புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஸ்ரீரங்கம் - ரங்கநாதர் கோயில் Poll_c10ஸ்ரீரங்கம் - ரங்கநாதர் கோயில் Poll_m10ஸ்ரீரங்கம் - ரங்கநாதர் கோயில் Poll_c10 
306 Posts - 42%
heezulia
ஸ்ரீரங்கம் - ரங்கநாதர் கோயில் Poll_c10ஸ்ரீரங்கம் - ரங்கநாதர் கோயில் Poll_m10ஸ்ரீரங்கம் - ரங்கநாதர் கோயில் Poll_c10 
297 Posts - 41%
Dr.S.Soundarapandian
ஸ்ரீரங்கம் - ரங்கநாதர் கோயில் Poll_c10ஸ்ரீரங்கம் - ரங்கநாதர் கோயில் Poll_m10ஸ்ரீரங்கம் - ரங்கநாதர் கோயில் Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
ஸ்ரீரங்கம் - ரங்கநாதர் கோயில் Poll_c10ஸ்ரீரங்கம் - ரங்கநாதர் கோயில் Poll_m10ஸ்ரீரங்கம் - ரங்கநாதர் கோயில் Poll_c10 
27 Posts - 4%
sugumaran
ஸ்ரீரங்கம் - ரங்கநாதர் கோயில் Poll_c10ஸ்ரீரங்கம் - ரங்கநாதர் கோயில் Poll_m10ஸ்ரீரங்கம் - ரங்கநாதர் கோயில் Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
ஸ்ரீரங்கம் - ரங்கநாதர் கோயில் Poll_c10ஸ்ரீரங்கம் - ரங்கநாதர் கோயில் Poll_m10ஸ்ரீரங்கம் - ரங்கநாதர் கோயில் Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஸ்ரீரங்கம் - ரங்கநாதர் கோயில் Poll_c10ஸ்ரீரங்கம் - ரங்கநாதர் கோயில் Poll_m10ஸ்ரீரங்கம் - ரங்கநாதர் கோயில் Poll_c10 
6 Posts - 1%
prajai
ஸ்ரீரங்கம் - ரங்கநாதர் கோயில் Poll_c10ஸ்ரீரங்கம் - ரங்கநாதர் கோயில் Poll_m10ஸ்ரீரங்கம் - ரங்கநாதர் கோயில் Poll_c10 
5 Posts - 1%
Kavithas
ஸ்ரீரங்கம் - ரங்கநாதர் கோயில் Poll_c10ஸ்ரீரங்கம் - ரங்கநாதர் கோயில் Poll_m10ஸ்ரீரங்கம் - ரங்கநாதர் கோயில் Poll_c10 
4 Posts - 1%
manikavi
ஸ்ரீரங்கம் - ரங்கநாதர் கோயில் Poll_c10ஸ்ரீரங்கம் - ரங்கநாதர் கோயில் Poll_m10ஸ்ரீரங்கம் - ரங்கநாதர் கோயில் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஸ்ரீரங்கம் - ரங்கநாதர் கோயில்


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 16, 2009 4:42 pm

ஸ்ரீரங்கம் - ரங்கநாதர் கோயில் Sri-ranganathaswamy-temple

குடந்தையிலிருந்து ஒரு தாண்டு தாண்டி, ஸ்ரீரங்கம் என்கிற ஷேத்திரத்தைப் பற்றி உங்களுக்குச் சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன். குடந்தையிலேகூட நல்ல வைணவ தலங்கள் இருக்கின்றன. இருப்பினும் இந்தப் பகுதியின் வசீகரம் கருதி உங்களையெல்லாம் நெருக்கமாக ஈர்ப்பதற்காக ஸ்ரீரங்கத்தை சொல்வதற்கு ஆவலாக இருக்கிறேன். வாழ்க்கையில் ஒருமுறையேனும் இந்த ஸ்ரீரங்கம் கோயிலை நிதானமாக, மறுபடி சொல்கிறேன் நிதானமாக தரிசித்துவிட்டு வாருங்கள்.

இந்தக் கோயில் எப்பொழுது தோன்றியது என்று எவராலும் சொல்ல முடியவில்லை. சோழர்கள், பாண்டியர்கள், நாயக்க மன்னர்கள், சரபோஜிகள் என்று பலபேர் திருப்பணி செய்த அற்புதமான இடம் இந்த ஸ்ரீரங்கம்.

இந்த கோயிலில் மஹாவிஷ்ணு ரங்கநாதர் என்று பெயர்தரித்து பாம்பணையில் பள்ளி கொண்டிருக்கிறார். அவர் மட்டுமே தனியாக சாய்ந்தபடி படுத்து ஆதிசேஷன் மீது உறங்கி கொண்டிருக்கிறார்.

அது என்ன பாம்பின் மீது படுக்கை? ஏன் கடவுள் பாம்பின் மீது படுக்க வேண்டும்?

சேஷம் என்றால் எஞ்சியது என்று பொருள். எல்லாவற்றையும் ஒதுக்கி கடைசியில் என்ன மிஞ்சுகிறது என்று பார்த்தால் அந்த இடத்திலே இருப்பவர்தான் இறைவன் என்பதே இதன் பொருள்.

உங்களுக்குப் புரியவில்லையா? மறுபடி சொல்கிறேன். நீங்கள் உங்கள் குணம், உங்கள் தொழில், உங்கள் பெயர், உங்கள் குடும்பம், உங்கள் உடம்பு என்பதெல்லம் தள்ளி தான் யார் என்று மனதுக்குள் தேடி, இனி தேட ஒன்றுமில்லை. தேட எதுவுமில்லை என்று சுருண்டு கிடக்கிற மனோபாவம் வந்து, அந்த சுருண்டு கிடக்கிற சக்தியிலே மனம் லயிக்கும்போது அந்த சுருண்டு கிடக்கும் சக்தியின் நடுவே இருக்கின்ற ஒரு சக்தியின் பெயர்தான் இறைவன். இதைக் குறிப்பால் உணர்த்தும்படியாக உவமையாய் சொல்லும்படியாக இந்த திருவுருவம் அமைக்கப்பட்டிருக்கிறது.

பொன்வேய்ந்த அழகிய விமானத்தின் கீழ் காயத்ரி மண்டபத்துக்கு முன்பு கருவறையில் நெய் தீபங்களுக்கு நடுவே அரங்கன் பள்ளி கொண்டிருக்கிறான். அங்கே இறைவன் உறங்குவது போல காட்சி தருகிறான்.

ஆனால் அது தூக்கமல்ல. அது ஒரு யோக நிலை. அரங்கன் அமைதியாக இருக்கிறான். உங்கள் எல்லோரையும் ஆழ்ந்து கவனித்துக் கொண்டு இருக்கிறான். என்ன நடக்கிறது என்று புன்னகை தவழும் முகத்தோடு பார்த்துக் கொண்டிருக்கிறான்.

ஸ்ரீரங்கம் சாதாரண மடமல்ல. அது கோவிலும், கோவில் சார்ந்த பகுதிகளும் கொண்ட கட்டுமஸ்தான மிகப்பெரிய ஒரு நகரம். கோட்டை சுவர்களுக்கு நடுவேயும், உள்ளேயும் சித்திர வீதி, உத்தர வீதி என்று சதுரம் சதுரமாக நகரம் அமைந்திருக்க, இந்த நகருக்கு நடுவே கோயில் இருக்கிறது. சுற்றிலும் வீதிகள், நகரம், நடுவே கோயில் என்று ஸ்ரீரங்கம் மிகச்சிறப்பாக அமைந்திருக்கிறது.

கோயிலுக்குள் நுழைந்ததும் தடதடவென்று உள்ளே ஓடி விடவேண்டாம். கோயிலுக்குள் நுழைய, மண்டபத்தின் இடப்பக்கம் அழகிய கிருஷ்ணர் கோயில் இருக்கிறது. இது சமீபத்தியது. ஆனால் அதிலுள்ள சிற்பங்கள் மிக மிக அற்புதமானவை. உங்கள் கேமராவுக்கு விருந்து படைக்கும் தன்மை உடையவை. அந்த கிருஷ்ணர் கோயிலுக்கு அருகே ஒரு மாடிப்படி இருக்கிறது. அந்த மாடிப்படியில் ஏறிப் போனால் நீங்கள் ஒரு சமதளத்திற்கு வருவீர்கள். அந்த சமதளத்திலிருந்து பார்த்தால், நாலுபக்க கோபுரங்களும், மிகப்பெரிய கோயிலின் மேற்பரப்பும், பொன்வேய்ந்த விமானமும் சூரியவெளிச்சத்தில் தகதகத்து காட்சிதரும்.

மாடியிலிருந்து கீழே இறங்கினால் இடதுபக்கம் சக்கரத்தாழ்வார் சந்நிதி. வலது பக்கம் ராமானுஜருடைய சந்நிதி. சக்கரத்தாழ்வார் இறைவனின் ஆயுதம். தீய சக்திகள் இங்கு உள்ளே நுழைய முடியாது. சக்கரத்தாழ்வாரை வணங்கி நிற்க, நமக்கு தீவினை செய்தவர்கள் அழிந்து போவார்கள். ஏவல், பில்லி சூனியங்கள் விலகிப்போய்விடும் என்று இங்குள்ள மக்கள் நம்புகிறார்கள்.



ஸ்ரீரங்கம் - ரங்கநாதர் கோயில் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 16, 2009 4:43 pm

ஸ்ரீரங்கம் - ரங்கநாதர் கோயில் Sriran10



வலதுபக்கம் உள்ள ராமானுஜர் சந்நிதி மிக அற்புதமானது. இங்கே ஒரு சுதை உருவம் நகங்களோடும், கண் புருவங்களோடும், இமைகளோடும், நாசித்துவாரங்களோடும், வடிந்த உதடுகளோடும் அமர்ந்திருக்கிறது. ராமானுஜர் உள்ளே உலோகச் சிலையாய் தன் உடம்பை மாற்றிக்; கொண்டு அமர்ந்துவிட அதன் மீது குங்குமப்பூவால் சாந்து எழுப்பி அவரை பந்தனம் செய்திருக்கிறார்கள் என்று சொல்லப்பட்டாலும், அதை இல்லையென்று மறுக்கிறவர்களும் இருக்கிறார்கள்.

சிலை எப்படி இருப்பினும் ஸ்ரீராமானுஜர் மிகப்பெரிய மரியதைக்குரியவர். இந்து மதத்தின் புரட்சிக்காரர். ஈரமான மனம் உடையவர். இந்துக்களில் எல்லா ஜாதியினரும் வைணவரே என்று ஜாதி, மதபேதமற்று. தான் அறிந்த ஙநமோ நாராயணாங என்ற மந்திரத்தை கோபுரத்தில் ஏறி சகலருக்கும் சொன்ன வள்ளல். ஸ்ரீரங்கம் கோயில் எப்படி நடத்தப்பட வேண்டும் என்று எழுதிவைத்த அற்புதமான ஒரு மகான்.

இவருடைய சரித்திரம் மிக சுவாரஸ்யமானது. இவருடைய சீடர்களின் சரித்திரம் மிக அற்புதமானது. குருபக்திக்கு ஸ்ரீராமானுஜருடைய சீடர்களின் சரித்திரம் நல்ல உதாரணம்.

இந்த இரண்டு சந்நிதிகளையும் தரிசித்து உள்ளே போனால் அற்புதமான கருடமண்டபம் இருக்கிறது. மிக உயரமான கருடர் சிலை இருக்கிறது. அந்த சிலை சுதையால் ஆனது. பெரிய விழிகளும், கூர்மையான மூக்கும், கூப்பிய கைகளும், படபடக்கும் இறக்கையும் கொண்டது. இந்தச் சிலையை உற்றுப் பார்க்க லேசாய் ஒரு பயம் வருவது இயல்பு. இந்த இடத்தில் தத்தை முனி என்பவர் சமாதி கொண்டிருக்கிறார் என்று சொல்லப்படுவதும் உண்டு. அந்த மண்டபம் முழுவதும் அரசர்களின் சிலைகளும், சேனாதிபதிகளின் சிலைகளும் நிறைந்திருக்கும். அங்கிருக்கும் அரசர்களுடைய உருவங்களையும், உடைகளையும், தொப்பிகளையும் வியப்போடு பார்த்தவண்ணம் நீங்கள் இன்னும் உள்ளே நுழையலாம்.

உள்ளே நுழைய வலது பக்கம் பத்து படிக்கட்டுகளுக்கு மேல் ஒரு சிறிய ஆஞ்சநேயர் சிலை அமர்ந்து கைகூப்பிய நிலையில் இருக்கிறது. அந்த ஆஞ்சநேயர் மிகப்பெரிய வரம். எது கேட்டாலும் தருகின்ற சக்தி உடையவர். படிகள் ஏறி அந்த ஆஞ்சநேயரை வலம் வந்து, நமஸ்கரித்து, உங்களுடைய வேண்டுதல்களை அவரிடம் நீங்கள் தெரிவித்துவிட்டு வரலாம்.

கொடிமரம் தாண்டி இடது பக்கம் திரும்பினால் அங்கே கருப்புசாமி சிலை இருக்கும். கருப்புசாமி சிலை மரத்தாலானது. நான்கு மனைவியரோடு பீச்சாங்குழல் கையில் தாங்கி, அவர்களோடு நீர் அடித்து விளையாடுகின்ற இந்தச் சிலை சற்று பின்னப்பட்டிருந்தாலும் அந்த இடத்தின் அதிர்வுகள் மிக அற்புதமானது. அங்கே ஒரு கணம் நின்று கருப்புசாமியை தரிசித்துவிட்டு திரும்ப கோவிலுக்குள் புகுந்து, மண்டபத்தைச் சுற்றிக்கொண்டு வரிசைவழியே நகர்ந்து ரங்கநாதரை தரிசிக்க உள்ளே போனால் காயத்ரி மண்டபம்.

காயத்ரி மண்டபம் தாண்டி ரங்கநாதர் இருக்கின்ற அழகிய கருவறை. ரங்கநாதர் பாதம் முதல் உச்சந்தலை வரை அமைதியாய் தரிசித்துவிட்டு ரங்கா, ரங்கா, ரங்கா, என்று இடையறாது சொல்லி விட்டு பிரகாரத்தை வலம் வந்து கிளி மண்டபத்தில் சற்று நேரம் உட்கார்ந்துவிட்டு, அந்த கிளிமண்டபத்திலிருந்து தெரிகின்ற விமான ரங்கநாதரையும் பார்த்துவிட்டு வெளியே வந்து வெளிச்சுற்று பிரகாரம் வழியாக தாயார் சந்நிதிக்கு நடந்துபோக வேண்டும்.

தாயார் சந்நிதிக்கு நடந்து போகிற வழியில்தான் மிகப்பெரிய யுத்தங்கள் நடந்திருக்கின்றன. அந்நியர்கள் உள்ளே புகுந்து, எவர் எதிர்பட்டாலும் வெட்டிக் கொன்று ரத்தக்களரியான இடம் அது. அந்த இடத்தைத் தாண்டி போகும்போது வழியில் தன்வந்திரியின் சந்நிதி இருக்கிறது.

தன்வந்திரி இந்துமதத்தின் வைத்தியசாஸ்திர நிபுணர். தேவ வைத்தியர். அவரை நமஸ்கரிக்கும்போது உங்கள் உடற்குறை அறவே தீருகிறது. அவரை நமஸ்கரித்து உங்கள் உடல்பிணியை அவருக்கு எதிரே சொல்லி நோய் தீர்க்க வேண்டிக் கொள்ளலாம் அந்த தன்வந்திரியின் வலதுகையில் ஒரு அட்டைப்பூச்சியின் உருவம் இருக்கும். அந்தக் காலத்தில் ரத்தத்தைச் சுத்தம் செய்ய அட்டையை உடம்பில்விட்டு கடிக்கச்செய்து ரத்தத்தை வெளியேற்றுவார்கள். அப்படி கெட்ட ரத்தம் வெளியேற்றுகிறபோது உள்ளே புது இரத்தம் ஊறி உங்கள் உடம்பு சௌக்கியமாவது நிதர்சனம். ஆகவேதான் தன்வந்திரி கையில் மருந்தோடு அட்டையும் வைத்திருக்கிறார்.



ஸ்ரீரங்கம் - ரங்கநாதர் கோயில் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 16, 2009 4:44 pm

தன்வந்திரியின் சந்நிதி தாண்டி உள்ளே போனால் மிக அழகான பெரிய மண்டபம். அங்கே நிறைய பேர் பூ விற்றுக் கொண்டிருப்பார்கள். உள்ளே நுழைந்தால் தாயாரின் சந்நிதி எதிர்ப்படும்.

தாயார் ரங்கநாயகி பொலிவும் அழகும் மிக்கவள். சுடற்தெரிக்கும் ஆபரணங்கள் கொண்டவள். பின்னப்பட்ட பழைய சிலை பின்னால் இருக்க, முன்னே ஒரு சிலை இருக்கும். அதைத் தாண்டி உற்சவருக்குத்தான் கற்பூர ஆரத்தி காண்பிப்பார்கள். உற்சவரை வணங்கி செல்வம் நிறைய வேண்டுமென்று வணங்கிக் கொண்டு வெளியேவந்தால், சிறிய மண்டபம் ஒன்று இருக்கும். உலகத்தினுடைய அற்புதமான காப்பியமான கம்பராமாயணம் அங்குதான் அரங்கேற்றப்பட்டது. கம்ப நாட்டாழ்வார் அங்கு நின்று, தன் பாட்டை உரக்கச் சொல்லி விளக்கியிருப்பார் என்று நினைக்கிற போது அந்த இடத்தை விழுந்து வணங்க உங்களுக்குத் தோன்றும்.

அங்கிருந்து வலமாகச் சுற்றி சந்தன புஷ்கரணி தாண்டிப் போனால் ஈசான்ய மூலையில் ராமருடைய சந்நிதி இருக்கிறது. மிக அழகிய வர்ணங்களால் அந்த சந்நிதியை அலங்கரித்திருக்கிறார்கள். அங்கே எப்பொழுதும் இடையறாது வேதபாராயணம் நடந்து கொண்டிருக்கிறது. சந்நிதியின் உள்ளுக்குள்ளே வரிசையாக பத்து அவதாரங்களையும் சிலைகளாக வைத்திருக்கிறார்கள். எல்லா அவதாரங்களிலும் ஆதிசேஷன் குடைபிடித்துக் கொண்டு இருக்கிறான். மூர்த்திகள் மிக ரம்மியமாக, பார்ப்பதற்கு பரவசத்தை ஏற்படுத்தும் வண்ணம் இருக்கும்.

இந்த ராமர் சந்நிதி மிக முக்கியமான இடம். கோவிலில் வேறு எங்கு தியானம் செய்ய முடியுமோ, முடியாதோ இந்த இடத்திலே நீங்கள் அமைதியாக உட்கார்ந்து நிச்சயம் தியானம் செய்ய முடியும். அருகில் ஒரு தனி அறையும் இருக்கிறது. நீங்கள் கூடுதலாக ஆழ்ந்து தியானம் செய்ய வேண்டுமென்றால் அந்த அறையைத் திறந்து விடுகிறார்கள். இல்லையெனில் வேத பாராயணம் செய்யும் இடத்தில்கூட நீங்கள் அமர்ந்து தியானம் செய்யலாம். அடிக்கடி வேள்விகள் நடக்கும் இடமென்றபடியால், தினமும் வேத பாராயணம் செய்கின்ற இடமென்றபடியால் அந்த இடத்தில் கூடுதலாக ஆழ்ந்து தியானம் செய்து உங்களால் ஒரு நல்லநிலைக்குப் போகமுடியும்.

அங்கிருந்து தாண்டி, அந்த இடத்தைச் சுற்றி வருகின்ற இடத்தில் படைப்பள்ளி இருக்கிறது. படைப்பள்ளியில் சிறிதளவு சர்க்கரைப் பொங்கலும், புளியோதரையும் வாங்கி உண்டுவிட்டு நீங்கள் கோவிலைவிட்டு வெளியே வந்துவிடலாம்.

ஸ்ரீரங்கத்தை வாழ்வில் ஒருமுறை சுற்றி வந்தால்போதும். நீங்கள் இந்துவாகப் பிறந்ததற்கு அர்த்தம் ஏற்பட்டுவிடும். கொள்ளிடமும். காவிரியும் இரண்டாகப் பிளந்த இடத்தில், சிறிய தீவாக மலர்ந்த அற்புதமான ஷேத்திரமான இந்த ஸ்ரீரங்கம் உற்சாகமூட்டும் ஒரு இடம். சற்று அமைதியாக, அவசரமில்லாமல் தூண் தூணாக பார்த்துக் கொண்டு போகும்படியாய் உங்களை வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.

ராமர் சந்நிதியிலிருந்து வெளியே வரும்போது இடப்பக்கம் ஒரு பெரிய மண்டபம் இருக்கிறது. அங்குள்ள சிற்பங்கள் மிக மிக அழகானவை. அந்த சிற்பங்களை பார்த்துவிட்டு நீங்கள் பரவசப்படுவீர்கள். பிறகு அடிக்கடி இந்த கோயிலையும், சிற்பங்களையும் மனதில் நினைத்துக் கொள்வீர்கள்.

ஸ்ரீரங்கத்தைச் சுற்றி மிகப்பெரிய வரலாற்றுக் கதைகள் இருக்கின்றன. அவைகளை இங்கு சொன்னால் இன்னும் விரியும் என்பதால் இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன். நண்பர்களே, ஒருமுறை ஸ்ரீரங்கம் போய்வாருங்கள்.


-*-*-*-*-*-*-*-*-*-




ஸ்ரீரங்கம் - ரங்கநாதர் கோயில் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Wed Sep 16, 2009 5:39 pm

பெருமதிப்புக்குரிய சிவா
வணக்கம்

திருவரங்கம் கோயிலைப் பற்றிய இன்னொரு சேதி உண்டு. ஒரு காலத்தில் கொள்ளிடத்தில் பெருவெள்ளம் வந்து அங்கிருந்த திருக்கோயிலை மூழ்கடித்து விட்டது. வெள்ளம் வடிந்த பின் திருக்கோயில் மணலால் மூடப் பட்டது என்றும் பிறகு வெகுகாலம் கழித்துச் சோழ அரசன் ஒருவன் அந்த இடத்துக்குப் போன போது ஒரு கிளி இந்த இடத்தில் பரம்பொருள் பள்ளி
கொண்டிருக்கிறது என்னும் பொருள் படும்படியான சுலோகம் ஒன்றைச் சொல்லியதாகவும் பிறகு திருக்கோயில் கண்டெடுக்கப் பட்டதாகவும் சொல்லப் படுகிறது,. இதில் எனக்கு ஒரு பெரும் ஐயம் ஏற்பட்டது. சோழ அரசர்களுக்குக் கிள்ளி என்பது பொதுப்பெயர்.பாண்டியர்க்கு மாறன் என்பது போல. வெகுகாலத்திற்குப் பிறகு ஒருசோழ அரசன் அங்கு ஒரு
திருக்கோயிலின் அடையாளத்தைக் கண்டிருக்க வேண்டும். தமிழர்களிடையே சரித்திரப் பாதுகாப்பு என்பது அறவே இல்லை என்பது ஆராய்ச்சியாளர்களின் துணிபு. பின்பு வந்தார் கிள்ளி என்பதைக் கிளி எனக் கொண்டர் போலும். இதுவரையிலும் நான் அறியாத ஒரு புது விடயத்தை தங்கள் மூலமாக அறிந்தேன். அந்த விடயம்.
இந்த இடத்தில் தத்தை முனி என்பவர்
சமாதி கொண்டிருக்கிறார் என்று சொல்லப்படுவதும் உண்டு.


தத்தை என்பது கிளிக்கு உள்ள மற்றொரு பெயர். கோயிலைக் கண்ட சோழமன்னன் துறவறம் பூண்டு அங்கேயே திருப்பள்ளி கொண்டானோ என்பது தான் அது.
தயை செய்து உங்கள் கருத்தைக் கூறுவீர்களா?



அன்புடன்


நந்திதா

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 16, 2009 7:51 pm

ஸ்ரீரங்கம் - ரங்கநாதர் கோயில் 230655



ஸ்ரீரங்கம் - ரங்கநாதர் கோயில் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Wed Sep 16, 2009 7:55 pm

சிவா
ஓட்டம் பிடிப்பது எதற்கு



விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Wed Sep 16, 2009 7:56 pm

அக்கா உங்கள் வரலாற்றுக்கு புலமைக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள்



விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Wed Sep 16, 2009 7:59 pm

சிவா wrote:ஸ்ரீரங்கம் - ரங்கநாதர் கோயில் 230655

அந்தப்பயம் இருக்கட்டும் நம்ம நந்திதா அக்கா என்ன கொக்காவா

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 16, 2009 7:59 pm

பிரகாஸ் wrote:சிவா
ஓட்டம் பிடிப்பது எதற்கு

இந்த அளவுக்கு பதில் சொல்லும் திறமை இல்லாததன் விளைவுதான் ஓட்டம்!



ஸ்ரீரங்கம் - ரங்கநாதர் கோயில் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Wed Sep 16, 2009 8:00 pm

ஓஹோ

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக