புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Yesterday at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தமிழக பட்ஜெட் 2012 - Page 2 Poll_c10தமிழக பட்ஜெட் 2012 - Page 2 Poll_m10தமிழக பட்ஜெட் 2012 - Page 2 Poll_c10 
70 Posts - 48%
ayyasamy ram
தமிழக பட்ஜெட் 2012 - Page 2 Poll_c10தமிழக பட்ஜெட் 2012 - Page 2 Poll_m10தமிழக பட்ஜெட் 2012 - Page 2 Poll_c10 
62 Posts - 42%
mohamed nizamudeen
தமிழக பட்ஜெட் 2012 - Page 2 Poll_c10தமிழக பட்ஜெட் 2012 - Page 2 Poll_m10தமிழக பட்ஜெட் 2012 - Page 2 Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
தமிழக பட்ஜெட் 2012 - Page 2 Poll_c10தமிழக பட்ஜெட் 2012 - Page 2 Poll_m10தமிழக பட்ஜெட் 2012 - Page 2 Poll_c10 
4 Posts - 3%
Kavithas
தமிழக பட்ஜெட் 2012 - Page 2 Poll_c10தமிழக பட்ஜெட் 2012 - Page 2 Poll_m10தமிழக பட்ஜெட் 2012 - Page 2 Poll_c10 
1 Post - 1%
bala_t
தமிழக பட்ஜெட் 2012 - Page 2 Poll_c10தமிழக பட்ஜெட் 2012 - Page 2 Poll_m10தமிழக பட்ஜெட் 2012 - Page 2 Poll_c10 
1 Post - 1%
prajai
தமிழக பட்ஜெட் 2012 - Page 2 Poll_c10தமிழக பட்ஜெட் 2012 - Page 2 Poll_m10தமிழக பட்ஜெட் 2012 - Page 2 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
தமிழக பட்ஜெட் 2012 - Page 2 Poll_c10தமிழக பட்ஜெட் 2012 - Page 2 Poll_m10தமிழக பட்ஜெட் 2012 - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழக பட்ஜெட் 2012 - Page 2 Poll_c10தமிழக பட்ஜெட் 2012 - Page 2 Poll_m10தமிழக பட்ஜெட் 2012 - Page 2 Poll_c10 
293 Posts - 42%
heezulia
தமிழக பட்ஜெட் 2012 - Page 2 Poll_c10தமிழக பட்ஜெட் 2012 - Page 2 Poll_m10தமிழக பட்ஜெட் 2012 - Page 2 Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
தமிழக பட்ஜெட் 2012 - Page 2 Poll_c10தமிழக பட்ஜெட் 2012 - Page 2 Poll_m10தமிழக பட்ஜெட் 2012 - Page 2 Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
தமிழக பட்ஜெட் 2012 - Page 2 Poll_c10தமிழக பட்ஜெட் 2012 - Page 2 Poll_m10தமிழக பட்ஜெட் 2012 - Page 2 Poll_c10 
26 Posts - 4%
sugumaran
தமிழக பட்ஜெட் 2012 - Page 2 Poll_c10தமிழக பட்ஜெட் 2012 - Page 2 Poll_m10தமிழக பட்ஜெட் 2012 - Page 2 Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
தமிழக பட்ஜெட் 2012 - Page 2 Poll_c10தமிழக பட்ஜெட் 2012 - Page 2 Poll_m10தமிழக பட்ஜெட் 2012 - Page 2 Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தமிழக பட்ஜெட் 2012 - Page 2 Poll_c10தமிழக பட்ஜெட் 2012 - Page 2 Poll_m10தமிழக பட்ஜெட் 2012 - Page 2 Poll_c10 
6 Posts - 1%
prajai
தமிழக பட்ஜெட் 2012 - Page 2 Poll_c10தமிழக பட்ஜெட் 2012 - Page 2 Poll_m10தமிழக பட்ஜெட் 2012 - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Kavithas
தமிழக பட்ஜெட் 2012 - Page 2 Poll_c10தமிழக பட்ஜெட் 2012 - Page 2 Poll_m10தமிழக பட்ஜெட் 2012 - Page 2 Poll_c10 
4 Posts - 1%
manikavi
தமிழக பட்ஜெட் 2012 - Page 2 Poll_c10தமிழக பட்ஜெட் 2012 - Page 2 Poll_m10தமிழக பட்ஜெட் 2012 - Page 2 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழக பட்ஜெட் 2012


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 26, 2012 12:59 pm

First topic message reminder :

தமிழக பட்ஜெட் 2012 - Page 2 Gallerye_122027335_435108

சென்னை: தமிழக பட்ஜெட் இன்று காலை சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. அடிப்பøடை கட்டமைப்பு, கல்வி, சுகாதாரத்திற்கு முன்னுரிமை என பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. வி.ஏ.,ஓ.,க்களுக்கு லேப்டாப் வழங்குதல், பயிர்க்ககடனுக்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு , 1 முதல் 10 ம் வகுப்பு வரையிலான பள்ளி குழந்தைகளுக்கு விலையில்லா நோட்டு புத்தகம் வழங்கப்படும், இதற்கு அரசுக்கு ரூ. 150 கோடி இழப்பு ஏற்படும் என்றும் , இது வரை இல்லாத அளவிற்கு கல்வித்துறைக்கு ரூ. 14 ஆயிரத்து 552 கோடி ஒதுக்கப்படுகிறது என்றும் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்த பட்ஜெட்டில் அறிவித்தார். சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் முன்னதாக அறிவிப்பு வெளியானதற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க,. எம்,எல்.ஏ.,க்கள் வெளிநடப்பு செய்தனர்.

பட்ஜெட் கூட்டம் துவங்கியதும் தமிழக முதல்வருக்கு பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்து பன்னீர்செல்வம் பேசுகையில்: தமிழக அரசு பொறுப்பேற்றது முதல் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. முதல்வர் ஜெ.,தயாரித்துள்ள தொலைநோக்கு திட்டம் வழிகாட்டுதலின்படி இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது என்றார்.

தொடர்ந்து அவர் வெளியிட்ட அறிவிப்புகள் விவரம் வருமாறு: வரும் நிதி ஆண்டில் பொருளாதார வளர்ச்சி விகிதம் 9. 3 சதமாக இருக்கும். அதன்படி அடிப்படை கட்டமைப்பு மேம்பாட்டுக்கு ரூ. ஆயிரம் கோடி ஒதுக்கப்படுகிறது. தனிநபர் வருமானத்தை பெருக்கிட முக்கிய வழிமுறை காணப்படும். ஏற்றத்தாழ்வுகளை களைந்திட சுகாதாரம், கல்வி, உள்ளிட்ட பின்தங்கிய பகுதிகளை கண்டறிந்து சீரான வளர்ச்சி அடைய 100 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது. 12 ம் திட்ட நிதியை 1.85 லட்சம் கோடியை 2 லட்சம் கோடியாக உயர்த்தப்படுகிறது.

ஆதிதிராவிட மற்றும் கிராமப்புற வறுமையை களைந்திட கூடுதல் நிதி ஒதுக்கீடு, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார திட்டம் துவக்கப்படும். பெண்கள், மாற்றுத்திறனாளிக்கு முன்னுரிமை வழங்கப்படும் இந்த திட்டத்திற்கு ரூ. 200 கோடி ஒதுக்கப்படுகிறது. இளைஞர்களின் வேலை வாய்ப்பு பெருக்கிட தனியார் நிறுவன துணையுடன் புதிய திட்டம் செயல்படுத்த ரூ.. 193 .2 லட்சம் ஒதுக்கப்படுகிறது. மின் ஆளுமைக்கு புதிய கொள்கை விரைவில் வெளியிடப்படும், வருவாய், பதிவு, சமூக, வேலை வாய்ப்பு ஊரக துறைகளில் ஒட்டுமொத்த கணினி மையம் கொண்டு வரப்படும்.

ஒரு லட்சம் பேருக்கு வீட்டு மனை பட்டா : * நகர்ப்புற மையங்களில் பொதுச்சேவை மன்றங்கள் அமைக்கப்படும், ஒரு லட்சம் பட்டாமனை வழங்க திட்டம்

* மடிக்கணினி வரும் ஆண்டில் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு வழங்கப்படும்

* சட்டம் ஒழுங்கு முக்கிய குறிக்கோள் ஆகும். கடந்த 10 மாதங்களில்சட்டம் ஒழுங்கு சிறப்பாக பேணப்பட்டுள்ளது. முதல்வர் இதில் முழு உறுதி யாக உள்ளார். நில அபகரிப்பு தொடர்பான வழக்குகள் மூலம் 724 கோடிக்கும் மேலான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஒப்படைக்கப்பட்டுள்ளது. காவலர் குடியிருப்பு வசதிகள் 100 சதம் நிறைவேற்றப்படும்

* ரோந்து படை உயர்த்தப்படும்

* தீயணைப்பு நிலையங்கள் மேம்படுத்திட 197.58 கோடி ஒதுக்கீடு

* வேளாண்உற்பத்தி 120 லட்சம் டன் உற்பத்தி இலக்கு

* இ, செல்லான் திட்டம் விரிவாக்ககம்

* ஓட்டுனர் பயிற்சி பள்ளிக்கு ரூ. 15 கோடி

* வேளாண்மை துறைக்கு 3 ஆயிரத்து 804 கோடி ஒதுக்கீடு

* வேளாண் பன்முனைத்திட்டம் அறிமுகம்

*உரம் குறைந்த விலையில் வழங்கிட ஏற்பாடு : விசாயிகளுக்கு வழங்கப்படும் உரத்தை குறைந்த விலையில் வழங்கிட இணையத்திற்கு 150 கோடி உயர்த்த வழங்கப்படும்

* பயிர்க்கடன் இலக்கு 4ஆயிரம் கோடி

* கால்நடை துறைக்கு 816. 3 கோடியாக உயர்த்துதல்

* மீனவர்கள் நிவாரண தொகை தொடர்ந்து வழங்ப்படும்

* வெள்ளாடுகள் வழங்குவதற்கு ரூ. 244 கோடி ஒதுக்கீடு

* பயிர்காப்பீட்டு திட்டம்

*சூரிய ஒளி மின்சக்தி பூங்காக்கள் : அணை பராமரிப்புக்கு ரூ. 745 கோடி

* சென்னை பள்ளிக்கரணையில் சதுப்பு நிலக்காடு மேம்படுத்த திட்டம்

* வடக்கு சென்னை துறைமுகம் இணைக்கும் திட்டம்

* தொழில் முனைவோர் ஆயிரம் பேருக்கு பயிற்சி வழங்கிட 100 கோடி முதலீட்டு மாநியம்

* திருப்பூர் கழிவு நீர் வெளியேற்றத்தில் புதிய திட்டங்கள்

* யானை தடுப்பு அகழிகள்

* 100 கோடி செலவில் பிளாஸ்டிக் சாலைகள்

* சூரிய மின் ஒளி கொண்ட பசுமை வீட்டுக்கு மேலும் 60 ஆயிரம் வீடுகள் அமைக்க ரூ. 150 கோடி செலவு

* மின் உற்பத்தியை பெருக்கிட சூரிய ஒளி மின்சக்தி பூங்காக்கள் அமைக்கப்படும்

* சூரிய மின் உற்பத்திகள் ஊக்குவிக்கப்படும்

* மின் சேமிப்பு நோக்கில் சி,எல்.எப்.,பல்புகள் வழங்கப்படும்

* ஸ்ரீரங்கம், பழநி திருக்கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கப்படும்.

தினமலர்



தமிழக பட்ஜெட் 2012 - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 27, 2012 12:56 am

அம்மா அம்மா என்ற அர்ச்சனையே பட்ஜெட்டில் அதிகம் இருந்தது: கருணாநிதி

2012-13ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தமிழக நிதி அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் இன்று சட்டசபையில் தாக்கல் செய்தார். அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் சரியாக காலை 10 மணிக்கு பட்ஜெட் உரையை வாசிக்க தொடங்கி மதியம் 12.56 மணிக்கு முடித்தார்.

அதாவது 2 மணி 56 நிமிட நேரம் அவர் நின்று கொண்டே பட்ஜெட் உரையை படித்தார். பட்ஜெட் உரை முடிந்ததும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா உள்பட அனைத்து உறுப்பினர்களும் மேஜையை தட்டி வரவேற்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் அண்ணா அறிவாலயத்தில் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி பதில் அளிக்கையில்,

தமிழக பட்ஜெட் அறிவிப்பில் அம்மா அம்மா என்ற அர்ச்சனையே மேலோங்கி இருந்தது. உரையைத் தொடங்கியது முதல் முடிக்கும் வரை நின்று கொண்டே இருந்த நிதி அமைச்சர் பன்னீர் செல்வம்தான் பாவம் என பதிலளித்தார்.

மேலும் பட்ஜெட் விவாததத்தில் தி.மு.க.வின் நிலை என்ன என்பது தெரியவரும் எனவும் கூறினார்.

முன்னதாக சட்டசபையில் பேச, சபாநாயகர் அனுமதி வழங்க மறுத்ததையடுத்து மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தது குறிப்பிடத்தக்கது.

மாலைமலர்



தமிழக பட்ஜெட் 2012 - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 27, 2012 12:57 am

"அதிகமாக வரிபோட்டிருக்கலாம்':கருணாநிதி

பட்ஜெட் குறித்து தி.மு.க., தலைவர் கருணாநிதி பேட்டி:பட்ஜெட்டில் 1,500 கோடி ரூபாய்க்கு வரி போட்ட பிறகாவது, நம்முடைய மக்களுக்கு தாங்கள் செய்த தவறை உணரக்கூடிய நிலைமை வரும் என்றால், இன்னும் கூட அதிகமாக வரி போட்டிருக்கலாம். பட்ஜெட்டிற்கு சில எதிர்க்கட்சிகள் எதிர்ப்பைத் தெரிவித்திருக்கிறார்கள். ஆனால், டில்லியிலே எதிர்க்கட்சியாக இருப்பவர்கள் தெரிவிக்கிற அளவுக்கு, இங்கே அவர்களால் தெரிவிக்க முடியவில்லை.



தமிழக பட்ஜெட் 2012 - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 27, 2012 12:57 am

ரூ.1,500 கோடிக்கு வரி அதிகரிப்பு புரியாத புதிர் : விஜயகாந்த்

சென்னை :""பட்ஜெட் அறிக்கை தாக்கல் என்பது ஆண்டுதோறும் நடக்கும் சம்பிரதாயம் ஆகிவிட்டதே தவிர, மக்கள் சொந்த காலில், நிற்கும் அளவிற்கு அவர்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்த பொருளாதார கொள்கைகள் பின்பற்றப்படுவதில்லை'' என பட்ஜெட் குறித்து தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:மாநிலத்திற்கு கிடைக்கும் வருவாயை விட செலவு குறையும் என்றும், 2,376 கோடி ரூபாய், மிச்சம் ஆகும் என்றும் பட்ஜெட் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படியிருக்கும் போது, கூடுதல் வருவாயை திரட்டுவதற்காக, 1,500 கோடி ரூபாய்க்கு மேல் ஏன் வரிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன என்பது புரியாத புதிராகவே உள்ளது. ஏற்கனவே பால், பஸ் கட்டண உயர்வால் அவதிப்படும் மக்களுக்கு குறைந்தபட்சம் கட்டண சலுகையாவது அளித்திருக்கலாம்.

சீரடைந்தது ஓரளவுக்குதானா: பஸ் கட்டணத்தை உயர்த்திய பிறகும், போக்குவரத்து கழகங்களின் நிதி நிலைமை ஒரளவுதான் சீரடைந்துள்ளது என்றும், மேலும் அரசின் உதவி இந்நிறுவனங்களுக்கு தேவைப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பஸ் கட்டண உயர்வால் எவ்வளவு வருவாய் கிடைத்தது என்ற விவரமும் தெரிவிக்கப்படவில்லை. யானை வரும் முன்னே, மணியோசை வரும் என்பது போல் பட்ஜெட் அறிவிப்புக்கு பிறகு மின் கட்டண உயர்வு வர இருக்கிறது. சொத்து வரியை சீரமைப்பதற்கு வாரியம், அமைக்கப்போவதாக அறிவித்துள்ளதால் சொத்து வரி உயரும் என்று எதிர்பார்க்கலாம்.ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாதுகடந்தாண்டு பட்ஜெட்டில் அறிவித்த திட்டங்கள் கூடுதல் நிதி ஆதாரத்தோடு, இந்த ஆண்டும் தொடர்கிறது. ஒரு சில மக்கள் நலத்திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. மொத்தத்தில், அரசின் பட்ஜெட் அறிக்கை என்பது ஆண்டுதோறும் நடக்கும் சம்பிரதாயம் ஆகிவிட்டதே தவிர மக்கள் சொந்த காலில், நிற்கும் அளவிற்கு அவர்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் வகையில், சரியான பொருளாதார கொள்கை பின்பற்றப்படவில்லை. ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது என்பதையே இந்த பட்ஜெட் நினைவூட்டுகிறது.இவ்வாறு விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.



தமிழக பட்ஜெட் 2012 - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 27, 2012 12:58 am

ரூ.1,15,350 கோடி கடன்: நிதித் துறை செயலர் அறிவிப்பு

தற்போது தமிழக அரசுக்கு, 1 லட்சத்து 15 ஆயிரத்து 350 கோடி ரூபாய் கடன் உள்ளது, என, நிதித் துறைச் செயலர் சண்முகம் தெரிவித்தார்.

தமிழக அரசின் பட்ஜெட் குறித்து, அதை தயாரித்த நிதித் துறைச் செயலர் சண்முகம் மற்றும் நிதித் துறை அதிகாரிகள் அளித்த விளக்கம்:இந்த பட்ஜெட்டில், முதன்மை துறைக்கும், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. வறுமை ஒழிப்பு, திறன் மேம்பாடு ஆகியவற்றுக்கும் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. வழக்கமான நலத்திட்டங்கள் தவிர, கடன்களை கண்காணித்து கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.நடப்பு ஆண்டு பட்ஜெட்டில், வருவாய் உபரி 172 கோடி ரூபாயாக இருக்கும் என, மதிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், தற்போது 536 கோடியாக வருவாய் உபரி உள்ளது. வரும் ஆண்டுக்கு, 2,376 கோடி ரூபாய் வருவாய் உபரி இருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. நிதிப் பற்றாக்குறையை பொறுத்தவரை, 19 ஆயிரத்து 832 கோடி ரூபாயாக இருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. இது, 13 நிதிக் கமிஷன் நிர்ணயித்துள்ள விதிகளுக்கு உட்பட்டே உள்ளது.

புதிய திட்டங்களுக்காக, 4,000 கோடி ரூபாயும், ஏற்கனவே உள்ள திட்டங்களைத் தொடர, 6,000 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது. அரசின் வருவாய்க்கு பெரிதும் உதவியாக இருப்பது, வணிக வரித் துறை தான். மாநில அரசின் சொந்த வரி வருவாயில், 76 சதவீதம் வணிக வரிகள் மூலம் வருகிறது. இது தவிர, 24 சதவீதம், மத்திய வரிகள் மற்றும் மானியங்கள் மூலம் வருகிறது.கடன்களை பொறுத்தவரை, 2011-12ல், 1 லட்சத்து 18 ஆயிரத்து 610 கோடியாக இருக்கும் என, மதிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், தற்போது 1 லட்சத்து 15 ஆயிரத்து 350 கோடி கடன் உள்ளது. வரும் ஆண்டு முடிவில், 1 லட்சத்து 35 ஆயிரத்து 60 கோடி ரூபாயாக கடன் இருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.பதிவுத் துறையில், பத்திரப்பதிவில் 1 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளதால், வருவாய் இழப்பு இருக்கும் என்றாலும், அதிகளவில் பதிவுகள் நடக்கும். மேலும், வழிகாட்டி மதிப்பீடுகள் ஏப்ரல் 1ம் தேதியில் இருந்து அமலுக்கு வருவதால், 600 கோடி ரூபாய் கூடுதலாக வருவாய் கிடைக்கும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.



தமிழக பட்ஜெட் 2012 - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 27, 2012 1:00 am

அறிவிப்புகளே இல்லாத ஒரே துறை... அதுதான் உயர்கல்வித் துறை...!

தமிழக பட்ஜெட்டில், பல்வேறு துறைகளிலும் புதிய அறிவிப்புகள், அரசின் கொள்கை முடிவுகள் பல இடம் பெற்றுள்ள நிலையில், பிரச்னைகள் மலிந்துள்ள உயர்கல்வித் துறையில் மட்டும் ஒரு சின்ன அறிவிப்பு கூட கிடையாது. "எதுவுமே இல்லாததைப் பார்த்தால், உயர்கல்வித் துறையை தனியார்மயமாக்குவதற்கு அரசு ஊக்குவிப்பது போல் உள்ளது' என, ஆசிரியர் சங்கங்கள் புகார் தெரிவித்துள்ளன.

பழைய திட்டங்கள் தான்: பட்ஜெட்டில், 58, 59வது பக்கங்களில், மொத்தமே இரு பத்திகளாக உயர்கல்வித் துறை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. அதில், 2011-12ல் 11 புதிய கலை, அறிவியல் கல்லூரி துவங்கப்பட்டது குறித்தும், தேனி மாவட்டம், போடிநாயக்கனூரில் புதிய பொறியியல் கல்லூரி மற்றும் ஸ்ரீரங்கத்தில், தேசிய தகவல் தொழில்நுட்ப நிறுவனம், தேசிய சட்டப் பள்ளி ஆகியவற்றை அமைப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக, எவ்வித அறிவிப்புகளும் இடம் பெறவில்லை. குறிப்பாக, உயர்கல்வித் துறைக்கான நிதி ஒதுக்கீடு குறித்தும் அறிவிப்பு இல்லை.

பல்கலைக் கழக ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலர், பிச்சாண்டி கூறியதாவது: ஒன்று, இரண்டு என விரல் விட்டு எண்ண முடியாத அளவிற்கு, உயர்கல்வித் துறையில் ஏராளமான பிரச்னைகள் இருக்கின்றன. பல்கலைக் கழக மானியக்குழு, பேராசிரியர்கள் 65 வயது வரை பணியாற்றலாம் என கூறியுள்ளது. இதைப் பற்றி, தமிழக அரசின் நிலைப்பாடு என்ன என்பதை இதுவரை அறிவிக்கவில்லை. பட்ஜெட் என்றாலே, அறிவிப்புகள் தான் நினைவுக்கு வரும். அதன்படி, புதிய கல்லூரிகள் குறித்த அறிவிப்பை எதிர்பார்த்தோம். ஒன்று கூட அறிவிப்பு இல்லை. தனியார்மயத்தை அரசு ஊக்குவிப்பது போல் தெரிகிறது.இவ்வாறு பிச்சாண்டி கூறினார்.

எதிர்பார்த்தவை: அரசு கலை, அறிவியல் கல்லூரி மற்றும் அரசு உதவி பெறும் கலை, அறிவியல் கல்லூரிகளில் ஆயிரக்கணக்கான ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்புவது, ஐந்து அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக் கழகங்களை, சென்னை அண்ணா பல்கலையுடன் இணைத்ததை அடுத்து, அரசு அடுத்து மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து எதுவும் அறிவிக்கப்படவில்லை.மேலும், வேலூர் திருவள்ளுவர் பல்கலை, சென்னையில் உள்ள தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக் கழகம், விளையாட்டு பல்கலைக் கழகம், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை, மதுரை காமராஜர் பல்கலை, அன்னை தெரசா மகளிர் பல்கலைக் கழகம் (கொடைக்கானல்), கல்வியியல் கல்லூரி பல்கலைக் கழகம் ஆகிய ஏழு பல்கலைக் கழகங்களில் காலியாக உள்ள துணைவேந்தர் பணியிடங்களை நிரப்பும் விவகாரம் என, எதுவுமே பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. உயர்கல்வித் துறையை மேம்படுத்தும் வகையில், எவ்வித திட்டங்களும் இடம்பெறாதது, கல்லூரி ஆசிரியர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

தனியாருக்கு ஊக்கம்? தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகத்தின் முன்னாள் செயலர், பழனி கூறியதாவது:அரசு உதவி பெறும் கலை, அறிவியல் கல்லூரிகளில் மட்டும் 4,000 ஆசிரியர் பணியிடங்கள் காலி. அரசு கலை, அறிவியல் கல்லூரிகளிலும் அதிகமான ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. ஏற்கனவே, 1,060 ஆசிரியர்களை நியமனம் செய்யப்போவதாக அறிவித்தனர். ஆனால், எந்த முறையில் நியமனம் இருக்கும் என, இதுவரை அறிவிக்கவில்லை.ஆசிரியர் நியமனம், புதிய கல்லூரிகள் உள்ளிட்ட பல அறிவிப்புகளை எதிர்பார்த்தோம். ஆனால், எதுவுமே இடம்பெறாதது ஏமாற்றம் அளிக்கிறது. அரசின் நடவடிக்கைகள், உயர்கல்வித் துறையில் தனியார்மயத்தை ஊக்குவிப்பது போல் உள்ளது.இவ்வாறு பழனி கூறினார்.



தமிழக பட்ஜெட் 2012 - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 27, 2012 1:02 am

இலவசங்களுக்கு மட்டும் ரூ.22,000 கோடி

தமிழக அரசின் பட்ஜெட்டில், இலவச திட்டங்கள் மற்றும் மானியத்துக்கு மட்டும், 22 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் ஒதுக்கப்பட்டுள்ளது. மொத்த வருவாய் வரவில், இது, 22 சதவீதம். இதில், அதிகபட்சமாக இலவச அரிசி மற்றும் ரேஷன் உணவுப் பொருட்களுக்கான மானியமாக, 4,900 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இது தவிர, மருந்து பொருட்கள், கோதுமை, ஓட்ஸ் போன்றவற்றுக்கான வரி ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசின், 2012-13ம் ஆண்டுக்கான, வரவு - செலவு அறிக்கையை, நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று சட்டசபையில் தாக்கல் செய்தார். அதில், மொத்த வருவாய் ஒரு லட்சம் கோடி ரூபாயை தாண்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த வருவாயில், சம்பளங்கள் மற்றும் ஓய்வூதியத்துக்கு மட்டும், 43 சதவீதம் ஒதுக்கப்படுகிறது.இது தவிர, 33 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல், சமூக பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக, இலவச அரிசி மற்றும் மானிய விலையில் பருப்பு வகைகள் போன்றவற்றை வழங்குவதற்காக, 4,900 கோடி ரூபாய் மானியமாக ஒதுக்கப்பட்டுள்ளது. முதியோருக்கு 1,000 ரூபாய் ஓய்வூதியம் வழங்கும் திட்டத்துக்காக, 3,820 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. விவசாயிகள், நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம், குடிசைகளுக்கு மின் சலுகை போன்றவற்றுக்காக, மின் வாரியத்துக்கு மானியமாக வழங்க, 3,069 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.இலவச மிக்சி, கிரைண்டர், மின் விசிறி போன்றவற்றை வழங்க, 2,000 கோடியும், மாணவர்களுக்கு இலவச லேப்-டாப் வழங்க, 1,500 கோடி, பசுமைவீடுகள் திட்டத்துக்கு, 1,200 கோடி என பல்வேறு இலவச திட்டங்களுக்காக மட்டும், 22 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் ஒதுக்கப்பட்டுள்ளது.

புது வரிகள்: பட்ஜெட்டில், 1,500 கோடி ரூபாய் திரட்டும் வகையில், புதிய வரிகளும் விதிக்கப்பட்டுள்ளன. வரும் ஏப்ரல் 1ம் தேதியில் இருந்து, சொத்துகளுக்கான புதிய வழிகாட்டி மதிப்பீடு அமலுக்கு வருவதால், அதிகளவு பதிவுக் கட்டணம் உயரும் என்ற போதிலும், முத்திரைத் தீர்வை கட்டணத்தில், 1 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல, வாகனங்கள் மீதான வரிகள் சீரமைக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், இரு சக்கர வாகனங்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு ஐந்து கோடி ரூபாய்க்கு குறைவாக உள்ள தாவர எண்ணெய் விற்பனைக்கு, மதிப்புக் கூட்டு வரியாக 5 சதவீதம் விதிக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.இது தவிர, பார்கள், ஓட்டல்களில் விற்கப்படும் மதுபான வகைகளுக்கு,14.5 சதவீதம் விற்பனை வரி புதிதாக விதிக்கப்பட்டுள்ளது.எனினும், பல்வேறு பொருட்களுக்கான வரி, இந்த பட்ஜெட்டில் நீக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, தலைக்கவசத்துக்கான, 5 சதவீத வரி முற்றிலும் நீக்கம், சானிடரி நாப்கின்களுக்கான வரி, 14.5 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகக் குறைப்பு, கையால் தயாரிக்கப்படும் பூட்டுகள், பாலூட்டும் புட்டிகள், இன்சுலின் மருந்துகள் ஆகியவற்றின் மீதான, 5 சதவீத வரி முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளது.கோதுமை மீதான, 2 சதவீத வரி, ஓட்ஸ் மீதான, 5 சதவீத வரி போன்றவையும் நீக்கப்பட்டுள்ளன.



தமிழக பட்ஜெட் 2012 - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 27, 2012 1:13 am

தமிழக பட்ஜெட் துணுக்குகள்

நீர்வள மேலாண்மை பணிகளுக்கு ரூ. 3624 கோடி ஒதுக்கீடு

2012-2013-ஆம் ஆண்டிற்கான வரவு- செலவுத் திட்ட மதிப்பீடுகளில், நீர்வள மேலாண்மைப் பணிகளுக்கென இதுவரை இல்லாத உயர் ஒதுக்கீடாக 3, 624.73 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. நீர்வள ஆதாரத்துறையில் உள்ள 66 அணைகளையும், தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிர்மான கழகத்திடம் உள்ள 38 அணைகளையும் உலக வங்கி உதவியுடன், அடுத்த ஆறு ஆண்டு காலத்தில் 745.49 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்த அணைகள் புனரமைப்பு-மேம்பாட்டுத் திட்டம் வரும் 2012-2013-ஆம் ஆண்டிலிருந்து நான்கு கட்டங்களாக செயல் படுத்தப்படும்.

முதல் ஆண்டில், 12 நீர்வள ஆதாரத்துறையில் உள்ள அணைகள் மேம்படுத்தப்படும். இதற்காக இந்த வரவு- செலவுத்திட்ட மதிப்பீட்டில் 50 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. உலக வங்கி உதவியுடன் செயல்படுத்தப்பட்டு வரும் நீர்வள நிலவளத் திட்டத்தில், கூடுதலாக 1.32 லட்சம் ஏக்கர் நிலங்கள் பயன்பெறும் வகையில், அமராவதி உப வடிநிலம் 2012-2013-ஆம் ஆண்டில் சேர்க்கப்பட்டு, 128.31 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

32.9 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன

பசுமைப் பரப்பை அதிகரிக்கும் நோக்கோடு, முதல்-அமைச்சர் பிறந்த நாளையொட்டி, 29.44 கோடி ரூபாய் செலவில் 64 லட்சம் மரக்கன்றுகளை நடும் பெரும் திட்டம் ஒன்றை இந்த அரசு தொடங்கியுள்ளது. இதுவரை 32.9 லட்சம் மரக் கன்றுகள் நடப்பட்டுள்ளன. வரும் நிதியாண்டில், 10,000 எக்கர் பரப்பிலான ஏரிப் பகுதிகளில் 9.80 கோடி ரூபாய் செலவில் வனத் துறை மரங்களை நட்டு பராமரிக்கும். யானைத் தடுப்பு அகழிகள் போன்ற தடுப்பு அரண்களை அமைப்பதற்கான கூடுதல் பணிகள் 2012-2013- ஆம் ஆண்டிலும் மேற்கொள்ளப்படும். இதற்காக இந்த வரவு- செலவு திட்டத்தில் 10 கோடி ரூபாய் நிதிஒதுக்கம் செய்யப்பட்டுள்ளது.

சட்டசபையில் முதல் முறையாக முத்துச்செல்வி

சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற அ.தி.மு.க. எம்.எல்.ஏ. முத்துச்செல்வி சட்டசபை நிகழ்ச்சியில் இன்று முதல் முறையாக கலந்து கொண்டார். முன்னதாக சட்டசபை வாசலில் நின்ற அவர் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வந்ததும் அவருக்கு வணக்கம் தெரிவித்துவிட்டு சட்டசபைக்குள் சென்றார்.

விஜயகாந்த் வரவில்லை

சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் விஜயகாந்த் கடந்த கூட்டத்தொடரின்போது 10 நாள் சஸ்பெண்டு செய்யப்பட்டார். இதில் 3 நாள் மட்டுமே கழிந்து இருந்ததால் இன்றைய சபை நிகழ்ச்சிக்கு வரவில்லை. இதேபோல் சட்டசபை நிகழ்ச்சியை செல்போனில் படம் பிடித்த குற்றச்சாட்டுக்காக 10 நாள் சஸ்பெண்டு செய்யப்பட்டு இருந்த டி.ஆர்.பி. ராஜாவுக்கு சஸ்பெண்டு தண்டனை காலம் 5 நாள் மட்டும் கழிந்து இருந்ததால் அவரும் இன்றைய சபை நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை.

ரூ.25 கோடி செலவில் 2500 வீடுகள்

அரசு இலங்கை அகதி களுக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித் தொகையை பெருமளவில் உயர்த்தி வழங்கி வருகிறது. 2012-2013-ம் ஆண்டில், இத்தகைய உயர்த்தப்பட்ட மாதாந்திர உதவி தொகையை வழங்குவதற்காக வரவு- செலவுத் திட்டத்தில் 60 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இலங்கைத் தமிழர்களின் குழந்தைகள் பி.ஈ., பி.டெக் போன்ற பொறியியல் பட்டப்படிப்புகளில் இணை நுழைவின் மூலம் சேரவும், பட்ட மேற்படிப்புகளான எம்.பி.ஏ., எம்.சி.ஏ., எம்.இ. மற்றும் எம்.டெக் போன்ற படிப்புகளில் சேர்வதற்கும் ஏதுவாக ஒற்றைச்சாளர கலந்தாய்வில் பங்கு கொண்டு பயன்பெறும் வகையில் இந்த கல்வி ஆண்டில் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அகதிகளின் குடும்பங்கள் வாழ்ந்து வரும் தற்காலிக குடியிருப்புகளில் உள்ள சிரமங்களை கருத்தில் கொண்டு நீடித்து நிலைக்கக் கூடிய வீடுகள் படிப்படியாக கட்டித்தரப்படும். 2012-2013-ம் ஆண்டில் தெரிந்தெடுக்கப்பட்ட முகாம்களில் 2,500 வீடுகள் 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும்.

மாற்று திறனாளிகளுக்கு கூடுதல் திருமண உதவித் தொகை

மாற்றுத் திறனாளிகளுக்கான திருமண உதவித் தொகையை, இதர திருமண உதவித் திட்டங்கள் அளவுக்கு உயர்த்தி இந்த அரசு ஆணையிட்டுள்ளது. மேலும் இத்திட்டத்தின் கீழ் போதுமான நிதி ஒதுக்கப்படாத காரணத்தால் பல ஆண்டுகளாக நிலுவையிலிருந்த 3,308 மனுக்கள் அனைத்தையும் உடனடியாக தீர்வு செய்யும் வகையில் 6.75 கோடி ரூபாய் நிதியை அரசு கூடுதலாக ஒதுக்கீடு செய்துள்ளது. அரசு வேலை வாய்ப்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்று விழுக்காடு இட ஒதுக்கீட்டை உறுதி செய்யும் வகையில் அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது.

மேலும் மாற்றுத் திறனாளிகள் எல்லா இடங்களுக்கும் சிரமமின்றி சென்று வர ஏதுவான சூழலை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. 2012-2013-ம் ஆண்டில் மாற்றுத்திறனாளிகளின் நலத்திற்காக 206.12 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

திருநங்கைகள் நல வாரியத்திற்கு ஒரு கோடி

திருநங்கையரின் சமூகப் பொருளாதார முன்னேற்றத்திற்கென திருநங்கையர் நல வாரியத்திற்கு ஒரு கோடி ரூபாய் இந்த ஆண்டு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வரும் நிதியாண்டிலும் இவ்வாரியத்திற்கு நிதி உதவியாக ஒரு கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.

2 மணி 56 நிமிட நேரம் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட்டை வாசித்தார்

அமைச்சர் ஓ.பன்னீர்செல் வம் சரியாக காலை 10 மணிக்கு பட்ஜெட் உரையை வாசிக்க தொடங்கி மதியம் 12.56 மணிக்கு முடித்தார். அதாவது 2 மணி 56 நிமிட நேரம் அவர் நின்று கொண்டே பட்ஜெட் உரையை படித்தார். பட்ஜெட் உரை முடிந்ததும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா உள்பட அனைத்து உறுப்பினர்களும் மேஜையை தட்டி வரவேற்பு தெரிவித்தனர்.



தமிழக பட்ஜெட் 2012 - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 27, 2012 1:14 am

3 ஆயிரம் புதிய பஸ்கள் - எல்லா பஸ்களிலும் மின்னணு பயணச்சீட்டு

ரூ. 548 கோடி செலவில் 2012-2013-ம் ஆண்டிலும் 3,000 புதிய பஸ்கள் வாங்கப்படும். இதற்காக இந்த அரசு ரூ. 150 கோடியை பங்கு மூலதன உதவியாகவும், ரூ. 150 கோடியை கடனாகவும் வழங்கும்.

மாநில போக்குவரத்து நிறுவனங்களிடம் உள்ள பேருந்து கட்டும் பணிக்கான கட்டமைப்புகளை முழுமையாக பயன்படுத்தும் வகையில், புதிய பேருந்துகளை உரிய கால இடைவெளியில் வாங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

நீதிமன்றங்களில் பிணையில் உள்ள 219 பேருந்துகளை மீட்பதற்காக, இந்நிறுவனங்களுக்குத் தேவையான நிதியுதவியை ஒரு முறை சிறப்பு நிதியுதவியாக இந்த அரசு வழங்கும்.

மேலும் பேருந்து நடத்துனர்களின் பணிச்சுமையைக் குறைக்கவும், பயணிகள் எளிதாக பயணச் சீட்டுகளை வாங்கவும், புவி நிலைக் காட்டி வசதி கொண்ட கையடக்க இயந்திரங்களை பயன்படுத்தி மின்னணு பயணச் சீட்டு வழங்கும் முறை அனைத்து அரசு பேருந்துகளிலும் 2012-2013-ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்படும்.



தமிழக பட்ஜெட் 2012 - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Mar 27, 2012 1:16 am

முன்னேற்ற திட்டங்களுக்கு ஒதுக்கிய (மந்திரிகளும், அதிகாரிகளும் ஒதுக்காம இருந்தா சரி) கணக்கு சொல்லிட்டாங்க.


வரவுக்கு என்ன செய்யப் போறாங்களாம் சிவா? டாஸ்மாக்கை 24 மணி நேரமும் திறந்து வைக்காம இருந்தா சரி.




சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 27, 2012 1:17 am

தமிழக பட்ஜெட்டில் ஏழைகளுக்கு ஒன்றுமில்லையே: வைகோ, ராமதாஸ் கருத்து

சென்னை: தமிழக அரசின் 2012-13ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை வளர்ச்சிக்கு வழி இல்லாதது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

"தமிழ்நாடு 2023 தொலைநோக்குத் திட்டம்” ரூ. 15 லட்சம் கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் என்று தமிழக முதல்லர் அறிவித்த திட்டத்தின்கீழ் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் வெறும் ரூ. 1,000 கோடி ஒதுக்கிவிட்டு இலவசங்கள் வழங்க ரூ. 2,000 கோடி ஒதுக்கீடு செய்து இருப்பதிலிருந்தே அதிமுக அரசின் தொலைநோக்குப் பார்வை எப்படி இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சி நடப்பு ஆண்டில் 7.6 சதவீதமாக இருக்கும் என்று மத்திய அரசு மதிப்பிட்டு உள்ளது. ஆனால் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 9.3 சதவீதமாக இருக்கும் என்று நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார். எந்த வகையில் அந்த இலக்கை எட்டுவார்கள் என்பது தெளிவுபடுத்தப்படவில்லை.

ரூ. 1,500 கோடிக்கு வரி விதிக்கப்பட்டுள்ளதால் விலைவாசி உயர்வு கட்டுப்படுத்தப்படும் என்ற நம்பிக்கையும் இல்லை. கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 3,000/-, நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 1,500/- வழங்கிடுமாறு விவசாயிகள் வைத்த கோரிக்கை அலட்சியப்படுத்தப்பட்டுள்ளது. விளைநிலங்களின் பரப்பு குறைந்து வருவது குறித்து அரசு கவனத்தில் கொள்ளவில்லை.

தொழில்துறையும், ஜவுளித் தொழிலும் சந்தித்து வரும் நெருக்கடிகளுக்குத் தீர்வு காணவில்லை. சென்னையைச் சுற்றியே தொழில்துறைகளுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. வழக்கம்போல தென் தமிழ்நாட்டில் தொழில் முதலீட்டுக்குத் தமிழக அரசு அக்கறை காட்டவில்லை; புறக்கணித்தே வருகின்றது.

தனியார் அரசு நிர்வாகத்தில் மின் ஆளுமை பற்றிக் கூறப்பட்டுள்ளது. ஆனால் ஒப்பந்தப் பணிகளில் ஊழலைக் களைய மின் ஆளுமை நிர்வாகத்தை முழுமையாகச் செயல்படுத்த அதிமுக அரசு அக்கறை காட்டவில்லை. கல்வித்துறை, பொது சுகாதாரத் திட்டங்களுக்கும் போதிய நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. ஒட்டுமொத்தத்தில், இன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்து உள்ள நிதிநிலை அறிக்கை வளர்ச்சிக்கு வழி இல்லாத நிதிநிலை அறிக்கையாகவே அமைந்து இருக்கின்றது என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

பட்ஜெட்டில் ஏழைகளுக்கு ஒன்றுமில்லையே- ராமதாஸ்:

2012-13ம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் ஏழைகளுக்கான நலத்திட்டங்கள் எதுவுமில்லை என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

சில நூறு கோடி ரூபாய்களுக்கு வரிச்சலுகைகளை அறிவித்துள்ள நிதி அமைச்சர் 1500 கோடி ரூபாய் அளவுக்கு புதிய வரிகளை விதித்திக்கிறார். பள்ளி மாணவ, மாணவியருக்கு நோட்டுப் புத்தகம், பென்சில், காலணி போன்றவை இலவசமாக வழங்கப்படுவது, நீரிழிவு நோயாளிகளுக்கு இன்சுலின், கோதுமை, ஓட்ஸ் போன்றவற்றிற்கு வரி குறைப்புகள் வரவேற்கத்தக்கது. ஆனாலும் ஏழைகளுக்கு நலத்திட்டங்கள் எதுவும் இல்லை என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.



தமிழக பட்ஜெட் 2012 - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக