புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:10 pm

» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
குறுநாவல் - அசோகவனம் - Page 2 Poll_c10குறுநாவல் - அசோகவனம் - Page 2 Poll_m10குறுநாவல் - அசோகவனம் - Page 2 Poll_c10 
15 Posts - 47%
ayyasamy ram
குறுநாவல் - அசோகவனம் - Page 2 Poll_c10குறுநாவல் - அசோகவனம் - Page 2 Poll_m10குறுநாவல் - அசோகவனம் - Page 2 Poll_c10 
14 Posts - 44%
Guna.D
குறுநாவல் - அசோகவனம் - Page 2 Poll_c10குறுநாவல் - அசோகவனம் - Page 2 Poll_m10குறுநாவல் - அசோகவனம் - Page 2 Poll_c10 
1 Post - 3%
T.N.Balasubramanian
குறுநாவல் - அசோகவனம் - Page 2 Poll_c10குறுநாவல் - அசோகவனம் - Page 2 Poll_m10குறுநாவல் - அசோகவனம் - Page 2 Poll_c10 
1 Post - 3%
D. sivatharan
குறுநாவல் - அசோகவனம் - Page 2 Poll_c10குறுநாவல் - அசோகவனம் - Page 2 Poll_m10குறுநாவல் - அசோகவனம் - Page 2 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
குறுநாவல் - அசோகவனம் - Page 2 Poll_c10குறுநாவல் - அசோகவனம் - Page 2 Poll_m10குறுநாவல் - அசோகவனம் - Page 2 Poll_c10 
217 Posts - 50%
ayyasamy ram
குறுநாவல் - அசோகவனம் - Page 2 Poll_c10குறுநாவல் - அசோகவனம் - Page 2 Poll_m10குறுநாவல் - அசோகவனம் - Page 2 Poll_c10 
156 Posts - 36%
mohamed nizamudeen
குறுநாவல் - அசோகவனம் - Page 2 Poll_c10குறுநாவல் - அசோகவனம் - Page 2 Poll_m10குறுநாவல் - அசோகவனம் - Page 2 Poll_c10 
17 Posts - 4%
prajai
குறுநாவல் - அசோகவனம் - Page 2 Poll_c10குறுநாவல் - அசோகவனம் - Page 2 Poll_m10குறுநாவல் - அசோகவனம் - Page 2 Poll_c10 
10 Posts - 2%
T.N.Balasubramanian
குறுநாவல் - அசோகவனம் - Page 2 Poll_c10குறுநாவல் - அசோகவனம் - Page 2 Poll_m10குறுநாவல் - அசோகவனம் - Page 2 Poll_c10 
9 Posts - 2%
சண்முகம்.ப
குறுநாவல் - அசோகவனம் - Page 2 Poll_c10குறுநாவல் - அசோகவனம் - Page 2 Poll_m10குறுநாவல் - அசோகவனம் - Page 2 Poll_c10 
9 Posts - 2%
jairam
குறுநாவல் - அசோகவனம் - Page 2 Poll_c10குறுநாவல் - அசோகவனம் - Page 2 Poll_m10குறுநாவல் - அசோகவனம் - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
குறுநாவல் - அசோகவனம் - Page 2 Poll_c10குறுநாவல் - அசோகவனம் - Page 2 Poll_m10குறுநாவல் - அசோகவனம் - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Jenila
குறுநாவல் - அசோகவனம் - Page 2 Poll_c10குறுநாவல் - அசோகவனம் - Page 2 Poll_m10குறுநாவல் - அசோகவனம் - Page 2 Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
குறுநாவல் - அசோகவனம் - Page 2 Poll_c10குறுநாவல் - அசோகவனம் - Page 2 Poll_m10குறுநாவல் - அசோகவனம் - Page 2 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குறுநாவல் - அசோகவனம்


   
   

Page 2 of 2 Previous  1, 2

avatar
Guest
Guest

PostGuest Wed Jan 14, 2009 3:00 am

First topic message reminder :

-சுபா


அம்மாவும் அப்பாவும் சேர்ந்து அவளுக்குப் பெயர் வைத்தார்கள். புவன மோகினி. அம்மா …புவனீஈஈ† என்று கூப்பிடுவாள். அப்பா …புவனாம்மா† …புவனாம்மா† என்று அழைப்பிற்கு அழைப்பு அன்பையும் சேர்த்துக் குழைத்துக் கூப்பிடுவார்.

நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் போகும் பாதையில் நடுவில் இடர்ப் பட்ட ஒரு கிராமத்தில் அவர்கள் வீடு இருந்தது. கல், கான்க்ரிட் என்ற அளவுகோல் வைத்துப் பார்த்தால் அந்த வீடு அப்படி ஒன்றும் குறிப்பிடத்தக்க தில்லை. ஆனால் புவனமோகினி யைப் பொறுத்தவரை அந்த வீடு மகத்தான வீடு.

புவனமோகினியே வேண்டி வேண்டிப் பிறந்த குழந்தை. அவளுக்கு முன்னாலும், பின்னாலும் வீட்டில் யாரும் இல்லை. அம்மாவின் அன்பும் அப்பாவின் பரிவும் முழுக்க முழுக்க அவள் மேல் வெள்ளமாகக் கொட்டியது.

சண்டை போட, சேர்ந்து சிரிக்க, பகிர்ந்து உண்ண வீட்டில் தான் அவள் வயதொத்த யாரும் இல்லையேயொழிய வீட்டுக்கு வெளியே தோழிகள் நிறைய பேர் இருந்தார்கள் எப்போதும் கலகலப்பு எப்போதும் சிரிப்பு.

தோழிகள் பட்டாளம் புவன மோகினி என்ற அவளது பெயரை புவனா, புவனீ, புவன் என்று விதவிதமாக அழைத்துப் பார்த்துக் கடைசியில் மோகினி என்று அழைப்பதில் ஆனந்தம் பெற்றது.

மோகினீ, மோகினி, மோகினீஈஈ எந்நேரமும் கலகலப்பு கலீர் கலீர் சிரிப்பு ஆனந்தம் கும்மாளம். அந்தப் பட்டாளம் குளத்தில் இறங்கினால் குளித்துக் கொண்டிருக்கும் மற்ற பெண்கள் எல்லாம் அவசர அவசரமாகக் கரையேறி விடுவார்கள். அந்தப்பட்டாளம் மாந்தோப்பில் நுழைந்தால் தோட்டத்துக் காவல் காரன் அவர்கள் முன் நின்று தோப்புக் கரணம் போடத் தொடங்குவான்.

மோகினி இடக்கல் குகையின் கல் சிம்மாசனத்தில் உட்கார்ந்து தர்பார் நடத்தி யதைப் பார்த்த தொல்பொருள் ஆராய்ச்சி அலுவகத்தின் அதிகாரி, ……ஏ... குரங்குங்களா... எப்படி (இவ்வளவு உயரத்திலிருந்து அந்த குகைக்குப் போனீர்கள் என்று பயமும், பிரமிப்புமாய் கேட்டு அவர்கள் மறுக்க மறுக்க தீயணைப்புப் படையினரை அழைத்து அவர்களைப் பத்திரமாக மேலேற்றி இருக்கிறார்.)

மலம்புழா அணைக்கட்டில் தண்ணீர் வந்து மோதிய பகுதியில் மிதந்த டிரம் கட்டிய மிதவை ஒன்றின் மீது போட்டோவிற்குப் போஸ் கொடுத்த மோகினியைப் பார்த்து விட்டுக் காவல்காரன் வாயிலும் வயிற்றுலுமாக அடித்துக் கொண்டு அவர்களை நெருங்க, கரையோரம் மோதிய தெப்பம், கரையை விட்டு விலகி விலகி ஆழப்பகுதியை நோக்கி மிதந்து சென்று விட, காக்கி டிராயரை நனைத்துக் கொண்டு கீழே விழுந்து மயங்கி இருக்கிறான். மோகினி சிரித்தப்படி நீரில் குதித்து நீந்திக் கரையேறி வந்து அவன் மயக்கத்தைத் தெளிவித்திருக்கிறாள்.

மோகினியின் விடலைப்பருவம் அவ்வளவு ஆனந்தமாய் இருந்தது. அற்புதமாய் இருந்தது. சிரிப்பும், பேச்சும், கூச்சலும், சண்டையுமாய் யாருக்குமே வாய்க்காத அலாதியான அனுபவமாய் இருந்தது.

அதன் பின்தான் மோகினியின் வாழ்க்கை தடம் புரண்டது. நடந்தது எதுவுமே எதிர்பாராதது.


avatar
Guest
Guest

PostGuest Wed Jan 14, 2009 3:04 am

இரண்டு வருடங்கள். நேரா நேரத்திற்குச் சாப்பிட்டாள். வெள்ளிக் கிழமை, வெள்ளிக்கிழமை எண்ணெய் தேய்த்துக் குளித்தாள். வாரத்திற்கு ஒரு கடிதம் போட்டாள். போனில் சுகுமாருடன் பேசினாள். நர்ஸ் வேலை செய்தாள். இன்னொரு வேலையும் செய்தாள். மாதந்தோறும் மெடிக்கல் செக்கப் பிற்குப் போனாள். மாதா மாதம் பணம் அனுப்பினாள்.

……திரும்பி வந்தாள்.

சுகுமார் குணமடைந்திருந்தான்.

பழையப்படி மாறியிருந்தான். இளமை கலைந்த தலைமுடி, நீளமூக்கு, செம்பட்டை மீசை எல்லாம் கருக் கழியாமல் அப்படியே இருந்தான்.

நெருப்பில் குளித்துவிட்டுத்தான் அவனை தொடவேண்டும் போல் இருந்தது மோகினிக்கு.

மானசீகமாக நெருப்பு வளர்த்தாள். தூய்மையாக வெளிப்பட்டாள். அரபு நாடும், அங்கே அவளைத் தொட்டவர்களும் எரிந்து போனார்கள். அம்னீசியா போல் அவளுக்கு அனைத்தும் மறந்து போயிற்று.

சுகுமாரைத் தொட்டாள்.

சந்திரன் இல்லை அவனைப் பற்றிய வதந்திகள் இருந்தன. சீட்டுக் கம்பெனி மோசடி, திருட்டு, ஜெயில், சண்டை, ஓட்டம் என என்னென்னவோ பேச்சுக்கள் கேட்டன.

அவன் இல்லாததே மோகினிக்கு ஆறுதலாய் இருந்தது. கீரிப் பாறையில் இருக்க அவளுக்கு விருப்பம் இல்லை. பழையன யாவற்றையும் நினைவுபடுத்தும். சுகுமாருக்கும் கீரிப்பாறை வேண்டாம் என்று தோன்றி விட்டது.

மதுரையில், நகரின் விளிம்பில் ஒரு சிறு வீடு வாங்கும் அளவு பணம் இருந்தது, வாங்கினார்கள். சுகுமார் விதம் விதமாக வாழ்த்து அட்டைகளைத் தயாரித்தான்.

ஸ்க்ரின் பிரின்டிங்கில் ஆயிரம் ஆயிரமாக அச்சடித்து மதுரையின் கடைகளில் கொண்டு போய் அலங்காரமாக வைத்து விட்டு வந்தார்கள். வீட்டின் வெளிப்புறத்தில் ஒரு குடிசை எழுப்பி அதில் வாழ்த்து அட்டை களைப் பரப்பினார்கள். சுய தொழில் கை கொடுத்தது.

மோகினி கடைகளில் வாழ்த்து அட்டைகளைக் கொண்டு போய்க் கொடுத்தாள் பணம் பெற்றாள். புது வாழ்த்துக்களை அச்சடிக்கக் தேவையான அட்டைகளை வாங்கினாள். முழுக்க முழுக்க அவளாலேயே அந்தத் தொழிலை நிர்வகிக்கும் அளவு நம் பிக்கை வளர்ந்தது.

எல்லாம் மாயப் பலகையில் எழுதப் பட்ட எழுத்துக்களைப் போல் மறந்து புத்தம் புதிதான ஒரு வாழ்க்கையில் அவள் மன நிறைவுடன் ஈடுபட்ட அந்த சமயத்தில் தான் சந்திரன் அவள் வாழ்க்கையில் மறுபடி குறுக்கிட்டான்.
***
வாழ்த்து அட்டைகளை டெலிவரி கொடுத்து விட்டுத் திரும்பிக் கொண்டிருந்தாள் மோகினி வரும் வழியில் ராஜநாகம் படமெடுத்து நிற்பதுபோல் சந்திரன் எதிர்ப்பட்டான்.

முதலில் அவனை அடையாளம் புரிந்து கொள்ளவே சில வினாடிகள் பிடித்தன மோகினிக்கு. சந்திரன் என்று தெரிந்த பின் அவள் உடல் எங்கும் தீப்பற்றிய மாதிரி எரிந்தது. பளார், பளார் என்று அவனை அறைய வேண்டும் போல் இருந்தது. அவன் தலைமுடியைக் கொத்தாகப் பற்றி உலுக்கி, அவனைக் கீழே தள்ளி ஏறி மிதிக்க வேண்டும் போல் இருந்தது.

மன உணர்ச்சிகளை எல்லாம் செயல் படுத்த முடியுமென்றால் இந்த உலகில் ஒரு உயிர் கூட தப்ப வாய்ப்பில்லை. மோகினி வெறும் திகைப்பை மட்டும் வெளிப்படுத்தினாள்.

avatar
Guest
Guest

PostGuest Wed Jan 14, 2009 3:04 am

……மோகினி... எப்ப வந்தே? மதுரைக்கு எப்படி வந்து சேர்ந்தே? நல்லா மினு மினுன்னு இருக்கியே... எங்கிட்ட ஒரு வார்த்தை கூடச் சொல்லலியே. ஒரு தாங்க்ஸ் கூடவா கெடையாது? நான் நாகர்கோயில்லயும், கீரிப்பாறையிலயும் உன்னைத் தேடி அலையோ அலைன்னு அசைஞ்சேன். வா காப்பி சாப்பிடலாம்

……வேணாம்

……பாத்தியா, எங்கிட்டயே பிகு பண்றியே சுகுமார் எப்படி இருக்கான்?

……நல்லா இருக்காரு

……தெரியுது உம் மூஞ்சியிலயே தெரியுது. நான் மட்டும் இல்லேன்னா இந்நேரம் உன் தாலி...

……சந்திரன்...

……ரெண்டு ஸ்வீட்டு, பாஸந்தி, அப்புறம் ரெண்டு ஆனியன் ரவா முறுகலா, கடைசியா ரெண்டு காப்பி

……எனக்கு வேணாம்

……அட... நீங்க போய்க் கொண்டு வாங்க. ஏன் வேணாம்னு சொல்றே மோகினி. நான் காசு தரேன். நெருப்புன்னா வாய் வெந்துடவா போவுது. உன் புருஷன்தான் நல்லாயிருக்கான் இல்ல? அது சரி, எனக்கு எப்ப விருந்து சாப்பாடு போடப் போறே?

……வீட்டுக்கு வாங்க, வடை, பாயசம்...

……பாத்தியா? இந்தக் கிண்டல் தானே வேணாங்கறது. வடை, பாயசமெல்லாம் யாருக்கு வேணும்? நீ.. நீ விருந்து கொடுக்கணும். துபாய்ல கொடுத்திருப்பியே, எனக்கும் ரொம்ப நாளா ஏக்கம். அது ஒண்ணும் தப்பில்ல. துபாய்ல இருக்கற மாதிரி நெனைச்சிக்கயேன். நான் தான் மொதல்ல ஆசைப்பட்டவன். தண்ணில புடிச்சி இழுத்து, காப்பாத்தி கரைசேத்து... ம்ஹ்ம்... எனக்கு செம்புள்ளி குத்தி விட்டே... அப்ப ஒனக்குப் பழக்கம் இருக்காது... இப்பத்தான் பழகி இருப்பியே...

மோகினி அழுதாள். கையெடுத்துக் கும்பிட்டாள்.

……சந்திரன் என்னால உங்களைக் கொல்ல முடியல்லே. அதனால கும்பிடறேன். என்னை விட்டுடுங்க. துபாய்லேர்ந்து நான் சாகாம வந்ததுக்குக் காரணமே சுகுமார் கூட வாழணும்னு தான். அவர்கிட்ட எனக்கு இருக்கிற காதலாலத்தான், பிரியத்தாலத்தான் திரும்பி வந்தேன். நடந்தது எல்லாம் கெட்ட கனவுன்னு நெனைச்சி மறந் துட்டேன்

……இன்னொரு கெட்ட கனவுன்னு நெனைச்சிக்கயேன் மோகினி. இங்க மேனகால ரூம் போடறேன். ஏ.ஸி. ரூம். நாளைக்கு காலைல பதினோரு மணிக்கு வந்துடு. இல்லன்னா பன் னெண்டு மணிக்கு நான் உன் வீட்டுக்கு வந்துடுவேன். துபாய்ல நீ என்ன பண்ணினேன்னு சுகுமார் கிட்ட சொன்னேன்னு வச்சிக்க...

……நான் மேனகாவுக்கு வரேன்

……கர்ப்பூர புத்திம்மா உனக்கு

மோகினி எதிர்பார்க்கவே பார்க்காதது இது. என்ன செய்வது? தூக்கில் தொங்குவதா? இல்லை, அப்பா மாதிரி தூக்க மாத்திரை சாப்பிடுவதா? சுகுமார் தாங்கமாட்டான். அவள் அவனை விட்டுப் பிரிவதையும் தாங்க மாட்டான். அவள் எச்சில் படுத்தப்பட்ட தையும் தாங்க மாட்டான்.

……ஏய்...

……......

……ஏய்... மோகினி

……ம்?

……என்ன ஆச்சி, கண்ணம்மா? ஏன் ஒரு மாதிரி இருக்கே?

… …ஒண்ணும் இல்ல

……நீ ஒண்ணும் இல்லன்னு சொல் றதிலயே ஏதோ இருக்குன்னு தெரியுது மோகினி. உடம்பு சரியில்லையா? ஏய்... என்ன இது? ஏன் வந்து இப்படிக் கட்டிப் பிடிக்கறே? எதுக்கு இப்ப அழறே? என்ன ஆச்சிடா?

avatar
Guest
Guest

PostGuest Wed Jan 14, 2009 3:04 am

கதவு தட்டப்படும் ஒலிகேட்டு உடனே கதவைத் திறந்தான் சந்திரன். உள்ளிருந்து வெள்ளமாகப் பொங்கிய, ஊற்றாகக் குபு குபுவென்று பீறிட்ட குளிர்காற்று வெளியே பாய்ந்து மோகினியை அணைத்தது.

மோகினியைப் பார்த்தவுடன் அவன் முகம் மலர்ந்தது.

கண்கள் உதடுகள் எல்லாம் சிரித்தன. காமம் உடல் முழுக்க ஆக்கிர மிக்க, கண்கள் சொக்க, ……வா... மோகினி... என்றான்.

மோகினி உள்ளே நுழைந்தாள்.

……என்ன சாப்பிடறே? பாதாம் கீர்? மில்க் ஷேக்? ஐஸ்க்ரிம்? எது வே ணும்னு சொல்லு. துபாய் ஷேக்குக்கு மேல நானுன்னு உனக்குக் காட்றேன்

……கதவு தட்டப்பட்டது

……ஹோட்டல் ஆளே வந்துட்டான். பாதாம்கீரே சொல்றேன். நல்லா ஜில்லுன்னு... என்ன? என்றபடி கதவைத் திறந்தான்.

அவனைத் தள்ளிக் கொண்டு சுகுமார் உள்ளே நுழைந்தான்.

……என்ன சந்திரன்? எப்படி இருக்கே?

……நீ.... நீங்க?

……மோகினியோடத்தான் வந்தேன். கீழ கடைல கிரிட்டிங் கார்ட்ஸ் எல்லாம் வித்தியாசமா இருந்தது. பாத்துட்டு வந்துடலாமேன்று நின்னேன். அவ்வளவுதான். ட்ராவல் ஏஜென்ஸி எல்லாம் ஜோரா நடக்குதா? ஒனக்கென்ன? நெறைய கமிஷன் கிடைக்கும். ராஜா மாதிரி இருப்பே. என் பொண்டாட்டியைத் தனியா வரச் சொன்னியாமே? என்ன விஷயம்?

…… அது... அது வந்து

……நான் ஒண்ணு சொல்றேன் கேளு. சதி அனுசுயா கதை தெரியுமா? மும்மூர்த்திங்களும் அவகிட்ட வந்து அவளோட பதிவிரதா தர்மத்தைச் சோதிக்கணும்னு நிர்வாணமா சாப்பாடு போடச் சொன்னாங்க. அனுசுயா நெஜமாவே பதிவிரதை. மூணு பேரையும் குழந்தைங்களாக்கிட்டா. மும்மூர்த்திகளோட பசியாத்தினா. இன்னிக்கும் அனுசுயா பதிவிரதை தான். அது மாதிரித்தான் என் மோகினி யும்.

இதை நான் சத்தியமாச் சொல்றேன். பெருமையோட சொல்றேன். எம் பொண்டாட்டி அனுசுயாவுக்கு ஒரு படி மேல. என்னைக் காப்பாத்தறதுக்காக அப்படிப் பண்ணினா

மோகினி குலுங்கி உடைந்தாள்.

சுகுமாரின் மார்பில் அடைக்கலமானாள்.

அவளைத் தன்னுடன் அணைத்துப் பிடித்துக்கொண்டு சுகுமார், சந்திரனை நிமிர்ந்து பார்த்தான்.

……அவசியமான நேரத்தில உதவி பண்ணினே, இல்லேங்கலே, அதுக்கு தாங்க்ஸ். ஆனா என் மாணிக்கக்கல்லைப் போய் சாதாரண கண்ணாடிக் கல்லா நெனைச்சிட்டியே. அந்தத் தப்பை இன்னொரு தடவை பண்ணாதே, வரோம்.

சந்திரன் திகைத்துப் போய் வெறித்தான்.

சுகுமார், மோகினியுடன் அந்த அறையிலிருந்து சரேலென வெளிப் பட்டு படியிறங்கினான்.

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக