புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 10:25 pm

» கருத்துப்படம் 08/06/2024
by mohamed nizamudeen Today at 7:52 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Today at 6:13 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by T.N.Balasubramanian Today at 5:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Today at 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Today at 10:52 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:49 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Today at 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Today at 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Today at 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Today at 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Today at 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Yesterday at 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Yesterday at 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Yesterday at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! Poll_c10கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! Poll_m10கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! Poll_c10 
78 Posts - 49%
heezulia
கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! Poll_c10கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! Poll_m10கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! Poll_c10 
62 Posts - 39%
T.N.Balasubramanian
கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! Poll_c10கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! Poll_m10கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! Poll_c10கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! Poll_m10கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! Poll_c10 
6 Posts - 4%
prajai
கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! Poll_c10கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! Poll_m10கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! Poll_c10கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! Poll_m10கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! Poll_c10கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! Poll_m10கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! Poll_c10கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! Poll_m10கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! Poll_c10 
120 Posts - 53%
heezulia
கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! Poll_c10கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! Poll_m10கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! Poll_c10 
83 Posts - 37%
T.N.Balasubramanian
கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! Poll_c10கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! Poll_m10கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! Poll_c10 
10 Posts - 4%
mohamed nizamudeen
கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! Poll_c10கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! Poll_m10கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! Poll_c10 
8 Posts - 4%
prajai
கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! Poll_c10கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! Poll_m10கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! Poll_c10கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! Poll_m10கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! Poll_c10கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! Poll_m10கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'!


   
   
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon May 16, 2011 8:44 pm

எகிப்து புரட்சி இங்கேயும் நிகழ்ந்தது..

'ஈழத்து சோகம்தான் காவு வாங்கி​விட்டது!’, 'ஸ்பெக்ட்ரம் ஊழல்தான் தலை குப்புறக் கவிழ்த்துவிட்டது!’, 'கூட்டணிக் குளறுபடிதான் ஏமாற்றி​விட்டது!’ - தி.மு.க-வின் தோல்விக்கு இப்படி எத்தனையோ காரணங்கள் அடுக்கடுக்காகச் சொல்லப்பட்டாலும், அதில் மிக முக்கியமானது குடும்பப் பூசல்!

தேர்தல் களத்தில் ஜாம்பவானாக நின்று சாதித்து இருக்கவேண்டிய கருணாநிதி, கோபால​​புரத்துக்கும் சி.ஐ.டி. காலனிக்குமாக அலைந்து அலைந்தே அல்லாடிப்போனார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டும் கூட்டணிப் பூசல்களைச் சரிசெய்ய முடியாமல் கருணாநிதி போராடியதை யாரும் மறந்திருக்க முடியாது. ஆனால், கூட்டணிக் குடைச்சலைக் காட்டிலும், அவர் அப்போது அதிகமாக குமைந்துபோனது குடும்பக் குடைச்சலால்தான். 'கனிமொழி என்னைக்கு கட்சிக்கு வந்த ஆள்? குலாம் நபி ஆசாத்துடன் பேச்சுவார்த்தை நடத்த கனிமொழி எல்லாம் ஒரு ஆளா?’ என அழகிரி ஆவேசப்பட... தயாநிதி மாறன் கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! P42தகிக்க... இதிலேயே நிலை குலைந்து போனார் கருணாநிதி. 'காங்கிரஸைக் கை கழுவிவிடலாம்!’ என சீனியர் மந்திரிகள் அட்வைஸ் பண்ண, 'அப்படிப் பண்ணினால் ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில், எப்படியும் கனிமொழியை உள்ளே தள்ளிடுவாங்களேப்பா’ எனத் தழுதழுத்தார் கருணாநிதி. குடும்பக் கவலையிலேயே காங்கிரஸுக்கு 63 தொகுதிகளை ஒதுக்கிக் கொடுத்து ஆசுவாசமானார். 'ஜெயிப்போமா... தோற்போமா?’ எனத் திணறிய ஜெயலலிதாவுக்கு முதல் நம்பிக்கையே காங்கிரஸுக்கு இத்தனைத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டதுதான்!

சரி, கூட்டணிதான் அமைந்துவிட்டது. இனியாவது களத்தில் கனகச்சிதமாகச் செயல்படலாம் என கருணாநிதி நினைக்க... அதற்கும் செக் வைத்தார் ராஜாத்தி அம்மாள்.

''செல்வி, துர்கா, கயல்விழி எல்லாம் பிரசாரத்துக்குப் போகும்போது, கனிமொழி மட்டும் போகக் கூடாதா?'' எனக் கேள்வி எழுப்பினார். 'கனிமொழி பிரசாரத்துக்கு வந்தால், ஸ்பெக்ட்ரம் விஷயத்தை மக்களுக்கு நினைவூட்டுவதுபோல் ஆகிவிடும்!’ என அழகிரி தொடங்கி, கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலரும் அபாயம் பாடினார்கள். ஆனாலும், கனிமொழியின் திடீர் பிரசாரப் பயணத் திட்டம் அறிவாலயத்தால் அறிவிக்கப்பட்டது. 'கனிமொழி எங்கே வேண்டுமானாலும் பிரசாரம் செய்யட்டும். ஆனால், மதுரைப் பக்கம் கால் வைக்கக் கூடாது. இதையும் மீறி வந்தால், தென் மாவட்டத் தோல்விக்கு நான் பொறுப்பேற்க முடியாது!’ என முழங்கினார் அழகிரி. அந்த வார்த்தைகளுக்கு ஒரு வாரம் மட்டுமே மதிப்பு இருந்தது. கருணாநிதியின் மதுரைப் பிரசாரத்தில் கனிமொழி நடுநாயகமாக நிறுத்தப்பட்டார். அழகிரிக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது. 'வடிவேலுவை பிரசாரத்துக்கு இழுத்து வந்து ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை மறக்கடிக்க, நான் போராடிக்கிட்டு இருக்கேன். இவரோ, தன் மகளை முன்னிறுத்துறதா நினைச்சு, ஊரெல்லாம் ஸ்பெக்ட்ரத்தை ஞாபகப்படுத்துறார். கட்சிக்காரங்க யாரும் இனி என் பேச்சைக் கேட்க வேண்டாம். தலைமையோட வழியிலேயே நீங்களும் இஷ்டத்துக்கு செயல்படுங்க!’ என ஆவேசம் காட்டிய அழகிரி, அத்தோடு அமைதியானார். திருமங்கலம் பாணியில் தென் மாவட்டங்களில் தி.மு.க-வை வெற்றி பெறவைத்துவிடலாம் என நினைத்த அழகிரி, கனிமொழிக்குக் கொடுக்கப்பட்ட முக்கியத்துவத்தில் கடுப்பாகி, வீட்டோடு முடங்கிப்போனார்.

'சென்னையில் ஜெயிப்பது சுலபம் அல்ல’ என எண்ணி, சொந்த ஊரான திருவாரூர் பக்கம் ஒதுங்கிய கருணாநிதி, அங்கேயும் குடும்ப அல்லாட்டத்துக்கு ஆளாகிப்போனார். தந்தையின் வெற்றிக்காக தலைமகள் செல்வி திருவாரூரில் வீடு வீடாகப்பிரசாரம் செய்ய... அங்கேயும் போட்டிக்குப் போனார் கனிமொழி. அக்கா ஒரு புறம்... தங்கை ஒரு புறம்... எனப் பிரசாரம் செய்யப் பிடிக்காமல், செல்வி கோபித்தபடி திருவாரூரில் இருந்த சண்முகத்தம்மாள் வீட்டுக்குத் திரும்பினார். அங்கேயும் கனி ஆஜரானதுதான் ஹைலைட்! ஒப்புக்குச்சப்பாக கனியோடு சில வார்த்தைகள் செல்வி பேசினாலும், உள்ளுக்குள் மட்டும் கோபம் ஆறவில்லை. இதற்கிடையில், 'சென்னையில் பல தொகுதிகள் வீக்’ என உளவுத் துறை நோட் போட, தயாநிதி மாறனை தீவிரப் பிரசாரத்தில் இறக்கலாம் என முடிவு எடுத்தார் கருணாநிதி. அதற்கு எங்கே இருந்து தடை வந்ததோ... கடைசி வரை கட்சியின் உத்தரவுக்குக் காத்திருந்த தயாநிதி, ஒரு சில தொகுதிகளில் மட்டும் சுற்றிச் சுழன்று ஒதுங்கிவிட்டார்!

பல மாவட்ட நிர்வாகிகள் சுறுசுறுப்பு இழந்துபோனதற்கும் கருணாநிதியின் குடும்பப் பூசல்தான் காரணம். 'ஸ்டாலினை பிரசாரத்துக்கு அழைத்தால், அழகிரி கோபம் ஆவார்’, 'அழகிரியை அழைத்தால், ஸ்டாலின் கோபப்படுவார்’, 'கனிமொழியை அழைத்தால், இருவரையும் பகைத்த மாதிரி ஆகிவிடும்!’ என அனுமான பயத்திலேயே கட்சி நிர்வாகிகள் அல்லாடிப்போனார்கள். கட்சிக்காரர்களின் உள்ளடி வேலைகளை யாரிடம் சொல்வது என்று வேட்பாளர்களுக்குப் புரியவில்லை. 'ஸ்டாலின் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதிக்கு நிச்சயம் பிரசாரத்துக்கு அழைப்பார்கள்!’ எனக் காத்திருந்தார் அழகிரி. ஆனால், கடைசி வரை அதற்கும் அழைப்பு இல்லை.

இதற்கிடையில் திருவாரூரில் பிரசாரத்தை முடித்த கருணாநிதி, மொத்தக் குடும்ப உறவுகளையும் அங்கே வைத்துக்கொண்டு, 'கனிமொழிதான் இந்தத் தேர்தலில் தீவிரமாகப் பிரசாரம் செய்தது!’ என சர்ட்டிஃபிகேட் கொடுக்க... செல்வி சினத்தோடு சென்னைக்கு வந்துவிட்டார்.

மொத்தத்தில் கருணாநிதியின் குடும்ப மோதல் பெரிதாக சந்தி சிரித்தது இந்தத் தேர்தலில்தான். ஸ்டாலின், அழகிரி ஆதரவாளர்கள் பகிரங்கமாக உள்ளடி வேலைகளை நிகழ்த்தியதும், அதைக் கண்டிக்க முடியாமல் கருணாநிதி அல்லாடியதும் கண்கூடான சாட்சி.

தேர்தல் முடிந்து, ஸ்பெக்ட்ரம் விவகாரங்களில் இருந்து கனிமொழி​யைக் காப்பாற்ற டெல்லிக்குப் போன ராஜாத்தி, ''என் மகளை உள்ளே வெச்சிட்டு, யார் யாரோ ஆளப் பார்க்குறாங்க. நான் இருக்​கும் வரை, அது நடக்காது!'' என ஆவேசமாகக் கொந்தளித்தார். கருணா​நிதியின் குடும்பக் குடுமிப் பிடி டெல்லியிலும் சிரிப்பாய் சிரித்தது... சிரிக்கிறது!

எகிப்தில் மிகப் பெரிய புரட்சி வெடிக்க முக்கியக் காரணமாக இருந்தது அங்கே நிலவிய குடும்ப ஆதிக்கம்தான். அதில் கொஞ்சமும் குறைவு இல்லாத அளவுக்கு கும்மாளமும் குடுமிப் பிடியுமாக நடந்த குடும்ப ஆதிக்கம்தான் தி.மு.க. என்னும் யானையை இந்தத் தேர்தலில் தோல்விச் சேற்றுக்குள் தள்ளியது!

- இரா.சரவணன்

நன்றி விகடன்


அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon May 16, 2011 10:40 pm

எது எப்படி இருப்பினும் இப்ப மொத்தத்துக்கு இல்ல சேதாரமா போச்சி புன்னகை

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon May 16, 2011 11:02 pm

புன்னகை புன்னகை




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 17, 2011 1:13 pm

யானை தன் தலை இல் மண்ணை வாரி போட்டுக்கொள்வது என்ப்து இது தானா ? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue May 17, 2011 1:25 pm

krishnaamma wrote:யானை தன் தலை இல் மண்ணை வாரி போட்டுக்கொள்வது என்ப்து இது தானா ? புன்னகை

இது பண்ணி கூட்டம் மண்ணை வாரி போட்டுக்கொண்டது என்று தான் கூற வேண்டும்

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Tue May 17, 2011 1:41 pm

அசுரன் wrote:எது எப்படி இருப்பினும் இப்ப மொத்தத்துக்கு இல்ல சேதாரமா போச்சி புன்னகை
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! Scaled.php?server=706&filename=purple11
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 17, 2011 2:08 pm

SK wrote:
krishnaamma wrote:யானை தன் தலை இல் மண்ணை வாரி போட்டுக்கொள்வது என்ப்து இது தானா ? புன்னகை

இது பன்னி கூட்டம் மண்ணை வாரி போட்டுக்கொண்டது என்று தான் கூற வேண்டும்

கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! 224747944 கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! 224747944 கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! 224747944 கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! 224747944 கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! 224747944



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Tue May 17, 2011 2:11 pm

ஸ்டாலின் திமுகவில் ஏற்றுக் கொள்ள படவேண்டியவர்.முதலில் ஓரங்கட்ட வேண்டியது அழகிரி, கனிமொழி....



தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக