ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» நீருக்கடியில் மேஜிக்
by சக்தி18 Today at 8:43 pm

» வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Today at 8:04 pm

» சாதம் எப்படி சாப்பிடவேண்டும்...???
by ayyasamy ram Today at 8:01 pm

» வால் முளைத்த இளைஞன்… மேஜிக்கல் ரியலிச தமிழ்ப் படம்!
by ayyasamy ram Today at 7:52 pm

» ஆர்யாவின் “சார்பட்டா பரம்பரை” திரைப்படத்தின் பெர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 7:48 pm

» நயன் புடவை… நயன் ஜுவல்லரி… நயன் மூக்குத்தி!
by ayyasamy ram Today at 7:47 pm

» லாக்டவுனுக்குப் பிறகு தியேட்டர்களின் நிலை?
by ayyasamy ram Today at 7:42 pm

» "என்கிட்ட 20 ரூபாய் தான் இருக்கு, வரலாமா?" ஆட்டோ ஓட்டுநரிடம் கேட்ட முன்னாள் எம்.எல்.ஏ!
by Dr.S.Soundarapandian Today at 7:24 pm

» ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டி: இந்தியா 11 ரன்னில் அசத்தல் வெற்றி
by ayyasamy ram Today at 7:13 pm

» யுடியூப்’ ஒளிஅலையைத் தொடங்கும் விஜய்
by ayyasamy ram Today at 6:58 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் சபையில் சுற்றி மழை நீர் சூழ்ந்துள்ளது
by ayyasamy ram Today at 6:51 pm

» ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்; யார் அந்த அர்ஜுனமூர்த்தி?
by ayyasamy ram Today at 6:42 pm

» ஒரு டி.எம்.சி என்றால் என்ன?
by T.N.Balasubramanian Today at 6:28 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 5:58 pm

» ஞானமடா நீயெனக்கு
by ayyasamy ram Today at 5:10 pm

» ஆகாயம் தாண்டி வா..
by ayyasamy ram Today at 5:07 pm

» சே குவேரா புரட்சியாளர் ஆனது எப்படி
by Guest Today at 1:59 pm

» ஐதராபாத் மாநகராட்சியை கைப்பற்றுகிறது பா.ஜ.,!
by ayyasamy ram Today at 1:40 pm

» உங்களுக்கு வெட்னரி டாக்டர்தான் சரிப்படு வரும்!
by ayyasamy ram Today at 1:37 pm

» சிவில் இஞ்சினியர்களுக்கு ஊரக வளர்ச்சித் துறையில் வேலை
by ayyasamy ram Today at 12:42 pm

» தமிழகம், புதுச்சேரியில் கனமழை தொடரும்- வானிலை ஆய்வு மையம்
by ayyasamy ram Today at 11:22 am

» 'கண்ணதாசன் எனும் மாபெரும் கவிஞன்' நுாலிலிருந்து:
by kandansamy Today at 10:04 am

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (341)
by kandansamy Today at 9:57 am

» எங்கும் தமிழ்
by kandansamy Today at 9:42 am

» ஆறு வித்தியாசம் கண்டுபிடி!
by kandansamy Today at 9:29 am

» தெற்கு அந்தமானில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது
by T.N.Balasubramanian Today at 8:36 am

» தமிழ் புத்தகம் படிக்க ஆங்கில வேண்டுதல் ஏன் ?
by T.N.Balasubramanian Today at 8:30 am

» அமெரிக்காவை கலக்கி வரும் தமிழக ரசம்
by ayyasamy ram Today at 8:29 am

» சாதனை சிறுமி கீதாஞ்சலி 'டைம்' பத்திரிகை தேர்வு
by ayyasamy ram Today at 8:23 am

» ஐகோர்ட் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை
by ayyasamy ram Today at 8:20 am

» 80 சதவீத விமானங்களை இயக்க அரசு அனுமதி
by ayyasamy ram Today at 8:17 am

» எச் -1பி விசா கட்டுப்பாடுகள் ரத்து: இந்தியர்கள் நிம்மதி பெருமூச்சு
by ayyasamy ram Today at 8:08 am

» டிச., இறுதியில் கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி
by ayyasamy ram Today at 7:57 am

» இனி கத்தியின்றி வலியின்றி இறைச்சி கிடைக்கும்: புதிய தொழில்நுட்பம்!
by ayyasamy ram Today at 7:54 am

» 'புரெவி' அச்சத்தில் கேரளா; அனைத்து ஏற்பாடுகளும் தயார்
by ayyasamy ram Today at 7:47 am

» சிறந்த ஆசிரியராக தேர்வான இந்தியருக்கு ரூ.7.50 கோடி பரிசு!
by ayyasamy ram Today at 7:33 am

» ஆலோசனை
by Guest Today at 7:29 am

» உங்ககுழந்தைகள்மீது உங்களுக்கு கொள்ளைப்பிரியமா?..இதை செய்யுங்க...
by krishnaamma Yesterday at 10:01 pm

» வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை !
by krishnaamma Yesterday at 9:58 pm

» டாக்டர் ராஜேந்திரப் பிரசாத் - டிசம்பர் 03 !
by krishnaamma Yesterday at 9:53 pm

» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV
by krishnaamma Yesterday at 9:48 pm

» பெரியவா அருள் வாக்கு !
by krishnaamma Yesterday at 9:47 pm

» சின்ன சின்ன கதைகள் :)
by krishnaamma Yesterday at 9:38 pm

» மனமே பிரச்சினை !
by krishnaamma Yesterday at 9:17 pm

» பாம்பாட்டி சித்தர் !
by krishnaamma Yesterday at 9:15 pm

» வாட்ஸ் அப் டிரெண்டிங்
by ayyasamy ram Yesterday at 9:10 pm

» சிவபெருமான் பற்றிய 133 தகவல்கள்.....
by krishnaamma Yesterday at 9:10 pm

» ஈஸ்வர சங்கல்பம்!...by Krishnaamma :)
by krishnaamma Yesterday at 9:00 pm

» ஆன்மிகம்- சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» ருத்ராட்சம் அணிய தகுதி
by krishnaamma Yesterday at 8:41 pm

Admins Online

சேலைப் புற்றுநோய்

Go down

சேலைப் புற்றுநோய் Empty சேலைப் புற்றுநோய்

Post by சிவா on Wed Feb 01, 2012 10:59 am

காலம் மிக வேகமாக மாறுகிறது. எல்லா துறைகளிலும் ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளது. பழமையில் இருந்து புதுமையின்கீழ் எல்லா துறைகளும் வந்துவிட்டது. மாற்றம் என்பது நிலையானது என்று கூறுகிறோம். ஆனால், எல்லா விஷயங்களிலும் மாற்றத்தை காணும் இந்த உலகில், தென் மாநில பெண்களின் உடைகளில் மட்டும் வெகுகாலமாக எந்தவித மாற்றத்தையும் காணவில்லை. ஆம்! நமது பெண்கள் அணியும் சேலை விஷயம்தான் அது. அவர்கள் அணியும் ஜாக்கெட்டில் வேண்டுமானால், ஒருசில மாற்றங்கள் வந்திருக்குமே தவிர, பாவாடை, சேலையில் எந்தவித மாற்றமும் வரவில்லை.

இந்த பாவாடை, சேலைக்கென ஒரு பாரம்பரியம் இருக்கிறது. பாட்டி அணிந்த அதே ஸ்டைலில்தான் இனி எங்கள் பேத்தியும் அணிகிறாள், அணியவும் முடியும் என்ற நிலை இருக்கிறது. இந்த சேலை அணியும் முறை வெளிநாட்டு பெண்களையே வெகுவாக கவர்ந்துள்ளது. எல்லோருமே இந்த சேலை அணியும் லாவகத்தை பார்த்து ஆச்சரியப்பட்டு போயிருக்கிறார்கள். தென்னக பெண்களின் பண்பாடு, கலாசாரத்தின் சின்னமாக சேலை விளங்குகிறது. இப்போதுள்ள நாகரீக உலகில், நமது இளம் பெண்கள் சல்வார்கமீஸ், முழுகால் சட்டை உடை அணிந்தாலும், மங்கள நிகழ்ச்சிகளின்போது கண்டிப்பாக சேலை அணிய வேண்டும் என்பதை ஒரு கட்டாயமாக வைத்திருக்கிறார்கள். ஆனால், இவ்வாறு பாவாடை கட்டி, சேலை அணியும் பெண்களுக்கு `சேலை புற்றுநோய்' (சாரி கேன்சர்) என்ற நோய் வரும் அபாயம் இருக்கிறது என்று ஒரு தகவல் எல்லோரையும் அதிர்ச்சியின் எல்லைக்கே கொண்டுபோய்விட்டுள்ளது.

இந்திய மருத்துவ சங்கம் வெளியிடும் ஒரு இதழில், முமëபையில் உள்ள புகழ்பெற்ற மருத்துவ கல்லூரியான கிராண்ட் மருத்துவ கல்லூரி கூடுதல் பேராசிரியர் டாக்டர் ஜி.டி.பக்ஷி தன்னுடன் பணியாற்றும் சக பேராசிரியர்களான டாக்டர் அசோக் டி.பொரிசா மற்றும் டாக்டர் முகுந்த் டி தயாடே ஆகியோருடன் சேர்ந்து எழுதியுள்ள ஒரு கட்டுரையில், இந்த அதிர்ச்சிகரமான தகவல்களை வெளியிட்டுள்ளார். அதிகம் இல்லாவிட்டாலும், 40 வயதுக்கு மேற்பட்ட 3 பெண் நோயாளிகளுக்கு இந்த `சேலை புற்றுநோய்' வந்திருப்பதாக கூறுகிறார்கள். சேலை கட்டுவதற்கு முன்பு, பெண் கட்டும் பாவாடை நாடாவை இறுக்கி கட்டுவதாலும், ஒரே இடத்தில் அந்த முடிச்சுகளை போடுவதாலும், அந்த இடத்தில் முதலில் தழும்புகள் ஏற்பட்டு, பிறகு இடுப்பு `டெர்மாடடோஸ்' என்று கூறப்படும் நோய் ஏற்படுகிறது. இது நாளடைவில் அடிக்கடி ஊரல் ஏற்பட்டு, தொடர்ந்து புற்றுநோய்க்கு வழியை திறந்துவிடுகிறது என்று கூறுகிறார்கள். இதை தவிர்க்க வேண்டுமென்றால், பாவாடை நாடாவை சற்று லூசாக கட்டவேண்டும் என்றும், முடிச்சுகள் போடும் இடத்தை அவ்வப்போது மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும், நல்ல அகலமான பாவாடை நாடாவை பயன்படுத்தலாம் என்றும் கூறுகிறார்கள். பாவாடை கட்டும் இடத்தில் தடுப்போ, நிற மாற்றமோ ஏற்பட்டால், உடனடியாக டாக்டரிடம் செல்லவேண்டும் என்றும் கூறுகிறார்கள்.

பொதுவாகவே நாட்டில் புதிது புதிதாக எத்தனையோ நோய்கள் இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த நோய்களெல்லாம் காலாகாலமாக இருந்தும், இப்போது மேற்கொள்ளப்படும் மருத்துவ பரிசோதனைகளால்தான் கண்டுபிடிக்கப்படுகிறது என்றும் கூறுகிறார்கள். ஆனால், நிச்சயமாக புற்றுநோயால் மரணத்தை தழுவுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது. குழந்தைகளுக்கு தாய்மார்கள் பாலூட்டுவதற்கான வாய்ப்புகள் குறைவதால், மார்பு புற்றுநோய் வருகிறது என்கிறார்கள். நமது வாழ்க்கை முறை, உணவு முறை, புகையிலை பயன்படுத்துதல், சுற்றுசூழல் பாதிப்பு ஆகியவற்றால் புற்று நோய் வருகிறது என்கிறார்கள். இந்த சேலை புற்றுநோய் பற்றி தமிழகத்தில் இருக்கும் தலைசிறந்த புற்றுநோய் சிகிச்சை நிபுணர்களான டாக்டர் சாந்தா மற்றும் டாக்டர் டி.எஸ்.மனோகர், அ.தி.மு.க எமë.பி. டாக்டர் மைத்ரேயன் போன்ற இன்னும் இருக்கும் பல நிபுணர்கள் உடனடியாக ஒரு ஆராய்ச்சியை மேற்கொள்ள வேண்டும். சேலை புற்றுநோய் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று அவர்கள் அறிந்தால், அதை உலகுக்கு தெரிவிக்க வேண்டும். அப்படியானால்தான் படிப்பறிவு இல்லாத பாமர பெண்கள் முதல், `பட்டங்கள் பெற்று பாரினை ஆளவந்த பெண்கள்' உள்பட அனைவரும் இந்த விஷயத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க முடியும். சமூகநலத்துறையும், மக்கள் நல்வாழ்வுத்துறையும் இதற்கான விழிப்புணர்வுகளை ஏற்படுத்த முன்வரவேண்டும்.

தினதந்தி


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

சேலைப் புற்றுநோய் Empty Re: சேலைப் புற்றுநோய்

Post by உதயசுதா on Wed Feb 01, 2012 11:01 am

என்னங்கப்பா பயமுறுத்தரிங்க. அப்படி பார்த்தால் இந்தியாவில் வசிக்கும் கோடிக்கணக்கான பெண்களுக்கு இந்த வியாதி வந்து இருக்கணுமே
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
மதிப்பீடுகள் : 1070

Back to top Go down

சேலைப் புற்றுநோய் Empty Re: சேலைப் புற்றுநோய்

Post by சிவா on Wed Feb 01, 2012 11:03 am

@உதயசுதா wrote:என்னங்கப்பா பயமுறுத்தரிங்க. அப்படி பார்த்தால் இந்தியாவில் வசிக்கும் கோடிக்கணக்கான பெண்களுக்கு இந்த வியாதி வந்து இருக்கணுமே

அதானே! சோகம்


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

சேலைப் புற்றுநோய் Empty Re: சேலைப் புற்றுநோய்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum