புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனது மகள் தீபா நாகராணியின் நாகர்கோவில் அனுபவங்கள் Poll_c10எனது மகள் தீபா நாகராணியின் நாகர்கோவில் அனுபவங்கள் Poll_m10எனது மகள் தீபா நாகராணியின் நாகர்கோவில் அனுபவங்கள் Poll_c10 
64 Posts - 50%
heezulia
எனது மகள் தீபா நாகராணியின் நாகர்கோவில் அனுபவங்கள் Poll_c10எனது மகள் தீபா நாகராணியின் நாகர்கோவில் அனுபவங்கள் Poll_m10எனது மகள் தீபா நாகராணியின் நாகர்கோவில் அனுபவங்கள் Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
எனது மகள் தீபா நாகராணியின் நாகர்கோவில் அனுபவங்கள் Poll_c10எனது மகள் தீபா நாகராணியின் நாகர்கோவில் அனுபவங்கள் Poll_m10எனது மகள் தீபா நாகராணியின் நாகர்கோவில் அனுபவங்கள் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
எனது மகள் தீபா நாகராணியின் நாகர்கோவில் அனுபவங்கள் Poll_c10எனது மகள் தீபா நாகராணியின் நாகர்கோவில் அனுபவங்கள் Poll_m10எனது மகள் தீபா நாகராணியின் நாகர்கோவில் அனுபவங்கள் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
எனது மகள் தீபா நாகராணியின் நாகர்கோவில் அனுபவங்கள் Poll_c10எனது மகள் தீபா நாகராணியின் நாகர்கோவில் அனுபவங்கள் Poll_m10எனது மகள் தீபா நாகராணியின் நாகர்கோவில் அனுபவங்கள் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
எனது மகள் தீபா நாகராணியின் நாகர்கோவில் அனுபவங்கள் Poll_c10எனது மகள் தீபா நாகராணியின் நாகர்கோவில் அனுபவங்கள் Poll_m10எனது மகள் தீபா நாகராணியின் நாகர்கோவில் அனுபவங்கள் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
எனது மகள் தீபா நாகராணியின் நாகர்கோவில் அனுபவங்கள் Poll_c10எனது மகள் தீபா நாகராணியின் நாகர்கோவில் அனுபவங்கள் Poll_m10எனது மகள் தீபா நாகராணியின் நாகர்கோவில் அனுபவங்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனது மகள் தீபா நாகராணியின் நாகர்கோவில் அனுபவங்கள் Poll_c10எனது மகள் தீபா நாகராணியின் நாகர்கோவில் அனுபவங்கள் Poll_m10எனது மகள் தீபா நாகராணியின் நாகர்கோவில் அனுபவங்கள் Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனது மகள் தீபா நாகராணியின் நாகர்கோவில் அனுபவங்கள்


   
   
rathnavel
rathnavel
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 14
இணைந்தது : 01/05/2012

Postrathnavel Sat Jun 09, 2012 6:33 am

முகநூல் எனக்கு தந்த மற்றுமொரு கொடை எனது அருமை மகள் திருமதி தீபா நாகராணி ராமமூர்த்தி.
அவர்கள் மதுரையைச் சேர்ந்தவர்கள். எனது முகநூல் நண்பர் மாமனிதர் திரு ஈரோடு கதிர் அவர்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் வரும்போது
அவருடன் பேசும் போது எனக்கு திருமதி தீபா நாகராணியை அறிமுகப்படுத்தினார்கள். அதன் பின் அவர்கள் எங்கள் வீட்டிற்கு குடும்பத்திடன் வந்தார்கள்.
அவர்கள் முகநூலில் இருக்கிறார்கள். அருமையாக பயணக் கட்டுரைகள் எழுதுகிறார்கள். இது அவர்கள் நாகர்கோவில் வந்த அனுபவம் – முகநூலில் எழுதியது. நான் அவர்களை பதிவு எழுத வரும்படி வேண்டினேன். அவர்கள் அதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். எனவே அவர்கள் நாகர்கோவில் அனுபவங்களை எனது பதிவில் வெளியிடுகிறேன்.

இனி திருமதி தீபா நாகராணி பேசுகிறார்.

மாடு மேச்ச மாதிரியும் ஆச்சு, மச்சினனை பார்த்த மாதிரியும் ஆச்சு" என்ற பழமொழிக்கேற்ப ஓரிரு முறை மட்டும் பேசிப் பழகியுள்ள எனது கணவர் திரு ராமமூர்த்தியின் தோழியின் திருமணத்திற்காக ஏப்ரல் 18 ஆம் தேதி நாகர்கோவில் சென்று அப்படியே திருவனந்தபுரத்தையும் சுற்றிப் பார்க்க கிளம்பிட்டோம்.

நாகர்கோவிலில் நிறைய இடங்களுக்குப் பின்னால் ஜங்ஷன் ஒட்டி கொண்டிருக்கும். செட்டிக்குளம் ஜங்ஷன், கோட்டாறு ஜங்ஷன் என்று. ஒரே ஊரில் இத்தனை ஜங்ஷன்களா என்று குழம்பி, உள்ளூர்வாசியிடம் கேட்ட பொழுது, அவரின் பதில், நகர் என்ற அர்த்தத்திலேயே இந்த ஜங்ஷன் உபயோகிக்கப்படுகிறது என்று விளக்கினார்.

நாகர்கோவிலில் பெண்கள் கேரளப் பெண்களைப் போலவே தளர்வாய் தலை வாரி இருந்தனர். பெரும்பாலும், வயிற்றைத் தொடும் டாலர் சங்கிலிகளை அவர்கள் அணிந்திருந்தது வித்தியாசமாகப் பட்டது.

பார்க்கும் ஆண்களில் பாதி பேருக்கும் மேல் வேட்டி அணிந்திருந்தனர். ஒரு மாவட்டத்தின் தலை நகரில், இது போன்று பார்ப்பது அரிது.

கூர்ந்து கவனித்தால் ஒழிய, அம்மக்கள் பேசும் மொழி தமிழ் என்பது தெரியாது. கேரள ராகத்துடன் சிற்சில மலையாள வார்த்தை கலப்புடன் வசீகரிக்கிறது நாஞ்சில் வட்டார வழக்கு.

சென்ற முதல் நாள், திருமண உணவு விருந்தில் - ரசம் முதல் பாயசம் வரை, அனைத்திலும் சுக்கு சேர்க்கப் பட்டிருந்தது. செரிமானத்திற்கு நல்லது என்றாலும், அந்த நேரம் சாப்பிட முடியவில்லை. 'சுக்குக்கு மிஞ்சின சொக்குப் பொடி இல்லை' என்பதை கடை பிடிக்கும் சமையல் போல. படு இனிப்பாக பரிமாறப்பட்ட பருப்பு பாயாசம், அதன் மேலேயே , இனிப்பற்ற பால் பாயாசம் ஊற்றி சென்றது வித்யாசமாக இருக்கிறதே என்று எண்ணி முடிக்கும் வேளையில், என்ன ஏது என்று கேட்கும் முன்னரே, அதில் இனிப்பு பூந்தியை தூவி சென்றனர். அனைத்தையும் கலந்து சாப்பிட வேண்டுமாம்.
ஒரு வழியாக உணவை முடித்துக் கொண்டு அறைக்கு திரும்பினோம்.

நாங்கள் தங்கி இருந்த விடுதியில், ஐம்பது வயதிற்கு மேற்பட்டோரே ரூம் சர்வீஸ்களில் ஈடுபட்டது மனதை சங்கடப் படுத்தியது.

சமமான சாலைகளிலேயே பயணப் பட்ட எனக்கு, அரை கிலோமீட்டர் கூட சமமில்லாத, ஏற்ற இறக்கம் நிறைந்த சாலைகள், அதில் ஒழுங்காக கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள், சீராக செல்லும் வாகனங்கள் வியப்பேற்றியது. இன்னொரு குறிப்பிடப்பட்ட வேண்டிய அம்சம், காணும் வீடுகள் அனைத்திலுமே ஏதேனும் செடிகள், மரங்கள் சூழ காணப்பட்ட பசுமை சூழல். ஒவ்வொரு வீட்டிலுமே, மா, பலா, தென்னை மரங்கள், குறைந்தபட்சம் இருந்தன. ஊர் மொத்தமும் வெக்கை குறைவாக இருந்ததற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம்.

அடுத்த நாள், காலை ஆறு மணிக்கெல்லாம், வாடகைக்கு அமர்த்திக் கொண்ட வண்டியில் கிளம்பி, திற்பரப்பு அருவிக்கு அதீத எதிர் பார்ப்போடு சென்றோம். நாகர்கோவிலிருந்து நாற்பத்தைந்து கிலோமீட்டர் தொலைவில் இருந்தது. ஒரே மாதிரியான வேகத்துடன் குறைவான அளவு உயரத்தில் இருந்து கொட்டிக் கொண்டிருந்த தண்ணீர், பார்ப்பதற்கு ரம்மியமாக இருந்தது.
கீழே போய் நின்றவுடன், சிறு சிறு கற்களை தாங்குகிற வலியில் எறிந்தால் ஏற்படும் உணர்வு, களைப்பை களைவது போல உணர்வை தந்தது. கூட்டம் மிக குறைவாக இருந்ததால், அதிக நேரம் அருவியின் நீரை மேலே வாங்கி கொண்டு அமைதியாக நிற்க முடிந்தது.

அங்கிருந்து கிளம்பி மாத்தூர் தொட்டிப்பாலம் அருகில் செல்லும் பொழுதே வெயில் அடிக்க ஆரம்பித்துவிட்டது.
தரையில் இருந்து முப்பது மீட்டர் உயரத்தில் அமைந்திருந்த ஒன்றரை கிலோமீட்டர் நீளமான பாலம், சுற்றில் நிறைந்து காணப்படும் மரங்கள், மலைகள், கீழே இருந்த பூங்கா என்று வேறு ஒரு உலகத்திற்கு வந்து விட்ட உணர்வை அளித்தது.

திருவனந்தபுரம் நோக்கி சென்ற வழி எங்கும் ரப்பர் தோட்டங்கள், இடை இடையே வீடுகள், குளிர்ந்த காற்று என்று அனுபவித்துக் கொண்டே சென்ற சாலையில், ஏகப்பட்ட திருப்பங்கள், வளைவுகள், சில இடங்களில் மிக குறுகலான சாலைகள் என்று திக் திக் பயணத்தை சாமர்த்தியமான ஓட்டுனரால் பாதுகாப்பாகத் தொடர்ந்தோம்.

மார்த்தாண்டத்திலிருந்து சாலைகள் அகலமாக இருந்தன, அதே ஏற்ற இறக்கங்களோடு இருந்த பகுதியில் கட்டப்பட்டிருந்த பல விதமான கடைகள், கட்டிடங்கள் போன்றவை நாகர்கோவிலுக்கு அடுத்த பெரிய ஊர் கன்னியாகுமரி மாவட்டத்தில் மார்த்தாண்டம் என்பதை சொல்லின.

எல்லைப் பகுதியில் இருக்கும் இடங்களில் உள்ள நல்ல விஷயங்களில் ஒன்று, அங்கு வசிக்கும் மக்கள் குறைந்தபட்சம் இரு மொழியில் திறமைப் பெற்றவர்களாக இருப்பர். களியக்காவிளை என்ற பகுதியில் பல இடங்களில் ஆங்கிலத்தையும் சேர்த்து மும்மொழிகளில் விளம்பரப் பலகைகள் இருந்தன. குழித்துறை என்ற இடத்தை தாண்டியதும், கேரளாவின் பாரசாலா ஆரம்பாகிறது. இது வரை தமிழுக்குப் பழகி கொண்டிருந்த கண்கள் சடாரென மலையாளத்தை சந்திக்கின்றன, சில கிலோமீட்டர்கள் தூரத்தில், அரைகுறையாக அறிந்திருக்கும் மொழியை, எங்கு நோக்கினும், சரி பார்த்துக் கொள்வது நம்மில் அநேகருக்கு இருப்பது போல, கீழே இருந்த ஆங்கிலத்துடன் தவறை சரி செய்து கொண்டே திருவனந்தபுரம் மிருக காட்சி சாலைக்கு சென்றோம்.

மிருக காட்சி சாலையில் அதிக கூட்டம், உள்ளே செல்ல எனக்கு அவ்வளவு விருப்பம் இல்லை, ஆனால், இவ்வளவு தூரம் வந்து விட்டு, இதனைப் பார்க்காமல் போனால் நன்றாக இருக்காது என்ற ஒரே காரணத்திற்காகவே உள்ளே போனேன். விரிந்த பரப்பில், சீரான இடைவெளியில், காட்டில் இருப்பது போன்ற அமைப்புடன், விலங்குகளின் அரிய வகைக்கு ஏற்ப அமைக்கப் பட்டிருந்த கூண்டுகளின் வரிசையில் சிங்கம், புலி போன்றவை கடைசியில் இருந்தன.







கூண்டில் அடைபட்டிருந்த புலி ஒன்று சில நிமிடங்கள் எங்களுக்காக பூனை நடை (Cat Walk) நடந்து போனது, பிரத்யேக பயிற்சி இல்லாமல், வெகு அழகாக.


உள்ளே பாதி தின்று போட்ட இறைச்சியின் எச்சம் ஓரத்தில் கிடந்தது. என்ன சிங்கம், புலி என்று இருந்து என்ன செய்ய, மொத்த சுதந்திரமே இந்த ஐம்பது அடிக்குள் தான் அதற்கு என்று எண்ணிய பொழுது பரிதாபமே மேலோங்கியது.

அப்படியே சற்று தொலைவு சென்றால் வரவேற்கிறது வேலி பார்க் ....
சிற்பங்கள், பூச்செடிகள், தோட்டத்தால் ஆனது. நடந்தால் கடல் மணல் கால் எங்கும் பரவுகிறது, நேராகச் சென்றால் படகு சவாரி செல்லலாம், இடது புறத்தில் கொஞ்சம் நடந்தால், சிறுபாலம், அதனை கடந்தால், மிகக்குட்டி தீவு, அங்கு குதிரை சவாரி உட்பட, கடற்கரைக்கு உரிய அனைத்து அம்சங்களும் அனுபவிப்பதற்கு உண்டு.

சீரற்ற சாலைகள், சீரான கட்டிடங்கள், பார்க்கும் இடமெல்லாம் மரங்கள் செடிகள் என்றுத் தொடர்ந்த பயணத்தின் அடுத்த கட்டமாக கோவளம் கடற்கரை;
மிக அழகாக இருந்தது. கிட்டத்தட்ட ஒரு நெட்டு குத்தலான பாதையில் இறங்கினால் அடையலாம். (ஓட்டுனர் அந்த வழியில் தான் சென்றார்) அங்கு ஒரு புறம், பாறை, மரம், செடி, மலை உடன் எல்லையற்ற கடலில் இருந்து வந்து கொண்டே இருக்கும் அலைகள், குதித்து ஆட்டம் போடும் மக்கள் என்று வண்ணமயமாக இருந்தது. லேசாக தூறல் ஆரம்பிக்க, சட்டென்று மாறிய வானிலை அனுபவிக்க ஆரம்பித்தோம்.

கேரளாவில் நிறைய இடங்களில் காணப்பட்டது கம்யூனிஸ்ட் கட்சி சம்பந்தமான விளம்பரப் பலகைகள், கொடிகள். சிறிய அளவில் காங்கிரஸ் கட்சியின் விளம்பரங்களும் காணப்பட்டன. கோவளம் கடற்கரை செல்லும் வழியில் கார்ல் மார்க்ஸ் சிலை. இவை எல்லாமே நாம் தமிழ் நாட்டில் இல்லை என்பதை நினைவுபடுத்தின.

திரும்பிய சில இடங்களில் ஒட்டப்பட்டிருந்த திரைப்பட சுவரொட்டிகளில், மம்மூட்டி, மோகன்லால், ப்ருத்வி ராஜ், கலாபவன் மணி உள்ளிட்டோருடன், நம்மூர் சசி குமாரும் சிரித்து கொண்டிருந்தார். ஒரே ஒரு போஸ்டரில் மட்டுமே அழகான நடிகையின் படம் இருந்தது, யார் அது என்று உற்று நோக்கும் பொழுதுதான் தெரிந்தது, அது நடிகர் திலீப் பெண் வேடமிட்டு நடித்த படம் என்று. என்ன ஆயிற்று கதாநாயகிகளுக்கெல்லாம்? ஊர், உலகத்துக்கே (சிறந்த!?) கதாநாயகிகளை வழங்கிக் கொண்டிருக்கும் கேரளாவில், அவர்கள் ஊரில் வெளியாகும் படத்தில் ஒருவரைக் கூட காணவே காணோமே... எல்லாரும், கோலி வுட், பாலி வுட் , என்று பரபரப்பாக இருக்கின்றனரோ?

கோவளம் கடற்கரையில் கண்ட அரபிக்கடலும் சரி, கன்னியாகுமரியில் பார்த்த இந்து மகாசமுத்திரமும் சரி, சென்னையில் காணும் வங்காள விரிகுடாவும் சரி, நீர், குணம் எல்லாம் ஒன்று தான். பேர் தான் வேறு வேறு வைத்திருக்கிறோம். எந்த மாநிலத்தில், நாட்டில் இருந்தாலும் மக்கள் அனைவரும் ஒன்று தான்.
நீராய் இல்லாமல் போனதாலோ,என்னவோ பல காரணிகளால் மாற்றப்பட்ட மக்களின் மனங்கள்.

மகிழ்ச்சியாக/வசதியாக இருப்பதற்காக என்று பிரித்து வைக்கப்படும் சில விஷயங்கள், சில நேரங்களில் சங்கடத்திலே கொண்டு போய் நிறுத்தி விடுகின்றன. சற்றே கனத்த இதயத்துடன் ஊர் திரும்பினேன்.

இந்த கட்டுரையை படித்து உங்கள் கருத்துகளை பின்னூட்டப் பெட்டியில் (Commentary Box) பதிவு செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன். இந்த பதிவின் link களை உங்கள் நண்பர்களுக்கு அனுப்பி படிக்க சொல்லும்படி கேட்டுக் கொள்கிறேன். இதன் link ஐ மற்ற திரட்டிகளில் இணைக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

Google Connect இல் உங்கள் பெயரை பதிந்து கொள்ளுங்கள். நாங்கள் பதிவு வெளியிடும்போது உங்கள் Dash Board க்கு எங்கள் பதிவு வந்து விடும்.

உங்கள் மின்னஞ்சல் முகவரியினை அதற்கான கட்டத்தில் பதிந்து கொள்ளுங்கள். நாங்கள் பதிவு வெளியிடும்போது உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் inbox க்கு வந்து விடும்.

மிக்க நன்றி.

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat Jun 09, 2012 8:45 am

அருமையான இன்பச்சுற்றுலா நீங்கள் கூறிய அனைத்து இடங்களுக்கும் நானும் பல முறை சென்று உள்ளேன், மகிழ்ச்சி உங்கள் இன்ப பயனத்தை எங்களோடு பகிர்ந்தமைக்கு நன்றி, நன்றி
இரா.பகவதி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் இரா.பகவதி

SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Sat Jun 09, 2012 11:11 am

நீங்க நாகர்கோவில நெறைய மிஸ் பண்ணிட்டிங்க அப்படின்னு நெனைக்குறேன் .....



......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat Jun 09, 2012 12:33 pm

நீங்கள் எங்கள் ஊரை பற்றி கூறிய அனைத்தும் உணமை தான்..
கன்னியாகுமரியில் விவேகனந்தர் மண்டபம்.. திருவள்ளுவர் பாறை.. காந்தி, காமராஜர் மண்டபம்.. வட்டகோட்டை... சுசிந்திரம் கோவில்.. பத்மநாபபுரம் அரண்மனை.. முட்டம் கடற்கரை.. பகவதி அம்மன் கோவில்....... இதெல்லாம் பார்க்கலையா? அதிர்ச்சி




எனது மகள் தீபா நாகராணியின் நாகர்கோவில் அனுபவங்கள் Power-Star-Srinivasan
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jun 09, 2012 12:40 pm

பிளேடு பக்கிரி wrote:நீங்கள் எங்கள் ஊரை பற்றி கூறிய அனைத்தும் உணமை தான்..
கன்னியாகுமரியில் விவேகனந்தர் மண்டபம்.. திருவள்ளுவர் பாறை.. காந்தி, காமராஜர் மண்டபம்.. வட்டகோட்டை... சுசிந்திரம் கோவில்.. பத்மநாபபுரம் அரண்மனை.. முட்டம் கடற்கரை.. பகவதி அம்மன் கோவில்....... இதெல்லாம் பார்க்கலையா? அதிர்ச்சி
அவர் தான் திருவனந்தபுரத்தை !!! பார்க்க கிளம்பிவிட்டோம் என்று சொல்லியுள்ளாரே கண்ணடி

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat Jun 09, 2012 12:42 pm

ராஜா wrote:
பிளேடு பக்கிரி wrote:நீங்கள் எங்கள் ஊரை பற்றி கூறிய அனைத்தும் உணமை தான்..
கன்னியாகுமரியில் விவேகனந்தர் மண்டபம்.. திருவள்ளுவர் பாறை.. காந்தி, காமராஜர் மண்டபம்.. வட்டகோட்டை... சுசிந்திரம் கோவில்.. பத்மநாபபுரம் அரண்மனை.. முட்டம் கடற்கரை.. பகவதி அம்மன் கோவில்....... இதெல்லாம் பார்க்கலையா? அதிர்ச்சி
அவர் தான் திருவனந்தபுரத்தை !!! பார்க்க கிளம்பிவிட்டோம் என்று சொல்லியுள்ளாரே கண்ணடி
பார்த்துட்டு கிளம்பலாமே.. சிரி




எனது மகள் தீபா நாகராணியின் நாகர்கோவில் அனுபவங்கள் Power-Star-Srinivasan
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Jun 09, 2012 2:19 pm

அது சரி...சுசீந்திரம் கோவிலைகூட பார்க்கவில்லையா? ....சரி, தக்கலையில் உள்ள பத்மநாதபுரம் கொட்டாரத்தையும் பார்க்கவில்லையா? இது என்ன பயணக் கட்டுரை??

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Jun 09, 2012 2:25 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:அது சரி...சுசீந்திரம் கோவிலைகூட பார்க்கவில்லையா? ....சரி, தக்கலையில் உள்ள பத்மநாதபுரம் கொட்டாரத்தையும் பார்க்கவில்லையா? இது என்ன பயணக் கட்டுரை??

நாகர்கோவில பகுதியிலும் நிறைய இடங்கள் பற்றி குறிப்பு இல்லை என்று உறவுகள் சொல்லி உள்ளனர் .



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக