புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எலுமிச்சை வாங்கலாமா? - Page 3 Poll_c10எலுமிச்சை வாங்கலாமா? - Page 3 Poll_m10எலுமிச்சை வாங்கலாமா? - Page 3 Poll_c10 
21 Posts - 66%
heezulia
எலுமிச்சை வாங்கலாமா? - Page 3 Poll_c10எலுமிச்சை வாங்கலாமா? - Page 3 Poll_m10எலுமிச்சை வாங்கலாமா? - Page 3 Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எலுமிச்சை வாங்கலாமா? - Page 3 Poll_c10எலுமிச்சை வாங்கலாமா? - Page 3 Poll_m10எலுமிச்சை வாங்கலாமா? - Page 3 Poll_c10 
63 Posts - 64%
heezulia
எலுமிச்சை வாங்கலாமா? - Page 3 Poll_c10எலுமிச்சை வாங்கலாமா? - Page 3 Poll_m10எலுமிச்சை வாங்கலாமா? - Page 3 Poll_c10 
32 Posts - 32%
mohamed nizamudeen
எலுமிச்சை வாங்கலாமா? - Page 3 Poll_c10எலுமிச்சை வாங்கலாமா? - Page 3 Poll_m10எலுமிச்சை வாங்கலாமா? - Page 3 Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
எலுமிச்சை வாங்கலாமா? - Page 3 Poll_c10எலுமிச்சை வாங்கலாமா? - Page 3 Poll_m10எலுமிச்சை வாங்கலாமா? - Page 3 Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எலுமிச்சை வாங்கலாமா?


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Thu Nov 17, 2011 3:43 pm

First topic message reminder :

சமீபத்தில் "Benefits of lemon" என்று ஒரு ஆங்கிலக் கட்டுரையை டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேட்டில் வாசிக்க நேர்ந்தது. ’டைம்ஸ் ஆஃப் இந்தியா’ போன்ற ஒரு தேசீய நாளேட்டில், எலுமிச்சையின் பயன்பாடுகள் குறித்த பல முக்கிய தகவல்கள் இருட்டடிப்பு செய்யப்பட்டிருப்பதைப் பார்த்ததும், உள்கட்சி ஜனநாயகம் இல்லையென்று உறுப்பினர் பதவியை உதறிய எதிர்க்கட்சிப் பிரமுகரைப் போல எனது உள்ளம் கொதித்தது. உடனே எலுமிச்சம்பழத்தைக் குறித்த ஒரு விழிப்புணர்வுப் பதிவை எழுதியபிறகே ஆபீஸ் வேலையை கவனிப்பது என்று சபதம் மேற்கொண்டு எழுதிய பதிவு இது.


எலுமிச்சையின் பெருமைகளைப் பாரீர்!


முக்கிய பிரமுகர்களைப் பார்க்கப் போகும்போது பலர் கையில் எலுமிச்சம்பழத்துடன் போவதுண்டு. அதற்கு முக்கிய காரணம், எலுமிச்சையில் விட்டமின்-"C" இருக்கிறது. ( C for Cash, C for Corruption, C for Concession வகையறா). இந்த எலுமிச்சம்பழம் இந்தியாவில் தான் முதலில் விளைவிக்கப்பட்டது என்பதிலிருந்தே புரிந்திருக்குமே?

1875-ல் ஃப்ளினின் என்ற மருத்துவர் உடம்பிலிருக்கும் அசுத்தமான ரத்தத்தை சுத்தப்படுத்த எலுமிச்சை சாறு போல எதுவுமில்லை என்று கண்டுபிடித்ததை இன்றளவும் டாஸ்மாக் பக்தகோடிகள் அவ்வப்போது பின்பற்றுகிறார்கள் அல்லவா? இதிலிருந்தே எலுமிச்சையின் மப்பு நீக்கும் மருத்துவ குணத்தை அறியலாம். ஆனால், அதே எலுமிச்சைச் சாறை வொயிட் ரம்மிலும், வோட்காவிலும் கலந்து குடிப்பது என்ன கொடுமை! அதனினும் கொடிது, மப்பு குப்பென்று ஏற எலுமிச்சங்காய் ஊறுகாயை சைட்-டிஷ்ஷாய் உபயோகிப்பது!

வெளிநாடுகளில் எலுமிச்சம்பழத்தின் சாறு, விதை, தோல் எல்லாவற்றையும் மருந்துகள் மற்றும் வாசனைப் பொருட்கள் தயாரிக்கப் பயன்படுத்துகிறார்களாம். ஆனால், எதிலும் வித்தியாசமாக சிந்திக்கும் திறனுள்ள நாம் அதை எப்படியெல்லாம் பயன்படுத்துகிறோம் என்று பார்த்தால் புல்லரிக்கும். ( எலுமிச்சைச் சாற்றைத் தடவினால் அரிப்பும் நிற்கும் என அறிக!)


(கீழே Spoiler பகுதியில் உள்ளதை விருப்பமுள்ளவர்கள் படிக்க)

Spoiler:

இது தவிர, எலுமிச்சை பல உடல் உபாதைகளுக்கு அருமருந்தாகும். அவையாவன:

வயிற்றுப் பொருமல்

எலுமிச்சையின் சாறு வயிற்றுப் பொருமலுக்கு மிகச் சிறந்த மருந்தாகும். சமீபத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக ஒரு லாரி நிறைய எலுமிச்சம்பழம் வாங்கி, உள்ளாட்சித் தேர்தலில் டெபாசிட் இழந்த வேட்பாளர்களுக்கு, வெந்நீரில் எலுமிச்சம் சாறு கலந்து வழங்கியதாக, சத்தியமூர்த்தி பவன் வாசலில் குவிந்து கிடக்கும் காயாத தோல்களும் காய்ந்து கிடக்கும் தொண்டர்களும் தெரிவிக்கின்றனர்.

கொசுக்கடி

தமிழகமெங்கும் மழை கொட்டிக் கொண்டிருப்பதால், தமிழகத்தில் மட்டும் கொசுத்தொகை 700 கோடியை எட்டுமென்றும், 700 கோடியாவது கொசு எழும்பூர் ரயில் நிலைய வாசலில் பிறக்கும் என்றும் உலக கொசு வளர்ச்சிக் கழகம் அறிவித்திருக்கிறது. ஆகவே, கொசுக் கடித்த இடத்தில் (எழும்பூர் ரயில் நிலையத்தில் அல்ல; உங்கள் உடம்பில்) எலுமிச்சை சாற்றைப் பூசினால் கொசுவின் உற்றார் உறவினர் உங்கள் பக்கத்தில் வராமல் பம்மி விடுவார்கள்.

உறக்கமின்மை

கோயம்பேடு சந்தையில் காய்கறிகள் விற்கிற விலையைக் கேட்டு, நாளைக்கு சாம்பாரா, ரசமா என்று யோசித்து உறக்கம் வராதவர்கள், எலுமிச்சம் பழரசம் அருந்தினால், பிரணாப் முகர்ஜீ பணவீக்கம் குறித்து மீண்டுமொரு முறை கவலை தெரிவிக்கிற வரைக்கும் சுமாராக உறங்க வாய்ப்புகள் சுமாராக இருக்கின்றன.

விஷக்கடி

எலுமிச்சம் பழத்துக்கு விஷத்தை முறிக்கும் ஆற்றலும் உண்டு என்பதால் வாகனம் வைத்திருப்பவர்கள் கைவசம் எப்போதும் ஒரு எலுமிச்சம்பழம் வைத்திருப்பது நன்மை பயக்கும். ஒவ்வொரு முறையும் பெட்ரோல் விலை ஏறும்போதும், கொஞ்சமாய் சாறு சாப்பிட்டால் கடுப்பு சற்றே குறையும்.

காய்ச்சல்

சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் 782 பேர்கள் ஏறத்தாழ 4000 கோடி கறுப்புப்பணத்தைப் பதுக்கியிருக்கிறார்கள் என்பது போன்ற செய்தியை வாசித்தால், உடனே எலுமிச்சம் பழச்சாற்றை உண்டால், காய்ச்சல் கிறுகிறுப்பு போன்றவை அறவே ஏற்படாது.

வாந்தி

எலுமிச்சம்பழத்தை முகர்ந்து பார்த்தால் வாந்தி வராது. ஆகவே, கையில் ஒரு எலுமிச்சம் பழமிருந்தால் துணிந்து மழைக் காலத்திலும் மாம்பலம், அசோக் நகர், கோடம்பாக்கம் போன்ற பகுதிகளில் அருவருப்பின்றி நடமாடலாம்.

அஜீரணம்

கொஞ்சம் தேன்கலந்து எலுமிச்சைச் சாறு உண்டால் கல்லீரல் பலப்படும். எனவே, எடுத்தோம் கவிழ்த்தோம் என்று உத்தரவு போட்டு விட்டு, நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு போட்டதும், இதைச் சாப்பிட்டால் அஜீரணம் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்.

தலைவலி

சூடான பானங்களில் அரைமூடி எலுமிச்சையைப் பிழிந்து அருந்தினால் தலைவலி குணமாகும். குறிப்பாக பொருளாதாரம், பணவீக்கம், விலைவாசி ஏற்றம் போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள், உணவை முற்றிலுமாக நிறுத்திவிட்டு தினமும் மூன்று வேளை இந்தப் பானத்தையே அருந்தினால், அடுத்த தேர்தலில் இலவசமாக திருவோடு கேட்கிற அவசியம் ஏற்படாது.

பித்தம்

இது அண்மைக்காலமாக இந்தியாவில் மிகவும் பிரபலமாகி வருகிற கோளாறு. இதனால், இம் என்றால் உண்ணாவிரதம், ஏன் என்றால் மவுன விரதம் இருப்பதோடு, அவை முடிந்ததும் இடைவிடாமல் புலம்பித் தீர்ப்பதைப் பலர் வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இவர்களுக்கு எலுமிச்சைச் சாற்றில் சீரகமும், மிளகும் கலந்து கொடுத்தால் பித்தம் தலைக்கேறாமல் இருக்கும்.

இன்னும் எலுமிச்சம்பழத்தின் பல அற்புத குணங்கள் உள்ளன என்றாலும், நீளம் கருதி இத்தோடு நிறைவு செய்கிறேன். இத்தனை மருத்துவ குணங்கள் கொண்ட எலுமிச்சம்பழத்தை அனைவரும் எப்போதும் கைவசம் வைத்திருந்தால், பிரதம மந்திரியும், மத்திய நிதியமைச்சரும் விலைவாசியேற்றம் குறித்து அறிக்கை அளிக்கும்போது, தலையில் அழுந்தத் தேய்த்து (அவர்கள் தலையில் இல்லை; நம் தலையில்) பைத்தியம் பிடித்து துணியைக் கிழித்துக்கொண்டு ரோட்டில் ஓடாமல் இருக்க முடியும்.



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 19, 2011 10:18 am

எலுமிச்சையின் இந்தப் பயன்கள் பற்றி அவ்வப்பொழுது அறிந்திருந்தாலும், நீங்கள் கூறியுள்ள “எலுமிச்சையின் ஏழாம் அறிவு ரகசியங்கள்” அனைத்தும் அட்டகாசம்.

படிக்கும் வயதில், பக்கத்து வீட்டில் எலுமிச்சையை வெட்டி அதில் குங்குமம் தடவி வீட்டு வாசற்படியில் இரவோடு இரவாக வைத்துவிட்டுத் தூங்கி விட்டேன். காலையில் எழுந்து பார்த்தால் அந்த ஏரியா சாமியாடிகள் அனைவரும் அங்கு கூடி அந்த எலுமிச்சையை ஆராய்ந்து அதற்குப் பரிகாரம் செய்தது நினைவில் வந்து சிரிக்க வைத்தது.



எலுமிச்சை வாங்கலாமா? - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Nov 19, 2011 10:21 am

சுதா இது உங்க சொந்தபதிவா இல்ல ரசித்த பதிவான்னு சொல்லவே இல்லையே



எலுமிச்சை வாங்கலாமா? - Page 3 Uஎலுமிச்சை வாங்கலாமா? - Page 3 Dஎலுமிச்சை வாங்கலாமா? - Page 3 Aஎலுமிச்சை வாங்கலாமா? - Page 3 Yஎலுமிச்சை வாங்கலாமா? - Page 3 Aஎலுமிச்சை வாங்கலாமா? - Page 3 Sஎலுமிச்சை வாங்கலாமா? - Page 3 Uஎலுமிச்சை வாங்கலாமா? - Page 3 Dஎலுமிச்சை வாங்கலாமா? - Page 3 Hஎலுமிச்சை வாங்கலாமா? - Page 3 A
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Sat Nov 19, 2011 10:56 am

கே. பாலா wrote:நல்ல நகைச்சுவை கட்டுரை

மிக்க நன்றி பாலா நன்றி



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Sat Nov 19, 2011 10:57 am

சிவா wrote:எலுமிச்சையின் இந்தப் பயன்கள் பற்றி அவ்வப்பொழுது அறிந்திருந்தாலும், நீங்கள் கூறியுள்ள “எலுமிச்சையின் ஏழாம் அறிவு ரகசியங்கள்” அனைத்தும் அட்டகாசம்.

படிக்கும் வயதில், பக்கத்து வீட்டில் எலுமிச்சையை வெட்டி அதில் குங்குமம் தடவி வீட்டு வாசற்படியில் இரவோடு இரவாக வைத்துவிட்டுத் தூங்கி விட்டேன். காலையில் எழுந்து பார்த்தால் அந்த ஏரியா சாமியாடிகள் அனைவரும் அங்கு கூடி அந்த எலுமிச்சையை ஆராய்ந்து அதற்குப் பரிகாரம் செய்தது நினைவில் வந்து சிரிக்க வைத்தது.

சிரிப்பு சிப்பு வருது

நன்றி நன்றி நன்றி நன்றி



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Sat Nov 19, 2011 10:58 am

உதயசுதா wrote:சுதா இது உங்க சொந்தபதிவா இல்ல ரசித்த பதிவான்னு சொல்லவே இல்லையே

தனிமடல் அனுப்பிஉள்ளேன்



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Nov 19, 2011 11:32 am

dsudhanandan wrote:
உதயசுதா wrote:சுதா இது உங்க சொந்தபதிவா இல்ல ரசித்த பதிவான்னு சொல்லவே இல்லையே

தனிமடல் அனுப்பிஉள்ளேன்

எலுமிச்சை வாங்கலாமா? - Page 3 865843 எலுமிச்சை வாங்கலாமா? - Page 3 865843 எலுமிச்சை வாங்கலாமா? - Page 3 865843 எலுமிச்சை வாங்கலாமா? - Page 3 865843

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Nov 19, 2011 11:58 am

நன்றி சுதா உங்க விளக்கத்துக்கு.

ஆனா இந்த பதிவை இப்ப ஏதோ ஒரு பிளாக்லா சமீபத்துல படிச்ச நினைவு வந்துச்சு அதான் கேட்டேன்



எலுமிச்சை வாங்கலாமா? - Page 3 Uஎலுமிச்சை வாங்கலாமா? - Page 3 Dஎலுமிச்சை வாங்கலாமா? - Page 3 Aஎலுமிச்சை வாங்கலாமா? - Page 3 Yஎலுமிச்சை வாங்கலாமா? - Page 3 Aஎலுமிச்சை வாங்கலாமா? - Page 3 Sஎலுமிச்சை வாங்கலாமா? - Page 3 Uஎலுமிச்சை வாங்கலாமா? - Page 3 Dஎலுமிச்சை வாங்கலாமா? - Page 3 Hஎலுமிச்சை வாங்கலாமா? - Page 3 A
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Nov 19, 2011 12:00 pm

சுதன்..நன்றி.
எலுமிச்சை வாங்கலாமா? - Page 3 678642

இப்போதுதான் புரிந்தது. எலுமிச்சை வாங்கலாமா? - Page 3 224747944




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக