புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 9:53 am

» கருத்துப்படம் 30/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:32 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:28 pm

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Yesterday at 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:20 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Yesterday at 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Yesterday at 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 24 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 24 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 24 Poll_c10 
46 Posts - 47%
heezulia
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 24 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 24 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 24 Poll_c10 
44 Posts - 45%
mohamed nizamudeen
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 24 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 24 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 24 Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 24 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 24 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 24 Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 24 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 24 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 24 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 24 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 24 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 24 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 24 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 24 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 24 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 24 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 24 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 24 Poll_c10 
327 Posts - 46%
ayyasamy ram
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 24 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 24 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 24 Poll_c10 
308 Posts - 43%
mohamed nizamudeen
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 24 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 24 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 24 Poll_c10 
26 Posts - 4%
T.N.Balasubramanian
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 24 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 24 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 24 Poll_c10 
17 Posts - 2%
prajai
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 24 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 24 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 24 Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 24 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 24 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 24 Poll_c10 
9 Posts - 1%
ஜாஹீதாபானு
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 24 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 24 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 24 Poll_c10 
5 Posts - 1%
jairam
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 24 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 24 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 24 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 24 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 24 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 24 Poll_c10 
4 Posts - 1%
Jenila
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 24 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 24 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 24 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நெகிழ வைத்த நிஜங்கள்


   
   

Page 24 of 32 Previous  1 ... 13 ... 23, 24, 25 ... 28 ... 32  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 08, 2011 10:02 am

First topic message reminder :

நெகிழ வைத்த நிஜங்கள் - தினதந்தி

வாடிக்கையாளருக்கு ஏற்பட்ட 'வலி'

நகைக்கடை ஒன்றில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறேன். வருடா வருடம் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு புது வருட தேதி காலண்டரும், மாதாந்திர காலண்டரும் வழங்குவதுண்டு.

சமீபத்தில் எங்கள் கடைக்கு வந்த பெரியவர் ஒருவர் கேஷ் கவுண்டரில் இருந்தவரிடம் கஸ்டமர் என்ற உரிமையில் காலண்டர் கேட்டார். இதை கவனித்துக் கொண்டிருந்த எங்கள் கடை முதலாளி, வந்தவர் தங்கள் கடையின் ரெகுலர் கஸ்டமர் என்று தெரியாமல், `உங்களை இதற்கு முன்பு இங்கு பார்த்ததே கிடையாதே. வாடிக்கை யாளர்களுக்கு மட்டும்தான் கொடுப்போம்..' என முகத்தில் அடிக்காத குறையாக கூறி அனுப்பி விட்டார்.

சற்றுதூரத்தில் விற்பனை பிரிவில் மும்முரமாக இருந்த நான் அதை கவனித்தேன். முதலாளி அருகே சென்று, `இப்ப வந்துட்டுப் போனவர் என்ன கேட்டார்?' என கேட்டேன்.

`ஏன் அவர் நமது வாடிக்கையாளரா?' என்று என்னிடம் திருப்பிக்கேட்டார் முதலாளி.

``நம்ம கடைக்கு அடிக்கடி வந்து தாலி உருப்படியெல்லாம் வாங்கி செல்வாங்களே.. வசந்தா அக்கா, அவங்க புருஷன்தான் இவரு. இரண்டு மாசத்துக்கு முந்தி அந்தக்கா மாரடைப்பில் இறந்துட்டாங்க. எங்க தெருவுலதான் அவங்க வீடு..'' என்றேன்.

``அடடா! அவரது மனைவி பெயரும், நம்ம கடையின் பெயரும் ஒன்றாக இருப்பதால் மனைவியின் நினைவாக காலண்டர் கேட்டு வந்திருக்கிறார். இது எனக்கு விளங்காமப் போச்சே..!' என தன்னையே நொந்து கொண்ட முதலாளி, கடைப்பையனை அனுப்பி அவரை வரவழைத்தார். தேனீர் தந்து உபசரித்து, ஆறுதல்கூறி காலண்டரும் தந்து திருப்தியாக அனுப்பி வைத்தார்.

சுமதி பாபு, கோவூர்.



நெகிழ வைத்த நிஜங்கள் - Page 24 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 28, 2012 2:11 pm

பாரம் சுமந்தாலும் பரந்த மனம்

நாங்கள் ஈரோட்டில் குடி இருக்கிறோம். ஒரு திருமணத்திற்கு சென்று விட்டு நடுக் கடைவீதியில் (மணிக்கூண்டு அருகில்) காரை நிறுத்தினோம். என் கணவர் காரில் இருந்து இறங்கி அருகில் பூ வாங்கச் சென்றார்.

அப்போது ஒரு வயோதிகர் ஓடி வந்து "இங்கே காரை நிறுத்தாதீர்கள். அங்கு கொண்டு போய் நிறுத்துங்கள்'' என்று சற்று தள்ளி ஓர் இடத்தை குறிப்பிட்டார். அவர் குறிப்பிட்ட இடத்தில் காரை நிறுத்தினோம். பாரம் நிறைந்த கை வண்டியை ரோட்டோரம் நிறுத்திவிட்டு, எங்கள் காரை நோக்கி ஓடி வந்தார். "நீங்கள் நிறுத்திய இடத்தில் காரை நிறுத்தினால் ரூ 500 அபராதம் போடுவார்கள்! பஸ்களும் காரை உரசி விட்டுப்போகும் அதனால் தான் இங்கு நிறுத்த சொன்னேன்'' என்று கூறி விட்டு, சுமை நிறைந்த பார வண்டியை இழுத்துக் கொண்டு போனார். அடுத்தவர் பணம் வீணாக கூடாது என்று எண்ணிய அந்த முதியவரின் மனிதநேய உணர்வினை நினைத்து நான் இன்று வரை வியர்ந்து போகிறேன்.

கே.ஏ.தாரா, வீரப்பன்சத்திரம்



நெகிழ வைத்த நிஜங்கள் - Page 24 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 28, 2012 2:12 pm

இருந்த இடத்தில் இருந்தபடி...

என் உறவினர் ஒருவர் தற்காலிகமாக சென்னையில் தனியார் கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டு இருந்தார். அவர் விடுப்பில் சொந்த ஊருக்கு வந்திருந்தார்.விடுப்பு முடிந்ததும் சென்னைக்கு தமிழக அரசு விரைவு பேருந்து மூலம் காலையில் புறப்பட்டு சென்றார்.

அவர் சென்னைக்கு பாதிவழிவரை சென்றுவிட்ட நேரத்தில், அன்று தான் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இருந்து அவருக்கு மறுநாள் இன்டர்வியூவுக்கு செல்லுமாறு லட்டர் வந்தது. அவரிடம் செல்போன் இல்லாத தால் என்னுடைய உறவினர்கள் என்னை உடனே அடுத்த பஸ் பிடித்து சென்று அவரை இன்டர்வியூவுக்கு அழைத்து வந்து விடச் சொன்னார்கள்.

அப்போது மறுநாள் இன்டர்வியூவில் கலந்து கொள்ள வைத்து விடலாம் என்றார்கள். ஆனால் அவர்களின் யோசனைப்படி நான் அடுத்த பஸ்சில் போகாமல் உடனே அந்த பஸ் சென்று போகும் டெப்போ மேனேஜரை சந்தித்து, பஸ்சில் உள்ள அந்த குறிப்பிட்ட நபருக்கு விபரம் சொல்லி உடனே திருப்பி அனுப்புமாறு வேண்டிக் கொண்டேன். நான் சொன்னது போல் அவரும் போன் செய்து அந்த நபரை திருப்பி அனுப்பிவிட்டார். அவரும் வீட்டிற்கு வந்து மறுநாள் இன்டர்வியூ போனார். இதில் இப்போது அவருக்கு வேலை கிடைத்து சந்தோஷமாய் இருக்கிறார். இந்த சமயோசித புத்தியால் எல்லோரும் என்னை பாராட்டி நன்றி தெரிவித்தார்கள்.

டி.வி.சிவராமகிருஷ்ணன், தஞ்சாவூர்.



நெகிழ வைத்த நிஜங்கள் - Page 24 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 28, 2012 2:13 pm

நேர்மைக்கு பாராட்டு

நாங்கள் ஒரு வாரம் உறவினர் இல்ல நிகழ்ச்சிக்காக வெளியூர் சென்றிருந்த நேரத்தில் எங்கள் வீட்டுக்கு மணியார்டர் பணம் வந்துள்ளது. எங்கள் தெரு தபால்காரர் பக்கத்து வீட்டில் விஷயத்தை தெரியப்படுத்தியுள்ளார். 2 நாட்கள் பொறுத்திருந்த அவர், ஒரு சிறிய துண்டு பேப்பரில் எங்களுக்கு மணியார்டர் வந்துள்ளதை தேதியுடன் குறிப்பிட்டு தனது செல்போன் நம்பரையும் எழுதி, அதை எங்கள் வீட்டு கதவின் இடுக்கு வழியே போட்டு விட்டார். நாங்கள் வீட்டிற்கு வந்த போது அந்த துண்டு சீட்டை பார்த்து அன்றே மணியார்டர் பணத்தை பெற்றுக் கொண்டோம்.

அவருக்கு நன்றி தெரிவித்தபோது எனது கடமையைத்தானே செய்தேன் என்று சொல்லி விட்டார். எதையும் எதிர் பார்க்காமல் இந்த காலத்தில் இவர் போன்று கடமையில் அக்கறையுடன் கூடிய மனிதநேயம் கொண்டவர்களை பார்க்கும்போது பெருமையாக இருக் கிறது.

-கே.சரண்யா, காட்டூர்




நெகிழ வைத்த நிஜங்கள் - Page 24 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 28, 2012 2:13 pm

இப்படியும் சில மனிதர்கள்

கோவை அரசு ஆஸ்பத்திரியில் நடந்த சம்பவம் இது. அங்கு எந்த நோய்க்கு ரத்தப் பரிசோதனை எடுக்க வேண்டும் என்றாலும் நீண்ட கியூவில் தான் நிற்க வேண்டும். மேலும் ரத்தப் பரிசோதனைக்கு நிற்கவும், ரிசல்ட் வாங்குவதற்கும் ஒரே கியூவில் தான் நிற்க வேண்டும்.

இந்நிலையில் சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணி தன் 5 வயது குழந்தையுடன் அங்கு வந்தார். கியூவோ பெரிதாக இருந்தது. ரத்த பரிசோதனை முடிந்த பிறகு தான் காலை உணவு உட்கொள்ள வேண்டும். ஏற்கனவே அந்த குழந்தை பசி மயக்கத்தில் கிறங்கி காணப் பட்டது. அப்பெண்ணின் நிலைமையை கருத்தில் கொண்டு அங்கு ஒரு பெரியவர், "எனக்கு முன்னால் நின்று கொள்ளுங்கள், சீக்கிரம் ரத்தம் கொடுத்தவுடன் குழந்தையை சாப்பிட வையுங்கள்' என்று கூறினார். உடனே அங்கு அவருக்கு பின்னால் நின்றிருந்த இரண்டு பெண்கள் அந்த பெரியவரை திட்ட ஆரம்பித்தனர். அந்த பெண்ணுக்கோ தர்மசங்கடமாக இருந்தது. அந்த பெரியவரை பார்த்து, "நீங்கள் நின்று கொள்ளுங்கள், நான் க்யூவில் இருந்தே வருகிறேன்'' என்று கூறி பின்னால் போகப்பார்த்தாள். ஆனால் அதற்குள் கியூவோ மிகவும் பெரியதாகி விட்டது. உடனே அந்த பெரியவர், `நீ நில்லும்மா, இவங்க என்ன செய்வார்கள் என்று பார்ப்போம்' என்று கூறி, பரிசோதனை முடியும் வரை கூடவே இருந்து குழந்தையை சாப்பிட வைத்து அனுப்பினார்.

அந்த பெண்கள் உதவி செய்யத்தான் முன் வரவில்லை, உதவி செய்பவர்களுக்கு இடையூறு செய்யாமல் இருக்க வேண்டும். அந்த பெரியவரை நினைத்தால் இன்றளவும் பெருமையாக உள்ளது.

செ.கோகுலப்பிரியா, சிவானந்தபுரம்.




நெகிழ வைத்த நிஜங்கள் - Page 24 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jul 30, 2012 10:56 am

தேனிலவை கனவாக்கிய மழை

இது நடந்து 30 ஆண்டுகள் ஆகிவிட்டன. மதுரையை சேர்ந்த நான் நல்ல சம்பளத்தில் ஊட்டியில் வேலை பார்த்தேன். எனக்கு திருமணம் ஆனதும் மனைவியுடன் ஊட்டிக்கே வந்து விட்டேன்.

ஊட்டியின் ஜில்லென்ற கிளைமேட் எங்களுக்கு பரவசம் தரும் என்ற எண்ணத்தில் தனிக்குடித்தனம் வந்தோம். ஆனால் நடந்தது வேறு. நாங்கள் வீடு பார்த்து வந்த நேரம் மழை என்றால் மழை....அப்படி ஒரு மழை. வெளியில் எங்கும் செல்ல முடியவில்லை. நான் மட்டும் பணியின் நிமித்தம் அலுவலகம் சென்று வந்தேன். என் மனைவி நான் எப்போது அலுவலகத்திலிருந்து வருவேன் என்று காத்திருப்பாள். ஒரு வார காலம் ஆகியும் மழை நின்றபாடில்லை. பஸ் போக்குவரத்தும் பெரிதும் பாதிக்கப்பட்டது.

ஊட்டியிலிருந்து குன்னூர் செல்லும் பாதையெங்கும் நிலச்சரிவுகள், ஊருக்குத் திரும்பவும் வழியில்லை. என் மனைவி கண் கலங்க ஆரம்பித்து விட்டாள். ஒரு நாள் இரவு நாங்கள் தங்கியிருந்த வீட்டிற்கு மேலே இருந்த ஒரு பெரிய கட்டிடம் மழையினால் இடிந்து விட்டது. அதன் ஒரு பகுதி எங்கள் கட்டிடத்தின் மீது நிலச்சரிவு போல் விழுந்து அமுக்கி விட்டது. நல்ல வேளையாக பக்க வாட்டில் விழுந்ததால் மண் சரிவு மட்டும் ஏற்பட்டது. ஆனால் கதவைத் திறக்க முடியவில்லை, வெளியில் செல்லவும் முடியவில்லை. பக்கத்து வீட்டினர் எல்லோரும் சேர்ந்து அந்த விடாத மழையிலும் மண்ணை அப்புறப்படுத்தி கதவைத் திறந்து எங்களை வெளியில் அழைத்து வந்தனர்.

அந்தக் காலத்தில் உடனுக்குடன் தகவல் அறிவது மிகவும் கடினம். ஆனாலும் வானொலி மற்றும் நாளேடுகள் மிகவும் உதவியாக இருந்தன. ஊட்டியில் வெள்ளம் என்றதும் வீட்டிலிருந்து உறவினர்கள் மிகவும் சிரமப்பட்டு ஊட்டி வந்து நாங்கள் தங்கியிருந்த வீட்டிற்கும் வந்து விட்டனர்.

திருமணமான புதிது என்பதால் மனைவியுடன் ஊட்டியிலுள்ள கார்டன், போட்ஹவுஸ், தொட்டபெட்டா என்று சுற்றிப்பார்க்க எண்ணியிருந்தேன். கடைசியில் உயிர் தப்பி ஒழுங்காக ஊர் போய்சேர்ந்தால் போதும் என்ற நிலை ஏற்பட்டு விட, மனைவியை உறவினர்களுடன் மதுரைக்கு அனுப்பி வைத்தேன். தேனிலவுக் கனவை மழை கலைத்து விட்டதை இப்போது நினைத்தாலும் சிரிப்பு வரும். ஆனாலும் பாருங்கள், காலத்தின் கட்டாயம் நாங்கள் பின்னாளில் ஊட்டியிலேயே தொடர்ந்து வாழவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

-வெ.பாலுச்சாமி, மதுரை



நெகிழ வைத்த நிஜங்கள் - Page 24 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Mon Jul 30, 2012 11:23 am

காலத்தின் கட்டாயம் நாங்கள் பின்னாளில் ஊட்டியிலேயே தொடர்ந்து வாழவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

கனவு நனவாகிவிட்டதே.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jul 31, 2012 6:28 pm

மலர்ந்த பூக்கள்... மகிழ்ந்த இதயம்!

`உடையவன் பாராத வேலை ஒரு முழம் கட்டை' என்று என்னுடைய அனுபவத்தின் மூலம் உணர்ந்து கொள்ள சமீபத்தில் எனக்கு வாய்ப்பு கிட்டியது.

எங்கள் மொட்டை மாடியில் உள்ள செடி கொடிகளுக்கு, வீட்டில் வேலை செய்யும் பெண் தண்ணீர் ஊற்றி வருவாள். கோடை என்பதால் இலைகள் காய்ந்தும், கரடு தட்டியும், பூக்காமலும் இருந்தன. அவள் ஒரு மாத லீவில் ஊருக்கு சென்றவுடன், நானே அவற்றிற்கு தண்ணீர் ஊற்றி வந்தேன். என்னவொரு மாற்றம்! 20 நாட்களுக்குள் மல்லி, முல்லை, ரோஜா, மணி பிளாண்ட் போன்றவை நன்கு துளிர்விட்டு, வளர்ந்து தழைத்ததோடு, பூக்களும் பூக்கின்றன! பார்க்கவே மனம் நிறைவாகவும், சந்தோஷமாகவும் இருக்கிறது. நம்மால் முடிந்த வேலைகளை நாமே செய்து கொள்வதால், எவ்வளவு நன்மைகள்!

ஜெகா, கும்பகோணம்



நெகிழ வைத்த நிஜங்கள் - Page 24 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jul 31, 2012 6:28 pm

கேட்`காது' கிடைத்த வாழ்க்கை!

எனக்கு நெருங்கிய தோழியின் சித்திக்கு துளி கூட காது கேட்காது. அதனால் பல வருடங்களாக அவருக்கு திருமணம் ஆகாமலேயே இருந்தது. சித்தியின் பெற்றோரும் மிகவும் வயதானவர்கள். இதனால் தோழியின் சித்திக்கு திருமணமே கேள்விக்குறியாகி விட்டது.

இதற்கிடையில் அவள் சித்தி வீட்டிற்கு பக்கத்து வீட்டுக்காரரை பார்க்க அவ்வப்போது ஒருவர் வந்து சென்றுள்ளார். அவர் என் தோழியின் சித்தியை திருமணம் செய்து கொள்ள நினைத்து அவளுடைய பெற்றோரிடம் பெண் கேட்டிருக்கிறார். ஆனால் என் தோழியின் வீட்டில் யாரும் சம்மதிக்கவில்லை. எங்களுடைய பெண்ணுக்கு காது கேட்காது. நீங்களோ எந்த குறையும் இல்லாதவர். அப்படி இருக்கையில் நீங்கள் எப்படி எங்கள் பெண்ணை முழு மனதோடு திருமணம் செய்து கொள்ள முடியும்? அதோடு உங்கள் குடும்ப பின்னணி பற்றியும் எங்களுக்கு எதுவும் தெரியாது.

எங்கள் பெண் திருமணம் செய்து கண்காணாத இடத்தில் கவலையுடன் இருப்பதை விட திருமணம் ஆகாமலே இருக்கட்டும் என்று கூறியும், அவர் அதை ஏற்கவில்லை. "என்னை நம்புங்கள் எங்கள் திருமணத்தை ரிஜிஸ்டர் ஆபீசிலேயே செய்து கொள்கிறேன். எனக்கும் அம்மா அப்பா யாரும் இல்லை. நீங்களே என்னுடைய அம்மா, அப்பாவாக எங்கள் கூடவே இருங்கள்'' என்று கூறி திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு அவர்களுக்கு எந்த குறையும் இல்லாத ஒரு அழகான பெண் குழந்தையும் பிறந்தது. அந்த மகள் இப்போது ஒரு தனியார் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறாள். அவர் அன்று கூறியது போலவே அவருடைய மாமியாரையும், மாமனாரையும் அவரே பார்த்துக் கொள்கிறார். இவரைப் போல் எல்லோரும் இருந்துவிட்டால் நாட்டில் ஊனமுற்றவர் குறையும் இருக்காது. முதியோர் இல்லமும் இருக்காது.

-ஆர்.மகாலட்சுமி ரமேஷ், சென்னை-94



நெகிழ வைத்த நிஜங்கள் - Page 24 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jul 31, 2012 6:28 pm


நமக்கும் முதுமை வரும்!


நான் ஒரு முறை பேருந்தில் பயணம் செய்தபோது இருக்கைகள் முழுவதும் ஆட்கள் அமர்ந்திருந்தனர். எனக்கு முன்னால் இரண்டு இளைஞர்கள் மிகவும் ஆர்வமாக தங்களுக்குள் பேசிக் கொண்டு இருந்தனர்.

அவர்களுக்கு அருகில் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் நின்று கொண்டு இருந்தார். வயதின் முதிர்ச்சியால் அவரால் நிற்க முடியவில்லை. அந்த இளைஞர்களோ முதியவரை பார்த்தும் பார்க்காதது போல் தங்கள் பேச்சை தொடர்ந்தனர். நான் எனது இருக்கையை அந்த முதியவருக்கு கொடுத்தேன். சற்று நேரத்தில் கல்லூரி மாணவிகள் பேருந்தில் ஏறினார்கள். அவர்களுக்கு அந்த இளைஞர்கள் தானாகவே முன் வந்து தங்களது இருக்கைகளை கொடுத்தனர். வயதான முதியவருக்கு இடம் கொடுக்காத இளைஞர்கள் கல்லூரி மாணவிகளுக்கு இடம் கொடுத்தது வெட்கக் கேடானது. நமக்கும் முதுமை வரும் என்பதை இளைஞர்கள் மறந்து விடக்
கூடாது.

கே.கார்த்திகேயன், வெங்கமேடு.



நெகிழ வைத்த நிஜங்கள் - Page 24 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Aug 07, 2012 9:46 am

சர்க்கரை நோயாளிக்கு வந்த மயக்கம்

என் அத்தை பெண்ணின் தந்தை சிலநாட்களுக்கு முன்பு இறந்து விட்டார். எனக்கு அவர் மாமா முறை. அந்த இறுதிச் சடங்கிற்கு நானும், என் அத்தைப் பெண்ணும், மற்ற உறவினர்களுடன் திருவாரூர் சென்றோம், மதியம் 1 மணிக்கு இறந்திருக்கிறார். எங்களுக்கு சேதி வந்ததும் உடனே புறப்பட்டுவிட்டோம்.

எப்போதும் 2 மணிக்கு மேல் சாப்பிடும் அவள், தந்தை இறந்த செய்தியை கேட்ட துக்கத்தால் சாப்பிடாமல் வந்து விட்டாள். வெளியூரில் இருந்து முக்கிய உறவினர் ஒருவர் வர லேட்டானதால் மறுநாள் மத்தியானம் 3 மணிக்குத் தான் இறுதிச்சடங்கு ஏற்பாடு ஆயிற்று.

நாங்கள் ஆற்றில் குளித்துவிட்டு தண்ணீர் தூக்கி வரும்போது என் அத்தைப் பெண்ணுக்கு மயக்கம் வந்து விட்டது. உடல் வெடவெடவென நடுங்கியது. வேர்க்க ஆரம்பித்து விட்டது. நாங்கள் பயந்து போய் அவளை நிழலில் அமர வைத்து என்ன செய்வதென்றே புரியாமல் நின்று கொண்டிருந்தோம். `தந்தை இறந்த துக்கம் தான்... வேறு ஒன்றும் இல்லை...' என சிலர் சொல்லிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த அவள் கணவர் பக்கத்து டீக்கடையில் பால் வாங்கி 5 ரூபாய் பூஸ்ட் பாக்கெட்டை பாலில் கலந்து 2 கிளாஸ் அவளுக்கு குடிக்க கொடுத்தார். பிறகு பிஸ்கட் பாக்கெட்டை வாங்கி பிரித்து பாதிக்கு மேல் அவளுக்கு தின்னக் கொடுத்தார். அவளுக்கு சர்க்கரை வியாதியாம். முதல் நாளிலிருந்தே சாப்பிடாமல் வெறும் காபி மட்டுமே குடித்து வந்திருந்ததால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைந்து மயக்கம் ஏற்பட்டிருக்கிறது.

மெல்ல அவளை வீட்டிற்கு அழைத்துப் போய், பக்கத்து வீட்டில் வைத்து கொஞ்சம் உண்ண உணவு கொடுத்தவுடன் தான் அவள் நல்ல நிலைக்கு திரும்பினாள். சர்க்கரை வியாதி உள்ளவர்கள் எந்த சூழ்நிலையிலும் தங்கள் உடல் நலத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

- எஸ்.சுசிலா, சீனிவாசநல்லூர்.



நெகிழ வைத்த நிஜங்கள் - Page 24 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 24 of 32 Previous  1 ... 13 ... 23, 24, 25 ... 28 ... 32  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக