புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 05/05/2024
by mohamed nizamudeen Today at 12:34 am

» நாவல்கள் வேண்டும்
by Jenila Yesterday at 10:47 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 10:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:25 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 10:19 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 10:16 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 10:16 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 10:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:12 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:12 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 10:10 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 10:09 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:04 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:38 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 5:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Yesterday at 4:32 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 2:51 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 3:15 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 3:05 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 3:01 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 10:57 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Fri May 03, 2024 12:58 am

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 6:04 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 5:36 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 5:28 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 8:50 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 8:44 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 7:42 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:40 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 11:38 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 11:37 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:54 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:51 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:50 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:49 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:46 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:43 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:41 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நாகதோஷம் தீர்ப்பார் திருத்தாளீஸ்வரர் Poll_c10நாகதோஷம் தீர்ப்பார் திருத்தாளீஸ்வரர் Poll_m10நாகதோஷம் தீர்ப்பார் திருத்தாளீஸ்வரர் Poll_c10 
32 Posts - 52%
ayyasamy ram
நாகதோஷம் தீர்ப்பார் திருத்தாளீஸ்வரர் Poll_c10நாகதோஷம் தீர்ப்பார் திருத்தாளீஸ்வரர் Poll_m10நாகதோஷம் தீர்ப்பார் திருத்தாளீஸ்வரர் Poll_c10 
26 Posts - 43%
M. Priya
நாகதோஷம் தீர்ப்பார் திருத்தாளீஸ்வரர் Poll_c10நாகதோஷம் தீர்ப்பார் திருத்தாளீஸ்வரர் Poll_m10நாகதோஷம் தீர்ப்பார் திருத்தாளீஸ்வரர் Poll_c10 
1 Post - 2%
Jenila
நாகதோஷம் தீர்ப்பார் திருத்தாளீஸ்வரர் Poll_c10நாகதோஷம் தீர்ப்பார் திருத்தாளீஸ்வரர் Poll_m10நாகதோஷம் தீர்ப்பார் திருத்தாளீஸ்வரர் Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
நாகதோஷம் தீர்ப்பார் திருத்தாளீஸ்வரர் Poll_c10நாகதோஷம் தீர்ப்பார் திருத்தாளீஸ்வரர் Poll_m10நாகதோஷம் தீர்ப்பார் திருத்தாளீஸ்வரர் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நாகதோஷம் தீர்ப்பார் திருத்தாளீஸ்வரர் Poll_c10நாகதோஷம் தீர்ப்பார் திருத்தாளீஸ்வரர் Poll_m10நாகதோஷம் தீர்ப்பார் திருத்தாளீஸ்வரர் Poll_c10 
75 Posts - 62%
ayyasamy ram
நாகதோஷம் தீர்ப்பார் திருத்தாளீஸ்வரர் Poll_c10நாகதோஷம் தீர்ப்பார் திருத்தாளீஸ்வரர் Poll_m10நாகதோஷம் தீர்ப்பார் திருத்தாளீஸ்வரர் Poll_c10 
26 Posts - 21%
mohamed nizamudeen
நாகதோஷம் தீர்ப்பார் திருத்தாளீஸ்வரர் Poll_c10நாகதோஷம் தீர்ப்பார் திருத்தாளீஸ்வரர் Poll_m10நாகதோஷம் தீர்ப்பார் திருத்தாளீஸ்வரர் Poll_c10 
4 Posts - 3%
Baarushree
நாகதோஷம் தீர்ப்பார் திருத்தாளீஸ்வரர் Poll_c10நாகதோஷம் தீர்ப்பார் திருத்தாளீஸ்வரர் Poll_m10நாகதோஷம் தீர்ப்பார் திருத்தாளீஸ்வரர் Poll_c10 
3 Posts - 2%
Jenila
நாகதோஷம் தீர்ப்பார் திருத்தாளீஸ்வரர் Poll_c10நாகதோஷம் தீர்ப்பார் திருத்தாளீஸ்வரர் Poll_m10நாகதோஷம் தீர்ப்பார் திருத்தாளீஸ்வரர் Poll_c10 
3 Posts - 2%
Rutu
நாகதோஷம் தீர்ப்பார் திருத்தாளீஸ்வரர் Poll_c10நாகதோஷம் தீர்ப்பார் திருத்தாளீஸ்வரர் Poll_m10நாகதோஷம் தீர்ப்பார் திருத்தாளீஸ்வரர் Poll_c10 
3 Posts - 2%
prajai
நாகதோஷம் தீர்ப்பார் திருத்தாளீஸ்வரர் Poll_c10நாகதோஷம் தீர்ப்பார் திருத்தாளீஸ்வரர் Poll_m10நாகதோஷம் தீர்ப்பார் திருத்தாளீஸ்வரர் Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
நாகதோஷம் தீர்ப்பார் திருத்தாளீஸ்வரர் Poll_c10நாகதோஷம் தீர்ப்பார் திருத்தாளீஸ்வரர் Poll_m10நாகதோஷம் தீர்ப்பார் திருத்தாளீஸ்வரர் Poll_c10 
2 Posts - 2%
manikavi
நாகதோஷம் தீர்ப்பார் திருத்தாளீஸ்வரர் Poll_c10நாகதோஷம் தீர்ப்பார் திருத்தாளீஸ்வரர் Poll_m10நாகதோஷம் தீர்ப்பார் திருத்தாளீஸ்வரர் Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
நாகதோஷம் தீர்ப்பார் திருத்தாளீஸ்வரர் Poll_c10நாகதோஷம் தீர்ப்பார் திருத்தாளீஸ்வரர் Poll_m10நாகதோஷம் தீர்ப்பார் திருத்தாளீஸ்வரர் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாகதோஷம் தீர்ப்பார் திருத்தாளீஸ்வரர்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 20, 2009 1:18 am

நீக்கமற நிறைந்துள்ளவனான அரன் எனும் சிவமும், யாதுமாகி நின்றாடும் காளியும் அருவமாக தங்களை வெவ்வேறு தலங்களில் நிலை நிறுத்திக் கொள்வர். அப்படிப்பட்ட தலங்களில் ஒன்று அரன்வாயல்.

சோழப் பெருவேந்தன் கரிகாலன் தன் அகத்தில் கயிலைப்பிரானை விடாது பூஜித்தான். எதிரி யாரோ தன்னை சீண்டிப் பார்க்க வருவதை ஒரு நள்ளிரவுக் கனவில் உணர்ந்தான். பனை மர உயர சர்ப்பங்கள் அவனைத் துரத்தி வருவதுபோல காட்சிகள். உடனே சிவனின் கண்டத்தை சுற்றிக் கொண்டிருந்த ராஜ சர்ப்பத்தை வணங்கினான். அது குறும்ப நாட்டு மன்னன் என்ற எதிரியின் திசையை குறிப்பாக காண்பித்தது. அதே சமயத்தில் தொண்டை மண்டலத்து குறும்ப அரசன் ‘காளி எனக்கு உத்தரவு கொடுத்து விட்டாள். கரிகாலனை இம்முறை அழிப்பது என உறுதி பூண்டுள்ளேன். படையைத் திரட்டுங்கள்.

இன்று இரவுக்குள் திருவள்ளூரைத் தாண்டி திருப்பாசூர், திருவாலங்காட்டை அடைந்து விடவேண்டும். காளிக்கு பூஜைகள் நிகழ்த்தி போரை துரிதப்படுத்த வேண்டும்’ என ஆணையிட்டான்.கரிகாலன் எல்லையில் படையை நிறுத்தினான். குறும்ப நாட்டு அரசன், ‘ஹே... காளி... ஜெய்... காளி’ என ஹ¨ங்காரம் செய்தான். வானத்தை அடைத்துக் கொண்டு கருமேகம் திரண்டது. பேரொளியோடு மேகத்தைக் கிழித்துக் கொண்டு மாகாளி, பாசூராளி, பொற்றாளி, எல்லையாளி, செல்லியக் காளி என்று ஐந்து காளி உருவங்கள் தோன்றின. குறும்ப அரசன் முகம் சிவக்க ஆதிகாளிகளையும் கண்டான். ‘தாயே! வெற்றி வேண்டும் அம்மா.. ’ கைகளை நீட்டி பிச்சை கேட்டான். காளி எதிரிப் படைநோக்கி நகர்ந்தாள். கரிகாலன் படைவீரர்கள், விண்ணை அடைத்த பேரலை ஒன்று விழுங்க வருவதாக உணர்ந்தார்கள். வாளை கீழே போட்டு விட்டுத் தலைதெறிக்க ஓடினார்கள். காளி அநாயசமாக பல வீரர்களைக் கொன்று போட்டாள். தப்பித்த ஒரு படை மட்டும் ஓடிச் சென்று கரிகாலனிடம் விஷயம் சொன்னது.

சோழ வேந்தன் சிவனை நோக்கி அரற்றினான். சிவன் அருணைச் செம்மையாக தகதகக்கும் கனலாக சூரியனைப் போன்று மாமன்னர் முன்பு ஆயுதமேந்தி நின்றார். போர்க்களம் நோக்கி நகர்ந்தார். இரு மன்னர்களும் திகைப்புடன் அந்த தெய்வங்கள் போரிடுவதை கண்ணுற்றனர். அது போராக அல்லாமல் சிவதாண்டவமும், காளியாட்டமுமாகப் பட்டது கரிகாலனுக்கு. சிவன் ஆயுதங்களை காளியை நோக்கிப் பொழிய அவற்றை வாள், கேடயம், அம்பு, பாசங்களால் காளி தடுத்தாள்; திருப்பி அனுப்பினாள். சிவத்திற்குள் சீற்றம் அதிகரித்தது. காளிக்குள் கட்டுக்கடங்காத சக்தி பொங்கியது. சீற்றமும், சக்தியும் எதிரெதிரே நிற்க, சிவத்தின் தணல் சக்தியை கட்டுப்படுத்தியது. அடங்காது இருந்த காளியின் அகத்தில் ஒரு நாணம் சூழ்ந்தது. ‘ஆலங்காட்டு ஈசனல்லவா இது!’ என்று அமைதியானது. கரிகாலனை ஈசன் அழைத்தார். .

‘காளிகளை சிறையிட்டு அழைத்துச் செல்’ என்றார். சோழன் அப்படியே செய்தான்.
குறும்ப அரசன் அந்த அரசவையிலுள்ள மாந்த்ரீகம் செய்பவர்களை நோக்கி. ஆபிச்சார யாகத்தை தொடரக் கட்டளையிட்டான். யாக குண்டத்தின் நெருப்பு அருகேயிருந்த சில மரங்களையும் கருகச் செய்தது. யாகத்தீயின் அக்னி நாக்குகளிலிருந்து மிக நீளமான ராஜ நாகத்தைப்போல ஒரு சர்ப்பம் கண்களில் தீக்கனல் மின்ன, விஷப்புகையை கக்கியபடி வெளிவந்தது. அந்த சர்ப்பம் மூச்சுவிட அருகே இருந்த விலங்குகள் மூர்ச்சையற்று இறந்தன. அதற்கு இலக்காக கரிகாலனை அந்த மாந்த்ரீகர்கள் சொல்ல அது சரசரவென்று ஊரின் எல்லையை நெருங்கியது. வருவது பேரரவம் என்பதை உணர்ந்த ஆதி அரனான சிவன் உற்றுப்பார்த்தார். ஆனால், அரவம் எதிரே இருப்பது அரன்தானே என்று கொக்கரித்து வாலால் ஈசனை வளைத்தது. மெல்ல இறுக்கியது.

ஆலகால விஷத்தை கண்டத்தில் தரித்தவனுக்கு இதெல்லாம் எந்த மூலை? வளைத்த அதன் வாலைத் திருகினார். தலைகீழாகத் தூக்கினார். வானில் அரவத்தை சுற்றி மிகப்பலமாக பூமியில் அறைந்தார். பாம்பின் தலைபாகம் சிதறி வெகுதொலைவிற்குப்போய் தெறித்து விழுந்தது. மத்திமபாகம் வேறொரு இடத்தில் விழுந்தது. உறுப்புகள் ஒவ்வோர் இடத்திற்குமாக சிதறிப் பரவின. பாம்புத் துண்டுகள் விழுந்த இடங்கள் அனைத்திலும் லிங்கங்கள் பூத்தன. அதில் அரவம் எனும் சர்ப்பத்தின் வால் பகுதி தாள விருட்சம் எனும் பனை மரங்கள் ஓங்கி வளர்ந்திருந்த பகுதிக்குள் விழுந்தது. அரனால் வதம் செய்யப்பட்ட அரவத்தின் வால் விழுந்ததால் அத்தலம் அரன்வால் என அழைக்கப்பட்டது. பிறகு அரன்வாயல் என்று திரிந்தது. அரனை அடைய நினைப்பவர்களுக்கு இது வாயிலாக விளங்கும் தலமாகும் என்றும் பொருள்படும்.

இத்தனை கனன்ற சிவ சரிதத்தை தரிசிக்க நேரில் சென்று ஆலயத்தைக் கண்டபோது அதிர்ச்சிதான் அதிகமானது. சிவ பராக்கிரமத்தின் வெளிப்பாடாக இருக்க வேண்டிய ஆலயம் அழகிழந்து அலங்கோலமாக இருக்கிறது. காலத்தின் கோலம் ஆலயத்தை சுற்றி களைகளாக பெருகியிருக்கிறது. கோயில் விமானம் நானும் ஒப்புக்கு இருக்கிறேன் என்பதுபோல தனது கம்பீரம் குலைந்து வாடி நிற்கிறது. ஆனாலும், தொன்மையின் அழகு சற்றும் குறையவில்லை. வாடிய பயிர் போலத்தான் சருகாக காணப்படுகிறதே தவிர உள்ளுக்குள் இருக்கும் உறுதிக்கு பங்கமில்லை. ஆலய வாயிலும் நடுக்கத்தோடுதான் நம்மை வரவேற்கிறது. கதவின் பழமை நூறு ஆண்டுகளாவது இருக்கும். கோயிலின் வளாகத்திற்குள் நெருஞ்சி முட்கள் காலைப் பதம் பார்க்கின்றன.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 20, 2009 1:19 am

உள் மண்டப வாயிலில் மகாகணபதியின் சிலை அருள்முகத்தோடு காணப்படுகிறது. கோயில் சிலைகள் திருடுபோய் கிடைத்ததால், கோயில் கதவின் மீது நம்பிக்கையற்று ஷட்டரையே கோயிலின் உட்கதவாக மாற்றியிருக்கிறார்கள். ஏதோ கடையை திறப்பதுபோல கோயிலின் உட்கதவான ஷட்டரை சரசரவென திறக்கிறார் அர்ச்சகர். ஆச்சரியத்தோடு அங்கிருந்து நேரே பார்க்க அம்பாளின் சந்நதி உள்முகமாக தெரிகிறது. அருட்களையோடு எளிமையுமாக மரகதாம்பிகை தெற்கு பார்த்து ஆவுடையார் மீது நின்ற கோலத்தில் ஜொலிக்கிறாள். விதம்விதமான அலங்காரத்தில் இருக்க வேண்டியவள் ஒற்றை வண்ண உடையோடு இருப்பது பார்க்க கண்களில் நீர் திரள்கிறது. ஆனாலும், மழைக்கால நிலாபோல கருமேகத்தின் நடுவே தண்மையோடு பிரகாசிக்கிறாள். அருகேயே உற்சவ மூர்த்திகளின் சந்நதி. உள்ளுக்குள் இக்கோயிலோடு தொடர்புடைய மற்றொரு ஆலயமான செல்லியம்மனின் உற்சவமூர்த்தி அழகாக காணப்படுகிறது. இந்த ஆலயத்தின் ஆச்சரியமே கோயில் முழுதும் விரவியிருக்கும் அதி நுணுக்கமான, கண்களை கொள்ளை கொள்ளும் சிற்பங்கள்தான்.

அம்பாளின் சந்நதியிலேயே இடப்புற வாயில் வழியே சென்றால் மூலவரான திருத்தாளீஸ்வரரை அடையலாம். தாளி எனும் பனைமரங்கள் ஒரு காலத்தில் அடர்ந்து அதன் மத்தியில் இவர் வீற்றிருந்து அருள்பாலிப்பதால் திருத்தாளீஸ்வரர் எனும் நாமம் ஏற்பட்டது. ஒரேயரு வேட்டியை அலங்காரமாக போர்த்தியிருக்கிறார். வெளிப்பார்வைக்கு எளிமையாகத் தோன்றினாலும், அந்த இடத்தின் சாந்நித்தியத்தால் சட்டென்று மனம் அடங்கி ஒரு பேரமைதிக்குள் மூழ்குகிறது. காந்தம் இரும்பை கவருவதுபோல காலம்போவது தெரியாமல் நம்மை அங்கு ஆட்கொள்கிறார், அரன்வாயல் அரன். ‘‘தொல்லைவினை தீர நல்ல அரன்வாயல் புல்லுறுகை யோதி தில்லை நடம்பாரே’’ என அகத்தியர் இப்பெருமானைப் பாடுகிறார். முற்றிலும் அரவத்தின் சீற்றத்தை அடக்கி, நாகத்தின் கடுமையான தோஷத்தை நீக்கிய பெருமானாக இவர் இருப்பதால் நாகதோஷ நிவர்த்தி தலமாக இது விளங்குகிறது.

கோயிலில் ஜன நடமாட்டம் இல்லாததால் தூசுகள் அடர்ந்து கிடக்கின்றன. ஏதோ அவனருளால் ஒரு கால பூஜை நடைபெறுகிறது. சூரியனும், பைரவரும் மூலவருக்கு எதிரே காணப்படுகின்றனர். அருகேயே சிறு லிங்க மூர்த்தியில் கயிலைநாயகரும், காமாட்சியும் அருள்பாலிக்க, மாணிக்க வாசகரும், பதஞ்சலியும் சிலா ரூபத்தில் அருள்கின்றனர்.
கருவறை சுற்று கோஷ்டத்தில் நர்த்தன விநாயகர் சிற்பம் காண்பதற்கரியது. நாகவதம் நிகழ்ந்த தலமாதலால் அதற்கு ஆதாரம் காட்டுவதுபோல நாகர்சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. தட்சணாமூர்த்தி அமைதி சொரூபமாகத் திகழ்கிறார். கருவறையின் பின்புறம் சதுரமாகவும், விமானத்தை மட்டும் கஜப் பிருஷ்டம் எனும் யானையின் பின்பகுதி போன்ற அமைப்பில் எழுப்பியிருக்கிறார்கள். சாதாரணமாக முழுவதுமாக கஜப்பிருஷ்ட அமைப்புடைய கருவறையின் அமைப்பை கண்டிருப்போம். ஆனால், இங்கு விமானம் மட்டும் கஜப்பிருஷ்ட அமைப்பு. வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமி அருள்பாலிக்கிறார். பிரம்மாவின் சிற்ப வடிவமைப்பும் பிரமிப்பூட்டுகின்றது.

சண்டேஸ்வரரும், துர்க்கையும் உள்ளம் தொடுகிறார்கள். எப்படி வெளியுலகத்திற்கு தெரிய வேண்டிய ஆன்மிகக் கலைப்பெட்டகங்கள் இவை. ஆனால், இப்படியரு இருளில் இருக்கிறதே எனும் ஏக்கம் மட்டும் கோயிலுக்குள் நுழைந்ததிலிருந்து நம்மை துரத்தியபடி இருக்கிறது. காலச் சக்கரத்தை சுழற்றுபவன் ஏதேனும் செய்வான், எவரையேனும் அழைத்து தன் வீட்டை அலங்கரித்துக் கொள்வான். பாக்கியமுற்றோர் பரமனின் திருமாளிகையை அழகாக்குவர். அது எவரெவர் என்பதை அவன் மட்டுமே அறிவான் என்று மட்டும் தோன்றிற்று. கருவறை உட்பிராகாரத்தில் வைக்கப்பட்டிருக்கும் வைகுந்தவாசன் திகைப்பைத் தந்தார். ஈசனுக்கருகே திருமாலா! இவர் வந்தமர்ந்த விஷயத்¬தை விரிவாகச் சொன்னார்கள்.

பல்லவர்கள் காலத்தில் சிறப்புற்ற தலமாக இது இருந்ததால் இங்கு விஷ்ணுவுக்கும் ஒரு கோயில் அமைந்திருக்க வேண்டும். இவ்வூர் ஏரிக்கரையில் இடிபாடுகளுக்கிடையே இந்த திருமால் வீற்றிருந்திருக்கிறார். இவரை போகசுந்தர பெருமாள் என திருப்பெயரிட்டு அழைக்கிறார்கள். உயர்ந்த ஆசனத்தில் அமர்ந்த திருக்கோலத்தில் சுதர்சன சக்ரத்தை பிரயோக நிலையில் வைத்துக் கொண்டு, பாஞ்ச சைன்யத்தை கையில் ஏந்தி, அபய ஹஸ்தத்தால் காத்து, மற்றொரு கையில் இடுப்பில் வைத்து பேரழகனாக விளங்குகிறார். அருகில் அமர்ந்திருக்கும் தேவியின் அமைப்பும் அபூர்வமானது. இடக்கையில் தாமரையை தாங்கி, சற்றே சாய்ந்து அமர்ந்திருக்கும் அமைப்பை வேறெங்கும் பார்ப்பது அபூர்வம். இத்தனை சிறப்புமிக்க மூர்த்தியை தினமும் பூஜித்து வருகின்றனர்.

கோயிலைச் சுற்றிலும் காடாக வளர்ந்திருக்கின்றன செடிகொடிகள். சிறு ஜன்னல் போல இருக்கும் அமைப்பிற்கு நேரே மூலவரைப் பார்த்தபடி இருக்கும் நந்தி பகவான். தனிச்சந்நதியில் வைத்து கௌரவப் படுத்த வேண்டிய நவகிரகங்கள் வானத்திலுள்ள கிரகங்களைப் பார்த்தபடி இருப்பது மனதை கனக்கச் செய்கிறது. கோயிலின் மேல் தளம் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழுவேன் என்று பயமுறுத்திக் கொண்டிருக்கிறது.

ஆலயத்தைச் சுற்றியிருக்கும் செடிகளை அகற்றினால் போதும், நம் மனதில் சூழ்ந்திருக்கும் தீவினைகளை சுத்தமாக துடைத்தெறிவான், இத்தல ஈசன். சரிந்து கிடக்கும் கற்களை நிமிர்த்தி அவன் இல்லத்தை சீர்படுத்தினால் நம் இல்லத்தை ஒளிரச் செய்வான். நாம் கொடுப்பது சிறு தொகையோ, பெருந்தொகையோ; கடன்படாது பரம்பரைக்கே கொட்டிக் கொடுக்கும் பேரருளாளன் அவன். தொன்மைமிக்க இத்தலத்தை புனர் நிர்மாணம் செய்ய, சிவத் தொண்டில் பங்கெடுத்துக் கொள்ள விரும்பும் பக்தர்கள் இக்கோயிலின் அறங்காவலரான திரு. கல்யாண சுந்தரம், மற்றும் திரு. கே. பூபாலன், ஆகியோரை 9444532886, 9445296237 என்ற கைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

கோயிலின் விமானத்தில் முருகருக்கென்று ஒரு தனி இடம் இருக்கிறது. அதை மாற்றி கட்ட எத்தனித்தபோது தான் அங்கேயே இருக்க விரும்புவதாக முருகனே கனவில் தெரிவித்தார். செவ்வாய் கிரகத்தின் அதிபதியான முருகப்பெருமான் விமானத்தில் அமர்ந்து அருள்புரிவதால் செவ்வாய் தோஷமுள்ளவர்கள் இக்கோயிலுக்கு வந்து செல்கின்றனர்.

இத்தலத்தோடு தொடர்புடைய செல்லியம்மன் ஆலயம் ஊருக்கு சற்று வெளியே உள்ளது. திருப்பாசூர் எனும் அருகிலுள்ள தல வரலாறும் இக்கோயிலோடு தொடர்புடையது. அக்னிச்சுடரை சிரசில் அணியாகக் கொண்ட திருவாசி, கைகளில் கேடயம், பாசம், மணி, கபாலம், அம்பு, சூலம் என ஏந்தியிருக்கிறாள். கச்சையணிந்த மார்பினில் கபாலத்தையே பூணூலாக அணிந்திருக்கிறாள். மண்டையோடுகள் பிரபையாக ஜொலிக்க அந்த உக்கிரத்தில் தெய்வீகப் புன்னகை உதட்டில் மின்ன காலில் அசுரனான நிசும்பனை வதம் செய்யும் கோலத்தோடு வீற்றிருக்கிறாள். அரன்வாயல் ஈசனையும், செல்லியம்மனையும் சேர்ந்து தரிசிப்பது வழிவழியாக வரும் முறைகளில் ஒன்று என்கிறார்கள்.இத்தலம் சென்னையிலிருந்து பூவிருந்தவல்லி&திருவள்ளூர் பேருந்து பாதையில் 20 கி.மீ. தொலைவும், சென்னை&திருவள்ளூர் ரயில் மார்க்கத்தில் செவ்வாய்பேட்டையிலிருந்து 4 கி.மீ. தூரத்திலும் உள்ளது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக