புதிய பதிவுகள்
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Today at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Today at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Today at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Today at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Today at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Today at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Today at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Today at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Today at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூன்றா காரணம் ? Poll_c10மூன்றா காரணம் ? Poll_m10மூன்றா காரணம் ? Poll_c10 
62 Posts - 57%
heezulia
மூன்றா காரணம் ? Poll_c10மூன்றா காரணம் ? Poll_m10மூன்றா காரணம் ? Poll_c10 
41 Posts - 38%
mohamed nizamudeen
மூன்றா காரணம் ? Poll_c10மூன்றா காரணம் ? Poll_m10மூன்றா காரணம் ? Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
மூன்றா காரணம் ? Poll_c10மூன்றா காரணம் ? Poll_m10மூன்றா காரணம் ? Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூன்றா காரணம் ? Poll_c10மூன்றா காரணம் ? Poll_m10மூன்றா காரணம் ? Poll_c10 
104 Posts - 59%
heezulia
மூன்றா காரணம் ? Poll_c10மூன்றா காரணம் ? Poll_m10மூன்றா காரணம் ? Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
மூன்றா காரணம் ? Poll_c10மூன்றா காரணம் ? Poll_m10மூன்றா காரணம் ? Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
மூன்றா காரணம் ? Poll_c10மூன்றா காரணம் ? Poll_m10மூன்றா காரணம் ? Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூன்றா காரணம் ?


   
   
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Mar 07, 2011 12:16 pm

இன்று மாலை நடந்த திமுக உயர்நிலைக் குழுக் கூட்டத்தில், ஐக்கிய முன்னணி
அரசாங்கத்தில் இருந்து விலகிக் கொள்வதென்று திமுக முடிவெடுத்துள்ளதாகவும்,
மன்மோகன் அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு தருவதாகவும் முடிவெடுக்கப் பட்டு
தீர்மானம் இயற்றப் பட்டுள்ளது. இதற்கு காரணமாக கூறப்பட்டுள்ள விஷயம்,
முதலில் 60 இடங்களுக்கு ஒப்புக் கொண்டு பிறகு காங்கிரஸ் 63 வேண்டுமென்று
கேட்கிறார்கள் என்பதுதான். மிக மிக முக்கியமான சட்டமன்றத் தேர்தலைச்
சந்திக்கப் போகும் இரண்டு பெரிய கட்சிகள் வெறும் மூன்று சீட்டுகளுக்காகவா
கூட்டணி உறவை முறித்துக் கொள்ளப் போகிறார்கள் ? நம்ப முடியவில்லை அல்லவா ?

திமுக காங்கிரஸ் இடையே இருந்த உறவு, 2ஜி விசாரணை தொடங்கியதிலிருந்தே
உரசலில் இருந்தாலும், சட்டமன்றத் தேர்தலை இரண்டு கட்சிகளும் சேர்ந்தே
சந்திக்கும் என்று சோனியாவும், கருணாநிதியும் மாற்றி மாற்றி சொல்லிக்
கொண்டிருந்ததில் இருந்து இந்தச் சிறு சிறு உரசல்களைத் தாண்டி, கூட்டணி
பேச்சுவார்த்தை சுமுகமாகவே அமையும் என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி
வந்தனர்.
மூன்றா காரணம் ? 1580083773_262b38544b_b
நேற்று நள்ளிரவு கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில், “…….அவ்வாறு
கணக்கிட்ட போது காங்கிரஸ் கட்சிக்கு 51 இடங்கள் வந்தன. ஆனால் அந்த இடங்களை
அதிகமாக்க வேண்டுமென்று கேட்ட காரணத்தால் 51 இடங்கள் என்பது 53 என்றாகி,
பின்னர் 55 என்றாகி, 58 என்றாகி, கடைசியாக 60 இடங்கள் என்று குலாம் நபி
ஆசாத் அவர்கள் மூலம் தெரிவிக்கப் பட்டது. அதனை மேல் இடத்திலே தெரிவித்து
விட்டு உறுதி செய்வதாக கூறினார். ஆனால் அதன்படி அவர்கள் ஒப்பந்தத்தில்
கையெழுத்திட வராததோடு இன்று இரவு தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு
காங்கிரஸ் கட்சிக்கு 63 இடங்களை ஒதுக்க வேண்டுமென்றும், அந்த 63
இடங்களையும் அவர்களே நிச்சயித்துக் கேட்கும் தொகுதிகள் அத்தனையையும் தவ
வேண்டுமென்றும் தெரிவிக்கின்றார்கள்.

….. காங்கிரஸ் கட்சி 60 இடங்கள் போதாதென்று 63 இடங்கள் என்று கேட்பதும்
அதுவும் எந்தெந்த இடங்கள் என்று அவர்கள் கேட்பதையெல்லாம் கொடுக்க
வேண்டுமென்று கேட்பதும் முறைதானா என்பதை அந்தக் கட்சிதான் முடிவு செய்ய
வேண்டும்.

எனவே இது பற்றி 5.3.2011 அன்று மாலையில் நடைபெறவுள்ள உயர்நிலை
செயல்திட்டக் குழுவிலே விவாதித்து தி.மு.கழகம் உரிய முடிவெடுக்கும்
என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று கூறியுள்ளார்.

இதன் பின்னணி தான் என்ன ? வெறும் மூன்று சீட்டுகளுக்காக இந்தக் கூட்டணி முறிந்ததா ?

இந்தப் பின்னணியை ஆராய்வதற்கு சில ஆண்டுகள் பின்னோக்கிச் செல்ல
வேண்டியிருக்கிறது. 2004 தேர்தலில் காங்கிரஸ் கட்சி திமுகவோடு கூட்டணி
அமைத்தது. அந்தத் தேர்தலில், காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்த மொத்த இடங்கள்
141. ஏறக்குறைய அதற்கு சமமாக 137 இடங்களை பிஜேபி பிடித்தாலும், மற்ற
கட்சிகளின் ஆதரவு காங்கிரஸ் கட்சிக்கே கிடைத்ததால், ஆட்சி அமைத்தது. மற்ற
கட்சிகளின் ஆதரவின் அடிப்படையிலேயே மந்திரி சபை அமைக்க வேண்டிய
நிர்பந்தத்தால், கூட்டணிக் கட்சிகளின் இழுத்த இழுப்புக்கெல்லாம் காங்கிரஸ்
கட்சி வளைந்து கொடுக்க வேண்டியதாக இருந்தது.

அரசியலில் தன் முதல் படியை 2004 தேர்தலில் எடுத்து வைத்த, தொலைத்
தொடர்புத் துறை தொடர்பாக பல்வேறு வியாபாரங்களில் ஈடுபட்டு வந்த தயாநிதி
மாறனுக்கு மிக மிக முக்கியமான தொலைத் தொடர்புத் துறை வேண்டுமென்றும், இது
தவிரவும், வருமானம் அதிகம் வரக்கூடிய மிகுந்த பசையான துறைகள்
வேண்டுமெனவும், திமுக கொடுத்த நெருக்கடிகளுக்கு காங்கிரஸ் செவி
சாய்ப்பதைத்தவிர அப்போது வேறு வழியில்லை. அந்த மந்திரி சபை அமைக்கும்
சமயத்தில் கேட்ட துறைகளைத் தரவில்லை என்று, பத்திரிக்கையாளர்களை அழைத்து,
காங்கிரஸ் தலைவர் ஜனார்த்தன் ரெட்டியோடு செய்து கொள்ளப் பட்ட இலாகா
ஒதுக்கீடு தொடர்பான எழுத்துப் பூர்வமான ஒப்பந்தத்தை வெளியிட்டு,
வெளிப்படையாக காங்கிரஸை மிரட்டினார் கருணாநிதி. பணிந்த காங்கிரஸ், மற்றொரு
கூட்டணிக் கட்சியின் தலைவர் சந்திரசேகர ராவுக்கு ஒதுக்கப் பட்ட கப்பல்
மற்றும் தரைவழிப் போக்குவரத்துத் துறையை பறித்து, அவரை இலாகா இல்லாத
மந்திரியாக பல மாதங்கள் வைத்திருந்தது காங்கிரஸ் கட்சி.

அதன் பிறகு, மன்மோகனும், சோனியாவும், திமுகவை நம்பிக்கைக்குரிய
கூட்டணிக் கட்சி என்று அவ்வப்போது அறிவித்து வந்தாலும், திமுகவின் இந்த
மிரட்டல் போக்கை காங்கிரஸ் கட்சித் தலைமை மறக்கவேயில்லை.

இது நீறு பூத்த நெறுப்பாக இருந்தாலும், அமெரிக்காவுக்கு எழுதிக் கொடுத்த
அடிமை சாசனத்தின் படி, அணு ஒப்பந்தம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை
நிறைவேற்ற வேண்டியிருந்ததாலும், மீண்டும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற
நெருக்கடி இருந்ததாலும், பல்லைக் கடித்துக் கொண்டு, பொறுமையாக இருந்தது
காங்கிரஸ்.
மூன்றா காரணம் ? 1580097291_9ea7306f5a_b
காங்கிரஸ் கட்சியின் இந்த நெருக்கடியை பயன்படுத்தி, திமுக அமைச்சர்கள்,
வசூல் வேட்டையை நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு நடத்தினார்கள். இந்த
வசூல் வேட்டைகள் அத்தனையும், காங்கிரஸ் தலைமைக்குத் தெரியும் என்றாலும்,
போதுமான எம்.பிக்கள் எண்ணிக்கை இல்லாததால், பல்லைக் கடித்துக் கொண்டு
பொறுமையாக இருந்தார்கள்.

கப்பல் போக்குவரத்துத் துறையிலும், தரைவழிப் போக்குவரத்துத் துறையிலும்
டி.ஆர்.பாலு ஒரு புறமும், ஆண்டிமுத்து மகன், சுற்றுச் சூழல் மற்றும்
வனத்துறையில் மறுபுறமும் தொலைத் தொடர்புத் துறையில் தயாநிதி மாறன் மற்றொரு
புறமும் பின்னிப் பெடலெடுத்துக் கொண்டிருந்தார்கள்.

சேர்ந்த நாள் முதலே, தயாநிதி மாறன், தனது விளையாட்டை தொடங்கினார். ராஜ்
டிவிக்கு செய்தி ஒளிபரப்ப அனுமதி மறுத்ததில் தொடங்கி, டாடா டிஷ்நெட்டுக்கு
அனுமதி மறுத்ததும், விஜய் டிவியில் வந்த செய்திகளை நிறுத்தியதும், புதிய
சேனல்கள் திறக்க அனுமதி அளிக்காமல் தாமதப் படுத்தியதும், சன்
குழுமத்திற்கு, இந்தியா முழுவதும் எஃப்எம் சேனல் தொடங்க லைசென்ஸ்
பெற்றதும், தென்னிந்தியா முழுவதும், மொத்த ஊடகத்தை ‘கேடி சகோதரர்களின்’
கட்டுப் பாட்டில் கொண்டு வருவதற்கு எடுத்த முயற்சிகளும் காங்கிரஸ்
கட்சிக்குத் தெரியாமல் இல்லை.

மாநிலத்தில் உள்ள உளவுத் துறையை விட, பல மடங்கு வலிமையானது மத்திய
உளவுத் துறை. அத்துறைக்கு வேலையே, நாட்டில் உள்ள முக்கிய விஷயங்களை வேவு
பார்ப்பதை விட, இந்த அமைச்சர்கள் யாரிடம் எவ்வளவு வாங்கிறார்கள், எந்த
காண்ட்ராக்டுகள் வழங்குகிறார்கள், எந்த பெண்களுடன் உல்லாசமாக
இருக்கிறார்கள், எங்கே குடிக்கிறார்கள் போன்ற விபரங்களை சேகரிப்பது தான்.
இது போல, எல்லா அரசுகளும் சேகரிப்பது வழக்கம். இப்படி சேகரித்த விபரங்கள்
பத்திரமாக வைக்கப் பட்டிருக்கும். ஒரு அமைச்சரை ஒழித்துக் கட்ட வேண்டும்
என்று எப்போது உளவுத் துறை நினைக்கிறதோ, அப்போது இந்த ஆதாரங்கள்,
திடீரென்று டிவி சேனல்களின் அலுவலகத்தை சென்றடையும். ஒரு மாநிலத்தின்
உளவுத் துறையின் தலைவராக இருக்கும் ஜாபர் சேட்டுக்கே இத்தனை பேர்
தொலைபேசியை ஒட்டுக் கேட்கும் திறமை இருக்கிறது என்றால், இந்தியாவையே ஆளும்
உளவுத் துறைக்கு எத்தனை பேரின் தொலைபேசிகளை ஒட்டுக் கேட்கும் திறமை
இருக்கும் ? ஜாபர் சேட் தொலைபேசி ஒட்பட…

இதே போல, திமுக அமைச்சர்களைப் பற்றியும், பல்வேறு விபரங்கள் சேகரிக்கப்
பட்டுதான் இருந்தன. காங்கிரஸ் கட்சி மந்திரிகளை விட, திமுக மந்திரிகள்
இவ்வளவு சம்பாதித்துக் கொண்டிருந்ததை, பல மடங்கு கூடுதலாக சம்பாதிப்பது
காங்கிரஸ் கட்சிக்கும், சோனியாவுக்கும் மகிழ்ச்சியையா தரும் ?

அடுத்து நடந்ததுதான் மிகப் பெரிய நெருக்கடியாக அமைந்தது. தயாநிதி
மாறன் தான் முதலில், ஒரு மிகப்பெரிய தங்கச் சுரங்கத்துக்கு சாவியை
கண்டுபிடித்தவர். அந்தத் தங்கச் சுரங்கம் தான் ஸ்பெக்ட்ரம்.

‘முதலில் வருபவருக்கே முன்னுரிமை’ என்ற ஒரு அயோக்கியத்தனமான வழிமுறையை
கடைபிடித்து, ஸ்பெக்ட்ரத்தை பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களுக்கு விற்று
ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை சம்பாதித்தார் மாறன். ஆனால், மாறன்
சம்பாதித்தது, பெரிய அளவில் பிரச்சினை ஆகாமல், சுமூகமாகப் போனதற்கான
காரணம், ஏற்கனவே செல்பேசி தொழிலில் இருக்கும், ஏர்டெல், ஏர்செல் போன்ற
நிறுவனங்களுக்கு வழங்கியதால், இவர் மீது பெரிய அளவில் குற்றச் சாட்டுகள்
வரவில்லை. ஆனால், ரத்தன் டாடா என்ற சக்தி வாய்ந்த தொழில் அதிபரோடு
நேரடியாக மோதியதன் மூலம் மிகப் பெரிய எதிரியை இவர் உருவாக்கிக் கொண்டார்.
மூன்றா காரணம் ? Dayanidhi_maran
அடுத்து வருகிறார் ‘தகத்தகாய கதிரவன்’ மாறன் சகோதரர்களோடு ஏற்பட்ட
பிணக்கை அடுத்து, தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக ஆன ஆண்டிமுத்து ராசா,
வந்த நாள் முதலாகவே தனது வசூல் வேட்டையை தொடங்கினார். மாறன் போல, ராசா
சாமர்த்தியசாலி இல்லை என்பதை அறிந்த தொழில் நிறுவனங்கள் ‘மிட்டாயைக்
காண்பித்து திருவிழாவில் பிள்ளையைக் கடத்திக் கொண்டு போவது போல்’ ராசாவை
பயன் படுத்தின இந்த நிறுவனங்கள். பணத்தை கண்ணில் காட்டியதும், அந்த
நிறுவனங்கள் இழுத்த இழுப்புக்கெல்லாம் வளைந்து கொடுத்தார்.

வளைந்து கொடுத்து, வளைந்து கொடுத்து, வரலாறு காணாத ஊழல் புரிவதற்கு
ஆணிவேராக இருந்தார் ராசா. செல்பேசி சேவையில் ஏற்கனவே இருந்த பெரும்
ஜாம்பவான்களை புறக்கணித்து, ரியல் எஸ்டெட் தொழில் செய்து வந்த நிறுவனங்கள்,
காய்கறி விற்கும் நிறுவனங்கள் போன்ற நிறுவனங்களுக்கு ஸ்பெக்ட்ரத்தை
விற்றார் ராசா.

இதுவும் மத்திய உளவுத் துறை மூலம், காங்கிரசுக்கு தெரியத்தான் செய்தது.

ஈழப் போர் உச்சத்தில் இருந்த சமயத்தில் தினந்தோறும் ஆயிரக்கணக்கில்
அப்பாவித் தமிழர்கள் கொன்று குவிக்கப் பட்ட விபரங்கள் நம்மைப் போலவே
கருணாநிதியையும் வந்து அடையத்தான் செய்தது. இந்தப் போர், தமிழகத்தில்
மிகப் பெரிய எழுச்சியை உருவாக்கியது. இந்திய அரசின் மீது மக்களின் கோபம்
திரும்பியது. இந்த நேரத்தில் கருணாநிதியும் அவர் குடும்பத்தினரும்,
ஸ்பெக்ட்ரம் பணத்தை அடுக்கி வைத்து அதன் மீது புரண்டு கொண்டிருந்தனர்.
மக்கள் போராட்டம் முழுமையடைந்து விடக் கூடாது என்பதால், அந்தப்
போராட்டங்களை நீர்த்துப் போகச் செய்ய, புதிய புதிய போராட்டங்களை
அறிவித்தார். இறுதி நேரத்தில் இலங்கைக்கு உயிர் காக்கும் மருந்துகளை கடத்த
முயன்றவர்களை பிடித்து, அவர்கள் மீது பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ்
வழக்கு பதிவு செய்து நூற்றுக் கணக்கான இளைஞர்களை கைது செய்து சிறையில்
அடைத்தது கருணாநிதி அரசு.
மூன்றா காரணம் ? Karuna_evks
2009ல் மீண்டும் பாராளுமன்றத் தேர்தலை திமுவோடு கூட்டணி அமைத்துச்
சந்தித்த காங்கிரஸ் கடந்த முறை போலல்லாமல், இந்த முறை தனது பலத்தை கூட்டிக்
கொண்டது. கடந்த முறை 141 இடங்களில் வென்ற காங்கிரஸ், இந்த முறை 206
இடங்களை வென்றது. இதன் பிறகு தான் காங்கிரஸ் கட்சியின் மறுபக்கத்தை
கருணாநிதி கண்டார். வஞ்சகத்தில் இவரை விஞ்ச ஆளே இல்லை என்று வியக்கும்
அளவுக்கு வஞ்சகத்தை சோனியா வெளிப்படையாக காண்பிக்கத் தொடங்கினார்.

அந்த முகம், 60 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியல் வாழ்வில் இருந்து பல்வேறு
சூழ்ச்சிகளைப் பார்த்து, பல்வேறு சூழ்ச்சிகளை செய்து, மிகப் பெரிய அரசியல்
நயவஞ்சகரான கருணாநிதியாலேயே சமாளிக்க முடியாமல் இருந்தது என்றால் அது
மிகையில்லை.

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Mar 07, 2011 12:21 pm

2009ம் பாராளுமன்றத் தேர்தலுக்குப் பின் அமைச்சரவை உருவாக்கத்தின் போது,
2004 நினைப்பிலேயே இருந்த கருணாநிதிக்கு, காங்கிரஸின் மாறுபட்ட முகம்
தெரியத் தொடங்கியது.

ஈழப் போர் முடிவுக்கு வந்து, தமிழகமெங்கும் ஒரு கனத்த அமைதி நிலவிக்
கொண்டிருந்த போது, கருணாநிதி குடும்பத்தினர், நீரா ராடியாவோடு, யாருக்கு
எந்த இலாகா என்று பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தனர். கருணாநிதி தனது
பழைய பந்தாவை பயன்படுத்தி மீண்டும், அதே இலாக்காக்கள் வேண்டுமென நெருக்கடி
கொடுத்தும், காங்கிரஸ் பணிவதாக இல்லை. ஆனாலும், ஏற்கனவே, பல்லாயிரக்கணக்கான
கோடி ரூபாய்களை கொள்ளையடித்து ருசி கண்ட கருணாநிதி, தொலைத் தொடர்புத் துறை
வேண்டும் என்பதில் மட்டும் பிடிவாதமாக இருந்தார். ஆனால், காங்கிரஸ்,
தொலைத் தொடர்புத் துறையை கொடுப்பதில் சமரசம் செய்து கொண்டாலும்,
டி.ஆர்.பாலு, வேண்டாம் என்பதிலும், மீண்டும், வனம் மற்றும் சுற்றுச் சூழல்
துறையை வழங்கப் போவதில்லை என்பதிலும் முனைப்பாக இருந்தது. புது தில்லி
சென்ற கருணாநிதி, கேட்ட துறைகள் வழங்கப் படவில்லை என்றதும், எரிச்சலடைந்து,
தனது 18 எம்பிக்களையும் அழைத்துக் கொண்டு, சென்னை திரும்பப் போவதற்கு
தயாராக, விமான டிக்கட்டுகளை ப்ளாக் செய்தும் கூட, காங்கிரஸ் சமரசத்துக்கு
தயாராக இல்லை.

கோபித்துக் கொண்ட புது மாப்பிள்ளை போல, கருணாநிதி, பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல், சென்னை திரும்பினார்.
மூன்றா காரணம் ? 5_1
கடந்த முறை போலவே, அனைத்து துறைகளிலும் பணத்தை அள்ளலாம் என்று,
எதிர்ப்பார்த்திருந்த திமுகவுக்கு, பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.
முக்கியமான டெண்டர் உள்ளிட்ட விவகாரங்களில், பிரதமர் மன்மோகன் அல்லது,
பிரணாப் முகர்ஜி போன்ற முக்கிய அமைச்சர்கள் அடங்கிய அமைச்சரவைக் குழுதான்
முடிவு செய்யும் என்ற விதி அமலுக்கு வந்ததும், திமுக அமைச்சர்கள் எந்த
விவகாரத்திலும் காசு பார்க்க முடியாமல், கடும் எரிச்சலடைந்தனர்.

யுபிஏ 2 அரசு பதவியேற்றதிலிருந்தே, திமுகவுக்கும் கருணாநிதிக்கும்
நெருக்கடி தான். இதன் நடுவே, 2008ல் பயனீர் நாளேடு, 2ஜி ஸ்பெக்ட்ரம்
விவகாரத்தில் நடந்த ஊழல்கள் குறித்து செய்திகள் வெளியிட்டதும், 2009ல் அந்த
விஷயம் சூடு பிடிக்கத் தொடங்கியது. தொலைத் தொடர்புத் துறையை பெயருக்கு
ராசாவுக்கு கொடுத்து விட்டு, ராசா பதவியேற்ற ஒரு சில மாதங்களிலேயே, அவரது
தொலைத் தொடர்பு அமைச்சகத்தில் சிபிஐ சோதனைகள் நடத்தியது.

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் திமுகவை ஒவ்வொரு கட்டத்திலும் நெருக்கடி
கொடுத்து, நிலைகுலையச் செய்தது காங்கிரஸ். தொடர்ந்து பல்வேறு சமயங்களில்,
ஸ்பெக்ட்ரம் விவகாரம் உயிரோடு இருக்கும் வகையில், பத்திரிக்கைகளுக்கு
பல்வேறு தகவல்களை கொடுத்துக் கொண்டிருந்தது காங்கிரஸ் கட்சி. இதன் நடுவே,
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சித் தலைவர் ஈவிகேஎஸ்.இளங்கோவன், திமுக அரசு மீது
சராமரியான தாக்கதல்களை தொடுக்கத் தொடங்கினார். இளங்கோவனின் சில
வார்த்தைகள், திமுகவை நெளியச் செய்தது. ஒரு கட்டத்தில் இளங்கோவன்,
காங்கிரஸ் போட்ட பிச்சையில் திமுக தமிழகத்தில் ஆட்சி நடத்திக்
கொண்டிருக்கிறது என்று பேசினார்.
மூன்றா காரணம் ? Evks_elangovan
திமுக லேசாக அவ்வப்போது, இளங்கோவனின் பேச்சுகளுக்கு எதிர்ப்புக் குரல்
கொடுத்தாலும், காங்கிரஸ் தலைமை இளங்கோவனை கட்டுப்படுத்துவதாக இல்லை.
தமிழகம் வந்த ராகுல், ஒரு முறை கூட, கருணாநிதியை சந்திக்காதது மிக மோசமான
ஈகோயிஸ்டான கருணாநிதிக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தியது.

மத்திய கணக்காயர் அறிக்கை 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ஒரு லட்சத்து
எழுபத்தாறாயிரம் கோடி என்ற ஒரு தொகையை வரையறை செய்தது. இந்த அறிக்கை
பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப் படும் முன்பே, ஊடகங்களில் வெளியாகி புயலைக்
கிளப்பியது. ராசா தான் இனி தப்ப முடியாது என்பதை உணர்ந்தார்.

திருச்சிக்கு காங்கிரஸ் கூட்டத்துக்கு வருகை தந்த சோனியா காந்தி,
கருணாநிதியை சந்திப்பதை தவிர்க்கப் போகிறார் என்று அறிந்த கருணாநிதி, அவசர
அவசரமாக சென்னை விமான நிலையம் சென்று, சோனியாவை சந்தித்து, காங்கிரசுக்கும்
திமுகவுக்கும் உறவு பலமாக இருப்பது போல காண்பித்துக் கொண்டார். திருச்சி
கூட்டத்தில் பேசிய சோனியா, ஒரு வார்த்தைக் கூட திமுக காங்கிரஸ் உறவைப்
பற்றிப் பேசவில்லை.

உச்ச நீதிமன்றத்தில் ஸ்பெக்ட்ரம் விவகாரம் விசாரணைக்கு வந்ததிலிருந்தே,
திமுகவுக்கு கடும் நெருக்கடி தொடங்கியது. உச்ச நீதிமன்றம், சிபிஐ ஐ
சராமரியாக கேள்விக் கணைகளால் துளைத்து எடுக்கவும், சிபிஐ தனது விசாரணையை
முடுக்கி விட்டது. அது வரை நத்தை வேகத்திலும், நகராமலேவும் இருந்த சிபிஐ,
திடீரென்று வேகம் பிடிக்கத் தொடங்கியது. ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக பல்வேறு
ஆவணங்கள், ஊடகங்களில் வெளி வரத் தொடங்கின. இந்த நடவடிக்கைகளையெல்லாம்
பார்த்த கருணாநிதி காங்கிரஸ் கட்சியின் சூட்சுமங்களை மெல்ல மெல்ல புரிந்து
கொண்டார். காங்கிரஸ் கட்சியை திருப்பி அடிக்கும் நிலையில் தாம் இல்லை
என்பதையும் புரிந்து கொண்டார்.

ஸ்பெக்ட்ரம் விவகாரம் மிகப் பெரியதாக வெடித்ததும், ராசாவை காவு கொடுக்க
வேண்டும் என்பதை புரிந்து கொண்ட கருணாநிதி, ராசாவை காப்பாற்ற நினைத்து
முயற்சிகள் எடுத்தது உண்மையே. ஆனாலும், ராசா, முழுகும் நிலையில்
இருக்கையில் கருணாநிதியின் முயற்சிகள் எதுவும் கைகூடவில்லை. ராசா பதவியை
ராஜினாமா செய்ததோடு விவகாரம் முடிந்து விடும் என்று நினைத்திருந்த
கருணாநிதி, அவர் டெல்லியில் இருக்கும் போதே ராசாவை 8 மணி நேரத்துக்கும்
அதிகமாக விசாரித்ததும், சென்னை திரும்பிய இரண்டாவது நாள் கைது செய்ததும்,
காங்கிரசுடனான உறவு இறுதிக் கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது என்பதை
உணர வைத்தது.

தொடர்ந்து கனிமொழி தொடர்பாகவும், ராசாத்தி அம்மாள் தொடர்பாகவும் ஏராளமான
சொத்துகளை சேர்த்து வைத்திருக்கிறார்கள் என்பதை திட்டமிட்டு ஊடகங்களுக்கு
மத்திய உளவுத் துறை வெளியிட்டுக் கொண்டே வந்தது.
மூன்றா காரணம் ? Kanimozhi
க்ளைமாக்ஸாக, 2ஜி விவகாரத்தில் கலைஞர் டிவிக்கு 216 கோடி ரூபாய்
கொடுத்திருந்த தகவல் ஊடகங்களில் வெளியானது. இதையடுத்து கலைஞர் டிவியில்
நள்ளிரவு சோதனையும் நடைபெற்றது. சிபிஐ விசாரணையை துரிதப் படுத்தியதும்,
திரை மறைவில், இந்த விசாரணையிலிருந்து குடும்பத்தைக் காப்பாற்ற திமுக
பல்வேறு பேரங்களை காங்கிரஸ் கட்சியோடு நடத்தினாலும், உச்சநீதிமன்றத்தை கை
காட்டி காங்கிரஸ் ஒதுங்கிக் கொண்டது.

இந்தப் பின்னணியில் தான் தேர்தல் நெருங்கியது. கூட்டணிப்
பேச்சுவார்த்தை தொடங்கியதும், காங்கிரஸ் ஐவர் குழுவை அமைத்தது. இந்த ஐவர்
குழு தொடக்கம் முதலே, கெடுபிடியாகப் பேசியது. கடந்த முறை 51 இடங்கள்
தந்தது போல, இந்த முறை முடியாது என்றும், குறைந்தது 90 இடங்களாவது வேண்டும்
என்றும் கோடிட்டுக் காட்டியது.

காங்கிரசுக்கு நெருக்கடி கொடுக்க, கருணாநிதி காங்கிரசை
கலந்தாலோசிக்காமலேயே, பாமகவுக்கு 31 இடங்கள் ஒதுக்கி அறிவிப்பு
வெளியிட்டார். இது காங்கிரஸ் கட்சிளை கடும் எரிச்சலுக்கு ஆளாக்கியது. இந்த
எரிச்சல், இதன் பின்னர் நடந்த பேச்சுவார்த்தையிலும் எதிரொலித்தது.

ஆனால், தாம் மிகப் பெரிய சாமர்த்தியசாலி என்று நினைத்துக்
கொண்டிருக்கும் கருணாநிதி, காங்கிரசோடு பேச்சுவார்த்தை நடந்து
கொண்டிருக்கையிலேயே, கொங்கு முன்னேற்றப் பேரவைக்கு 7 இடங்களை ஒதுக்கினார்.

கருணாநிதியின் இந்த நடவடிக்கை திமுக காங்கிரஸ் உறவுக்கு, இறுதி அஞ்சலி
செலுத்துவதாக அமைந்தது. இதையடுத்து காங்கிரஸ், தனது பிடியை மேலும்
இறுக்கியது. ஏற்கனவே ஒப்புக் கொள்ளப் பட்ட 60 இடங்களுக்கு மேல் 63
இடங்களோடு, கூட்டணி மந்திரி சபை மற்றும் குறைந்த பட்ட செயல்திட்டம் என்ற
நிபந்தனைகளை உறுதிப் படுத்தியது.

‘பொறுத்தது போதும் பொங்கி எழடா மகனே மனோகரா’ என்ற கருணாநிதியின்
வசனத்தைப் போலவே, பொங்கி எழுந்து காங்கிரசை கண்டித்து அறிக்கை வெளியிட்டார்
கருணாநிதி. இந்த அறிக்கையைப் பார்த்து, காங்கிரஸ் ஆதரவை வாபஸ் வாங்கிக்
கொண்டால், மத்தியில் ஆட்சி கவிழும் நிலை உருவாகும் என்று அஞ்சி, காங்கிரஸ்
மண்டியிடும் என்று தப்புக் கணக்கு போட்டார். ஆனால் காங்கிரஸ் அசருவதாக
இல்லை. காங்கிரஸ் பணியும் என்பதாலேயே, ஆதரவு வாபஸ் என்று வெளிப்படையாக
அறிவித்தாலும், திமுக மந்திரிகளின் ராஜினாமா கடிதத்தை பேக்ஸ் மூலம்
அனுப்பாமல் தாமதித்தார் கருணாநிதி. எவ்வித முன்னேற்றமும் ஏற்படாததால், 7
அன்று காலை 6.30க்கு திமுக மந்திரிகள் டெல்லி கிளம்பிச் சென்று பிரதமரை
சந்தித்து, ராஜினாமா கடிதத்தை கொடுக்க உள்ளார்கள்.

இதில் இந்த 3 இடங்கள் என்று கருணாநிதி வெளிப்படையாகச் சொன்ன காரணம்
மட்டுமே உண்மையா என்றால் இல்லை. அடுத்தடுத்து நடக்கும் சிபிஐ விசாரணை
நிச்சயமாக, கனிமொழியையும், தயாளுவையும் பாதிக்கும் என்பது கருணாநிதிக்கு
நிச்சயம் தெரியும். மேலும் காங்கிரஸ் கேட்ட 63 இடங்களையும் கொடுத்து,
கூட்டணி மந்திரி சபைக்கு ஒப்புக் கொண்டாலும் கூட, சிபிஐ விசாரணை தன்
குடும்பத்தை நோக்கி வருவதை தவிர்க்க முடியாது என்பதை கருணாநிதி நன்றாகவே
உணர்ந்திருக்கிறார்.
மூன்றா காரணம் ? 1580963828_4ea23b4ece_b
சிபிஐ வளையம் நெருக்கும் போது, ஆதரவு வாபஸ் என்றால், கடைநிலையில்
இருக்கும் திமுக தொண்டன் கூட மதிக்க மாட்டான் என்பது அறிந்ததால் தான்
கருணாநிதி, இப்போதே வாபஸ் என்று அறிவித்து விட்டார். இப்போது வாபஸ்
பெற்றதால், குறைந்த பட்சம், திமுகவையாவது காப்பாற்றலாம், ஆனால், தாமதமாக
வாபஸ் பெற்றால், கட்சியையும் இழக்க வேண்டி வரும் என்பதை நன்றாகவே
உணர்ந்திருக்கிறார். இப்போது, மீண்டும் ‘வடக்கு வாழ்கிறது, தெற்கு
தேய்கிறது, தமிழ் மொழிக்கு ஆபத்து, ஈழத்தில் தமிழர்கள் முள்வேலி
முகாமுக்குள் அடைபட்டிருக்கிறார்கள், மத்திய அரசு பாராமுகம் காட்டுகிறது,
கச்சத்தீவை மீட்போம், மீனவர்கள் படுகொலையை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை’
என்பது போன்ற பழைய கோஷங்களோடு, மீண்டும் காங்கிரஸ் எதிர்ப்பு அரசியல்
பண்ணலாம் என்ற நம்பிக்கையிலேயே கருணாநிதி இருக்கிறார்.

ஆனால், காங்கிரஸ் இதை விட சாதுர்யமாக, இப்போதே பாட்டாளி மக்கள் கட்சியை
திமுக அணியிலிருந்து பிரிக்க பேச்சுவார்த்தையை தொடங்கி விட்டதாக தகவல்கள்
கூறுகின்றன.

‘வினை விதைத்தவன் வினையைத் தானே அறுக்க முடியும் ? ‘ அதைப் போலவே தான் கருணாநிதியும் இன்று வினையை அறுத்துக் கொண்டிருக்கிறார்.

மூன்றா காரணம் ? Karunaaaa
இந்த சதுரங்க ஆட்டத்தில், கிங் மேக்கராக இருந்த கருணாநிதி, சாதாரண
சிப்பாயைப் போல, வெட்டி எரியப் படும் வரை காங்கிரஸ் கட்சி ஓயப் போவதில்லை.
இந்த சதுரங்க ஆட்டத்தை டெல்லியிலிருந்து நடத்திக் கொண்டிருப்பவர் ராகுல்
காந்தி என்று, புதுதில்லியில் விபரமறிந்தவர்கள் சொல்லுகிறார்கள். தொடக்கம்
முதலே, கருணாநிதியை அறவே பிடிக்காதவரான ராகுல் காந்தி, கருணாநிதி எக்காரணம்
கொண்டும் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில் மிக மிக உறுதியாக
இருக்கிறார் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

இந்தத் தேர்தல், திமுகவின் இத்தனை ஆண்டுகால வரலாறில், மிகப் பெரிய சோதனை
என்றால் அது மிகையில்லை.. இந்த சோதனையில் திமுக கரை சேருமா, இல்லை
காட்டாற்று வெள்ளத்தோடு அடித்துச் செல்லப் படுமா என்பதை பொறுத்திருந்துதான்
பார்க்க வேண்டும்.
நன்றி சவுக்கு

ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Postஸ்ரீஜா Mon Mar 07, 2011 12:28 pm

சரியான கட்டுரை .......... பகிர்ந்ததிர்க்கு நன்றி ..............



துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Mon Mar 07, 2011 12:35 pm

மூன்றுதான் காரணம்..........

அண்ணா மூன்றெழுத்து... தி மு க மூன்றெழுத்து... வரிசையில்

இராசா மூன்றெழுத்து... 2-G (2 - G) மூன்றெழுத்து..., பணம் மூன்றெழுத்து... ஊழல் மூன்றெழுத்து... என்பதால் நட்பு என்ற மூன்றெழுத்திற்கு வந்தது முறிவு எனும் மூன்றெழுத்து



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Mar 07, 2011 1:37 pm

அரசியலில் இதெல்லாம் பார்த்தாகவேண்டிய கட்டாயம்....
செய்தி பகிர்வுக்கு அன்பு நன்றிகள் மணி...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மூன்றா காரணம் ? 47
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Mar 07, 2011 1:40 pm

கூட்டு -இதுவும் மூன்று எழுத்து ,விரைவில் சமாதானம் ஆகிவிடும்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக