புதிய பதிவுகள்
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Today at 8:50 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Today at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Today at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Today at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Today at 8:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Today at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Today at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Today at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Today at 8:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:34 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Today at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Today at 8:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கண்டதேவிப் புராணம் - Page 6 Poll_c10கண்டதேவிப் புராணம் - Page 6 Poll_m10கண்டதேவிப் புராணம் - Page 6 Poll_c10 
31 Posts - 55%
ayyasamy ram
கண்டதேவிப் புராணம் - Page 6 Poll_c10கண்டதேவிப் புராணம் - Page 6 Poll_m10கண்டதேவிப் புராணம் - Page 6 Poll_c10 
23 Posts - 41%
Ammu Swarnalatha
கண்டதேவிப் புராணம் - Page 6 Poll_c10கண்டதேவிப் புராணம் - Page 6 Poll_m10கண்டதேவிப் புராணம் - Page 6 Poll_c10 
1 Post - 2%
M. Priya
கண்டதேவிப் புராணம் - Page 6 Poll_c10கண்டதேவிப் புராணம் - Page 6 Poll_m10கண்டதேவிப் புராணம் - Page 6 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கண்டதேவிப் புராணம் - Page 6 Poll_c10கண்டதேவிப் புராணம் - Page 6 Poll_m10கண்டதேவிப் புராணம் - Page 6 Poll_c10 
74 Posts - 65%
ayyasamy ram
கண்டதேவிப் புராணம் - Page 6 Poll_c10கண்டதேவிப் புராணம் - Page 6 Poll_m10கண்டதேவிப் புராணம் - Page 6 Poll_c10 
21 Posts - 18%
mohamed nizamudeen
கண்டதேவிப் புராணம் - Page 6 Poll_c10கண்டதேவிப் புராணம் - Page 6 Poll_m10கண்டதேவிப் புராணம் - Page 6 Poll_c10 
4 Posts - 4%
Rutu
கண்டதேவிப் புராணம் - Page 6 Poll_c10கண்டதேவிப் புராணம் - Page 6 Poll_m10கண்டதேவிப் புராணம் - Page 6 Poll_c10 
3 Posts - 3%
prajai
கண்டதேவிப் புராணம் - Page 6 Poll_c10கண்டதேவிப் புராணம் - Page 6 Poll_m10கண்டதேவிப் புராணம் - Page 6 Poll_c10 
3 Posts - 3%
Baarushree
கண்டதேவிப் புராணம் - Page 6 Poll_c10கண்டதேவிப் புராணம் - Page 6 Poll_m10கண்டதேவிப் புராணம் - Page 6 Poll_c10 
3 Posts - 3%
ரா.ரமேஷ்குமார்
கண்டதேவிப் புராணம் - Page 6 Poll_c10கண்டதேவிப் புராணம் - Page 6 Poll_m10கண்டதேவிப் புராணம் - Page 6 Poll_c10 
2 Posts - 2%
Jenila
கண்டதேவிப் புராணம் - Page 6 Poll_c10கண்டதேவிப் புராணம் - Page 6 Poll_m10கண்டதேவிப் புராணம் - Page 6 Poll_c10 
2 Posts - 2%
Ammu Swarnalatha
கண்டதேவிப் புராணம் - Page 6 Poll_c10கண்டதேவிப் புராணம் - Page 6 Poll_m10கண்டதேவிப் புராணம் - Page 6 Poll_c10 
1 Post - 1%
viyasan
கண்டதேவிப் புராணம் - Page 6 Poll_c10கண்டதேவிப் புராணம் - Page 6 Poll_m10கண்டதேவிப் புராணம் - Page 6 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்டதேவிப் புராணம்


   
   

Page 6 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 20, 2011 3:03 am

First topic message reminder :

கண்டதேவிப் புராணம்
திரிசிரபுரம் மஹாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் இயற்றியது.



இஃது சிவநேசம் பொருந்திய வெளிமுத்தி வயிரவ ஐயாவவர்கள் அநுமதிப்படி தேவகோட்டை மு.குப்பான் செட்டியாரவர்கள் குமாரர் முத்தரசப்பசெட்டியாரால் சென்னை இலக்ஷ்மீவிலாச அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப்பட்டது.


கடவுள் வாழ்த்து


1 விநாயகர்
பூமேவு பரையொருபாற் பெருமான்பின் பாற்றழுவிப் புணர்ந்தொன் றாய
மாமேவு பெண்பாலாண் பாலொடுமா றுற்றெரிந்து மாறு றாமே
தூமேவு முன்பால்வந் துறத்தழீஇ யொருமருப்பாற் றுணைப்பா லாய
தேமேவு முகமலரும் வலம்புரிக்குஞ் சரத்திருதாள் சேர்ந்து வாழ்வாம் 1

2 சொர்ன்னவருடேசர்
மாமேவு கடவுளருந் தடவுளருஞ் சுரும்பமர்பூ மாலை வேந்துங்
கோமேவு மலரானும் பலரானும் புகழ்திகிரிக் குரிசி றானுந்
தேமேவு பண்ணவரு நண்ணவருள் சுரந்துகண்ட தேவி மேவும்
பாமேவு புகழ்ச்செம்பொன் மாரிபொழிந் தவர்மலர்த்தாள் பரசி வாழ்வாம் 2

3 தேமாரி யமன்பதைக ளுளங்கருதி யன்னையுஞ்சீர் திகழ்பி தாவு
மாமாரி யனுமுலவாப் பெருங்கதியு நீயேயென் றடைந்து போற்றக்
காமாரி யாயிருந்துங் கவுமாரி யொடுங்கலந்த கருணை மூர்த்தி
பூமாரி சுரர்பொழியப் பொன்மாரி பொழிந்தபிரான் பொற்றாள் போற்றி 3

4 பெரியநாயகி
சொற்றபெரும் புவனமெலா மொருங்கீன்ற பெருந்தலைமைத் தோற்றத் தானோ
கொற்றமிகு பெருங்கருணை சுரக்குமிறை மையினானோ குமரி யாயுங்
கற்றமையிப் பெயர்பூண்டா யெனுமருத வாணரெதிர் கனிவா யுள்ளாற்
சற்றமைய முறுவலித்து மகிழ்பெரிய நாயகிதா டலைமேற் கொள்வாம் 4

5 வாய்ந்தபர சத்தியாய் விந்துவாய் மனோன்மணியாய் மகேசை யாய்ச்சீர்
வேய்ந்தவுமை யாய்த்திருவாய்ப் பாரதியா யிவரன்றி வேறா யின்னு
மேய்ந்தசிறை யிலிநாத னெத்திறநிற் பானதனுக் கியைய நின்றே
தோய்ந்தவுயிர்க் கின்புதவும் பெரியநா யகிதுணைத்தா டொழுது வாழ்வாம் 5

6 சபாநாயகர்.
மறையாதியியம்புகுறிகுணங்கடந்தோரைந்தெழுத்தேவடிவமாகி
நிறையாதிபடைப்பாதிதுடியாதியோரைந்துநிகழ்த்தநாளு
மிறையாதிதவிர்ந்திருவர்வியந்தேத்தவுமைதிருக்கண்விழைந்துசாத்த
வறையாதிமணிமன்றுண்டநவிலும்பெருவாழ்வையடுத்துவாழ்வாம் 6

7 சிவகாமியம்மை.
ஆன்றதாயடைந்தசுகங்கருவுமடைதருமாலென்றறைகூற்றிற்கோர்
சான்றதாயெவ்வுயிருமடையின்பந்தானடையுந்தவாலின்பாக
நான்றதாய்மிளிர்சடிலநாதனியற்றானந்தநடனங்காணு
மீன்றதாய்சிவகாமவல்லியிருதாமரைத்தாளிறைஞ்சிவாழ்வாம் 7

8 தட்சணாமூர்த்தி.
வேறு.
ஆய்தருபொருளுமாராய்ந்தடிநிழலடங்குமாண்பும்
வேய்தருமலர்நேரங்கைவிரலிருகூற்றிற்றேற்றித்
தோய்தருமுனிவர்நால்வர்துதித்திடக்கல்லாலென்னும்
பாய்தருவடிவாழ்முக்கட்பரனடிக்கன்புசெய்வாம் 8

9 வயிரவர்.
புகர்படுசெருக்குமேவல்புன்மையென்றெவருந்தேறப்
பகர்மறைகமழாநிற்கும்பரிகலமங்கையேந்தி
நிகரின்மான்முதலோர்மேனிநெய்த்தோர்கொண்டொளிர்பொன்மாரி
நகரினிதமர்ந்துவாழும்வடுகனைநயந்துவாழ்வாம் 9

10 மருதவிருட்சம்.
வேறு.
பரவியநாதமூலமாப்பராரைபணைகிளைகொம்பொடுவளாரும்
விரவியபஞ்சசத்தியாத்தளிர்கள்வேதமாமலர்களாகமமாக்
கரவியலாதவாசமைந்தெழுத்தாக்காமருசுகோதயமதுவா
வுரவியன்ஞானசொரூபமேயாகியொளிர்தருமருதினைத்துதிப்பாம் 10

11 வலம்புரிவிநாயகர்.
வேறு.
ஓங்குபெருந்தனக்கினமாயுற்றமதவாரணங்களொருங்குதேம்பி
யேங்குதிறமுறவருத்திவணக்கிடுமங்குசபாசமென்னுநாமந்
தாங்குபடையிரண்டுமொருதனைவணங்கக்கரத்தேந்தித்தலைமைபூண்டு
தேங்குநெடுங்கருணைபொழிவலம்புரிக்குஞ்சரத்திருதாள்சென்னிசேர்ப்பாம் 11

12 சுப்பிரமணியர்.
வெயிலேறவிரிக்குமுடிவானவர்விண்குடியேறவெள்ளையானை
குயிலேறவரிபிரமர்புள்ளேறவம்மனைவேர்கூடாமாதர்
கயிலேறமிளர்கடக்கையேறமெய்யேறக்கவினார்தன்கை
யயிலேறவமர்ந்துசிறைமயிலேறும்பெருமானையடுத்துவாழ்வாம். 12

13 திருநந்திதேவர்.
வேறு.
வரைபொடிபடுக்கும்வச்சிரப்படையும்வலிசெழுதண்டவெம்படையும்
விரைசெலற்றிறத்தின்மாற்றலர்நடுங்கும்விளங்கொளித்திகிரியம்படையும்
புரையமைசமழ்ப்புப்பொருந்தவில்வீசிப்பொலியும்வேத்திரப்படைதாங்கி
யுரையமைகயிலைகாத்தருணந்தியொருவனைமருவியேத்தெடுப்பாம். 13

14 தமிழாசிரியர்.
வேறு.
பன்னிருதடங்கைச்செம்மல்பாற்சிவஞானம்பெற்றுப்
பன்னிருகதிருமொன்றாம்பான்மையின்விளங்கிநாளும்
பன்னிருதவமாணாக்கர்பழிச்சிடமலையமேவப்
பன்னிருசரணநாளுந்தலைக்கொடுபரவுவோமே. 14

15 திருஞானசம்பந்தசுவாமிகள்.
அறைவடமொழிநவின்றபாணினியகத்துநாண
விறையமர்மயிலைமூதூரிருந்தவோர்தாதுகொண்டே
நிறைதரவொராறுமேலுநிரப்புதென்மொழிநவின்ற
மறையவன்காழிவேந்தன்மலரடிக்கன்புசெய்வாம். 15

16 திருநாவுக்கரசுசுவாமிகள்.
நீற்றுமெய்ச்சிவனேயென்றுமவனினுநிறைந்தாரென்றுஞ்
சாற்றுதற்கியையத்தந்தைதன்பரியாயப்பேரு
ளீற்றுமெய்கெடுத்தொன்றிற்பன்னிரண்டன்மெய்கொடுத்துக்கூறத்
தோற்றுமெய்ப்புகழ்சானாவிற்கரசினைத்தொழுதுவாழ்வாம். 16

17 சுந்தரமூர்த்திசுவாமிகள்.
எண்ணியமறுமைப்பேறுமிம்மையேயுற்றதென்ன
மண்ணியவியங்கும்வெள்ளிமால்வரையெருத்தமேறி
யண்ணியவியங்காவெள்ளிமால்வரையடைந்துவாழும்
புண்ணியமூர்த்திநாவற்புலனைப்போற்றிவாழ்வாம். 17

18 மாணிக்கவாசக சுவாமிகள்.
மாயவனறியாப்பாதமலரவன்மனைவிமேனி
தோயவுமலரோன்காணாச்சுடர்முடியனையானீன்ற
பாயநீருடுத்தமங்கையிவரவுமுருகிப்பாடுந்
தூயவர்கமலபாதத்துணையுளத்திருத்திவாழ்வாம். 18

19 தண்டீசநாயனார்.
மலர்புரைகுடங்கைவெள்வாய்மழுப்படையொன்றுதாங்கி
யலர்பசுவோம்பியின்னுமுண்ணுதலாதியாவும்
பலர்புகழ்தனக்கென்றொன்றும்வேண்டிலாப்பரன்போற்கொண்ட
நலர்செறிசேய்ஞலூர்வாழ்பிள்ளையைநயத்தல்செய்வாம். 19

20 அறுபத்துமூன்றுநாயன்மார்.
வேறு.
பூன்றதன்மையில்புன்மையேநெஞ்சகத்
தேன்றவஞ்சகமாதியிருப்பினுந்
தோன்றவோர்புரஞ்சூழ்ந்துறவாழ்வரா
லான்றமேன்மையறுபத்துமூவரே. 20

21 பஞ்சாக்கரதேசிகர்.
பூதங்கடந்துபொறிகடந்துபுலனுங்கடந்துபுகல்காண
பேதங்கடந்துகாலமுதலனைத்துங்கடந்துபெருவிந்து
நாதங்கடந்துவளர்துறைசைநமச்சிவாயதேசிகன்பொற்
பாதங்கடந்துபற்றறுத்தானினிமேலல்லற்படலிலையே. 21

22 அம்பலவாண்தேசிகர்.
வேறு.
மருடருவினைகடேய்த்தோமாமலக்குறும்புமாய்த்தோ
மிருடருபிறப்பில்வாரோமென்றுமோரியல்பிற்றீரோ
மருடருதுறைசைமேவுமம்பலவாணதேவன்
பொருடருகமலத்தாளெந்தலைமிசைப்புனைந்தபோதே. 22

23 சித்தாந்தசைவர்கள்.
பண்ணியபுறமார்க்கங்கள்பாழ்படவொழித்துமேலாம்
புண்ணியவிபூதியக்கமணியொடைந்தெழுத்தும்போற்றி
யண்ணியசிவானந்தத்தேனிரம்பவுண்டமையாநிற்கும்
தண்ணியகுணசித்தாந்தசைவரைவணக்கஞ்செய்வாம். 23

24 ஆலப்பணிசெய்வோர்கள்.
அரவுநீர்ச்சடையானெங்களம்மையோடகிலமெல்லாம்
பரவுமாறமர்பொன்மாரிப்பதிப்பெருந்தளியிற்றொண்டின்
விரவுநான்மறையோராதியலகிடல்விழைந்தோரீறா
முரவுசேர்தவத்தர்யாருமுவந்தியாந்தொழுந்தேவாவார். 24


கடவுள் வாழ்த்து முற்றிற்று.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 20, 2011 3:27 am

493 கண்டவெய்யவன்கடுங்கனலினுமிகக்கனன்று
தண்டமொன்றெடுத்தெற்றினன்வயிணவிதலைமே
லண்டம்விண்டதென்றஞ்சினவதுபொறுத்தனையாள்
கொண்டதண்டவன்றலைப்புடைத்தனள்புவிகுலுங்க. 81

494 தலைபிளந்ததுதானவன்வெஞ்சினந்தலைக்கொண்
டுலைவில்வெஞ்சிலைவாங்கியோராயிரமயுத
மிலைமுகக்கணைதொடுத்தனனார்த்தனனெல்லாங்
கொலைபடப்புயம்பாய்ந்ததுவயிணவிகொதித்தாள். 82

495 ஓங்குதேவியார்திருவடியுளங்கொளீஇயொளிகள்
வீங்குசக்கரமெடுத்தனள்பூசித்துவிடத்தா
ளாங்குவெஞ்சுடரெனப்படர்ந்தவன்றலையறுத்துப்
பாங்குவந்ததுபனிமலர்பொழிந்ததுபடர்வான். 83

496 இறைவன்மைந்தனாருயிர்துறந்தமையுளத்தெண்ணிக்
குறைவில்வெம்படைத்தலைமையோன்வலிகெழுகோரன்
பிறையெயிற்றுவன்றானவர்குழாத்தொடும்பெயர்ந்து
கறைபடக்கதழ்ந்துழக்கினன்கன்னியர்குழாத்தை. 84

497 ஆயகாலையின்மூர்ச்சைதீர்ந்தெழுந்தயிராணி
தீயனோடமரேற்றனடிசாதிசைதிரிந்தார்
பாயவேதிகள்பற்பலவிடுத்தனர்பதைத்துக்
காயமேகினர்மண்ணிடைக்குதித்தனர்கனன்று. 85

498 இனையவெஞ்சமராடுழிவச்சிரமெடுத்துப்
புனையவல்லவிந்திராணியப்பதகன்மேற்போக்க
முனையவப்படையவன்விடுபடையெலாமுருக்கித்
துனையவேகிமற்றவன்றலைதுணித்துமீண்டன்றே. 86

499 கோரன்மாய்தலுங்கனகனென்றுரைபெயர்கொண்ட
வீரன்வந்தமராடலும்பிராமியுள்வெகுண்டு
சேரவெம்படைபலவிடுத்தமர்த்தவன்சென்னி
பாரவன்கதைமோதலுந்தலைவிண்டுபட்டான். 87

500 மற்றுமுள்ளபல்வீரருமந்திரத்தவரு
முற்றுவெஞ்சமராடினரச்சமிக்குறுத்தார்
பற்றுவெஞ்சினந்தலைக்கொடுவலவைகள்பல்லோர்
சுற்றுநின்றுபல்படைவிடுத்திடவுயிர்தொலைந்தார். 88

501 யானையெண்ணிலமுயல்களாலிறுப்புண்டதென்னச்
சேனைவீரருமந்திரத்தலைவருஞ்சேயும்
வானையார்மடமாதறாற்றொலைந்தனர்மாற்றா
ரூனையார்படையாயென்றுதூதர்சென்றுரைத்தார். 89

502 உரைத்தவார்த்தைதன்செவிபுகவுள்ளமிக்குழைந்து
குரைத்தபூணதிவீரனுமாண்டனன்கொல்லோ
வரைத்தசாந்தணிமுலையினாரமரழகென்று
விரைத்ததார்ப்புயச்சண்டன்வெங்கனலெனவெகுண்டான். 90



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 20, 2011 3:27 am

503 கடவுதேரெனப்பாகனுக்குரைத்திடக்காற்றை
நடவுமாறெனநடத்தினனுலகெலாநடுங்கத்
தடவுவார்முலைமடவரலியர்குழாஞ்சார்ந்தான்
புடவியேத்தும்யாழ்முனிவரன்காளிமுன்போந்தான். 91

504 பொருவிலாவலிச்சண்டனம்படையினுட்புகுந்தான்
வெருவிலாவிறல்யாளியைநடத்தெனவிளம்ப
மருவிலாபநம்படைக்கின்றுவந்ததென்றெண்ணி
யொருவிலாவடற்காளிநக்கிவர்ந்தனளூர்தி 92

505 வலவைமார்பலர்தாங்கியபடையொடும்வளையக்
குலவைவாயினைநடத்திவெஞ்சண்டன்முன்குறுகக்
கலவையார்முலைக்கன்னியைக்கண்களாற்கண்டா
னுலவையோடுறுவிடமெனத்தேரொடுமுற்றோன். 93

506 கண்டகாலையில்வெஞ்சினங்கொழுந்தெழக்கனலா
வண்டம்வாய்திறந்தெனப்புலைவாய்திறந்தறைவான்
கொண்டசிற்சிலவிரும்பிற்குங்குரூஉச்சுடர்மதியத்
துண்டநேர்சிலபல்லிற்குந்துளங்குவேனல்லேன். 94

507 காகமேறிடப்பனம்பழம்வீழ்ந்திடுங்கதைநே
ராகவாயுடீர்ந்தவர்சிலரமர்த்துநின்னணியா
மேகவார்குழலார்விடபடைகளால்வீந்தா
ரேகவீரன்யானவர்களோடெண்ணலையென்றான். 95

508 அன்னவாய்மொழிகேட்டலுமவிதருதீப
மென்னவேதலையெடுப்பினோடுரைத்தனையெல்லாம்
பின்னரோரலாங்கூற்றுவன்பிடர்பிடித்திருந்தா
னென்னவோதினாளுலகெலாமுய்விக்குமிறைவி. 96

509 வீரிவாய்மொழிகேட்டலும்வெகுண்டுவெங்கொடியோன்
மூரிவெஞ்சிலைவாங்கினன்முழங்கினாணெறிந்தான்
வாரிசூழ்புவிவிண்டதுவானகநடுங்கிற்
றோரியார்த்திடுகளத்திலுற்றவரெலாமுலைந்தார். 97

510 கண்டதேவியுங்கைச்சிலைவளைத்தநாணெறிந்தா
ளண்டம்விண்டனவரையெலாம்பொடிந்தனவாழி
யுண்டமேகங்களஞ்சிமிக்குதிர்த்தனவுருமு
விண்டபல்வகைப்புவனமும்விளம்புவதென்னோ. 98

511 ஒன்றுபத்துநூறாயிரமயுதமோரிலக்கந்
துன்றுவாளிகளொரோவொருதொடையுறத்தொடுத்துக்
கன்றுமாதரைக்கலக்கினன்கலங்கினரழுதார்
வென்றுமேம்படுவாள்வலிவிறலுடைச்சண்டன். 99

512 அஞ்சுமாதரையஞ்சலீரெனக்கரமமைத்து
நஞ்சுநேர்கணைதைத்தலினாகியநலிவுந்
துஞ்சுமாகடைக்கணித்தனடொடிக்கையார்பலரும்
பஞ்சுவாய்நுதித்துனைவடுக்களுமறப்பட்டார். 100



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 20, 2011 3:27 am

513 தனையவாவியயாவருமூறின்றித்தழையப்
புனையவாம்விறற்செல்விகண்டகமகிழ்பூத்துத்
துனையமாற்றலன்பெரும்படையனைத்தையுந்துகள்செய்
தினையவாக்குவன்சண்டனையென்றுகோலெடுத்தாள். 101

514 கரிகண்மேற்பதினாயிரங்கால்விசைத்தெழுவாம்
பரிகண்மேற்பதினாயிரம்படருருள்பூண்ட
கிரிகண்மேற்பதினாயிரங்கேழ்கிளர்கழற்கா
லரிகண்மேற்பதினாயிரமழற்கணைதொடுத்தாள். 102

515 மண்ணெலாங்கணைவாரியெலாங்கருணைவயங்கு
விண்ணெலாங்கணைதிசையெலாங்மேருக்
கண்ணெலாங்கணைவேறுளவரையெலாங்கணைமற்
றெண்ணெலாங்கணையாயினவெனப்பலவிடுத்தாள். 103

516 அரவணிந்தவன்கட்டழலெனச்சிலவடுக்கும்
பரவுமற்றவனகைத்தழலெனச்சிலபாயுங்
கரவிலன்னவன்கைத்தழலெனச்சிலகடுகு
முரவுசால்விறற்காளிவெஞ்சிலையுமிழ்வாளி. 104

517 அழிந்தவாரணமழிந்தனவாம்பரியச்சிற்
றழிந்தகூவிரமழிந்தனவவுணர்தங்குழுக்க
ளழிந்தவேதிகளழிந்தனவூர்திகளனைத்து
மழிந்தவானவர்கட்டமொட்டறக்கடையனைத்தும். 105

518 வரையெலாம்பிணமண்டியமலர்செறிகானத்
தரையெலாம்பிணந்தாமரையோடைகால்பொய்கை
நிரையெலாம்பிணநெடுங்கழிநெய்தல்வீநாறுந்
திரையெலாம்பிணமாக்கினகாளிவில்செலுத்தே. 106

519 மருவரக்குநீர்ப்பெருக்கின்மேற்கேடகமறித்து
வெருவில்பேய்க்கணங்கிடத்திமேலிவர்ந்தங்குமிதக்கும்
பொருவிலாக்கழக்கடைகொடுபோகுமாறுந்துந்
திருவமல்கியபாரிடமெங்கணுஞ்செறிந்தே. 107

520 பட்டுவீழ்ந்தமால்கரிச்செவிப்பரிகலந்திருத்திக்
கிட்டுபேய்ப்பிணாமூளைவெண்சோறுமேற்கிளர
விட்டுமென்றசைக்கறிபலபடைத்திழுதிரத்தம்
விட்டுநன்குபசரிப்பனவாண்மயன்மிசைய. 108

521 திருந்துவன்றடிகொழுவழும்பீருள்வான்செந்நீர்
விருந்துபற்பலகிளையொடும்விரும்பிமிக்குண்டு
பருந்துங்காகமுமெருவையுமேலெழீஇப்பந்தர்
பொருந்துநீர்மையிற்பறப்பனபோர்க்களமுழுதும். 109

522 தேருமற்றனபெருமதமழைபொழிசெங்கட்
காருமற்றனகடும்பரியற்றனவயவர்
போருமற்றனதனித்தனியுரைப்பதென்பொருன
ராருமற்றனரொருவனாய்நின்றனனவுணன். 110



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 20, 2011 3:28 am

523 துன்றுவெம்படைதொலைந்ததுந்தேவர்தந்தொகுதி
வென்றுமேம்படுவீரர்களொழிந்ததும்விறல்மிக்
கொன்றுவீரிதன்படையொடுபொலிவதுமுணர்ந்து
நன்றுநன்றுநஞ்சேவகத்திறனெனநகைத்தான். 111

524 ஆயிரங்கணானுலகுகூட்டுண்டவனழன்றோ
ராயிரங்கணையம்மைமேற்றொடுத்துவிட்டார்த்தா
னாயிரங்கணையாயிரங்கணைகளாலறுத்தோ
ராயிரங்கணையவுணன்மேற்செலுத்தினளம்மை. 112

525 அனையவாளியோராயிரம்வாளியாலறுத்துத்
துனையவானவர்வலியெலாந்தொலைத்ததோர்தண்ட
மினையவேவினன்சண்டன்மற்றதனைத்தன்னியல்கைப்
புனையவாயதண்டாற்பொடிபடுத்தினளம்மை. 113

526 தண்டமாய்தலும்வெஞ்சினந்தலைக்கொடுசண்டன்
கொண்டன்மாமழைபொழிந்தெனமாயையாங்கொடுங்கோ
லண்டம்யாவையுமுயிர்த்தவளளித்தவண்மறையக்
கண்டயாவருநிலைகலங்கிடக்கதழ்ந்தெய்தான். 114

527 மாயையாங்கணைபடர்ந்தனகாளியைமறைத்த
வேயைவென்றதோள்வயிணவியாதியர்மெலிவுற்
றாயைநீத்தழுமழவெனப்புழுங்கினரழுதார்
பேயைவன்கொடியேற்றினாண்மற்றதுபேணி. 115

528 ஞானவாளியைவிடுத்தனண்மாயைபோய்நசித்த
தூனமில்லெனத்தெரிந்துமிக்குவந்தனருலகோர்
மானநாயகிதிருவருவாட்டியதிறத்தா
லானவவ்விடந்தனையுருவாட்டியென்றறைவார். 116

529 விடத்தைநேர்பவன்மெய்யெலாந்துளைபடவிசிகங்
குடத்தைநேர்முலைதொடுத்தனள்யாவரங்குழுமி
நடத்தையாற்றிமங்கலநனிநவின்றனரனைய
விடத்தைமங்கலமென்றுரைசெயுமுலகின்னும். 117

530 விரவுவெஞ்செருப்புரிந்தபேரிடமெலாம்விளங்கப்
பரவுமிங்ஙனமொவ்வொருகாரணம்பற்றி
யுரவுசால்பெயருரைப்பர்வாரிதிவளையுலகோர்
புரவுமேயவவ்விடந்தொறும்பொலிவண்மாகாளி. 118

531 மெய்யடங்கலுந்துளைபடவெஞ்சினங்கொண்டு
பொய்யடங்கலுமுள்ளவன்புகுத்தினன்வானிற்
செய்யடங்கலுமுள்ளதன்றேரதுநோக்கி
மொய்யடங்கலுமோருருக்கொண்டன்னமுதல்வி. 119

532 தன்னதூர்தியுஞ்செலுத்தினளாவயிற்சமர்த்தா
ரென்னகூறுதுமிருவர்தம்போர்த்திறமெல்லா
நன்னராய்ந்துணர்த்திடுபவர்ஞாலத்துமுளரோ
பன்னருங்கடுப்பொடுசுழன்றனர்பலவிடமும். 120



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 20, 2011 3:28 am

533 விண்ணிற்சூழுவமேருவிற்சாருவதிசையின்
கண்ணிற்பாய்வனகடலினும்புகுவனகருது
மெண்ணிற்சீர்த்தவல்விரைவொடுமிங்ஙனமுழன்று
மண்ணிற்சார்ந்தனவிருவரூர்தியுமுன்போல்வயங்கி. 121

534 வையமேவலுங்குமரிவெஞ்சினங்கொடுவலிசால்
வெய்யயாளியைமற்றவன்றேர்மிசைச்செலுத்தி
யையபாகனைப்பரிகளைவாளெடுத்தடர்த்துச்
செய்யநீர்ப்பெருக்கெழத்தலைகீழ்விழச்செய்தாள். 122

535 ஊரும்வையமற்றூர்தராவையமுற்றுரவோன்
யாருமச்சுறவெஞ்சிலைவளைத்தனனதனைத்
தேருமுன்னரவ்வாள்கொடுதொலைத்தனள்செல்வி
பாரும்விண்ணமுமுநடுங்குமோர்சக்கரம்பரித்தான். 123

536 அந்தச்சக்கரஞ்சுழற்றிமேலெறிந்தனனதுபோ
திந்தச்சக்கரமென்னதேயென்றுகையேற்றாள்
சந்தச்சக்கரங்கழிதலுந்தோமரந்தரித்தான்
முந்தச்சக்கரப்பகவனைமுருக்கிமூர்க்கன். 124

537 அன்னதோமரந்தன்னையும்வாளினாலறுத்தா
னென்னசெய்துமென்றெண்ணியோர்வரைபறித்தெழுந்து
முன்னர்வந்தனனதையொருதண்டினான்மோதிப்
பின்னமாக்கினளுலகெலாம்பெற்றவள்பெற்றாள். 125

538 படையெடுத்தமராடலென்மேற்சென்றுபற்றி
யடைதரச்சினந்துயிருண்பனெனச்சினந்தடுத்தா
னுடையநாயகிபதநினைந்தொய்யெனவொருதன்
புடைவிராவுவெஞ்சூலத்தையேவினள்புரப்பாள். 126

539 கொடியநஞ்செனக்கூற்றெனக்கொடந்தழலென்னக்
கடியசூலஞ்சென்றவனுரந்துளைத்துயிர்கவர்ந்து
படியவாங்கடன்மூழ்கிவான்மலரினும்படிந்து
நெடியகாளியையடத்ததுபுவிமகிழ்நிரம்ப. 127

540 பற்றிவெங்கொலைச்சண்டனைப்படுகளத்தவித்து
வெற்றிமேவியவிடத்தினைவெற்றியூரென்பர்
முற்றியாவரும்வளைந்தனர்சோபனமொழிந்தார்
கொற்றிமற்றவனூரழித்திடும்படிகூறி. 128

541 அழித்துவந்தவர்தம்மொடுங்கானப்பேரடைந்து
செழித்தநின்றருடம்பிரான்சேவடிசேவித்
தொழித்துவெம்பகையுய்ந்தமாதர்களொடுமுவகை
கொழித்துமீண்டனள்தேவிப்பதிகுறுக. 129

542 வாவிசூழ்கண்டதேவியுண்மகிழ்ந்துவந்தடைந்து
தேவியார்திருவடிதொழுதெழுந்தனள்செல்வி
காவிநேர்தருங்கண்ணியர்பலருமுட்கனிந்து
பாவியேங்களுய்ந்தனமெனப்பன்முறைபணிந்தார். 130

543 பணிந்தமாதர்கள்பலரையுந்தேவியார்பார்த்துத்
துணிந்தபேரருள்செய்திடத்தொழுதெழுந்திருந்தா
ரணிந்தபெண்ணுருவாயினார்யாவருமாங்குத்
திணிந்தவாணுருவாதல்பெற்றகமகிழ்சிறந்தார். 131

544 முன்னுமாதவத்துயரியசவுநகமுனிவ
மன்னுவெந்திறற்சண்டனைவதைசெய்ததிதுமேற்
பன்னுதம்பிரான்பெரியநாயகிக்கருள்பண்பி
னுன்னுமற்புதங்கேளெனவுரைத்திடுஞ்சூதன். 132

சண்டாசுரன்வதைப்படலம் முற்றிற்று.
ஆக படலம் 8-க்கு திருவிருத்தம் - 544.




[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 20, 2011 3:29 am

9. திருக்கலியாணப்படலம். (545 - 634)

545 சிறுமருதடவிமேயசிற்றிடையெம்பிராட்டி
மறுவறுகருணையாலேவானவர்பகைவனாய
தெறுதொழிற்சண்டன்மாயச்செழித்தனவுலகமெல்லா
முறுமகமாதியாவும்பொலிந்தனவூறுதீர்ந்தே. 1

546 பேசுபல்லுலகுமீன்றபெரியநாயகியென்பாண்மற்
றாசுதீர்ந்துயிர்கள்செம்மையடைந்ததின்மகிழ்ந்தாளேனு
மூசுபேரன்புவாய்ந்தோர்முன்னத்தின்வழியேநிற்குந்
தேசுசால்கொழுநற்காணாக்கவலையுஞ்சிந்தையுள்ளாள். 2

547 பண்டுபோலெழுந்துமேல்பாற்பயில்சிவகங்கைமூழ்கி
மண்டுபேரன்புபொங்கமலர்முதலாயயாவுங்
கொண்டுவன்மீகம்போற்றிக்குறித்தமரிருக்கைசார்ந்து
விண்டுவாதியர்காணானைமிகநினைத்திருந்தாளன்றே. 3

548 நினையாரைநினையானாகிநினைப்பாரைநினையாநிற்கு
நனையாரைவேய்ந்தமோலிநாயகன்கருணைபூத்து
முனையாரைமுனையாவென்றிமுழுவிடைமேற்கொண்டெங்க
ளனையாரையருளவந்தானம்மருதவனத்தம்மா. 4

549 கறையகலத்துக்காட்சிகழிதரப்புறத்தேதோற்று
மிறைதிருக்காட்சிநோக்கியெழுந்திருகைகள்கூப்பி
மறைமுடிக்கரியபாதமலர்மிசைத்தொழுதுவீழ்ந்து
குறையறக்களித்தெழுந்துகோற்றொடிதுதிக்லுற்றாள். 5

550 பாரிடையைந்துமாகிப்பாருமாய்நின்றாய்போற்றி
நீரிடைநான்குமாகிநீருமாய்நிகழ்வாய்போற்றி
போரிடையழலின்மூன்றாயழலுமாய்ப்பொலிவாய்போற்றி
தேரிடைவளியிரண்டாய்வளியுமாய்த்திகழ்வாய்போற்றி. 6

551 வெளியிடையொன்றேயாகிவெளியுமாய்விளைந்தாய்போற்றி
யளியுயிர்க்குயிருமாகியுயிருமாய்விரவாய்போற்றி
தெளிபுவிபுனறீகால்வான்செஞ்சுடர்மதியான்மாவென்
றொளிசெயெட்டுடம்புபெற்றமுடம்பொன்றுமில்லாய்போற்றி. 7

552 தொழில்களோரைந்துசெய்துந்தொழிலொன்றுமில்லாய்போற்றி
யெழில்செயெற்கலந்திருந்தும்விகாரமொன்றில்லாய்போற்றி
பொழில்களோரீரேழாயும்பொழில்கடந்தவிர்வாய்போற்றி
விழிலெழுந்தெழிலழுந்திமிளிர்ந்துமவ்வில்லாய்போற்றி. 8

553 காரணமெவைக்குமாயுங்காரணமில்லாய்போற்றி
யாரணமுடிவிருந்துமதற்கறிவொண்ணாய்போற்றி
நாரணன்பிரமராயுநயந்தவர்காணாய்போற்றி
பூரணமுதல்வபோற்றிபுண்ணியப்பொருளேபோற்றி. 9

554 பிறையவிர்சடையாய்போற்றிபிறங்குவெள்விடையாய்போற்றி
கறையவிர்களத்தாய்போற்றிகருதுநருளத்தாய்போற்றி
யறைமழுவலத்தாய்போற்றியற்புதநலத்தாய்போற்றி
மறைநவில்சனத்தாய்போற்றிமருதமர்வனத்தாய்போற்றி. 10



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 20, 2011 3:29 am

555 என்றுநெஞ்சுருகக்கண்ணீரிறைத்திடத்துதியாநிற்குங்
குன்றுவெம்முலையினாளைக்குழகனாரருளினோக்கி
யொன்றுவல்விடையினின்றுமிழிந்தருகுற்றுப்பின்பா
னன்றுதைவந்திளைத்தாய்நற்றவம்புரிந்துநீயே. 11

556 இருளெனப்படுகூந்தான்மற்றிலகுறுநமக்குநம்பே
ரருளெனப்படுநினக்குமறக்கடையில்லையேனும்
பொருளெனப்படுபேரன்பிற்பூசித்துப்புவனமுய்வான்
றெருளெனப்படுமிப்பூசைசெய்யெனச்செப்பினேமால். 12

557 சொல்லியவாறேநீயுஞ்சுருதியின்முழக்கமாறா
நல்லியலினையதானநண்ணிநீநோற்றாயற்றாற்
புல்லியபாவமுற்றும்போயதபுனிதமுற்றா
யல்லியங்குழலாய்நம்பாலவாம்வரம்பெறுதியென்றான். 13

558 வளவிடைப்பிரானிவ்வாறுவாய்மலர்ந்தருளப்போற்றி
யிளமகப்பிணிக்கீன்றாளேமருந்தயின்றிடுதலெண்ணி
யுளமகிழ்பூப்பவெல்லாவுயிர்களுமுய்யுமாற்றாற்
றளரிடையெம்பிராட்டிவரங்கொளச்சமைந்தாளன்றே. 14

559 இத்தலநாமஞ்சொற்றோரித்தலமுளஞ்சிந்தித்தோ
ரித்தலந்தரிசித்தோர்மற்றித்தலம்வசித்தோர்நாளு
முத்தலம்புகழவாநின்சாலோகமுதலோர்நான்கு
முத்தலமருநீர்ணேியாய்முறையுறதல்வேண்டும். 15

560 மறையுணர்ந்தவரைச்செங்கோன்மன்னரைவணிகர்தம்மைக்;
கறையில்சூத்திரரைத்தந்தைதாயரைக்கடும்பைப்பீளைப்
பறைதருபாவைமாரைப்பசுக்களைவதைத்தபாவ
மிறைவநின்றரிசனத்தாலித்தலத்தொழிதல்வேண்டும். 16

561 மேயவித்தலத்தைச்சார்ந்துவிளம்புநின்கோயிலாதிப்
பாயமல்பணியுமாற்றிப்பகர்தருபூசையோடு
மாயவுற்சவமுநன்குசிறப்பிப்போரவனியாண்டு
மாயவன்முதலோராய்ப்பின்னின்பதமருவல்வேண்டும். 17

562 ஒருதமியேனன்றாற்றுமுயர்சிவகங்கைதோய்வார்
கருதருங்குட்டமாதிக்கடும்பிணியனைத்தும்பற்றிப்
பொருதலைத்திடும்பேயாதித்துன்பமும்பொரிந்துபோக
மருதமர்பிரானேயெல்லாவளங்களும்பெறுதல்வேண்டும். 18

563 பலவுரைத்திடுவதென்னைபற்பலநாளுமிந்தத்
தலனடைதவத்தினோர்க்குன்றாட்பிழையொன்றுநீங்க
வலனுயர்கொடியவாயபாதகமனைத்துமாய்ந்து
புலனனிசிறந்தோராயெப்போகமும்பெறுதல்வேண்டும். 19

564 ஆன்றவன்மீகநின்றுமருட்குறிவடிவம்யார்க்குந்
தோன்றநீயருளல்வேண்டுந்தொழுதபல்லுயிருமுய்ய
மான்றவென்றனைநீயின்னேவதுவைசெய்தரளல்வேண்டுஞ்
சான்றவெண்குணத்தாயென்றாளுலகெலாமீன்றதையல். 20



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 20, 2011 3:30 am

565 அம்மைவாயுரைத்தவார்த்தையடங்கலுஞ்செவியினேற்றுச்
செம்மைசான்மேனியம்மான்றிருமுகமலர்ச்சிகாட்டி
மும்மையாருலகுமுய்வான்முயன்றனையனைத்துநன்று
கொம்மைவாரணிந்தகொங்கைக்கோற்றொடிமடந்தாய்கேட்டி. 21

566 நாடவன்மீகநின்றுநம்மருட்குறியின்றோன்று
மாடுபாம்பனையவல்குழாயிழாயதான்றுமற்றை
நீடுபல்வரமுமின்னேபெறுகெனநிகழ்த்தினானுட்
கூடுமோகையளாயுய்ந்தேனென்றுகைகுவித்தாளம்மை. 22

567 அன்னதுகண்டவேந்தனயனரிமுதல்வானாட
ரென்னருமுய்ந்தோமுய்ந்தோமென்றுதாள்பணிந்தெழுந்தார்
மின்னகுசூலக்காளிவிரைமலர்ப்பாதந்தாழ்ந்து
பொன்னவிர்சடையாயிந்தத்தலத்தில்யான்பொலிதல்வெண்டும். 23

568 என்னைவந்திப்போர்நாளுமெண்ணருஞ்செல்வத்தாழ்ந்து
முன்னைவல்வினையினீங்கிமுளைகடும்பாதிமல்க
வன்னையினருண்மிக்கோராயலங்குறவேண்டுமென்றாள்
பொன்னைநேர்சடையானவ்வறாகெனப்புகன்றுவிட்டான். 24

569 அவ்வரம்பெற்றகாளியத்தலவடபாற்கோயிற்
செவ்விதிற்கொண்டுமேவிச்சேவித்துப்போற்றுவாருக்
கெவ்வமுற்றொழித்துநாளுமிட்டகாமங்கைகூடி
யொவ்வவெவ்வரமும்பாலித்துறும்பிரசன்னமாயே. 25

570 பொங்குமங்கலங்களெல்லாம்பொலிதரவெவர்க்குநல்கி
யங்குமங்கலமாய்நாளுமமர்கின்றாடன்னைவானோர்
தங்குமங்கலமுண்டாகத்தழைதிருமேனிமுற்றுங்
குங்குமங்கலவச்சாத்திக்குங்குமகாளியென்றார். 26

571 அவணிலையன்னதாகவயன்முதலாயவானோர்
தவமலியம்மைவேண்டத்தம்பிரானிசைந்தவாறே
கவலரும்வதுவையாற்றக்கடைப்பிடித்துவகைபொங்க
வவமையின்றுய்ந்தோநாமென்றொருங்கருனைவருந்தொக்காரே. 27

572 முருகியலன்பிற்கஞ்சனியவரைமுன்னர்க்கூவிப்
பெருகியவனப்புவாய்ந்தபெரியநாயகியம்மைக்கு
முருகியமனத்துமேவுமொருசிறுமருதூரர்க்குந்
திருகியமனத்தர்காணாத்திருமணநிகழ்தலாலே. 28

573 காதலமருங்கும்பக்கொங்கையரோடாடவர்களீண்ட
மீதலமருங்குந்தெண்ணீர்விரிதிரைக்கடலுடுத்த
பூதலமருங்குஞ்சென்னிப்பொலிமணியுடையார்மேய
பாதலமருங்குஞ்சென்றுபடர்முரசறைதிரென்றான். 29

574 என்றலுமுவகைமீக்கொண்டியலருட்டலைமைபூண்டார்
நன்றமர்புனலுண்மூழ்கிநல்லனதுய்த்துடுத்து
வென்றபல்லணியணிந்துவெய்யவெங்களிறுபண்ணி
யொன்றமற்றதன்மேலேற்றினுரிப்பெருமுரசிட்டேறி. 30



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 20, 2011 3:30 am

575 வாழியகுணில்கைக்கொண்டுவாழியசெருத்தலாக்கள்
வாழியமறையுணர்ந்தோர்வாழியவேள்விச்செந்தீ
வாழியமழைபெய்வானம்வாழியவுயிர்களெல்லாம்
வாழியசைவநீதிவாழியமன்னர்செங்கோல். 31

576 சிறுமருதூரின்மேயதேவதேனுக்குமன்பிற்
பெறுமொருசிறுமருங்குற்பெரியநாயகிக்குமன்ற
லுறுவதுகாணயாருமொல்லையினணிந்துகொண்டு
மறுவறுசிறப்புமேவவம்மினென்றெருக்கினானே. 32

577 எருக்கியமுரசங்கேளாயாவருமுளத்துமேன்மேற்
பெருக்கியவுவகைதுள்ளப்பெறலரும்பேறும்பெற்றோ
முருக்கியவினைஞரானோமூழ்கினமின்பத்தென்று
தருக்கியதன்மையோராய்த்தம்முளெக்கழத்தமுற்றார். 33

578 தண்டகநிழற்றுங்கற்பதருவுறையமரர்வேந்து
முண்டகமலரின்மேயமுதல்வனுமுருகுவெள்ளம்
வண்டகங்குடையவூற்றும்வனத்துழாய்மாலைத்தேவு
மெண்டகமற்றையோருமிருங்களிபயப்பச்சூழ்ந்து. 34

579 விச்சுவகன்மற்கூவிமெல்லியலுமைக்கும்வேத
வச்சுவப்பெருமானுக்குமருங்கடிநிகழ்தலாலே
மெச்சுவமானமின்றிவிளங்குமண்டபங்களாதி
யெச்சுவர்க்கமுமோகிக்கவியற்றுதிகடிதினென்றார். 35

580 வேறு.
என்றபொழுதகத்துவகையெய்தநனிமுகமலர்ந்து
மன்றவருவிக்கினங்கண்மருவாதுமுடிவெய்தி
யொன்றவலம்புரிக்களிற்றையுரைக்குமனுவாற்போற்றி
நன்றமைமண்டபமாதிநவிற்றிடலுற்றான்மயனே. 36

581 கருங்கடன்மேற்பலபரிதிகாலூன்றிநின்றாற்போ
லொருங்குமணிக்குறடியற்றியுதன்மீதுசெம்மணித்தூ
ணெருங்குபலபலநிறுவிநின்றபரிதிக்கிறைமே
லருங்குரைத்தென்றிடக்கிடந்தாலனபொற்போதிகைகிடத்தி. 37

582 மீதுமதிகிடந்ததெனவெள்ளியவுத்திரம்பொருத்திக்
கோதுதவிரம்மதிமண்டலத்திறைமேற்குலாயதெனப்
போதுமரகதப்பலகைபொருந்திடவெங்கணும்பரப்பி
யோதுகனலெனத்துகிர்விமானமேலுறவமைத்து. 38

583 அந்தவொளிமண்டலத்துக்கரசுமேலமர்ந்ததெனச்
சந்தமலிசெம்மணிசெய்தசும்புமேலுறவமைத்துச்
சுந்தரமார்நாற்புறத்துஞ்சோபானமியற்றியதிற்
பந்தமுறவிவ்விரண்டுபக்கமும்யாளிகணுறுவி. 39

584 அத்தகையமண்டபச்சுற்றருகுமுழந்தாழ்ந்திருப்ப
வெத்தகையமண்டபமுமிதற்கிணையாகாவென்ன
முத்தகையவுலகடங்கமொய்த்திடினுமிடங்கிடப்ப
வித்தகையதெனப்புகறற்கியலாமண்டபமொன்று. 40



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 20, 2011 3:30 am

585 ஒளிவளர்பொற்குறட்டுமிசையுறுவயிரக்கானிறுவித்
தெளிவளர்செம்மணிப்போதிசெறிதருநீலுத்திரங்கள்
வெளிவளர்மேதகப்பலகைமேதினிநீரழலுழலும்
வளிவளர்வானடுக்கென்னமாண்புபெறும்படியியற்றி. 41

586 பித்தியும்பொற்சாளரமும்பிறங்கியொளிர்நிலைப்புதவு
மொத்தியல்பல்கொடுங்கைகளுமொள்ளியபொன்னரிமாலை
நித்திலமாலிகைபவளமாலைநிகழ்மணிமாலை
கொத்தியல்பூமாலைமுதல்யாவுமெழில்கொளப்பொருத்தி. 42

587 அன்மயில்கிளிபூவையான்றகபோதகமுதலா
வென்னபறவையும்பொலியலிணர்மலராதிகணெருங்கி
வன்னமிகச்சித்திரித்தவான்பட்டுவிதானித்துப்
பொன்னமையுமரதனகம்பலம்பொலியக்கீழ்விரித்து. 43

588 இருவகைமண்டபஞ்சூழவியைந்தபெருவெளிமறையத்
திருநிலைகாவணமிட்டுத்தெங்கிளநீர்பைங்கரும்பு
பொருவருதாற்றுக்கதலிபூம்பிணையன்முதலாக
வொருவருபல்லலங்காரமுலகம்வியப்புறப்புரிந்து. 44

589 அன்னகாவணஞ்சூழவைந்தருவும்பணிசெய்யப்
பன்னகாபரணர்திருவருள்பபோலும்பதஞ்செய்யச்
சொன்னமாமணியாதிதுலங்குபலவிதத்தமைந்த
தென்னவாமிளஞ்சோலைதேவர்புலங்கொளப்புரிந்து. 45

590 ஆயகாவணஞ்சூழவழகுபொலிநான்மறுகு
மேயவிருபான்மாடமாளிகையும்விண்டடவத்
தேயமெலாஞ்சிறிதென்றுசெப்பவிடங்கொளப்புரிந்து
பாயதோரணமுதலாப்பலவலங்காரமுஞ்சமைத்து. 46

591 நாற்புறமுஞ்சோபானநயந்தநறுநீர்வாவி
யேற்புறநாற்றிசையிடத்துமிண்டையாதிகண்மலர்ந்து
நூற்புறமிலிலக்கணத்தினோன்மையதுகொளச்சமைத்து
மாற்புறங்கண்டிடும்வதுவைமண்டபத்தினடுவாக. 47

592 நாடுமுறைமுதல்பெரியநாயகியோடினிதமரப்
பாடுமுடங்குளைமடங்கல்பலசுமந்தமணிப்பீட
நீடுவனப்புறவிட்டுநிகழ்பவளக்காலூன்றி
மாடுசெறிமணிவிளங்கவளர்விமானமுஞ்சமைத்து. 48

593 சுற்றமையுங்கொடுங்கைதொறுந்தூக்கியநித்திலமாலை
முற்றமையுமிருண்மேய்ந்துமுழுநிலாக்கதிர்காலப்
பற்றமையுமத்தகையபைம்பொனணைக்கெதிராக
மற்றவையும்வேதியுங்குண்டமும்பிறங்கும்வகைபுரிந்து. 49

594 விரவுபுவியிடத்தவர்கண்மிகநோக்கியிமையாரா
யுரவுசெறிசுரராகவும்பர்களுமுறநோக்கி
விரவுதிருவடியின்பமேவியவரேயாகப்
பரவுசிவலோகமெனும்படியழகுபெறச்சமைத்தான். 50



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



Page 6 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக