டாறுகளும் சேர்ந்து கொள்கிறது. இது கோவை மாநகர குடிநீர் திட்டத்தில் முக்கிய பங்கு வருகிறது.



கோயமுத்தூர் மாவட்டம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Dec 15, 2010 10:28 pm

மாவட்ட முக்கிய அதிகாரிகளின் தொலைபேசி எண்கள்

வ.எண்பதவிதொலைபேசி (அலுவலகம்)தொலைபேசி (வீடு)
1மாவட்ட ஆட்சியர் 230132023011142222230 2222630
2மாவட்ட வருவாய் அலுவலர் 2300035 2216417
3திட்ட அலுவலர் மாவட்டஊரக வளர்ச்சி முகமை 2301547 2221218
4துணை ஆணையாளர்(கலால்) கோயம்புத்தூர் 2300037 4387747
5நேர்முக உதவியாளர்(பொது) 2301523 2217465
6வருவாய் கோட்டாட்சியர் பொள்ளாச்சி; 04259 - 224855 224515
7வருவாய் கோட்டாட்சியர் கோயம்புத்தூர் 2300424 2221900
8தனிதுணை ஆட்சியர் (மக்கள் குறைதீர்க்கும் பிரிவு)2304204 Extn.25 ---------
9கூடுதல் நேர்முக உதவியாளர்(நிலம்) 2301114 Extn.51 954546-246352
10 மாவட்ட வழங்கல் அலுவலர்2300569 2302539
11மாவட்ட பிற்படுத்தபட்டோர் நல அலுவலர் 2300404 Extn.36 ---------
12மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர்2301114 Extn.23 2522852
13மாவட்ட வருவாய் அலுவலர்(முத்திரைதாள்கள்) 2303114 aExtn.35 ---------
14மாவட்ட கருவூல அலுவலர் 2303096 --------
15மாவட்ட தேர்தல் அலுவலர் 2303786 --------
16துணை இயக்குநர்(நிலஅளவை) 2300293 --------
17வட்டாட்சியர்,கோவை (தெ) 2214225 2396444
18வட்டாட்சியர்,கோவை(வ) 2217831 2221488
19வட்டாட்சியர், (மேட்டுப்பாளையம்)04254-222153 ---------
20வட்டாட்சியர், சூலூர் 0422-253113 2681000
21வட்டாட்சியர், பொள்ளாச்சி 04259-226625 224445
22வட்டாட்சியர்,வால்பாறை 04253-222305 222392




கோயமுத்தூர் மாவட்டம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Dec 15, 2010 10:31 pm

மாவட்ட முக்கிய அதிகாரிகளின் மின் அஞ்சல் விவரம்.



வ.எண்.பதவிமின் அஞ்சல் முகவரி
1மாவட்ட ஆட்சியர் collrcbe@nic.in
2மாவட்ட வருவாய் அலுவலர்dro-tncbe@nic.in
3திட்ட அலுவலர் மாவட்டஊரக வளா;ச்சி முகமைdrdacbe@nic.in
4துணை ஆணையாளர்(கலால்) கோயம்புத்தூர்excise-tncbe@nic.in
5நேர்முக உதவியாளர்(பொது)collrcbe@tnstate.nic.in
6வருவாய் கோட்டாட்சியர் பொள்ளாச்சிsc_poy@sancharnet.in
7வருவாய் கோட்டாட்சியர் கோயம்புத்தூர்rdocoimbatore@sancharnet.in
8தனிதுணை ஆட்சியர் (மக்கள் குறைதீர்க்கும் பிரிவு)sdccbe@nic.in
9கூடுதல் நேர்முக உதவியாளர்(நிலம்)apalands-tncbe@nic.in
10மாவட்ட வழங்கல் அலுவலர்dso.cbe@tn.gov.in
11மாவட்ட பிற்படுத்தபட்டோர் நல அலுவலார்dbcwo-tncbe@nic.in
12மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர்adwo-tncbe@tnstate.nic.in
13மாவட்ட வருவாய் அலுவலர்(முத்திரைதாள்கள்)drostamps-tncbe@nic.in
14மாவட்ட கருவூலஅலுவலர்dtocbe@nic.in
15மாவட்ட தேர்தல் அலுவலர்deo_coimbatore@yahoo.co.in
16துணை இயக்குநர்(நிலஅளவை)adsurcbe@nic.in
17வட்டாட்சியர்,கோவை (தெ)cbesouthtk@sancharnet.in
18வட்டாட்சியர்,கோவை(வ)cbenorthtk@sancharnet.in
19வட்டாட்சியர், (மேட்டுப்பாளையம்)cbemtptk@sancharnet.in
20வட்டாட்சியர், பொள்ளாச்சிpoytaluk@sancharnet.in
21வட்டாட்சியர்,வால்பாறைvaltaluk@sancharnet.in



தகவல்கள் மூலம்: http://www.coimbatore.tn.nic.in



கோயமுத்தூர் மாவட்டம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக