புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:54 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:28 pm

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Today at 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Today at 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Today at 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Today at 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Today at 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Today at 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Today at 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Today at 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Today at 6:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:20 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Today at 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Today at 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Yesterday at 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Tue May 28, 2024 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதலின் சங்கமம் (கவிதை) Poll_c10காதலின் சங்கமம் (கவிதை) Poll_m10காதலின் சங்கமம் (கவிதை) Poll_c10 
46 Posts - 48%
heezulia
காதலின் சங்கமம் (கவிதை) Poll_c10காதலின் சங்கமம் (கவிதை) Poll_m10காதலின் சங்கமம் (கவிதை) Poll_c10 
44 Posts - 46%
ஜாஹீதாபானு
காதலின் சங்கமம் (கவிதை) Poll_c10காதலின் சங்கமம் (கவிதை) Poll_m10காதலின் சங்கமம் (கவிதை) Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
காதலின் சங்கமம் (கவிதை) Poll_c10காதலின் சங்கமம் (கவிதை) Poll_m10காதலின் சங்கமம் (கவிதை) Poll_c10 
1 Post - 1%
rajuselvam
காதலின் சங்கமம் (கவிதை) Poll_c10காதலின் சங்கமம் (கவிதை) Poll_m10காதலின் சங்கமம் (கவிதை) Poll_c10 
1 Post - 1%
mohamed nizamudeen
காதலின் சங்கமம் (கவிதை) Poll_c10காதலின் சங்கமம் (கவிதை) Poll_m10காதலின் சங்கமம் (கவிதை) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காதலின் சங்கமம் (கவிதை) Poll_c10காதலின் சங்கமம் (கவிதை) Poll_m10காதலின் சங்கமம் (கவிதை) Poll_c10 
327 Posts - 46%
ayyasamy ram
காதலின் சங்கமம் (கவிதை) Poll_c10காதலின் சங்கமம் (கவிதை) Poll_m10காதலின் சங்கமம் (கவிதை) Poll_c10 
308 Posts - 43%
mohamed nizamudeen
காதலின் சங்கமம் (கவிதை) Poll_c10காதலின் சங்கமம் (கவிதை) Poll_m10காதலின் சங்கமம் (கவிதை) Poll_c10 
24 Posts - 3%
T.N.Balasubramanian
காதலின் சங்கமம் (கவிதை) Poll_c10காதலின் சங்கமம் (கவிதை) Poll_m10காதலின் சங்கமம் (கவிதை) Poll_c10 
17 Posts - 2%
prajai
காதலின் சங்கமம் (கவிதை) Poll_c10காதலின் சங்கமம் (கவிதை) Poll_m10காதலின் சங்கமம் (கவிதை) Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
காதலின் சங்கமம் (கவிதை) Poll_c10காதலின் சங்கமம் (கவிதை) Poll_m10காதலின் சங்கமம் (கவிதை) Poll_c10 
9 Posts - 1%
ஜாஹீதாபானு
காதலின் சங்கமம் (கவிதை) Poll_c10காதலின் சங்கமம் (கவிதை) Poll_m10காதலின் சங்கமம் (கவிதை) Poll_c10 
5 Posts - 1%
Anthony raj
காதலின் சங்கமம் (கவிதை) Poll_c10காதலின் சங்கமம் (கவிதை) Poll_m10காதலின் சங்கமம் (கவிதை) Poll_c10 
4 Posts - 1%
jairam
காதலின் சங்கமம் (கவிதை) Poll_c10காதலின் சங்கமம் (கவிதை) Poll_m10காதலின் சங்கமம் (கவிதை) Poll_c10 
4 Posts - 1%
Guna.D
காதலின் சங்கமம் (கவிதை) Poll_c10காதலின் சங்கமம் (கவிதை) Poll_m10காதலின் சங்கமம் (கவிதை) Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலின் சங்கமம் (கவிதை)


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Wed Mar 02, 2011 10:28 pm

கனிமலர் பூத்திடும் இளமலர்ச் சோலையில்
காதலி தேடியே அவன் நடந்தான்
இனிமன தானவள் எழில்பொழில் நீரொடு
இழைந்திட மலராய் நனைந் திருந்தாள்
தனிமையில் வேகிட தலைமுதல் கால்வரை
தகித்திடத் தீய்ந்திடும் மேனியினள்
நனிகுளிர்த் தாமரை நடமிடும் கோலமென்
றலைதனில் ஆடியே குளிரநின்றாள்

இளையவன் பார்த்திரு விழிகளும்கூசிட
எரியழல் பூத்தொரு தாமரையாய்
விளையுறும் மோகமும் விழிகளில் தாகமும்
வினைகொளுந் துயரெழ மனமிழந்தான்
துளையிடு மூங்கிலில் புகுவிரை காற்றினில்
தோன்றிடும் இசையென மீட்டிடவே
வளைபுகு நண்டென விரல்களும் ஓடியே
விந்தைகள் கண்டிட வேண்டிநின்றான்

தணிகனல் பொழிலலை தடவிய தென்றலும்
தரையினில் மலர்களின் மணம் விடுத்து
அணியெழில் குறுநகை எழுமிதழ் உடல்மணம்
இனிதென கண்டதைக் கொண்டதுவே
மணியிடை காணுமோர் நெளிவினை தானலை
மனதினில் கொண்டதைப் போல்நெளிய
அணிகுழல் தானலை விரிந்திட மீன்களும்
அது ஒருவலையென அஞ்சினவே

கரைதனில் காவலன் கனிஉணவினைகொள
காத்திடஇவளோ கரைநினைந்து
விரைந்திடநீர்வழிந் தலைதனில் வீழ்ந்திட
வேகுடல் நீர்சுட ஓடினமீன்
நுரையெழுமதுவினை நிறையிதழ் மேற்கினில்
கடல்விழு சுடுபழம்போல்சிவந்தே
நரைகரு முகிலினை நிகரிரு குழல்முடி
நடுநுத லசைவதில் அழகடைந்தாள்

புனையணி உடைதனை மதன்விடுகணைபட
பெருகிடும் தீயதைப் பொசுக்கிடுமே
எனமனமஞ்சிய சிறியவள் நிலைதனில்
அணிவதோ விடுவதோ எனமயங்க
கனமொடு வளர்கனி நிலவெழப் பாலொளி
கவிந்தொரு தோட்டமென் றிருள்மறைய
தினவெடு தோளினன் இரவினில் யாசகன்
தேர்ந்திடு பசியொடு குணமழிந்தான்

பண்ணொடு இசைதரும் பளிங்கெனும் சிலைமகள்
பக்க மணைந்ததும் நுனிவிரலால்
விண்ணிடி மழையுடன் வருமொரு மின்னலை
விரல்தொடும் நினைவுடன் மெலவணைத்தான்
செண்டென பூவனம் செறிமலர் தேனுண்ணும்
வண்டெனநானென விதியமைத்து
தண்டினை காம்பினைத் தளிர்மலர்பூவினைக்
கொண்டவள் நீயென தேன் அளைந்தான்

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Mar 03, 2011 1:17 am

காதலின் சங்கமம் (கவிதை) 677196 தமிழ் கொஞ்சி விளயாடுகிறது அருமையான வரிகள்
வளைபுகு நண்டென விரல்களும் ஓடியே
விந்தைகள் கண்டிட வேண்டிநின்றான்
தணிகனல் பொழிலலை தடவிய தென்றலும்
தரையினில் மலர்களின் மணம் விடுத்து
அணியெழில் குறுநகை எழுமிதழ் உடல்மணம்
இனிதென கண்டதைக் கொண்டதுவே

நரைகரு முகிலினை நிகரிரு குழல்முடி
நடுநுத லசைவதில் அழகடைந்தாள்

காதலின் சங்கமம் (கவிதை) 677196



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





காதலின் சங்கமம் (கவிதை) Ila
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Thu Mar 03, 2011 11:11 am

இளமாறன் wrote:காதலின் சங்கமம் (கவிதை) 677196 தமிழ் கொஞ்சி விளயாடுகிறது அருமையான வரிகள்
வளைபுகு நண்டென விரல்களும் ஓடியே
விந்தைகள் கண்டிட வேண்டிநின்றான்
தணிகனல் பொழிலலை தடவிய தென்றலும்
தரையினில் மலர்களின் மணம் விடுத்து
அணியெழில் குறுநகை எழுமிதழ் உடல்மணம்
இனிதென கண்டதைக் கொண்டதுவே

நரைகரு முகிலினை நிகரிரு குழல்முடி
நடுநுத லசைவதில் அழகடைந்தாள்

காதலின் சங்கமம் (கவிதை) 677196
நன்றிகள் இளமாறன். தங்கள் பாராட்டு கவிச்செடிக்கு நீரூற்று!

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Mar 03, 2011 11:16 am

அழகிய தேனமுத தமிழில் காதலுக்கு ஒரு பாடல்....
சங்கமத்தில் மூழ்கிய காதலன் காதலியின் அருமையான வரிகளை தொகுத்து தந்தமைக்கு அன்பு வாழ்த்துக்கள் ஐயா...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

காதலின் சங்கமம் (கவிதை) 47
யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Postயாதுமானவள் Fri Mar 11, 2011 10:49 am

வணக்கம் சகோதரர் கிரி அவர்களே...

தேர்ந்த காதல் கவிதை.... கண்மூடி சிறிது நேரம் தங்கள் கவிதை வரிகளைக் காட்சியாக்கி கண்முன்னே கொண்டுவந்து மகிழ்ந்தேன்...

என்னே ஒரு கற்பனை...!

வளைபுகு நண்டென விரல்களும் ஓடியே
விந்தைகள் கண்டிட வேண்டிநின்றான் (wow.....!)

மேலும்... கீழ்க்கண்ட வரிகள்....

மணியிடை காணுமோர் நெளிவினை தானலை
மனதினில் கொண்டதைப் போல்நெளிய
அணிகுழல் தானலை விரிந்திட மீன்களும்
அது ஒருவலையென அஞ்சினவே"


இவற்றைப் படிக்கும்போது இராவண காவியத்தில் புலவர் குழந்தை அவர்கள் எழுதியுள்ள கீழ்கண்ட வரிகள் ஞாபகம் வந்தன...

மதியமும் வெண்ணிற மலரின் றோற்றங்கண்
டிதுவென நம்முட னிகலிப் போரிடப்
புதியவோர் பெரும்படை போந்த தென்றுளம்
பதைபதைத் தெழுந்துதன் படையை நோக்குமால்..

அதாவது விந்தமலையின் அழகை விவரித்துக் கொண்டு வரும்போது... அம்மலையில் இடைவெளியாற்று அடர்ந்து செறிந்த மரங்களில் ஒளிபொருந்திய வெண்ணிற பூக்கள் மலர்ந்திருப்பதைக் கண்டு ...இரவில் பெரிய படையொன்று தீப்பந்தம் ஏந்தி நம்முடன் போரிட நம்மை நோக்கி வருகிறதோ என நிலவு அஞ்சி தன் படைகளான விண்மீன்களை நோக்குவதாக அழகான கற்பனையில் கூறியிருப்பார்... அவ்வரிகளை நியாபகப் படுத்துகிறது தாங்கள் எழுதிய மேற்கூறிய வரிகள்...



அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon Mar 14, 2011 12:08 pm

கவி எழுதுபவனுக்கு கிடைக்கும் மாபெரும் பரிசு, அவன் வாழ்விலே கிடைக்காத மாபெரும் பாக்கியம் என்ன தெரியுமா?
ஒரு மிகச்சிறந்த கவிஞர் அவன் கவிதையை பாராடுவது.
இந்தவிதத்தில் தங்கள் பாராட்டு எனக்குகிடைத்த மாபெரும்பரிசு.
இது ஈகரையில் என்னை அகம் பிரகாசிக்க ஒளியேற்றும் அனைத்து கவிஞர்களையும், மாபெரும் மற்றைய திறன் உள்ள
ரசித்து ஊட்டமிட்ட அன்பு உள்ளங்களையும் நன்றி கூறும் அன்பான நேரம்! வாழ்க அனைவரும்!

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக